| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,243
Full Statistics
|
| Online Users |
There are currently 579 online users. » 0 Member(s) | 575 Guest(s) Applebot, Baidu, Bing, Google
|
| Latest Threads |
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,120
|
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: SMPXrArgum
10-23-2025, 05:42 AM
» Replies: 27
» Views: 10,095
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,558
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,264
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,550
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 30,938
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,338
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 37,989
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 7,954
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,221
|
|
|
| சிரித்திடு நண்பியே............! |
|
Posted by: jcdinesh - 03-29-2006, 06:29 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (14)
|
 |
நண்பி.....
நண்பி.........
நட்பு....
சாதாரணமாகத்தான் இருந்தது எனக்கு
உன்னை காணும் வரை
ஏதேனும் எதிர்பார்ப்புக்களுடனே
அன்பு காட்டும் உலகில்
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்-உன்
அன்பை எண்ணி வியந்து போகிறேன்....
நண்பி.........
மொழிகளோ....
தூரங்களோ........
வயதோ.......
மற்ற எதுவுமே - நட்பை
எதிர் பார்ப்பதில்லை...
உன்னாலே புரிந்து கொண்டேன்..
என் வாழ்க்கைத் தோட்டத்தில்
எத்தனையோ 'நட்பு" மலர்கள் - ஆனால்
உன் நட்பைப்போல் எதுவும்
மலர்ந்து மணம் வீசவில்லை
கால வெள்ளத்தில்
சிதறுண்டு போகும் உறவுகளில்
நண்பி.............தொடர்வாயா
உன் நட்பை
இறுதி வரை..........?
<img src='http://img137.imageshack.us/img137/1895/godislovelgwht8vq.gif' border='0' alt='user posted image'>
|
|
|
| கரிநாகம் கருணா என்னும் மாயை!!!!!!!!! |
|
Posted by: I.V.Sasi - 03-29-2006, 03:56 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (21)
|
 |
[b]<span style='font-size:25pt;line-height:100%'>கரிநாகம் கருணா என்னும் மாயை!!!!!!!!! (பாகம் 1)</span>
கருணாவின் துரோகம் அரங்கேறி இரண்டு வருடங்கள் ஆகின்றன. விடுதலைப்புலிகளின் தலைமைக்கு சவால் விட்டபடி 41 நாட்கள் அட்டகாசம் புரிந்த கருணா மூன்றே மூன்று நாட்கள் நடந்த சண்டையின் பின்பு விரட்டியடிக்கப்பட்டார். தப்பி ஓடிய கருணா இந்திய, சிறிலங்கா புலனாய்வுத்துறையின் பாதுகாப்பில் உயிர் வாழ்ந்து வருகிறார். கருணா உயிர் வாழ்வதாலும், இடையிடையே இராணுவத்தின் துணையுடன் தாக்குதல்கள் நடத்துவதாலும், கருணாவைப் பற்றி இன்று வரை பேச வேண்டிய, எழுத வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஜெனீவா பேச்சுவார்த்தைகளை அடுத்து கருணா குழுவின் நடவடிக்கைகளை சிறிலங்கா அரசு ஓரளவாவது கட்டுப்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நிலைமை மேலும் மோசம் அடைந்திருக்கிறது. கருணா குழு தற்பொழுது வெளிப்படையாக தென்தமிழீழத்தில் இராணுவ கட்டுப்பாட்டு பகுதிகளில் முகாம்களை திறந்து வருகின்றது. சிறுவர்களையும் இளைஞர்களையும் பலவந்தமாக படையில் இணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது. கொலைகளையும் செய்து வருகின்றது. ஆனால் சிறிலங்காவின் அமைச்சர்களும், இராணுவத் தளபதிகளும் கருணா குழுவிற்கும் தமக்கும் சம்பந்தம் இல்லையென்றும், கருணா குழு சுதந்திரமாக இயங்குகிறது என்றும் கூறி வருகின்றார்கள்.
அண்மைக் காலங்களில் கருணா குறித்த மாயைகள் சிறிலங்கா அரசாலும் தமிழினத் துரோகிகளாலும் சிறிது அதிகமாகவே பரப்பப்பட்டு வருகின்றன. இதில் முக்கியமானது கருணாவின் இராணுவ ஆற்றல் குறித்து உருவாக்கப்பட்டிருக்கும் மாயை. கருணாவே முன்பு விடுதலைப்புலிகளின் வெற்றிகள் அனைத்துக்கும் காரணமாக இருந்ததாகவும், கருணா இல்லாத காரணத்தால் விடுதலைப்புலிகளால் இனி போர் புரிய முடியாது என்றும் இந்த மாயை உருவாக்கப்பட்டிருக்கின்றது. இதை துரோகக்குழுக்களுக்கு துணை போகின்றவர்கள் நம்பவும் வேறு செய்கின்றார்கள். விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவானவர்களில் ஒரு சிலரிடம் கூட கருணா குறித்த அச்சம் இருக்கிறது. ஆனால் கருணாதான் விடுதலைப்புலிகளின் வெற்றிகளுக்கு காரணம் என்று நம்புபவர்கள் இராணுவரீதியான அறிவோ, ஆய்வு செய்யும் திறனோ இம்மியளவும் இல்லாதவர்களாகவே இருப்பார்கள்.
ஒரு போர் நடக்கின்ற பொழுது, இயல்பாகவே தளபதிகள் மீது மக்களின் கவனம் திரும்பும். அந்த தளபதிகளைப் பற்றிய பல வீரசாகசக் கதைகள் உலாவும். இது உலகம் முழுவதும் நடக்கக்கூடிய ஒரு சாதரண நிகழ்வு. தமிழர் வரலாற்றிலும் தளபதிகளுக்கு என்று ஒரு முக்கிய இடம் உண்டு. சங்க கால பாடல்களில் கூட பல தளபதிகள் போற்றிப் புகழப்பட்டிருக்கின்றார்கள். இதே போன்று ஈழப் போரிலும் பல தளபதிகள் தங்களின் வீரமும் அறிவும் மிகுந்த செயற்பாடுகளால் மக்களின் கவனத்தை ஈர்த்திருக்கின்றார்கள்.
இந்திய ஈழப் போரை தவிர்த்து, ஈழப் போர் மூன்று கட்டங்களாக வகுக்கப்பட்டுள்ளது. இதில் ஈழப் போர் 1 இல் மக்களால் அதிகம் சிலாகிக்கப்பட்டவர் தளபதி கிட்டு. அதே போன்று ஈழப் போர் 2இல் நடந்த பல சமர்களிற்கு தளபதியாக இருந்தவர் கேணல் பால்ராஜ். தளபதி கிட்டுவின் தலைமையில் நடந்த தாக்குதல்கள் எப்படி யாழ்ப்பாணத்தை விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததோ, அதே போன்று தளபதி பால்ராஜின் தலைமையில் நடந்த தாக்குதல்கள் வன்னி மண்ணை விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தன.
