| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 183 online users. » 0 Member(s) | 181 Guest(s) Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,311
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,231
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,605
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,296
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,636
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,062
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,465
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,485
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,037
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,239
|
|
|
| புங்குடுதீவில் கடற்படை பொது மக்கள் மீது துப்பாக்கிச் சூடு |
|
Posted by: Vaanampaadi - 12-18-2005, 05:25 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
ஞாயிறு 18-12-2005 20:59 மணி தமிழீழம் [யாழ் நிருபர்]
<b>புங்குடுதீவில் கடற்படை பொது மக்கள் மீது துப்பாக்கிச் சூடு</b>
புங்குடுதீவில் இளம் பெண் ஒருவர் கடற்படையினரின் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து புங்குடுதீவு மக்கள் பெரும் ஆர்ப்பாட்டம் ஓன்றை கடற்படையினருக்கு எதிராக நடத்திய போது ஆத்திர முற்ற கடற்படையினர் மேற் கொண்ட துப்பாக்கிச் சூட்டில் புங்குடுதீவு 7 ம் வட்டாரம் மடத்தடியைச் சேர்ந்து தபால் ஊழியரான பாலசிங்களம் வரதராசா என்ற 54 வயது நிரம்பியவர் தலை நெஞ்சு மற்றும் புஐத்தில் படுகாயங்களுக்கு உள்ளாகிய நிலையில் யாழ்ப்பாணம் போதனா வையித்திய சாலையில் உள்ள அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளாh.;
<img src='http://www.pathivu.com/news2/admin/data/upimages/punguthivu2.gif' border='0' alt='user posted image'>
இன்று காலை 11.00மணியளவில் நேற்று முன்தினம் படுகொலை செய்யப்பட்டு கிணற்றில் போடப்பட்ட தர்சினியின் இறுதிக் கிரியைகள் இடம் பெற்றன.அப்போது குறிப்பிட்ட இடத்திற்கு வாகணத்தில் வந்த கடற்படையினர் வீதியில் நின்ற பொதுமக்கள் மீது வாகனத்தினால் மோதுவதைப் போன்று வேகமாக செலுத்தி வந்ததைத் தொடர்ந்து பொது மக்களுக்கும் கடற்படையினருக்கும் அடையே பலத்த வாக்கு வாதம் ஏற்பட்டது.
<img src='http://www.pathivu.com/news2/admin/data/upimages/punguthivu1.gif' border='0' alt='user posted image'>
இதன் காரணமாக ஆத்திரமுற்ற பொது மக்கள் அப்பகுதுயில் பொது மக்களின் தொடர்புக்காக கடற்படையினர் அமைத்திருந்த பொதுமக்கள் தொடர்பகக் அலுவலகத்தை பிடுங்கியெறிந்து ஆர்ப்பாட்டம் செய்தார்கள் ஆத்தரமுற்ற கடற்படையினர் பொது மக்களை நோக்கி துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டார்கள். இதன் காரணமாக அப் பகுதியில் நிலைகொண்டிருந்த மக்கள் பெரும் அல்லோல கல்லோலப்பட்டு ஒடியதில் பலர் சிறு காயங்களுக்க உள்ளாகிய நிலையில் அருகில் உள்ள தனியார் வையித்திய சாலையில் சிகிச்சைபெற்றுச் சென்றுள்ளார்கள.;
இராணுவத்தினரின் இத்தகைய அடாவடித்தனமான செயலை பொது அமைப்புக்கள் கடுமையாக கண்டித்துள்ளதுடன் இது பொன்ற சம்பவங்கள் தொடர்ந்து கொண்டு இருப்பதை எதிர்காலத்தில் தொடர்ந்தும் அங்கீகரிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்கள்.
Pathivu
|
|
|
| பரமேஸ்வராச் சந்தியில் இராணுவத்தினர் பொதுமக்கள் மீது தாக்குதல |
|
Posted by: Vaanampaadi - 12-18-2005, 05:21 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (3)
|
 |
ஞாயிறு 18-12-2005 21:08 மணி தமிழீழம் [யாழ் நிருபர்]
பரமேஸ்வராச் சந்தியில் இராணுவத்தினர் பொதுமக்கள் மீது தாக்குதல் 35பேருக்கு மேல் காயம்
சர்வதேச தமிழீழ மாணவர் பேரவை இராணுவத்தால் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கையில் இராணுவத்தினர் முயற்சித்துக் கொண்டு இருக்கின்றார்கள். பிற்பகல் 4.00 மணி முதல் இந்நடவடிக்கையில மிகவும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
தமிழ் மாவணவர் பேரவை உறுப்பினர்கைள கடுமமையா சோதனை செய்ய முற்பட்ட வேளை மாணவர்களுக்கும் படையினருக்கும் பெரும் தர்க்கம் இடம்பெற்றது.
