![]() |
|
வாழைச்சேனை சிவன்தீவு மக்கள் மீது கருணாகுழு, படையினர் கெடுபிட - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: வாழைச்சேனை சிவன்தீவு மக்கள் மீது கருணாகுழு, படையினர் கெடுபிட (/showthread.php?tid=312) |
வாழைச்சேனை சிவன்தீவு மக்கள் மீது கருணாகுழு, படையினர் கெடுபிட - SANKILIYAN - 04-08-2006 வாழைச்சேனை பிரதேசத்திலுள்ள சிவன்தீவில் இன்று அதிகாலை படையினர் மற்றும் கருணா குழுவினரும் இணைந்து சுற்றி வளைத்து பொது மக்கள் மீது கெடுபிடிகளை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அதிகாலை 3.00 மணியளவில் கருணா குழுவைச் சேர்ந்த பிள்ளையான் தலைமையிலான குழுவினர் நாசிவன் தீவு கிராமத்திற்குள் புகுந்து பொது மக்களை மிரட்டி கெடுபிடிகளை மேற்கொண்டுள்ளனர். கிராமத்தைச் சுற்றி படையினர் பாதுகாப்பாக நின்றுள்ளனர். அத்துடன் வாழைச்சேனை, பேத்தாளை - கல்குடா வீதியிலும், அதிகளவு படையினர் நிறுத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பிட்ட நபர் ஒருவரின் வீட்டுக்குச் சென்ற கருணா குழுவினர் அந்நபரை மிரட்டியதுடன், பொதுமக்கள் எந்த வகையிலும் அந்நபரிடம் தொடர்பு வைக்கக் கூடாது, தொடர்பு வைத்தால் உங்கள் தலையை வெட்டி வேலிக் கட்டையில் தொங்க விடப்போவதாக மிரட்டியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு அவ்விடம் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை சுற்றி வளைப்பு, கெடுபிடி பகல் வரை நடைபெற்றதாகவும் பொதுமக்கள் கெடுபிடிகளைக் கூற அஞ்சுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. |