Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 183 online users.
» 0 Member(s) | 181 Guest(s)
Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,311
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,231
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,605
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,296
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,636
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,062
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,465
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,485
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,037
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,239

 
  சென்னை வெள்ள நிவாரண மைய ஜனநெரிசலில் 42 பேர் பலி
Posted by: AJeevan - 12-18-2005, 11:24 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (2)

<b>சென்னை வெள்ள நிவாரண மைய ஜனநெரிசலில் 42 பேர் பலி</b>
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/41133000/jpg/_41133528_ambulanceshot203.jpg' border='0' alt='user posted image'> <img src='http://newsimg.bbc.co.uk/media/images/41133000/jpg/_41133536_stampedeafpindex203.jpg' border='0' alt='user posted image'>
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் இன்று வெள்ள நிவாரண விநியோக மையம் ஒன்றில் ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கி 42 பேர் உயிரிழந்திருக்கிறார்கள், 37 பேர் காயமடைந்திருக்கிறார்கள்.

எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் உள்ள உயர் நிலைப்பள்ளி ஒன்றே தமிழக அரசால் அப்பகுதிக்கான வெள்ள நிவாரண மையமாக அறிவிக்கப்பட்டு, அங்கு கடந்த இரண்டு தினங்களாக வெள்ள நிவாரணம் வழங்கப்பட்டு வந்தது.

கடந்த இரவு முழுவதும் சென்னையில் கடுமையான மழை பெய்தது, இன்று காலையிலும் மழை தொடர்ந்திருக்கிறது. அந்நிலையில் இன்று காலையில் அங்கு நிவாரணம் பெறுவதற்காக சுமார் 4500 பேர் காத்திருந்திருக்கிறார்கள். அப்போது மக்கள் முண்டியடித்துச் சென்றபோதே இந்த கோரம் நிகழ்ந்துள்ளது.

இன்று ஞாயிற்றுக்கிழமையே நிவாரணப் பொருட்கள் வழங்குவதற்கான இறுதி தினம் என்று பரவிய வதந்தி காரணமாகவே மக்கள் முண்டியடித்துச் சென்றதாக நேரில் கண்ட சிலர் தெரிவித்துள்ளனர்.

இறந்தவர்களுக்கு நஷ்ட ஈடாக ஒரு லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு பதினைந்தாயிரம் ரூபாயும் வழங்கப்படுமென தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா காயமடைந்தவர்களைச் சென்று பார்வையிட்டார். பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் தெரிவித்தபின், செய்தியாளர்களிடம் நெரிசல் சம்பவம் குறித்து விளக்கினார்.

தனது அரசிற்கு கெட்ட பெயர் வாங்கித்தரவென்றே சிலர், வதந்திகளை கிளப்பி இப்படிப்பட்ட சம்பவங்களுக்கு காரணமாயிருந்திருக்கின்றனர் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

மற்ற அரசியல் கட்சிகள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் அடங்கிய நிவாரணக்குழுக்களை அமைக்காமல், அரசியல் ஆதாயத்திற்காக தான்தோன்றித்தனமாக முதல்வர் ஜெயலலிதா இச்சந்தர்ப்பத்தினை பயன்படுத்திக்கொள்ள முயன்றதால்தான் இத்தகைய விபத்துக்கள் மீண்டும் மீண்டும் நிகழ்கின்றன என ஜனநாயக முற்போக்கு கூட்டணித் தலைவர்களும் இன்று சென்னையில் கூடி குற்றம்சாட்டினர். ஜெயலலிதா பதவி விலகவேண்டும் எனவும் அவர்கள் கோரினர்.

இத்தகைய பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நிவாரணப்பொருட்கள் பெறுவதற்கான அடையாள சீட்டுக்களை வீடுவீடாக சென்று விநியோகிக்கலாமா என அரசு ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

- பீபீசி தமிழ்

Print this item

  சயனைட் சாப்பிட்டு தற்கொலை: தீவிரவாதியா?
Posted by: Vaanampaadi - 12-18-2005, 09:16 PM - Forum: செய்திகள்: உலகம் - Replies (17)

லாரி டிரைவர் சயனைட் சாப்பிட்டு தற்கொலை: தீவிரவாதியா? போலீஸ் விசாரணை
டிசம்பர் 18, 2005

கோயம்பத்தூர்:

மேட்டுப்பாளையத்தை சேர்ந்த லாரி டிரைவர் ஒருவரை போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்ற போது அவர் சயனைட் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.




சேலம் மாவட்டத்தை சேர்ந்த குமார் என்பவர் லாரியை விற்க வேண்டி மேட்டுப்பாளையத்தில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கிற்கு சென்றுள்ளார். ஆனால் அந்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள் அவரிடம் லாரி விற்பதற்கான சரியான பத்திரங்கள் இல்லாததால் சந்தேகமடைந்து போலீசில் புகார் கொடுத்தனர்.

உடனே சம்பவயிடத்துக்கு விரைந்து வந்த போலீசார் குமாரிடம் விசாரணை செய்வதற்காக காவல் நிலையம் அழைத்து சென்றனர். அப்போது காவல் நிலையம் செல்லும் வழியில் குமார் தன்னிடம் மறைத்து வைத்திருந்த சயனைட் எடுத்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

குமாரின் இந்த தற்கொலையால், ஒரு லாரி டிரைவரோ அல்லது திருடனோ சயனைட் வைத்திருப்பதற்கு அவசியம் என்ன? என்று போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதால், குமார் ஏதாவது தீவிரவாத கும்பலுடன் தொடர்புடையவரா என்று விசாரிக்க போலீஸ் தனிப்படை சேலம் மாவட்டத்தில் அவன் குறிப்பிட்டிருந்த முகவரிக்கு சென்று விசாரித்தனர். ஆனால் குமார் என்ற பெயரில் பத்து வருடமாக அங்கு யாரும் இல்லை என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது.

எனவே இது குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Thatstamil

Print this item

  லண்டனில் மீண்டும்..........
Posted by: cannon - 12-18-2005, 08:57 PM - Forum: புலம் - Replies (2)

கடந்த சில நாட்களாக லண்டனின் புறநகர் பகுதிகளான "கரோ, றெயினர்ஸ்லேன், பினர்,..." பகுதிகளில் எம்மவர்களின் வீடுகளைக் குறிவைத்து மீண்டும் களவுகள் ஆரம்பமாயிருக்கின்றனவாம். கடந்த ஒரு வருடத்திற்கு முன்னம் மிகப் பெரிய அளவில் இப்பகுதிகளில் களவுகள் நடைபெற்றன. முன்பு குறிப்பிட்ட பகுதிகளிலுள்ள பெரும்பான்மையான எம்மவர்களின் வீடுகள் மிக திட்டமிட்டு, வீட்டுரிமையாளர்கள் வெளியில் செல்வது அவதானிக்கப்பட்டு, அவ்வீடுகளிலுள்ள ஏறக்குறைய எல்லா விலையுயர்ந்த பொருட்களும் களவாடப்பட்டிருந்தன. மீண்டும் அதே பாணியிலான செயற்பாடுகள் ஆரம்பமாகியுள்ளன.

முன்பு நடைபெற்ற சம்பவங்களின் பின்னனி பற்றி எம்மவர்கள் மத்தியில் பல ஊகங்கள்/சந்தேகங்கள் வெளியிடப்பட்டிருந்தன. குறிப்பாக ஏனைய ஐரோப்பிய நாடுகளிலிருந்து வந்த "எம்மின வீரர்கள்" குறிப்பிடப்பட்ட பகுதிகலில் ஒரூரு வீடுகளை வாடகைக்கு எடுத்திருந்து இச்சம்பவங்களில் ஈடுபட்டார்கள் என்றும், வார இறுதி நாட்களில் இப்படியானவர்கள் வந்து செய்து போட்டு சென்று விடுகிறார்கள் என்றெல்லாம் வதந்திகள் அடிபட்டன. எவை எப்படியிருப்பினும் இக்களவுகள் நிச்சயமாக எம்மினத்தவர்களாலேயே நடைபெறுகின்றன.

ஆனால் இக்களவுகளுக்கு பின்னனியில் வேறுசில சக்திகளும் உள்ளனவா என்ற ஐயமும் மக்கள் மத்தியில் இருக்கின்றது. காரனாம் தேசியத்திற்கான நிதி சேகரிப்பு மும்முரமாக உள்ள நிலையில், அதனை எவ்விதத்திலாவது குழப்புவதற்கு தமிழ்த் தேசியத்திற்கெதிரான கூலிகள்/எதிரிகள்பெருமுயற்சியுடன் ஈடுபடுவது எல்லோரும் அறிந்ததே!! இதன் பின்னனியில் இக்களவுகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கக் கூடிய சாத்தியங்கள் இருக்கலாம்.

குறிப்பாக "ஜேர்மன்" நாட்டிலிருந்து சில கூலிகள் இதே பகுதிகளுக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்னம் வந்து, தமது எஜமானர்களுடனும் வலம் வந்தது மக்கள் மத்தியில் பலத்த சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

Print this item

  யாழ் வீடொன்றில் 13 கைக்குண்டுகள் படையினரால் மீட்பு
Posted by: Vaanampaadi - 12-18-2005, 07:33 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

ஞாயிறு 18-12-2005 22:14 மணி தமிழீழம் [யாழ் நிருபர்]

யாழ் சுழிபுரத்தில் வீடொன்றில் 13 கைக்குண்டுகள் படையினரால் மீட்பு
சிறீலங்கா இராணுவத்தினரால் யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் இருந்து 13 கைக்குண்டுகள் படையினரால் மீட்கப்பட்டன. இன்று திங்கட்கிழமை காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அத்துடன் மானிப்பாய் பகுதியில் நீண்டகால பாவனையில் இல்லாத மோட்டார் குண்டு ஒன்று மீடகப்பட்டு செயழிழக்கச் செய்யப்பட்டதாக படைத்தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

பதிவு

Print this item

  தமிழீழ தேசிய தொலைக் காட்சியில்
Posted by: ஈழமகன் - 12-18-2005, 06:40 PM - Forum: தமிழ்த் தொலைக்காட்சி இணையம் - Replies (58)

<b>தமிழீழ தேசிய தொலைக் காட்சியில் இன்று நிலவரம் நிகழ்ச்சியைக் காணத் தவறாதீர்கள். .......................</b>

Print this item

  இதுதான் தமிழ்நாட்டு போலீஸ்
Posted by: Vaanampaadi - 12-18-2005, 06:15 PM - Forum: செய்திகள்: உலகம் - Replies (15)

சைபர் கிரைம்: சாதித்த சென்னை போலீஸ்
டிசம்பர் 18, 2005

சென்னை:

மிரட்டல் இமெயில் எங்கிருந்து வந்தது என்பது தெரியாமல் டெல்லி போலீஸார் திணறிய நேரத்தில், அதை முதலில் கண்டுபிடித்து சாதனை படைத்தது சென்னை போலீஸார் என்று தற்போது தெரிய வந்துள்ளது.



நாடாளுமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இமெயில் தகவலால் நாடே கதிகலங்கிப் போனது. இந்த இ மெயில் எங்கிருந்து வந்தது என்பதை அறிய டெல்லி போலீஸார் உடனடியாக களத்தில் இறங்கினர்.

மெயில் எங்கிருந்து அனுப்பப்பட்டது என்பது குறித்து அவர்கள் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். ஆனால் அவர்களால் மெயில் எங்கிருந்து வந்தது என்பதைக் கண்டுபிடிக்க ¬முடியவில்லை.

இதே நேரத்தில் சென்னை சைபர் கிரைம் பிரிவு உதவி ஆணையர் பாலு தலைமையில் சென்னை போலீஸார் களத்தில் குதித்தனர். சைபர் கிரைம் தொடர்பான, குறிப்பாக இமெயில் மிரட்டல், எஸ்.எம்.எஸ். குற்றங்களை மிகவும் லாவகமாக கண்டுபிடிக்கும் திறமை படைத்தவர் உதவி ஆணையர் பாலு.

சம்பந்தப்பட்ட மெயில் எங்கிருந்து வந்தது என்ற ஆய்வில் இறங்கிய சில நிமிடங்களிலேயே அதை பாலு தலைமையிலான குழு கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளது. சென்னையிலிருந்து வந்ததாக ¬முதலில் கூறப்பட்ட இமெயில், பாளையங்கோட்டை மற்றும் ¬முருகன்குறிச்சி ஆகிய இடங்களில் உள்ள இன்டர்நெட் மையங்களிலிருது சிபி இணையதளம் மூலம் அனுப்பப்பட்டதை பாலு கண்டுபிடித்து மாநகர ஆணையர் நடராஜிடம் தெரிவித்துள்ளார்.

உடனடியாக இந்தத் தகவலை வெளியிடாத நடராஜ், ¬முதலில் மத்திய அரசுக்கு மட்டும் தகவல் தெரிவித்தார். இதையடுத்தே மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு, மெயில் சென்னையிலிருந்து வரவில்லை, நெல்லையிலிருந்து வந்துள்ளது தெரிய வந்தது.

சென்னை சைபர் கிரைம் போலீஸாரின் உதவியுடன் தற்போது டெல்லியிலிருந்து வந்துள்ள சிறப்புப் படை அதிகாரிகள் குற்றவாளிகள் என சந்தேகப்படுபவர்களிட¬ம், சம்பந்தப்பட்ட இன்டர்நெட் மையங்களிலும் சோதனை மற்றும் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Thatstamil

Print this item

  மூன்றாம் தரப்பு முன் நிபந்தனை ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதா?
Posted by: Vaanampaadi - 12-18-2005, 05:44 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

மூன்றாம் தரப்பு முன் நிபந்தனை ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதா?

கலாநிதி எஸ்.ஜ.கீதபொன்கலன்

1990களில் யுத்தம் மும்முரமாக நடந்து கொண்டிருந்தபோது, மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் ஒரு மூன்றாந்தரப்பாக உதவி செய்யப் பலர் முன்வந்திருந்தனர். இவர்களில் உள்ளூர்வாசிகளும் வெளிநாட்டவர்களும் காணப்பட்டிருந்தனர். வெளியூர்வாசிகளில் முக்கியமானவர்களாக நெல்சன் மண்டேலா மற்றும் யாசீர் அரபாத் போன்றோர் கூறப்படலாம். உள்ளூரில் இருந்து இவ்விதம் செயற்பட முன்வந்தவர்களில் முக்கியமான இருவர் பேராயர் கெனத் பெர்னாண்டோ மற்றும் வர்த்தகப் பிரமுகர் லலித் கொத்தலாவல ஆகியோராவர்.

இவர்களில் கொத்தலாவல தான் மூன்றாந்தரப்பாக செயற்படப் போவதாகப் பகிரங்கமாக அறிவித்தபோது நிபந்தனை ஒன்றை முன்வைத்திருந்தார். அதாவது, தான் இரு தரப்பிலுமிருந்து இரண்டாம் மட்டத் தலைமைகளுடன் மட்டும் தொடர்புகளை வைத்துக் கொள்ளவிரும்பவில்லை என்றும், அதன் காரணமாக உயர்மட்டத் தலைவர்களுடன் மட்டும் பேச்சுவார்த்தை நடாத்தவிருப்பதாக அறிவித்திருந்தார். இதன் கருத்தாய் அமைந்திருந்தது அரச தரப்பில் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க மற்றும் புலிகள் தரப்பில் பிரபாகரன் ஆகியோருக்கிடையில் மட்டுமே செயற்பட விரும்பியிருந்தார் என்பதாகும்.

கொத்தலாவல சற்றுக் கடினமாக முயற்சி செய்திருந்திருப்பராயின் சந்திரிகா குமாரதுங்கவை சந்தித்து செயற்பட்டிருப்பது இயலாததாக இருந்திருக்க மாட்டாது. இருப்பினும், அன்றைய நிலையிலும் கூட புலிகளின் தலைவரை நேரடியாக சந்திப்பதும் அவரது செய்தியைக் கொழும்புக்குக் கொண்டு வருவதும் சாத்தியமானவை அல்ல என்பது பெரிதும் தெளிவானதாகவே காணப்பட்டிருந்தது. எனவே, அத்தகைய கடினமானதொரு விடயத்தை மூன்றாந்தரப்பு அல்லது மூன்றாந்தரப்பாக செயற்பட விரும்பிய ஒரு தரப்பு, நிபந்தனையாக முன்வைத்த போதே, அத்தரப்பின் முயற்சிகள் வெற்றியடையப் போவதில்லை என்பதை இவ்விடயத்தில் அறிவுடைய சிலர் தெரிந்து கொண்டிருந்தனர்.

கொத்தலாவலயின் இந்நிபந்தனையில் இரண்டு பிரச்சினைகள் காணப்பட்டிருந்தன. ஒன்று நடைமுறையில் சாத்தியமில்லாத ஒரு விடயத்தை அது அழுத்திக் கூறியமையினால் மேற்கொண்டு முன்னேறுவது சாத்தியமானதாக இருக்கவில்லை. இரண்டாவது மூன்றாந்தரப்பு ஒன்று மோதல் தீர்வு தொடர்பில் நிபந்தனைகளை முன்வைக்க முடியுமா என்பது. மோதல் தீர்வியலில் இன்று பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள ஒரு விடயம் என்னவெனில், ஒரு மூன்றாந்தரப்பின் உதவியுடனும் கூட மோதல் தீர்வு செயன்முறை ஒன்று முன்னெடுக்கப்படுகின்ற போது, அச்செயன்முறையின் உரிமையாளர்கள் மோதல் தரப்பினரே அன்றி, மூன்றாத்தரப்பு அல்ல என்பதாகும். இருந்தபோதும் மூன்றாந்தரப்பினர் விரும்பியவாறு நிபந்தனை முன்வைப்பது விரும்பப்படுவதில்லை. ஏனெனில், பொதுவாக சமாதான செயன்முறைகளில் நிபந்தனைகள் முன்னேற்றத்தின் தடைக்கற்களாகக் கருதப்படுகின்றன. எனினும் பேச்சுவார்த்தைகளின்போது மோதற் தரப்பினர் நிபந்தனைகளை முன்வைப்பது பொதுவாகக் காணப்படுகின்றது. இத்தகைய நிலையில் மூன்றாந்தரப்பும் நிபந்தனைகளை முன்வைப்பது பொதுவாகக் காணப்படுகின்றது. இத்தகைய நிலையில் மூன்றாந்தரப்பும் நிபந்தனைகளை முன்வைப்பது மேலதிக பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்பதனால் இது பெருமளவு விரும்பப்படுவதில்லை. அவ்வகையில் எதிர்பார்க்கப்பட்டது போல் கொத்தலாவலயின் முயற்சிகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னரேயே இல்லாமற் செய்யப்பட்டிருந்தன.

நோர்வே

இருப்பினும், நோர்வேயைப் பொறுத்தவரை அது மோதற் தீர்வு மற்றும் மோதற் தீர்வியல் ஆகியவற்றில் அனுபவமுடைய ஒரு தரப்பாக இருந்தமையினால், இன்று வரை ஏற்றுக் கொள்ளப்பட்ட விதிகளுக்கமைய தனது செயற்பாடுகளை ஒழுங்கமைத்துக் கொள்ள பெரிதும் முயன்றிருந்தது. உண்மையில் இந்நடத்தையே அதற்கு குறிப்பாக தெற்கில் சில பிரச்சினைகளை ஏற்படுத்தியிருந்தது என்பது துரதிர்ஷ்டவசமானதே. எவ்வாறாயினும், ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிமுறைகளுக்கு ஏற்ப நடந்து கொள்ளும் ஒரு மூன்றாந் தரப்பு என்ற வகையில் பாரிய நிபந்தனைகளையோ அல்லது தனது சுய விருப்பு வெறுப்புகளையோ செயன்முறையினுள் கொண்டுவர முயற்சித்ததில்லை. இரண்டாயிரமாம் ஆண்டு முதன் முறையாக நோர்வேயின் உதவி நாடப்பட்ட போது இரு தரப்பினரும் அழைக்கும் பட்சத்திலேயே தனது பணிகளைத் தொடங்க முடியும் என்று கூறியமை ஒரு நிபந்தனையாகக் கருதப்பட முடியாது. ஏனெனில், அது இரு தரப்பினருக்கும் இடையிலான பக்கச் சார்பின்மையை உத்தரவாதப்படுத்திக் கொள்வதற்கு அவசியமான ஒன்றாக அமைந்திருந்தது. ஏனெனில், ஒரு தரப்பினால் மட்டும் விரும்பப்படுகின்ற அல்லது அழைக்கப்படுகின்ற மூன்றாந்தரப்புகளும் கூட வெற்றியடைவதில்லை.

