![]() |
|
சிங்களத்தலைவர்கள் எப்போது வெட்கப்படுவார்கள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=19) +--- Thread: சிங்களத்தலைவர்கள் எப்போது வெட்கப்படுவார்கள் (/showthread.php?tid=380) |
சிங்களத்தலைவர்கள் எப்போது வெட்கப்படுவார்கள் - Naasamaruppan - 04-01-2006 திரு. சொல்ஹெய்ம் வந்தும் கிழக்கில் தடுத்து நிறுத்தமுடியாமல் போன அரை மென்தீவிர யுத்தம் வடக்கில் வவுனியாவிற்கும் பரவத்தொடங்கிவிட்டது. துணைப் படைகளுக்கு எதிரான பரவலான ஒரு சர்வதேச அபிப்பிராயம் நிலவும்போதும் துணைப்படைகளின் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டதாகத் தெரியவில்லை. ஆயின் நிலை மைகள் இணைத்தலைமை நாடுகளின் கட்டுப்பாட்டுக்குள் இல்லையா? இந்நிலையில் அடுத்தசுற்று ஜெனீவாச் சந்திப்பு சாத்தியமா? சாத்தியம் என்றே தோன்றுகின்றது. ஒரு மென்தீவிர யுத்தத்துடன் சேர்ந்துவாழும் ஒரு யுத்தநிறுத்தம் சாத்தியம் என்றால் ஒரு மென்தீவிர யுத்தத்தையும் பேச்சுவார்த்தை களையும் சமாந்தரமாக எடுத்துச் செல்வதும் சாத்தியமே.அப்படியொரு அபத்தமான வளர்ச்சியை நோக்கியே நாடு போய்க் கொண்டிருக்கிறது. இதற்கான அதிகபட்ச பொறுப்பை மேற்கு நாடுகளே ஏற்றுக்கொள்ளவேண்டி யிருக்கும். மேற்குநாடுகளின் பிடியில் உள்ள வழுவழுத்த தன்மை காரணமாக சிறிலங்கா அரசாங்கம் தொடர்ச்சியாக நழுவி நழுவிச் செல்லக்கூடியதாய் இருக்கிறது. இணைத் தலைமை நாடுகளின் நிகழ்ச்சி நிரலில்; உள்ள இறுதித் தீர்வு அல்லது இடைக் காலத் தீர்வு எனப்படுவது தனது ஒற்றையாட்சிக்கு உட்பட்ட தீர்வைவிட பெரி யது என்பது மகிந்தவுக்கு அச்சுறுத்தலாய் இருக்கிறது. ஆனால் இன்னொரு புறம் மேற்கு நாடுகளின் அணுகு முறையில் உள்ள இரட்டைத்தன்மைக் குள் அவரும் அவரையொத்த எல்லா சிங்களத்தலைவர்களும் சுழிக்கவும் உச்சவும் முடிகிறது. இலங்கைத்தீவின் சமாதான முயற்சிகளைப் பொறுத்தவரை இணைத்தலைமை நாடுகளிடம் தொடக்கத்திலிருந்தே ஒருவித இரட்டை அணுகுமுறைதான் காணப்பட்டு வருகிறது. இணைத்தலைமை நாடுகளில் முதன்மையானதும் உலகப்பெரு வல்லரசு மாகிய அமெரிக்காவில் எல்.ரி.ரி.ஈ தடை செய்யப்பட்டுள்ளது. இதனடிப்படையில் அமெரிக்கா எல்.ரி.ரி.ஈயைப் பொறுத்தவரை ஒரு கண்டிப்பான நெகிழ்ச்சியற்ற மூத்த அண்ணனைப் போன்ற தோரணையுடனான ஒரு அணுகுமுறையைப் பேணி வருகிறது. ஆனால் அதேசமயம் இணைத்தலைமை நாடுகளில் காணப்படும் ஏனைய நாடுகள் குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியம் இது விசயத்தில் கண்டிப்புக் குறைந்த ஒரு சின்ன அண்ணனைப்போல நடந்துகொள்கிறது. அமெரிக்காவும் சரி இணைத்தலைமை நாடுகளும் சரி யுத்தநிறுத்த மீறல்களைக் கண்டிக்கும்போதெல்லாம் நன்கு தெரிந் தெடுத்த வார்த்தைகளையே பிரயோகித்து வருகின்றன. கடந்த நான்கு ஆண்டுகளாக வெளிவந்த