Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,243

Full Statistics

Online Users
There are currently 565 online users.
» 0 Member(s) | 561 Guest(s)
Applebot, Baidu, Bing, Google

Latest Threads
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,120
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: SMPXrArgum
10-23-2025, 05:42 AM
» Replies: 27
» Views: 10,098
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,558
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,264
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,550
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 30,955
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,339
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 37,990
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 7,954
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,221

 
  கனடாவாழ் தமிழீழ மக்களிற்கு அவசர எச்சரிக்கை
Posted by: பிறேம் - 03-28-2006, 06:03 AM - Forum: புலம் - Replies (34)

தலைமைச் செயலகத்தின் உறுப்பினர்கள் எனக் கூறிக்கொண்டு புதிதாக அலுவலகம் திறப்பு மற்றும் ஆட்சேகரிக்கும் விடயங்களில் இறங்கியுள்ள இலங்கைப் புலனாய்வுப் பிரிவினர் செய்யும் நாசகார சதிகள் கனடாவில் அம்பலம். மதன் அல்லது சுடர் மற்றும் லீலன், சேகர், மேரி, கிரி, பாபு, என்று தம்மை அறிமுகப்படுத்தும் இவர்கள் உலகத்தமிழர் தகவல் தொடர்பு மையம் எனும் அமைப்பினை உருவாக்கி இவ்வமைப்பு நாட்டிலிருந்து தலைமைச் செயலகத்தின் அறிவித்தலிற்கு இணங்க இயங்குவதாக கூறி அப்பாவி இளைய சமுதாயத்தை குறிவைத்து இலகுவாக அணுகி தமது தமிழின அழிப்பு நடவடிக்கைகளிற்கும் அவர்கள்மேல் வீண்பழிகளை சுமத்தி கனடா தமிழா சமூகத்தை மற்றவர்கள் மத்தியில் பிழையானவர்களாக காட்டுவதற்கும் பயன் படுத்தமுற்பட்டுள்ளனர்.
தலைமைச் செயலகத்தின் உறுப்பினர்கள் எனக் கூறிக்கொண்டு புதிதாக அலுவலகம் திறப்பு மற்றும் ஆட்சேகரிக்கும் விடயங்களில் இறங்கியுள்ள இலங்கைப் புலனாய்வுப் பிரிவினர் செய்யும் நாசகார சதிகள் கனடாவில் அம்பலம்:

1. மதன் அல்லது சுடர் மற்றும் லீலன், சேகர், மேரி, கிரி, பாபு, என்று தம்மை அறிமுகப்படுத்தும் இவர்கள் உலகத்தமிழர் தகவல் தொடர்பு மையம் எனும் அமைப்பினை உருவாக்கி இவ்வமைப்பு நாட்டிலிருந்து தலைமைச் செயலகத்தின் அறிவித்தலிற்கு இணங்க இயங்குவதாக கூறி அப்பாவி இளைய சமுதாயத்தை குறிவைத்து இலகுவாக அணுகி தமது தமிழின அழிப்பு நடவடிக்கைகளிற்கும் அவர்கள்மேல் வீண்பழிகளை சுமத்தி கனடா தமிழா சமூகத்தை மற்றவர்கள் மத்தியில் பிழையானவர்களாக காட்டுவதற்கும் பயன் படுத்தமுற்பட்டுள்ளனர்.

2. இவர்களின் இந்நாசகார சதியில் அப்பாவி இளையோர் மற்றும் தமிழ்ச் சமூகத்தினர் மிகவும் விழிப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

3. மதன் அல்லது சுடர் என்னும் மதன் சண்முகராஜா சில அப்பாவி இளையோர்களை தன்பக்கம் ஈர்த்து வருகிறார். ஆபத்தை உணராமல் இவர்களும் உந்தப்பட்டுள்ளனர். இவர்களில் ஏதுமறியா சிறுமிகளும் இருப்பதற்கான ஆதாரங்கள் எம்மிடம் உள்ளன. இவரின் பிறந்த திகதி: 1983-01-03 (23 வயது), தமிழீழ முகவரி: மட்டக்களப்பு, தற்போதைய
முகவரி: *****

4. லீலன் அல்லது பிரபா என்னும் இன்னொரு நபரும் இவர்களுடன் இருப்பதுடன் நிலவறையில் வைத்து பயிற்சிகள் கொடுப்பது மற்றும் பட்டறைகள் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுவதாகவும் நம்பகரமாக தெரியவருகிறது. தாம் அடிக்கடி நாடு சென்று வருவதாகவும் பிரச்சனைகள் இருப்பின் தம்மை அணுகுமாறும் கூறிக்கொண்டு ஆட்களை தன்பக்கம் சேர்த்துள்ளார்கள்.

5. இவர்களுடன் சில வாரங்களிற்கு முன்னர் டென்மார்க் நாட்டில் தமிழ்மக்கள் மத்தியில் ஏற்பட்ட குழப்பங்களிற்கு காரணமான தேசத்துரோகி குமாரதுரை மற்றும் புதல்வர்களான மதி, வதனன் ஆகியோருக்கும் இடையே நெருங்கிய தொடர்புகள் இருப்பதற்கான ஆதாரங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

6. இவர்களின் இத்தேசத்துரோகங்களிற்கு உடந்தையாக தமிழீழ மக்களால் நன்கு இனங்காணப்பட்ட கனடா டேவிற்சன், நமு பொன்னம்பலம், பூலோகசிங்கம், மகிந்த குணசேகர ஆகியோர் அணிவகுத்துள்ளனர்.