பல போரியல் சாதனைகளைப் படைத்த ஈழப் போர் 1இலும் சரி, ஈழப்போர் 2இலும் சரி, கருணா என்னும் பெயர் பெரிதாக அறியப்படாத ஒன்றாகவே இருந்தது. இடையில் தென்தமிழீழத்தில் நடந்த இந்திய இராணுவத்தின் துணைப்படைகளான தமிழ் தேசிய இராணுவத்திற்கு எதிரான சண்டைகளும், அப்போதைய தளபதியாக இருந்த கரிகாலன் தலைமையில் நடந்ததாகவே அறியப்படுகின்றது. அன்றைய ஊடகங்களிலும் கருணாவின் பெயரைக் காண முடியவில்லை. ஈழப் போர் 3இன் ஆரம்பங்களில் நடந்த சமர்களில் கருணாவின் பங்கு மிகச் சிறுதளவிலேயே இருந்தது. ஆனால் ஈழப் போர் 3இல் நடந்த சமர்களில் மிக நீண்ட சமராகிய ஜெயசிக்குறுவின் முறியடிப்புச் சமருக்கு பொறுப்பாக கருணா நியமிக்கப்பட்ட பிறகே, கருணா பிரபல்யம் அடையத் தொடங்கினார். அதன் பிறகு ரணில் அரசுடன் நடந்த பேச்சுவார்த்தைகளில் விடுதலைப்புலிகளின் தரப்பில் ஒருவராக கருணா இடம்பெற்றவுடன் அனைத்து தமிழர்களும் அறிந்த ஒரு மனிதனாக மாறி விட்டார். இவைகளினால் ஈழப்போர் 3 இன் தளபதி கருணாவே என்கின்ற மாயையும் உருவாகி விட்டது.
ஈழப் போர் 3 இல் கருணா கட்டளைத் தளபதியாக செயற்பட்டதாக கூறப்படும் மிக முக்கிய சமர்களாக ஜெயசிக்குறு எதிர்ச்சமர், ஓயாத அலைகள் 2, ஓயாத அலைகள் 3 ஆகியவை கருதப்படுகின்றன. ஆனால் கருணாவும், கருணாவைச் சார்ந்தவர்களும் ஜெயசிக்குறுவைப் பற்றி மட்டுமே வாய் கிழியப் பேசுவார்கள். ஓயாத அலைகள் 2 மற்றும் 3 பற்றி வாய் திறப்பதில்லை. இந்த இரண்டு சமர்களின் வெற்றிக்கும் தனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பது கருணாவிற்கு தெரியும்.
ஆனால் இவர்கள் ஜெயசிக்குறு சமரைப் பற்றி பேசுகின்ற விடயங்களிலாவது உண்மை இருக்கின்றதா என்றால், அதிலும் இல்லை என்பதுதான் பதில். அண்மைக் காலமாக இன எதிரிகள் சிலரால் ஒரு புதிய கதை பரப்பப்பட்டு வருகிறது. தேசியத் தலைவர் ஜெயசிக்குறுவை எதிர் கொள்ளாது, சிறிலங்கா இராணுவத்தை உள் நுளைய அனுமதிக்கும் திட்டத்தில் இருந்தார் என்றும், ஆனால் கருணா பொறுப்பை தன்னிடம் விடும்படியும், தான் ஜெயசிக்குறுவை முறியடித்துக் காட்டுவேன் என்று அடம்பிடித்து கூறி அவ்வாறு செய்தும் காட்டினார் என்று கதை பரப்பி வருகிறார்கள். இதை ஒரு பேச்சுக்கு உண்மை என்று எடுத்துக் கொண்டாலும், தலைவர் அவர்கள் உயிரிழப்புக்களை தவிர்க்கும் நோக்கோடு, உள்நுளைய விட்டு பின் தாக்குகின்ற திட்டத்தை போட, கருணாவோ கிழக்கு மாகாண போராளிகளை பலி கொடுக்கும் வண்ணம் ஒரு திட்டத்தை போட்டதாக அல்லவா அர்த்தம் வரகின்றது. இராணுவத்தை வன்னியை விட்டு விரட்டியடித்த ஓயாத அலைகள் 3ஐ விட ஜெயசிக்குறு சண்டையில் விடுதலைப்புலிகளுக்கு ஏற்பட்ட இழப்புக்கள் அதிகம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஆகவே தன்னுடைய புகழுக்காக கிழக்கு மாகாண போராளிகளை கருணா பலி கொடுத்ததாகவே இவர்களின் இந்த புதிய கதை அர்த்தம் கற்பிக்கின்றது. ஆனால் உண்மையில் ஜெயசிக்குறு எதிர்ச் சமருக்கு பொறுப்பாக ஆரம்பத்தில் கருணா நியமிக்கப்படவில்லை. கிட்டு பீரங்கிப் படையணியின் கட்டளைத் தளபதியாக இருந்த கேணல் பானுவே பொறுப்பாக இருந்தார்.
ஜெயசிக்குறு ஆரம்பித்து இரண்டு வாரங்கள் கழித்து தாண்டிக்குளத்தில் இருந்த வழங்கல் முகாம் மீது "செய் அல்லது செத்துமடி 1 " என்னும் பெயரில் ஒரு ஊடறுப்புத் தாக்குதல் நடைபெற்றது. ஜெயந்தன் படையணி முக்கிய பங்காற்றிய இந்தச் சண்டை கருணாவின் தலைமையில் நடந்தது. இந்தச் சண்டை வெற்றிகரமாக முடிந்ததை அடுத்து ஜெயசிக்குறு எதிர்ச் சமருக்கான கட்டளைத் தளபதியாக கருணா நியமிக்கப்பட்டார். காடுகளில் சண்டை செய்யக் கூடிய வல்லமை படைத்த ஜெயந்தன் படையணி ஜெயசிக்குறு சண்டைகளில் முக்கிய பங்கினை வகிப்பதை கருத்தில் கொண்டும் இந்த நியமனம் இடம் பெற்றது.
உண்மையில் ஜெயசிக்குறுவில் ஜெயந்தன் படையணி நிகழ்த்திய சாதனைகள் மயிர் சிலிர்க்க வைப்பவை. ஜெயந்தன் படையணியோடு விடுதலைப்புலிகளின் மற்றைய படையணிகளும் இணைந்து சிறிலங்கா படைகளின் நகர்வை தடுத்துபடி இருந்தன. ஆயினும் பலத்த சேதங்களிற்கு மத்தியிலும் சிறிலங்கா படைகளால் மெதுமெதுவாக மாங்குளம் வரை நகர முடிந்தது.
