Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அன்பழகனுக்கு முதல்வர் பதவியை விட்டுத் தருவாரா கருணாநிதி?????
#1
நெல்லை கண்ணன்... முன்னாள் காங்கிரஸ் பொதுச்செயலாளர். இலக்கியமாகட்டும் அரசியலாகட்டும் குடும்ப உறவுகளாகட்டும் மேடையிலேறிப் பேச ஆரம்பித்தால் குற்றால அருவியென ஜிலுஜிலு தமிழ் துள்ளி விழும். நடு நடுவே நகைச்சுவைப் பட்டாசுகள்... காங்கிரஸ்காரரான இவர் சமீபத்தில் முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்தார். அதன்பிறகு, தி.மு.க. கூட்டணிக்கு எதிராக அ.தி.மு.க. மேடைகளில் ஏறி பிரசாரம் செய்யப் போகிறார். இது பலரையும் இவர் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. இவரைச் சந்தித்தபோது, பீரங்கியாய் வெடித்தார்.

"அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்குத் தமிழ்நாட்டில் காங்கிரஸ் என்கிற ஒன்று இருப்பதாகவே தெரியவில்லை. அதனால்தான், அவர் தமிழ்நாடு குறித்து எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் தி.மு.க தலைவர் கருணாநிதியிடம் ஆலோசனை கேட்கிறார்.

மத்திய அமைச்சராக இருக்கின்ற தமிழகத்தைச் சேர்ந்த ஈ.வி.கே எஸ். இளங்கோவன், ஜி.கே.வாசன், மணி சங்கர் ஐயர் _ இவர்களுக்கெல்லாம் இது குறித்து கொஞ்சம்கூட மானமோ, வெட்கமோ, சூடு சொரணையோ இல்லை. இவர்களுக்கு மந்திரி பதவி மட்டும் இருந்தால் போதும்.

நண்பர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தந்தை பெரியாரின் பேரன் என்று சொல்லுவார். ஆனால், இவர் பெரியாரின் நேரடி பேரன் இல்லை. பெரியாரின் தம்பி பேரன்தான் இவர். இளங்கோவன் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரான உடன் தமிழ்நாடு முழுவதும் அவரோடு நான்தான் சுற்றுப்பயணம் செய்தேன். அப்போது சோனியாகாந்தியை கோவைக்கு அழைத்து வந்தோம். கூட்டத்திற்கான அத்தனை செலவையும் முன்னாள் மத்திய அமைச்சர் பிரபு ஏற்றுக் கொண்டார். இளங்கோவனின் செலவுக்கும் அவரே பணம் தந்தார்.

அந்த நிகழ்ச்சி முடிந்து மறுநாளே, தமிழ்நாடு முழுக்க பயணம் செய்த நான், ஒரு சாலை விபத்தில் உயிருக்குப் போராடிய நிலையில் சேலம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டேன். இளங்கோவன் என்னை வந்து பார்க்கவில்லை. ஆனால், பெரியவர் கருணாநிதி உடல் நலம் சரியில்லை என்பதால் அவரைப் போய் பார்த்தார்.

பெரியவர் கருணாநிதியின் தயவு அவருக்குத் தேவையாக இருந்தது. காங்கிரஸில் நாடாளுமன்ற சீட் வாங்குவதற்கும், மத்திய அமைச்சராவதற்கும் அவர் கருணாநிதியை பயன்படுத்திக் கொண்டார். மத்திய அமைச்சரானவுடன், கருணாநிதியை எதிர்க்கிற வீரனாகத் தன்னைக் காட்டிக் கொண்டார். ஆனால், டெல்லி காங்கிரஸ் தலைமை கூப்பிட்டுச் சொன்னவுடன் நேராக கோபாலபுரம் சென்று மன்னிப்பு கேட்டு பல்டியடித்து மத்திய மந்திரி பதவியை காப்பாற்றிக் கொண்டார்.

பெரியார் எதைச் சொன்னாலும் கடைசி வரை அதில் உறுதியாக இருப்பார். ஆனால், தினம் ஒரு கருத்து முடிவெடுக்கும் இவர் எப்படி பெரியாரின் பேரனாக இருக்க முடியும்?

ஜி.கே. வாசன் பெரிய வீட்டுப் பிள்ளை. எந்த உழைப்பும் இல்லாமல் மூப்பனாரின் மகன் என்பதனாலேயே தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராகி, மாநிலங்களவை உறுப்பினராகி, இன்றைக்கு மத்திய அமைச்சராகியிருக்கிறார்.

என்னைப் போல் அனுபவம் கொண்டவர்களும் கட்சியில், மூத்த சேவை செய்தவர்களும், அவரிடம் போய் கை கட்டி நிற்க வேண்டும் என்ற பண்ணையார் மனோபாவம் இன்னும் இவரிடம் இருக்கிறது.

இன்றைக்கு காங்கிரஸ் கட்சியில் வேட்பாளர் தேர்வுக்குப் பணமே வாங்காமல் விண்ணப்பம் இலவசமாக விநியோகிக்கப்படுகிறது. ஏனென்றால், இந்த விண்ணப்பங்கள் எதுவுமே டெல்லியில் செல்லாது என்பது அவர்களுக்குத் தெரியும். தலைவர்களுக்கும், அவர்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கும் உள்ளேயே அந்த இடங்கள் பங்கிடப்பட்டு விடும். இலவச விண்ணப்பம் கொடுத்த ஏழை தொண்டர்கள் அத்தனை பேரும் வழக்கம் போல் ஏமாளிகளாகி தெருவில் திரிவார்கள்.

காங்கிரஸ் வேட்பாளராக ஒரே தகுதி இந்தக் கட்சி மாறி தலைவர்களின் எடுபிடியாக இருக்கவேண்டும். அல்லது கோடீஸ்வரர்களின் மகனாக இருக்க வேண்டும். அதுவும் இல்லையென்றால் டெல்லித் தலைவர்களைக் குளிப்பாட்டுகிற வித்தை தெரிந்திருக்க வேண்டும்.

சோனியாகாந்தி பிரதம மந்திரி பதவியைத் தியாகம் செய்தார் என்று சொல்லுகின்ற இவர்கள் குறைந்த பட்சம் தி.மு.க. போட்டு இருக்கிற பிச்சையான 48 தொகுதிகளிலும் புதிய தொண்டர்களை நிறுத்துவார்களா? கருணாநிதியைவிட மூத்த திராவிட இயக்கத் தலைவர் பேராசிரியர் அன்பழகன் கடைசி காலத்தில் ஒருமுறை முதலமைச்சராகட்டும் என்று, கருணாநிதி முதல்வர் பதவியை விட்டுத் தருவாரா? சோனியா காந்தியின் மகன் ராகுல் காந்தி எம்.பி. பதவியிலேயே இன்னும் பத்து வருடம் பயிற்சி வேண்டும் என்கிறார்கள். ஆனால், கருணாநிதியின் பேரன் தயாநிதியும், ராமதாஸின் மகன் அன்பு மணியும், மூப்பனாரின் மகன் வாசனும் எடுத்தவுடனேயே நேரடியாக மத்திய அமைச்சராகி விட்டார்களே...