இதனால் பெரும் ஆத்திரம் அடைந்து படையினர் அவ்வழியில் நடமாடும் பொது மக்கள் மீது தமது ஆத்திரத்தை கொட்டி தாக்கியுள்ளார். இத்தாக்குதலில் 35க்கு மேற்பட்ட பொதுமக்கள் தாக்குதலுக்கு இலக்காகினர்.
வீதியால் வந்த வாகணங்களும் அடித்துடைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக பொது மக்கள் போக்குவரத்துச் செய்ய முடியாத நிலமை ஏற்பட்டுள்ளதுடன் பொது மக்கள் பெரும் சிரமங்களுக்கும் உள்ளாகியுள்ளார்கள்.
இதன் காரணமாக பெரும் பதட்டமான நிலமை அப் பகுதியான பலாலி வீதி கந்தர்மடம் பல்கலைக்கழக சுற்றாடல் மற்றும் திருநெல்வேலிப் பகுதிகளில் காணப்படுகின்றது
Pathivu
|
|
|
| ஈழ்பதீஸ் உண்டியலானின் சாகஸங்கள் ........ |
|
Posted by: ஜெயதேவன் - 12-18-2005, 04:00 PM - Forum: உங்கள் கருத்துக்கள்
- Replies (70)
|
 |
பற்பல இடையூறுகளுக்கு, அவமதிப்புகளுக்கு மத்தியில் எனது தொடர் பயனத்தை யாழ் களத்தில் எழுதி வந்த எனது உண்மைத் தொடரை ஒருவர் இங்கு தடை செய்ய முற்பட்டார்!!!! அவர் கூறிய காரணங்கள் விசித்திரமாணவை!!! இன்று புலத்தில் நடக்கும் ஜனநாயகத்தின் பெயரால் நடைபெறும் நிகழ்வுகளே அறியாதவராயோ?? அன்றி "பால் குடிக்கும் பூனையாக" இருக்க முற்படுகிறாரோ தெரியவில்லை?? இல்லை இவற்றிற்கு மேலாக விலை போய் விட்டாரோ என்ற சந்தேகம் கூட ஏற்படுகிறது!!!! எது எப்படியிருப்பினும் இவ்வுண்டியலானின் பயணம் தொடர வேன்டுமா??? கள உறவுகள் பதிலளிக்கட்டும்!!!!!
ஆரம்பத்தில் தேசியவாதியின் போர்வையில் உலாவிய நான், பின் ஈழ்பதீஸானின் உன்டியலில் செய்த சாகஸங்கல் மூலம் முகமூடி உடைந்து, இன்று இந்திய இராணுவ காலங்களில் கொலை, கொள்ளை, கற்பளிப்புகளில் ஈடுபட்டு ஐரோப்பாவிக்கு தப்பியோடி வந்த கும்பல்களுடனும், ஐரோப்பாவில் தமிழ் பேசும் எம்மவர்களிடையே குழப்பங்களை ஏற்படுத்த வெளிக்கிட்டிருக்கும் ஒசாமா எனும் இஸ்லாமிய காட்டுமிராண்டிக் கும்பலுடனும், மொட்டையடித்த சிங்கள இனவாத காவிகளுடனும், புலத்தில் குறிப்பாக லண்டனில் ஈழ்பதீஸ் உண்டியலானின் சாகஸங்கள் ........ தொடர்கின்றன!!!!
இந்த உண்டியலான் சம்பந்தமாக சென்ற தொடர்....
1) ஓர் அப்பாவி மீது தனிப்பட்ட கோபங்களுக்காக சேற்றை கொட்டப்படுவதாக நினைக்கிறீர்களா???
2) உண்டியலான் சம்பந்தமான விபரங்கள் உண்மைக்கு அப்பாற்பட்டவைகளாக நினைக்கிறீர்களா???