7. இவர்கள் யாபேரினதும் திரைமறைவு இரகசியங்கள் வெகுவிரைவில் தொடர்ச்சியாக வெளியிடப்படும் என்பதையும் கனடா டென்மார்க் தமிழர்களுடன் ஏனைய நாட்டுத் தமிழர்களும் மிகவும் விழிப்பாக இருக்கும்படியும் உடனடியாக எச்சரிக்கின்றோம்.
பெற்றோர்கள் உடனடியாக தமது பிள்ளைகளின் செயற்பாடுகளில் அதிதீவிர கண்காணிப்பை செலுத்துமாறு மிகவும் தீர்மானகரமாக கேட்டுக்கொள்கிறோம்
வன்கூவரிலிருந்து மலரவன்

படம் மற்றும் முகவரி நீக்கப்பட்டுள்ளது - மோகன்

Print this item

  கறுவல் நான்!!
Posted by: வர்ணன் - 03-28-2006, 02:31 AM - Forum: கவிதை/பாடல் - Replies (10)

<b>முற்றத்து மல்லிகையே
முற்றத்து மல்லிகையே
நான் எங்கே என்று தேடினாயா?

வேலியோர மாதுளையே
நான் விரும்பி நீர் வார்த்த
குறோட்டன் செடியே
நான் இல்லையென்றே
நீ வாடினாயா?

கிணற்றடி துலாவே
கிணற்றடி துலாவே
உன் கழுத்தில் கயிறு மாட்டி
நாளும் இழுத்தவன்
காணலயே என்று தேடினாயா?

வேப்ப மரமே வேப்ப மரமே
உன் தோழ்வலிக்க ஊஞ்சலாடி
தொல்லை தந்தவன்
இப்போ எங்கேயென்று
எப்போதாவது எண்ணினாயா?

குயிலக்கா - குயிலக்கா
நீ ...............கூவ
மறைந்திருந்து நான் குரலெழுப்ப
உன் - உறவுதான் அதுவென்று எண்ணி
ஓயாமல் கூவினாயே

இந்த ஏமாற்றுகாரன்
எங்கே என்று எண்ணி
எபோதாவது ஏங்கினாயா?

கருங்குயிலென்று ஆனாலும்
சொந்த நாட்டிலிருந்தாய்
சுத்த வெள்ளை - நீ!

வெள்ளையர் நாட்டிலிருக்கிறேன்
வெள்ளையர் ஆட்சிசெய்ய
வாக்கும் செலுத்துறேன்
இருந்தும் -என்ன
என்றைக்கும் அவர்க்கு கறுவல் நான்!! 8) </b>[/b]

Print this item

  பெற்றோர்களுக்கும் இளம் பிள்ளைகளுக்குமிடையே இடைவெளி.....
Posted by: Rasikai - 03-27-2006, 07:19 PM - Forum: போட்டிகள் - Replies (11)

[b]யாழ் எட்டாவது அகவையை முன்னிட்டு யாழ் கள உறவுகளால் பெருமையுடன் வழங்கும் பட்டிமன்றம்

நடுவர் இளைஞன்

பிள்ளைகள்
சாத்திரி - அணித்தலைவர்
ரமா
சோழியன்
நாரதர்

பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கு இடையேயான இடைவெளி உருவாதற்கு ????

பெற்றோர்
தல - அணித்தலைவர்
சுஜீந்தன்,
புயல்,
ஈஸ்வர்,

சூழல்
நிதர்சன், - அணித்தலைவர்
சுடர்
குருக்ஸ் ,
சாணாக்கியன்

அணி பிரித்துவிட்டேன் அவர்கள் அந்த அணியில் வாதாட சம்மதம் என நினைக்குறேன். 30 திகதி நடுவர் இளைஞன் அவர்கள் பட்டிமன்றத்தை ஆரம்பித்து வைப்பார். அதற்கிடையில் யாராவது ஏதும் மாற்றம் செய்ய விரும்பினால் அறியத் தரவும். 30ஆம் திகதி இளைஞன் அவர்கள் ஆரம்ப உரை வைத்தவுடன் பிள்ளைகள் அணித்தலைவர் சாத்திரி அவர்கள் அன்றே தனது தலைவர் கருத்தை வைக்க வேண்டும் ஆகவே அவரை தயார் நிலையில் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

பட்டிமன்றம் சம்பந்தமான அரட்டைகளை மற்றும் பட்டிமன்றம் சம்பந்தமான பார்வையாளர்கள் கருத்துக்களை பட்டிமன்றம் தொடர்வோமா என்ற தலைப்பில் வைக்கவும். இங்கு வாதம் மட்டுமே வைக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். எங்கே உங்கள் வாதங்களை ஆரம்பியுங்கள் பார்ப்போம்.

விதிகள் சில
(1). பட்டிமன்றம் ஆரம்பமாகுமுன்னர் கொடுத்த ஒழுங்கின்படியே அனைவரும் பங்குபற்றவேண்டும்.

(2). ஒவ்வெருவருக்கும் அவரது வாதங்களை முன்வைக்க இரண்டு நாட்கள் மட்டுமே கொடுக்கவேண்டும். கொடுக்கப்பட்ட நாட்களுக்குள் அவர் வந்து வாதத்தை வைக்கவேண்டும்.

