![]() |
|
கனடாவாழ் தமிழீழ மக்களிற்கு அவசர எச்சரிக்கை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21) +--- Thread: கனடாவாழ் தமிழீழ மக்களிற்கு அவசர எச்சரிக்கை (/showthread.php?tid=420) Pages:
1
2
|
கனடாவாழ் தமிழீழ மக்களிற்கு அவசர எச்சரிக்கை - பிறேம் - 03-28-2006 தலைமைச் செயலகத்தின் உறுப்பினர்கள் எனக் கூறிக்கொண்டு புதிதாக அலுவலகம் திறப்பு மற்றும் ஆட்சேகரிக்கும் விடயங்களில் இறங்கியுள்ள இலங்கைப் புலனாய்வுப் பிரிவினர் செய்யும் நாசகார சதிகள் கனடாவில் அம்பலம். மதன் அல்லது சுடர் மற்றும் லீலன், சேகர், மேரி, கிரி, பாபு, என்று தம்மை அறிமுகப்படுத்தும் இவர்கள் உலகத்தமிழர் தகவல் தொடர்பு மையம் எனும் அமைப்பினை உருவாக்கி இவ்வமைப்பு நாட்டிலிருந்து தலைமைச் செயலகத்தின் அறிவித்தலிற்கு இணங்க இயங்குவதாக கூறி அப்பாவி இளைய சமுதாயத்தை குறிவைத்து இலகுவாக அணுகி தமது தமிழின அழிப்பு நடவடிக்கைகளிற்கும் அவர்கள்மேல் வீண்பழிகளை சுமத்தி கனடா தமிழா சமூகத்தை மற்றவர்கள் மத்தியில் பிழையானவர்களாக காட்டுவதற்கும் பயன் படுத்தமுற்பட்டுள்ளனர். தலைமைச் செயலகத்தின் உறுப்பினர்கள் எனக் கூறிக்கொண்டு புதிதாக அலுவலகம் திறப்பு மற்றும் ஆட்சேகரிக்கும் விடயங்களில் இறங்கியுள்ள இலங்கைப் புலனாய்வுப் பிரிவினர் செய்யும் நாசகார சதிகள் கனடாவில் அம்பலம்: 1. மதன் அல்லது சுடர் மற்றும் லீலன், சேகர், மேரி, கிரி, பாபு, என்று தம்மை அறிமுகப்படுத்தும் இவர்கள் உலகத்தமிழர் தகவல் தொடர்பு மையம் எனும் அமைப்பினை உருவாக்கி இவ்வமைப்பு நாட்டிலிருந்து தலைமைச் செயலகத்தின் அறிவித்தலிற்கு இணங்க இயங்குவதாக கூறி அப்பாவி இளைய சமுதாயத்தை குறிவைத்து இலகுவாக அணுகி தமது தமிழின அழிப்பு நடவடிக்கைகளிற்கும் அவர்கள்மேல் வீண்பழிகளை சுமத்தி கனடா தமிழா சமூகத்தை மற்றவர்கள் மத்தியில் பிழையானவர்களாக காட்டுவதற்கும் பயன் படுத்தமுற்பட்டுள்ளனர். 2. இவர்களின் இந்நாசகார சதியில் அப்பாவி இளையோர் மற்றும் தமிழ்ச் சமூகத்தினர் மிகவும் விழிப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 3. மதன் அல்லது சுடர் என்னும் மதன் சண்முகராஜா சில அப்பாவி இளையோர்களை தன்பக்கம் ஈர்த்து வருகிறார். ஆபத்தை உணராமல் இவர்களும் உந்தப்பட்டுள்ளனர். இவர்களில் ஏதுமறியா சிறுமிகளும் இருப்பதற்கான ஆதாரங்கள் எம்மிடம் உள்ளன. இவரின் பிறந்த திகதி: 1983-01-03 (23 வயது), தமிழீழ முகவரி: மட்டக்களப்பு, தற்போதைய முகவரி: ***** 4. லீலன் அல்லது பிரபா என்னும் இன்னொரு நபரும் இவர்களுடன் இருப்பதுடன் நிலவறையில் வைத்து பயிற்சிகள் கொடுப்பது மற்றும் பட்டறைகள் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுவதாகவும் நம்பகரமாக தெரியவருகிறது. தாம் அடிக்கடி நாடு சென்று வருவதாகவும் பிரச்சனைகள் இருப்பின் தம்மை அணுகுமாறும் கூறிக்கொண்டு ஆட்களை தன்பக்கம் சேர்த்துள்ளார்கள். 