கருணாநிதி முரசொலியில் எழுதுகிறார். மலை உச்சியில் ஏறவேண்டுமென்றால் முயன்று, முயன்று, ஏற வேண்டுமாம். அது தொண்டர்களுக்குதான். தயாநிதி ஹெலிகாப்டரில் இமயமலையில் இறங்கிவிட்டார்.

கோபால்சாமி பெற்ற தாயின் சொல்லை தட்டிவிட்டதாக கருணாநிதி குற்றம் சாட்டுகிறார். தாய் என்று பேசுகிற பெரியவர் கருணாநிதியின் கட்சிக்காரர்கள், அன்னை இந்திரா காந்தியை என்னவெல்லாம் பேசியிருக்கிறார்கள் என்று நினைக்கிறபோது என் நெஞ்சம் பதறுகிறது. விதவைக்கு மறு வாழ்வுத் திட்டம் கொண்டு வந்திருக்கிறார் கலைஞர். இந்திராகாந்தி விண்ணப்பித்தால் உதவுகிறோம் என்று பேசியவர்கள்தானே இந்த தி.மு.க.காரர்கள்.

1967_68_ல் நான் சாமான்யன் என்று சொன்ன கருணாநிதி, இன்று சொல்லவில்லையே... ஏன்? ஆசியாவில் 5வது பணக்கார குடும்பம் அவர் குடும்பம். இன்று 18 தொலைக்காட்சிகளின் வருட வருமானம் பல கோடி. எல்லா தொழிலிலும் தங்கள் குடும்பமே வர வேண்டும் என்று கருணாநிதியும் அவருடைய பேரன்களும் நினைக்கிறார்கள். தமிழின் பேராலும், தமிழ் இனத்தின் பேராலும், தமிழ்நாட்டின் நெடுங்காலமாக நடந்து வருகிற ஒரே குடும்பத்தின் கொள்ளையை நல்ல தமிழனாக, தமிழறிஞனாக, நான் எதிர்க்க வேண்டும் என்று முழுமையாக முடிவு எடுத்திருப்பதால் கருணாநிதியை களத்தில் சந்திப்பேன்." தனது தி.மு.க. கூட்டணி எதிர்ப்புப் பிரசாரத்தின் முன்னோட்டம் போல பேசி முடித்தார் நெல்லை கண்ணன்.

_ திருவேங்கிமலை சரவணன்
படம்: ஆர். சண்முகம்

http://www.kumudam.com/kumudam/mainpage.php
"
"
Reply
#2
எலெக்சன் டைமில...

போயஸ் தோட்டம் வாசலில் கேட்டுக்கு வெளியே விஜய டி.ராஜேந்தரும் திண்டிவனம் ராமமூர்த்தியும் அமர்ந்திருக்கின்றனர்.சட்டென்று கேட் திறக்கப்படும் சத்தம் கேட்கிறது. வாயெல்லாம் பல்லாக <b>நெல்லை கண்ணன்</b> கையில் ஒரு பெரிய சூட்கேசுடன் வெளியே வருகிறார்.

திண்டிவனம்: யோவ், அட்ரஸே இல்லாம இருந்த நீ இன்னைக்கு அம்மாவுக்கு நெருக்கமா ஆயிட்ட..நல்ல வெயிட்டா வசூலும் உண்டு போலிருக்கு.எப்படிய்யா?

நெல்லை: (மேலே பார்த்தப்படி) கான மூப்பனாராட கண்டிருந்த திண்டிவனம் தானும் அதுவாக பாவித்து தன் பொல்லாச்.....

திண்டி<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->ஜெர்க்காகிறார்)யோவ் நீ பெரிய தமிழ் பருப்புன்னு எனக்கும் தெரியும்..இப்ப என்னய்யா பண்றது? அத சொல்லு..

நெல்லை: சரி விடுங்க...அது யாரு அங்க ஓரமா படுத்திருக்கறது?

திண்டி: அது நம்ம விஜய டி.ராஜேந்தர்தான்.ஏங்க இங்க எந்திரிச்சி வாங்க...(ராஜேந்தரை கூப்பிடுகிறார்)

நெல்லை: என்ன ராஜேந்தர் இப்படி பாதியா இளைச்சீட்டிங்க...மூஞ்சில முடி மட்டும்தான் இருக்கு....

திண்டி: (முணுமுணுக்கிறார்) எப்பவும் அப்படித்தான் இருக்கு...

ராஜேந்தர்: டாய், நான் எம்.ஜி.ஆரையே எதிர்த்து அரசியல் செஞ்சவன்..(தொடர்ந்து ஏதேதோ பேசி வூடு கட்டுகிறார்)

நெல்லை: இதுக்குத்தான் உனக்கு ஆப்பு அடிச்சது..ஏன்யா நீ அடங்கவே மாட்டியா?ஏம்பா திண்டிவனம்..சிம்புக்கு போன் போட்டு இவரை கூட்டிக்கிட்டு போக சொல்லுப்பா..

அப்போது அந்த பக்கமாக ஒருவர் முகத்தில் துண்டு போர்த்தி பதுங்கி பதுங்கி வருகிறார்.பாய்ந்து அமுக்கிறார்கள் மூவரும்.துண்டை விலக்கி பார்த்தால் நடிகர் கார்த்திக்.

கார்த்திக்: ஊய், ஏய்.கையை எடு..

ராஜேந்தர்: என்னய்யா துண்டு போர்த்திகிட்டு...

கார்த்திக்: என்னால் என் தொண்டர்கள் உதவியுடன் தனித்து ஆட்சியமைக்க முடியும் ஆனால் பாவம் ஜெயலலிதாவுக்கு துணை முதல்வர் பதிவியாவது தரலாம் என்றுதான் பார்க்க வந்தேன்...

திண்டிவனம் துண்டினால் வாயை பொத்தியவாறு சிரிக்கிறார்.திடீரென்று அங்கு ஒரு கூட்டம் கூச்சல் இட்டவாறு நுழைகிறது.சட்டை போட்டவன்,டவுசர் போட்டவன், டவுசரே போடாதவன், தலை சீவாதவன்,குளிச்சு பல நாள் ஆனவன் என்று பலரும் அடங்கிய குழு.

திண்டி: யாருய்யா இவங்க...

கார்த்திக்: இவங்கள்ளாம் அந்த ஆளோட ரசிகனுங்களாம்..இங்க வந்தா ஏதாவது கிடைக்கும்..அங்க போஸ்டர் ஒட்டுனது, பால் அபிஷேகம் பண்ணுனதுல கொஞ்சம் காசையாவது திரும்ப எடுக்கலாம்னு வந்திருக்காங்க...

நன்றி - முத்துவின்தமிழ்.கொம்
!




