Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 384 online users.
» 0 Member(s) | 382 Guest(s)
Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,311
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,231
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,605
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,296
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,636
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,062
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,465
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,485
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,037
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,239

 
  தமிழகத்தில ஜன நாயகம் - மதுரையில் ஐவர் கைது
Posted by: narathar - 12-17-2005, 09:44 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (2)

தமிழீழ விடுதலையை அங்கிகரிக்க வலியுறுத்தி சுவரொட்டி ஒட்டியமைக்காக தமிழகத்தின் மதுரையில் ஐவர் கைது

17 /12/ 2005

விடுதலைப் புலிகள் மீது இந்திய அரசு விதித்துள்ள தடையை நீக்குமாறும், தமிழீழ விடுதலையை அங்கிகரிக்குமாறும் வலியுறுத்தி சில நாட்களிற்கு முன்னர், தமிழகத்தின், மதுரையில் பல இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. இச் சுவரொட்டிகளை ஒட்டியதாக குற்றஞ்சாட்டப்பட்டு ஐவர் தமிழக காவல்துறையினரால் கைது செய்யப் பட்டுள்ளனர்.
'ஈழத்தமிழர்களிற்காய் தீக்குளித்த இளந்தமிழன் அப்துல் ரவூப்பிற்கு வீரவணக்கம்", 'இந்திய அரசே, புலிகள் மீதான தடையை நீக்கு, தமிழீழ விடுதலையை அங்கீகரி" போன்ற வாசகங்களுடன் காணப்பட்ட இச்சுவரொட்டிகள் தமிழ் தமிழர் இயக்கம் என்ற பெயரில் ஒட்டப்பட்டிருந்தன.

இது தொடர்பில் விசாரணைகளை நடாத்தி வந்த தமிழக காவல்துறையினர், செல்லூர் பகுதியைச் சேர்ந்த ராஜாமணி, குறிஞ்சி கபிலன், பரிதி, மைதீன் மற்றும் சங்கரன் ஆகியோரைக் கைது செய்து தடுத்து வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://www.sankathi.net/

Print this item

  முன்னுதாரணமான மாற்றங்கள்/நகர்வுகள் தேவை
Posted by: kurukaalapoovan - 12-17-2005, 08:24 PM - Forum: பிறமொழி ஆக்கங்கள் - No Replies

முன்னுதாரணமான மாற்றங்கள் நகர்வுகள் தேவை

சர்வதேச சமூகம் சிங்கள அரசியலானது நடுநிலைப் போக்காளர் ரணில்விக்கிரமசிங்கவின் கீழும், மிதவாத இனவாதப் போக்கு கொண்ட ராஜபக்சவின் கீழும் இரண்டு பெரும்பிரிவாக உள்ளனர் என நினைக்கிறார்கள். ரணில்விக்கிரமசிங்கவின் ஆதரவுத்தளம் வெளித்தோற்றத்திற்கு நடுநிலையாளர்கள் போன்ற மேற்குலகமயப்படுத்தப்பட்ட சிங்களமக்களை பெரும்பாலும் கொண்டது. ஆனாலும் தமிழ் மக்களிற்கு அரசியல் அதிகாரப் பரவலாக்கம் என வரும் பொழுது இவர்களது நடுநிலையானவர்கள் என சர்வதேசம் நம்புவது மிகவும் தவறான ஒன்று.
http://www.sangam.org/taraki/articles/2005...ft_Required.php

Print this item

  மறவர் நாம் மறவனை மறப்போமா???
Posted by: iruvizhi - 12-17-2005, 08:20 PM - Forum: தமிழீழம் - Replies (4)

<b>மறவர் நாம் மறவனை மறப்போமா???

</b><img src='http://img523.imageshack.us/img523/1115/ltcolmaravan67vu.jpg' border='0' alt='user posted image'>

