![]() |
|
சிரித்திடு நண்பியே............! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: சிரித்திடு நண்பியே............! (/showthread.php?tid=410) |
சிரித்திடு நண்பியே............! - jcdinesh - 03-29-2006 நண்பி..... நண்பி......... நட்பு.... சாதாரணமாகத்தான் இருந்தது எனக்கு உன்னை காணும் வரை ஏதேனும் எதிர்பார்ப்புக்களுடனே அன்பு காட்டும் உலகில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்-உன் அன்பை எண்ணி வியந்து போகிறேன்.... நண்பி......... மொழிகளோ.... தூரங்களோ........ வயதோ....... மற்ற எதுவுமே - நட்பை எதிர் பார்ப்பதில்லை... உன்னாலே புரிந்து கொண்டேன்.. என் வாழ்க்கைத் தோட்டத்தில் எத்தனையோ 'நட்பு" மலர்கள் - ஆனால் உன் நட்பைப்போல் எதுவும் மலர்ந்து மணம் வீசவில்லை கால வெள்ளத்தில் சிதறுண்டு போகும் உறவுகளில் நண்பி.............தொடர்வாயா உன் நட்பை இறுதி வரை..........? <img src='http://img137.imageshack.us/img137/1895/godislovelgwht8vq.gif' border='0' alt='user posted image'> - Selvamuthu - 03-30-2006 கவிதைக்கு நன்றி இந்த "நன்பி"யை "நண்பி" என்று மாற்றினால் நன்றாக இருக்கும். குறை விளங்கவேண்டாம். - Rasikai - 03-30-2006 கவிதை நன்றாகவுள்ளது டினேஸ். ஆசிரியர் சொன்ன மாதிரி அதை மாற்றீனீர்கள் என்றால் இன்னும் நல்லம். தொடர்ந்து எழுதுங்கள் - jcdinesh - 03-30-2006 நன்றி நன்பர்களே உங்கள் எடுத்துக்காட்டுக்கு....... - sagevan - 03-30-2006 நன்றாக உள்ளது.தொடர்ந்து எழுதுங்கள். - RaMa - 04-03-2006 நன்றாக உள்ளது . வாழ்த்துக்கள். - Aravinthan - 04-03-2006 நல்ல கவிதை. வாழ்த்துக்கள் - gowrybalan - 04-03-2006 காதலியின் பிரிவால் நீ..துவண்டாய்...என நான் நினைத்தேன்..... (மறந்து விட்டாயா... கவிமூலம்) இன்று.. தோழியின் வரவால்... நீ...மகிழ்ந்தாய்...என நான் உணர்ந்தேன்... இப்போது பார்த்தாயா..? பூமியில்-இன்னும் எத்தனை நெஞ்சம் நேசமாய்....பாசமாய்.... பூத்துக் கிடக்கு ! <img src='http://img95.imageshack.us/img95/9836/x1pnprgmi5o50lf2ll45nyrwhd6h0j.gif' border='0' alt='user posted image'> - jcdinesh - 04-03-2006 [quote="gowrybalan"] காதலியின் பிரிவால் நீ..துவண்டாய்...என நான் நினைத்தேன்..... (மறந்து விட்டாயா... கவிமூலம்) இன்று.. தோழியின் வரவால்... நீ...மகிழ்ந்தாய்...என நான் உணர்ந்தேன்... இப்போது பார்த்தாயா..? பூமியில்-இன்னும் எத்தனை நெஞ்சம் நேசமாய்....பாசமாய்.... பூத்துக் கிடக்கு ! ஆம் நன்பரே.... என் தோழியின் வருகை எனக்கு மகிழ்ச்சிதான்...... அவள் எனக்கு தோழியாக கிடைத்ததற்கு......