-
Reply
#3
மு. க இவ்வுலகிலிருந்து விடை பெறும் வரை அந்தக் கதிரையை யாருக்கும் விட்டுக் கொடுக்கமாட்டாரையா
<b><span style='color:blue'> .
[size=15]


.</span></b>
Reply
#4
<b>எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும் தம்பியுடையான்</b>

ஜெயலலிதா எம.ஜி.ஆர் மறைவின் பின் முதன் முதலாக சட்டமன்ற தேர்தலில் கட்டுப்பணம் கட்ட வழியில்லாமல் தனது வீட்டிலுள்ள பாத்திரம் பண்டங்களை விற்று கட்டுப்பணம் கட்டியதாக குமுதம் பத்திரிகையில் பேட்டி கொடுத்தார். அதன் பின் முதலமைச்சர் ஆன பின் அடையாளத்திற்காக 1 ரூபாய் மட்டுமே சம்பளம் பெறுவதாக அறிவித்தார். தன் வளர்ப்புமகன் திருமணத்தை 100 கோடிக்கு மேல் செலவளித்து செய்ததோடு வெறும் வீடியோக் கடை வைத்த சசிகலாவுடன் 300 பவுணுக்கு மேல்(இருவரும்) நகையணிந்து தேவாரம் பாதுகாப்பில் சப்பறம் போல் பவனி வந்தார். இன்று சசிகலா உட்பட அவர் குடும்பத்தை சேர்ந்த அத்தனை உறுப்பினர்களும் பல்லாயிரம் கோடிகளுக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அதிபதியாகவுள்ளனர். டாஸ்மார்க் குடிபானத்தொழிற்சாலையின் உரிமையாளர் மர்மம்?? இது மக்கள் கூட்டணியால் சாத்தியமானதா??

இன்று கலைஞர் கருணாநிதியைப் பார்த்துக் கேட்கும் கேள்விகளை இவர்களால் ஜெயலலிதாவைப் பார்த்துக் கேட்கமுடியுமா?? எனிக் கூட்டணி ஆட்சிதான் என்று கூக்குரல் இட்டவர்கள் எல்லாம் ஜெயலலிதா பக்கம் போனதும் கூட்டணி கூச்சலை நிறுத்தி மௌனமானது ஏனோ?? கஞ்சாக்கேசில் உள்ளே போக வேண்டிவரும் என்ற பயமா??
<i><b> </b>


</i>
Reply
#5
<b>எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும் தம்பியுடையான்</b>

அண்மையில் தமிழ்நாடு சென்றிருந்த சமயம், மு.க ஸ்ராலினின் புதிய வீட்டை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. மலைத்துப் போய் விட்டேன். அது வீடல்ல, மாளிகை!!! அது குறித்து சிலரிடம் விசாரித்த போது தமிழ்நாட்டில் இன்றிருக்கும் செல்வந்தர்களில் முக்கியமானவர்கள் கருணாநிதி குடும்பம் என்றார்கள்! ஒரு சில படங்களுக்கு கதை வசனங்கள் எழுதியும், சில காலம் முதலமைச்சராக இருந்தவருக்கு இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது??? கருணாநிதி மட்டுமல்ல அவர் சார்ந்த குடும்பங்கலான எல்லாவற்றிற்கும் எங்கிருந்து வந்தது??? 70 இறுதிப் பகுதி என்று நினைக்கிறேன், குமுதம் பத்திரிகை, அன்றைய தேர்தல் காலத்தை ஒட்டிய சிறப்பு இதழ் வெளிவந்திருந்தது, அதில் "ஊழலின் மறுபெயர் கருணாநிதி" என ஆசிரியர் தலைப்பு இட்டிருந்து. அதுமட்டுமல்ல அத்தேர்தலில் பெருந்தலைவன் எம்.ஜி.ஆர் பெருவெற்றியும் பெற்றிருந்தார்.

கருணாநிதி, முரசொலிமாறன், மு.க.ஸ்ராலின், மு.க அழகிரி, தயாநிதிமாறன், கனிமொழி, .... இவைகள் என்ன தமிழ்நாட்டு மக்களுக்கான அரசியல் வாதிகளா? இல்லை, குடும்பத்திற்கான அரசியல்வாதிகளா??? கருணாநிதியை விட மூத்த அரசியல்வாதிகளான அன்பழகன் போன்றோர் இருக்கும்போது ஸ்ராலினுக்கு முடிசூடலாம்! முன் அரசியல் அனுபவமற்ற முரசொலிமாரனுக்கு, இந்தியாவின் ஊடகங்களையே கட்டுப்படுத்தும் அமைச்சர் பதவி!! கருணாநிதியின் அடுத்தடுத்த அரசியல்வாரிசுகளும் அரசியலுக்கு மன்னிக்கவும் தி.மு.கவிற்கு பிரவேசிக்க ரெடியாம்!! உதென்ன குடும்ப பிஸ்னஸா?? அல்லது குடும்பத்திற்கான அரசியலா??? மதுரையில் தி.மு.க பிரமுகர், கருணாநிதியின் வாரிசு மு.க அழகிரியினால் படுகொலை! ஆனால் ஜெயலலிதாவின் வழக்குகள் பெங்களூரில் விசாரிக்கப்படுமாம்!! கருணாநிதியின் குடும்ப வாரிசுகளை இப்ப ஒன்றும் செய்ய முடியாதாம்!! தமிழ்நாட்டு கேபிள் ரி.வி விநியோகஸ்தோகர்களை அரசுடைமையாக்கியதற்கு, கருணாநிதியின் குடும்பம் கவர்னர் மாளிகையை நோக்கி ஊர்வலமாம்!! உதென்ன தமிழ்நாட்டை முக்கியமாக பாதித்த காவிரிப் பிரட்சனையா??? அல்லது இன்று தமிழ்நாட்டில் இருக்கும் ஊடகங்களில் பெரும்பாலானவைகளை(சன் ரிவி, தினகரன், சூரியன் எப்.எம், குங்குமம், ...இன்னும் பினாமிகளின் பெயர்களில் பலபல) குடும்பத்தின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் கருணாநிதியின் குடும்பத்திற்கான பிரட்சனையா????

பா.ஜ.கவுடன் கூட்டுச் சேர்ந்து கருணாநிதி ஆட்சியில் இருந்தபோது ஆயிரம் கேள்விகளை காங்கரஸை நோக்கி விட்டார். இவைகளை இன்று கேட்க முடியுமா??? அல்லது கேள்விகளுக்கான பதில்களை அமைச்சர் வடிவத்தில் மத்தியில் கருணாநிதியின் குடும்பத்தின் வாரிசொன்று பெற்று விட்டாரா????