ஆயினும், செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் நோர்வே இரு பிரதானமான கோட்பாடுகளின் அடிப்படையில் செயற்பட ஆரம்பித்திருந்த முதலாவது இயலுமான ஒரு கட்டமைப்பினுள் பக்கச் சார்பற்ற ஒரு அனுசரணையாளராக நடந்து கொள்ளாதிருந்தது. இது ஒரு மத்தியஸ்த முயற்சியின் தவிர்க்க முடியாத ஒரு அம்சமாகும். அதேசமயம், முற்றுமுழுதாகப் பக்கச்சார்பற்ற முறையில் நடந்து கொள்வதென்பதும் நடைமுறையில் சாத்தியமற்றதாகும். இப்பொழுது இருக்கின்ற நிலையில் நோர்வேயை வெளியேற்றினாலும் கூட பூரணமாக பக்கச்சார்பற்ற வேறொரு மூன்றாந்தரப்பை அடையாளம் காண்பது சாத்தியமற்றதாகவே இருக்கும். எனவே, ஒப்பீட்டளவில் பக்கச்சார்பின்மையைப் பேணிக்கொள்ளக் கூடியதாக நோர்வே காணப்பட்டிருந்தது. இது தமிழ்த் தரப்பினருக்கு திருப்தியளிப்பதாக இருந்தபோதும் சிங்கள மக்களுக்கு போதுமானதாக இருக்கவில்லை.

சிங்கள மக்களின் அபிப்பிராயத்தின்படி அவர்களது நிலைப்பாடுகளை ஏற்றுக்கொள்கின்ற ஒரு மூன்றாந்தரப்பே மத்தியஸ்தராக இருக்க முடியும். ஏனெனில், அவர்களது நிலைப்பாடுகளே உண்மையான நிலைப்பாடுகளாகும். (இது மோதலில் ஈடுபடுகின்ற எல்லாத் தரப்பினருக்கும் பொருந்தும்) உதாரணமாக புலிகள் பயங்கரவாதிகள் என்பதை ஏற்றுக் கொள்கின்ற ஒரு மூன்றாந்தரப்பையே சிங்கள மக்கள் உண்மையில் பக்கச் சார்பற்ற அனுசரணையாளராகக் கருதுவர். அதன் காரணமாகவே அவர்களது விருப்பம் பெருமளவிற்கு இந்தியாவைச் சார்ந்து செல்வதாக அமைந்துள்ளது.

அதே சமயம், நோர்வேயை அடிப்படையாகக் கொண்டு இயங்கிய இன்னுமொரு கோட்பாடு சமாதான செயன்முறையின் உரிமையாளர்கள் மோதல் தரப்பினரே அன்றி மூன்றாந்தரப்பு அல்ல என்பதாகும். அதன் காரணமாக செயன்முறையினுள் தரப்பினரின் விருப்பங்களுக்கேற்ப அது நடந்து கொண்டிருந்த போதும், அவர்களது செயற்பாடுகளுக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கவில்லை. ஆயினும் சிங்கள மக்கள், புலிகளால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் யுத்த நிறுத்த மீறல் செயற்பாடுகளுக்கான பொறுப்பை மூன்றாந்தரப்பே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாட்டைக் கொண்டுள்ளனர். இது மூன்றாந்தரப்பு அனுசரணை என்பதால் அடிப்படை பற்றிய போதிய அறிவின்மையால் ஏற்படுகின்ற ஒரு விடயம் ஆகும். ஆயினும், அது சிங்கள மக்கள் மத்தியில் நோர்வே பற்றிய பாரிய ஒரு அதிருப்தியைத் தோற்றுவித்திருந்தது. இவ் அதிருப்தியும் அவநம்பிக்கையும் நோர்வேயின் அணுகுமுறையினால் மட்டும் ஏற்பட்டவை என்று கூற முடியாது.

எதிர்ப்பு

சிங்கள மக்கள் மத்தியில் நோர்வே தொடர்பில் ஏற்பட்டுள்ள அதிருப்திக்கான அடிப்படைக் காரணம் அதற்கு எதிராக கடும் போக்கு சிங்கள தேசிய வாத இயக்கங்களினால் மேற்கொள்ளப்பட்டு வந்த எதிர்ப்பு பிரசாரங்களே என்பதில் சந்தேகமில்லை. இதற்கு தலைமைத்துவத்தை வழங்கிய இரு முக்கியமான நிறுவனங்கள் ஜே.வி.பி.யும், ஹெல உறுமயவுமே என்பதில் சந்தேகமில்லை. இவ்விரு இயக்கங்களும் கூட உண்மையிலேயே நோர்வே எதிர்ப்பு உணர்வுகளைக் கொண்டிருந்தன என்பதிலும் பார்க்க இதனை ஒரு அரசியல் ஆயுதமாக பயன்படுத்திக் கொண்டிருந்தன என்பதே சரியானதாகும். யுத்த நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதன் பின்னர், சிங்கள மக்களின் வாக்குகளைக் கவரக் கூடிய இயலுமை நோர்வே எதிர்ப்பு வாதத்திற்கு உள்ளதென்பது இவ்விரு கட்சிகளினாலும் சரியாகப் புரிந்து கொள்ளப்பட்டிருந்தது. இவர்களது உணர்வுகள் உண்மையானவையாக இருந்திருக்குமேயானால் "அவர்களது" ஜனாதிபதியிடம் நோர்வேயை வெளியேற்றுமாறு வற்புறுத்திக் கேட்டிருக்கலாம்.

எவ்வாறாயினும், கடந்த காலங்களில் நோர்வேக்கு எதிராக மிக மோசமான எதிர்ப்பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அதன் தேசிய கொடிகள் நாற்சந்திகளில் எரிக்கப்பட்டிருந்தன. அவர்கள் அமெரிக்கர்களின் கைக் கூலிகள் எனவும் நவ காலனித்துவவாதிகள் எனவும் குற்றம் சாட்டப்பட்டனர். இலங்கையில் காணப்படுகின்ற `கற்பனைவாத' எண்ணெய் வளத்தை சுரண்டுவதற்காகவும், வேறு பொருளாதார வளங்களுக்காகவும் ஒரு மூன்றாந்தரப்பாக செயற்பட வந்துள்ளாரென என விமர்சிக்கப்பட்டனர். ஆயினும், நோர்வே இதற்கு சர்வதேச ரீதியாக தர்ம சங்கடமான ஒரு நிலையை ஏற்படுத்தியமை அவர்கள் பயங்கரவாதத்திற்கு உதவுகின்றமையினால் அவர்களும் பயங்கரவாதிகளே என்ற தோரணையில் முன்னெடுக்கப்பட்ட பிரசாரங்களாகும். அதே சமயம், சவப்பெட்டிகளை நோர்வே தூதுவர் அலுவலகங்களின் முன் வைத்து மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டங்களும் அதனைச் சர்வதேச ரீதியாக தர்மசங்கடமான ஒரு நிலைக்குத் தள்ளியிருந்தன.

அதன் காரணமாகவே, இப்போது புதிய ஜனாதிபதி ஒருவர் பதவியேற்றுள்ள நிலையில் அதிலும் தனக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்த இரு கட்சிகளை தன்னகத்தே கொண்டுள்ள அரசாங்கத்திடம் நோர்வே நிபந்தனைகளை முன் வைத்துள்ளது. அவற்றில் முக்கியமானது புதிய அரசாங்கத்தினால் மீண்டுமொருமுறை நோர்வே அழைக்கப்பட வேண்டுமென்பதாகும். இங்கு புலிகள் பற்றிய பேச்சுக்கு இடமில்லை. ஏனெனில், புலிகள் நோர்வேயை நிராகரித்ததுமில்லை. தமிழ் மக்கள் மத்தியில் நோர்வே தொடர்பில் பாரிய அதிருப்திகள் காணப்படவுமில்லை. எனவே, நோர்வேயின் நிபந்தனை குறிப்பாக அரசு பற்றியது. அவ்வகையில் நோர்வேயின் தலையீடு உண்மையிலேயே இந்நாட்டின் தேசிய ஒருமைப்பாட்டிற்கு குந்தகமானதாக இருந்திருப்பின் அதனை நிவர்த்தி செய்து கொள்வதற்கான சந்தர்ப்பம் புதிய அரசாங்கத்திற்கு ஏற்பட்டிருந்தது. எனினும், அது பயன்படுத்தப்படவில்லை.

மாறாக, ஜனாதிபதி உத்தியோக பூர்வமாக நோர்வேயை மீண்டும் அழைக்கின்ற அறிவிப்பை மேற்கொண்டிருந்தார். அவ்வகையில் சர்வதேச ரீதியாக இலங்கையில் தலையிட்டமை காரணமாக ஏற்பட்ட அவப்பெயரை துடைத்துக் கொள்வதற்கான ஒரு சந்தர்ப்பமாக அது நோர்வேக்கு அமைந்தது. உண்மையில் தனது நன்மதிப்பையும் கௌரவத்தையும் பணயம் வைத்து இலங்கையர்களுக்கு உதவ வேண்டியதொரு அவசியம் நோர்வேயிற்குக் காணப்பட்டிருக்கவில்லை. அதே சமயம், நோர்வேயின் இச் செயற்பாடு அது தொடர்பிலான இன்றைய அரசியல் தலைமையினதும் சிங்கள மக்களதும் அதிருப்தியைத் தூண்டியுள்ளது என்பதில் சந்தேகமில்லை. இது மூன்றாந்தரப்பு அனுசரணையின் வெற்றியைப் பாதிப்பதாக அமையலாம்.

Thinakural

http://www.thinakural.com/New%20web%20site...8/Article-3.htm

Print this item

  தமிழ்க்கட்சிகள் ஒரே சின்னத்தில் போட்டியிடத் தீர்மான
Posted by: நர்மதா - 12-18-2005, 05:39 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (22)

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலிலும் ஏனைய தேர்தல்களின் போதும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தமிழ் தேசிய கூட்டமைப்பு, மலையக மக்கள் முன்னணி, மேல்மாகாண மக்கள் முன்னணி ஆகிய நான்கு தமிழ் கட்சிகளும் ஒன்றிணைந்து கூட்டமைப்பாக போட்டியிட தீர்மானித்துள்ளதாக தெரிய வருகிறது.