3) இந்த உண்டியலான் ஒரு அப்பாவித் தமிழ் மகனா?? இல்லை எம்மினம் வெட்கித் தலை குனியும் அவமானச் சின்னங்களாக இருக்கும் "டக்கிலஸ், ஆனந்தசங்கரி, கருணா, பரந்தன் ராசன், ...." வரிசையில், அன்னியர்களுக்கோ, எதிரிக்கோ விலை போயுள்ள துரோகக் கூலியா?????
பி.கு: மோகன்! தயவுசெய்து இக்கருத்தையும், முன்பு நடைபெற்றதுபோல் நீக்க அனுமதிக்க வேண்டாம்!!!
|
|
|
| இன்னும் எத்தனை நாள்? |
|
Posted by: iruvizhi - 12-18-2005, 03:51 PM - Forum: தமிழீழம்
- Replies (4)
|
 |
<img src='http://img514.imageshack.us/img514/1966/punkudutivu5ip.jpg' border='0' alt='user posted image'>
<b>இன்னும் எத்தனை நாள்
தொடரும் உங்கள்
சத்தமில்லாத யுத்தம்?
சாமானியனைக் கொன்று
சாகசம் நிகழ்த்தலாம்
என்னும் பகல் கனவா?
பாடையில் போக துடிக்கும்
சிங்கள படைகளே...
எம் ஏங்கங்களை
எல்லாவற்றையும்
எரித்து, எம்மை அடித்து
உதைப்பதெல்லாம்
என்னும் எத்தனைகாலம்?
நாங்கள் விடுக்கின்ற
எச்சரிக்கை
உனக்கு எரிச்சலை
உண்டு பண்ணலாம்.
உன் வயிற்றெரிச்சலை
வேண்டுமானால் நீர்
ஊற்றி அணௌத்துக்கொள்.
எம் உரிமைத்தீயை
அணைக்க நினைத்தால்....
உனக்கே தெரியும்
எங்கள் யுக்தி
அதுவே மக்கள் சக்தீ.
விரைவில் விளங்கிக் கொள்வீர்
வீணரே....</b>
படம் பெற்றுக் கொண்டது:http://www.sankathi.net/ நன்றி
|
|
|
| பெரும் பொருள்செலவில் கட்டப்படும் பள்ளிக்கூடம் |
|
Posted by: Mathuran - 12-18-2005, 03:22 PM - Forum: சினிமா
- Replies (4)
|
 |
பெரும் பொருள்செலவில் கட்டப்படும் பள்ளிக்கூடம்
<img src='http://img235.imageshack.us/img235/9836/nilasur12bg4502xg.jpg' border='0' alt='user posted image'>
தங்கப்பச்சானின் இயக்கத்தில் பெரும் பொருள்ச்செலவியில் பிரமாண்டமாக தயாராகும் பள்ளிக்கூடம் என்னும் திரைப்படத்தில், தமிழகத்தின் முன்னணி நடிகர்கள் சூர்யா, சேரன் மற்றும் தங்கர்பச்சான் இணைந்து நடிக்கவுள்ளனர். பள்ளிக்கூடம் வெற்றி பெற வாழ்த்துகின்றோம்.
<img src='http://img235.imageshack.us/img235/3784/padmache3752ew.jpg' border='0' alt='user posted image'>
தகவல்: தற்ஸ் தமிழ். கோம்
|
|
|
| ஜரோப்பாவில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் கண்காட்சிகள் |
|
Posted by: kurukaalapoovan - 12-18-2005, 10:47 AM - Forum: புலம்
- No Replies
|
 |
ஜரோப்பாவில் நடந்துவரும் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் கண்காட்சிகள்.
ஆழிப்பேரலை அனர்த்தத்தின் பின்னர் இலங்கையின் வடக்குக் கிழக்கு பிரதேசங்கள் அபிவிருத்தித் திட்டங்களில் இலங்கை அரசால் காலம் காலமாக புறக்கணித்துள்ளார்கள் என்ற உண்மை பல உலக நாட்டு அரச அரச சார்பற்ற உதவி தொண்டர் நிறுவனங்களிற்கு தெரிய வந்தது. வடக்கு கிழக்கு மக்களின் நலன்களை கவனித்துவரும் நேர்மையான தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் சேவைகளை கவனித்து பாராட்டவும் பல புகழ் பொற்ற ஊடகங்கள் உட்பட அனைத்து சர்வதேச சமூகம் தவறவில்லை.