Print this item

  அதிமுக அடிவருடிகளுக்கு எச்சரிக்கை!!!!
Posted by: Luckyluke - 03-27-2006, 02:23 PM - Forum: செய்திகள்: உலகம் - Replies (12)

<img src='http://img146.imageshack.us/img146/7690/anniyan017rd.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://img146.imageshack.us/img146/9255/anniyan026gq.jpg' border='0' alt='user posted image'>


<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

Print this item

  இராணுவத்தினரை பிரபாகரனின் படத்தை காட்டி எச்சரித்த தமிழன்
Posted by: வினித் - 03-27-2006, 01:02 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

[b]<span style='font-size:30pt;line-height:100%'>தன்னை தாக்கி காயப்படுத்திய இராணுவத்தினரை பிரபாகரனின் படத்தை காட்டி எச்சரித்த இளைஞன்</span>

வவுனியாவில் சம்பவம்

தன்னைத்தாக்கி காயப்படுத்திய இராணுவத்தினருக்கு விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் புகைப்படத்தைக் காட்டி "இவர் தான் உங்களுக்கு விரைவில் பதில் சொல்வாரென" இளைஞரொருவர் எச்சரித்த சம்பவம் சனிக்கிழமை வவுனியா செக்கட்டிப் பிலவு முத்துமாரியம்மன் கோவிலடியில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது;

சனிக்கிழமை இரவு பதினொரு மணியளவில் செக்கட்டிபிலவு முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவிற்கு சென்ற இளைஞர்கள் செல்வபுரம் இராணுவ முகாமை அண்மித்த இடத்தில் வீதியில் உரையாடிக் கொண்டிருந்த போது, இந்த இடத்தில் நிற்க வேண்டாம் விலகிச் செல்லுங்கள் என காவலரணில் நின்ற படையினர் கூறியுள்ளனர்.

அப்போது க. யோகேஸ்வரன் (வயது- 25) என்ற இளைஞன் இது எமது சொந்த இடம் இந்த இடத்தில் நின்று கதைக்கக் கூடாதென நீங்கள் கூற முடியாதென கூறியபோது, அவரை படையினர் விக்கெட்டினால் அடித்துள்ளனர். இதனால், தலையில் பலத்த காயமடைந்த இளைஞன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தலையில் எட்டு தையல்கள் போடுமளவிற்கு பலத்த காயம் ஏற்பட்டபோதும் சட்டைப் பையில் வைத்திருந்த விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் புகைப்படத்தை காண்பித்து இவர் தான் உங்களிற்கு பதில் சொல்வாரென இளைஞன் படையினரை எச்சரித்துள்ளார்.


இவன்தான் மறத் தமிழன்

Print this item

  லண்டன் விழாவில் புலிகளுக்கெதிரான திரைப்படம்
Posted by: aathipan - 03-27-2006, 12:08 PM - Forum: செய்திகள்: உலகம் - Replies (8)

லண்டன் விழாவில் புலிகளுக்கெதிரான திரைப்படம்
<img src='http://www.dinakaran.com/epaper/2006/mar/27/14_8.jpg' border='0' alt='user posted image'>

Print this item

  ஹயுமன் ரெயிட்ஸ் வாச் நிறுனத்துக்கு பணம் கொடுப்பவர்கள் பட்டிய
Posted by: Jude - 03-27-2006, 05:48 AM - Forum: தமிழீழம் - No Replies

ஹயுமன் ரெயிட்ஸ் வாச் நிறுனத்துக்கு பணம் கொடுப்பவர்கள் பட்டியல்.

கோடிஸ்வரரும் HRW யை கட்டுப்படுத்துபவரும் ஜோர்ஜ் சோரோஸ் என்ற கோடிஸ்வரர். இவரது பொதுநல அமைப்பான ஓபின் சொசையிரி இன்ஸ்ரிரியுற் (OSI) என்ற நிறுவனத்தின் மூலமே இவர் உலகளாவிய அளவில் தனது பணத்தை வழங்குகிறார். மனித உயிர்களை பாதுகாக்க விடுதலைப்புலிகளுக்கு பணம் கொடுக்குமாறு இவருக்கு தமிழீழ ஆதராவாளர்கள் எழுதி, HRW நிறுவனத்தின் அறிக்கையில் சிறிலங்காவில் தமிழர் படும்பாடு பற்றி அறிந்ததாக குறிப்பிட்டால் இவருக்கு நிலைமை புரியலாம். சம்பளத்துக்கு அறிக்கை எழுதும் ஜோ பேக்கருடன் மினக்கடுவதிலும் பார்க்க இது பயனளிக்கலாம். இவரது விபரங்கள் இதோ

Mr. George Soros
Open Society Institute
400 West 59th Street
New York, NY 10019, U.S.A.
Tel. 1-212-548-0600
Fax. 1-212-548-4600

மற்றும் சில கோடிஸ்வரர்களின் பணம் வழங்கும் நிறுவனங்களின் விபரங்கள் தொடருகிறது. இவர்களது கோடிகளில் தான் ஜோ பேக்கருக்கு சம்பளம் போகிறது. இவர்களது கவனத்துக்கு இலங்கை பிரச்சினை போனால் காசும் வரலாம் ஜோ பேக்கர் மாறவும் கூடும். ஒன்றும் நடக்காமலும் இருக்கலாம்.

The John D. and Catherine T. MacArthur Foundation
Office of Grants Management
140 S. Dearborn Street
Chicago, IL 60603-5285
Phone: (312) 726-8000
Fax: (312) 920-6258
TDD: (312) 920-6285
E-mail: 4answers@macfound.org
http://www.jmkfund.org/grantprograms.html

The Charles H. Revson Foundation
55 E 59th St. 23rd Fl
New York, NY 10022
Tel: (212) 935-3340
info@revsonfoundation.org
http://www.revsonfoundation.org/contact.html

The Scherman Foundation
16 East 52nd Street Suite 601
New York, NY 10022-5306
Tel: 212-832-3086
fax: 212-838-0154
http://www.scherman.org/html/cntct.html

Secretary
The Ford Foundation
320 East 43 Street
New York, N.Y. 10017
http://www.fordfound.org/about/guideline.cfm