இதற்கமைய எதிர்வரும் அனைத்து தேர்தல்களிலும் தமிழ் உறுப்பினர்கள் ஒரே கூட்டமைப்பாக புதிய சின்னத்துடன் போட்டியிடுவார்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கட்சிகளின் தலைவர்களான ஆறுமுகன் தொண்டமான், பி. சந்திரசேகரன் ,மனோகணேஷன், ஆர். சம்பந்தன் ஆகியோர் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர். எதிர்வரும் வாரத்தில் புதிய கூட்டமைப்பின் பெயர் சின்னம் குறித்து தீர்மானிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Print this item

  `பொங்கியெழும் படை'யினரை தேடி குடாநாட்டில் இராணுவம் வேட்டை
Posted by: Vaanampaadi - 12-18-2005, 05:38 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

`பொங்கியெழும் படை'யினரை தேடி குடாநாட்டில் இராணுவம் வேட்டை

எஸ்.அபிராமி

யாழ்.மாவட்டத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்ற கிளேமோர் குண்டுத் தாக்குதல்களை அடுத்து நகரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. படையினருக்கான விநியோகப் பாதையான பலாலி வீதி, கே.கே.எஸ்.வீதி மற்றும் பருத்தித்துறை வீதிகளில் படையினர் 24 மணி நேரமும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இவ் வீதிகளில் இரு மருங்கிலும் உள்ள மரங்கள் படையினரால் வெட்டப்படுகின்றன. எங்கு பார்த்தாலும் சீருடை அணிந்த படையினர் ஆயுதங்களைத் தயார் நிலையில் வைத்துக்கொண்டு ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுவதுடன் சந்தேகத்துக்கிடமான வாகனங்கள், மோட்டார் சைக்கிள்கள் படையினரால் துருவித் துருவி சோதனை இடப்படுகின்றன.

இதனால் குடாநாட்டில் பயணம் செய்யும் பொதுமக்கள் உயிரைக் கையில் பிடித்தபடியே தமது அன்றாட கருமங்களை மேற்கொள்ள வேண்டிய துர்ப்பாக்கிய நிலை இங்கு ஏற்பட்டுள்ளது.

நாட்டில் சமாதான சூழல் மெல்ல மெல்ல அகன்று செல்ல மீண்டும் போர் மேகம் சூழ்ந்துள்ளது. எந்த வேளையிலும் போர் வெடிக்கலாமென்ற அச்சத்தில் இலங்கை அரசும் அதனை எதிர்கொள்ளத் தயாரான நிலையில் தமிழ் மக்களும் உள்ளனர்.

கடந்த காலங்களில் இலங்கை அரச படைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையிலேயே யுத்தம் நடந்தது. ஆனால், தற்போது இந்நிலை மாறியுள்ளது. தமது தேசிய விடுதலைக்காக தமிழ் மக்கள் ஆயுதங்களை கையிலெடுக்கும் நிலை உருவாகியுள்ளது. உலக நாடுகளில் நடந்த விடுதலைப் போராட்டங்களெல்லாம் வீறுகொண்டெழுந்த மக்கள் படைகளினாலேயே வெற்றி கொள்ளப்பட்டன. அந்த வகையில் அடிமைகளாக வாழ்ந்த தமிழ் மக்களும் தமது விடுதலைக்காக ஆயுதங்களைக் கையிலெடுத்தனர். எனவே, விடிவு வெகு தொலைவில் இல்லை என்பதை இலங்கை அரசும் சர்வதேசமும் நன்கு உணரவேண்டும்.

யாழ்.மாவட்டத்தில் தொடர்ச்சியாக இராணுவத்திற்கெதிராக மேற்கொள்ளப்பட்ட கிளேமோர்த் தாக்குதல் சம்பங்களுக்கு `பொங்கியெழும் மக்கள் படை' என்னும் அமைப்பு உரிமை கோரியுள்ளது. இவ்வாறான தொடர் தாக்குதல்களை தாமே மேற்கொள்கின்றோம் என்பதற்கு காரணம் கூறி அவ்வமைப்பு கடந்த வாரம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

நீர்வேலியில் அப்பாவி விவசாயிகள் கொல்லப்பட்டமை மற்றும் பொது மக்களுக்கு எதிராக படையினர் மேற்கொள்ளும் அடாவடித்தனங்களுக்கு எதிராகவே இராணுவத்தினர் மீது இவ்வாறான தாக்குதல்களை தாம் மேற்கொள்வதாகவும் படையினர் இவ்வாறான செயற்பாடுகளை உடன் நிறுத்தாவிட்டால் இனி வரும் காலங்களில் இந்தத் தாக்குதல்கள் உச்சக் கட்டத்தை அடைவதுடன் இராணுவத்தினரின் இழப்புகளும் தவிர்க்கமுடியாத ஒன்றாகவே அமைந்து விடும் என்றும் `பொங்கியெழும் மக்கள் படை' என்ற அமைப்பு குடாநாட்டில் பரவலாக சுவரொட்டிகளை ஒட்டியுள்ளது.

இதனால் ஆத்திரம் கொண்ட படையினர் யாழ்.மாவட்டத்தில் மூலை முடுக்கெங்கிலும் பொங்கியெழும் படையினரைத் தேடி அலைந்து திரிகின்றனர். முன்பு புலியா...?, புலியா...? எனக் கேட்டுத் தாக்கிய படையினர் இன்று நீயா பொங்கியெழும் படையென? கேட்கும் நிலை யாகிவிட்டது.

இது இவ்வாறிருக்க பொங்கியெழும் படையைத் தேடி இராணுவம் வலை விரிக்க - அந்த அமைப்பைச் சேர்ந்த 50 இற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கடந்த வியாழக்கிழமை பிற்பகல் 4 மணிக்கு கோவில் வீதியிலுள்ள இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு அலுவலகத்துக்குச் சென்று படையினரின் சுற்றிவளைப்புகள், பொதுமக்கள் மீதான தாக்குதல்களை உடன் நிறுத்துமாறு கோரி மகஜர் ஒன்றினை கையளித்துள்ளனர்.

இத்தகைய செயற்பாட்டினால் நிலை குழம்பிய படையினர் தமது சுற்றிவளைப்புக்கள், தேடுதல்களை மேலும் அதிகரித்துள்ளனர். கடந்த வியாழக்கிழமை யாழ்.நகரை அண்டிய நாவலர் வீதி, பிறவுண் வீதி மற்றும் மணிக்கூட்டு வீதிப் பகுதிகளையும் வெள்ளிக்கிழமை அரியாலை யின் முழுப் பகுதிகளையும் பாரியளவில் சுற்றிவளைத்த படையினர் வீடு வீடாகச் சென்று கடுமையான சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

மேலும் தென்மராட்சி, வடமராட்சி மற்றும் உயர் பாதுகாப்பு வலயங்களை அண்டிய பகுதிகளும் படையினரால் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. இதேவேளை, கோண்டாவில் பகுதியில் ஓர் இளைஞன் படையினரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வீடுகளில் உள்ளவர்களின் குடும்ப அட்டைகளை பார்வையிட்டு அங்கத்தவர்களின் எண்ணிக்கையை உறுதிப்படுத்தியதுடன் மேலதிகமாக உள்ளவர்களை வன்னியிலிருந்து மீண்டும் யாழ்ப்பாணம் திரும்பியவர்களின் விபரங்களையும் படையினர் பதிவுசெய்து கொண்டுசென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

அதுமட்டுமலக்கழக மாணவர்கள் தங்கியிருந்த வீடுகளைச் சுற்றிவளைத்த படையினர் அங்கு சல்லடைபோட்டு கடும் சோதனை நடவடிக்கைளை மேற்கொண்டதுடன் வன்னியிலிருந்து வந்த பல்கலைக்கழக மாணவர்களின் விபரங்களையும் பதிவுசெய்தனர்.

மேலும், இவர்களின் பல்கலைக்கழக அட்டைகளை பறித்த படையினர் அவற்றினை கிழித்தெறிந்ததாகவும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாவலர் வீதியிலுள்ள நமது ஈழநாடு, பிறவுண் வீதியிலுள்ள வலம்புரி பத்திரிகை அலுவலகங்களும் படையினரால் கடும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன் அங்கு பணியாற்றும் ஊழியர்களையும் படையினர் சோதனை செய்தனர். ஊடகத்துறைக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் இராணுவம் இவ்வாறான செயற்பாட்டில் இறங்கியுள்ளது.

படையினரை யாழ்.குடாநாட்டிலிருந்து உடன் வெளியேறுமாறு கோரிய பல கேளிக்கை சுவரொட்டிகளும் கடந்தவாரம் யாழ்ப்பாணத்தில் ஒட்டப்பட்டுள்ளன. எங்கு பார்த்தாலும் சீருடை தரித்த படையினர் 24 மணிநேர காவல் கடமையில் ஈடுபட்டிருக்கும் இந்த சூழ்நிலையிலும் கூட இராணுவத்தின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு மக்கள் படை இந்த சுவரொட்டிகளை பரவலாக ஒட்டி வருகின்றது.

மக்கள் யார்?, மக்கள் படை யார்? என்ற நிலையில் தமிழ் மக்கள் அனைவரையுமே குரோதக் கண்களுடனே படையினர் நோக்குகின்றனர். காலையில் எழுந்தால் யாழ்.மாவட்ட மக்கள் விழிப்பது சீருடை தரித்த படையினர் மீது என்ற நிலை மீண்டும் யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ளது.

இது இவ்வாறிருக்க யாழ். நகரின் வீதிகளை திடீர், திடீரென தடை செய்யும் படையினர் காரணம் எதுவுமின்றி பொதுமக்களை கடுமையாகத் தாக்கி வருகின்றது. கடந்த வாரம் பலாலி வீதியிலுள்ள கெற்றப்போல் சந்தியில் படையினர் பொது மக்களை வழிமறித்து கடுமையாக தாக்கியுள்ளனர். இதனால் காயமடைந்த பலர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால், இப் பகுதியில் பெரும் பதற்ற நிலை உருவாகியது. இதனையடுத்து அப்பகுதிக்கு விரைந்த கண்காணிப்புக் குழுவினர் இந்நிலைமையை காட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இதற்கு படைத்தரப்பால் கண்காணிப்புக் குழுவிடம் கூறப்பட்ட காரணம் தமது காவலரண் மீது இனந்தெரியாத நபர்கள் கைக்குண்டுத் தாக்குதலை நடாத்திவிட்டு தப்பிச் சென்றதாகவும் அது வெடிக்கவில்லையெனவும் படைத்தரப்பால் கூறப்பட்டது. ஆனால், இது எந்தளவிற்கு உண்மையென்பது தெரியவில்லை.