அன்பெனும் ஒளியை
உன்னிடம் கண்டோம்.
வாட மச்சான் என
அழகாய் பாங்கை அழைப்பதை
பார்த்தே
படியாத பிள்ளை எளிதில் படிக்கும்.
பாசறை மாணவரை
பைந்தமிழால் நீ கவர்ந்தாய்.
ஆரமுதூட்டி வளர்த்த தனையன்
தானையில் இவனுக்கு
அவனுக்கு இணையாக களத்தில் நிண்ரவனே.
சமூகவியலில் எம்மை வியக்க வைத்தாய்.
ஆழமாய் சிந்தித்த அற்புத மானிடன்.
தோழமையோடு எம்முடன் பழகி.
எம் தோழர் பலரை உன்ன் உணர்வோடு
இணைத்துக் கொண்டாய்.
இவற்றோடு நின்றாயா?
கடல் புலிகளிற்கு தோள்கொடுத்த
கண்ணியவானல்லவா?
வயதில் முதிர்ந்த ஆசான் நீ.
இன்று வைகரை வானத்தில்
மாவீரரோடு
ஒளியாகி தமிழீழம் மலரும்
நாளை எண்ணி
தாரகையாய் ஒளிவீசுகிண்ராய்.
<img src='http://img523.imageshack.us/img523/2276/ltcolmaravan127hw.jpg' border='0' alt='user posted image'>

Print this item

  மக்கு குடும்பம்
Posted by: mohandoss - 12-17-2005, 06:23 PM - Forum: கதைகள்/நாடகங்கள் - No Replies

அகிலா நேற்றுவரை அடக்கிக்கொண்டிருந்த கோபம் இன்று வெளிப்பட்டுவிட்டது. தாஸ் இப்படிச்செய்கிறவன் இல்லை தான், அது அவளுக்கும் நன்றாகத் தெரிந்துதான் இருக்கிறது. ஆனாலும் மனம் சொல்பேச்சு கேட்க மறுக்கிறது. அகிலாவின் மனம் கண்டதையும் நினைத்து குழம்பியது. அவர்களின் முதல் சந்திப்பு அத்தனை இனிமையானது கிடையாது, கல்லூரியில் சேர்ந்த முதல் நாள் எதேச்சையாக கேன்டீன் பக்கம் போக தாஸ் தன் நண்பர்களிடம் அவளைப்பற்றிச் சொல்லிக்கொண்டிருந்ததை கேட்க நேர்ந்தது.

தாஸின் ஏதோ ஒரு நண்பன் அகிலாவைப்பற்றிக் கேட்க, தாஸ் சொன்ன பதில் அகிலாவை நிலைகுலையத்தான் செய்தது. அவன் அகிலாவை அயர்ன் பாக்ஸ் என்று கூறியதை கேட்டவளுக்கு அவனை கன்னம் கன்னமாய் அறையவேண்டுமென்ற எண்ணமே மேலோங்கியது. ஆனால் எதுவும் நடக்காததுபோல் அங்கிருந்து விலகிவிட்டாள். ஆனாலும் தினமும் அவனை வகுப்பில் பார்ப்பதே வெறுப்பிற்குரியதாய் இருந்தது. எப்படி ஒரு பெண்ணைப்பற்றி ஒன்றுமே தெரியாமல் அவள் மாரைப்பற்றிய விமரினத்தை இவர்களால் வெட்கமில்லாமல் வைக்கமுடிகிறது என்பதை யோசிக்க தாஸின் மீது இருந்த வெறுப்பு அதிகமாகியிருந்தது.

அகிலாவின் நிலையை மெய்ப்பிப்பதைப் போன்றே சூழ்நிலைகளும் தொடர்ந்தது. தாஸ் தன்னுடைய நண்பர்கள் ராகிங்கிற்கு உள்ளாக்கப்பட்டதை எதிர்க்கும் நோக்கில், ஒரு புதன்கிழமை, அவனுடைய சீனியர் மாணவர்கள் டை அணிந்துவரும் அதேநாளில் பத்து பதினைந்து நாய்களுக்கு டைஅணிவித்து கல்லூரிக்குள் விட்டுவிட. கல்லூரி முழுவதும் பிரச்சனை ஆகியிருந்தது. கல்லூரி நிர்வாகம் தலையிட்டு அவனையும் அவன் நண்பர்களையும் ஒருவாரம் சஸ்பெண்ட் செய்ததில், சீனியர் மாணவர்கள் மகிழ்ந்தார்களோ இல்லையோ அகிலாவிற்கு சந்தோஷம் தாளவில்லை.