புலத்தில் ஆழிப்பேரலை அனர்த்த காலத்தில் தமிழ்ர் புனர்வாழ்வுக் கழகத்திற்கு நிதி பொருள் உதவி செய்தது புலம் பெயர்ந்துள்ள தமிழ் மக்கள் மாத்திரம் அல்ல.
இன்று தமிழர் புனர்வாழ்வுக் கழகம் தமக்கு கிடைத்த உதவிகளிற்கு நன்றி செலுத்தும் முகமாக ஜரோப்பாவில் கண்காட்சிகள் நடத்தி வருகிறார்கள். அவர்கள் நடைமுறைப்படுத்தியுள்ள திட்டங்களின் ஒளிப்படம், புகைப்படங்கள், எதிர்கால திட்டங்களின் மாதிரி வடிவமைப்புகள் போன்றவற்றை உள்ளடக்கியதாக உள்ளது அந்த கண்காட்சிகள்.
பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியிலும் இவ்வாறான நிகழ்ச்சிகள் நடந்தேறியுள்ளன. அரசுகள் அமைச்சுக்கள் நிலையில் இல்லாவிட்டாலும் இங்கே உள்ளுர் மாநாகர ஆட்சியாளர்கள் தரத்தில் பலரின் உதவிகள் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திற்கு கிடைக்கப் பெற்றது. அவர்கள் இந்த கண்காட்சிக்கு அழைக்கப்பட்டு கொளரவிக்கப்பட்டு,அவர்களுடைய உதவிகள் எவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ளது என்பவற்றை ஆதார ஆவணங்களோடு விளங்கப்படுத்தி எதிர்கால திட்டங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டு வருகிறது.
<b>மூலம் தமிழ் தேசிய இணைய "வணக்கம் ஜரோப்பா" நிகழ்ச்சி 18 மார்கழி 2005.</b>
<i>இந்த முன்மாதிரியான நிகழ்வுகள் ஜரோப்ப சமூகங்களிற்கும் ஈழத் தமிழர்களிற்கும் இடையிலான உறவுகள் மேலும் வலுவடையும் என்பதில் சந்தேகம் இல்லை.</i>
|
|
|
| கறுப்புச் சப்பாத்து |
|
Posted by: MUGATHTHAR - 12-18-2005, 10:39 AM - Forum: கதைகள்/நாடகங்கள்
- Replies (8)
|
 |
<b>கறுப்புச் சப்பாத்து</b>
பல் வேறு வடிவங்களாக உருமாறி உருமாறி முகில்கள் வேகமாகச் சென்று கொண்டிருந்தன. வைகாசி மாத காற்று எழுந்து விட்டதை அவை உணர்த்திக் கொண்டிருந்தன் எதுவுமே நிரந்தரமில்லை எங்கும் ஏதிலும் மாற்றங்கள் மட்டும்தான் நிகழ்ந்து கொண்டே இருக்கும் மாற்றங்கள் மட்டும்தான் நிரந்தரம் போலும் ஆனால் . . .என் வாழ்வில் மட்டும் ஏன் மாறாத சோகம் அவள் பெருமூச்சு விட்டுக் கொண்டாள் .அடங்க மாட்டாத அழுகை சட்டெண்டு வெளி வந்து விட்டது சேலைத் தலைப்பால் வாயைப் பொத்தி மெல்ல அதனை அடக்கினாள் கண்களில் கண்ணீர் நிறைந்து பார்வையைத் தெளிவற்றதாக்கியது மெல்லக் கண்களைத் துடைத்துக் கொண்டாள் கணவனின் முகம் மனதில் விழுந்தது எட்டு வருடங்களுக்கு முன்பு அவனைத் திருமணம் செய்த போது அவள் இருந்த நிலையை எண்ணிப் பாத்தாள்
துரை உனக்கு கொஞ்சம் கூடப் பொருத்தமில்லாதவன் என்று சொன்ன சின்னம்மாவும் அவன் படிப்பறிவில்லாதவன் குடிகாரன் நீ பாழ்கிணத்துக்க விழப்போறியே எனக் கேட்ட உறவினர்களையும் சரசு நீ பேசாமப்படி இப்ப என்ன கலியாணத்துக்கு அவசரம் என்று ஆதுரத்துடன் உரைத்த ஆசிரியரையும் மீறி அவனை அவள் திருமணம் செய்ய சம்மதித்ததே தன்னை விருப்பத்துடன் ஒருவன் வீடு தேடி வந்து கேட்கும் போது மறுப்பதா ? என்ற ஒரு நிலையிலேயே.