இந்நிலை இவ்வாறிருக்க யாழ்.நகரில் 51 ஆவது படையணியின் கட்டளைத் தளபதி உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டு அவரது இடத்திற்கு புதியவரொருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரையும் 51 ஆவது படையணித் தலைவரான மேஜர் ஜெனரல் பராக்கிரம பன்னிப்பிட்டிய இராணுவத் தலைமையகத்துக்கு இடமாற்றப்பட்டுள்ளார். இவரின் இடத்துக்கு கெமுனு படைப்பிரிவைச் சேர்ந்த பிரிகேடியர் லெனார் மார்க் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேஜர் ஜெனரல் தரத்திலிருந்த அதிகாரியை இடம் மாற்றிவிட்டு அதற்குக் குறைவான தர அதிகாரியை நியமித்ததற்கும் காரணம் உண்டு. முஸ்லிம் இனத்தைச் சேர்ந்த புதிய கட்டளைத் தளபதி மட்டக்களப்புப் பகுதியில் நீண்டகாலம் கடமையாற்றியவர். தமிழ் மக்களுக்கு எதிரான பல அட்டூழியங்களை இவர் மேற்கொண்டமை அனைவருக்கும் தெரிந்ததே.

மட்டக்களப்பில் இடம்பெற்ற இனப் படுகொலைகளுக்குப் பின்னணியிலிருந்து செயற்பட்ட இவர் கருணா குழுவிற்கும் பல உதவிகளை மேற்கொண்டவர். அத்துடன் ஊடுருவித் தாக்கும் படையணியின் கட்டளை அதிகாரியாகவும் இருந்து மட்டக்களப்புப் பகுதிகளில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக பல தாக்குதல்களை மேற்கொண்டவர்.

ரணில் பிரதமராக இருந்த காலத்தில் ஏற்பட்ட அரசியல் பின்னணியால் இவர் ராணுவத் தலைமையகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். மீண்டும் மகிந்த ஜனாதிபதியானதும் ஒரு படையணியின் கட்டளைத் தளபதியாக நியமிக்கப்பட்டு யாழ்ப்பாணம் அனுப்பப்பட்டுள்ளார். பதவியேற்றதன் பின் யாழ்.நகர் படைத்தளபதிகளை அழைத்து அவசர சந்திப்புகளையும் மேற்கொண்டார். மேலும், யாழ்.நகரில் அகற்றப்பட்ட காவலரண்களும் இவர்பதவியேற்றபின் மீண்டும் உயிர்பெற்றுவருகின்றன.

இனக்குரோதத்தைத் தூண்டும் வகையில் அனுப்பப்பட்டுள்ள இராணுவத் தளபதி யாழ்ப்பாணத்தில் என்ன செய்யப்போகின்றார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

`பொங்கியெழும் மக்கள் படைக்கு' இந்தத் தளபதி என்ன செய்யப்போகிறார். வீறுகொண்ட யாழ்.மாவட்ட மக்கள்- படையினருக்கே கிளைமோர் வைப்பதற்கே துணிந்து நிற்கும் இந்நிலையில் இவர் எந்தளவிற்கு... அடுத்த வாரம் குடாநாட்டில் நிகழும் அதிரடி சம்பங்களுடன் சந்திப்போம்.

Thinakural
http://www.thinakural.com/New%20web%20site...8/Article-8.htm

Print this item

  திரு.தேவன் நாயர் மறைவு.
Posted by: AJeevan - 12-18-2005, 05:32 PM - Forum: செய்திகள்: உலகம் - Replies (2)

<img src='http://tamiloviam.com/img/devan1.jpg' border='0' alt='user posted image'>
<b>திரு.தேவன் நாயர் மறைவு. </b>
<span style='color:blue'>- குமார் (சிங்கப்பூர்)

Quote:<img src='http://www.singapore-elections.com/pe/images/cvdnair.jpg' border='0' alt='user posted image'>
Mr Chengara Veetil DEVAN NAIR
பதவி வகித்த காலம்
23 October 1981 - July 1985
[size=15]
சிங்கப்பூரின் இன்றைய வெற்றிகர வளர்ச்சிக்கு வித்திட்டவர்களில் ஒருவரும் சிறந்த தொழிற்சங்கவாதியும் போராட்டகுணத்தில் இரும்பு மனிதராகவும் விளங்கிய திரு. தேவன் நாயர், கனடாவிலுள்ள ஹாமில்டன் நகரில் கடந்த 2005 மார்கழி 7ம் திகதி மறைந்துவிட்டார்.

சிங்கப்பூரின் மூன்றாவது அதிபராகவும் திரு.லீ குவான் இயூ அவர்களுக்கு நீண்டகால நெருங்கிய நண்பராகவும் விளங்கியவர் அவர்.

இடதுசாரிகளிடமிருந்தும் ஆங்கிலேயர்களிடமிருந்தும் நாட்டை மீட்டு வெற்றிப்பாதையில் செலுத்தவேண்டிய அவசர தருணத்தில், திரு. லீ குவான் யூ அவர்களுடன் இவர் ஆற்றிய பணி மகத்தானது.

இவ்வாண்டின் ஆரம்பத்தில் தனது மனைவியை இழந்த அவருக்கு மூன்று மகள்களும் ஒரு மகனும் இருக்கின்றனர். திரு.தேவன் நாயர் அவர்களது ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கிறேன். </span>

(காலம் தாழ்ந்த செய்திதான் இருப்பினும் ஓர் பதிவு.- அஜீவன்)


<b>தேவன் நாயர் பற்றிய குமாரின் கட்டுரைகள்:</b>

<img src='http://img369.imageshack.us/img369/9929/leedevaajeevan0ul.jpg' border='0' alt='user posted image'>
Devan Nair and Lee Kuan Yew
எப்பிறப்பாயினும் அதன் இருத்தல் மற்றும் வாழ்தலின் சிறப்பானது அது முடிவுறும் நேரத்தில் உணரப்பட்டுவிடும். வாழ்தலின்போது உரைக்காமல் உறைந்து கிடந்த அனுமானங்கள், முடிவுறுதலின் போது உண்மைகளையும் நுட்பங்களையும் தெளிவாகக் காட்டிவிட்டுச் செல்லும். கலைந்து கிடந்த அப்பிம்பம் எங்கேனும் ஓரிடத்திலாவது தெளிவானதொரு வானவில்லாகக் காட்சி தரக்கூடும். பிணமெரிக்கப் பயன்படும் விறகிலிருந்து பிணமாகும் மனிதர்கள் வரை எல்லாம் அப்படித்தான். எந்த நிறுத்தத்தில் நாம் இறங்கிக்கொண்டாலும் சரி; எத்தனை முறை மீண்டும் ஏறினாலும் சரி.

சிங்கப்பூரின் வளர்ச்சிக்கும் பொருளாதார முதன்மைக்கும் முன்னோடிகளாய் நின்ற இந்தியர்களில் இன்னொரு முக்கியமானவர் திரு. சி.வி தேவன் நாயர். 1914 ஆம் வருடம் கேரளாவிலிருந்து பிழைப்பதற்காக மலாயாவிற்கு வந்தார் அவரது அப்பா. தனியாரின் ரப்பர் தோட்டம் ஒன்றில் கிளார்க்காக பணிபுரியும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. அத்தோட்டத்திலேயே செல்வாக்கோடு வாழ்ந்த அவருக்கு மூன்று ஆண்குழந்தைகளும் ஆறு பெண்குழந்தைகளும் பிறந்தன. மூன்று ஆண்மகவுகளில் மூன்றாவதாய் 1923 ஆம் ஆண்டு 'மலாக்கா' நகருக்கு அருகில் உள்ள 'ஜசின்' என்ற ஊரில் இருந்த ரப்பர் தோட்டத்தில் 'செங்கரா வெட்டில் தேவன் நாயர்' பிறந்தார்.

ஜப்பானியர்கள் இரண்டாம் உலகப்போரின் போது மலாயாவையும் கைப்பற்ற, மலாயாவின், ரப்பர் மற்றும் பனைத்தோட்டங்களில் பணிபுரிந்த தொழிலாளர்களும் அடிமைகளும் அவர்களின் தேவைகளுக்கு அவசியமாயினர். ரயில்பாதை போடும் பொருட்டும் இன்னபிற ஏவல்களுக்கும் தோட்ட அடிமைகளை, ஒவ்வொரு தோட்டத்திற்கும் வந்து மொத்தம் மொத்தமாக அள்ளிச்சென்றனர். அள்ளிச்செல்லப்பட்டவர்களில் பலர் வீடு திரும்பியது தெய்வாதீனமாக எப்போதாவது ஒன்றோ இரண்டோ நடந்து வந்தது. மீண்டு வந்தவர்கள் இன்னொரு பிறவி எடுத்தவர்களானார்கள்.

இந்நிலையில் திரு. தேவன் நாயரின் அப்பா கணக்கராய் இருந்த அத்தோட்டத்திலும் பலர் அவ்வாறு மறுநாள் இழுத்துச்செல்லப்படுவதாய் ஜப்பானியர்கள் அறிவித்திருக்க, 'அவர்களை அனுப்பி வைத்தால் தீராத பாவத்திற்குத் தான் ஆளாக நேரிடுமே என்றும் 'அனுப்பாவிட்டால் தன் தலை உருளுமே' என்றும் தவித்துக்கொண்டிருந்தார் அவர். சிறுவனாய் இருந்த தேவன் நாயருக்கு பிரச்சனை புரிந்தது. அதிலிருந்து தன் தந்தை மீண்டு வர, அன்று அவர் ஒரு திட்டம் தீட்டினார். அதன்படி எல்லாம் தொழிலாளர்களும் அன்று பாதுகாப்பாக உயிர்தப்பினர்.

