Yarl Forum
ரேடார் கருவிகளால் கண்டுபிடிக்க முடியாத ஈரானின் அதிநவீன ஏவுகண - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: ரேடார் கருவிகளால் கண்டுபிடிக்க முடியாத ஈரானின் அதிநவீன ஏவுகண (/showthread.php?tid=385)



ரேடார் கருவிகளால் கண்டுபிடிக்க முடியாத ஈரானின் அதிநவீன ஏவுகண - விது - 04-01-2006

ரேடார் கருவிகளால் கண்டுபிடிக்க முடியாத ஈரானின் அதிநவீன ஏவுகணை: அமெரிக்கா நடுக்கம்

ஒரே நேரத்தில் பல இடங்களை குறி வைத்து தாக்கும் நவீன ஏவுகணையை செலுத்தி ஈரான் சோதனை நடத்தி இருக்கிறது. ஈரான் அணு ஆயுதங்களை தயாரிப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. இதனால் ஈரான் மீது தாக்குதல் நடத்தவும் அதன் மீது பொருளாதார தடை விதிக்கவும் அமெரிக்கா நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நிலையில் ஈரான் அதிநவீன அணு ஆயுத ஏவு கணையை செலுத்தி சோதனை நடத்தி இருக்கிறது. பாஜர்-3 என்ற இந்த ஏவுகணை ஒரே நேரத்தில் பல இலக்குகளை குறி வைத்து தாக்கும் ஆற்றல் உள்ளது.

ரேடார் கருவிகளாலும் இதை கண்டுபிடிக்க முடியாது. 2000 கிலோ மீட்டர் தூரம் வரை அணு ஆயுதங்களை கடந்து சென்று எதிரிகள் இலக்கை தகர்க்கும் ஆற்றல் உள்ளது.

இந்த ஏவுகணைகளை செலுத்தி மேற்கு ஆசியாவில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்களையும் இஸ்ரேல் முகாம்களையும் தகர்க்க முடியும்.

இது அமெரிக்காவுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. பாரசிக வளைகுடாஇ அரபிக்கடல் பகுதியில் ஈரான் ராணுவ பயிற்சியின் போது இந்த ஏவுகணை சோதனையை நடத்தி இருக்கிறது.
http://www.newstamilnet.com/index.php?suba...t_from=&ucat=1&


- putthan - 04-01-2006

சதாமிடமும் பல விளையாட்டுகள் இருக்கு என்று தான் அமெரிக்கா முதலில் நடுங்கியது மாதிரி(நாடகம்) ஆடியது.இப்ப ஈரான் விளையாட்டு காட்டிகிறது என்று சொல்லுகிறார்காள்.எல்லாமந்த அல்லாவுக்கு தான் வெளிச்சம்.