![]() |
|
ஆளும் கட்சி அமோக வெற்றி ஐ.தே.க. பெரும் பின்னடைவு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: ஆளும் கட்சி அமோக வெற்றி ஐ.தே.க. பெரும் பின்னடைவு (/showthread.php?tid=374) |
ஆளும் கட்சி அமோக வெற்றி ஐ.தே.க. பெரும் பின்னடைவு - AJeevan - 04-01-2006 உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அமோக வெற்றியை பெற்றிருப்பதுடன், அதன் நேச அணியான ஜே.வி.பி. படுதோல்வியையும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி பெரும் பின்னடைவையும் சந்தித்துள்ளன. <img src='http://www.thinakural.com/New%20web%20site/web/2006/April/01/fr-n.gif' border='0' alt='user posted image'> வியாழக்கிழமை இடம் பெற்ற 266 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் இச் செய்தி எழுதுகையில் வெளியான 250 சபைகளுக்கான முடிவுகளில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 212 சபைகளின் நிர்வாகத்தை கைப்பற்றியிருந்தது. இவற்றில் 8 மாநகர சபைகளும் 17 நகர சபைகளும் 187 பிரதேச சபைகளும் அடங்கும். ஐக்கிய தேசியக் கட்சி 3 மாநகர சபைகளையும் 13 நகர சபைகளையும் தன்வசமாக்கியுள்ளது. ஜே.வி.பி. திசமகராமை பிரதேச சபையில் மட்டுமே நிர்வாகத்தை பொறுப்பேற்றுள்ளது. இதேவேளை வட, கிழக்கில் திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களில் இடம் பெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் திருமலை மாநகர சபையையும் திருமலை பட்டினமும் சூழலும், வெருகல், ஆலையடிவேம்பு, திருக்கோவில், காரைதீவு பிரதேச சபைகளை இலங்கைத் தமிழரசுக் கட்சி வெற்றி பெற்றுள்ளது. மலையகத்தில் வரலாற்றில் முதற்றடவையாக தலவாக்கலை - லிந்துல நகர சபையை ஐக்கிய இலங்கை ஜனநாயக முன்னணி கைப்பற்றியுள்ளது. முஸ்லிம் காங்கிரஸ் சம்மாந்துறை பிரதேச சபை, கிண்ணியா நகர சபை, கிண்ணியா பிரதேச சபை ஆகியவற்றில் ஐ.தே.க.வுடன் இணைந்து போட்டியிட்ட முஸ்லிம் காங்கிரஸ் அச்சபைகளின் நிர்வாகத்தை பொறுப்பேற்றிருக்கிறது. மூதூர் பிரதேச சபைகளிலும் சுயேச்சையாக போட்டியிட்டு இக் கட்சி வெற்றி பெற்றிருக்கிறது. உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகளில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் கட்சி பெற்ற வெற்றி, விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தையை முன்னெடுக்க உத்வேகத்தை அளிக்குமென ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். கடும் போக்காளருக்கு தாங்கள் ஆதரவில்லை" என்பதை இங்கே வாக்காளர்கள் வெளிப்படுத்தியுள்ளனர் என்று கொழும்பு பல்கலைக்கழக அரசியல் கற்கைகளுக்கான பீடத்தலைவர் கலாநிதி ஜயதேவ உயன்கொட தெரிவித்தார். 2002 இல் இடம் பெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐ.தே.க. அநேகமான இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. ஆனால், இம் முறை பாரிய பின்னடைவை எதிர்கொண்டுள்ளது. ஆனால், இது ஆச்சரியமான விடயமல்ல என்றும் அரசாங்கத்திடமிருந்து அபிவிருத்திக்கான நிதியைப் பெறுவதை கருத்தில் கொண்டு ஆளும் கட்சிக்கு வாக்களிப்பது வழமையான விடயமெனவும் அபிப்பிராயம் தெரிவிக்கப்பட்டது. இதேவேளை, கடும் போகு சிங்களக் கட்சிகளான ஜே.வி.பி.யும் ஜாதிக ஹெல உறுமயவும் (ஒரு சபையைக் கூட ஹெல உறுமய தன் வசமாக்கவில்லை) தோல்வி கண்டமையால், அரசாங்கம் புதிய உற்சாகத்துடன் சமாதான முயற்சியை முன்னெடுக்கும் வாய்ப்பு இருப்பதாக அவதானிகள் சுட்டிக் காட்டுகின்றனர். விடுதலைப் புலிகளுடன் அரச அதிகளவு விட்டுக் கொடுப்புக்கு முன்வரும் முறையை தேர்ந்தெடுக்கக் கூடும் என்கிறார் கலாநிதி உயன்கொட. இது இவ்வாறிருக்க, உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பிரதான எதிர்க்கட்சியைவிட அதிக பெரும்பான்மையான வாக்குகளை சுதந்திர முன்னணி பெற்றுக் கொண்டதால், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான யோசனையில் ஈடுபடக் கூடும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பாராளுமன்றத்தில் இறுதிப் பெரும்பான்மை பலத்தை கொண்டில்லாத நிலையில், ஜே.வி.பி., ஹெல உறுமயவின் ஆதரவில் தங்கியிருக்கும் ஆளும் கட்சி, தேர்தலை நடத்தி அதில் பெரும்பான்மை பலத்தை பெறுவதற்கு இது உகந்த தருணம் என்று சிந்திக்கக் கூடுமெனவும் அவர்கள் கூறுகின்றனர். - தினக்குரல் |