விடுதலைப்புலிகள் தரப்பிலும் உயிரிழப்புக்கள் ஏற்பட்ட வண்ணம் இருந்தன. போர் நீண்டு கொண்டு போவது விடுதலைப்புலிகளுக்கும் பாதகமாக முடியலாம். ஆகவே ஜெயசிக்குறுவை உடனடியாக நிறுத்த வேண்டிய தேவை ஏற்பட்டது. இதற்காக நடத்தப்பட்டதே ஓயாத அலைகள் 2. ஜெயசிக்குறு படையினர் சென்றடைய திட்டமிட்டிருந்த கிளிநோச்சி இராணுவத்தளத்தை விடுதலைப்புலிகள் தாக்கிக் கைப்பற்றினர். இந்த ஓயாத அலைகள் 2 ஜெயசிக்குறுவை நிறுத்தியது.
ஜெயசிக்குறுவை நிறுத்திய ஓயாத அலைகள் 2 இல் கருணாவின் பங்கு என்ன?
தொடரும்
-வி.சபேசன்
(இக் கட்டுரைக்கு சில தகவல்களை தந்து உதவிய தமிழீழத்தில் வாழும் பெயர் குறிப்பிட முடியாத நண்பர்களுக்கு நன்றி)
|
|
|
| ஜெமினி. |
|
Posted by: Anandasangaree - 03-29-2006, 03:16 PM - Forum: புலம்
- No Replies
|
 |
இலங்கை அரசின் புலனாய்வுத்துறையால் கூலிக்கு அமர்த்தப்பட்டிருக்கும் தேனீ ஆசிரியர் ஜெமினி.
Wednesday, 29 March 2006
யேர்மனி நாட்டின் ஸ்ருட்காட் நகரத்தில் வசிக்கும் இவர் ஆரம்பகாலத்தில் ஈரோஸ் அமைப்பின் ஸ்ருட்காட் நகர அமைப்பாளராக இருந்தவர். ஈரோஸ் அமைப்பின் சிதைவுக்குப் பின் இவரின் நடவடிக்கைகள் காரனமாக மக்களால் வெறுக்கப்பட்டுத் தனிமைப் படுத்தப்பட்டிருந்தார். இவரின் திருமணம் கூட ஏமாற்று வித்தைகள் கூடிய அடவடித்தனங்களுடன் தான் நடந்தது. இவருடைய மனைவி அமுதா ஒரு விடுதலைப் போராளியாக இருந்தவர். கரும்புலிப் போராளியாக இருந்தவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
தமிழ் நாட்டுக்கு வந்திருந்த போது இவருடைய அண்ணனின் வற்புறுத்தலினால் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து விலகி அண்ணன்கூட யேர்மனியில் உள்ள ஆலன் என்னும் நகரத்திற்கு ஓடி வந்தவர்.
அங்கு வேறு ஒரு நபருக்குத் திருமணம் செய்ய ஏற்ப்பாடுகள் நடந்த போது அமுதா மீது ஆசைப்பட்ட தேனீ ஆசிரியர் ஜெமினி அவளின் கடந்தகால வாழ்க்கையை மிகவும் இளிவுபடுத்தி அமுதாவைத் திருமணம் செய்ய இருந்த நபரிடம் கூறினார்.
அதனால் விரத்தியடைந்த அந்த நபர் nஐமினியின் தற்போதைய மனைவியைத் திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டார். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்னடுத்தி ஜெமினி அமுதாவைக் கூட்டிக்கொண்டு தலைமறைவானார். பின்பு அமுதாவின் அண்ணண் இருவரையும் கண்டுபிடித்து இரகசியமாகத் திருமணம் செய்து வைக்கப்பட்டது.
இப்படி இன்னுமொருவருக்கு நிட்சயிக்கப்பட்ட பெண்னை தன்னுடைய வக்கிரபுத்தியால் வஞ்சகமாக மனைவியாக்கிக் கொண்ட பெருமைக்குரியவர் என்பது பல பேருக்குத் தொரிய வாய்ப்பில்லை.
சொந்த வாழ்க்கையில் தூய்மை இல்லாதவர்கள் எட்டப்பர்களாக மாறுவது அதிசயமான விடயம் இல்லை. சமாதான காலகட்டத்தைப் பயன்படுத்தி அனைத்துலகத்தில் தமிழ்த் தேசிய உருவாக்கத்தை அழிப்பதற்காக இலங்கை அரசின் புலனாய்வுத்துறை ஐரோப்பாவில் மையம் கொண்டிருப்பதை யாவரும் அறிவார்கள்.
அவர்களால் தேர்ந்தெடுத்தவர்களில் தேனீ ஆசிரியர் ஜெமினி மிகமுக்கியமானவர். இலங்கை அரசாங்கத்தால் வீசப்படும் எலும்புத்துண்டுகளுக்காக தன் இனத்தின் விடுதலைத் தீயிணை அணைப்பதற்கு பல வழிகளிலும் முயற்சி செய்கின்றார்.
பணத்திற்காக எதையும் செய்யத்துணியும் இவர் இங்குள்ள யேர்மன் தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்டவராகவும் தன் வீட்டைவிட்டு வெளியில் வருவதற்குக்கூட காவல் துறையின் துணையை வேண்டவேண்டியவராக இருக்கின்றார். இதுவரைக்கும் மகப்பேறு கிடைக்காமல் nஐமினியின் மனைவி அமுதா வருந்துவது யாவரும் அறிந்தே. ஜெமினியினுடைய கடந்தகால நடவடிக்கையின் பயனை அமுதா இப்போது அனுபவிக்கின்றார் என்று பலரும் பேசிக்கொள்கின்றார்கள். (தொடரும்......)
தகவல் - ஜெகநாதன்.
|
|
|
| Gang boss deported to Sri Lanka |
|
Posted by: Rasikai - 03-29-2006, 12:26 AM - Forum: பிறமொழி ஆக்கங்கள்
- Replies (3)
|
 |
<b>Gang boss deported to Sri Lanka</b>
<b>Immigration charges followed years of deadly street fighting between rival Tamil groups in '90s
Mar. 28, 2006. 04:57 AM
MICHELLE SHEPHARD
STAFF REPORTER</b>
<img src='http://img145.imageshack.us/img145/3001/060328sittampalam3009tp.jpg' border='0' alt='user posted image'>
VINCE TALOTTA/TORONTO STAR
Jothiravi Sittampalam allegedly formed the AK Kannan gang, named after his street name (Kannan, or God) and the AK-47.
