| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 369 online users. » 0 Member(s) | 367 Guest(s) Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,311
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,231
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,605
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,296
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,636
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,062
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,465
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,485
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,037
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,239
|
|
|
| போராடும் சிறுமி |
|
Posted by: Vaanampaadi - 12-18-2005, 07:20 AM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (18)
|
 |
<b>முகத்தில் 8 கிலோ கட்டியுடன் போராடும் சிறுமி,
அமெரிக்க மருத்துவமனையில் தீவிர சிகிச்சை </b>
<img src='http://www.dinakaran.com/health/daily/2005/dec/17/girl.jpg' border='0' alt='user posted image'>
படத்தில் பயங்கர தோற்றத்துடன் இருக்கும் இந்த சிறுமியின் பெயர் மார்லி காசஸ். ஹெய்தி நாட்டைச் சேர்ந்தவள். 14 வயதான இவள் கடந்த ஆகஸ்டு மாதம் வரை சாதாரணமாகத் தான் இருந்தாள். ஆனால் அதன்பிறகு திடீரென முகத்தில் பயங்கர வலி உண்டாகி, கட்டி போல வளரத் தொடங்கியது. வாய் - மூக்கு - கன்னம் மற்றும் கண்கள் எங்கு இருக்கிறது என்று தொpயாத அளவுக்கு கட்டி பரவியதால், சிறுமி மூச்சு விட சிரமப்பட்டாள். கொஞ்ச நாளில் 7.250 கிலோ அளவுக்கு கட்டி வளர்ந்தது. இதைத் தொடர்ந்து சிறுமியின் நிலையைக் கண்டு பரிதாபப்பட்ட தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று, அவளை மியாமியில் உள்ள கோல்ட்ஸ் குழந்தைகள் மருத்துவமனையில் கொண்டு சேர்த்தது.
அங்கு டாக்டர் ஜீசஸ் கோமஸ் தலைமையிலான மருத்துவக் குழுவினர் நடத்திய சோதனையில் பாலியோஸ்டாடிக் பைபுரோஸ் டிஸ்பிளேசியா என்ற அபூர்வமான மரபியல் நோய் சிறுமியை தாக்கி இருப்பது தொpய வந்தது. (1 லட்சத்து 50 ஆயிரம் போpல் ஒருவருக்குத் தான் இந்நோய் வருமாம். அப்படியே வந்தாலும் இந்தளவுக்கு மோசமாக வளர்வது அபூர்வமாம். இந்நோய் தாக்கியவர்களின் எலும்புகளின் வளர்ச்சி விநோதமாக மாறும். ஒரு கிண்ணம் முழுக்க ஜெல்லி நிரம்பியிருக்க, அதனுள் ஒன்றிரண்டு எலும்புகள் இருந்தால் எப்படி இருக்குமோ, அதேப் போன்று எலும்பு பந்து போல வீங்கி மாறி விடும்). இதையடுத்து சிறுமிக்கு உடனடியாக முதல் கட்ட அறுவை சிகிச்சை செய்து, சீராக மூச்சு விடுவதற்கு வகை செய்தனர். தொடர்ந்து இன்னும் பல கட்டமாக அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டும் என்று அவர்கள் கூறினர். அனைத்து அறுவை சிகிச்சைகளும் வெற்றிகரமாக முடிந்த பிறகு, முகத்தின் வலது புறத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய வேண்டும். அதன்பிறகே மார்லி காசசுக்கு முழு முகம் கிடைக்கும் அவரது தாயாரிடம் தெரிவிக்கப்பட்டது.
சிறுமியின் முழு மருத்துவ சிகிச்சைகளும் முடிய 95 ஆயிரம் டாலர் பணம் தேவைப்படுமாம். எனினும் அவளது குடும்ப நிலையை கருத்தில் கொண்டு, சிகிச்சைக்கு தேவையான நிதியை நன்கொடை மூலம் திரட்டுவதில் மருத்துவமனை நிர்வாகம் மும்முரமாக இறங்கி உள்ளது. இதுதவிர சிறுமியை குணப்படுத்த நிதி உதவி அளிக்குமாறு சர்வதேச குழந்தைகள் நிதியத்துக்கும் கோரிக்கை மனு அனுப்பி உள்ளது.