அறிக்கைகள், பேட்டிகள் போன்றவற்றைத் தொகுத்துப் பார்த்தால் இது தெரியவரும். புலிகளைக் கண்டிக்கும்போது மிகவும் கூரான, காட்டமான வார்த்தைகளைப் பாவிக்கும் அமெரிக்கா அரசாங்கத்தைக் கண்டிக்கும்போது ஒப்பீட்டளவில் மென்மை யான, பூடகமான வார்த்தைகளையே பயன்படுத்தி வருகிறது. ஒரு மரபு ரீதியான அரசாங்கத்தை அணுகு வதற்கும் ஒரு விடுதலை இயக்கத்தை அணுகுவதற்கும் இடையில் அவர்கள் ஏதோ ஒரு வித்தியாசத்தைப் பேணவே முயல் கிறார்கள். இந்த வித்தியாசம் எப்பொழுதும் சிங்களக் கடும்போக்காளர்களை உற்சாகப் படுத்துவதாக இருந்து வந்துள்ளது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளுக்கு எல்.ரி.ரி.ஈ உத்தியோகபூர்வமாக பயணம் செய்வதற்கு அங்கு வரவேற்பில்லை என் றொரு நிலை சிங்களக் கடும்போக்காளர் களை அதிகம் ஊக்குவிப்பதாகக் காணப்படுகின்றது. ஜெனீவாச் சந்திப் புக்கு முன் இலங் கைக்கான அமெ ரிக்கத் தூதுவரும் அமெரிக்க இணை இராஜாங்க செயலர் நிக்கலஸ் பேண்ஸ{ம் கொடுத்த ஊக்கமாத்திரைகளின் வீரியம் இன்னமும் தீராதிருக்கிறது. நிக்கலஸ் பேண்ஸ் கொழும்பில் வைத்துக் கருத்துத்தெரிவித்தபோது எல்.ரி.ரி.ஈ யும், அல்ஹைதாவும் ஒன்றல்ல என்ற தொனிப்பட பூடகமாகச் சொல்லியிருந்தார். ஆனால் எல்.ரி.ரி.ஈ யைக் கண்டிக்கும்போது கூரான நேரடியான வார்த்தைகளைப் பாவித் திருந்தார். அந்த கூரான வார்த்தைகள் தந்த பரவசத்தில் இன்னமும் மிதந்து கொண்டிருக்கும் மகிந்தவின் அரசாங்கமும் கொழும்பில் உள்ள ஊடகக்காரர்களும் நிக் கலஸ் பேண்ஸ் எல்.ரி.ரி.ஈ யும் அல்ஹைதா வும் ஒன்றல்ல என்று சொன்னதன் மூலம் எதை உணர்த்த முற்பட்டாரோ அதை அதற் குரிய முக்கியத்துவத்துடன் புரிந்துகொள்ள வேயில்லை. ஜெனீவாவில் நிகழ்ந்த முதல் சந்திப்பின் போது இணைத்தலைமை நாடுகளின் நிலைப்பாடு அரசாங்கத்துக்குச் சாதகமற்ற தாகவே காணப்பட்டது. ஆனாலும் அரசாங் கம் அதற்குப் பின்பு சுதாகரித்துக்கொண்டு விட்டது போலவே தோன்றுகிறது. துணைப் படைகளின் நடவடிக்கைகள் தொடர்வது என்பது அப்படித்தான் சிந்திக்க வைக்கிறது. துணைப்படைகள் விவகாரம் ஒரு சர்வ தேச அபிப்பிராயமாக உருவாகிய பின்ன ரும் கூட துணைப்படைச் செயற்பாடுகள் வவுனியா வரைக்கும் வந்துவிட்டிருப்பது என்பது மகிந்தவின் மீது தமது செல்வாக் கைப்பிரயோகிப்பதில் இணைத்தலைமை நாடுகள் போதியளவு வெற்றியைப் பெறத் தவறிவிட்டதையே காட்டுகிறது. இதற்குக் காரணம் இணைத்தலைமை நாடுகளின் மேற்படி இரட்டை அணுகுமுறையே. இந்த இரட்டை அணுகுமுறையை தனக்கு வசதியாக வடிவமைத்துக்கொண்ட தாலேயே மேற்கின் செல்லப்பிள்ளையான திரு.ரணில் விக்கிரமசிங்க சர்வதேச பாதுகாப்பு வலைப்பின்னல் ஒன்றைப்பற்றி கதைத்துவந்தார். இந்த இரட்டை அணுகுமுறை காரண மாகப்பெற்ற துணிச்சலால்தான் திருமதி சந்திரிகா ரணிலை சமாதானத்தின் பேரால் பலியிட முடிந்தது. அதாவது இரட்டை அணுகுமுறையின் படி எல்.