![]() |
|
செம்மீன் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39) +--- Thread: செம்மீன் (/showthread.php?tid=396) |
செம்மீன் - kanapraba - 03-31-2006 தமிழ் சினிமா உலகின் துரதிஷ்டம் நல்ல பல எழுத்தாளர்களின் படைப்புக்களை உள்வாங்காதது, மலையாள சினிமா உலகின் அதிஷ்டம் மேற்கண்ட முதலடியை மாற்றிப் போடுங்கள். அந்த வகையில் மலையாள சினிமா அளித்த, காலத்தால் அழியாத காவியம் "செம்மீன்". முழுப்பதிவிற்கும் http://kanapraba.blogspot.com/2006/03/blog...og-post_31.html - விது - 03-31-2006 மிக்க நன்றிகள் திரு கானாபிரபா செம்மீன் திரைப்படத்தைப்பற்றி நிறையவே கேள்விப்பட்டிருக்கிறேன் உங்கள் விமர்சனம் படத்தையே பார்த உணர்வு ஆணாலும் படம் பார்கவேண்டும் இணையத்தில் எங்காவது இணைப்புகிடைக்குமா? - sinnakuddy - 03-31-2006 கடலினிக்கரை போனாரோ. காற்று வாங்க என்ன கொண்டு வரும்......யாழில் பட்டி தொட்டியெல்லாம் மொழி புரியாவிட்டாலும் வாயில் எல்லோரிடமும் முணுமுணுத்த பாடல்..செம்மீன் படம் தமிழ் டப்பிங்கிம் ஓடியதாக ஞாபகம்...நன்றிகள் கானபிரபா நினைவு கூர்ந்ததுக்கு... - AJeevan - 03-31-2006 நன்றி கானப்பிரபா........... - Selvamuthu - 03-31-2006 நல்ல பிறமொழிப்படங்கள்தான் தமிழ் திரையரங்குகளில் திரையிடுவார்கள். அந்தவகையில் வந்த படம்தான் இது. எமது வாழ்நாட்களில் நாம் பார்க்கின்ற சில சினிமாப்படங்கள் ஒருபோதும் மனதைவிட்டு அகலாதவை. அந்த வகையில் இந்த மலையாளப்படம் எப்போதும் எனது மனதிலும் இருக்கின்றது. கதை, இனிய பாடல்கள், கண்கவர் காட்சிகள், நடிப்பு, "கலர்" எல்லாமே இப்படத்திற்குச் சிறப்பாக அமைந்திருந்தன. தெலுங்கில் சங்கராபரணம், ஜிந்தியில் ஆராதனா, பொபி, சத்யம் சிவம் சுந்தரம் என்பனவும், தமிழில் பலவும் அழியாத இடத்தில் இருக்கின்றன. நன்றிகள். - kanapraba - 04-01-2006 தங்கள் பின்னூட்டலை இட்ட விது, சின்னக்குட்டி, அஜீவன் செல்வமுத்துவுக்கு என் நன்றிகள் . விது, படத்தை எங்கு இணையத்தில் எடுக்கலாம் என்று தெரியவில்லை, அஜீவன் செம்மீன் நாவலைப் படித்ததன் மூலம் அந்தக் கதைக்களத்தின் திரையில் சொல்ல முடியாத உணர்வுபூர்வமான பார்வையும் உங்களுக்குக் கிடைத்திருக்கும் என்று நான் நினைக்கின்றேன். - AJeevan - 04-01-2006 kanapraba Wrote:தங்கள் பின்னூட்டலை இட்ட விது, சின்னக்குட்டி, அஜீவன் செல்வமுத்துவுக்கு என் நன்றிகள் . <b>செம்மீன் திரைப்பட பாடல்களை இங்கு கேட்கலாம்:-</b> http://www.raaga.com/channels/malayalam/mo...e/M0000144.html