5. இவர்களுடன் சில வாரங்களிற்கு முன்னர் டென்மார்க் நாட்டில் தமிழ்மக்கள் மத்தியில் ஏற்பட்ட குழப்பங்களிற்கு காரணமான தேசத்துரோகி குமாரதுரை மற்றும் புதல்வர்களான மதி, வதனன் ஆகியோருக்கும் இடையே நெருங்கிய தொடர்புகள் இருப்பதற்கான ஆதாரங்கள் கண்டறியப்பட்டுள்ளன. 6. இவர்களின் இத்தேசத்துரோகங்களிற்கு உடந்தையாக தமிழீழ மக்களால் நன்கு இனங்காணப்பட்ட கனடா டேவிற்சன், நமு பொன்னம்பலம், பூலோகசிங்கம், மகிந்த குணசேகர ஆகியோர் அணிவகுத்துள்ளனர். 7. இவர்கள் யாபேரினதும் திரைமறைவு இரகசியங்கள் வெகுவிரைவில் தொடர்ச்சியாக வெளியிடப்படும் என்பதையும் கனடா டென்மார்க் தமிழர்களுடன் ஏனைய நாட்டுத் தமிழர்களும் மிகவும் விழிப்பாக இருக்கும்படியும் உடனடியாக எச்சரிக்கின்றோம். பெற்றோர்கள் உடனடியாக தமது பிள்ளைகளின் செயற்பாடுகளில் அதிதீவிர கண்காணிப்பை செலுத்துமாறு மிகவும் தீர்மானகரமாக கேட்டுக்கொள்கிறோம் வன்கூவரிலிருந்து மலரவன் படம் மற்றும் முகவரி நீக்கப்பட்டுள்ளது - மோகன் - பிறேம் - 03-28-2006 [url=http://www.eddappar.com/content/view/42/26/]<span style='font-size:25pt;line-height:100%'>கனடாவாழ் தமிழீழ மக்களிற்கு அவசர எச்சரிக்கை.</span> மேலுள்ள தகவல் மூலம் இவ்விணைப்பில். - Snegethy - 03-28-2006 வணக்கம் பிறேம். தகவலுக்கு நன்றி முதலில்.இந்தச் செய்தியில் எவ்வளவு உண்மையிருக்கு என்ற சந்தேகத்தில் பூனைக்கு யார் முதலில் மணிகட்டுவது என்று நிறைய பேர் இருந்திருப்பார்கள். இந்த முகவரியில் நான்கைந்து தமிழ்ப்பெயர்களுண்டு.தொடர்குடியிருப்புப் போலும். மேலதிக தகவல்களையும் இங்கே இணையுங்கள். - கந்தப்பு - 03-28-2006 எட்டப்பன் பொன்னம்பலம் (கனடா) கனடா வாழ் தமிழ் உறவுகளை பகடைக்காய்களாக உருவகப்படுத்தி தமது அறிக்கையினை வெளியிட்ட Hற்W அமைப்பு கனடா வாழ் தமிழர்களின் (கனடியத் தமிழர் பேரவை) நெத்தியடியினால் மறுப்பறிக்கை ஒன்றை வியாழக்கிழமை 16 ஆம் திகதி) அவசர அவசரமாக வெளியிட்டுள்ளனர். இந்த Hற்W அமைப்பினது குற்றச்சாட்டுக்கு வலுச்சேர்க்கும் விதத்தில், கனடாவில் குடியேறி வாழ்ந்து வரும் நமு பொன்னம்பலம் (ணம்மு