Yarl Forum
பலியான 42 உயிர்கள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: துயர்பகிர்வு / நினைவுகூரல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=17)
+--- Thread: பலியான 42 உயிர்கள் (/showthread.php?tid=1948)



பலியான 42 உயிர்கள் - Luckylook - 12-19-2005

தமிழக ஓட்டு வங்கி அரசியலுக்கு பலியான 42 தமிழர்களுக்கு எமது கண்ணீர் அஞ்சலி... Cry Cry Cry


- Luckylook - 12-19-2005

சென்னை வெள்ள நிவாரண முகாம் நெரிசலில் சிக்கி 42 பேர் பலி
டிசம்பர் 18, 2005

சென்னை:

சென்னை எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் வெள்ள நிவாரணம் பெற வந்த பொதுமக்களிடையே பெரும் நெரிசல் ஏற்பட்டதில் 42 பேர் பரிதாபமாக இறந்தனர்.




சென்னை வியாசர்பாடி பகுதியில் கடந்த மாதம் வெள்ள நிவாரணம் பெற வந்த பொதுமக்களிடையே நெரிசல் ஏற்பட்டதில் 6 பேர் பரிதாபமாக இறந்தனர். இந்த துயரச் சம்பவம் இன்னும் சென்னை நகர மக்களின் மனதிலிருந்து அகலாத நிலையில் இன்னொரு துயரச் சம்பவம் நடந்துள்ளது.

சென்னை கிண்டிமாம்பலம் வட்டத்திற்குட்பட்ட எம்.ஜி.ஆர். நகரில் 3 ரேஷன் கடைகளுக்குட்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரணம் ஞாயிற்றுக்கிழமை காலை வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது.

இதையடுத்து நிவாரணம் வழங்கப்படவிருந்த மையத்தில் சனிக்கிழமை இரவே மக்கள் கூடத் தொடங்கினர். கிட்டத்தட்ட 5000க்கும் மேற்பட்டோர் அங்கு கூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வியாசர்பாடியைப் போல இங்கும் நடந்து விடக் கூடாது என்பதற்காக போலீஸார் பொதுமக்களை கலைந்து செல்லுமாறும், காலையில் தான் நிவாரணம் தருவார்கள் என்றும் கூறிய போது லேசான தடியடி நடத்திக் கலைத்த வண்ணம் இருந்தனர்.

ஆனாலும், போலீஸாரின் எச்சரிக்கையைப் பொருட்படுத்தாத மக்கள் தொடர்ந்து, கொட்டும் மழையில் விடிய விடிய நின்று கொண்டேயிருந்தனர். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணியளவில் மையத்தின் இரும்பு கேட் திறக்கப்படுவதாக செய்தி பரவியது. இதையடுத்து அனைவரும் ¬முண்டியடித்து உள்ளே சென்றனர்.

இதில் பெரும் நெரிசல் ஏற்பட்டு நூற்றுக்கணக்கானோர் கீழே விழுந்தனர். இதில் 42 பேர் பரிதாபமாக மிதிபட்டு இறந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்த அனைவரும் உடனடியாக அரசு மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். சம்பவம் நடந்த இடத்தில் எங்கு பார்த்தாலும் செருப்புகளாக காணப்படுகிறது.

கூட்ட நெரிசலில் சிக்கி 42 பேர் இறந்த தகவல் பரவியதும் கே.கே.நகர், எம்.ஜி.ஆர். உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் அங்கு கூடினர். தங்களது குடும்பத்தினர், உறவினர்கள் என்ன ஆனார்களோ என்று ஏராளமானோர் அழுது புலம்பியபடி அங்குமிங்கும் அலைந்தைதைப் பார்க்கையில் பரிதாபமாக இருந்தது.

போலீஸார் உரிய ¬முறையில் பாதுகாப்பு அளிக்காததே இதற்குக் காரணம் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால் கூட்டம் சேர வேண்டாம் என்று பல¬முறை எச்சரித்தும் அதை பொதுமக்கள் பொருட்படுத்தாமல் தொடர்ந்து நெரிசலை உருவாக்கிய வண்ணம் இருந்ததால் தான் இந்த துயரச் சம்பவம் நடந்து விட்டதாக போலீஸ் தரப்பு கூறுகிறது.


Re: பலியான 42 உயிர்கள் - தூயவன் - 12-19-2005

Luckylook Wrote:தமிழக ஓட்டு வங்கி அரசியலுக்கு பலியான 42 தமிழர்களுக்கு எமது கண்ணீர் அஞ்சலி... Cry Cry Cry

கண்ணீர் அஞ்சலிகள். இவர்களுடன் ஏலவே வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட மக்களுக்கும் கண்ணீர் அஞ்சலிக்ள்.


- RaMa - 12-19-2005

இதய அஞ்சலிகள். அவர்களுடைய ஆத்துமாக்க சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம்


- Luckylook - 12-19-2005

தமிழ் இனத்துக்கு நேரம் சரி இல்லையோ? ஏற்கனவே சுனாமி... இப்போது வெள்ளம்... அதற்குப் பின்பும் மரணங்கள்....


- MUGATHTHAR - 12-19-2005

யுத்தத்தால் சாகும் மக்கள் இயங்கை அனர்த்தங்களால் சாகும் மக்கள் என்ற வரிசையில் அரசாங்கத்தின் கவலையீனப்போக்கால் இந்த இறப்புகள் எந்தவகையில் பாத்தாலும் தமிழனின் எண்ணிக்கை குறைகிறது
இறந்த உறவுகளுக்கு கண்ணீர் அஞ்சலி.........


- Selvamuthu - 12-19-2005

மார்கழி மாதம் ஒரு மங்கலகரமான மாதம். உலகெங்கும் சமயரீதியான நத்தார் பண்டிகை, பிள்ளையார் கதை, இசைவிழா என்று இனிய நிகழ்வுகள் நிகழ்ந்துகொண்டிருக்கும் இந்தவேளையிலா இப்படியான துயர சம்பவங்கள் நிகழவேண்டும்? இதற்கு முகத்தார் அவர்கள் கூறியதைப்போல் அரசாங்கத்தின் கவலையீனமே காரணம்.

இறந்தவர்களுக்கு என் இதய அஞ்சலிகளையும், அவர்களின் குடும்பத்தவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.


- Rasikai - 12-19-2005

கண்ணீர் அஞ்சலிகள் அவர்கள் ஆத்மாசாந்தி அடையப் பிரார்த்திக்கிறேன்