Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நம்மீது நம்பிக்கை வைக்கலாமே!
#1
மக்கள் பலவகையான நம்பிக்கையுடன் தான் வாழ்கிறார்கள். நம்பிக்கைகளில் மிக உயர்ந்தது தன்னம்பிக்கைதான்.
யானையின் பலம் எதிலே தும்பிக்கையிலே. மனிதனோட பலம் எதில நம்பிக்கையிலே. இன்றைக்கிருப்போர் நாளை இருக்கமாட்டார் இதுதான் உலகம்.

'நெருநல் உளனொருவன் இன் றில்லை என்னும் பெருமை படைத் திவ்வுலகு'

என்பது குறள். இப்படியெல் லாம் முதுமொழிகள் இருந்தாலும் நீண்ட நாட்கள் வாழுவோம். நீண்ட நாட்கள் வாழவேண்டுமென்ற நம் பிக்கை ஒவ்வொருவர் மனதிலும் உண்டு. அறுவடை செய்வேன். அந்த வருமானத்தில் வீடுகட்டி ஆடை அணிமணி புனைந்து வாழு வேன், என்ற நம்பிக்கை இருப்ப தால்தான் விதையை நிலத்தில் விதைக்கிறோம். பிற்காலத்தில் அறி வாளியாக வரவேண்டும் என்பதற் காகத்தான் இன்று கல்வி கற்கிறோம்.

ஆக நம்பிக்கை என்பது தன்மீது கொண்ட நம்பிக்கையாக இருப்பதே மேற்கூறிய வகைகள.; எது எப்படிப் போனாலும் 'சுடலை ஞானம்' இல்லாதவர்கள் வராத வர்கள் எவரும் இல்லை.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக இன்றும் மக்களிடையே விரவி நிற்பது பெரும் மூடநம் பிக்கை. செய்வினை, சூனியம், மருந்தீடு, பிரிவினை, வசியம், முகமாத்து என்று பல பெயர்களில் இந்த விடயங்களை வைத்துப் பிழைப்பு நடத்தும் சாமியார்களும் அதிகம். படித்த நாகரிகமாக வாழ்ந்துகொண்டிருப்பவர்கள் கூட இம்மாதிரி நம்பிக்கைகளை வைத்துக்கொண்டு சாமியார் களையும், மந்திரவாதிகளையும் வளர்க்கும் மந்திர வியாதி பிடித்தலைகின்றனர்.
ஆயிரம் கோவூர்கள் பிறந்தாலும் திருத்தமுடியாத அளவுக்கு கெட்டுப்போயிருக்கிறது சமுதாயம்.

மனநோயுற்ற ஒரு பெண்ணை அதற்கான சிகிச்சைக்குக் கொண்டு செல்லவேண்டும் என்பதே தெரியாமல் பூசாரிகளிடம் கொண்டலைந்து பணமும் செலவு செய்து இரண்டிலும் முடியாமல் போகவே கையைப்பிசைந்து கொண்டிருந்தார்கள். அதற்குள் அந்தப் பெண்ணை உறவினர்கள் தம்முடன் பங்குபோட்டு அழைத்துச் செல்ல அவள் தற்கொலை செய்து கொண்டாள். மனப்பிறழ்வு வைத் திய பரிசோதனைக்குத் தப்பி விட்டது. ஆனால் இவர்களுடைய வளர்ச்சியைப் பொறுக்காமல் யாரோ செய்வினை செய்து போட் டார்கள் அதாலதான் அவள் செத்தது என்று சட்டத்துக்கே பிடிபடாத கொலை என்றவகையில் கதை முடிந்தது.

சாதாரணமாக வரும் காய்ச்சல், தலை யிடி, வயிற்றோட்டம் போன்ற நோய்களுக்கே மந்திரத்தில் மருந்து செய்து தீர்க்கவல்ல மந்திரவாதிகள் உண்டு. நோய் தீர்ந்த பிறகும் மூன்று மாதம் பூசை செய்யவேண்டும். விளக் குப்போடவேண்டும். கிரக சாந்தி செய்யவேண்டும் என்று தொடர்ந்து வசூ லிக்கும் பூசாரிகளுக்குச்; சொந்தமாகக் கோயில்களும் உண்டு.