ஆனால் அகிலா எதிர்பார்த்ததற்கு முற்றிலும் மாறாக தாஸ் நன்றாய் படிக்கக்கூடியவனாயும், அதையும் விட நாடகம், விளையாட்டு போன்ற மற்ற துறைகளிலும் விற்பன்னனாக இருந்தான். இதன் பொருட்டாக அவன் மீது அகிலா கொண்டிருந்த அவமதிப்பு சிறிதளவு குறைந்திருந்தாலும் கோபம் சிறிதளவும் குறையவில்லை. சில மாதங்களிலேயே கல்லூரியின் தமிழ்மன்றத்தால் நடத்தப்பெற்ற பட்டிமன்றத்தில் எதிர்எதிர் தரப்பில் தாஸும் அகிலாவும் பங்குபெற, அகிலா தன் தரப்பிற்கு வைத்த ஏறக்குறைய அத்துனை வாதங்களையும் பொறுமையாய், அதே சமயம் ஆழமாய் நிராகரித்துப்பேச மலைத்துப்போயிருந்தாள். ஆனாலும் சில குறிப்பிட்ட காரணங்களால் அவனின் தரப்பு நன்றாய் பேசியிருந்தபொழுதும் தீர்ப்பு அகிலாவின் பக்கமாய் தரப்பட்டது.

என்னவோ அகிலாவிற்கு தாஸை பாராட்ட வேண்டுமென்று தோன்றியதால், பேசிவிட்டு கீழிறங்கியதும்,

"ம்ம்ம், நல்லா பேசினீங்க. ஆனா உங்கள் பேச்சில் இருக்கும் ஒழுக்கம் செயலில் இருப்பதாய் தெரியவில்லையே?"

அகிலா எவ்வளவோ கட்டுப்படுத்த முயன்றும் தாஸிடம் இந்தக் கேள்வியைக் கேட்காமல் இருக்கமுடியவில்லை.

"நன்றி, நீங்க என்ன சொல்ல வரீங்கன்னு புரியலை."

"இல்லை 'மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்'னு பாரதி சொன்னான் ஆனால் இன்னும் மாதர்களையே கொளுத்தும் நிலைமைதான் நீடிக்குதுன்னு ரொம்ப அழகா பேசினீங்க. ஆனா உங்கள் செயல்களில் இதைக்காணோமேன்னு கேட்டேன். ஒரு பெண்ணோட மாரை கண்களால் அளவிட்டு நக்கல் செய்யும் நீங்கள் இது போன்ற தங்க வரிகளை பேசுவது மட்டும் ஏன்னு கேட்டேன். இதற்கான பதிலை நான் உங்கக்கிட்டேர்ந்து எதிர்பார்க்கலை. ரொம்பநாளா மனசுக்குள்ளேயே உறுத்திக்கிட்டிருந்த ஒரு நிகழ்வு அதான் கேட்டேன்." சொல்லிவிட்டு தாஸினுடைய பதிலை எதிர்பார்க்காமலே வேகமாய் சென்றுவிட்டாள்.

பின்னர் வந்த ஓரிரு மாதங்களில் அவனாக அவளை சந்திக்க முயன்றதையும் அகிலா நிராகரித்தாள். இடையில் பல்கலைக்கழகத்தில் அவர்களுடைய கல்லூரியின் சார்பாக பேச்சுப்போட்டியில் கலந்து கொள்ள தாஸை, கல்லூரி நிர்வாகம் தேர்ந்தெடுத்திருந்தது. அதற்காக நடந்த போட்டியில் அகிலா கலந்து கொண்டிருந்தாலும் அவன்தான் தேர்ந்தெடுக்கப்படுவான் என்று நன்றாகவே தெரிந்திருந்தது. அதைப்போலவே அவன்தான் தேர்ந்தெடுக்கப்பட்டான். ஆனால் போட்டிக்கு ஒருவாரத்திற்கு முன்னர் வண்டியில் இருந்து தாஸ் கீழே விழுந்ததால் போட்டியில் பங்கேற்க முடியாத சூழ்நிலையில், நிர்வாகம் இவளைத் தேர்ந்தெடுத்தது.

அவனைப்போய் பார்க்கவேண்டிய அவசியம் இல்லாவிட்டாலும் அவனுக்கு பதிலாய்த்தான் தான் பங்கேற்க இருப்பதால் அகிலா அவனை சந்தித்து அந்த விஷயத்தை தன்வாயால் சொல்லிவிட நினைத்தாள். இரண்டு நாட்களில் உடம்பில் ஏகப்பட்ட கட்டுக்களுடன் அவன் வகுப்பிற்கு வந்தவுடன் போய்ப்பார்த்தவள், அவன் காயங்களைப் பற்றி விசாரிக்காதவளாய்,

"உங்களுக்கு பதிலா நிர்வாகம் என்னைத் தேர்ந்தெடுத்திருக்கு. அதை உங்கக்கிட்ட சொல்லணும்னு நினைத்தேன்." என்று சொன்னவளிடம்.

