![]() |
|
சிட்னி சைவ நாயனார் மீது பா சுவாமியின் சீடர்கள் சீற்றம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21) +--- Thread: சிட்னி சைவ நாயனார் மீது பா சுவாமியின் சீடர்கள் சீற்றம் (/showthread.php?tid=388) |
சிட்னி சைவ நாயனார் மீது பா சுவாமியின் சீடர்கள் சீற்றம் - putthan - 04-01-2006 சிட்னி சைவ நாயனார்கள் மீது சீற்றம் அடைந்துள்ளார்கள் பா சுவாமியின் சீடர்கள். இதற்கு காரணம் அண்மையில் வெளியான் சைவமாநாட்டு மலரில் ஒரு சிட்னி சைவநாயனார் எழுதிய ஆக்கம் தான் காரணம்.அவர் பின்வருமாரு தன் ஆக்கத்தில் குறிப்பிட்டு இருந்தார். அதில் அவர் மனிதனாய் பிறந்தவனை கடவுளாக கும்பிடுவது தப்பு என்றும்.வாயில் இருந்து லிங்கம்,நகைகள்,கடிகாரம்,விபூதி போன்றவற்றை எடுத்து வித்தை காட்டுவதை பற்றியும்.வாயால் லிங்கம் எடுப்பது சைவத்தை(சிவனை) முதன் முதல் கடவுளாக கொள்பவர்களுக்கு இது இழுக்கு என்றும் அவ் ஆக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். அத்தோடு அவர் இவர்களையும் கும்பிட்டுகொண்டு கோயிலுக்கும் வருகிறார்கள் இது இரு தோணியிற் கால் வைத்ததிற்கு சமன் என்றும் குறிப்பிட்டிருந்தார். இதை பார்த்த பா சுவாமியின் சீடர்கள் சீற்றமடைந்து பதில் கேட்டு கடிதம் எழுதியுள்ளார்கள்.அவ் கடிதத்தில் இவ் ஆக்கத்தை எழுதியவர் ஒரு சைவ தீவிரவாதியென்றும்,சுவாமிகளின் சீடர்களை புண்படுத்தியது மட்டுமல்லாது தங்கள் மதத்தையும் புண்படுத்தி விட்டார் எனவும்,இவருக்கு ஆன்மீகம் பற்றி ஒன்றும் தெரியாது என்றும் இவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவ் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்கள். (போகிற போக்கில் சிட்னி சைவநாயனாரை கல்லில் கட்டி கடலில் போடுவார்கள்,சுண்ணாம்பு அறையில் பூட்டுதல்,கழுகில் ஏற்றல் போன்றவற்றை செய்தாலும் ஆச்சரிய படுவதற்கில்லை. ஆனால் நம்ம நாட்டு சட்டம் இதற்கு இடம் கொடுக்காது. இந்த சைவ நாயனார்களும்,பா சுவாமியின் சீடர்களும் ஒன்று சேர்ந்து தான் 1.சுனாமியின் போழுது கோயிலுக்குல் பணம் சேர்க்க வேண்டாம் என தடுத்தவர்கள். 2.மாவீரர்களுக்கு அர்ச்சணை செய்ய தடை விதித்தவர்கள். 3.வயது போனவர்கள்(கோயிலுக்கு போகமுடியாத வயோதிபர்கள்) நேரடியாக வானோலியில் ஒளிபரப்பாகும் கோயில் பூசையை கேட்டு மகிழ்ந்தவர்களை கேட்கமுடியாத வண்ணம் நேரடி ஒளிபரப்புக்கு தடை விதித்தவர்கள். இவர்கள் தான் unity பஜன்,அன்பேசிவம்,என்று கதைக்கும் குருமார்கள். - iyyappan - 04-01-2006 புத்தா குருமார்களினதும் சீடர்களின் பெயர்களை ஏன் போடவில்லை? - putthan - 04-07-2006 இதை பற்றி உங்கள் கருத்துகளை தாருங்கோ????? - narathar - 04-07-2006 புத்தன் இந்த சாய்பாபா என்னும் மோசடிக்காரரின் லீலைகளை ஏற்கனவே கீழ் உள்ள தலைப்புக்களில் அலசி ஆராய்ந்து விட்டோம் அண்மையில் இணைந்தவர்களுக்கு ஆக மீண்டும் இணைப்புக்கள்... http://www.yarl.com/forum/viewtopic.php?t=...%AE%AA%E0%AE%BE www.exbaba.com சாய்பாபாவைப் பற்றி என்ன சொல்கிறார்கள் இந்த முன்னாள் சீடர்கள் www.exbaba.com http://home.hetnet.nl/~ex-baba/engels/moviesframe.html சாய்பாபவின் மாயாஜாலம். http://home.hetnet.nl/~ex-baba/engels/moviesframe.html விசாரணைகள் http://home.hetnet.nl/~ex-baba/engels/moviesframe.html கொலைகள் http://home.hetnet.nl/~ex-baba/engels/moviesframe.html http://www.yarl.com/forum/viewtopic.php?t=1992&start=0 http://www.yarl.com/forum/viewtopic.php?t=1546&start=0 http://www.yarl.com/forum/viewtopic.php?t=1512 http://www.yarl.com/kalam/viewtopic.php?t=859 http://www.yarl.com/forum/viewtopic.php?t=1546 - putthan - 04-07-2006 இணைப்புகளை காணவில்லை இணைத்து விடுங்கோ |