Ruth G. Hennig, Executive Director
The John Merck Fund
47 Winter Street
7th Floor
Boston, MA 02108
617.556.4120 (Voice)
617.556.4130 (Fax)
Email:
info@jmfund.org


Name: Robert Crane
Title: President
Name: Mertz Gilmore Foundation
Phone: 212/475-1137
Fax: 212/777-5226
Website: http://www.mertzgilmore.org/
Address: 218 East 18th Street
New York, NY 10003-3694
USA

Lewis B. and Dorothy Cullman Foundation, Inc
c/o Lewis B. Cullman
New York, NY10017
(212) 751-6655 (phone)
USA

Print this item

  பிரான்சில் மூன்றில் ஒரு பகுதியினர் இனவெறி கொண்டவர்கள்:
Posted by: SUNDHAL - 03-26-2006, 08:43 PM - Forum: செய்திகள்: உலகம் - Replies (4)

பிரான்ஸ் மக்களில் மூன்றில் ஒரு பகுதியினர் இனவெறி கொண்டவர்கள் என்பது கடந்தாண்டு நடத்தப் பட்ட ஒரு ஆய்வில் தெரிய வந்துள் ளது.

பிரான்ஸ் நாட்டின் மனித உரிமைக் கழக அமைப்பின் தேசிய ஆலோசனைக் குழுவினர் (சி.எஸ்.ஏ.,) கடந்தாண்டு கருத்துக் கணிப்பு ஒன்றை மேற்கொண்டனர். ஆயிரத்து 11 பேரை நேருக்கு நேர் சந்தித்து இந்த கருத்துக்கணிப்பு நடத்தினர். இதில், 33 சதவீத பிரான்ஸ் மக்கள் இனவெறியர்கள் என்பது தெரிய வந்துள்ளது. இது கடந்தாண்டை விட இனவெறியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதையே காட்டுகிறது என இந்த அமைப்பினர் தெரிவித்தனர்.

சி.எஸ்.ஏ., அமைப்பினர் கருத்துக்கணிப்பின் போது பிரான்ஸ் நாட்டு மக்களிடம் பின்வருமாறு கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

"உங்களால் சொல்ல முடியுமா? உங்களுக்கு............' இவ்வாறு கேள்வி கேட்கப்பட்டு பதிலைத் தேர்ந்தெடுக்குமாறு விருப்பங்களின் பட்டியல் பின்வருமாறு தரப்பட்டுள்ளது. அவை, 1)கொஞ்சம் இன வெறி உண்டு, 2)

சிறிதே இனவெறி உண்டு, 3)இனவெறி இல்லை, 4)எப்பொழுதுமே இனவெறி எண்ணம் கிடையாது, 5)

கருத்துச் சொல்ல விரும்பவில்லை.

இந்த ஆய்வு குறித்து சி.எஸ்.ஏ., வின் தலைவர் ஜோயல் தோரவல் கூறுகையில், "" இனவெறி தொடர் பான இந்த ஆய்வு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 17ம் தேதியிலிருந்து 22ம் தேதிவரை நடத்தப்பட்டது. மக்களிடையே உள்ள இனவெறியை கட்டுப்படுத்தும் முயற்சியாக இந்த ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வின் முடிவுகளை நேற்றுமுன்தினம் பிரதமர் டொமினிக் டி விலேபின்னிடம் ஒப்படைத்து விட்டேன். மூன்றில் ஒரு பகுதி மக்கள் இனவெறி எண்ணத்தோடு இருக்கிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது. இது கடந்த முறை எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பின் அளவை விட அதிகம்,'' என்றார்.

ஆய்வில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு 33 சதவீதத்தினர் இனவெறி உண்டு என்றே பதிலளித்துள்ளனர்.

ஐரோப்பிய நாடுகளில் பிரான்சில்தான் யூத இனத்தவர்கள் ஆறு லட்சம் பேர் வசிக்கின்றனர். அதே போல் முஸ்லிம் மக்கள் ஐந்து லட்சம் பேர் வசிக்கின்றனர். இந்த இரு பிரிவுகளுக்கிடையே அடிக்கடி இனக் கலவரங்கள் வெடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Thnaks;Dinamalar..

Print this item

  தமிழீழப் போராட்டமும், தமிழ் தேசியமும்!
Posted by: parisian - 03-26-2006, 07:44 PM - Forum: தமிழீழம் - Replies (1)

Thanks
http://potteakadai.blogspot.com/
ஈழம் பற்றிய இன்றைய தமிழக இளைஞர்களின் புரிதல் பற்றி பலரும் எழுதிக் கொண்டிருக்கிறார்கள் இன்று. இதில் புரிந்து கொள்ள என்ன வேண்டியிருக்கிறது. தமிழைப் பற்றி என்னுடைய புரிதல் என்று நான் ஏதாவது எழுத முடியுமா? நான் பேசத் தொடங்கிய பொழுது தமிழில் தான் அம்மா, அப்பா என்று கூறினேன் அல்ல்து கூற வைக்கப்பெற்றேன். அதே போல் தான் ஈழத்தின் புரிதலும். எனக்கு கருத்து தெரியாத வயதிலிருந்தே எனது வீட்டில் எங்கு நோக்கினாலும் போராளிகளின் படம் தான் இருக்கும். ஓரளவு கருத்து தெரிய ஆரம்பித்த பொழுது ஈழத்துப் போராளிகள் சுதந்திரப் போராட்ட மாவீரர்களாவேத் தெரிந்தார்கள்.

கருவறையிலிருந்து வெளியே வரத் துடிக்கும் குழந்தையின் போராட்டத்திற்கு தாய் தன் வலியை பொருட்படுத்தாமல் குழந்தை வெளியே வர வேண்டும் என்ற ஒரு எண்ணம் தான் இருக்குமேயொழிய, வலியாறப் பொறுக்காது கொல்ல நினைப்பாளோ?