The reputed leader of a Tamil gang whose battle with rival gang members on the streets of Toronto claimed the lives of more than a dozen youths in the late 1990s, and once led to a midday shooting on Highway 404, was deported late last night to Sri Lanka.
Kaileshan Thanabalasingham was one of the main targets of Project 1050, a joint police and immigration investigation that ended with the arrest of close to 51 alleged gang members on Oct. 18, 2001.
The majority of the accused were charged under a section of the immigration act that prohibits involvement in a criminal organization, marking the first time street gangs were classified as "organized crime" under immigration laws.
Known in Toronto's Tamil community as Kailesh, the 36-year-old father was accused of leading the VVT gang, a west Toronto group that was formed in the early 1990s and named for Valvettithurai, a northern Sri Lankan town.
Thanabalasingham denied he led the VVT, or that his criminal convictions — possessing a machete in 1996 and a 1998 conspiracy to commit assault for trying to acquire guns for others — were related to gang membership.
A January Immigration and Refugee Board decision that cleared the way for his removal classified both convictions as gang-related and also noted Thanabalasingham was known to visit incarcerated gang members.
"It's quite instructive that the appellant took it upon himself to attend court when gang members were charged with criminal offences, to assist in preparing their defence and then visit them in jail when incarcerated. He acted like a shepherd tending to his flock," wrote IRB appeal division member Egya Sangmuah in his Jan. 6 decision.
Thanabalasingham's lawyer, Barbara Jackman, had argued that as a Tamil, he would be targeted by the Sri Lankan government if returned home due to media reports that have linked the VVT to the Liberation Tigers of Tamil Eelam, or LTTE, a guerrilla group fighting the Singhalese government for independence.
Sangmuah dismissed claims that Thanabalasingham would face danger.
"The Minister (of Immigration) does not allege that the appellant or the VVT is connected to the LTTE," he wrote. "(E)ven if the appellant is wrongly perceived as a member of the LTTE, he will likely not face persecution."
Jackman said yesterday she believed her client was being punished unfairly since he had already been sentenced for his criminal activity.
"If someone commits a criminal offence, they go to trial, they get a sentence, they get punished for it. Are they ever allowed to overcome it? Yes. In Kailesh's case where his family's all here and he has a clean record since 1998, the board and the minister still think he should be effectively punished," she said.
Thanabalasingham came to Canada in July 1991 and was granted refugee status, then became a landed immigrant on Aug. 31, 1992. Police believe he became leader of the VVT in 1997, after the two former alleged leaders, Sri Ranjan Rasa and Niranjan Claude Fabian, were arrested (the men remain in Canada fighting their deportation).
VVT's primary target was rival AK Kannan, whose stronghold was in Scarborough. Police allege Jothiravi Sittampalam formed that group, naming it after his street name (Kannan, meaning God) and his love for the AK-47 assault weapon. Before his incarceration he had more than one attempt on his life including the incident in April 2001 when his car was surrounded on an off-ramp of Highway 404 and VVT members opened fire, only slightly injuring him.
One of the gangs' most high-profile crimes occurred in December 1997, when suspected VVT members shot at a doughnut shop that was a known AK Kannan hangout, killing Kapilan Palasanthiran, an innocent University of Waterloo student, and injuring two others.
During a series of retaliatory crimes, a gang member was seriously injured in 2000 after he was run over by a car, followed by an attack on occupants of a car idling at a Kennedy Rd. address in Scarborough. It was again a case of mistaken identity and two Tamil teenagers not connected to the gangs were killed.
"For three years the Tamil community was held hostage by two gangs vying for control in Toronto," said Det. Sgt. Greg Getty, head of Project 1050, in an interview yesterday before Thanabalasingham was escorted on a 10:40 p.m. flight out of Toronto.
"If he does get deported, it's a great day for the Tamil community."
Only 10 of the 51 alleged gang members arrested in 2001 have been deported. They include AK Kannan's reputed senior member, 33-year-old Panchalingam Nagalingam, who was deported in December. Panchan, as he was known in the community, was often referred to as an AK Kannan enforcer. Police sometimes called him "the cat" for his ability to cheat death.
Before his arrest in December 2000, bullets narrowly missed his baby son and girlfriend. Through the media, he told the shooters to leave his family alone and to deal with him instead. In March the next year, he was shot six times as he left the Mimico Detention Centre, where he was serving a sentence on weekends. When interviewed by the Star that summer Nagalingam said he had "no idea" why he was targeted.
Another senior member associated with the VVT was deported in January. Jeyaseelan Thuraisingam, known on the street as Seelapu, was deported after his final court appeal for protection was thrown out.
Sittampalam, the alleged 35-year-old leader of AK Kannan, remains in Canada awaiting a final federal court appeal. Unlike Thanabalasingham, who paid a $55,000 cash bond in January 2004, with a promise of $40,000 more if he violated bail conditions, Sittampalam has remained in custody since his 2001 arrest.
"These are largely permanent residents and people whom Canada has granted protection from persecution and the threshold for deportation is much higher," said Canadian Border and Security Agency spokesperson Anna Pape yesterday, explaining the time it takes for these cases to work their way through immigration and court appeals.
"Just because it's a lengthy process doesn't mean it's not worth pursuing. The real success of this project lies at the community level. It's meaningful to Canadians because our efforts are resulting in the dismantling of a network of organized criminals and resulting in a large reduction of local crime."
After the arrests four and a half years ago, many in Toronto's Tamil community said they breathed a sigh of relief and there was a noticeable dip in crime in Tamil neighbourhoods.
But lately some new youths are attempting to fill the void. Police sources say that while the violence has not reached the level it was in the 1990s, Tamil youth groups calling themselves names such as the MCF (Money Comes First), Bravehearts or TBT (True Brown Thugs), are starting to build up their ranks.
http://www.thestar.com/NASApp/cs/ContentSe...ol=968342212737
|
|
|
| மௌனத்தின் எல்லையிலே...! |
|
Posted by: Rasikai - 03-28-2006, 09:25 PM - Forum: கதைகள்/நாடகங்கள்
- Replies (1)
|
 |
<b>மௌனத்தின் எல்லையிலே </b>
வீடு ஒரே கும்மிருட்டாக இருந்தது. உள்ளே போவதற்காக எட்டிப் பார்த்தவளின் மனதிலே அதை எப்படி எடுப்பது என்ற எண்ணமே தோன்றியது. அவளுக்கு உதவுவது போல் அந்தக் கூரையில் இருந்த ஓட்டைகள் மூலம் வந்த நிலவின் ஒளி, வெளிச்சம் கொடுத்துக் கொண்டிருந்தது.