தி.மு.கவின் தேர்தல் அறிக்கை: இலவச கலர் ரி.வி. இரண்டு ரூபாயுக்கு அரிசி!! ஒன்றை கருணாநிதி கூற மறந்து விட்டாரா?? சந்திரனிலிருந்து அரிசி கொண்டு வருவேன் என்பதை!!!! என்ன நடக்கிறது!! தமிழ்நாட்டு மக்களை கருணாநிதியின் குடும்பம் இளித்த வாயர்கள் என்று நினைத்து விட்டார்களா???? ஒரு வேளை இலவச ரி.வி கொடுப்பதும் குடும்ப பிஸ்னஸிற்காகத்தானிருக்கும்!!

இன்று தமிழ்நாட்டில் மொத்தத்தில் மக்களுக்கான கூட்டணியொன்று! குடும்பத்திற்கான கூட்டணியொன்று!!
Reply
#6
மொத்ததில் தமிழன் (மக்கள்) கொள்ளையடிக்கப்படுகின்றான் என்பது மட்டும் வடிவாக விளங்குது. கொள்ளையடிச்ச பணங்களை எல்லாம் கொண்டுபோய் கூவத்திலாவது போட்டால் கூவமாவது நாறாது நறுமணம் வீசும். தமிழ்நாட்டு உற்வுகளை நினத்து வேதனைப்படுவதைத் தவிர வேறு என்ன நம்மால் செய்ய முடியும். Cry Cry Cry Cry
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
#7
வணக்கம் வம்பன்ணா நீண்ட................................நாடக்களுக்கு பிறகு கான்பதில் மகிழ்ச்சி <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> இனி களத்தில ஒரே சிரிப்பா இருக்கும்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply
#8
ஜயோ பாவம் நெல்லை கண்ணன் புலம்பிறத தவிர வேற என்ன செய்ய முடியும்...காங்கிரசுலையும் இப்ப மதிப்பில கருணாநிய பற்றி பேசினாலாவது அம்மா கண் திறந்து சீட்டு குடுப்பானு பாத்தார் அம்மா கருநாதிய பத்தி பேச சொல்லிட்டா இவர் இருந்த காங்கிரஸ்ல மூப்பனார் வாசன பற்றி பேசமாட்டார் அது வாரிசு அரசியல் இல்ல இவரோட கட்சித்தலைவி சோனியாவ கூட ஜெயலலிதா எப்படியோ எல்லாம் விமர்சித்து இருக்கிறா அங்க பொய் இருந்து கொண்டு தானே இவர் கருநாணிதி எதிர்பு அரசியல நடத்துறார்
தனிய நின்டு இல்ல வாழப்பாடியாரோட போய் சேர்ந்து கொண்டு நட்தலாமே...
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply
#9
முதன் முதலாக கருணாநிதி எப்படி முதலமைச்சராக வந்தார் என்பதை இங்குள்ள திமுக தூண் என்று சொல்ல கூடிய ஒருவர் பின் வருமாறு கூறினார்.தேர்தலில் திமுக வென்றவுடன் எல்லாவிதத்திலும் முதன்மையில் இருந்த நெடுஞ்செளியன் தான் முதலமைச்சர் என்று ஓட்டு மொத்த தமிழகமே பார்த்துக் கொண்டிருந்த நேரம் உள்ளே போனவர்கள் வெளியே வரும் போது கருணாநிதி முதலமைச்சராக வருகிறார்.தமிழகம் முழுவதுமே கொஞச நாளாக கொதித்து போயிருந்தது.நாளடைவில் எல்லோரும் மறந்து விட்டார்கள்.அதே மாதிரி தான் இம்முறை தேர்தலில் திமுக வென்றால் ஸ்ராலின் உடனேயே முதலமைச்சர் ஆகாவிட்டாலும் கொஞ்ச நாளாளில் எந்த வித தகுதியும் இல்லாத ஸ்ராலின் முதலமைச்சர் ஆவார்.கொஞ்ச நாளுக்கு ஆளாளுக்கு ஆஊ என்று கத்துவார்கள்.அப்புறம் எல்லாமே அடங்கிவிடும் என்றார்.
TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS
Reply
#10
<!--QuoteBegin-SUNDHAL+-->QUOTE(SUNDHAL)<!--QuoteEBegin-->ஜயோ பாவம் நெல்லை கண்ணன் புலம்பிறத தவிர வேற என்ன செய்ய முடியும்...காங்கிரசுலையும் இப்ப மதிப்பில கருணாநிய பற்றி பேசினாலாவது அம்மா கண் திறந்து சீட்டு குடுப்பானு பாத்தார் அம்மா கருநாதிய பத்தி பேச சொல்லிட்டா இவர் இருந்த காங்கிரஸ்ல மூப்பனார் வாசன பற்றி பேசமாட்டார் அது வாரிசு அரசியல் இல்ல இவரோட கட்சித்தலைவி சோனியாவ கூட ஜெயலலிதா எப்படியோ எல்லாம் விமர்சித்து இருக்கிறா அங்க பொய் இருந்து கொண்டு தானே இவர் கருநாணிதி எதிர்பு அரசியல நடத்துறார்
தனிய நின்டு இல்ல வாழப்பாடியாரோட போய் சேர்ந்து கொண்டு நட்தலாமே...<!--QuoteEnd--><!--QuoteEEnd--> என்ன சுண்டல்....வாழப்பாடியார்.....வாழப்பாடி ராமமூர்த்தியா...ஈஸ்டர் நேரம் பார்த்து மீண்டும் உயிர்த்தெழுந்த்திட்டாரோ...
Reply
#11
<b>ஈழப்பிரியன் எழுதியது:</b>
முதன் முதலாக கருணாநிதி எப்படி முதலமைச்சராக வந்தார் என்பதை இங்குள்ள திமுக தூண் என்று சொல்ல கூடிய ஒருவர் பின் வருமாறு கூறினார்.தேர்தலில் திமுக வென்றவுடன் எல்லாவிதத்திலும் முதன்மையில் இருந்த நெடுஞ்செளியன் தான் முதலமைச்சர் என்று ஓட்டு மொத்த தமிழகமே பார்த்துக் கொண்டிருந்த நேரம் உள்ளே போனவர்கள் வெளியே வரும் போது கருணாநிதி முதலமைச்சராக வருகிறார்.தமிழகம் முழுவதுமே கொஞச நாளாக கொதித்து போயிருந்தது.நாளடைவில் எல்லோரும் மறந்து விட்டார்கள்.அதே மாதிரி தான் இம்முறை தேர்தலில் திமுக வென்றால் ஸ்ராலின் உடனேயே முதலமைச்சர் ஆகாவிட்டாலும் கொஞ்ச நாளாளில் எந்த வித தகுதியும் இல்லாத ஸ்ராலின் முதலமைச்சர் ஆவார்.கொஞ்ச நாளுக்கு ஆளாளுக்கு ஆஊ என்று கத்துவார்கள்.அப்புறம் எல்லாமே அடங்கிவிடும் என்றார்.


