| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 72 online users. » 0 Member(s) | 70 Guest(s) Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,311
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,231
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,604
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,296
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,636
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,062
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,465
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,485
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,037
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,239
|
|
|
| புளூட்டோ கிரகத்துக்கு புதிய விண்கலம்! |
|
Posted by: Rasikai - 12-19-2005, 03:58 PM - Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம்
- Replies (7)
|
 |
<b>புளூட்டோ கிரகத்துக்கு புதிய விண்கலம்: </b>
அமெரிக்காவின் நாசா நிறுவனம் அனுப்புகிறது
அமெரிக்காவின் நாகா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் புளூட்டோ' கிரகத்துக்கு ஒரு விண்கலத்தை அனுப்ப இருக்கிறது. நியு ஹரிசான்ஸ் என்ற இந்த விண்கலத்தை 65 கோடி டாலர் செலவில் உருவாக்கி உள்ளது. இந்த விண்கலம் புளூட்டோ கிரகத்தின் தோற்றம் அது உருவானது எப்படிப சூரியனை சுற்றி வரும் புளூட்டோ கிரகம் போன்ற வேறு சில கிரகங்கள் பற்றியும் ஆய்வு நடத்தும்.
இந்த நியுஹரிசான்ஸ்' விண்கலம் 454 கிலோ எடை உள்ளது. அட்லஸ்' ராக்கெட் டில் வைத்து இந்த விண்கலம் அனுப்பப்படும்.
இந்த விண்கலம் கேப் கணவரால் ராக்கெட் தளத் துக்கு கொண்டு வரப்பட்டு விட்டது. ராக்கெட்டிலும் அந்த விண்கலம் வைக்கப்பட்டு விட்டது. அடுத்த மாதம் இது ஏவப்படும்.
அமெரிக்கா இங்கிலாந்து ரஷியா உள்பட 16 நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச ஆய்வுக்கூடம் அமைத்து வருகிறது. இந்த விண்வெளி ஆய்வுக்கூடத் துக்கு அமெரிக்கா மீண்டும் அடுத்த ஆண்டு மே மாதம் புதிய ராக்கெட்டை அனுப்பும். இப்போது உள்ள டிஸ்கவரி ராக்கெட்டின் எரிபொருள் டாங்கியில் கோளாறு ஏற்பட்டுள்ளதால் புதிய எரி பொருள் டாங்கி அமைக்கப்பட்டு வருகிறது.
சர்வதேச விண்வெளி ஆய்வுக்கூடத்துக்கு 2010-ம் ஆண்டுக்குள் 18 தடவை நாசா' நிறுவனம் ராக்கெட்டுகளை அனுப்ப உள்ளது.
நன்றி http://www.vaddakkachchi.com/tech/index.ph...t_from=&ucat=2&
|
|
|
| இராணுவ வன்முறைக்கு எதிராக போர்ப் பயிற்சி |
|
Posted by: தூயவன் - 12-19-2005, 02:01 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (7)
|
 |
<b>இராணுவ வன்முறைக்கு எதிராக போர்ப் பயிற்சி- மாணவர்கள் எச்சரிக்கை! நாளை முதல் முழு அடைப்புக்கு அழைப்பு!!</b>
யாழ்ப்பாணத்தில் இன்று திங்கட்கிழமை துணைவேந்தர்இ நாடாளுமன்ற உறுப்பினர்இ பேராசிரியர்கள்இ மாணவர்கள் மீது சிறிலங்கா இராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் தாக்குதல் சம்பவங்களுக்கு யாழ்ப்பாண மாணவர் ஒன்றியம் கடும் கண்டனம் தெரிவித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.