ஆனால் எல்லாம் அவர்கள் சொன்னது போலவே நடந்தது துரை கணவனாக வந்தது முதல் அவள் மெல்ல மெல்ல வெறுமையாகத் தொடங்கினாள். அவளது கைகள் கழுத்து எல்லாமே மூளியாகி விட்டது வீட்டின் பாத்திரம் பண்டம் எல்லாம் மெல்ல மெல்ல சாராயக் கடைகளுக்கும் தவறணைகளுக்கும் போய்க் கொண்டிருந்தன கண்ணீர் நிறைந்து கன்னத்தை ஈரமாக்கின விருப்பமில்லாத வேண்டாத அந்த கடந்த கால சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நினைவில் வந்து குடைந்து கொண்டிருந்தன அவள் பலமாகத் தலையை அசைத்தாள் எல்லாவற்றையும் எறிந்து விட்டு கைகளை விசிறி நடக்கவேண்டும் போலிருந்தது. கையிலிருந்த அந்த சிறிய சப்பாத்துப் பெட்டி கூட பெரிய சுமையாக இருப்பதைப் போல உணர்ந்தாள்
வேண்டாத சுமையைச் சுமப்பதாகவே அவள் மாலவனை சுமந்தாள் ஆனால் அவன் பிறந்த பிறகு அவளுக்கு இருந்த ஒரே ஆறதலாக மாலவன் இருந்தான். குடிகார கணவனை நம்பி காலத்தை ஓட்ட முடியுமா. . . .
முhலவன் பிறந்த பலனோ என்னவோ அவளுக்கு பெரிய ஆஸ்பத்திரியில் அந்த தாதி வேலை கிடைத்தது இப்போதெல்லாம் துரை அவளது சம்பள நாளன்று மட்டும் குடிவெறியில்லாது நல்ல கணவனாகக் காத்திருப்பான் ஆனால் அவளுக்குத் தெரியும் அவனது வேடம் அந்த சம்பளத்தைப் பறிக்கும் வரைதான் என்பது அதைப் பறிப்பதுக்கு சகல விதமான கைங்கரியங்களையும் அவன் செய்வான். கொடுக்கா விட்டால் வீட்டில் பிரளயம் தான் ஏற்படும் ஆனால் இப்போதெல்லாம் அந்தப் பிரளயங்களைச் சந்திக்க பழகிவிட்டிருந்தாள் மனதில் சமை பெருமூச்சாக கிளர்ந்து வெளிப்பட்டது கையிலிருந்த சப்பாத்துப் பார்சலைப் பார்த்தாள் சிறிய கறுப்புச் சப்பாத்துக்கள் இரண்டு மாதமாக மாலவன் அதனைக் கேட்டது. . .
ம். . . இந்த மாதச் சம்பளத்திலைதான் வாங்கக் கூடியதாக இருந்தது.
. . அம்மா. . .சப்பாத்துப் போடாமல் பள்ளிக்கூடத்துக்கு வரவேண்டாம் எண்டு அங்க சேர்மார் ஏசினம் . . சில நேரம் முதல் பாடம் வகுப்புக்கு வெளியாலை நிக்க வைப்பினம். . .
திக்கி திக்கி மாலவன் சொல்லும் போதெல்லாம் . . . அவள்
. . . .வாங்கிக் கொண்டு வாறன். . . . .
என்று பொய்யாகச் சொல்வதை நம்பி சிரிப்பான் அந்தச் சிரிப்பு அவனை வேகவைத்து விடும்
அந்த நெருப்பு வெயிலில் வீட்டை நோக்கி நடந்தவளுக்கு படலையடியில் மாலவன் நிற்பது தெரிந்தது பள்ளிக் கூடம் முடிந்த பிறகு அவளது அம்மாவுடன்தான் வீட்டில் நிற்பான் ஆனாலும் அவனைக் கண்டவுடன் தான் சரசுக்கு நிம்மதி ஏற்படும்
அந்த ஒழுங்கை ஒரு நேரம் கலகலப்பாக ஆட்பிளக்கமாக இருந்தது ஆனால் இப்போது ஒரு சில குடிகளே அங்கு இருந்தனர் யுத்த காலம் இடம்பெயர்ந்த சனங்கள் இன்னும் வரவில்லை
அம்மா சப்பாத்து வாங்கிற்றா. . . .அம்மா சப்பாத்து வாங்கிற்றா. . . முகம் மலர ஓடி வந்த மாலவன் சப்பாத்து பார்சலைப் பறித்து துள்ளிக் குதித்தான் அவனது புூரிப்பில் நெகிழ்ந்து போய் வந்தவளை துரை இராவண சந்நியாசியாக வரவேற்றான் சம்பள நாளை அவள் மறந்தாலும் அவன் மறக்க மாட்டானே அனைத்தும் அடங்கி நொடிந்து போனாள் சரசு. ஆனால் மெல்ல மெல்ல பிரளயத்தை எதிர் கொள்ள ஆயத்தமானாள் சப்பாத்து கிடைத்த புூரிப்பில் துள்ளிக் குதித்த மாலவன் துரையின் அதட்டலில் அடங்கிப் போனான்
. . . எ.டேய் அங்காலை போடா. . . .