<b>ஈழப்பிரியன்</b>

நெடுஞ்செழியனுக்கு எல்லாவிதத் தகுதிகளும் என்று நீங்கள் எதைக் குறிப்பிடுகின்றீர்கள். அண்ணாவின் மறைவின் பின் பலவிதமான எதிர்பார்ப்புக்கள் இருந்தன தான் ஆனால் பொதுக்குழுவில் பலர் கருணாநிதி முதல்வராக வருவதையே விரும்பினார்கள். அதன்படி அவரும் பொதுக்குழுவால் தெரிவு செய்யப்பட்டார். இதை தவறாக சித்தரிக்க முனைவோர் அதன் பின் எம்.ஜி.ஆர் ஆட்சியிலோ அல்லது ஜெயலலிதா ஆட்சியிலோ நெடுஞ்செழியன் முதல்வர் ஆக்கப் படவில்லையே?? ஏன் ஜெயலலிதா கூட எந்தத் தகுதியின் அடிப்படையில் முதல்வர் ஆனார் என்பது தெரியாதா??

<b>சின்னக்குட்டி</b>

சுண்டல் திண்டிவனத்தாரைத்தான் வாழைப்பாடி என தவறாக குறிப்பிட்டுவிட்டார். திண்டிவனத்தார் தான் போகவே வழி தெரியாமல் தவிக்கும்போது நெல்லைக் கண்ணனுக்கு என்ன செய்வது?? இந்த இலட்சனத்தில் அவர் தான் தான் தமிழ்நாட்டின் உண்மையான காங்கிரஸ் காரனாம் காங்கிரஸ் தொண்டர் எல்லாம் தன் பின்னால்த்தான் என்று அறிக்கை வேறு.
<i><b> </b>


</i>
Reply
#12
வாழப்பாடி செத்திட்டானா? அட உயிரோட இருக்கும்போது என்ன அழிச்சாட்டியம் பண்ணினான், அது சரி நல்லவன் செத்தாத்தானே நாலுபேருக்கு தெரியும்.
.

.
Reply
#13
ஆமாம் மன்னிக்கவும்..நான் தின்டிவன்த்தார தான்சொல்லவந்தன்..தவருக்க வருந்துகின்றேன்... Cry
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply
#14
þɢ ¿ñÀ÷¸§Ç ! þô§À¡¨¾Â §¾÷¾ø ¸Õ½¡¿¢¾¢ ¿øÄÅá ¦¸ð¼Åá ±ýÀ¾¾ü¸¡É §¾÷¾ø þø¨Ä , ӾĢø «¨¾ ¯½÷óÐ ¦¸¡ûÙí¸û.«ôÀʧ «Å÷ ¦¸ð¼ÅáɡÖõ «Ð ¾Á¢ú¿¡ðΠš측Ç÷¸Ç¢ý À¢Ã¨É.þÐ ÀüÈ¢ þíÌ ÀÄ Ó¨È Å¢Å¡¾¢òÐ «ÖòЧÀ¡ö ¾¡ý ¨Å§¸¡ ÌÈ¢ò§¾¡ ¸¨Ä»÷ ÌÈ¢ò§¾¡ ±Øõ Ţš¾ò¾¢ø Àí§¸ü¸Ü¼¡Ð ±ý¸¢È ÓÊÅ¢ø þÕó§¾ý. ±ý §À¡È¡¾ ¸¡Äõ þó¾ ¾¨ÄôÀ¢ø ´Õ þ¨½ô¨À þ¨½òÐ ¦¾¡¨ÄòРŢð§¼ý.

¿ñÀ÷¸§Ç ! ¸¨Ä»Ã¢ý ¦º¡òÐ ÌÈ¢òÐ þó¾¢Â ÅÕÁ¡ÉÅâòÐ¨È ¸Å¨Ä ¦¸¡ûÇðÎõ ¿¡õ ±¾üÌ Å£½¡ö «ÄðÊ즸¡ñÎ. «ôÀÊ ²Ðõ Å¡öôÀ¢Õ󾡸 ¸¼ó¾ «öó¾¡ñ¼¡ö ¯í¸û <b>Ò¾¢Â Àáºì¾¢ </b>À¡÷òÐ즸¡ñÎ þÕó¾¢Õì¸Á¡ð¼¡÷, ¦º¡òÐìÌÅ¢ôÒ ÅÆìÌ þý§ÉÃõ «Å÷ Á£Ð À¡öó¾¢Õ측¾¡ ? <b>¨Å§¸¡ Á£Ð À¡öó¾ ¦À¡¼¡ §À¡ø !</b> 70 À¾¢ý þÚ¾¢ôÀ̾¢Â¢ø ÌÓ¾õ ±Ø¾¢ÂÐ ¯ñ¨Á¾¡ý ¬É¡ø «ó¾ §¾÷¾Ä¢ø ¸¨Ä»÷ ¦ÀÕ ¦ÅüÈ¢ ¦ÀüÈ¡÷ ±ýÀо¡ý ¯ñ¨Á.
¾¢Ó¸ Å¢ø ¸¨Ä»÷, Ó.¸.м¡Ä¢ý ¾Å¢Ã §ÅÚ Â¡Õõ Ó츢 ¦À¡ÚôÀ¢ø þø¨Ä, «ôÀʧ þÕó¾¡Öõ <b>«Ð ¾¢Ó¸ Å¢ý ¯ð¸ðº¢ôÀ¢Ã¨É «Ð ÌÈ¢òÐ ¸Å¨ÄôÀÎÅÐ ¾¢Ó¸ ¯ÚôÀ¢ÉÕ째 ¾Ì¾¢ ¯ûÇÐ. ¾Â¡¿¢¾¢ Á¡Èý Áì¸Ç¡ø §¾÷ó§¾Îì¸ôÀðÎ ¿¡¼¡ÙÁýÈ ¯ÚôÀ¢ÉḢ À¢ý «¨ÁîºÃ¡ÉÅ÷. Áì¸§Ç ²üÚ즸¡ñ¼ ´ÕŨà ÀüÈ¢ §ÁÖõ §ÁÖõ ÒÄõÀ¢ò¾¢Ã¢±¾¡ø «Ð ¬üÈ¡¨Á¾¡§É ´Æ¢Â §Å¦È¡ýÚÁ¢ø¨Ä.</b>