பானைக்குள் கையை விட்டு துளாவினாள் சரசு. கையில் கிடைத்த சில்லறைகளை அந்த நிலா வெளிச்சத்தில் பிடித்து உற்றுப் பார்த்து உறுதி செய்தவள் ஒருவித திருப்தியுடன் தனது முந்தானையிலே முடிந்து தன் இடையிலே செருகினாள். நாளை நேரத்திற்கே போகவேண்டும் என்ற நினைவு உந்தவே கயிற்றிலே தொங்கிக் கொண்டிருந்த ஒரு பழந் துணியை நிலத்திலே போட்டவள் சுருண்டு படுத்துவிட்டாள். ஆனால் அவளால் நித்திரை கொள்ள முடியாதவாறு நினைவு அலைகளிலே சிக்கித் தவித்துக் கொண்டிருந்தாள். அவள் கணவனின் குறட்டை ஒலி வேறு அவளுக்கு இடையூறாக இருந்தது. தன் வீட்டை நினைந்து பார்த்தாள். ஒவ்வொரு நாளும் தவறாமல் மாலை கட்டிக்கொண்டுபோய்ப் போட்ட பிள்ளையாரை நினைத்தாள். கடவுளே ,து உனக்கே ஞாயமா? உன்னைக் கையெடுத்துக் கும்பிட விடாமல் இப்படித் தவிக்க விட்டு விட்டாயே என்று மனத்திற்குள் பலவற்றையும் நினைந்து நினைந்து வருந்திக் கொண்டிருந்தவளை நீண்ட நேரத்தின் பின் நித்திராதேவி மெல்லென அணைத்துக் கொண்டாள்.
குடியிருந்த வீட்டை விட்டு இரவோடிரவாக கையில் அகப்பட்டதைத் தூக்கிக்கொண்டு ஓடியவர்களின் பட்டியலில் இவர்களும் அடங்குவர். உறவினரோ ஒவ்வொரு திக்காகப் போய்விட்டனர். க்ஷெல்லடியில் தந்தையையும் இரண்டு பிள்ளைகளையும் இழந்துவிட்டாள். அவர்களுடைய இழப்பைத் தாங்காமல் பல நாட்களாக மனத்துள்ளே வெதும்பி நொந்து நொந்து நெக்குருகிக் கொண்டிருந்தாள். இது போன்ற பல சம்பவங்களை அடுத்தடுத்துச் சந்திக்க நேர்ந்ததால் அவள் நெஞ்சமும் கல்லாகிப் போனது போன்ற நிலையிலே தானிருந்தாள். அவள் மனதிலே ஏதோ ஓர் உண்மை புலனாகியது. அந்த உண்மை அடிக்கடி அவளை எப்போ எங்களுக்கும் அக்கதி என்று ஏங்க வைப்பது போலிருந்தது. கண்ணைக் கட்டிக் காட்டிலே விட்டது போன்ற பிரமைதான் தோன்றியது. அவளின் தங்கை ரேணு கனடாவில் இருந்து அனுப்பும் காசு தான் அவர்களுக்குச் சிறிது ஆறுதலைக் கொடுத்துக் கொண்டிருந்தது.
கனடாவில் ரேணு படும் கஸ்டங்கள் அவர்களுக்குப் புரிந்திருக்க ஞாயமில்லை. காரணம் அவள் தன் கஸ்டங்கள் எதையுமே அவர்களுக்கு எழுதுவதில்லை. ரேணு சாதாரணமான ஒரு தொழிற்சாலை வேலைதான் செய்கின்றாள். ஒரு வீட்டிலே வாடகைக்கு ஒரு அறை எடுத்து மிக எளிமையாகவே வாழ்கின்றாள். எவ்வளவு செலவுகளைத் தன்னால் கட்டுப் படுத்த முடியுமோ அவ்வளவு கட்டுப்பாட்டுடன் தான் வாழ்கின்றாள். தன்னைத் திருமணம் செய்யவென்று கனடாவிற்கு அழைத்த தன் கணவராகப் போறவரிடம் தன் குடும்பம் எப்போ சந்தோக்ஷமாக பழைய இடங்களிலே போய் இருப்பினமோ அதன் பின் நம் திருமணத்தை வைத்துக் கொள்வோம் என்று சம்மதம் கேட்டாள். ஆனால் நாளாக நாளாக அவரின் போக்குகளை அவதானித்தவள் அவரிற்கு ஏற்கனவே இங்கு குடும்பம் இருப்பதை அறிந்தாள். தாங்கொணாத் துயருற்றாள். ஈற்றில் தெளிந்தவளாக தன் குடும்பத்திற்கு உதவுவதே தன் நோக்கமாக உழைத்து வந்தாள். இருந்தபோதும் அவளால் மிச்சம் பிடிப்பது மிகவும் கடினமாகவேயிருந்தது. ஏதோ தன்னாலியன்றதை அந்த அகதிக் குடும்பத்திற்குச் செய்தே வருகின்றாள். இம்முறை தொழிற்சாலையில் அடிக்கடி லீவுகள் தந்தமையால் அவளால் நேரத்திற்குப் பணம் அனுப்ப முடியாமல் போய்விட்டது. அவர்கள் என்ன செய்வார்களோ என்று நினைத்துக் கவலைப்பட்டாள்.
முதற் கோழி கூவிய சத்தம் கேட்டு எழுந்த சுந்தரம் இங்கேருமப்பா சரசு எழும்பல்லியே கோழியெல்லே கூவிட்டுது. நேரத்துக்குப் போனால் தானே ஏதும்.. என்று இழுத்தவர் என்ன நினைத்தாரோ நான் போகட்டே என்று கேட்டார். கணவரின் குரல் கேட்ட சரசு சடக்கென எழுந்தாள். அடுப்பிற்குள்ளிருந்த ஒரு கரித்துண்டை எடுத்து வாய்க்குள் போட்டுச் சப்பினாள். பின் தன் கை விரலினால் பற்களை நன்கு அவசர அவசரமாகத் தேய்த்தாள். ஒரு செம்பு தண்ணீரை எடுத்து அதில் வாய் கொப்பளித்து முகத்தையும் கழுவினாள். தன் சேலைத் தலைப்பிலேயே முகத்தையும் துடைத்தவள் தன் தலையை விரித்து கைகளினால் கோதியபின் ஒருமுறை தன் கூந்தலை உதறிவிட்டு மீண்டும் தன் கூந்தலை அள்ளி முடிந்தாள். வீட்டிற்குள் உடைகள் போடவெனக் கட்டப்பட்டிருந்த கயிற்றிலிருந்த ஒரு சேலையை எடுத்து தன் தலை, கைகள் யாவற்றையும் ழூடியபடி தன் இடுப்பிலிருந்த காசு முடிச்சையும் ஒரு முறை தடவிப் பார்த்தபடி விரைந்து நடையைக் கட்டினாள். மார்கழிப் பனியால் இலைகள் நனைந்திருந்தன. அவற்றிலிருந்து சொட்டுச் சொட்டாக நீர்த் துளிகள் விழுந்தன. அவை ஒருவிதமான சத்தத்தை எழுப்பிக் கொண்டிருந்தன. முன்னர் சிறுமியாக இருக்கும் போது அவளுக்கு இந்த பனித்துளிகள் இலையின் விளிம்புகளிலே வந்து விழ ஆயத்தமாக இருப்பதும் மரங்களின் கீழே யாராவது வந்தால் அந்த மரங்களை ஆட்டிவிட அதிலிருந்து விழுந்த அந்தப் பனித் துளிகளில் நனைந்து கூச்சலிட்ட பொழுதுகள் புல் நுனிகளிலே தேங்கி நிற்கும் முத்துப் போன்ற பனித்துளிகளை அவள் ரசித்த பொழுதுகள் ஏராளம். ஆனால் இன்று அவை பற்றிய நினைவுகளே இல்லாமல் ஓட்டமும் நடையுமாக விரைகின்றாள். தானும் ஒரு றாத்தல் பாண் வாங்கி விட வேண்டும் என்ற உந்துதலால்.