இணைய வழி திரைப்படத்தை வாங்க: <img src='http://graphics8.nytimes.com//images/section/movies/amg/dvd/cov150/drt100/t153/t1530564337.jpg' border='0' alt='user posted image'> http://www.maebag.com/details.php?ItemCode...emName=Chemmeen http://www.netflix.com/MovieDisplay?moviei...4&mqso=60178549 http://www.imdb.com/title/tt0059028/ - Aravinthan - 04-04-2006 செம்மீன் படத்தினை நானும் 17,18 வருடங்களுக்கு முன்பு பார்த்தனான். 'கடலினைக்கரை போனோரே' என்ற பாடலினை அப்படம் பார்த்துவிட்டு முணு,முணுத்த காலங்கள் யாபகத்துக்கு வருகிறது. தமிழிழப்பாடல்களில் எல்லாப்படல்களும் கவர்ந்தாலும் எனக்கு கவர்ந்தவற்றில் முதல் 2 இடங்கள் 'ஆழக்கடலெங்கும் சோழ மகராஜன்' பாடலும் 'பொங்கிடும் கடற்கரை ஓரத்திலே' என்றபாடலும். தமிழ்னாட்டில் இருந்த காலத்தில் ஈழப்பாடல் கேக்கமுடியாததினால், பிறகு லண்டனில் படிக்கும் போது மீண்டும் கேக்கத் தொடங்கினேன். படிக்கும்போது பெற்றோல் நிலையத்தில் பகுதி நேரம் வேலை செய்து கொண்டு நான் படித்தேன். அக்காலத்தில் ஸ்கொட்லண்ட் அரசாங்கத்துக்கு பாரளுமன்ற உரிமை கிடைத்ததற்காக ஆதரவு தெரிவிப்பதற்காக பிரித்தானியாவில் உள்ள ஈழத்தமிழர்கள் லண்டன் கிங்ஸ்குரஸ் புகையிரதனிலையத்திலிருந்து ஸ்கொட்லண்டுக்கு தனியாக புகையிரத்தினை வாடகைக்கு அமர்த்தி ஈழத்தமிழர்கள் மட்டும் பிரயாணம் செய்தார்கள். ஈழத்து பாடல்கள் அப்புகையிரதவண்டியில் ஒலிக்க, சிற்றுண்டிகள் உண்டு பல தமிழர்கள் சென்றார்கள். எல்லோரும் செல்வதினால் பெற்றோல் நிலையத்தில் துரதிஸ்டவசமாக எனக்கு வேலை நாள் என்பதினால், லீவு கிடைக்கவில்லை. பிறகு திங்கள் கிழமை சண்ரைஸ் வானொலியில் இருந்து ஒலிபரப்பின் தொகுப்பினை வேலைத்தளத்தில் இருந்து கேட்டேன். அப்பொழுது அடிக்கடி 'ஆழக்கடலெங்கும் சோழ மகராஜன்' என்ற பாடலினை ஒலிபரப்புச் செய்தார்கள். புகையிரத வண்டியிலும் இப்பாடல் அதிகமாக ஒலிபரப்பானதாகவும் சொன்னார்கள். அன்று முதல் கேட்கத் தொடங்கிய இப்பாடலினை இன்றும் நான் ரசிக்கிறேன். - kanapraba - 04-04-2006 அரவிந்தன் சுவையான உங்கள் நினைவுகளையும் மீட்டிருக்கின்றீர்கள், நன்றி கானா பிரபா - Luckyluke - 04-04-2006 இந்தப் படம் ஜனாதிபதியின் தங்கத் தாமரை விருது பெற்ற முதல் தென்னிந்தியப் படம்.... - கந்தப்பு - 04-05-2006 விளங்கு மீன், வாழைமீன் போல , செம்மீனும் என்று நினைச்சுவந்தால் கானாபிரபாவின் அருமையான விமர்சனத்தினைக் காணக்கூடியதாக