தமிழீழமும், ஆயுதப் போராட்டமும் எழுந்ததற்கான நிகழ்வுகளை உற்று நோக்கினால் புரியும் ரணமும் அதனுடைய வேதனையும்!

1983ல் நடந்த ஒட்டுமொத்த இனப்படுகொலை இன்னமும் நெஞ்சினில் இருந்து அகல மறுக்கின்றது.ஒரே நாளில் 1000 பேர் கழுத்தறுபட்டும், உயிரோடும் எரிக்கப்பட்டார்கள். ஆண்களூம் பெண்களும் பொதுவில் நிர்வாணப்படுத்தப் பட்டார்கள். இவையனைத்தும் சிங்கள இனவெறியர்கள் மற்றும் அவர்களின் பேரினவாத ஆதரவு அரசின் ஒத்துழைப்போடு நடைபெற்றன. இவ்வளவு அவமானங்களையும் தாண்டி அமைதியான முறையிலா போராட முடியும்?

1987ல் இராஜிவ் அரசிற்கும் & பேரினவாதி ஜெயவர்த்தனே அரசிற்கும் உடன்பாடு கையெழுத்தாகிறது. அதாவது இந்திய இராணுவப் படையினர் இலங்கையில் அமைதி காப்பார்களென்று. பிரபாகரன் எவ்வளவோ முயன்றும் சிங்கள - இந்திய அரசின் பிரகடனம் கையெழுத்தாவதை தடுக்க இயலவில்லை. அதற்கு மாறாக இராஜீவ், இந்தியப் படை புலிகளுக்கு உதவவே இலங்கை வருகிறது என்றும் தமிழ் மக்களின் மானம் காக்கப் படும் என்றும் உறுதியளிக்கின்றார். இதை பிரபாகரனின் யாழ்ப்பானத்தில் நடைபெற்ற கூட்டத்தின் பேச்சிலிருந்து அறிந்து கொள்ளலாம். ஆனால் அவர்கள் காத்த அமைதி திலீபன் என்ற மாவீரனின் மரணவாக்குமூலத்தினால் உடைந்து இன்றும் ஆயுதப் போராட்டமாகத் தெறிக்கிறது.

பதின்ம வயதில் நான் கண்ட ஆவணப்படங்களும், நேரிடையாய் சந்தித்த இரு போராளிகளின் வாக்குமூலமும் என்னுள்ளே அவ்வயதில் வெறியை ஏற்படுத்தியது என்றால் அது மிகையல்ல. இன்னமும் கூட ஈழத்தில் பிறந்திருக்கக் கூடாதாவென்ற ஏக்கம் அவ்வப்போது எழுவதும் உண்டு. எந்திரத் துப்பாக்கி ஏந்திப் போராடும் எம் சகோதரர்க்கு துணையாய் இருந்திருக்கலாமே என்ற எண்ணமும் எழுந்ததுண்டு. அது ஒவ்வொரு சராசரி இந்தியனுக்கு எழும் "பிணப்பெட்டியின் மேல் தேசியக் கொடி" போன்ற எண்ணம். ஆனால் அதற்கு முரணான வாழ்க்கையைத் தான் வாழ்ந்துக் கொண்டிருக்கிறேன்.

இன்றைய தமிழக இளைஞர்கள் இதைப் பற்றி முழுமையாக அறிந்திருக்க வாய்ப்பில்லை என்பதினாலும், தமிழக இளைஞர்கள் மட்டுமல்ல புலம் பெயர்ந்த ஈழத்துக் குழந்தைகளுக்கும் நம்முடைய அவலத்தை வணிகப்படுத்துவதன் மூலம் எளிதில் சென்றடையச்செய்ய கடமைப்பட்டுள்ளோம். இதற்கான வழிகளை தமிழ்சசியும், நந்தனும் அலசி இருக்கிறார்கள்.

ஆனால் இங்கே நாம் முன்வைப்பது, தற்போதைய புலம் பெயர்ந்தவர்களின் மன நிலையையும், வாழ்க்கைப் போராட்டத்தையும் தான். பெரும்பாலான ஆண்கள் ஈழப் போராட்டத்தையும், போராளிகளின் போரையும் ஆதரிக்கின்ற வேலையிலே பெண்களின் மன நிலையையும் நாம் அறிந்துக் கொள்வதில் தவறேதும் இல்லை. இங்கே நான் எனது தோழிகளொடு கதைத்ததை மட்டுமே உதாரணமாக வைக்கிறேன். போராளிகளின் பற்றிய அவர்களின் புரிதல் மிகவும் வித்தியாசமானதாகவே இருந்தது. புலிகளின் ஆய்தப் போராட்டத்திற்கு முன்னர் அவர்கள் மகிழ்ச்சியாகவே வாழ்ந்ததாகவும், ஆயுதப் போராட்டத்திற்கு பின்னரெ மின்சாரம் முதற்கொண்டு அனைத்து அத்தியாவசியத் தேவைகள் தடைபட்டதாகவும் தெரிவிக்கின்றனர். பெரும்பாலானவர்கள் அவர்களுடைய பதின்ம வயதின் ஆசைகள் நிராசையாகி நாடோடியாகச் சுற்றுவ(றிய)தற்கு காரணம் ஆயுதப் போராட்டமே என்றும் எண்ணியுள்ளனர். நான் அதை மறுதலித்துப் பேச முற்படும் பொழுது மூக்குடைபட்டே இருக்கிறேன்.(நீ படித்தும், வீடியோவில் பார்த்தும் இருப்பாய், நான் அனுபவித்திருக்கிறேன் என்று)

ஆக இப்பொழுதிருக்கும் இரண்டாம் தலைமுறையினரே இவ்வாறு இருக்கும் பட்சத்தில் மூன்றாம் தலைமுறையினருக்கு இது பற்றி தெரிய படுத்த வாய்ப்பு இருக்கிறதா?
செருமனியில் நாஜிப் படையினரால் யூதர்கள் பட்டத் துன்பங்களை (திரைப்படங்களில்) காணும் பொழுது ஏற்படும் பரிதாப உணர்வை ஏற்படுத்தினால் மட்டுமே ஈழத்து அவலங்கள் வெளியே தெரிய வாய்ப்புள்ளது. மேலும் இது பற்றியான குறும்படங்களையும் அனைத்து தரப்பு மக்களுக்கும் எளிதாக கிடைக்க வழி செய்ய வேண்டும்.