ஏற்கனவே நீண்டிருந்த வரிசையில் போய் நின்று கொண்டாள். அருகில் நின்றவர்களோ அறிமுகமற்றவர்கள். எனவே மெளனமாக நின்றாள். இருந்தும் அவள் மனமோ தன் முன்னால் நிற்பவர்களின் எண்ணிக்கையைக் கணக்குப் பார்த்தது. பின் தான் மிகத் தொலைவில் இல்லை என்ற மன ஆறுதலுடன் நின்றுகொண்டு அருகில் நிற்பவர்களின் கதைகளையும் காதில் விழுத்திக் கொண்டாள்.
வீட்டிற்குத் திரும்பி வரும்போது பொழுது பொல பொலவெனப் புலர்ந்திருந்தது. கதிரவனோ தன் பொற் கிரகணங்களைத் தன்னிச்சையாக நாற்றிசையும் பரவியிருந்தான். மரங்களில் இருந்த பனித் துளிகள் அவன் வெம்மை தாங்காது நிலத்திலே சொட்டுப் போட்டுக் கொண்டிருந்தன. இலைகளினுர்டாக கதிரொளி கீறல்களாக விழுந்து கொண்டிருந்தது.
அடுப்பிலே தண்ணீர் கொதித்துக்கொண்டிருந்தது, காலைத் தேனீருக்காக. ஏனப்பா இப்ப அடுப்பை மூட்டினீர்கள். கொஞ்சம் பொறுத்தெண்டா அந்தச் சூட்டோ டையே பகல் சமையலையும் முடித்திருக்கலாமெல்லே. இன்னொருக்கால் தீக்குச்சு விறகு வீணாகி விடுமே என்ற அங்கலாய்ப்பு அவள் வார்த்தைகளில் வெளிப்பட்டது. வெறுந்தேனீரை ஊற்றி ஒவ்வொருவருவருடைய உள்ளங்கைகளிலும் கரண்டியின் நுனியால் சிறிது சீனியையும் வைத்தாள். பாணை ஐந்து சம அளவு துண்டுகளாக வெட்டினார் சுந்தரம். ஆவலுடன் அவற்றை பிள்ளைகள் இருவரும் பெற்றுக் கொண்டனர். வெறுந் தேநீரிலே தோய்த்து அவற்றைச் சாப்பிட்டனர். சரசுவின் அம்மா பாக்கியமோ ரேணுவை வைதபடியே இருந்தார். அவளின்ர கடிதம் வந்து இப்ப எவ்வளவு நாளாகுது. அவளுக்கு நாங்கள் படும் கஸ்டங்கள் தெரிந்திருந்தும் இப்படி நடக்கிறாளே என்றார். அவர் வார்த்தைகளிலே இன்றாவது ரேணுவின் பணம் வராதா என்ற ஆதங்கம் தொனித்தது.
அடுப்பிலே சிறிதளவு அரிசியைப் போட்டு உப்புக் கஞ்சி காச்சி நாவிலே பூச என்று உறைப்பாக வெறும் மிளகாயை அரைத்து உப்பும் புளியும் சேர்த்தாள். தன் வேலைகள முடிந்துவிட்டதால் தன் தாயாருடன் திண்ணையில் வந்து அமர்ந்தாள் சரசு. அவளின் உள் மனமும் ரேணுவின் கடிதத்திற்காய் ஏங்கியது.
நானொருக்கால் உதில போட்டு வாறன் என்றுவிட்டு ரேணுவின் கடிதம் வந்திராதா என்ற ஆவல் மேலிட கடிதம் பார்க்கப் புறப்பட்டுப் போனார் சுந்தரம்.
நினைவலைகள் நீண்டங்கே
நெடுமூச்சுக்கள் வந்தன
கவலைகள் சூழ்ந்தங்கே
கண்ணீர் மழை பொழிந்தன
வெதும்பிய நெஞ்சமதில்
விம்மல்கள் வெடித்தன
வார்த்தைகள் வர மறுத்ததால்
மெளனமே சூழ்ந்ததங்கு
எழுதியவர் - நளினி மகேந்திரன்
நன்றி எழில்நிலா
|
|
|
| இரண்டுங்கெட்டான்கள் |
|
Posted by: stalin - 03-28-2006, 08:59 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்)
- Replies (1)
|
 |
நடுத்தர இனம் - என்ன செய்யும்?
மா.பா. குருசாமி
ஒரு சமுதாயத்தின் வளர்ச்சியும் மேன்மையும் அந்தச் சமுதாயத்திலுள்ள பல்வேறு வகையான மக்களின் செயல்பாட்டிலும் பங்களிப்பிலும் இருக்கின்றன. இதனை அறிய சமுதாயத்திலுள்ள மக்களை ஏதாவதொரு அடிப்படையில் பகுத்தும் பிரித்தும் ஆராய்வது நீண்ட நெடுங்காலமாகத் தொடர்ந்து வருகின்றது.
மனித நடவடிக்கைகளைத் தீர்மானிப்பதில் பல்வேறு காரணிகள் பங்கு பெறுகின்றன. அவற்றில் முதன்மையானதாகவும், ஆற்றலுடையதாகவும் பொருளாதாரக் காரணி இருப்பதால், அதன் அடிப்படையில் மக்களின் செயல்பாட்டை ஆராய்வது பயனுடையதாக இருக்கும்.