தினகரன்
|
|
|
| படத்தின் முதல் நாள் வசூல் ரூ.49 கோடி |
|
Posted by: Vaanampaadi - 12-18-2005, 07:10 AM - Forum: சினிமா
- No Replies
|
 |
அமெரிக்காவில் `கிங்காங்' படத்தின் முதல் நாள் வசூல் ரூ.49 கோடி
லாஸ் ஏஞ்சல்ஸ், டிச. 18-
ஆயிரம் கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட மிகவும் பிரமாண்ட ஆங்கில படம் கிங்காங். பீட்டர் ஜேக்சன். இந்த படத்தை டைரக்டு செய்து உள்ளார். ïனிவர்சல் இந்த படத்தை உலகம் முழுவதும் வினியோகித்து உள்ளது.
கடந்த 14-ந்தேதி இந்த படம் உலகம் முழுக்க வெளியிடப்பட்டது. இந்த படம் தற்போது வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது.
மற்ற ஆங்கில படங்களை போல இந்த படமும் வசூலை குவித்து வருகிறது. அமெரிக் காவில் `கிங்காங்' படத்தின் முதல் நாள் வசூல் ரூ.49 கோடி ஆகும். அமெரிக்கா தவிர்த்து 38 நாடுகளிலும் இந்த படத்தின் வசூல் ரூ.40 கோடியை தொட்டது.
அமெரிக்காவில் முதல் நாள் வசூலில் `கிங்காங்' படம் 21-வது இடத்தை பிடித்துள் ளது. ஸ்பைடர் மேன் படம் ரூ.200 கோடி வசூலை தொட்டு சாதனை படைத்தது. ரிட்டர்ன் ஆப்தி சிங் ரூ.170 கோடியும், தி டூ டவர்ஸ் ரூ.130 கோடி யும் வசூலை அள்ளி குவித்தது.
Maalaimalar
|
|
|
| இலங்கையை சேர்ந்தவருக்கு 15 வருட சிறை |
|
Posted by: Vaanampaadi - 12-18-2005, 06:47 AM - Forum: செய்திகள்: உலகம்
- No Replies
|
 |
போதைப் பொருள் கடத்தல்: இலங்கையை சேர்ந்தவருக்கு 15 வருட சிறை
டிசம்பர் 17, 2005
மதுரை:
ஹெராயின் போதைப் பொருள்கள் கடத்தல் தொடர்பாக இலங்கையை சேர்ந்த ஒருவருக்கு 15 வருட கடுங்காவல் தண்டனையும், அவரது கூட்டாளிகள் 3 பேருக்கு 10 வருட கடுங்காவல் தண்டனையும் வழங்கி மதுரை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சுமார் 7 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருள் வைத்திருந்ததாக கடந்த 2002ம் ஆண்டு டிசம்பர் மாதம் மதுரையில் காரில் வந்த 6 பேர் கொண்ட கும்பலை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் இந்த போதைப் பொருளை இலங்கைக்கு கடத்த திட்டமிட்டதாக விசாரணையில் தெரியவந்ததை தொடர்ந்து 6 பேரையும் போலீசார் கைது செய்து அவர்கள் மீது போதைப் பொருள் ஒழிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு விசாரணையின் முடிவில் தீர்ப்பளித்த நீதிபதி மாணிக்கம், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முக்கிய குற்றவாளியான இலங்கையை சேர்ந்த முகமது ஃபசிரின் என்பவருக்கு 15 வருட கடுங்காவல் தண்டனையும், ரூ. 4 லட்சம் அபாராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது கூட்டாளிகள் 3 பேருக்கு 10 வருட கடுங்காவல் தண்டனையும், தலா ரூ. 3 லட்சம் அபாராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 2 பேரை நீதிமன்றம் விடுதலை செய்தது.