Pஒன்னம்பலம்) என்பவர் சாட்சி வழங்கியுள்ளார். மனிதவுரிமைக் கண்காணிப்பு அமைப்பினது அறிக்கை வெளியாகிய பின்னர் கனடிய ஒலி மற்றும் ஒளிபரப்புத்துறையினருக்கு இவர் நேர்காணல் வழங்கியுள்ளார். இன்று எமது விடுதலைப் போராட்டம் வெற்றியின் வாசலில் சங்கமித்துள்ள நேரத்தில், இது போன்ற தடைகள் எம்மீது வரத்தான் செய்யும். மனிதவுரிமை அமைப்புக்கள் குறிப்பாக தமது வருமானத்தை குறியாக கொண்டு செயற்படுபவர்கள் எமக்கெதிரான பிரச்சார யுத்தத்தில் தீவிரமாக உழைப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. எனினும், மனிதவுரிமை குறித்துக் குரல்கொடுக்கும் இந்த Hற்W அமைப்பு, மனிதவுரிமை குறித்து புகார் கொடுப்பவரின் மனிதவுரிமை மீறல் குறித்தும் விசாரிப்பது மிக அவசியமானதொன்றாகும். இந்த வகையில் கனடியத் தமிழர்கள் குறித்து அவதூறாக பிரச்சாரம் செய்வதற்கு உறுதுணை புரிந்துள்ள நமு பொன்னம்பலம் யார்? என்ற கேள்வி கனடியத் தமிழர்களிடத்தில் எழுந்துள்ளது. இந்த கேள்விக்கான விடையை கனடியத் தமிழருக்கு தெரிவிக்க வேண்டிய கடமை ஊடகத்துறை சார்தோருக்கு மிக அவசியம். சிறிமா அம்மையாரின் தீவிர பக்தனும், முன்னாள் பொதுவுடமைக் கட்சியைச் சேர்ந்தவருமான வி.பொன்னம்பலத்தின் மகன் தான் இந்த நமு பொன்னம்பலம். 1957 ஆம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் தந்தை செல்வாவிற்கு எதிராக தேர்தலில் நின்று படுதோல்விடைந்தவர் தான் இந்த வி.பொன்னம்பலம் (அல்லது வி.பி). தோல்வியைடைந்ததுமட்டுமல்லாமல் அன்றைய காலகட்டத்திலேயே தமிழர்களைக் காட்டிக்கொடுப்பதிலும் மும்முரமாக இவர்களது குடும்பம் ஈடுபட்டமை யாவரும் அறிந்த உண்மை. வி.பொன்னம்பலத்தின் குடும்பம் கனடாவுக்கு (ஓட்டாவா) 1980 ஆம் ஆண்டுகளில் குடிபெயர்ந்தனர். 1994 ஆம் ஆண்டு வி.பி ரொரன்ரோவில் காலமானார். வி.பியின் மறைவுக்கு சிறிமா அம்மையாரும், சந்திரிக்கா அம்மையாரும் இவருக்கான தமது இரங்கலை கொழும்பில் நிகழ்தியிருந்தமை இங்கு கவனிக்கத்தக்கது. வி;.பி ஒட்டாவாவில் வாழ்ந்த காலத்தில் ஸ்ரீலங்காவின் தூதரக மொழிபெயர்ப்பாளராக இருந்தார். வி.பி யின் சகோதரர் தூதுவரின் கார் ஓட்டியாக செயற்பட்டார். எமது போராட்டத்தின் ஆரம்ப முன்னோடிகளில் ஒருவரான இறைகுமாரனின் படுகொலையில் இந்த நமு பொன்னம்பலம் மற்றும் அவர் சகோதரர் தொடர்பு சந்தேகத்திற்கு இடமின்றி அன்றைய நாட்களிலேயே பதிவாகியிருந்தது. இந்தக்கொலையினை மேற்கொண்ட தமிழீழ மக்கள் விடுதலகை; கழகத்தின் (PளோTஏ) சந்ததியார், இவர்களின் வீட்டில் தங்கியிருந்தே