இராணுவத் தாக்குதலுக்குப் பின்னர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மாணவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் யாழ். குடாநாட்டில் மாணவர்கள் மீதும் மக்கள் மீதும் சிறிலங்கா இராணுவம் கண்மூடித்தனமான தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்தத் தாக்குதல்களை இனியும் பொறுத்திருக்க நாம் தயாரில்லை. மக்களுக்கு முன்னோடியாக மாணவர்கள் கிளர்ந்தெழுந்து எமது விடுதலையை வென்றெடுக்க வேண்டும் என்ற ஆவேசத்துடன் அவர்கள் அனைவரும் போர்ப் பயிற்சி பெற வேண்டும் என்று மாணவர் அமைப்பு முடிவு செய்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா இராணுவம் மேற்கொண்டு வரும் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களைக் கண்டித்து நாளை செவ்வாய்க்கிழமை முதல் குடாநாடு தழுவிய முழு அடைப்புப் போராட்டம் நடத்தவும் யாழ். கல்விச் சமூகத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
தகவல்: புதினம்
|
|
|
| சகோதரி தர்சினிக்கு கண்ணீர் அஞ்சலி |
|
Posted by: selvanNL - 12-19-2005, 11:01 AM - Forum: துயர்பகிர்வு / நினைவுகூரல்
- Replies (17)
|
 |
அண்மையில் இலங்கை கடற்படையினரால் மிகக்கொடுராமாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு காட்டுமிராண்டித்தனமாக கொலை செய்யப்பட்ட சகோதரி, புங்குடுதீவு 7 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த இளையதம்பி தர்சினி (வயது 20) தர்மினிக்கு எங்களின் கண்ணீர் அஞ்சலிகள்,
<span style='font-size:25pt;line-height:100%'>இக்காட்டுமிராண்டி ஈனச்செயலினை வன்மையாக கண்டிப்பதோடு இதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படவேண்டும்.</span>
கிருசாந்தி, சாரதாம்பாள், ரஜினி, மேலும் பல நூற்றுக்கணக்கான பெண்களின் வரிசையில் மீண்டும் ஒரு இளம் பிஞ்சு,,,, இவ் கொடுரங்கள் என்னம் எத்தனை நாட்களுக்கு? :!:
ஒரு இராணுவம் அல்லது மற்றுக்கருத்தாளன் கொல்லப்படும் பொழுது பாய்ந்து அடித்து அறிக்கை விடும் அமெரிக்கா,அவுஸ்ரேலியா போன்ற நாடுகள் இவற்றை கண்டிக்காது மெளனம் காப்பது, இந்த விடயத்தை பற்றி ஒரு துளி கூட அலட்டிகொள்ளதா இலங்கை அரசாங்கத்தின் இவ் நடவடிக்கைகள், இலங்கை காட்டுமிராண்டி காம கடற்,காலாட் படைகளுக்கு உட்சாகத்தை அளிக்கும், இதற்கு தகுந்த பாடத்தை மக்கள், விடுதலைபுலிகள் கற்பிக்க வேண்டும் என்பதே புலம் பெயர் ஈழத்தமிழ(னி)ரின் அவா,,
இப்படியான சம்பவங்கள் சுயநிர்ணய போராட்டத்தை மேலும் ஆவோசத்துடன் கொண்டு செல்ல வழி வகுக்கும், வழி வகுக்க வேண்டும், எவன் தடுத்தாலும் எமக்கு ஒரு நாடு வேண்டு.
|
|
|
| மாணவர்களின் ஆர்ப்பாட்ட பேரணி மீது இராணுவத்தினர் தாக்குதல் |
|
Posted by: adsharan - 12-19-2005, 09:59 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (10)
|
 |
யாழ்ப்பாணத்தில் யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் சி.மோகனதாஸ் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் உள்ளிட்டோரை சிறிலங்கா இராணுவம் கடுமையாகத் தாக்கியுள்ளது. இராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பேராசிரியர் ஒருவரும் மாணவர் பீடத் தலைவரும் படுகாயமடைந்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் மாணவர்கள் மீதான இராணுவ நெருக்குவாரங்களைக் கண்டித்து போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவிடம் இன்று திங்கட்கிழமை யாழ். கல்வி சமூகத்தினர் மனு கொடுக்கத் திட்டமிட்டிருந்தனர்.
இன்று காலை 10.30 மணி அளவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலிருந்து போர் நிறுத்த கண்காணிப்புக் குழு அலுவலகம் நோக்கி யாழ். பல்கலைக்கழக கல்வி சமூகத்தினர் பேரணியாகச் சென்றனர்.
ஆனால் சிறிலங்கா இராணுவத்தினர் பரமேஸ்வரா சந்தி அருகே தடுத்து நிறுத்தி பேரணியாக செல்ல முயன்றோர் மீது காட்டுமிராண்டித்தனமாக துப்பாக்கிச் சூட்டையும் தாக்குதல்களையும் நடத்தியது.
இந்தத் துப்பாக்கிச் சூட்டில் யாழ். பல்கலைக்கழக பேராசிரியர் என். பேரின்பநாதன், மருத்துவ பீட மாணவர் தலைவர் டி. காண்டீபன் ஆகியோர் படுகாயமடைந்தனர்.
யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் சி.மோகனதாஸ், யாழ்ப்பாண நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன், கலைப்பீட பீடாதிபதி ஆர்.சிவச்சந்திரன் ஆகியோர் சிறிலங்கா இராணுவத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளனர்.
50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் யாழ். வைத்தியசாலையில் அனுமதிக்கப்ப்ட்டுள்ளனர்.
மேலும் தினக்குரல் ஊடகவியலாளர் டி. சபேஸ்வரன், தினகரன் ஊடகவியலாளர் வின்ட்சன் ஜெயன், நமது ஈழநாடு ஊடகவியலாளர் ஜி. ஜெராட் ஆகியோரையும் கடுமையாகத் தாக்கிய சிறிலங்கா இராணுவத்தினர் அவர்களது நிழற்பட கருவிகளையும் நொறுக்கியுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
சிறிலங்கா இராணுவத்தினரின் கண்மூடித்தனமான இந்தத் துப்பாக்கிச் சூடு மற்றும் தாக்குதல்களில் பாதிப்படைந்தோர் விவரம் அதிகரிக்கக் கூடும் என்று அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
http://www.newstamilnet.com/index.php?suba...t_from=&ucat=1&
|
|
|
| தாயகப்பாடலின் பல்லவியை கண்டுபிடியுங்கள் |
|
Posted by: RaMa - 12-19-2005, 02:25 AM - Forum: போட்டிகள்
- Replies (257)
|
 |
கள உறவுகளே.. தாயகப்பாடலுக்கு மட்டும் இப்பகுதியை பாவியுங்கள். சினிமா பாடல்களுக்குள் எமது தாயகப்பாடல்களை இனைப்பது நல்லதல்ல.