Thatstamil
|
|
|
| அபாண்ட குற்றச்சாட்டு என்கிறார் தமிழ்செல்வன் |
|
Posted by: Vaanampaadi - 12-18-2005, 06:46 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
<b>இத்தாலிய பிரமுகர்கள் சென்ற ஹெலிகொப்டர் மீது துப்பாக்கித் தாக்குதல்: புலிகளே பொறுப்பு என்கிறது போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழு; அபாண்ட குற்றச்சாட்டு என்கிறார் தமிழ்செல்வன்</b>
இலங்கையின் அம்பாறைபகுதியில் இலங்கை ராணுவத்தின் ஹெலிகொப்டர் கடந்த புதன்கிழமை தாக்கப்பட்ட சம்பவம், போர்நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மீறிய செயல் என்றும் இந்த சம்பவத்திற்கு விடுதலைப்புலிகளே பொறுப்பேற்க வேண்டும் என்றும் போர் நிறுத்த கண்காணிப்புக்குழு இன்று அறிவித்துள்ளது.
இலங்கை ராணுவ ஹெலிகொப்டர் மீது குண்டுகள் அடித்திருந்தன
"சிறிய ஆயுதம் ஒன்றிலிருந்து வந்த நான்கு குண்டுகள் ஹெலிகாப்டரில் அடித்திருக்கின்றன. இந்த குண்டுகள் புலிகள் கட்டுப்பாட்டுப் பிரதேசம் ஒன்றிலிருந்துதான் வந்திருக்கின்றன. அப்படிப் பார்க்கும்போது இதற்கான முழுப் பொறுப்பையும் புலிகள்தான் ஏற்கவேண்டும். ஹெலிகாப்டரை செலுத்தியவர்களையும் அதிலிருந்த முக்கிய அதிகாரிகளையும் விடுதலைப் புலிகளையும் இச்சம்பவம் தொடர்பாக நாங்கள் விசாரித்தோம். புலிகள் தங்கள் அதிகாரத்திற்குள் செய்யக்கூடிய அனைத்தையும் செய்து, இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நான் அவர்களிடம் வலியுறுத்தியிருக்கின்றேன்." என்று தமிழோசையிடம் தெரிவித்தார் போர்நிறுத்த கண்காணிப்புக் குழுவின் தலைவர் ஹொக்ரூப் ஹக்லண்ட்.
ஆனால் விடுதலைப் புலிகளே பொறுப்பேற்க வேண்டும் என்பதை விடுதலைப் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப. தமிழ்செல்வன் அவர்கள் மறுத்திருக்கிறார். இது ஒரு அபாண்டமான குற்றச்சாட்டு என்று கூறியுள்ள அவர், இது தொடர்பாக தாம் ஏற்கெனவே நோர்வே தூதரகத்திற்கும் போர்நிறுத்த கண்காணிப்பு குழுவிற்கும் தெரிவித்துள்ளதாகவும் கூறினார்.
ஹெலிகொப்டர்கள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் முன்னதிமதியுடன் பலமுறை வந்துசென்றுள்ளதாகவும், ஆனால் தாக்கப்பட்டதாக கூறப்படும் இந்த குறிப்பிட்ட ஹெலிகொப்டர் பற்றியோ, அதில் இத்தாலிய வெளிவிவகார அமைச்சர் பயணித்ததைப் பற்றியோ தமது அமைப்புக்கு எதுவித தகவல்களும் தரப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்திற்குள் இப்படியான ஒரு சம்பவம் நடைபடவில்லை என்றும், ஐரோப்பிய நாடுகளுடனான தமிழ்த் தரப்பின் உறவைத் துண்டிப்பதற்கான ஒரு முயற்சியாக இந்த குற்றச்சாடுகள் திட்டமிட்டு கூறப்படுவதாகவும் தமிழ்ச்செல்வன் கூறினார்.