ரி.ரி.ஈ யின் மீது பிரயோகிக்கப்படக்கூடிய அழுத்தங்களை விடவும் அரசாங்கத்தின் மீது பிரயோகிக்கப் படக்கூடிய அழுத்தங்கள் குறைவாகவே காணப்படுகின்றன. எனவே ரணிலைக் கவிழ்த்தாலும் இணைத்தலைமை நாடுகள் தன்மீது ஒரு கட்டத்துக்கும்மேல் அழுத்தங் களை பிரயோகிக்கமுடியாது என்ற துணிச்சல் சந்திரிகாவிடம் இருந்தது. அதே துணிச்சல் இப்பொழுது மகிந்த விடமும் காணப்படுகிறது. அமெரிக்கா எல்.ரி. ரி.ஈ யை ஒரு துடக்காகத்தான் பார்க்கிறது என்ற வெளித்தோற்றம் உண்டாகும் விதத்தி லேயே அமெரிக்காவின் வெளிப்படையான உத்தியோகபூர்வ வார்த்தையாடல் கள் காணப் படுகின்றன. இந்தத் தோற்றப்பாட்டை தனக்கு ஆகக் கூடிய பட்சம் அனுகூலமானதாக ஆக்கிக் கொள்ள மகிந்த முயல்கிறார் என்ப தால்தான் இணைத்தலைமை நாடுகளின் அபிப்பிராயங்களையும் பொருட்படுத்தாது தனது அரசியல் இராணுவ வியூகத்துள் துணைப்படைகளை பங்காளிகளாக வைத் திருக்கிறார். பிலிப்பைன்ஸ் சமாதான முயற்சிகளிலும் இதுபோன்ற ஒரு தோற்றப்பாட்டைக் காணலாம். அங்கே தெற்குப் பிலிப்பைன்ஸில் தனி நாடு கோரிப் போராடும் எம்.ஐ.எல்.எவ் இயக்கத்துக்கும் அல்ஹைதாவுக்கும் அல்ஹைதா வின் துணை அமைப்புக்களான அபுசாயவ், ஜெம்மா இஸ்லாமியா போன்றவற்றுக்குமிடை யில் ரகசியத் தொடர்புகள் உண்டு என்ற ஒரு பரவலான சந்தேகம் நிலவுகிறது. இதைச் சாட்டாக வைத்து அமெரிக்காவின் உலகளாவிய இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு எதிரான யுத்த வியூகத்துள் எம்.ஐ.எல்.எவ்.யும் சிக்க வைக்க முயல்வதன் மூலம் சமாதான களத் தில் அதன் பேரம்பேசும் சக்தியைக் குறைத்து விடலாம் என்று பிலிப்பைன்ஸ் அரசாங்கம் நம்புகிறது. இதில் அவர்கள் குறிப்பிடத்தக் களவு வெற்றியைப் பெற்றிருப்பதாகவும் தெரிகிறது. மகிந்தவும் எல்.ரி.ரி.ஈ யின் விசயத்தில் அமெரிக்காவின் நிலைப்பாட்டை அதாவது இணைத்தலைமை நாடுகளின் இரட்டை அணுகுமுறையை தனது பேரம்பேசும் சக்தியை அதிகரித்துக்கொள்வதற்குப் பாவிக்க முயல்கிறார். அரசாங்கமும்-எல்.ரி.ரி.ஈயும் சம அந்தஸ்துடைய இரண்டு தரப்புக்கள் அல்ல என்று மகிந்தவும் அவருடைய கூட்டாளிகளும் தயான் ஜெயதிலக போன்ற விமர்சகர்களும் பெரும்பாலான சிங்கள மற்றும் ஆங்கில ஊடகங்களும் நம்புகின்றன. இந்த நம்பிக்கைதான் இராணுவத்தளபதி சரத்பொன்சேகாவை ஒரு நட்சத்திர அந்தஸ் துடைய கதாநாயக நிலைக்கு உயர்த்தி வைத்திருக்கிறது.ஒரு இராணுவத் தளபதிக்கு இருக்கவேண்டிய வாயடக்கத்தை அவர் அண்மைக்காலங்களில் காட்டத் தவறியதற் குரிய காரணமும் இதுவே. எனவே நிலைமை கையை மீறிப்போவ தற்குரிய ஒருபக்க வளர்ச்சிக்குத் தேவை யான ஊக்கவிசைகளை இணைத்தலைமை நாடுகளின் இரட்டை அணுகுமுறையே வழங்கிவருகிறது. இலங்கைத்தீவில் மட்டுமல்ல பலஸ்தீனத்திலும் அமெரிக்கா இத்தகையதொரு இரட்டை அணுகுமுறையைத்தான் பேணிவரு கிறது.