திரு. தேவன் நாயர் முதன் முதலாய் போராட்டவாதியானதும், ஜப்பானியர்களின் மேல் வெறுப்பு கொண்டு, மலாயாவில் ஜப்பானியர்களை எதிர்த்து காட்டுக்குள் திரிந்துகொண்டிருந்த கொரில்லாப் படையினரான 'ஜப்பானிய எதிர்ப்பு மலாய மக்கள் ராணுவத்தில் (Malayan People's Anti-Japanese Army, MPAJA)' சேர உறுதுணையாய் இருந்ததும், கம்யூனிசக் கட்சிகளின் மீது ஆர்வம் ஏற்படக் காரணமானதும் என அவரின் எல்லா அரசியல் போராட்ட வாழ்வுக்கும் அந்த நிகழ்வே அடித்தளமாய் அமைந்தது.

தமது பத்தாம் வயதில் சிங்கப்பூருக்கு குடும்பத்தோடு குடிபெயர்ந்த அவர், தொடக்கக்கல்வியும் உயர்கல்வியும் சிங்கப்பூரில் பயின்றார். ஆசிரியராகப் பணிபுரியத்தொடங்கிய இவர் பிறகு ஆங்கிலேயர்களிடமிருந்து மலாயாவின் சுதந்திரத்திற்குப் பாடுபட்டுக்கொண்டிருந்த மலாயன் கம்யூனிசக் கட்சியில் சேர்ந்தார். கம்யூனிசக் கொள்கைகளில் தீவிரமும் செயலார்வத்தோடு துடிப்பாகவும் இருந்த அவருக்கு விரைவில் சிங்கப்பூரில் நிலவி வந்த பல்வேறு தொழிற்சங்கங்களிடையே செல்வாக்குப் பெருக, சிங்கப்பூரின் கம்யூனிசக் கட்சியில் குறிப்பிட்டுப் பெயர் சொல்லும் அளவுக்கு, 'முக்கிய ஐந்து நபர்களில்' ஒருவராய் வந்தார்.

சிங்கப்பூரில் அப்போது ஆட்சி செய்துகொண்டிருந்த ஆங்கிலேயர்களால், அவர்களது ஆட்சிக்கு எதிராகக் கிளர்ச்சி செய்த கம்யூனிசத் தலைவர்கள் சிலர் சிறையில் அடைக்கப்பட்டனர். அதன்படி 1951 ஆம் ஆண்டு முதல் 1953 ஆண்டுவரை ஜெயிலில் இருந்தார் திரு. தேவன் நாயர். திரு. லீ குவான் யூ அவர்கள் லண்டனில் படித்து விட்டுத் திரும்பி வந்து, சிங்கப்பூரில் சட்ட ஆலோசகராகப் பணிபுரிந்த பொழுது, ஆசிரியர் சங்கத்தில் உறுப்பினராயும் தீவிர கம்யூனிச சங்கங்களின் ஒருங்கிணைந்த சக்தியாகவும் விளங்கிய தேவன் நாயருடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது மிக நெருக்கமான நட்பாக வளர்ந்தது.

பிறகு திரு. லீ குவான் யூ அவர்களும் அவரது கல்லூரித் தோழர்களுமாய், ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்காக உருவாக்கிய 'மக்கள் செயல் கட்சியில்' (1955) சேர்ந்தார். பொதுவுடைமை சித்தாந்தங்களும் குடியாட்சித் தத்துவங்களுமாய் இணைந்திருந்த அக்கட்சியில் தேவன் நாயரோடு மற்ற கம்யூனிசத்தலைவர்களும் முக்கியப் பொறுப்பில் அமர்த்தப்பட்டனர். மக்கள் செயல் கட்சியின் 'மத்திய நிர்வாக செயல் குழு' உறுப்பினராக இவர் இருந்தார்.

1955 ஆம் அண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் மக்கள் செயல் கட்சி 4 வேட்பாளர்களை நிறுத்த, அவற்றில் ஒருவராய் '·பேரர் பார்க்' தொகுதியில் நின்ற திரு. தேவன் நாயர், மற்ற மூவரும் வெற்றி பெற, 400 ஓட்டு வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். ஆனாலும் தொடர்ந்து தொழிற்சங்கங்களில் மிகுந்த ஈடுபாட்டோடு பங்கெடுத்துக்கொண்டு வந்தார். சிங்கப்பூர் தொழிற்சாலை, கடைத்தொழிலாளர்கள் சங்கத்திலும் சிங்கப்பூர் டிரக்ஷன் கம்பெனி சங்கத்திலும் முக்கியப்பொறுப்புகளில் இருந்து வந்தார்.

சிங்கப்பூரில் அப்போது தொடர்ந்து நடந்து வந்த சீன- மலாய் இனப்பிரச்சனைகளில் கம்யூனிச சக்திகளும் முக்கிய பங்கேற்றிருப்பதாகச் சந்தேகப்பட்ட அப்போதைய அரசு, மக்கள் செயல் கட்சியிலும் இருந்த பல கம்யூனிசத் தலைவர்களை சிறையில் அடைத்தது. அப்படி சிறையிலடைக்கப்பட்ட எட்டுப்பேரில் திரு. தேவன் நாயரும் ஒருவர்.

1959 ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் 'மக்கள் செயல் கட்சி' அமோக வெற்றிபெற்று ஆட்சியைப்பிடிக்க, 'சிறையிலிருக்கும் எட்டுப்பேரையும் விடுதலை செய்தால்தான், தான் ஆட்சி அமைக்கப்போவதாக,' திரு. லீ குவான் யூ அவர்கள் சொல்ல, அவரின் பிடிவாதத்திற்கு இணங்கி அப்போதைய அரசு அவர்கள் எட்டுப்பேரையும் விடுவித்தது. எட்டுப்பேரும் பிறகு வெவ்வேறு சூழ்நிலையில் திரு. லீ குவான் யூ அவர்களுக்கு எதிராக ஆட்சிக்களத்தில் குதிக்க, அன்றுமுதல் கடைசி வரை திரு. லீ குவான் யூ அவர்களுக்கு மிகவும் விசுவாசமாக இருந்தவர் திரு. தேவன் நாயர் மட்டுமே!

கம்யூனிசக் கட்சியைச் சேர்ந்த எல்லா பிரமுகர்களும் வெவ்வேறு சந்தர்ப்பத்தில் வேறு கட்சிகளில் சேர்ந்தும் புதுக்கட்சி ஆரம்பித்தும் பிரிந்துவிட, திரு. தேவன் நாயர் மட்டுமே கடைசி வரை 'மக்கள் செயல் கட்சியில்' இருந்தார். 1964 ஆம் ஆண்டு பிரிக்கப்படாத சிங்கப்பூரிலிருந்து மலேசிய நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, மக்கள் செயல்கட்சியின் முதல் வெற்றியாளராக பாராளுமன்றத்துக்குச் சென்றார்.

மலேசியா சிங்கப்பூரிலிருந்து விலகிய பின், மலேசியாவிற்குத் திரும்பிய அவர், மலேசியாவில் தங்கி, ஜனநாயக செயல் கட்சியை (Democratic Action Party) உருவாக்கி அதன் முதல் பொதுச்செயலாளராக இருந்தார். பிறகு சிங்கப்பூரில் நிலவி வந்த தொழிலாளர்களின் பெரும் பிரச்சனைகளைச் சமாளிக்க திரு. லீ குவான் யூ அவர்களால் மீண்டும் சிங்கப்பூருக்கு அழைக்கப்பட்டார்.

அன்று சிங்கப்பூருக்கு வந்தவர், திரு. லீ குவான் யூ அவர்களுக்குப் பல்வேறு பிரச்சனைகளிலும் தோள் கொடுத்து உதவினார். எல்லா உழைப்புக்கும் பலனாக, 1981 ஆம் ஆண்டு, திரு. லீ குவான் யூ அவர்களால், சிங்கப்பூரின் 'மூன்றாவது அதிபராக' சிறப்புடன் பதவியில் அமர்த்தப்பட்டார் திரு. தேவன் நாயர்!

பதவியேற்றுச் சில வருடங்கள் கழித்து, இத்தகைய சிறப்புகளைக்கொண்ட திரு. தேவன் நாயர் மீது என்ன குற்றச்சாட்டு எழுப்பட்டு பதவியிறக்கம் செய்யப்படப்பட்டார் தெரியுமா? 'பெண்பித்தர் மற்றும் குடிகாரர்' என்று!

எப்படி நடந்தது இது? உண்மையில் குடிகாரரா அவர்? ஏன் இதை லீ குவான் யூ அவர்களுக்குத் தெரியாமல் மறைத்தார்கள்?
<img src='http://www.escapefromparadise.com/Images/awchenghu.jpg' border='0' alt='user posted image'>
அவர் மனைவி இவைகளைப்பற்றி என்ன சொன்னார்?

http://tamiloviam.com/unicode/04280504.asp

<img src='http://www.collaboration.org/97/fall/aum/devkosh.gif' border='0' alt='user posted image'>
சிங்கப்பூரின் முன்னாள் அதிபர் திரு. தேவன் நாயர், மலேசியாவின் மலாக்கா பகுதியில் பிறந்து, இளமையிலே கம்யூனிசக்கொள்கைகளில் பிடித்தம் கொண்டவராய் வளர்ந்து, தொழிற்சங்கங்களின் தலைவராய் சிங்கப்பூருக்கு ஆற்றிய சீர்மிகு பணி குறித்தும் நாட்டின் மூன்றாவது ஜனாதிபதியாய் அவர் ஆனதும் நான்கு வருடங்கள் கழித்து அவர் மீது எழுந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்து பதவி இறக்கம் செய்யப்பட்டது என்பது உள்ளிட்ட சில விஷயங்களைச் சென்றவாரம் பார்த்தோம். சிங்கப்பூரின் ஒட்டுமொத்த மக்களிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவங்களில் ஒன்றாக இது அமைந்தது. பின்னே? ஜனாதிபதியாயிருப்பவர், குடிகாரர் மற்றும் பெண்போகர் என்று பதவி இறக்கம் செய்யப்பட்டால்?