இவர்களையெல்லாம் மிஞ்சக்கூடியதாக கன்னிப்பெண்களை வாட்டும் பசலை நோயைப் புதுவிதமுனிதாக்கிவிட்டதாகக் கூறி அவர்களை தங்கி நின்று சிகிச்சைபெறவேண்டு மென்று ஒரு மந்திரவாதி கூறப் பெற்றோராகிய மூடர் அவ்வாறே பெண் ணைத் தங்கி வைத்தியம் செய்ய அனுப்பினார் களாம். வைத்தியரோ ஒரு மர்மப்புகையைப் போட்டுப் பெண்ணை மயக்கி அப்பெண்ணை பாலியல் உறவுக்குப் பயன்படுத்தியுள்ளார். இது நடந்தது வவுனி யாவின் தொலைவுக் கிராமம் ஒன்றில்.
அநேகமான பூசாரிகள் மந்திரவாதிகள் காவற்றுறை யினரோ சட்டமோ தேடாத தொலைவுகளில்தான் இருக்கின்ற னர். நடுக்காட்டின் மத்தியில் போக்குவரத்து வசதிகளற்ற குக்கிராமங்கள் அதிகம் உண்டு. அங்கெல்லாம் பூசாரிகள் உண்டு. கொம்பறுத்த குளம், மூன்று முறிப்பு, மா உருவி, பாலைப் பாணி, பறங்கியாறு, சோலை அரசன்குளம் எனக் கூறிக் கொண்டே போகலாம். இவற்றை இன்னமும் ஒரு சட்ட நடவடிக் கைக்கு உட்படுத்த முடியவில்லை. இந்த தான்தோன்றி வைத்தியர்க ளெல்லாம் மதச்சாயம் பூசிக்கொண்டுள்ளனர். ஆக மக்கள் ஒரு விழிப்புணர்வுள்ளவர்களாக மாறும் வரை இவர்களும் இருப்பார்கள்.

கணவன் மனைவிக்கிடையே ஏற்படும் பிணக்குகளைப் புரிந் துணர்வுடன் பேசித் தீர்க்கவேண் டும். ஆனால் விபூதிபோட்டுத் தீர்ப்பது தெரியுமா? நடக்கிறது. கணவனுக்கும் மனைவிக்கும் பிரச்சினை வழக்கும் போட்டா யிற்று. அதற்குள் கணவன் "ஆரெட்டயோ" மந்திரிச்சுத் திரு நூறு போட்டிட்டார். (எங்க?) என்னையறியாம எனக்கு என்ன நடந்ததெண்டே தெரியேல்ல... இப்ப சுகமில்லாம இருக்கிறன.; (கெட்டிக்காரக்கணவன்) இனி உறவாப்போகச் சொல்லி சொல்லு கினம். எப்பிடியுங்கோ? என்று மூக்கைச் சிந்தும் பெண்.

என்ர அவருக்கு என்னில பாசங்குறைஞ்சுபோச்சு. அவர் வேற ஒரு பொம்பிளையிட்டப்போறார். அவர் நல்லவர்தான். அவற்ற சாரத்தை எடுத்துத்தான் செய்வினை செய்தவளாம். என்னைக் கண்ணில கட்டேலாதமாதிரி செய்திருக்காம். நான் பிள்ளய வச்சுக்கொண்டு கண்ணீரோட திரியிறன் என்று ஒரு பெண்.
"இருந்தாப்போல நெஞ்சுக்க படப்படப்படண்டு அடிக்குது. தலைக்கு மேல ஏதோ றீங் றீங் றீங்கெண்டு பறக்கிறமாதிரி- வேர்க் குது. ஒண்டுமா விளங்கேல்ல"பரியாரியட்டதான் காட்ட வேணும். நூல் முடிஞ்சா சரியாப் போகும். இதெல்லாம் பாமரப் பெண்களின் பரிதாப உளறல்.

ஆனால் படித்த நாகரிக மானவர்களும் இதேயளவில் கூழைக்கும்பிடு போட்டு நிற்பது தான் ஆச்சரியம்.

இதுபற்றி மாந்திரீக வேலை செய்யும் ஒருவரிடம், "எந்தளவுக்கு உங்கட வைத்தியம் சாத்தியப்படுது?" என்று கேட்டதற்கு அவர் "மந்திரமும் குருவும் மருந் தும் திருவருளும் உண்டென்ப வருக்கு உண்டு. இல்லை என்ப வர்க்கு இல்லை" என்றார்.