எங்கே இந்த பாடலை கண்டு பிடியுங்கள்.
பெத்த தாயை விற்று காசு பிழைக்கும் பேர் வழி
நீ போகும் போது எந்த நாளும் இல்லை நேர்வழி
|
|
|
| இந்திய வம்சாவழி தமிழர்கள் தொடர்பாக இந்திய அரசுக்கு எந்தவித அ |
|
Posted by: iruvizhi - 12-19-2005, 01:23 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (4)
|
 |
இந்திய வம்சாவழி தமிழர்கள் தொடர்பாக இந்திய அரசுக்கு எந்தவித அக்கறையும் கிடையாது - மனோ கணேசன்
இலங்கையினை தாய்நாடாக ஏற்றுக்கொண்டவாழும் இந்திய வம்சாவழித் தமிழர்கள் இந்தியாவை ஒரு தந்தையாகத் தான் நினைத்து வந்தார்கள்;. ஆனால் இந்திய வம்சாவழித் தமிழர்கள் தொடர்பில் இந்திய அரசுக்கு எந்தவிதமான அக்கறையும் கிடையாது இவ்வாறு மேல் மாகாண மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் குற்றம் சுமத்தியுள்ளார்.
கொழும்பு கொள்ளுப்பிட்டி ரொட்றி மண்டபத்தில் இந்திய வம்சாவழி மக்கள் இயக்க தொடக்க நிகழ்வில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஈழத்தமிழர்கள் தொடர்பில் மாத்திரம் அல்ல, இந்திய வம்சாவழித் தமிழர்கள் தொடர்பிலும் இந்திய அரசாங்கத்திற்கு எந்தவித அக்கறையம் கிடையாது என்பது மனம் வருந்தக்கூடிய நிதர்சனமான உண்மை.
தமிழர்களை கொன்று குவிக்கும் சிங்கள இராணுவத்தினருக்கு அதி உயர் பயிற்சிகள், ஆயுத தளபாட உதவிகள், தொழிநுட்ப உதவி, கூட்டு முப்படை உதவிகள், என்ற வரிசையில் இன்று பலாலி வானூர்தித்தள விரிவாக்கல் வரை இந்தியாவின் சிறீ லங்கா பேரினவாதத்திற்கு தாராள மயப்படுத்தப்பட்ட உதவிப்பட்டியல் நீண்டு வருகின்றது என்பதை துயரத்துடன் நாம் அவதானித்தக்கொண்டே வருகின்றோம் என அவர் அங்கு தனது உரையில் சுட்டிக்காட்டினார்.
http://www.sankathi.net/
|
|
|
| பசியின் ருசியென்ன? |
|
Posted by: Snegethy - 12-19-2005, 01:11 AM - Forum: நகைச்சுவை
- Replies (8)
|
 |
<span style='color:darkred'>பசியின் ருசியென்ன?
[size=18]முதன்முதலா நான் பசியை ருசித்தேன் அசந்து போனேனே முழுப்பானை சோறு பொங்கி நான் முழுங்கப் போறேனே.
நேற்று அம்மாவும் தங்கச்சியும் பிறந்தநாள் கொண்டாட்டம் ஒன்றுக்குப் போயிட்டனம் அதால நான் நேற்றிரவு சித்தப்பா வீட்டதான் வேலையால போகவேண்டியிருந்தது.பொதுவா நான் ஆற்றயும் வீட்ட போனால் கொஞசமாதான் சாப்பிடுறனான் அப்ப நேற்றும் அப்படித்தான் சித்தி சோறும் முருங்கைக்ககாய் கறியும் கொணர்ந்து தந்தா.கோப்பையில ஒரு சொட்டுச் சோறு எனக்கு நேற்றெண்டு பார்த்துப் பசியோ பசி.
நீ நிறைய சாப்பிடமாட்டாய்தானே அதான் அரிசி உனக்கெண்டு தனியாப் போடேல.நேற்றும் வீணா நிறைய சோறு கொட்டனது.இது காணும்தானே உனக்கு.
ஓமோம் காணும் சித்தி.
\"இங்க பாத்திங்களே நான் சொன்னான் எல்லோ இவளவை உடம்பு வைச்சிடும் எண்டு சும்மா கொறிக்கிறது எண்டு நான் சொல்ல நீங்கள் உது என்னத்துக்குக் காணும் எண்டிங்கள்\" சித்தி சித்தப்பாக்குச் சொல்லிக் கேட்குது.அப்பதான் நினைச்சன் பந்தா எல்லாம் பசிக்குச் சரிப்பட்டு வராது.</span>
-சினேகிதி-
|
|
|
|