இந்தக்கொலைக்கான திட்டத்தை தீட்டியிருந்தார். இந்தக் கொலையினை அடுத்து சென்னைக்கு தப்பியோடிய பொன்னம்பலம் சகோதரர்கள் எங்கு உண்டு உறங்கி இருந்தனர் என்பதும் எமக்குத் தெரியும். இறுதியாக கடந்த வருடம் தமிழ்த்தேசியத்திற்கு எதிரானவர்களால் ரொரன்ரோ, ஸ்காபுறோ நகரசபை மண்டபத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் தமிழ் இளைஞன் ஒருவரை தாக்கியதற்காக பொலிஸாரால் கைது செய்யப்பட்டவர் தான் இந்த நமு பொன்னம்பலம். தமிழர்களுக்கும் அவர்தம் தமிழ்த்தேசிய உணர்வாளர்களுக்கு மேல் நமு பொன்னம்பலமும் அவர் குடும்பமும் செய்த மனிதவுரிமை மீறல்கள் குறித்து கனடியத் தமிழர்கள் கனடிய மனிதவுரிமை ஆயைகத்தில் முறைப்பாடு செய்யவுள்ளனர். இவர் மற்றும் இவர் குடும்பம் தமிழ்தேசியத்திற்கு எதிராக செயற்படுத்தி வரும் நடவடிக்கைகள் மற்றும் இவருக்குத் துணைபோகும் பத்திரிகையாளர்கள் குறித்த விபரங்கள் விரைவில் கனடிய வாழ் தமிழ் மக்களுக்குத் தெரியப்படுத்தப்படும். சந்திரமோகன் (கனடா) http://www.eddappar.com/content/view/40/26/ - பிறேம் - 03-28-2006 சிநேகிதி அச்செய்தி என்னால் திரட்டப்பட்டதல்ல. ஓர் இணையத்தளத்தில் இருந்து பெறப்பட்டது. செய்தியுடன் இணைய முகவரியினை இணைக்க மறந்த காரணத்தினால் பின்னர் அதன் கீழே அவ்விணைய இணைப்பினையும் வழங்கியிருந்தேன். கனடாத் தமிழ் சமூகத்துடன் தொடர்பிருந்ததனால் அம்மக்களைச் சென்றடைவதற்காகவே இச் செய்தியையும் இணைத்திருந்தேன். மற்றும் தொடர்மாடி வீடுகள் தொடர் வீடுகள் போன்றவற்றிற்கு அவ் வீதியின் எண் மட்டுமே தேடல் பொறிகளில் இடப்படுவது வழமை. அவற்றின் அறை எண் வழங்கப்படுதில்லை. அவ்வாறான ஓர் குடியிருப்பாகவும் இருக்கச் சந்தர்ப்பங்கள் உண்டு. ஏதாவது மேலதிக தகவல் கனேடிய நண்பர்கள் மூலம் அறியக்கிடைக்கும் சந்தர்ப்பத்தில் அவற்றையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். ஆயினும் இச்சந்தர்ப்பத்தில் உண்மை இருப்பதற்கான சந்தர்ப்பம் அதிகமாகவே உள்ளது. இதன் ஒரு தொடர் நிகழ்வாகவே HRW என்னும் அமைப்பின் அறிக்கையும் இருக்கலாம். - பிறேம் - 03-28-2006 தனிப்பட்ட ஒருவரைப் பற்றிய கருத்துக்களைத் தவிர்த்துக்கொள்லாம் என்று கருதுகிறேன். இக்கருத்துக்களத்தின் ஓர் விதிமுறையாகவும் அது இருக்கிறது. நீங்கள் எண்ணுவது புரிகிறது. என்ன இவர் மட்டும் ஒருவரைப்பற்றி போடுறார். நாங்கள் போடுவதற்கு மட்டும் கதை சொல்கிறார் என்று. இங்கு இச் செய்தியைப் போட்டதற்குக் காரணம். அவர்கள் ஓர் அமைப்பினை