Yarl Forum
மாணவர்களின் ஆர்ப்பாட்ட பேரணி மீது இராணுவத்தினர் தாக்குதல் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: மாணவர்களின் ஆர்ப்பாட்ட பேரணி மீது இராணுவத்தினர் தாக்குதல் (/showthread.php?tid=1947)

மாணவர்களின் ஆர்ப்பாட்ட பேரணி மீது இராணுவத்தினர் தாக்குதல் - adsharan - 12-19-2005

யாழ்ப்பாணத்தில் யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் சி.மோகனதாஸ் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் உள்ளிட்டோரை சிறிலங்கா இராணுவம் கடுமையாகத் தாக்கியுள்ளது. இராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பேராசிரியர் ஒருவரும் மாணவர் பீடத் தலைவரும் படுகாயமடைந்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் மாணவர்கள் மீதான இராணுவ நெருக்குவாரங்களைக் கண்டித்து போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவிடம் இன்று திங்கட்கிழமை யாழ். கல்வி சமூகத்தினர் மனு கொடுக்கத் திட்டமிட்டிருந்தனர்.
இன்று காலை 10.30 மணி அளவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலிருந்து போர் நிறுத்த கண்காணிப்புக் குழு அலுவலகம் நோக்கி யாழ். பல்கலைக்கழக கல்வி சமூகத்தினர் பேரணியாகச் சென்றனர்.
ஆனால் சிறிலங்கா இராணுவத்தினர் பரமேஸ்வரா சந்தி அருகே தடுத்து நிறுத்தி பேரணியாக செல்ல முயன்றோர் மீது காட்டுமிராண்டித்தனமாக துப்பாக்கிச் சூட்டையும் தாக்குதல்களையும் நடத்தியது.
இந்தத் துப்பாக்கிச் சூட்டில் யாழ். பல்கலைக்கழக பேராசிரியர் என். பேரின்பநாதன், மருத்துவ பீட மாணவர் தலைவர் டி. காண்டீபன் ஆகியோர் படுகாயமடைந்தனர்.
யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் சி.மோகனதாஸ், யாழ்ப்பாண நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன், கலைப்பீட பீடாதிபதி ஆர்.சிவச்சந்திரன் ஆகியோர் சிறிலங்கா இராணுவத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளனர்.

50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் யாழ். வைத்தியசாலையில் அனுமதிக்கப்ப்ட்டுள்ளனர்.

மேலும் தினக்குரல் ஊடகவியலாளர் டி. சபேஸ்வரன், தினகரன் ஊடகவியலாளர் வின்ட்சன் ஜெயன், நமது ஈழநாடு ஊடகவியலாளர் ஜி. ஜெராட் ஆகியோரையும் கடுமையாகத் தாக்கிய சிறிலங்கா இராணுவத்தினர் அவர்களது நிழற்பட கருவிகளையும் நொறுக்கியுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
சிறிலங்கா இராணுவத்தினரின் கண்மூடித்தனமான இந்தத் துப்பாக்கிச் சூடு மற்றும் தாக்குதல்களில் பாதிப்படைந்தோர் விவரம் அதிகரிக்கக் கூடும் என்று அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
http://www.newstamilnet.com/index.php?suba...t_from=&ucat=1&

- Sriramanan - 12-19-2005

இது தொடர்பான படங்களைப் பார்க்க கீழுள்ள இணைப்பில் அழுத்தவும்...

http://eelatamil.net/sankathi/index.php?op...d=830&Itemid=26

- adsharan - 12-19-2005

<img src='http://img393.imageshack.us/img393/1407/jalarpaddam19120519ch.th.jpg' border='0' alt='user posted image'><img src='http://img513.imageshack.us/img513/5493/jalarpaddam19120524mz.th.jpg' border='0' alt='user posted image'>http://www.newstamilnet.com/index.php?subaction=showfull&id=1134992404&archive=&start_from=&ucat=1&

- kuruvikal - 12-19-2005

<b>யாழ் பல்கலைக்கழக கல்விச் சமூகம் மீதான சிங்கள அரச பயங்கரவாதத்தின் தாக்குதலை அனைத்து மாணவ சமூகங்களும் வன்மையாகக் கண்டிக்க வேண்டும்..!