§ÁÖõ «Åâý þÄ¡¸¡ ¾À¡ø, ¦¾¡¨Äò¦¾¡¼÷Ò,ÁüÚõ ¸½¢½¢ ¬¸¢Â¨Å ÁðΧÁ, ¿£í¸û «ÅºÃ§¸¡Äò¾¢ø «ûÇ¢ò¦¾Ç¢ò¾¢ÕôÀЧÀ¡ø °¼¸í¸¨Ç ¸ðÎôÀÎòÐõ ШÈÂøÄ. ÁШâø ¾¢Ó¸ À¢ÃÓ¸¨Ã ¦¸¡ýȾ¡¸ ÌüÈðÎ ÁðΧÁ ¾¡ì¸ø ¦ºöÂôÀðÎ ÅÆìÌ ¿¼óÐ ÅÕ¸¢ÈÐ. <b>þó¾¢Â ¿£¾¢ÁýÈí¸Ç¢ø ÅÆíÌõ ¾£÷ôҸǢÖõ , ¾Á¢ú¿¡ðÎì¸¡Åø Ð¨È Á£Ðõ ¯í¸ÙìÌ ¾¢Ë¦ÃýÚ ¯ñ¼¡¸¢Â¢ÕìÌõ ¿õÀ¢ì¨¸¨¸ìÌ Å¡úòÐì¸û, «Å÷¸Ç¢ý Å¢º¡Ã¨É ӨȸÙõ «¾ý «ÊôÀ¨¼Â¢ø þÐÅ¨Ã ÅÆí¸ôÀð¼ «¨ÉòÐ ¾£÷ôÒ¸¨ÇÔõ ¿£í¸û ²üÚ즸¡ûÇ ¬Ôò¾Á¡¸ ¯ûÇ£÷¸Ç¡ ?</b>

¦ƒÂÄÄ¢¾¡Å¢ý ÅÆìÌ ¦Àí¸ÙÕìÌ Á¡üÈôÀð¼¾¢ý ¸¡Ã½õ «ó¾ ÅÆì¨¸ «Å÷ Á£Ð ¦¾¡ÎòÐûÇÅ÷¸û ¾Á¢ú¿¡ðÎì¸¡Åø ШÈ, ÅÆì¨¸ ºó¾¢ìÌõ ¦ƒÂÄÄ¢¾¡ ¾¡ý ¸¡Åø Ð¨È «¨Áîº÷ . þôÀÊ¢Õ쨸¢ø «ó¾ ÅÆìÌ ±ôÀÊ Ó¨ÈôÀÊ ¿¼ìÌõ ¬¸§Å¾¡ý Á¡üÈ째¡Ã¢É÷. ¦ƒÂÄÄ¢¾¡Å¢ý ÁÐÀ¡É ¦¾¡Æ¢ü¨Ä¢ø ÅÕÁ¡ÉÅâòÐ¨È §º¡¾¨É ¿¼ò¾¢Â¾¡ø ÅÆì¸õ §À¡ø §¸¡Àò¾¢ø ÌÕðÎôâ¨É Å¢ð¼ò¾¢ø À¡öó¾Ð §À¡ø ¯¼§É §¸À¢û ¦¾¡Æ¢ø «Ãͼ¨Á ±ýÚ «È¢Å¢ò¾¡÷. «¾üÌ ¸Õ½¡¿¢¾¢ ¬Ùɨà ºó¾¢ò¾¡ø ¾Å¦È¡ýÚõ þÕôÀ¾¡¸ ¦¾Ã¢ÂÅ¢ø¨Ä.¸¡§Åâ À¢Ã¨É¡ «Ð ±ýÚ §¸ðÎûÇ£÷¸û, þÐŨà ¾ý ¬Ôð¸¡Äò¾¢ø §À¡ÐÁ¡É «Ç× Áì¸Ù측¸ §À¡Ã¡Ê§Â ¯ûÇ¡÷, <b>¬É¡ø «Å÷ º¢Ä¨Ãô§À¡ø ±ó¾ò¦¾¡Æ¢üº¡¨ÄìÌ ±¾¢Ã¡öô§À¡Ã¡ÊÉ¡§Ã¡ «ó¾ ¦¾¡Æ¢üº¡¨Ä¢ý ´ö×Ţξ¢Â¢¦Ä§Â ¾í¸¢ ¦¾¡ñ¼÷¸¨Ç Óð¼¡Ç츢ÂÐ þø¨Ä. ¾ÉÐ ¸ðº¢Â¢ý Á¡Åð¼ ¦ºÂġǨà ¦¸¡ýÈ ÌüÈšǢ¢ý Å£ðÊø ¦¸¡¨Ä ¿¼ó¾ ´Õ Á¡¾ò¾¢§Ä§Â ´ýÈ¡ö «Á÷óÐ Á¾¢ÂÅ¢ÕóÐ ¯ñ¼¾¡¸ ±ÉìÌ ¿¢¨ÉÅ¢ø¨Ä.</b> «ùøǢý ÌÎõÀõ «ó¾ ¦¾¡Æ¢Ä¢ø þÕ츢ÈÐ ¾¡ý À¡÷ì¸¢È ¦¾¡Æ¢Ä¢ø ¾¡ý Ó¾ý¨Á¡¸ þÕì¸ Å¢ÕõÒÅÐ ´ýÚõ ÌüÈÁ¡¸ôÀ¼Å¢ø¨Ä. þÐ §À¡ýÈ ƒÉ¿¡Â¸ò¾ý¨Á¨Â «¨ÉòРŢ¼Âí¸Ç¢Öõ ÅÄ¢ÔÚòÐõ §¿÷¨Á þÕ츢Ⱦ¡ ¯í¸Ç¢¼õ ?

¦ƒÂÄÄ¢¾¡ Á¢¾¢ÅñÊ ÅÆí¸¢ÂÐ ºÃ¢¦ÂýÈ¡ø Åñ½ò¦¾¡¨Ä측ðº¢ô ¦ÀðÊ ÅÆíÌž¢ø ±ýÉ ¾ÅÚ ?

´Õ ¾Á¢ú¿¡ÎìÌÊÁ¸É¡ö Å¢ÕôÒ ¦ÅÚôÒ ¾¡ñÊôÀ¡÷ò¾¡ø ¸¨Ä»Ã¢ý ¬ðº¢¸û ¯ñ¨Á¢ø ¦À¡ü¸¡ÄÁ¡öò¾¡ý þÕó¾¢Õ츢ÈÐ. ¦Àñ¸ÙìÌ ¦º¡ò¾¢ø ºÁ ¯Ã¢¨Á ÅÆí¸¢ÂÐ ¦¾¡¼í¸¢ ´Õ ¦ÀñÏìÌ À¢ÈôÀ¢üÌõ, ¸øÅ¢ìÌõ,¾¢ÕÁ½ò¾¢üÌõ,Á¸ô§ÀÈ¢üÌõ, «Åû Å¢¾¨Å¡ɡø «¾üÌõ, «ùÅ¢¾¨ÅìÌ ¦ÀñÌÆó¨¾ þÕ󾡸 «¾üÌõ ±É ´Õ ¾¸ôÀÉ¢ý þ¼ò¾¢Ä¢ÕóÐ ¬¸ ÜÊ ±øÄ¡ì¸¼¨Á¸¨ÇÔõ ºð¼Á¡ì¸¢ÂÅ÷ ¸¨Ä»÷. þ¾ý ÀÂý «¨ÉÅÕõ «ÛÀÅ¢òÐ ÅÕ¸¢ÈÉ÷.