"அகிலா அன்னிக்கு நடந்த நிகழ்ச்சிக்கு நான் உங்கக்கிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறேன். அதைத்தவிர வேறெதுவும் சொல்லக்கூடிய தகுதி எனக்கில்லை. மற்றபடிக்கு உங்களுக்கு அந்தப்போட்டிக்கான உதவிகள் எதாவது தேவைப்பட்டால் கேளுங்கள் செய்கிறேன்." சொன்னவன் எதையோ யோசித்தவனாய்.

"இல்லை ஒருநிமிஷம் இருங்க." சொல்லிவிட்டு அவன் பையிலிருந்து ஒரு நோட்டை எடுத்து அவளிடம் கொடுத்தவனாய்.

"தப்பா நினைக்காதீங்க, இதில இதுவரைக்கும் நான் பேசின அத்தனை பேச்சுப்போட்டிகளின் கன்டென்ட்டும் இருக்கு. ஒருவேளை இது உங்களுக்கு உபயோகமா இருக்கலாம்."

அகிலாவிற்கு முதலில் அதை வாங்கும் எண்ணம் இல்லாவிட்டாலும், பின்னர் கல்லு\ரி நிர்வாகம் தன்னைத் தேர்ந்தெடுத்து அனுப்பும் தருவாயில் அவனுடைய குறிப்புக்கள் நிச்சயமாய் உதவும் என்று நினைத்தவளாய் வாங்கிக்கொண்டாள். ஆனால்,

"இத நான் வாங்கிக்கிட்டதால உங்கமேல இருக்குற கோபம் குறைஞ்சிறுச்சுன்னு நினைக்காதீங்க." என்று சொல்லிவிட்டுத்தான் சென்றாள்.

ஆனால் அவள் கோபம் சிறிது சிறிதாக குறையத்தான் செய்தது, அதுமட்டுமில்லாமல் தாஸ் மீதான ஒருவித ஈர்ப்பு உண்டாவதைப்பற்றிய விஷயத்தையும் அவளால் அதிக நாட்கள், அவள் மனதிற்கு கூடத்தெரியாமல் மறைத்து வைக்க முடியவில்லை. ஆனால், ஒரேநாளில் இந்த மாற்றம் நிகழ்ந்துவிடவில்லை. அவன் நோட்டைப் படித்ததிலிருந்து அவன் வாசிப்பின் பரப்பை அறிய முடிந்தது. பிறகு முடியாத நேரத்திலும் பல்கலைக்கழகத்திற்கே வந்து அந்தப்போட்டியில் வெற்றிபெற அவளுக்கு உதவியது, பின்னர் அவனுடன் சிறிது சிறிதாக பழகத்தொடங்கியதும் அவன் பல பிரச்சனைகள் பற்றிய அவனுடைய கருத்துக்களை சாயங்கலக்காமல் வெளஇப்படுத்தியது இப்படி. தாஸ் சொல்லிச்சொல்லி அகிலா அவன் மேல் கொண்டிருந்த அவநம்பிக்கைகளை கொஞ்சம் கொஞ்சமாய் தகர்த்தெறிந்தான்.

இப்படித்தொடங்கிய அவர்களின் நட்பு பின்னர் காதலாக மாறி, கல்லூரி வாழ்க்கையின் நான்காண்டுகளுக்கு பிறகும் தொடர்ந்து பின்னர் அவர்கள் இரண்டுவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ளும் அளவிற்கு வந்து அவர்கள் திருமணமும் செய்து கொண்டனர். ஆயிற்று எட்டுமாதங்கள், நாளை அகிலாவிற்கு பிறந்தநாள், இப்பொழுது அகிலா கடுங்கோபமாய் இருப்பதற்கு காரணம் அவனாக தன் பிறந்தநாளை நினைவில் வைத்திருப்பான் என்று நினைத்திருந்தவளுக்கு முந்தையநாள் மாலைவரை அவனிடமிருந்து அதுபற்றிய குறிப்பெதுவும் கிடைக்கவில்லை. இன்னும் ஆறுமணிநேரம் தான் இருந்தது அவளுடைய பிறந்தநாளுக்கு,

அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வந்தவனின் கைகளில் பிறந்தநாள் பரிசுப்பொருட்களைத் தேடியவளுக்கு அவன் ஒன்றுமே வாங்கிவராதவனாய் வெறுங்கையை வீசிக்கொண்டுவர கோபம் கோபமாய் வந்தது. அதுவும் வந்தவுடனேயே,

"அகிலா இன்னிக்கு என்ன சாப்பாடு, எனக்கு ரொம்ப பசிக்குது. நாளைக்கு சீக்கிரமா வேலைக்கு போகணும்." சொன்னவனாய் பேண்ட், சட்டையைக்கூட கலட்டாமல் படுக்கையில் சாய்ந்தான்.