அரச பயங்கரவாத கொடூரங்களை சந்தித்து நிற்கும் மாணவ சமூகத்துக்கு அனைத்துத் தமிழ் மாணவர்களும் தமது தார்மீக ஆதரவை நல்க வேண்டும்...! அத்துடன் இவ்விக்கட்டான வேளையில் யாழ் பல்கலைக்கழக கல்விச் சமூகத்தின் முன் முயற்சிகளுக்கு அனைத்து மாணவ சமூகங்களும் தமது ஆதரவுகளையும் தெரியப்படுத்தி அவர்களுக்கு பலம் சேர்த்து நிற்கட்டும்..!</b>

- நர்மதா - 12-20-2005

- நர்மதா - 12-20-2005

தென்மராட்சியில் சிறீலங்கா இராணுவத்தினரால் 6 தமிழ் இளைஞர்கள் கடுமைகாயகத் தாக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை முற்பகல் வரணி படைத் தளத்திற்கு அருகாமையில் இந்த இளைஞர்களை வழி மறித்த சிறீலங்கா படையினர் கடுமையாக விசாரணை செய்த பின்னர் மிகவும் மூர்க்கத் தனமாகத் தாக்கியுள்ளார்கள்.

உந்துறுளி மற்றும் தலைக் கவசங்களில் வெடிபொருட்கள் வைத்திருப்பதாகக் குற்றம் சுமத்தி இராணுவதினரால் தாக்கப்பட்டதாக தாக்குதலுக்கு உள்ளாக பிரதீபன் என்ற இளைஞர் தெரிவித்துள்ளார்.

- adsharan - 12-20-2005

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்து சிறிலங்கா இராணுவத்தினர் இன்று செவ்வாய்க்கிழமை வானை நோக்கி துபாக்கியால் சுட்டும் கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசியும் மாணவர்களைக் கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.

பௌதீகத்துறை பீடாதிபதி மாணிக்கவாசகர் இளம்பிறையன் மற்றும் மாணவர் கௌரி செந்தூரன் ஆகியோரை இராணுவத்தினர் கைது செய்துள்ளனர்.

சிறிலங்கா இராணுவத்தினது அட்டூழியச் செயல்களுக்குக் கண்டனம் தெரிவித்து கல்லூரி முன்பாக போக்குவரத்தை தடை செய்து உள்ளனர். சம்பவ இடத்துக்கு கண்காணிப்புக்குழுவினர் சென்றுள்ளனர்.

1995 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதல் முறையாக யாழ். பல்கலைக் கழகத்துக்குள் சிறிலங்கா இராணுவம் உள்நுழைந்துள்ளமைக்கு பல்கலைக்கழக நிர்வாகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

கல்லூரியின் முன்பாக உள்ள இராமநாதன் வீதியில் காவல்துறையின் வாகனம் மீது முற்பகல் 11.30 மணியளில் அடையாளம் தெரியாத நபர்கள் கல்லெறிந்ததாக இராணுவத்தரப்பினர் கூறுகின்ற்னார்.

கைது செய்யப்பட்டுள்ள விரிவுரையாளர் இளம்பிறையன், வவுனியா மாவட்ட நீதிபதி எம்.இளஞ்செழியனின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி புதினம்

கைது செய்யப்பட்டுள்ள விரிவுரையாளர் இளம்பிறையன்இ வவுனியா மாவட்ட நீதிபதி எம்.இளஞ்செழியனின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

புதினம்

- MUGATHTHAR - 12-20-2005

<img src='http://www.nitharsanam.com/public/singhala/DEMO_Geneva_LTTE[1].jpg' border='0' alt='user posted image'>

nitharsanam

- sri - 12-20-2005

இன்று பிற்பகல்3.30 மணியளவில் யாழ்ப்பாணத்தில் வின்சர் தியேட்டர் சந்தியில் இராணுவத்தினரின் தாக்குதலால் பல முச்சங்கர வண்டிகள் சேதம் அடைந்தன. இருவர் காயமடைந்தார்கள். இதன் காரணமாக யாழ் நகரத்தில் உள்ள வர்த்தகநிலையங்கள் யாவும் முடப்பட்டு நகரம் வெறிச்சோடி காணப்படுகிறது.

- Thala - 12-20-2005

<b>யாழ். பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்து இராணுவம் இன்றும் துப்பாக்கிச் சூடு! விரிவுரையாளர், மாணவர் கைது!! </b>

புதினம்..