À¢§ƒÀ¢ ìÌ ¬¾Ã¢òÐ §Àº¢Â¨¾ô ÀüÈ¢ ÌÈ¢ôÀ¢ðÎûÇ£÷¸û, «ôÀÊ §ÀÍž¢ø Ó¨ÉÅ÷ Àð¼õ ¦ÀüÈÅ÷ ´ÕÅ÷ ¯ñÎ «Å÷ ¦ÀÂ÷ ¨Å§¸¡ ! <b>À¢§ƒÀ¢ ¨Â ¬¾Ã¢òР̃áò ÀΦ¸¡¨Ä¸¨Ç ¿¢Â¡ÂôÀÎò¾¢ «Å÷ À¡Ã¡ÙÁýÈò¾¢ø §Àº¢Â §À ¨Å§¸¡ ±ýÈ ÁÉ¢¾É¢ý ¸¨¼º¢ô§ÀîÍ ±ýÚ ÌÈ¢ôÀ¢¼¡Ä¡õ, «Åâý ¦ƒÉ¢Å¡ §ÀîÍ §¸ðÎ §¸ðÎ «¸Á¸¢úó¾Åý , ¿¡¾¢ÂüÈÅÉ¡ ¾Á¢Æý ±ýÚ «õÁýÈò¾¢ý Óý «Å÷ ±ØôÀ¢ÂÌÃø, «ó¾ÓÆì¸õ, ±ƒÁ¡É Å¢ÍÅ¡ºÁ¡ö þó¾¢Â¡Å¢ø ¿¼ó¾ ´Õ þÉôÀΦ¸¡¨Ä¢¨É ¬¾Ã¢ò¾ §À¡Ð ÁØí¸¢ô§À¡ÉÐ. </b>

¯ý ¿ñÀ¨É¡ø ¯ý¨É¡ø¸¢§Èý ±ýÀ¡÷¸û ! ±ý þɢ ¯È׸§Ç, ¨Å§¸¡ ¾Å¢÷òÐ ´Õ Ó¨È ¯í¸Ç¢ý Ò¾¢Â ¿ñÀ÷¸Ç¢ý Óó¨¾Â ÅÃġڸ¨Ç ÒÃðÊôÀ¡Õí¸û, ¦ƒÂÄÄ¢¾¡, ¦¿ø¨Äì¸ñ½ý, áÁã÷ò¾¢ ±É ¿£Ùõ «ó¾ Å⨺ ¯í¸Ù¼ý §¾¡§Ç¡Î §¾¡û ¦¸¡Îì¸ò¾Âí¸¡¾Å÷¸Ç¡ ? «øÄÐ ¦¾¡ø¨Ä ¦¸¡Îì¸ò¾Âí¸¡¾Å÷¸Ç¡ ±ýÚ.´ÕÅ÷ Á£¾¢ÕìÌõ «ýÒ ±ó¿¡Ùõ ¿õ ¸ñ¨½ Á¨È츢ýÈ «Ç× þÕì¸ìܼ¡Ð «Ð ¿ÁìÌõ ¿ý¨Á¢ø¨Ä,¡÷ Á£Ð «ýÒ ¨Åò¾¢Õ츢§È¡§Á¡ «Å÷¸ÙìÌõ ¿ý¨Á ÀÂ측Ð. ¸¨Ä»¨Ã ¿¢Â¡ÂôÀÎòÐõ ÓÂüº¢Â¡¸ ¾ÂצºöР¡Õõ ±ñ½ §Åñ¼¡õ ±ÉìÌõ ¸¨Ä»÷ Á£Ð Å¢Á÷ºÉí¸û ¯ñÎ, «¨¾Ôõ ¾¡ñÊ ±ý ¿¡ðοÄý , ±õÁì¸Ç¢ý ¿Äõ ¬¸¢Â¨Å¢ý «ÊôÀ¨¼Â¢§Ä§Â ¿¡ý þó¾ §¾÷¾¨ÄôÀ¡÷츢§Èý. ¯í¸ÙìÌ ¸Õ½¡¿¢¾¢ Á£Ð ¯ûÇ §¸¡Àõ «øÄÐ ¯ñ¼¡ì¸ôÀð¼ §¸¡Àõ ±ý Å¢Çì¸ò¾¢ý ãÄõ ¾£Ã¡Ð ±ýÚõ «È¢§Åý. ¬É¡ø «ó¾ §¸¡Àò¾¢ý ¸¡Ã½Á¡ö ¦ƒÂÄÄ¢¾¡Å¢ý Üð¼½¢ Áì¸û Üð¼½¢ ±ýÚ ¿£í¸û ÒǸ¡í¸¢¾õ «¨¼Å¾¢ø ¿¢Â¡ÂÁ¢ø¨Ä. ²¦ÉÉ¢ø ±Ð Áì¸û Üð¼½¢ ±ýÀÐ ¾Á¢ú¿¡ðÎ Áì¸û ¾£÷Á¡É¢ìÌõ Å¢¼Âõ <b>¨Å§¸¡ Å¢ý ú¢¸÷¸û «øÄ.</b>

¦ƒÂÄÄ¢¾¡ ¿õÀ¢ì¨¸ò Чá¸ò¾¢üÌõ ¾ý¨É À¢Ê측¾Å÷¸¨Ç ÀƢšíÌž¢Öõ ¦ÀÂ÷ §À¡ÉÅ÷. ´Õ Á¡¾ò¾¢üÌ Óý ¾ýÉ¡ø ÅÃŨÆì¸ôÀð¼ áÁã÷ò¾¢, Ê.ᧃó¾÷ §À¡ýÈÅ÷¸¨Ç§Â ¨Å§¸¡ ÅÕ¨¸ìÌ À¢ý ¨¸¸ØÅ¢ÂÅ÷. þý¨ÈìÌõ ¯í¸û ¾¨ÄŨà «Åý , þÅý ±ýÚ ²¸ źÉò¾¢ø «¨ÆìÌõ ¦¿ø¨Äì¸ñ½¨É ¾Á¢ú¿¡ðÊø ¡ÕìÌõ ¦¾Ã¢Â¡Ð «ÃÍò¦¾¡¨Ä측𺢠À¡÷ôÀÅ÷¸û ¾Å¢Ã. «Å÷ §Àðʨ þ¨½ìÌõ «ÇÅ¢üÌ ¾¡öò¾Á¢ÆÛ측×õ ¯Ä¸õ ÀÃó¾ ¾Á¢ÆÛ측×õ ±ýÉ ¦ºö¾¢¨Â ¦º¡øÄ¢Å¢ð¼¡÷ ±ýÚ ¦¾Ã¢ÂÅ¢ø¨Ä. ¾Á¢ú ¿¡ðÊø ¾Á¢úò§¾º¢Â¾¢üÌ ±¾¢Ã¡¸ ±Øõ ÌÃø¸Ç¢Öõ ¾Á¢úò§¾º¢Âò¾¢üÌ ¬¾ÃÅ¡ö ±Øõ ÌÃø¸Ç¢ý ÌÃøÅ¨Ç¨Â ¦¿Ã¢ìÌõ ¸Ãí¸ÙìÌ ¬¾ÃÅ¡ö ±Øõ ÌÃø¸Ç¢Öõ «Åâý ÌÃø Ó¾ý¨Á¡ÉÐ.þÐ ¯í¸Ç¢ø ±ò¾¨É ¦ÀÂÕìÌò¦¾Ã¢Ôõ.