!!!!!!!!!!!!!!!!!!!
எடேய் பிள்ளேன்ரை சப்பாத்தைக் கொண்டு வந்து தந்திட்டு கள்ளுத்தா எண்டா நானென்ன செருப்புக் கடையே போடுறது காசைக்குடுத்திட்டு குடி இல்லாட்டி எழும்பிப்போ. . .துரை விருட்டென்று எழுந்தான் அவனது தேகம் நடுங்கிக் கொண்டிருந்தது ஆத்திரத்துடன் தூசனை வார்த்தைகள் வாயிலிருந்து புறப்பட்டன கால்கள் தள்ளாடின கைகள் பரபரத்தன அந்த சிறிய கறுப்புச் சப்பாத்துகளை கந்தப்புவிடமிருந்து வெடுக்கென்று பறித்துக் கொண்டான் கசிப்புக் கந்தப்புவின் வாயில் தெரிந்த கேலிச் சிரிப்பு அவனை இன்னும் ஆத்திரமடையச் செய்தது சைக்கிலைத் தள்ளியபடி வேகமாக நடந்தான் யாரின் மேல் என்று இல்லாமல் எல்லாவற்றின் மேலும் அவனுக்கு ஆத்திரமாக இருந்தது கைக்கெட்டியது வாய்கெட்டாத ஆற்றாமை மனதை அலைக்கழித்தது. வீடு நெருங்க நெருங்க கோவம் இன்னும் கொப்பளிக்கத் தொடங்கியது
. . . அம்மா அப்பச்சி . . சப்பாத்தோடை திரும்பி வாறார். . .
மாலவன் தனது புதிய சப்பாத்துக்களை தகப்பன் மீண்டும் கொண்டு வருவதை கண்டு கண்ணீருடன் தாயிடம் கூறினான் சரசு ஆத்திரத்துடன் எழுந்தாள்
இந்த மனிசனுக்கு வாழ்க்கை ஒரு கேடா? பிள்ளேன்ரை சப்பாத்தை வித்து குடிக்கிறதெண்டு வெளிக்கிட்டவனுக்கு குடும்பம் எதுக்கு வீடெதுக்கு? இண்டைக்குத் தான் நான் யாரேண்டு பார்க்கப் போறாய்
கிணத்தடியில் இருந்து முற்றத்துக்கு வந்தாள் படலையில் நின்ற மாலவன் தகப்பனை நோக்கி ஓடிச் சென்றான்
. . . அப்பச்சி என்ற சப்பாத்தை தா. . . .
என சப்பாத்தை வாங்க முயன்றான் மகனைக்கண்டதும் துரைக்கு ஆத்திரம் பொத்துக் கொண்டு வந்தது ஒரு போத்தல் கள்ளுக்கு வழியில்லாமல் நான் கிடக்கிறன்.. . . . .உனக்கு சப்பாத்து ஒரு கேடா வாயில் தூஷனை வார்த்தைகள் கிளர்த்தெறிந்தன அப்பச்சி. . .என்ற சப்பாத்த தா. . .அது அம்மா வாங்கித் தந்தது என்ற சப்பாத்து. . மாலவன் அவனது கைகளில் தொங்கியபடி அழுதான்
சீ . . அங்கால போ. . ஒரு சல்லிக்காசு எனக்குத் தர ஏலாது சப்பாத்தாம் சப்பாத்து உழைக்கிறன் எண்ட திமிர். . .