"நாங்கள் பெரிதாக ஒன்றும் செய்யவில்லை. மனதை ஒருநிலைப்படுத்தி அவர்களது நோய் தீரவேண்டுமெனப் பிரார்த்தனை செய்கிறோம் அவ்வளவு தான்" இது குஞ்சுக்குளம் சோதிடரும் பரியாரியும், இவர் ஒரு பழைய அரச ஊழியரும் கூட.
வவுனியாவில் ஆசிரியத் தொழில் செய்பவர்கள் கூடவே, கலியாணத்தரகர்களாகவும் உள்ளனர். இதேநிலை யாழ்ப்பாணத்தி லும் உண்டு. கலியாணத் தரகர் களுக்குக் கூடவே சாதகம் பார்க்கவும் கணிக்கவும் தெரிந்திருப்பது ஒரு மேலதிகத் தகைமை. இதில் வேடிக்கை என்னவென்றால் சாத கங்களில் நல்ல ஜாதகம் தோச முள்ள ஜாதகம் என்று இரண்டு வகையாம்- இதில் எந்த வகை ஜாதகத்தையும் பொருத்திவிடும், மாற்றிவிடும் திறமை இவர் களுடையது.
எம்மத்தியில் புழக்கத்தில் உள்ள இம்மாதிரி மூடநம்பிக்கை களை வைத்துக்கொண்டு நாம் எப்படி முன்னேற முடியும். பேய், பில்லி, சூனியம் என்பவை சீனா, பர்மா, இந்தியா, பாகிஸ்தான், எகிப்து என இருந்தது போய் அமெரிக்காவரை வந்துவிட்டது என்கிறார்கள். வந்துவிட்டதற்குக் காரணமே மனிதன் தன்னம்பிக்கை இழந்தது மட்டும்தானா? காலத் துக்குக்காலம் ஏற்படும் இயற்கை அனர்த்தங்கள் செயற்கையாக வரும் ஆக்கிரமிப்புப் போர் அனர்த் தங்கள் என்பனவெல்லாம் மனி தனை உலுக்கிவிட்டது. இவற்றை எதிர்த்துப் போரிடும் வல்லமையை இல்லாததாக எண்ணி சோர்ந்து போவதே காரணம்.

இயற்கையை வென்று விட்ட மனித சாதனைகளை ஒருகணம் நினைத்துப் பாருங்கள். ஒரு காலத்தில் நிகண்டு நூல் குறிப்பிட்ட விடயம் இது. "மனிதர் கள் இரும்புக்குதிரைகளில் ஏறிப் பறப்பார்கள், வானத்தில் பறக்கவும் நீருள் வாழவும் அவர்களால் முடியும். தீபங்கள் கீழ்நோக்கி எரியும்" அக்காலத்தில் இதெல்லாம் நகைப் புக்கிடமான ஒன்றுதான். புராணங்களில் நாம் கண்ட மாயக்கண்ணாடி இன்று வீட்டுக்கு வீடு வு.ஏயாக வந்துள்ளது. இன்று வகைவகையான உந்துருளிகளில் பறக்கும் மனிதர்கள், விமானம். நீர் மூழ்கி, மின்சார விளக்குகள் என இவை சாத்தியப்பட்டிருக்கும்போது இவற்றில் மந்திரமாயங்கள் எதுவும் இருக்கிறதா? நம்பிக்கைகள் என்பன செயல்களின் அடிப்படையில் பெறப்படவேண்டியது. மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம்.

மூடநம்பிக்கைகளையும் தெய்வ நம்பிக்கையையும் போட்டுக்கலந்து குழப்பமடையாமல் நாம் நம்மீது நம்பிக்கை, விழிப்புணர்வு கொண்ட வர்களால் சமுதாயம் திருத்தப்பட வேண்டும். மக்கள் சுய நம்பிக்கையை விருத்திபெற முனைய வேண்டும். நோய்க்கு மருந்துதான் நிவாரணி.

மந்திரமல்ல... புரிந்து கொள்வோம்.

மாயா
ஈழநாதம்
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)