அதிலிருந்துதான் அகிலா பித்துபிடித்ததைப் போல் மாறியிருந்தால், அவள் நினைத்திருந்தால் அவள் கணவன் தன் பிறந்தநாளை நினைவில் வைத்திருந்து எதுவும் சர்ப்ரைஸாக பரிசளிப்பான் என்று, தன் பிறந்தநாளிற்காக விடுமுறை எடுத்துக்கொண்டுவந்து வெளியில் அழைத்துச் செல்வான் என்று. ஏனென்றால் அவர்கள் காதலித்த காலங்களில் இதெல்லாம் வழக்கம்தான், அசட்டுத்தனமாக எதுவும் செய்யாமல் ஜேஜே சில குறிப்புகள், உபபாண்டவம் போன்று அவளுக்கு முன்பே அறிமுகம் ஆகாத ஒன்றை அந்தநாளில் கொடுத்து அசத்துவான். பெரும்பாலும் அவர்களின் கருத்துப்பரிமாற்றம் பிரச்சனையில் தான் முடியும் ஆனால் அன்றுமட்டும் தான் என்ன சொன்னாலும் மறுக்கமாட்டான். இது போன்ற காரணங்களால் தான் திருமணம் ஆனபிறகு பழசையெல்லாம் மறந்துவிட்டான் என்று நினைத்து அகிலாவிற்கு கோபம் வந்தது.

முதலில் அவனிடம் ஒன்றுமே பேசாமல் சாப்பாடு போட்டவள், பின்னர் மெதுவாக நாளை தினத்தைப் பற்றி லேசுபாசாய் குறிப்பிட்டாள். ஆனால் அவனோ இதையெல்லாம் குறித்துக்கொள்பவனாக இல்லாமல், கருமமே கண்ணாய் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். பின்னர் கைகழுவிவிட்டு படுக்கைக்கு வந்தவன் விளக்கணைத்துவிட்டு தூங்கத்தொடங்க, மொத்தமாய் குடிமுழுகிப்போனதாக நினைத்தவளாய்.

"தாஸ் நாளைக்கு எனக்கு பிறந்தநாள்." சொல்லியேவிட்டாள்.

இதைக்கேட்டும் கொஞ்சமும் சுவாரஸ்யம் காட்டாதவனாய்,

"அப்படியா வாழ்த்துக்கள்." சொல்லிவிட்டு திரும்பி படுத்துக்கொண்டான்.

அவளுக்கு இது பெருத்த ஏமாற்றத்தையளித்தது, எல்லோரும் சொல்வது போல் காதலிக்கும் வரைதான் அத்தனையும் போல என்று நினைத்தவளாய்.

"நாளைக்கு நாம ரெண்டுபேரும் கொஞ்சம் வெளஇய போகலாமா, எனக்கு கொஞ்சம் பர்சேஸ் பண்ணனும்." இதையும் நேரடியாகக் கேட்டாள்.

ஆனால் திரும்பிக்கூட பார்க்காமல்,

"என் டெபிட், கிரெடிட் கார்ட் இரண்டும் உன்கிட்டத்தான இருக்கு, போய் என்ன வாங்கணுமோ வாங்கிக்க, வேணும்னா காரை விட்டுட்டு போறேன். நாளைக்கு முக்கியமான வேலையிருக்கு."