நிறுவி, அவ்வமைப்பின் மூலம் தமிழ் சமூகத்தில் தம்மை வேரூன்ற நினைக்கிறார்கள். பிழையான நோக்கோடு! சமூகத்தில் இயங்கு திறனோடு உள்ள மாணவ சமூகத்தில் ஊடுருவ முற்படுகிறார்கள். இத்தளத்தில் பல மாணவர்கள் இணைந்துள்ளதாக அவர்களின் கருத்தாடலின் மூலம் அறிந்ததனால் அவர்களிற்கு அறியத்தரும் நோக்ாடு மாத்திரமே.! அண்மைக்காலமாக இத்தளத்தில் சமூகத்தில் தெளிவாக அடையாளம் காட்டப்பட்டவர்களைப் பற்றி மீண்டும் மீண்டும் கருத்தாடி அவர்களின் குரலாக ஒலிப்பது போன்ற ஒரு தோற்றத்தை காட்டுவது போல் உள்ளது. ஆதலால் அவை பற்றி செய்தி போட வேண்டுமென்றால் போட்டுவிட்டு, பின் அதைப் பெரிதுபடுத்தி அவர்களை சமூகத்தின் முக்கிய புள்ளிகள் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தாது தவிர்க்கலாம்.
- aathipan - 03-28-2006 ஒரு பெண்ணின் பிறந்த திகதி மற்றும் முகவரியை இப்படி வெளியிடுவது சரியா தெரியவில்லை. பொறுப்பில்லாது இப்படி சிறுபிள்ளைத்தனமாக அறிக்கை விடுபவர்களை எப்படி நம்புவது. சரி எதற்கும் எம் மக்கள் அவதானமாக இருப்பது நன்று. - தூயவன் - 03-28-2006 எதுவானாலும் நாம் அவதானமாக இருக்கவேண்டும். அது தான் முக்கியம். தேசவிடுதலைப் போராட்டத்தில் துரோகிகளுக்கு இடம் கொடுக்கவே கூடாது. - Kishaan - 03-28-2006 என்ன புதுக்கதை சொல்லுகின்றீர்கள்.... பெண்ணா? இதில் எங்கே பெண்ணின் பிறந்த திகதி இருக்கிறது..??????? aathipan Wrote:ஒரு பெண்ணின் பிறந்த திகதி மற்றும் முகவரியை இப்படி வெளியிடுவது சரியா தெரியவில்லை. பொறுப்பில்லாது இப்படி சிறுபிள்ளைத்தனமாக அறிக்கை விடுபவர்களை எப்படி நம்புவது. சரி எதற்கும் எம் மக்கள் அவதானமாக இருப்பது நன்று. - kurukaalapoovan - 03-28-2006 அதெப்படி துரோகிகளுக்கு இடங் கொடுக்கக் கூடது என்று செல்லலாம்? ஜனநாயகம் எங்கே போய்விட்டது? கருத்துச் சுதந்திரம் எங்கே? அது தான் கண்ட இடத்தில் மூத்திரம் பெய்யிறதுக்கு சுதந்திரம் எங்கே? உண்மையான ஜனநாயகம் மாற்றுக் கருத்து சுதந்திரம் இருந்த நடு வீதியிலையும் மலங்கழிக்க விடவேணும். - பிறேம் - 03-28-2006 aathipan Wrote:ஒரு பெண்ணின் பிறந்த திகதி மற்றும் முகவரியை இப்படி வெளியிடுவது சரியா தெரியவில்லை. பொறுப்பில்லாது இப்படி சிறுபிள்ளைத்தனமாக அறிக்கை விடுபவர்களை எப்படி நம்புவது. சரி எதற்கும் எம் மக்கள் அவதானமாக இருப்பது நன்று. இதில் பெண்ணின் பிறந்த திகதி முகவரி என்பன வெளியிடப்படவில்லையே. :roll: :roll: :roll: [quote] 3. <b>மதன் அல்லது சுடர் என்னும் மதன் சண்முகராஜா சில அப்பாவி இளையோர்களை தன்பக்கம் ஈர்த்து வருகிறார்.