BBC Thamiloosai
|
|
|
| அம்மம்மா மீனோ பிடிக்கிறியள்? |
|
Posted by: Snegethy - 12-18-2005, 06:35 AM - Forum: நகைச்சுவை
- Replies (5)
|
 |
<b>அம்மம்மா மீனோ பிடிக்கிறியள்</b>?
எனது நண்பியின் சகோதரி மகன் இளங்குமரனுக்கு மூன்று வயதாகவிருக்கும்
போது ஒரு நாள் ஒரு சத நாணயத்தை (Penny) விழுங்கி விட்டார்.ஏதோ ஒரு
வகையில் அந்த நாணயத்தை பேரனின் உடம்பிலிருந்து வெளியேற்ற வேண்டும்
என்று பழங்கள் எல்லாம் நறுக்கி கொடுத்தார் அம்மம்மா.
இளங்குமரன் ஒரு கவலையும் இல்லாமல் விளையாடினாலும் அம்மம்மாக்குப்
பயம் குழந்தைக்கு ஏதும் ஆகிவிடுமோ என்று.குமரன் washroom செல்லுவதைப்
பார்த்துவிட்டு தானும் கூடவே சென்று குமரனிடம் தான் flash பண்ணுவதாக
சொல்லி குமரனை அனுப்பிவிட்டு அம்மம்மா கழிவோடு penny வெளியேறி
விட்டதா என்று ஒரு சின்ன தடியால அலசிப்பார்க் கொண்டிருக்கும்போது
பின்னாலிருந்து ஒரு கேள்வி
குமரினடமிருந்து
<b>"அம்மம்மா மீனோ பிடிக்கிறியள்? "</b>
இந்தச் சம்பவத்தைக் கேட்டுச் சிரிச்சதில Penny இருந்ததா இல்லையா என்று
கேட்க மறந்து விட்டேன்.
-சினேகிதி-
|
|
|
| பொங்கு மகிழ்வோடு நீங்கள் போய்விடுவீர்கள் |
|
Posted by: Snegethy - 12-18-2005, 06:27 AM - Forum: கதைகள்/நாடகங்கள்
- Replies (29)
|
 |
<b>பொங்கு மகிழ்வோடு நீங்கள் போய்விடுவீர்கள்</b>
பின்னேரம் 6 மணி இருக்கும் மகளையும் வாசல்ல இருந்து படிக்கச் சொல்லிட்டு பாரதி முத்தத்தில அரிசிமா வறுத்துக் கொண்டிருந்தவா.பொத் பொத்தெண்டு மதிலால நிறையப்பேர் ஏறி விழுற சத்தம் பாரதி அடுப்பையும் அப்பிடியே விட்டிட்டு பிள்ளையையும் வீட்டுக்குள்ள போகச்சொல்லி சைகை காட்டிப்போட்டு தானும் போய்க் கதவைச் சாத்திப்போட்டு யன்னலோரமா நிண்டு கவனிச்சா நாலுபேர் கையில துவக்கோட முதுகில சாரத்தால போர்த்தபடி நிக்கினம்.
ர் ர் என்று மெல்லமா கதவை சுரண்டுற சத்தம்.பாரதிக்கு உடம்பெல்லாம் நடுங்கத் தொடங்கிட்டுது.
"சித்தி பாரதிச்சித்தி நான்தான் றஜி வந்திருக்கிறன்.கதவைத் திறக்கிறிங்களே".
லைற்றைப் போட்டிட்டுக் கதவைத்திறந்து விட்டிட்டு தெய்வமே நீயேடா எனக்கு இப்பதான் உயிர் வந்தது.நான் போனமுறை மாதிரி கள்ளனாக்கும் எண்டு நினைச்சிட்டன்.ஆராவது பாத்துத் தொலைக்க முதல் கெதியா உள்ள வாங்கோ பிள்ளையள்.என்ன இந்த நேரத்தில ஆயுதத்தோட வந்திருக்கிறியள்?