இந்த பதிலால் விரக்தியானவளாக அவளும் படுத்துக்கொண்டாள், அவளுக்கு ஆச்சர்யமாய் இருந்தது அவன் நடந்துகொள்ளும் விதம். இப்படி நடந்துகொள்பவன் கிடையாது, இன்று அலுவலகத்தில் ஏதேனும் பிரச்சனையிருந்திருக்குமா என்று யோசித்தாள். அவள் நாளை விடுமுறை போட்டிருந்தது வீணாய்ப்போய்விட்டதை நினைத்துப்பார்த்தால். இதற்கெல்லாம் சிகரம் வைத்ததைப்போல் அவள் அவனுக்கு சர்ப்ரைஸாய் சொல்ல ஒரு விஷயம் வைத்திருந்தாள். அதை நினைத்தபொழுது தான் அழுகை அழுகையாய் வந்தது. அவள் மறுபக்கம் திரும்பிப்பத்த சிறிது நேரத்தில் அவள் அவள் இடுப்பில் கையைப்போட, கோபம் வந்துவிட்டது அகிலாவிற்கு.

"போங்க போய் ஆபிஸையே கட்டிப்பிடிச்சிக்கிட்டு தூங்குங்க அதுக்கு மட்டும் நான் வேண்டுமா?" சப்தம் போட்டாள்.

"இப்ப எதுக்கு நீ இப்படி கத்துற. நான் இதுவரைக்கும் உன் பிறந்தநாளுக்கு கூடவே இல்லாதமாதிரியில்ல கத்துற. ஏதோ கொஞ்சம் வேலையிருக்குன்னு சொன்னா புரிஞ்சிக்கமாட்ட. ரொம்பத்தான் பிகு பண்ணிக்கிற. அதான் என்ன வேணும்னா வாங்கிக்கன்னு சொல்லிட்டன்ல அப்புறமேன் தொட்டதுக்கெல்லாம் சிணுங்குற." சொல்லியவனாய் அவளை அருகில் இழுத்தான்.

அவளுக்கும் சம்மதம்தான் ஆனால் தன் பிறந்தநாளை மறந்துவிட்டு, என்னவோ காசுதான் கொடுக்குறனேன்னு சொல்லும் புருஷனை நினைத்தால் எரிச்சலாய் வந்தது. இதே அவன் மட்டும் ஒன்றுமே வாங்கிக்கொடுக்காமல் புன்னகைத்தபடி பிறந்தநாள் வாழ்த்து சொல்லிவிட்டு, நாளைக்கு வேலையிருப்பதாய் சொல்லியிருந்தால். அவனுக்காக எத்தனை மணியானாலும் காத்திருந்திருப்பாள். ஆனால் அன்று அவன் நடந்துகொண்ட முறை சுத்தமாய் அவளுக்கு பிடிக்கவில்லை.

அவன் அவள் அனுமதியில்லாமலே உடைகளை நீக்கிக்கொண்டிருந்தான். அவனையே வெறித்துப்பார்த்தவளாய் தடுக்காமல் கல்லைப்போல் படுத்திருந்தாள். தன்னிடம் இருந்து ஒத்துழைப்பு இல்லாவிட்டால் விட்டுவிடுவான்னு நினைத்த அவளின் எண்ணத்தை தகர்த்தபடி அவன் அவள் கண்களையே பார்க்காமல் முன்னேறிக்கொண்டிருந்தான். அவளால் இதை பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை தன் விருப்பமில்லாமலேயே தன்னைப்பெற நினைக்கும் அவனை தடுக்க நினைத்தும் முடியாதவளாய், அவன் விருப்பத்திற்கு ஒத்துழைக்கவும் முடியாதவளாய், தான் இழந்துவிட்ட ஆடையின் இயலாமை பீடித்தவளாய், அவன் முதல் தொடுதலில் அழுதுவிட்டாள்.

அதுவரை முன்னேறிக்கொண்டிருந்தவன் அவள் அழுகை சப்தம் கேட்டதும் நிறுத்திவிட்டு சிறிதுநேரம் அவளையே பார்த்தான்.

"எந்திரிடீ." அவன் அதட்ட,

படுக்கையிலிருந்து எழுந்தவளை அங்கிருந்து நேராய் உள்ளறைக்கு அழைத்துச் சென்றான். முதலில் அவனுடைய பீரோவைத் திறந்தவன் அங்கே மறைத்து வைத்திருந்த பட்டுப்புடவையை எடுத்துக்கொடுத்தான். அழுத கண்களுடன் இதையெல்லாம் அதிசயமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தவளஇன் கையில், பின்னர் ஒரு சிறிய பிறந்தநாள் கேக்கை கொடுத்து சிறிய கத்தியால் வெட்டச்சொன்னான். வெட்டிய கைகளஇன் மோதிரவிரலில் அப்படியே ஒரு தங்க மோதிரத்தை அணிவித்தவனிடம்.