சமீபத்தில் "பேட்டல் ஆஃப் அல்ஜீர்ஸ்" என்ற திரைப்படத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அத்திரைப்படம் அல்கீரிய மக்களின் ஃபிரெஞ்சுக் காலணி ஆதிக்கத்திற்கெதிரான சுதந்திர போராட்டத்தைப் பற்றியது. அதில் போராளிக்குழுவின் தலைவனை சிறைபிடித்து நாடு கடத்தி விடுவார்கள். ஆனாலும் இரண்டு அமைதியான ஆண்டுகள் கழித்து நாடே ஸ்தம்ப்பிக்கும் வகையில் மக்களின் போராட்டம் வெடிக்கும். அதுவே 1960 களில் அல்ஜீரிய சுதந்திரத்திற்கு வழி வகுத்தது.ஈழப் போராட்டத்திற்கும் இதற்கும் வித்தியாசம் இருக்கிறது என்றாலும் ஈழத்து மக்களின் மனநிலை எவ்வாறு உள்ளது என்பதில் உள்ள ஆர்வமே இதை உதாரணமாக எடுத்தாள வேண்டியதாயிற்று.

தமிழிழ தேவையும் தமிழ் தேசியமும்

இன்றைய மக்கட்தொகையில் ஏறக்குறைய 81/2 கோடி தமிழ் மக்களைக் கொண்டுள்ள இவ்வுலகில் நமக்கென்று ஒரு அங்கீகாரம் இல்லை...2 மில்லியன் மக்கட்தொகை கொண்ட சுலுவேனிய நாடு உருவானது மொழி, இனத்தின் அடிப்படையிலேயே. ஈராஇய, ஈராக்கிய, சிரிய, துருக்கிய தேசங்களும் இன்று வரை சுயமாக இயங்கிக் கொண்டிருக்கும் சதாமின் அடக்குமுறையில் ஒடுக்கப்பட்ட குர்தீய தேசக் கோரிக்கைகளும் மொழி இனத்தின் அடிப்படையிலேயே. வெரும் 2 மில்லியன் மக்கட்தொகை கொண்ட சுலுவேனிய மக்களின் சார்பாக அவர்களது மொழியில் பேசுவதற்கு அவர்களுக்கு அங்கீகாரம் அளித்து ஐநா சபையில் குரலெழுப்பிக் கொண்டிருக்கும் வேலையிலே நமக்கென்று ஒரு தேசமும் அங்கிகாரமும் தேவை என்று குரல் எழுப்புவது தவறா? தமிழ்நாட்டில் இதற்கான குரல் எழும்பொழுது தமிழக உணர்வாளர்களின் குரல்வலை நெறிபடும் வேளையிலே நம் ஈழத்து சகோதரர்கள் சுயமரியாதையோடு வாழ நாம் துணை நிற்க வேண்டாமோ? தமிழன் தலை நிமிர, தனக்கென்று ஒரு கலாச்சாரம், பண்பாடு மற்றும் உலக அளவில் தமிழனுக்கென்று ஒரு தனித்துவமான அடையாளத்தோடு வலம் வர முதல் படியாக தமிழீழம் அவசியமாகிறது.
பின்குறிப்பு: இராஜிவ் கொலையில் புலிகளுக்கெதிரான நிலையில் இருந்து நான் பின்வாங்க மாட்டேன். எனக்குப் பட்டதை சொல்ல எனக்கு முழு உரிமையுண்டு.
Dear friends please read

Print this item

  காங்கிரசுக்கு திமுக நாமம், தொண்டர்கள் தலைமைமீது கோபம்.
Posted by: Birundan - 03-26-2006, 06:18 PM - Forum: செய்திகள்: உலகம் - Replies (1)

காங்கிரஸ் கோஷ்டி பூசல்கள்.. - Sunday, March 26, 2006



* இரண்டு தினங்களுக்கு முன் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் முன்பு கட்சித்தலைவர்களை வாழ்த்தி விளம்பர கட்-அவுட்கள் வைக்கப்பட்டு இருந்தன அவை நள்ளிரவு திடீர் என்று அகற்றப்பட்டன.

* இரண்டு நாள் முன் வீரப்பமொய்லி கொடும்பாவி எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து முன்னாள் எம்.எல்.ஏ. செல்லக்குமாரை காங்கிரஸ் கட்சியிலிருந்து சஸ்பெண்டு செய்து தமிழக காங்கிரஸ் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

அதை தொடர்ந்து தி.மு.க. கூட்டணி தொகுதி பங்கீட்டில் அதிருப்தி அடைந்த காங்கிரசார் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உருவபொம்மைகளை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

காங்கிரசில் அதிருப்தி

தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு 48 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. தொகுதிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் முன்பே, எந்தெந்த தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுகிறது என்று தகவல் பரவியது. நேற்று முன்தினம் காலையில் வள்ளுவர் கோட்டம் அருகே காங்கிரசின் ஒரு பிரிவினர் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை ஒதுக்காமல், தோற்கக்கூடிய தொகுதிகளை காங்கிரசுக்கு ஒதுக்கி விட்டார்கள் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் வீரப்ப மொய்லியை மாற்ற வேண்டும். தொகுதிகள் ஒதுக்கியதை மறுபரிசீலனை செய்து மாற்றி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி அவர்கள் போராட்டம் நடத்தினார்கள். அப்போது திடீரென்று வீரப்பமொய்லி கொடும்பாவியை எரித்தனர்.