சிங்கப்பூர், 'தனிநாடு' என்ற சட்டை போட ஆரம்பித்து சில வருடங்களில், பொருளாதார அளவில் முழு வெற்றியை அடைய அது எத்தகைய முழுமுதற் முயற்சிகளை எடுத்து வந்தது என்பதை திரு. ஆல்பர்ட் வின்ஸிமியுஸ் அவர்களின் தேர்ந்த திட்டங்களின் வழி முதல் அத்தியாயங்கள் சிலவற்றில் கண்டோம். தொழிற்துறையில் தான் விரும்பிய அளவு சீரிய முன்னேற்றம், திரு. லீ குவான் யூ அவர்களுக்கு கிடைப்பது அரிதாகவே இருந்துவந்தது. கம்யூனிச சக்திகளிடமிருந்தும் ஆங்கிலேயர்களிடமிருந்தும் நாட்டைக்காப்பாற்றிய அவருக்கு, தொழிலாளர்களின் ஆதரவு முழுமையாகக் கிடைக்கவில்லை. தொழிலாளர்களை எப்படிக் கையாளுவது என்று திகைத்திருந்த நிலையில்தான் அவருக்கு வரமாகக் கிடைத்தார் திரு.சி.வி.தேவன் நாயர்.

1964ல் மலேசிய நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து மலேசியாவில்தான் இருந்தார் திரு. தேவன் நாயர். 1969ம் வருடம், அவரை மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு திரும்ப அழைத்தார் திரு. லீ. சிங்கப்பூரில், தொழிலாளர்களிடையே ஒற்றுமையையும் உற்பத்தி திறனையும் அதிகரிக்க அவர் அழைக்கப்பட்டார். 'என்.டி.யூ.சி' எனப்படும் 'தேசிய தொழிலாளர் வாரிய காங்கிரஸ¤க்கு' (இதுபற்றி அதிகமான தகவல்கள் பிறகு!) மீண்டும் அவரைத் தலைவராக்கினார். அங்கிருந்து திரு. நாயரின் சாதனைச் சரித்திரம் ஆரம்பித்தது. 1970-ல் தொடங்கி 1981 வரை தொடர்ந்து பதினோரு ஆண்டுகள் அதன் தலைவராயிருந்து அதனைச் செம்மைப்படுத்தினார் அவர்! திரு. தேவன் நாயரின் எழுச்சிமிகுந்த நாட்டு நலப்பணிக்கு மாற்றாக, 1981 ல் அவரை, நாட்டின் மூன்றாவது அதிபராக்கி அழகுபார்த்தார் திரு. லீ குவான் யூ.

1981-லிருந்து 1985 மார்ச் பதினைந்து வரை சுமூகமாகப் போய்க்கொண்டிருந்த அவரின் பதவிக்கு, மலேசியாவின் கிழக்குப்பகுதியான 'சரவா' மாநிலத்திலிருந்து வந்தது அந்த ஆபத்து. சரவா மாநிலத்தின் 'குச்சிங்' பகுதிக்கு பார்வையாளராக அவர் சென்றபொழுது, நிலை தடுமாறிய குடிபோதையில், அங்கிருந்த பெண்கள் சிலரிடம் தவறாக நடக்க முயன்றதாக 'சரவா' பகுதி டாக்டர் ஒருவர், மார்ச் 14 அன்று, திரு. தேவன் நாயரின் சிங்கப்பூர் தனி மருத்துவருக்கு போன் செய்தார். திரு. தேவன் நாயரை அங்கிருந்து உடனே அழைத்துச்செல்ல வேண்டும் என்றும் இல்லையேல் நாட்டின் பெருமைக்கும் அதிபர் பதவிக்கும் களங்கம் நேரும் என்று சொல்லி வற்புறுத்தினார். விஷயத்தைக் கேள்விப்பட்டதும் தனிமருத்துவர் 'டாக்டர் தம்பையா', உடனே குச்சிங்கிற்குப் பறந்தார்.

தன்னோடு காரில் வந்த மந்திரியின் மனைவியிடமும், விருந்திலிருந்த பெண்கள் மற்றும் மருத்துவமனை நர்சுகளிடமும் அவர் மோசமாக நடந்துகொண்டதாகக் கூறப்பட்டது. சிங்கப்பூருக்கு அவரை அழைத்து வந்தார் அவரது மருத்துவர் திரு. தம்பையா. அன்றிரவு ஒன்பது மணி அளவில், விஷயத்தைப் பக்குவமாக எடுத்துச்சொல்ல தனது மனைவியையும் அழைத்துக்கொண்டு, ஜனாதிபதி மாளிகையான 'இஸ்தானா'விற்கு வந்தார் திரு. லீ. அடுத்த நாள் பாராளுமன்றத்தில், திரு. தேவன் நாயர் குறித்தான, திரு. லீ குவான் யூ அவர்களின் அறிக்கை இப்படிச்சொல்லியது.

"திரு. தேவன் நாயரின் மனைவி, குச்சிங்கில் நடந்த விஷயத்தைக் கேள்விப்பட்டு மிகவும் வருந்தினார். தனது கணவர் முழுதும் மாறிவிட்டதாகவும், நாளுக்கு நாள் மிகவும் அதிகமாக குடிப்பதாகவும், கடந்த சில மாதங்களாக ஒரு இரவில் முழு விஸ்கி போத்தலைக் காலிசெய்யும் அளவுக்கு மது அருந்துவதாகவும் என்னிடம் என் மனைவியிடமும் சொல்லி வருத்தப்பட்டார். வீட்டு வேலையாட்களைச் சீக்கிரமே இதற்காக அனுப்பிவிடுவதாகவும் அதனால் அவர்களுக்கு அது தெரியாது எனவும் சொன்னார். அடிக்கடி தன்னை, தனது கணவர் திரு. தேவன் நாயர் அடிப்பதாகவும், சரவா மாநிலத்தில் இப்படி நடக்கும் என்பது ஏற்கனவே தெரிந்ததால்தான் தான் அவரோடு செல்லவில்லை என்பதாகவும் அவரின் மனைவி எங்களிடம் சொன்னார்"

"சில வாரங்களுக்கு முன் ஒருநாள், தலையில் 'விக்' வைத்துக்கொண்டு, தனது பாதுகாப்பு அலுவலர்கள் யாரும் இல்லாமல், தானே காரை ஓட்டிச்சென்றிருக்கிறார் தேவன் நாயர். ஜெர்மானியப்பெண் ஒருவரை அங்கு தனிமையில் அவர் சந்தித்திருக்கிறார். அடுத்தநாள் காலை அவரின் மனைவி அங்கு சென்று பார்த்தபொழுது, காலி மதுப்பாட்டில்களும் சிகரெட் பெட்டிகளும் லிப்ஸ்டிக்குகளும் கிடந்தனவாம். பிறிதொருநாள் அப்பெண்ணையே தனது மாளிகைக்கு விருந்திற்கும் அழைத்து வந்தாராம் இவர். இதையெல்லாம் கேட்ட திருமதி. தேவன் நாயரை அவர் அடித்திருக்கிறார். சுய உணர்வு என்பது அவருக்கு இல்லவே இல்லை என்பதும் குடிக்கு முற்றிலும் அடிமையாகிவிட்டார் என்பதும் இதன் மூலம் தெரிய வருகிறது" - இப்படி அமைந்தது திரு லீ அவர்கள் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த திரு. தேவன் நாயர் குறித்தான அறிக்கை!

இதனைத் தொடர்ந்து ஏழு மருத்துவர்கள் கொண்ட குழு ஒன்று அவரைப் பரிசோதித்தது. பரிசோதனையின் முடிவில் அக்குழுவின் தலைவரான டாக்டர். நகுலேந்திரனின் அறிக்கை பின்வருமாறு இருந்தது. "பல ஆண்டுகள் ஆன அவரின் தொடர்ந்த குடிப்பழக்கத்தால் அவர் மதுவுக்கு அடிமையாகிவிட்டார். அவரது மன நிலையின் இயக்கம், அவரின் குடியைப்பொறுத்து இயங்கி வருவது வாடிக்கையாகிவிட்டது. நீண்ட நாட்கள் அளவில்லாமல் குடித்ததின் விளைவாக மூளையின் செயல்திறனும் ஞாபகசக்தியும் போய்விட்டன. ஆண்மையற்றவராகி விட்டார். இவைகளினால் அவர் தனது சுய சிந்தனையை இழந்து சமுதாயப்பொறுப்பற்று நடக்க ஆரம்பித்துவிட்டார்"

மருத்துவக்குழுவின் இவ்வறிக்கைக்குப் பிறகு, திரு. லீ அவர்களும் மற்றொரு அமைச்சரான திரு.இராஜரத்தினம் அவர்களும் திரு.தேவன் நாயர் இருந்த மருத்துவமனைக்குச் சென்றனர். பதவியில் இருந்து அவரை நீக்க வேண்டிய அவசியத்தை அங்கு அவருக்கு எடுத்துச் சொன்னார்கள். கொஞ்சம் தயக்கத்திற்குப்பின் திரு. தேவன் நாயர் தனது ராஜினாமா கடிதத்தை அவரிடம் கொடுத்திருக்கிறார். அதற்கடுத்த நாள், தேவன் நாயர், திரு. லீக்கு எழுதிய கடிதத்தில், "ஒரு வருடத்திற்கு முன், மதுவுக்கு நான் அடிமையாகிவிட்டதை உணர்ந்துகொண்டேன், ஆனால் அதைச் சரிசெய்வதற்குப்பதிலாக மிகவும் கேவலமான முறையில் மீண்டும் மீண்டும் அதற்குள் நானே முழுகிவிட்டேன். தங்களைச் சந்தித்து இதனைத் தெரியப்படுத்தி விடலாம் என இருமுறை முயன்றேன். ஆனால் அதற்கான தைரியம் என்னிடமில்லை. நான் திருந்துவதற்கு எனக்குக் கிடைத்த கடைசி வாய்ப்பையும் இதனால் நழுவவிட்டு விட்டேன்" இவ்வாறு அதில் சொல்லப்பட்டிருந்தது.

தனது வாழ்நாளில் தான் செய்த இரு தேர்வுகள், எப்படி தவறுதலாக அமைந்து, தன்னைத் தவிக்க வைத்தன என்பதை திரு. லீ குவான் யூ மிகவும் வருத்தத்தோடு சொல்கிறார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நியமனம் மற்றும் தேவன் நாயர் விஷயம் ஆகியனவற்றில் சரியான நபரை தவறான பதவியில் வைத்ததும், சரியான நபர் எதிர்பாராவிதமாக தவறான பாதையில் நடந்ததும் என தான் எடுத்த எத்தனையோ முடிவுகளில் இந்த இரண்டு மட்டும் சற்றுப் பிசகிவிட்டதாகவே அவர் உணர்கிறார்; வருந்துகிறார்.

