Yarl Forum
இன்னும் எத்தனை நாள்? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=19)
+--- Thread: இன்னும் எத்தனை நாள்? (/showthread.php?tid=1967)



இன்னும் எத்தனை நாள்? - iruvizhi - 12-18-2005

<img src='http://img514.imageshack.us/img514/1966/punkudutivu5ip.jpg' border='0' alt='user posted image'>

<b>இன்னும் எத்தனை நாள்
தொடரும் உங்கள்
சத்தமில்லாத யுத்தம்?
சாமானியனைக் கொன்று
சாகசம் நிகழ்த்தலாம்
என்னும் பகல் கனவா?
பாடையில் போக துடிக்கும்
சிங்கள படைகளே...
எம் ஏங்கங்களை
எல்லாவற்றையும்
எரித்து, எம்மை அடித்து
உதைப்பதெல்லாம்
என்னும் எத்தனைகாலம்?
நாங்கள் விடுக்கின்ற
எச்சரிக்கை
உனக்கு எரிச்சலை
உண்டு பண்ணலாம்.
உன் வயிற்றெரிச்சலை
வேண்டுமானால் நீர்
ஊற்றி அணௌத்துக்கொள்.
எம் உரிமைத்தீயை
அணைக்க நினைத்தால்....
உனக்கே தெரியும்
எங்கள் யுக்தி
அதுவே மக்கள் சக்தீ.
விரைவில் விளங்கிக் கொள்வீர்
வீணரே....</b>

படம் பெற்றுக் கொண்டது:http://www.sankathi.net/ நன்றி


- Rasikai - 12-18-2005

மிகவும் உணர்ச்சிர்வமான கவி தந்த இருவிழிக்கு நன்றிகள்.


- கீதா - 12-18-2005

நல்ல கவி நன்றி இருவிழிஅக்காவுக்கு இங்கு இணைத்தமைக்கு மிக்க நன்றி <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- iruvizhi - 12-18-2005

காலம் காலமாக
அடியும் மிதியும்தான்
எம் மக்களுக்கென்றால்.
எனி எம் உரிமைக்காய்
எதுவரினும் துணிந்து
போராடுவோம்
புலத்து உறவுகளே
நாம் புளுக்கள் அல்ல
மிதிந்து நெளிந்து மடிந்து போவதற்கு.
பணிந்து குனிந்து
பாடம் கேட்கும்
நிலையில் இல்லை நாங்கள்.
எங்கள் பெற்றோர் அடங்கி
நடந்த காலம்
தொலையட்டும்.
நம்மை நாமே ஆழும் காலம்
நம்மை நோக்கி விரையட்டும்.
எம்மை அடிமைப் படுத்திய
அரக்கருக்கு புதிய பாடம்
புகட்டுவோம்.

சிங்களப்படையே எங்கள் வீடு வாசலை விட்டு உடனே வெளியேறு.


- Snegethy - 12-18-2005

\\எம் உரிமைத்தீயை
அணைக்க நினைத்தால்....
உனக்கே தெரியும்
எங்கள் யுக்தி
அதுவே மக்கள் சக்தீ. \\

நல்லாச் சொன்னீங்கள் இருவிழி.