ஒரே ஒரு தொகுதியா

இதற்கிடையே நேற்று முன்தினம் மாலையில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் வெளியிடப்பட்டது. இதில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் மேலும் காங்கிரஸ் தொண்டர்களை அதிருப்தி அடைய வைத்துள்ளது.

சென்னையில் ராதாகிருஷ்ணன் நகர் ஒரு தொகுதி மட்டுமே காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது சில காங்கிரஸ் தொண்டர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறைந்த பட்சம் சென்னையில் 4 தொகுதிகளாவது ஒதுக்கியிருக்க வேண்டும் என்று அவர்கள் கூறினர்.

கொடும்பாவி எரிப்பு

சென்னையில் ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்கியதை கண்டித்து நேற்று காலை தி.நகர் பஸ் நிலையம் முன்பு காங்கிரஸ் நிர்வாகி பீர்முகமது தலைமையில் வீரப்பமொய்லி கொடும்பாவியை எரித்தனர். இதில் தென்சென்னை மாவட்ட பொது செயலாளர் எஸ்.எம்.குமார், காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் மோகன், வைரராஜ், சரவணன், ஜவஹர் உள்பட பலர் கலந்து கொண்டனர். கொடும்பாவி எரித்ததாக சுமார் 25 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து எஸ்.எம்.குமார் கூறும்போது, ''தொகுதி பங்கீட்டை திரும்ப பெற வேண்டும். சென்னையில் குறைந்தது 4 தொகுதிகளாவது காங்கிரசுக்கு வழங்க வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் ஓயாது'' என்றார்.

அம்பத்தூர்

சென்னை அம்பத்தூர் எஸ்டேட் பஸ்நிலையம் அருகே ஜெ.ஜெ. நகர் தமிழ்செல்வன்தலைமையில் வீரப்பமொய்லி கொடும்பாவியை எரித்தனர். உடனே போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.

கரூர் காங்கிரசார் தீக்குளிப்பு

தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு கரூர் மாவட்டத்தில் ஒரு தொகுதி கூட ஒதுக்கப்படவில்லை. இது காங்கிரஸ் கட்சியினருக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்தது. காங்கிரஸ்காரர் ஒருவர் எம்.எல்.ஏ.வாக இருந்தும் அந்த தொகுதியை பறிகொடுத்தது அவர்களுக்கு மேலும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதனை தொடர்ந்து கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் அவசரக் கூட்டம் நடந்தது. இதில், காங்கிரஸ் கட்சிக்கு ஏதாவது ஒரு தொகுதியை பெற்றுதர தலைமையை வலியுறுத்துவது. தொகுதிகள் கிடைக்காத பட்சத்தில் தொண்டர்கள் கரூர் மாவட்டத்தில் வேலை பார்க்க முடியாத சூழ்நிலை ஏற்படும் என்று தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

ரத்த கையெழுத்து

கரூர் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தொகுதியாவது பெற வேண்டும்.அப்படி கிடைக்காத பட்சத்தில் சென்னை சத்தியமூர்த்தி பவனுக்கு சென்று உண்ணாவிரதம் இருப்பதோடு, கூண்டோடு ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இளைஞர் காங்கிரசார் ரத்தத்தால் கையெழுத்து போட்டு தலைமைக்கு இந்த முடிவை அனுப்பி வைத்தனர்.கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமும் தலைமைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

முக்காடு, நாமம்...

எனினும் எந்த விதமான பதிலும், கட்சி தலைமையில் இருந்து இளைஞர் காங்கிரசாருக்கு கிடைக்க வில்லை. எனவே, தொடர் போராட்டத்தில் ஈடுபடுவது என்று இளைஞர் காங்கிரசார் முடிவு செய்தனர்.

இதனை தொடர்ந்து இளைஞர் காங்கிரசார் தங்கள் முகத்தில் பட்டைநாமம் போட்டுக் கொண்டும், கறுப்பு துணியை தலையில் முக்காடு போட்டும் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னையிலுள்ள சத்திய மூர்த்தி பவனுக்கு சென்று இளைஞர் காங்கிரசார் உண்ணாவிரதம் இருப்போம். அப்படியும் கிடைக்கவில்லை என்றால் தீக்குளிக்கவும் தயாராக இருக்கிறோம் என்று மாவட்ட பொதுச் செயலாளர் பாலசந்தர் கூறினார்.

ராதாபுரம் தொகுதி

தி.மு.க. கூட்டணியில் நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதி தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது.

நெல்லை மாவட்ட காங்கிரசார் பெரிதும் எதிர்பார்த்த இந்த தொகுதி தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டது அதிர்ச்சி அளிப்பதாக தொகுதி காங்கிரஸ் நிர்வாகிகள் கூறினார்கள்.

எனவே ராதாபுரம் தொகுதியை தி.மு.க.வுக்கு ஒதுக்கியதை கண்டிப்பதாக கூறி திசையன்விளையில் காங்கிரஸ் கட்சியினர் நேற்று காலை கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திசையன்விளை காமராஜர் சிலை முன்பு நகர காங்கிரஸ் சார்பில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு நகர தலைவர் ராஜன் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் `கறுப்பு பேட்ஜ்' அணிந்து இருந்தனர். அவர்கள் ராதாபுரம் தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்க வேண்டும் என கோஷமிட்டனர்.