</b> ஆபத்தை உணராமல் இவர்களும் உந்தப்பட்டுள்ளனர். இவர்களில் ஏதுமறியா சிறுமிகளும் இருப்பதற்கான ஆதாரங்கள் எம்மிடம் உள்ளன. [b]இவரின் பிறந்த திகதி: 1983-01-03 (23 வயது), தமிழீழ முகவரி: மட்டக்களப்பு, தற்போதைய முகவரி: **** **** நீக்கப்பட்டுள்ளது - மோகன் - Snegethy - 03-28-2006 அதிபன் பெண்ணா என்றால் என்ன ஆணா இருந்த என்ன தேசத்துரோகம் செய்யுறவை மனுசரே இல்லை...பிறகென்ன அவைக்கு பாவம் புண்ணியம் எல்லாம்... - narathar - 03-28-2006 அப்படிச் சொல்லுங்க.... நான் சொல்ல நினச்சன் நீங்க சொல்லீட்டீங்க.... - aathipan - 03-28-2006 இவர்களில் ஏதுமறியா சிறுமிகளும் இருப்பதற்கான ஆதாரங்கள் எம்மிடம் உள்ளன. இவரின் பிறந்த திகதி: 1983-01-03 (23 வயது), தமிழீழ முகவரி: மட்டக்களப்பு, தற்போதைய முகவரி: Shanmugarajah, R 2835 Islington Avenue, Toronto, ON M9L 2K2 மன்னிக்கவும் தவறாக விளங்கிவிட்டேன் - Nitharsan - 03-29-2006 ஆதரமிருந்தால் தமிழீழ விடுதலைப்புலிகளிடம் அல்லது சம்பந்தப்பட்டவர்களிடம் கையளிக்க வேண்டியது தானே பிறகெதுக்கு இணையத்தில அறிக்கை முட்டாள்கள் மக்களை முட்டாள்கள் என்று எண்ணி முட்டாள் தனமாய் சமூகத்தின் அடித்தளத்தில் இருக்க கூடிய சில துரோகிகளை பெரும் துரோக கும்பலாக காட்ட முனைவதானது. எட்டர்ப்பர் இணையத்துக்கும், அந்த துரோகிகளுக்கும் வெற்றியே ஒழிய தமிழ் மக்களுக்கல்ல. துரொகிகளை இனம் காட்ட முன் அவர்களை சம்பந்தப்பட்டவர்களுக்கு அடையளப்படுத்த வேண்டும். அதை விடுத்து இணையத்தில் போட்டு அவர்களை விழிப்படைய செய்வதானது கண்னைத்திறந்து கொண்டு கிணற்றில் விழுவது போல. இங்கு மக்கள் முட்டாள்கள் அல்ல. தமிழ் தேசியத்தின் ஆன்மாவை நேசிக்கின்ற ஒவ்வொரு தமிழனுக்கும் பால் எது கள் எது என்று நன்றாகவே வேறு பாடுதெரியும். இதில் யாரும் சங்கினை ஊதி அவர்கள் தான் துரொகிகள் இவர்கள் தான் துரோகிகள் என்று சுட்டிக்காட்ட தேவையில்லை. இந்த அற்பர்களுகளைப்பற்றி செய்தி போட்டால், அவர்களுக்கு பயந்து நாம் போட்டதாகவே அவர்கள் கருதுவர். நாம் எவருக்கும் அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை. வெறும் பணத்திற்காகவோ, பதவிக்காகவோ ஏமாறக்கூடிய நிலையில் கனடிய மாணவர்களும் இல்லை. ஆனால் இந்த செய்தி ஓர் அடையாளம் தெரியாத துரொகியை, தனியே இருந்த துரொகியை (செய்தி உண்மை எனில்!) ஒன்று சேர்க்க வெளிப்படுத்த அவனுக்கு உதவியிருக்கிறதென்றால் அது மிகையாகாது. <b>எனக்கும் பக்கத்து வீட்டுக்காரனுக்கும் பிரச்சினை என்றால் !, என்னிடம் ஒரு இணையமும் இருக்கு மென்றால்!, அவனும் நாளை துரோகியாக்கப்படுவான் எனது இணையத்தால்!, அப்படியான ஒரு சூழலை இன்றைய இணைய ஊடகத்தில் உருவாக்கியுள்ளனர் சிலர் .