எடேய் . . நீயும் ஒரு அப்பனா. . .பிள்ளையை ஏன் தள்ளுறாய்
ஆக்ரோசத்துடன் சரசு ஓடி வந்தாள் துரைக்கு அவளைக் கண்டதும் தலை எகிறியது பற்களை நறுநறுத்தப்படி ஒரு முழி முழித்தான் ஒரு விதமாக மிருகம் போல் அவனது முகம் கிடந்தது
. . . .காசு தர ஏலாது கதைக்க வந்திட்டாள் கதைக்க. . . .
சரமாரியா தூஷன வார்த்தைகள் வாயிலிருந்து கிளம்ப சைக்கிலை ஒரு புறம் தள்ளி விட்டான் சைக்கிள் வேலியுடன் உராந்து ஓடி விழுந்தது சப்பாத்தாம் சப்பாத்து வாயில் முணுமுணுத்தபடி வடக்கால காடு பற்றியிருந்த தறையை நோக்கி வேகமாகச் சென்றான் அது நீண்ட காலம் ஆள் பிளக்கம் இல்லாத தரையாகக் கிடந்தது முட் செடிகளும் எருக்கலயும் நிறைந்திருந்த அந்த பற்றைக் காணியில் ஆங்காங்கே எல்லைக்கதிகால்கள் ஒன்றிரண்டு மட்டும் பாறிக்கிடந்தன வேகமாச் சென்ற துரை விழுந்து கிடந்த எல்லை வாதனாராணி மரத்தின் மேல் விடுக்கென்று ஏறினான்
மாலவன் அப்பச்சி. . .அப்பச்சி. . என ஓடி வந்து கொண்டிருந்தான் துரை அந்த கறுப்புச் சப்பாத்துகளை வெறியுடன் ஒரு கணம் பாத்தான் மனைவியின் மேல் இருந்த கோபம் இன்னும் எகிறியது
பற்களை கடித்தபடி தன்பலம் எல்லாவற்றையும் சேர்த்து அந்தச் சப்பாத்துகளை அந்த பற்றைக் காணிக்குள் விட்டெறிந்தான் மாலவன் கண்ணீர் பொங்க தாயை நோக்கி அழுது அரற்றியபடி திரும்பி ஓடினான் துரையின் முகத்தில் ஒரு வெறியும் வெற்றிக் களிப்பும் புலர்ந்தது பாறிக்கிடந்த மரத்தின் மேலிருந்த காலை தரையில் வைத்தான் தள்ளாடியபடி கால் சற்று இடறிவிட விழுந்து விடாமல் இருக்க புதர்பக்கமாக மற்றக் காலை வைத்தான்
பாவம் துரை அறிந்திருக்கவில்லை அங்கே இரண்டு வருடமாக ஒரு மிதிவெடி காத்துக்கிடந்ததை. . . . . . .
(ஈழத்து இலக்கிய சூழலில் ஓவியராக நாடகவியலாளராக சிறுகதை எழுத்தானராக தன்னை தடம் பதித்துவரும் <b>முத்துக்குமாரு இராதாகிருஷ்ணன் </b>அவர்கள் எழுதிய <b>உதிர வேர்கள் </b>என்ற சிறுகதைத் தொகுப்பிலிருந்து. . . . . .)
|
|
|
| பிரான்ஸ் செய்திகள். |
|
Posted by: shanmuhi - 12-18-2005, 10:22 AM - Forum: புலம்
- No Replies
|
 |
கணவன் மனைவி இருவரும் தூக்கு போட்டு தற்கொலை செய்ய முனைந்திருக்கிறார்கள். தற்கொலைக்கு காரணம் குழந்தைகள் இல்லாதது என்று கூறப்படுகின்றது. அயலவர்கள், தெரிந்தவர்களின் <b>தேவையற்ற கதைகளினால் </b>தான் இந்த தற்கொலை சம்பவம் நடைபெற்றதாக கூறப்பட்டிருக்கின்றது.
இருவரும் ஒன்னிணைந்து தற்கொலை செய்ய முனைந்திருக்கிறார்கள். ஆனால்... மனைவி தொங்கிய தூக்கு கயிறு அறுபடவே... தான் மட்டும் பிழைத்து விட்டேனா... என்று அறிந்து அயலவர் உதவியுடன் கணவர் காப்பாற்றப்பட்டார்,
தற்போது இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
மேற்கொண்டு தகவல்கள் தெரிந்தவர்கள் தெரிவிக்கலாம். நான் அறிந்தவற்றை பதிந்துள்ளேன்.
|
|
|
|