§¾¡Æ÷¸§Ç ! ¯í¸ÙìÌò¦¾Ã¢ÔÁ¡ ? ¸¨Ä»Ã¢ý ´ù¦Å¡Õ ¬ðº¢¸Ç¢ý §À¡Ð¾¡ý ®Æò¾Á¢ÆÕìÌ ¬¾ÃÅ¡É ¿¢¸ú¸Ùõ , º¢í¸Ç «ÃÍìÌ ±¾¢Ã¡É §À¡Ã¡ð¼í¸Ùõ Á¢Ì¾¢Â¡¸ ¿¼óÐûÇ ÅÃÄ¡Ú. ¸¼ó¾ 5 ¬ñθǢø ®Æò¾Á¢ÆÕ측¸ þÃñ§¼ Á¡¿¡Î¸û ¾¡ý ¿¼óÐûÇÉ «Ð×õ ¬ðº¢ ÓÊÔõ ¾ÕÅ¡ö ±ý¸¢È ¸¡Ã½ò¾¢É¡ø¾¡ý . Ó¾ø Á¡¿¡Î ¬º¢Ã¢Â÷ Å£ÃÁ½¢ ¿¼ò¾¢ÂÐ, Áü§È¡ýÚ «ñ½ñ ¦¸¡Çòà÷ Á½¢ «Å÷¸Ç¡ø ¦ºýÈ Å¡Ãõ ¿¼ò¾ôÀð¼Ð. ±í¸ÙìÌò§¾¨Å ¾Á¢ÆÉ¢ý ¬ðº¢ . <b>±í¸Ç¢ý ¸¨¼º¢ ¨¸Â¢ÕôÒ ¸¨Ä»÷ Á¡ò¾¢Ã§Á</b> !
!




-
Reply
#15
.கருணாநிதி அவர்களின் குள்ளத்தனமான குடும்ப அரசியிலுக்கு அப்பால்..................லண்டனில் நிறுவனமொன்றின் பொறுப்பான பதவியிலிருக்கும் இளைஞன் ஒருவரை அண்மையில் சந்தித்தேன்......1988இல்..வடமராட்சி பகுதியில் இந்திய ராணுவம் அவரின் தாய் தந்தையரை கொன்ற பின் இந்தியா சென்று அகதி முகாமில் வாழ்ந்து கருணாநிதி அவர்கள் ஈழ தமிழருக்கு வழங்கிய கல்வி கோட்டாவில் படித்தபடியால் இன்றும் கருணாநிதி பற்றி கண்ணீர் மல்க நினைவு கூருகிறான்...........
Reply
#16
தம்பி உடையான் அண்ணா சொன்னது போல கருனாநிதி அவர்களால் கொண்டுவரப்பட்ட அருமையான ஒரு சட்டம் சொத்தில் பெண்களுக்கு சம உரிமை காலம் காலமாக சொத்துக்களை அனுபவித்து வந்த ஆண்வாரிசுகளிடம் இருந்து அந்த உரிமையை சமாக பகிரிந்து கொடுக்க சட்டம் கொண்டு வந்து அனைவரிடமும் சபாஷ் வாங்கி கொண்டவர் உண்மையிலையே அந்த திட்டத்தினால் பலன் அடைந்த பெண்கள் ஆயிரம் ஆயிரம்...
இதேநேரம் கருனாநிதி அவர்கள் உடைய சொத்தைப்பற்றி பேசுபவர்கள் பலர் அம்மாவுடைய செர்த்துக்களை பற்றி பேசுவது கிடயாது..
சிலர் சன் டி.வி யை பற்றி சொல்லுவார்கள்...உண்மையில அதனுடைய வளர்ச்சிக்குகாரணம் கலாநிதி மாறன் அவர்களுடைய உழைப்பும் நிர்வாக திறமையுமே காரனம்...பல திறமை வாய்த நிர்வாகிகளும் இளையர்களும் பணபுரிந்ததால் தான் சன் இந்த நிலமைக்கு வந்து பல்லாயிரக்கனக்கான கோடி சொத்துடைய ஒரு நிறுவனமாக வளர்ந்து இருக்குஃஃ...
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply
#17
<b>நன்றி தம்பியுடையான்</b>

உங்கள் பதிலை மிகத் தெளிவாகவே தந்துள்ளீர்கள். இது எத்தனை பேருக்கு புரியும். தமிழ்நாட்டு அரசியலைப் புரிந்து கொள்ளாமல் தம் மனம் போனபடி எழுதுபவர்கள் மாற மாட்டார்கள். கலைஞர் தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்திருந்தால் நிச்சயம் தழிழ்நாட்டுத் தமிழர்கள் தான் அதனைக் கேட்க வேண்டும். ஆனால் அவர் ஒருபோதும் ஈழத்தமிழர்களுக்கு துரோகம் நினைத்ததாக நான் சொல்ல மாட்டேன். அகதிகளாக வந்த ஈழத்தமிழர்களும் இந்தியத் தமிழர்கள் போல் கல்வி கற்க அவர் தான் வழி அமைத்தார். காசி ஆனந்தன் போன்றவர்களின் பிள்ளைகள் இன்று வைத்தியர்களாக இருப்பதற்கு அவர் தான் காரணம். ஆனால் ஜெயலலிதா ஆட்சியில் ஈழத்தமிழர்கள் பட்ட அவலங்கள் சொல்லி மாளாது.
<i><b> </b>


</i>
Reply
#18
சன் ரிவி கோடிக்கு மேலே கோடி குவிச்சிட்டிருக்கலாம்...சன் ரிவியால் திட்டமிட்டு உருவாக்கும் நுகர்வு கலாச்சாரத்தால் சாதரண நடுத்தர மக்களை சீரழிச்சு சுரண்டித்தான் உந்த கோடி....
Reply
#19
<b>சின்னக்குட்டி</b>
ஏன் சன் ரிவியில் மட்டும் பழியைப் போடுகின்றீர்கள். மற்றைய தொலைக்காட்சிகள் எல்லாம் ஏதோ சமூக சேவை செய்வதற்கா தொலைக்காட்சி நடத்துகின்றன. அதே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை வைத்துத் தானே நம்மவர் தொலைக்காட்சிகளும் பிழைப்பு நடத்துகின்றன. <b>அப்போ மட்டும் நம் கலாச்சாரங்கள் கொடிகட்டிப் பறக்கின்றனவா?????? </b>
<i><b> </b>


</i>
Reply
#20
சதாரன மக்கள சுரண்டிறதுன்னா எதுக்கு அவங்க அத பாக்கிறாங்க? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)