</b> எனவே நாங்கள் எம்மை குழப்பி கொள்ளாமல் இருக்க செய்திகளின் உண்மை தன்மையை ஆராய்வோமாக... - narathar - 03-29-2006 வணக்கம் நிதர்சன், எனக்கெண்டா நீங்க சொல்லுறது விளங்கேல்ல.இந்தச் செய்தி உண்மை அற்றது என்று சொல்கிறீர்களா? அப்படியாயின் அதற்கான ஆதாரத்தை நீங்க முன் வைத்தால், படிப்பவர்கள் எது மெய்,எது பொய் என்று முடிவெடுப்பார்கள். இதற்காகவே இந்தச் செய்தி இங்கே போடப் பட்டிருக்கலாம்.கருதுக் களத்தின் நோக்கமும் அது தான். மேலும் இவர்களை விளம்பரப் படுத்தக்கூடாது என்கிறீர்கள்.அப்படியானால் இவர்கள யார் என்று தமிழ் மக்கள் எவ்வாறு அறிவார்கள்?இவர்கள் தங்களை தேசிய ஆதரவாளர்களாகக் காட்டிக் கொண்டு இயங்கினால் ,இவர்களை பரந்துபட்ட ரீதியில் எவ்வாறு புலம் வாழ் மக்கள் அனைவருக்கும் இனம் காட்ட முடியும்?இணயத்தில் இடுவாதால் பலரும் தமக்கு இவர்கள் பற்றி தெரிந்த தகவல்களை இட்டு இவர்கள் பற்றிய தகவல்கள்,இவர்களின் செயற்பாடுகளை திரட்ட உதவியாக இருக்கும் அல்லவா? உதாரணத்திற்கு கூல் அவர்கள் பற்றி தனிப்பட தெரிந்த பலர் இப்போது தமது அனுபவங்களை இணயத்தில் எழுதி வருகின்றனர்.இதன் மூலம் அவரின் பின் புலம் பற்றிய முழுமயான புரிதல் ஏற்படுகின்றது அல்லவா? ஒருவர் தமிழ்தேசியத்திற்கு எதிராகச் செயற்படுகிறாரா என்பது அவரது சொல்லிலும் சில சமயம் மறைமுகமான செயற்பாடுகளில் இருந்துமே வெளிப்படுகிறது.ஆகவே முழுத் தமிழ்ச் சமுதாயமும் இணயத்தினூடாக கருத்துப் பரிமாறுவதன் மூலம்,விழிப்பாக செயற்பட முடியும்.இங்கே நாங்கள் ஒவ்வொருவருமே புலனாய்வு செய்கிறோம்.அதற்கான வசதியை இணயம் அழிக்கிறது. ஒரு செய்தியின் உண்மைத் தன்மையை அதைப் பெறுபவர்களே தீர்மானிக்க வேண்டும். மேற் குறிப்பிட்ட செய்தி தனி நபர்களுக்கிடயே ஆன பகயால் ஏற்பட்டது எனில்,அதுவும் இங்கே வெளிப்படுத்தப் படும் அல்லவா?