இருக்கிறது. தம்பி பிரபா, போனகிழமை வானொலியில் உமது குரலைக்காணவில்லை,கோவில் திருவிழாவிலும் உம்மைக் காணவில்லை, பிறகு தான் நண்பர் சொன்னார் வேலை விசயமாக சிட்னியினை விட்டு வெளியில் போய்விட்டிர் என்று, போன இடத்திலும் இருந்து நேரம் கிடைக்கும்போது யாழில் கருத்தெலுதும் கானாபிரபாவுக்கு எனது நன்றிகள். கண்ட கண்ட கடைகளில் சாப்பிடமால் உடம்பைக்கவனமாகப் பாரும் தம்பி. - kanapraba - 04-05-2006 நன்றி கந்தப்பு, பெரியவங்க சொன்னாப் பெருமாள் சொன்ன மாதிரி - KULAKADDAN - 04-06-2006 கனப்பிரபா உங்கள் வலைப்பதிவில் வரும் பல சுவையான பதிவுகளை வசிப்பது வழக்கம். ஆனால் இது வரை கருத்துக்களை பகிரவில்லை என நினைக்கிறேன். உங்கள் பதிவுகள் எழுதும் நடை மிக நன்றாக உள்ளது. செம்மீன் எனும் படத்தை இது வரை பார்த்ததில்லை. உங்கள் பதிவின் மூலம் ஒரு அறிமுகம் கிடைத்துள்ளது. AJeevan Wrote:Quote:கானபிரபா அஜீவன் அண்ணா நீங்கள் இணைத்த பாடலையும் கேட்ட போது அதன் வரி வடிவத்தையும் பார்த்த போது அண்மையில் வெளிவந்த பாடல் ஒன்றில் மேலே சொன்ன பாடலின் முதல் அடிகள் பயன்படுத்தப்படிருந்ததை உணரமுடிந்தது. செம்மீன் படத்தில் அப்பாடல் சோகமான ஒரு காட்சியில் வருவதாக? கானபிரபவின் வலைப்பதிவில் வந்த பின்னூட்டத்தில் வாசித்த ஞாபகம். அந்த பாடலுக்கான இணைப்பு கீழே தருகிறேன். இப்பாடல் சோகமாக இல்லை. கானா??? பாடல் http://s59.yousendit.com/d.aspx?id=3JELIUU...53261K5XRPOXG7G - வர்ணன் - 04-07-2006 வணக்கம் கான பிரபா உங்கள் விபரணம் - படத்தை பார்க்கும் ஆவலை தூண்டுது-! சாத்தியபடுமோ தெரியல! அது சரி - பிரபா- அஜீவன் அண்ணா வும் நீங்களூம் நண்பர்களா? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> நிறைய விசயம் - இருவரும் -தெரிந்து வைத்திருக்கிறீர்கள்! தொடருங்கள்! 8) - kanapraba - 04-08-2006 வணக்கம் வர்ணன் நண்பர் அஜீவனும் உங்களைப் போலவே முகம் தெரியாத யாழ் நண்பர். ரசனைகளால் ஒற்றுமைப்பட்டிருக்கிறோம். அன்புடன் கானா பிரபா - கந்தப்பு - 04-11-2006 kanapraba Wrote:நன்றி கந்தப்பு, பெரியவங்க சொன்னாப் பெருமாள் சொன்ன மாதிரிபெருமாள் என்றால் இந்தியனாமியோடு துண்டைக்காணோம், துணியக்காணோம் என்று ஒடினாவரோ? - தூயவன் - 04-11-2006 கந்தப்பு Wrote:பெருமாள் என்றால் இந்தியனாமியோடு துண்டைக்காணோம், துணியக்காணோம் என்று ஒடினாவரோ? அது ஒரு டுபாக்கூறு நைனா!! அது ஒரிசாவில் மாடு மேய்த்துக் கொண்டு நிக்குது. அதைப் போய் பெரியவன் றேஞ்சுக்கு ஒப்பிடலாமா?? |