மக்களை மேல் நிலை, இடை நிலை, கீழ் நிலை என்று பொருளாதார அடிப்படையில் பகுக்கின்றபொழுது, இந்த அளவுகோல் நாட்டிற்கு நாடு, காலத்திற்குக் காலம் மாறுவதை நாம் மறந்துவிட முடியாது. இப்படி மக்களைப் பிரிக்கச் சரியான வரையறையும், தெளிவான புள்ளி விவரங்களும் நம்மிடம் இல்லை. இருந்தாலும் சில அடிப்படை உண்மைகளை உணர, அறிய இந்தப் பகுப்புத் தேவை.
இன்றைய சூழலில் நமது நாட்டில் மேல்தட்டு மக்களாக யாரைக் கருதலாம்? இலட்சக்கணக்கில் மாத வருவாயும், கோடிக்கணக்கில் சொத்துகளும் வைத்திருப்பவர்கள் மேல்தட்டு மக்கள் என்றால் விரல்விட்டு எண்ணக் கூடியவர்களே இப்பிரிவில் அடங்குவர். இவர்களை உயர் - மேல் மட்டத்தினர் என்று கருதலாம். பொதுவாக, சொந்தமாகத் தொழில் செய்து அல்லது உயர் பதவியிலிருந்து, மாதம் ஐம்பதினாயிரத்திற்கு மேல் வருவாய் பெற்று இலட்சக்கணக்கில் சொத்துகள் வைத்திருக்கும் குடும்பத்தினரை மேல் மட்டத்தினராகக் கருதினால், மொத்தத்தில் சுமார் 20 சதவிகிதம் பேர் இப்பிரிவில் வரலாம். இது ஓர் ஊகம் தான்.
இதற்கு அடுத்த நிலையிலுள்ள நடுத்தர இன மக்களின் மேல் வரம்பையும் அடித்தள நிலையையும் வரையறுப்பது, இன்னும் சிக்கலான பணியாகும். பொதுவாக ஒரு குடும்பத்தில் சராசரி ஓராளுக்கு மாத வருவாய் இரண்டாயிரம் முதல் பத்தாயிரம் வரை பெறுபவர்களை நடுத்தர இனத்தவரென்றால், இவர்களையும் சுமார் ஐயாயிரம் வருவாய்க்கு மேல் பெறுபவர்களை மேல்மட்ட நடுத்தர மக்களென்றும், அதற்குக் கீழ் வருவாய் பெறுபவர்களை கீழ்நிலை நடுத்தர மக்களென்றும் பகுக்கலாம். இவர்கள் ஒருவேளை மொத்தத்தில் ஏறத்தாழ 40 சதவிகிதம் இருக்கலாம்.
மீதி 40 சதவிகிதத்தினரை அடிநிலை மக்கள் என்றால், இவர்களில் 25 சதவிகிதத்தினர் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்பவர்கள். 15 சதவிகிதத்தினர் அடிப்படைத் தேவைகள் ஓரளவு கிடைக்க வாழ்பவர்கள். இந்த அடிநிலை மக்களிடம் அரசியலில் கட்சி ஈடுபாடு இருக்கின்றது. இன்றைய நிலையில் இவர்கள் தான் `வாக்கு வங்கிகளாக'ச் செயல்படுகின்றனர். இவர்கள் கிராமங்களிலும், நகரக் குடிசைப் பகுதிகளிலும் வாழ்பவர்கள்.
மொத்தத்தில் 40 சதவிகிதமாக இருக்கும் நடுத்தர மக்களில் பெரும்பாலானவர்கள் நகரங்களில் வாழ்பவர்கள். இவர்கள் படித்தவர்கள். அரசுப் பணிகளில், தனியார் பணிகளில் ஈடுபட்டிருப்பவர்கள். வணிகர்கள், டாக்டர்கள், வழக்குரைஞர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் இந்தப் பிரிவில் அடங்குவார்கள். இவர்கள் நல்ல உழைப்பாளர்களாக இருப்பார்கள்.
நடுத்தர மக்களிடம் வாழ்க்கை விழிப்புணர்வு இருக்கும். இவர்களில் கீழ் மட்டத்திலிருந்து முன்னேறி வந்தவர்கள், மேலும் முனைப்போடு மேலே வர முயல்வார்கள். நடுத்தர மக்களில் உயர்நிலையில் இருப்பவர்கள் மேல் மட்டத்திற்கு வர பல்வேறு வழிகளை மேற்கொள்வார்கள்.
பல இடங்களில், அலுவலகங்களில், சங்கங்களில், அமைப்புகளில் நடுத்தர மக்கள் தான் இலைமறைகாயாக பெருஞ்சக்தியாக விளங்குவார்கள். இவர்கள் `மூளையர்கள்' என்பதால் மறைமுகமாக காரியத்தைச் சாதித்துக் கொள்வார்கள்.
பேராசிரியர் க.ப. அறவாணன் தமிழர்களை அப்பாவித் தமிழர்கள், பாவித் தமிழர்கள் என்று பிரிப்பார். இந்தப் பாவித் தமிழர்கள் நடுத்தரப் பிரிவைச் சேர்ந்தவர்கள்.
சமுதாயத்தில் இலஞ்சம், வரதட்சணை, மதுப்பழக்கம், ஆடம்பரம், நுகர்வுக் கலாசாரம், கடன் கலாசாரம் ஆகியவற்றை வளர்ப்பவர்கள் இவர்களே. சாதிச் சங்கங்கள், மதக் கட்சிகள், அரசியல் குழப்பங்கள் ஆகியவற்றில் உந்து சக்திகளாக இருப்பவர்கள் இவர்களே.
இந்த நடுத்தர மக்கள் தங்களிடமிருக்கும் தன்னலத்தை ஓரளவு விட்டுக் கொடுத்து, சமுதாய உணர்வோடு செயல்பட்டால் பெரிய மாற்றம் ஏற்படும். இவர்களிடமிருக்கும் பெருங்குறைதான் தனது குடும்பம், சுற்றம், சாதி, மதம் என்ற ஒரு குறுகிய வட்டத்திற்குள் சுழல்வதுதான். இவர்களிடம் இறை நம்பிக்கை இருக்கும். கொள்கை பேசுவார்கள். ஆனால், தேவை என்றால் மேலே இருப்பவர்களிடம் நல்ல பெயர் வாங்க, எவ்வளவு வேண்டுமானாலும் வளைந்து கொடுப்பார்கள். எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடுப்பார்கள். நன்றாக, வசதியாக வாழ மகிழ்ச்சியோடு அடிமைகளாக இருப்பார்கள்.