அவ்வாறு நடந்தால் எட்டப்பர் என்னும் இணயத்தளத்தில் வரும் செய்திகளை இனியும் ஒருவரும் கணக்கில் எடுக்க மாட்டார்கள் அல்லவா? ஆகவே இந்தச் செய்தி தனி நபர்களைத் தாக்கும் நோக்குடன் போடப் பட்டிருப்பதாக உங்களுக்குத் தெரிந்தால் அதனை இங்கே இடலாமே? - மின்னல் - 03-29-2006 நிதர்சன் இதன் யதார்தத்தத்தைப் புரியாமல் சிறுபிள்ளைத் தனமாகக் கருத்து எழுதுறீர்கள். விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகத்தின் உறுப்பினர் என்ற பெயரிலேயே இவர்கள் செயற்பட்டு வந்துள்ளதாக செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இவர்கள் நிதிசேகரிப்பில் ஈடுபட்டால் மக்கள் ஏமாறக் கூடாது. எனவே இவர்களைப் பற்றிய விழிப்புணர்வு மக்களிடத்தே ஏற்படுத்தப் படவேண்டும். இப்போதுதானே இந்தப் பிரச்சினை வெளியே வந்திருக்கிறது. போகப்போக இது தொடர்பான தகவலகள் வெளிவந்தால் அந்த மதன் போன்றவர்களின் பின்னணியும் தெரியவரும். - Nitharsan - 03-29-2006 நாரதர் அவர்களே! விளம்பரப்படுத்துவதன் மூலம் அவர்களை நாம் பெரியவர்களா மாற்றுகின்றோம் என்பதையும், கனடாவில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும் துரெரிகளை இணைக்க சந்தர்ப்பம் வழங்குவதாக அமையும் என்பதையுமே சொன்னேன். அதே வேளை எட்டப்பர் இணையத்து செய்தி எவ்வளவு உண்மை இல்லை என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியவில்லை. ஆனாலும் அந்த செய்தி முற்று முழுதான உண்மையில்லை என்பதில் எனக்கு வேறு கருத்தேதும் இல்லை. எ - Nitharsan - 03-29-2006 மின்னலுக்கு, சின்னபிள்ளைத்தனமாக செய்திகள் வரும் போது சிறு பிள்ளை போல் கருத்தெழுதுவதில் தவறுகள் இல்லையே!.. :roll: தலைமை செயலகத்தின் உறுப்பினர்கள் கனடாவில் செயற்ப்பட முடியாது என்பதை மக்கள் நன்கு அறிவார்கள். எனவே அப்படியான பொய்யை கூறும் போதும் மக்கள் ஏமாற மாட்டார்கள். சாதாரணமாக கனடாவில் வாழும் ஒவ்வொருவருக்கும் கனடிய சட்டதிட்டங்கள் நன்றாகவே தெரியும். எனவே இப்படி ஒருவர் சொல்லி செயற்ப்படுகின்றார் என்றால்!.. இது உண்மை என்றால்!.. நேரடியாக சம்பந்தப்பட்டவர்கள் காவல் துறையினரிடமே தெரிவிக்கலாமே!...[/quote] - பிறேம் - 03-29-2006 narathar Wrote:ஆகவே இந்தச் செய்தி தனி நபர்களைத் தாக்கும் நோக்குடன் போடப் பட்டிருப்பதாக உங்களுக்குத் தெரிந்தால் அதனை இங்கே இடலாமே? இதில் இச்செய்தி தனிநபர் தாக்குதலாக அமையில்லை. ஒர் அமைப்பு உருவாக்கப்பட்டு அதற்கு ஆட்கள் திரட்டப்பட்டு செயற்திட்டம் மேற்கொள்ள முயற்சி நடக்கிறது. அதைவிட மேலும் சிலரின் பெயர் விபரங்களும் வெளியிடப்பட்டுள்ளது. ஆகவே தனிநபர் தாக்குதலாக இதனைக் கருதிவிட முடியாது. சமூகத்தில் உடனடியாக கவனத்தில் எடுக்க வேண்டிய விடயம். பிறேம் Wrote:அவர்கள் ஓர் அமைப்பினை நிறுவி, அவ்வமைப்பின் மூலம் தமிழ் சமூகத்தில் தம்மை வேரூன்ற நினைக்கிறார்கள். பிழையான நோக்கோடு! |