சித்தி நாங்கள் நாளைக்கு இரவு மட்டும் இங்கதான் நிக்கவேணும் உங்களுக்கு அதில என்னவும் பிரச்சனையோ ?
சீ சீ நீங்கள் வெளியில வராம இருந்தாச் சரி.
சரியான பசி சாப்பிட என்னவும் இருக்கோ??
அந்த அறையில இருங்கோ பத்து நிமிசத்தில சாப்பாடு தாறன்.
மகள் அண்ணாவுக்கு என்னவும் வேணுமோ எண்டு கேட்டு எடுத்துக்குடுங்கோ.
றஜி அண்ணா நான் இந்த துவக்கை தொட்டுப் பார்க்கட்டே??
ம் கவனமா தொட்டுப் பாரன்.
உங்களோட வந்தா எனக்கும் இப்பிடி ஒன்று துவக்கு தருவினம் என்ன?
நீ அங்க வரவேண்டாம் நீ வந்திட்டா பிறகு உங்கட அம்மாவையும் எங்கட அம்மாவையும் ஆர் பாரக்கிறது.
நீங்கள் நாளைக்கு எங்க போகப்போறிங்களண்ணா?
றஜி பத்து வயதேயான தங்கையின் கேள்விக்குப் பதில் சொல்லமுடியாத நிலையில் அவளைத் தூக்கிக் கொஞ்சி விட்டுப் பேசாமல் இருந்தார்.
சாப்பாடு ரெடி றஜி.
சித்தி உங்கட கையால சமைச்ச சாப்பாடு சாப்பிடுறது இன்றைக்குத்தான் கடைசி என்று நினைக்கிறன்.
சும்மா இருடா அப்பிடியெல்லாம் சொல்லக்கூடாது.ஏன் எங்காவது தூரமான இடத்துக்குச் சண்டைக்குப் போகப்போறீங்களே?
இப்ப தெரியாது சித்தி தூரத்துக்குப் போவமோ திரும்பி வருவமோ என்று ... நால்வரும் ஒருவரையொருவர் பாரத்துக் கொண்டார்கள்.
மறுநாள் காலை நன்றாகவே விடிந்தது.நால்வரும் பாரதிக்கு முதலே குளித்து முடித்திருந்தார்கள்.பாரதி எழும்பி வந்தால் முத்தத்தில துளசிச் செடியில சாரம் விரிச்சுக் கிடிந்தது.பாரதிக்கு வந்த கோபத்தில "
றஜி சித்தப்பாவும் ஊரில இல்லை நீங்கள் உப்பிடி நீட்டுக்கு சாரத்தை விரிச்சு வக்க யாராவது பார்த்திட்டு ஆமிக்காரரிட்ட போய்ச் சொன்னால் நான் என்னடா பண்ணுவன்.முதல்ல போய் உதெல்லாம் எடுத்து உள்ளுக்க கொண்டே விரி பார்ப்பம்."
சித்தி கோவிக்காதங்கோ.நான் போகும்போது உங்கட சிரிச்ச முகத்தைத்தான் பார்க்கவேணும்.
"நீ வந்ததிலிருந்து கதைக்கிறது ஒண்டும் சரியாப்படல எனக்கு.எல்லாரும் வாங்கோ பாணும் சம்பலும் சாப்பிடுவம்."
காலம சாப்பிட்டிட்டு அறைக்குள்ள போனவங்கள் இன்னும் வெளில வரேல.."மகள் போய் மத்தியானச் சாப்பாடு றெடியெண்டு சொல்லுங்கோ".
அம்மா அம்மா றஜியண்ணா பெரிய படம் ஒன்று வைச்சுக்கொண்டு மற்ற அண்ணாவைக்கு ஏதோ படிப்பிக்கிறார்.