அங்கே நடப்பது ஒரு அருவருப்பான இரட்டை அணுகுமுறை. உலகத்தின் மனச் சாட்சியைக் கூசச்செய்யும் விதத்தில் அங்கே அமெரிக்கா தனது செல்லப்பிள்ளையான இஸ்ரேலை எல்லா விதங்களிலும் பாது காத்து வருகிறது. அங்கு சமாதானம் இழு வுண்டு செல்லக்காரணமே அமெரிக்காவின் இரட்டை அணுகுமுறைதான். ஆனால் சூடான், எரித்திரியா, கிழக்குத் தீமோர் மற்றும் கிழக்கு ஐரோப்பிய சமாதான களங்களில் அமெரிக்கா அங்குள்ள அரசுகளின் மீது அல்லது பலம்வாய்ந்த தரப்பின் மீது அதிகரித்த அழுத்தங்களைப் பிர யோகித்திருக்கிறது. இஸ்ரேலைப் பாதுகாக்கும் அதேயளவுக்கு அவர்கள் மகிந்தவைப் பாதுகாக்கவில்லைத்தான். ஆனால் சமாதானத்துக்கான அவர்களுடைய இரட்டை அணுகு முறையே இலங்கைத்தீவில் சமாதானம் இழு வுண்டு செல்லப் பிரதான காரணம் என்பதை அவர்கள் உணர இது ஒரு நல்ல தருணம். ஒரு சர்வதேச அபிப்பிராயத்தை மதியாது மகிந்த துணைப்படைகளை தனது வியூகத் துள் ஒரு பங்காளிகளாக்கத் தேவையான துணிச்சலை இந்த இரட்டை அணுகுமுறையே வழங்கியிருக்கிறது. மட்டுமல்ல, மகிந்தவைப் போன்ற அவருக்கு முன்பிருந்த மற்றும் இனி வரப்போகின்ற எல்லாச் சிங்களத்தலைவர் களும் தமது இனக்குரோத அரசியலைக் குறித்து இந்த நூற்றாண்டிலும் வெட்கப்படத் தேவையில்லாத ஒரு சர்வதேசச் சூழலை யும் அது தொடர்ந்தும் பேணிவருகிறது. முன்னைய நூற்றாண்டுகளில் அடிமை வியாபாரம் ஒரு வழமையாக இருந்தது. ஆனால் பிந்திய நூற்றாண்டுகளில் அதற்காக மனிதகுலம் வெட்கப்பட்டது. தென்னாபிரிக்காவில் நிலவிய இன ஒதுக்கல் அரசியலின் கீழ் மண்டேலா கால்நூற்றாண்டுகாலம் சிறையிலிருந்தார். ஆனால் இன்று இன ஒதுக்கல் எனப்படுவது ஒரு வெட்கப்படும் விவகாரமாகிவிட்டது. கம்பூச்சியாவில் போல்பொட் தனது சொந்த மக்களில் சுமார் பத்து இலட்சம் பேரை வேட்டையாடி கம்பூச்சியாவின் வயல் வெளிகளை மண்டையோடுகளால் நிறைத் தார்.இன்று அந்த மண்டையோடுகளைப் பார்த்து மனிதகுலம் கூசிநிற்கிறது. அண்மையில் சிறையில் இறந்துபோன மிலோசவிச் அதிகாரத்தில் இருந்த காலங் களில் அகன்ற சேபியாவை உருவாக்குவதற் காக ஆயிரக்காணக்கான பொஸ்னியர்களை யும் ஏனைய இனத்தவர்களையும் கொன்று குவித்தார். ஆயிரக்கணக்கில் முஸ்லிம் பெண் களைச் சிதைத்து வலுக்கட்டாயமாக சேர்பியக் குழந்தைகளைப் பெறுவித்தார். ஆனால் வரலாறு இப்பொழுது அவரை ஒரு இறைச் சிக்கடைக்காரனாகத் தீர்ப்பளித்துவிட்டது. இதுபோலவே இலங்கைத்தீவிலும் சிங்களத் தலைவர்கள் தமது இனச்சாய்வு மற்றும் இனக்குரோத அரசியலுக்காக எப் பொழுது வெட்கப்படப்போகிறார்கள்? அல் லது அவர்கள் வெட்கப்படவேண்டிய ஒரு சர்வதேசச் சூழலை இணைத்தலைமை நாடு கள் எப்பொழுது ஏற்படுத்தும்? நிலாந்தன் ஈழநாதம் - SANKILIYAN - 04-02-2006 சுனை இருந்ததானே அதைப்பற்றி யோசிக்கா? |