மேலும் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான கண்டன போஸ்டர்களும் நகர் முழுவதும் ஒட்டப்பட்டு இருந்தன. அதில் ராதாபுரம் தொகுதியில் காங்கிரசுக்கு கண்ணீர் அஞ்சலி, காங்கிரஸ் கட்சிக்கு எங்களது ஆழ்ந்த அனுதாபம். இவண் ராதாபுரம் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என்பன போன்ற வாசகங்கள் அடங்கி இருந்தன.

மறுபரிசீலனை செய்ய காங்கிரஸ் போர்க்கொடி

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கிருஷ்ணசாமிக்கு தூத்துக்குடி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் செயலாளர் எஸ்.எ.கனி அனுப்பி உள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-

தமிழகத்தில் தென்மாவட்டத்தில் நான்கு தனித் தொகுதிகள் உள்ளன. இதில் அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதி ஒட்டப்பிடாரம் ஆகும். மேலும் வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம் ஒரு தொகுதி கூட காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படவில்லை.

கூட்டணி தலைமையின் இந்த செயல் தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமையையும், பாதுகாப்பையும் உதாசீனப்படுத்தும் நோக்கமாக உள்ளது. இதனால் இந்த பகுதி மக்களின் கொந்தளிப்பு அதிகமாக உள்ளது.

புறக்கணிப்பு

எனவே இந்த பகுதியில் (ஜனநாயக முற்போக்கு கூட்டணி) வேட்பாளரை புறக்கணிக்கும் நோக்கம் தாழ்த்தப்பட்ட மக்களிடையே உருவாகி உள்ளது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் தென்காசி தனி தொகுதி கம்யூனிஸ்டுக்கு கொடுக்கப்பட்டது. ஒட்டப்பிடாரம், வாசுதேவநல்லூர் சட்டசபை தொகுதி கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. மேற்கண்ட இரண்டு தொகுதிகளுமே காங்கிரசின் கோட்டையாக இருந்து வந்துள்ளது. மறைந்த மத்திய மந்திரி அருணாசலத்துக்கு பின்பு தாழ்த்தப்பட்டவர்களுக்கு அந்தஸ்து மற்றும் வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை.

மேலும் தனித்தொகுதிகளில் அரசியல் வாழ்க்கையிலும், காங்கிரஸில் மக்கள் செல்வாக்கு பெற்ற இளைஞர்களும், முதியவர்களும் உள்ளனர். இவர்களின் செயல்பாட்டை புறக்கணிப்பதாக தற்போதைய சூழ்நிலை உள்ளது.

எனவே நான்கு தனித் தொகுதிகளில் ஒரு தொகுதி அல்லது ஒட்டப்பிடாரம் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு கொடுக்க வேண்டும், தற்போது உள்ள கூட்டணியின் முடிவுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

இவ்வாறு மாவட்ட காங்கிரஸ் செயலாளர் கனி தெரிவித்து உள்ளார்.

கோவை

கோவை மாவட்டத்தில் தற்போது காங்கிரஸ் வசம் 4 தொகுதிகள் உள்ளன. வருகிற தேர்தலில் கோவை மாவட்டத்தில் 3 தொகுதிகள் தான் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரசுக்கு கோவை கிழக்கு தொகுதி ஒதுக்கப்படவில்லை. இதனால் அந்த தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ.வான வி.கே.லட்சுமணன் அதிருப்தி அடைந்துள்ளார். கடந்த சில நாட்களாக சென்னையில் முகாமிட்டிருந்த அவர் 'சீட்' கிடைக்கவில்லை என்றதும் நேற்றுக் காலை ரெயில் மூலம் கோவை வந்தார். பின்னர் காலை 10 மணியளவில் அவர் ஹுசூர் சாலையில் உள்ள கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. அலுவலகத்துக்கு வந்தார். அங்கு அவரது ஆதரவாளர்கள் திரண்டிருந்தனர். வி.கே.லட்சுமணன் எம்.எல்.ஏ.வுக்கு தொகுதி ஒதுக்கப்படவில்லை என்று அறிந்ததும் அவர்கள் அதிருப்தி அடைந்து தி.மு.க. கூட்டணிக்கு எதிராக குரல் கொடுத்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

வி.கே.லட்சுமணனுக்கு `சீட்'தராவிட்டால் தீக்குளிப்பு போராட்டம் நடத்துவோம் என்றும், அவரை சுயேச்சையாக நிறுத்தி வெற்றி பெற செய்வோம்' என்றும் அவர்கள் அறிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. மேலும் தி.மு.க. கூட்டணியை தோற்கடிப்பதே எங்கள் லட்சியம் என்றும் அவர்கள் அறிவித்தனர். ஆர்ப்பாட்டமும் நடத்தினார்கள்.

கடலூர்

கடலூர் மாவட்டத்தில் தி.மு.க. கூட்டணியில் காட்டுமன்னார்கோவில் தொகுதி மட்டும் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதி போதாது என்றும், கடலூர், சிதம்பரம், புவனகிரி ஆகிய தொகுதிகளில் ஏதாவது ஒரு தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி கடலூரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட சேவா தலைவர் என்.குமார் தலைமை தாங்கினார். இதில் கலந்து கொண்டவர்கள் சட்டையை கழற்றி எறிந்துவிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆர்ப்பாட்டத்தில் ஜெயசூரியா, கலியபெருமாள் உள்பட 5 பேர் கலந்து கொண்டனர்.

நன்றி>இட்லிவடை

Print this item