பொழுதுசாயிற நேரம்தான் அறையை விட்டு வெளில வந்தவை சாப்பிட்டிட்டு கொஞ்ச நேரம் இருந்து கதைச்சிட்டுப் போட்டு வாறம் எண்டு சொல்லிட்டு துவக்கு எல்லாம் எடுத்துக்கொண்டு போட்டினம்.
அவையள் போய்க் கொஞ்ச நேரத்தால சூட்டுச் சத்தம் கேட்டது.
பாரதியக்கா பாரதியக்கா….
என்ன நிமல் ஏனிப்பிடி ஓடி வாறாய்?
நாவலடிச் சந்தியில பெடியளும் ஆமியும் நேர சந்திச்சிட்டாங்களாம்.உங்கட றஜி அண்ணாவை வேற எங்கயோ காம்ப் அடிக்கப் போகேக்க அம்பிட்டிட்டனமாம்.பக்கத்தில நிண்ட ஆறேழு ஆமியைச் சுட்டுப்போட்டு வயித்தில கிறனைற்றை வச்சு அமத்திப் போட்டினமாம்.ஆரும் தப்பேல்ல என்று கோபாலு மாமா சொன்னவர்.
-சினேகிதி-
|
|
|
| மீண்டும் ஒரு அக்கிரமம்... |
|
Posted by: தூயவன் - 12-18-2005, 05:20 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (23)
|
 |
<b>இளம்யுவதி பாலியல் வன்புணர்வின் பின் படுகொலை - புங்குடுதீவில் கடற்படையினர் கோரத்தாண்டவம் </b>
புங்குடுதீவில் இளம்யுவதி ஒருவர் சிறீலங்கா கடற்படையினரால் பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். புங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்து வெளியைச் சேர்ந்த இளையதம்பி தர்மினி(20) என்ற யுவதியே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவராவார்.
குறித்த யுவதி இரவு படுக்கைக்கு தனது பெரிய தாயார் வீட்டிற்கு செல்வது வழக்கம். வழமை போன்று நேற்று இரவு 7மணியளவில் தனது பெரிய தாயர் வீட்டை நோக்கிச் சென்ற யுவதியை சிறீலங்கா கடற்படையினர், வலுக்கட்டாயமாக கடத்திச் சென்று பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கிவிட்டு கொலை செய்து புங்குடுதீவு மடத்துவெளி முருகன் கோயிலுக்கு அருகாமையில் உள்ள பாளும் கிணற்றில் போட்டுள்ளார்கள்.
யுவதியைக் காணாத பெற்றோர் தேடிச்சென்ற போது குறித்த கிணற்றில் சடலமாகக் கிடக்க கண்டனர். இது தொடர்பாக கடற்படையினருக்கும், காவல்துறையினருக்கும் தகவல் கொடுத்தும் வராததையிட்டு அவ்விடத்தில் மக்கள் கூடியுள்ளனர். குறித்த இடத்திற்கு காவல்துறையினரோ, கடற்படையினரோ இது வரையும் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல்: சங்கதி
|
|
|
| வீடியோ பாடல்கள் |
|
Posted by: Vishnu - 12-17-2005, 10:52 PM - Forum: தரவிறக்கங்கள்
- Replies (10)
|
 |
இணையங்களில் கிடைத்த சில வீடியோ பாடல்களை இங்கே இணைக்கிறேன்...
<b>1ஆவது பாடல் :- J town story</b>
<img src='http://img229.imageshack.us/img229/5044/pdvd0524re.png' border='0' alt='user posted image'>
<img src='http://img229.imageshack.us/img229/971/pdvd0507yp.png' border='0' alt='user posted image'>
<img src='http://img229.imageshack.us/img229/5051/pdvd0515jn.png' border='0' alt='user posted image'>
தரையிறக்கம் செய்ய :- http://s42.yousendit.com/d.aspx?id=1S10XMD...3U080IKNFIX53J1
|
|
|
|