கடவுளுக்குத் தான் நன்றி சொல்லணும்..... என் குடும்பத்தில் உள்ள அத்தனை பேரும் காட்டும் அன்பை என் தோழி ஒருத்திமூலமே நான் கண்டு கொண்டேன் நன்பரே...... அவளையும் அவள் அன்பையும் நான் என்றும் இளக்கமாட்டான் நன்பரே............. - aathipan - 04-03-2006 கவலைகள் மனதை சூழ்ந்தபோதேல்லாம் உன்னைத்தான் மனம் தேடும்.... காதலியிடம் பகிராத கவலைகளையும் நீ தான் புரிந்துகொள்வாய்... உலகின் அந்த மூலையில் நீயும்; இந்த மூலையில் நானும்... இருந்தும் நான் ஒரு வாரம் மௌனம் காத்தால் துடித்துப்போய் கடிந்துகொள்வாய்;.... காதலியும் பொறாமைகொள்கிறாள் நம் நட்புக்கண்டு... ஆண் நட்பு ஆயுள் வரைக்கும் பெண் நட்பு அவள் திருமணம் வரைக்குமாமே... நீ ஆணாக பிறந்திருக்கக்கூடாதா என வருந்துகிறேன்..... - aathipan - 04-03-2006 கவலைகள் மனதை சூழ்ந்தபோதேல்லாம் உன்னைத்தான் மனம் தேடும்.... காதலியிடம் பகிராத கவலைகளையும் நீ தான் புரிந்துகொள்வாய்... உலகின் அந்த மூலையில் நீயும்; இந்த மூலையில் நானும்... இருந்தும் நான் ஒரு வாரம் மௌனம் காத்தால் துடித்துப்போய் கடிந்துகொள்வாய்;.... காதலியும் பொறாமைகொள்கிறாள் நம் நட்புக்கண்டு... ஆண் நட்பு ஆயுள் வரைக்கும் பெண் நட்பு அவள் திருமணம் வரைக்குமாமே... நீ ஆணாக பிறந்திருக்கக்கூடாதா என வருந்துகிறேன்..... - jcdinesh - 04-03-2006 <!--QuoteBegin-aathipan+-->QUOTE(aathipan)<!--QuoteEBegin-->கவலைகள் மனதை சூழ்ந்தபோதேல்லாம் உன்னைத்தான் மனம் தேடும்.... காதலியிடம் பகிராத கவலைகளையும் நீ தான் புரிந்துகொள்வாய்... உலகின் அந்த மூலையில் நீயும்; இந்த மூலையில் நானும்... இருந்தும் நான் ஒரு வாரம் மௌனம் காத்தால் துடித்துப்போய் கடிந்துகொள்வாய்;.... காதலியும் பொறாமைகொள்கிறாள் நம் நட்புக்கண்டு... ஆண் நட்பு ஆயுள் வரைக்கும் பெண் நட்பு அவள் திருமணம் வரைக்குமாமே... நீ ஆணாக பிறந்திருக்கக்கூடாதா என வருந்துகிறேன்.....<!--QuoteEnd--><!--QuoteEEnd--> நன்பரே...... ஒரு ஆண் பொண் இருவருக்கிடையான நட்பு இந்தமாதிரித்தான்.....ஆனால் என் நண்பியை நண்றாக புரிந்தவன் கணவனாணால் அது என் பாக்கியமே...அவளின் நட்பு கணிணி மூலமாக கிடைத்த நட்பே........என் ஆயுள் வரை அந்த நட்பு கணணி மூலமாவது தொடர்ந்தும் கிடைத்தால் அதுவே போதும்...... அவள் முகம் காணாமல் அவள் உள்ளத்தை மட்டுமே நேசித்துக் கொண்டிருப்பேன்..... [b]சிரித்திடு நண்பியே............![/b] - jcdinesh - 04-09-2006 <b>சிரித்திடு நண்பியே............!</b> சோகங்களையே சொந்தமென வா(டா)ழாதே நண்பியே..... சோர்ந்திருக்காதே.... வேதனைச் சுமைகளைக் கொண்டு உன் காலங்களைக் கடத்தாதே... நீ வீரத்தாயின் வயிற்றில் பிறந்த வீர மகள் அல்லவா கஸ்டங்களை கண்டு கலங்கி விடவும் சோகங்களை கண்டு சோர்ந்திடவும் நி கோழையல்ல ஏழையானாலும் ஏளனமில்லா பெண் மகள்லல்லவா இன்று இல்லையெனில் நாளை ஒரு நாள் நல்ல காலம் உனைத் தேடி வரலாம் ஆதாலால் தான் சொல்கிறேன் மகிழுச்சியான வதனமதை வாடி வைக்காதே ஒரு முறை சிரித்திடு பிறக்கும் புதிய ஆண்டிலேனும் புதிய பாதை திறக்காதா? கடந்ததை மறந்து சிரித்திடு நண்பியே... உன் சிரிப்பில் தான் என் இன்பம் என்பதை மறவாது நினைத்து சிரித்து எழுந்துடு என் நண்பியே............ வாழ்த்துக்கள் - anuraj.nl - 04-09-2006 நட்புக்கு வார்த்தையால் உயிர் கொடுத்த நன்பரே உங்கள் கவிதைக்கு நன்றிகள் களங்கமில்லா நட்பு காலத்திந்கும் அழியாது வாழும். - jcdinesh - 04-30-2006 நன்றி நன்பரே உங்கள் வாழ்த்துக்களுக்கு |