'அதிபராக இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு, அரசாங்க உதவித்தொகை எதுவும் கொடுக்கும் வழக்கம் நடைமுறையிலும் இல்லை, சட்டத்திலும் இல்லை. ஆனால் தேவன் நாயர் அவர்களுக்கு, அவரின் வேண்டுகோளுக்கு இணங்கி உதவித்தொகை வழங்கப்பட்டதாகவும் அதுவும் மருத்துவக்குழு ஒன்று தொடர்ந்து அவரைப் பரிசோதித்து வரவேண்டும் என்ற நிபந்தனையுடன் அனுமதிக்கப்பட்டதாகவும் முதலில் ஒப்புக்கொண்ட அவர் பிறகு மறுத்துவிட்டதாகவும்' திரு. லீ சொல்கிறார்.

சரியாக ஒன்றரை வருடங்கள் கழித்து, 'FEER' (Far Eastern Economic Review) இதழில் எழுதிய ஒரு கடிதத்தில், திரு. தேவன் நாயர், 'தான் மதுவுக்கு அடிமையாக இருந்ததே இல்லை' என்று கூற, ஏழு டாக்டர்களின் மருத்துவ அறிக்கையையும், 'மதுவுக்கு அவர் அடிமையானவர்தான்' என்ற உறுதிமொழியையும் சிங்கப்பூர் அரசு, FEERக்கும் திரு. நாயருக்கும் அனுப்பி வைத்தது. பிறகு ஒரு வழக்கில் அவர், திரு. லீயைச் சாட, அவர் இவரின் மேல் வழக்குத்தொடுத்து எல்லாத் தகவலறிக்கைகளையும் முன்வைக்க, தேவன் நாயரும் அவரது குடும்பமும் மலேசியாவிற்கும் அங்கிருந்து பிறகு கனடாவுக்கும் இடம்பெயர்ந்தது.

பதினோரு வருடங்கள் கழித்து, கனடாவில் ஒரு பத்திரிகைக்கு பேட்டி அளித்த அவர், 'தனது உடல்நிலை தவறாக கணிக்கப்பட்டதாகவும் தன்னை குடிகாரனாய், மதுவுக்கு அடிமையானவனாய் மக்களுக்குக் காண்பிப்பதற்காக, மருத்துவர்களோ அல்லது வேறு யாரோ வேண்டுமென்றே அதற்கான மாத்திரைகளைப் போட்டு அப்படி நிரூபித்ததாகவும் சொன்னார்.

நல்ல நண்பர்களாய், நெருங்கிய சினேகிதம் உடையவர்களாய், ஒரே தூணாக நின்று சிங்கப்பூரை வளர்த்தவர்களாய், ஒரே வருடத்தில் பிறந்தவர்களுமாயிருந்த திரு. லீக்கும் திரு. தேவன் நாயருக்கும் இருந்த உறவு அத்துடன் முடிவடைந்தது.

தேவன் நாயர் அவர்கள் மலேசிய நாடாளுமன்றத்துக்கு அனுப்பப்பட்டபின், அவரது தொகுதியில் அவருக்குப் பதிலாக நிறுத்தப்பட்ட அவரது மனைவி 'திருமதி. தனலெட்சுமி தேவன் நாயர்' தான் சிங்கப்பூர் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலும் கடைசியுமான இந்திய பெண்ணாவார். கடந்த ஏப்ரல் 18 அன்று கனடாவின் 'ஒண்டாரியோ' நகரில் இறந்துபோனார் அந்த அம்மையார்! அவரது மறைவிற்கு தனது ஆழ்ந்த வருத்தங்களைத் தெரிவித்திருந்தார் திரு.லீ குவான் யூ.

அவசரமாய் ஒரு அதிபரை பதவியிலிருந்து இறக்கியது சரி. அடுத்ததாய் பதவியில் அமர்த்தப்போவது யாரை? அத்தகைய சிறந்தவர்களை அரசு, வலை வீசித் தேடியபோது, திரு. லீ குவான் யூ அவர்களின் ஆரம்பம் முதல் இன்று வரை நெருங்கிய தோழராய் இருக்கும் மக்கள் செயல்கட்சியின் நிறுவனர்களில் ஒருவரான 'எஸ்.ராஜா' எனப்படும் முன்னாள் அமைச்சர் ராஜரத்தினம் அவர்களால் சுட்டிக்காட்டப்பட்டவர்தான் 1985 முதல் 1993 வரை இருமுறை தொடர்ந்து சிங்கப்பூரின் அதிபராய் இருந்த திரு. வீம் கீ வீ! தனது '89 ஆம் வயதில்' கடந்த மே 2 அன்று இறந்துபோனவர்; மக்களின் மனதில் என்றும் வாழ்பவர் அவர்!

http://yemkaykumar.blogspot.com/2005/12/blog-post.html

<img src='http://www.channelnewsasia.com/imagegallery/store/php2OFhOh.jpg' border='0' alt='user posted image'>
<b>Former Singapore President Devan Nair dies at age 82</b>

SINGAPORE : Former Singapore President CV Devan Nair has died in Canada. He was 82.

He was the reluctant Singapore President who resigned and then chose to live out his remaining years abroad.

But more than this, Mr Devan Nair was a teacher, a communist, unionist and ruling party stalwart -- all in a lifetime that was staunchly dedicated to nation-building in Singapore's early history.

The third President of Singapore, Mr Nair was in office from 1981 to 1985.

Born in August 1923, Mr Devan Nair, the son of a rubber plantation clerk in Malaysia, identified with the working class early on in life.

His first political conviction was Communism, one that was sealed when the trainee teacher met PV Sharma, an influential figure in the teachers' union.

Under Mr Sharma's influence, Mr Devan Nair joined the Anti-British League, a cover for the Malayan Communist Party, and in 1951 was detained on St John's Island.

Said Patrick Jaswan, Mr Devan Nair's friend, "His university is actually the prison. There was not a single book left that he didn't browse through."

Out of prison, he continued with left-wing union activism.

He was an effective mobiliser and, with Chinese-educated activists like the late Lim Chin Siong, had a considerable following.

In 1954, Lee Kuan Yew asked Mr Devan Nair to join him so the unions could provide the mass base for a new party.

It was a marriage of convenience, but an uneasy one for Mr Devan Nair.

Referring to those days, he said, "There was a great turmoil going on inside me because I was caught in an emotional fix. On the one hand, my head was increasingly with Lee Kuan Yew and company. But on the other hand, my heart emotionally, I was tied up with these people. And it became an intolerable contradiction."

When the Hock Lee bus riots took place, the British government cracked down on the unions and Mr Devan Nair and his comrades, were arrested.

Mr Lee persuaded Mr Devan Nair to get all the detainees to commit to a non-communist Malaya, before securing their release.

Although he was closer to the People's Action Party after it came into power in 1959, this did not mean Mr Devan Nair was willing to fight his communist friends.

So, he went back to teaching, but was soon drawn back out into the political fray by Mr Lee.

Said Janadas Devan, Mr Devan Nair's son, "He would say to my father, 'Here we are Rajaratnam and I, Toh Chin Chye, fighting with our backs to the wall and there you are marking exercise books.'"

Mr Devan Nair's work with the PAP included a stint as the only elected PAP MP in Malaysia after the merger.

Loyal to those who voted for him, Mr Devan Nair stayed put after the Separation, and formed the Democratic Action Party.

But he soon found his position untenable.

Mr Lee, Singapore's Prime Minister from 1959 to 1990, said on 23 October 1981, "It was not a lack of courage that made him leave Kuala Lumpur. The Cabinet decided that Singapore-Malaysia relations would always be bedevilled if Devan Nair remained as a DAP leader. I persuaded him to come back. I told him that the trade union movement in Singapore had to be rebuilt on different assumptions and different attitudes."

And that was Mr Devan Nair's most significant work -- forming the National Trades Union Congress.

But instead of calling for strikes, he focused on "delivering the goods"; his fighting ring was not the streets, but the Industrial Arbitration Court.

To win over the workers used to confrontation, the teacher in him, came to the fore.

Mr Devan Nair, in a 1981 Teachers' Day Reception speech at the Istana, said, "We were all engaged in a vast educational effort but we did not teach in classrooms. I myself had to conceive of the whole labour movement as a gigantic educational workshop."

In 1969, the NTUC held a major "modernisation" seminar which Mr Devan Nair saw as a "do or die" attempt to revitalise the labour movement.

At its centerpiece, was the setting up of workers' cooperatives, like INCOME, WELCOME and COMFORT.

Mr Devan Nair did not make his debut in the Singapore Parliament till 1979, when he won the Anson seat left vacant after veteran unionist P Govindasamy died.

But his biggest personal decision came when he was asked to take up Singapore's highest public office, a position he was to later say was in contradiction to his temperament.

Said Mr Janadas Devan, "He didn't want to be president. He was persuaded but to the very last moment, he tried to get out of it."

He added, "He, I supposed, tried to change the nature of the office to fit his personality but there are limits beyond which that cannot be done. So in retrospect it was quite clear that it was the wrong job for the wrong person."

The late author and journalist, Dennis Bloodworth, summed up Mr Devan Nair's experience as President: "As President with largely constitutional functions, he was to put it frankly, bored. He didn't like the job, he was not really cut out to meet the presidents, kings, queens and others from these countries that visited Singapore. That was not the Nair thing at all."

Mr Bloodworth added, "He started off life as a dogmatic, argumentative sort of chap, 'pugnacious' when Lee Kuan Yew first saw him; and he was hardly suited for what rather was in those days, the milk and water role of being president."

In March 1985, a drinking problem led to Mr Devan Nair's resignation.

Then-Prime Minister Lee said on 28 March 1985, "Mr Speaker, honourable members will want to join me in wishing him fortitude in his task of rehabilitation. With the help of his wife and family, he must find the strength and stamina to break his dependency."

A few years later, Mr Devan Nair was to dispute the diagnosis of alcoholism and a public exchange of letters ensued.

Mr Devan Nair, who migrated to Canada with his wife, was philosophical about his place in Singapore's history.

He once said his only regret in life was to allow himself to be persuaded to occupy a highly ceremonial office so contradicted by his temperament.

But he blamed no one.

And after he had said his piece for what it was worth, Mr Devan Nair added that he expected "to fade away, like all old warriors, into the past."

Some verdicts, he said, "are best left to history." - CNA /ct/de
http://www.channelnewsasia.com/stories/sin.../182396/1/.html

Print this item