இன்றையச் சூழலில் நமது சமுதாயம் மாற வேண்டுமானால், முன்னேற வேண்டுமானால் இந்த நடுத்தர மக்கள் எழுச்சி பெற்றவர்களாக, சீர்திருத்தச் சிந்தனையாளர்களாகச் செயல்பட வேண்டும்.
நாம் வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால் இந்த உண்மை விளங்கும்; துலங்கும்.
நாம் விடுதலைப் போரில் ஈடுபட்டபொழுது காந்தியடிகளின் பின்னால் சென்றவர்களில் பெரும்பாலானவர்கள் நடுத்தர மக்கள். இவர்கள் சத்தியாக்கிரகிகளாக, நிர்மாணத் திட்ட ஊழியர்களாக, தொண்டர்களாகச் செயல்பட்டபொழுது மக்கள் சக்தி உருவானது. அன்று கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்ட ஆண்களும் பெண்களும் நடுத்தர மக்கள் அல்லவா?
விடுதலைக்குப் பின் நடந்திருக்கின்ற அரசியல் ஆட்சி மாற்றங்களை எண்ணிப் பாருங்கள். நடுத்தர மக்களால் மேல்மட்ட மக்களையும் கீழ்மட்ட மக்களையும் இணைக்க முடியும். இன்றுள்ள அரசியல் தலைவர்களில் பெரும்பாலானவர்கள் நடுத்தர வகுப்பைச் சார்ந்தவர்கள் என்பதை மறக்கவோ, மறுக்கவோ இயலாது.
இன்றுள்ள நமது நாட்டு குழப்பமான அரசியல், பொருளாதார சூழலில் எந்தப் புரட்சிகரமான மாற்றமும் ஏற்படாது. நமது நடுத்தர இனம், மக்களின் உணர்வுகளை மனமாற்றம் செய்துவிடும். சிக்கல்களைப் பட்டியலிடுவார்கள். தீர்வு காண மாட்டார்கள். இந்நிலை தொடர்ந்தால் வன்முறைகள் பெருகிக் கொண்டு போகும். நடுத்தர இனமும் அமைதியாக வாழ முடியாது.
நடுத்தர மக்களிடம் உண்மையான சமுதாய விழிப்புணர்வு தேவை. சாதி, சமயம் என்ற குறுகிய வட்டத்திலிருந்து வெளியில் வர வேண்டும். லஞ்சம், வரதட்சணை போன்றவற்றை ஒழிக்கவும் சுதேசி மனப்பான்மையோடு நமது நாட்டுப் பொருட்களைப் பயன்படுத்தவும் தங்கள் அளவில் தீமைக்குத் துணை போகாமல் இருக்கவும், தேர்தல் காலங்களில் நல்லவர்களுக்கு வாக்களிக்கவும் உள்ள உறுதியோடு செயல்பட்டால் ஒரு புதிய சமுதாயத்தை நம்மால் உருவாக்க முடியும்.
நம்மைச் சுற்றி சமுதாயச் சீர்கேடுகள் மலிந்திருக்க நாம் மட்டும் நிம்மதியாக வாழ முடியாது. சாக்கடை, தெருவின் நடுவில் ஓடுமானால் கொசுக்களிடமிருந்து நம்மைக் காத்துக்கொள்ள முடியாது.
மதில்மேல் பூனையாய், இரண்டுங்கெட்டானாக நடுத்தர இனம் இருக்கக் கூடாது. இருக்கின்ற நிலையில் தெளிந்த அறிவோடு, உறுதியாக நாட்டு நலநோக்கில் நடுத்தர இனம் செயல்பட்டால், விரைவிலேயே நமது நாடு முன்னேற்றப் பாதையில் செல்வதைக் காணலாம்.
-தினமணி-
--------------------------------------------------------------------------------
http://www.thinakural.com/New%20web%20site...8/Article-2.htm
|
|
|
| 3 கொலை செய்த கல்லுõரி மாணவி |
|
Posted by: SUNDHAL - 03-28-2006, 09:42 AM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (16)
|
 |
கரூரில் 3 கொலை செய்த கல்லுõரி மாணவி நவீனா கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று முன் தினம் நள்ளிரவில் தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த குற்றத்திற்காக, தனது தாயை கொலை செய்து விட்டு, கொலையை நேரில் பார்த்த குற்றத்திற்காக தனது 2 சகோதரிகளையும் கொலை செய்து விட்டு தலைமறைவாகி இருந்த நவீனா என்ற கல்லுõரி மாணவியை இன்று அதிகாலை போலீசார் கைது செய்தனர். நவீனாவிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Thanks:dinamalar....
|
|
|
| வவுனியாவில் ஆளில்லா வேவு விமானம் வீழ்ந்தது! |
|
Posted by: adsharan - 03-28-2006, 09:05 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (11)
|
 |
வவுனியாவில் சிறிலங்காவின் விமானப்படைக்குச் சொந்தமான ஆளில்லா வேவு விமானம் இன்று செவ்வாய்கிழமை வீழ்ந்துள்ளது.
வவுனியா சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்புப் பகுதியான மகாரம்பைக்குளத்தில் இன்று முற்பகல் 10.00 மணிக்கு இச்சம்பவம் நடந்துள்ளது.
வவுனியாவின் வடகிழக்குத் திசையில் 4 கிலோ மீற்றர் தொலைவில் மகாரம்பைக்குளம் உள்ளது.
<img src='http://img479.imageshack.us/img479/1373/200603280020jh.jpg' border='0' alt='user posted image'>
சிறிலங்கா விமானப் படையின் தயாரிப்பான N226 LK சுப்பர் ஸ்டார் என்ற இந்த ஆளில்லா வேவு விமானம், தனியார் வீட்டு தொலைக்காட்சி அன்டெனாவில் மோதி வீட்டின் வெளிப்புறத்தில் விழுந்துள்ளது.
இயந்திரக் கோளாறினால் தலைமையகத்தின் கட்டுப்பாட்டை இழந்ததையடுத்து இந்த விபத்து நடந்ததாக தெரியவந்துள்ளது.
சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்ட கிராம மக்கள் சிறிலங்கா காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். இதையடுத்து விமானப் படையினர் மற்றும் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் சம்பவ பகுதியிலிருந்து விமானத்தை மீட்டுள்ளனர்.
இதற்கு முன்னர் கடந்த ஆண்டு ஒக்டோபர் 19 ஆம் நாளன்று வவுனியாவின் கனகராயன்குளத்துக்கு கிழக்காக விஞ்ஞானகுளத்துக்கும் 9 ஆம் கட்டைக்கும் இடையில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் சிறிலங்கா விமானப்படையின் ஆளில்லா வேவு விமானம் விழுந்து நொறுங்கியது.
http://www.eelampage.com/?cn=25112
|
|
|
|