"ஏன் இப்புடி பண்ணீங்க?" இன்னும் அவளால் அழுகையை நிறுத்தமுடியவில்லை.

"சும்மா விளையாட்டுக்குத்தான், இதுதானே நாம கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கப்புறம் வர்ற உன்னோட முதல் பிறந்தநாள் அதான். நீ பிறந்தப்ப எப்புடி இருந்திருப்பேன்னு பாக்கலாம்னு..."

சொல்லிவிட்டு சிரித்தவனை அகிலா முறைக்க,

"இங்கப்பாரு ஆரம்பத்திலேர்ந்தே உனக்கு ஒரு விஷயமும் தெரியாது. காலேஜில் நான் உன்னைப்பத்தி கமென்ட் அடிக்க எம்மேல ரொம்பக் கோபமாயிருந்த ஞாபகமிருக்கா. அப்ப ஒருநாள் நீ என்கிட்ட நேருக்குநேராய் எப்படி உங்களால வெளியில பேசுறது ஒன்னாவும் செய்யறது ஒன்னாவும் இருக்க முடியதுன்னு கேட்டப்பவே நான் உன்னை விரும்ப ஆரம்பிச்சுட்டேன். பின்னாடி உன்கிட்ட பேசணும் பழகணும்னு தான். நான் வேணும்னே அடிப்பட்டுடதாய் பொய் சொல்லி உன்னை பேச்சுப்போட்டிக்கு போக வைச்சேன். அன்னைலேர்ந்து இன்னிக்கு வரைக்கும் நான் என்ன நினைச்சேனோ அதேமாதிரிதான் நீ செய்திருக்க.

என் மக்கு பொண்டாட்டி எப்பவுமே நான் நினைக்கிற மாதிரிதான் நினைப்பான்னு எனக்குத்தெரியும். அது இன்னிக்கும் ப்ரூப் ஆயிருக்கு. இந்தப்பொருளையெல்லாம் நான் ஒருவாரத்திற்கு முன்பே வாங்கிவிட்டேன் கேக்மட்டும்தான் புதுசு. அப்புறம் நாளைக்கு நான் லீவு போட்டாச்சு, உன்னைய அழுவவிட்டதுக்கு பரிகாரமா நாளைக்கு நீ என்ன கேட்டாலும் ஸாங்ஷன். எல்லாமே உன் உத்திரவுதான்."

அவன் அவளை ஏமாற்றியதை பெருமையாக சொல்லிக்கொண்டிருக்க முதலில் சிரித்தவள் பிறகு,

"உண்மையிலேயே நான் ஏமாந்திட்டன் தான். உங்க மக்கு பொண்டாட்டி உங்களுக்காக இன்னிக்கு ஒரு சர்ப்ரைஸ் வைச்சிருந்தேன். ஆனா நீங்க காலேஜிலேர்ந்து என்னை ஏமாத்திட்டு வர்றதால உங்கக்கிட்ட சொல்லமுடியாது." என்று சொன்னவளிடம் என்னவென்று கேட்டு, தாஸ் கெஞ்சத்தொடங்க. முதலில் கொஞ்ச நேரம் சொல்லாமல் அலட்டியவள்.

சிறிது நேரம் கழித்து, "உங்க மக்கு பொண்டாட்டி வயித்தில உங்க மக்குப்புள்ள வளருது." சொன்னவளாக வெட்கம் தாளாமல் அவனைக்கட்டிக்கொண்டாள். முதலில் நம்பமுடியாதவனாய் அப்படியா அப்படியா என்று கேட்டவன், பின்னர் மெதுவாய் அவள் வயிற்றைத்தடவ உள்ளேயிருந்த இரண்டுமாத சிசு, 'அய்யோ இப்படி ஒரு மக்குக் குடும்பத்தில் போய் பிறக்கப்போறமே' என்று நினைத்துக்கொண்டு சிரித்தது.

Print this item

  மகளுக்கு விசா அனுமதி கோரி உண்ணாவிரதம்!!
Posted by: Vaanampaadi - 12-17-2005, 05:20 PM - Forum: செய்திகள்: உலகம் - No Replies

மகளுக்கு விசா அனுமதி கோரி ராஜீவ் வழக்கு முருகன் உண்ணாவிரதம்!!
[சனிக்கிழமை, 17 டிசெம்பர் 2005, 15:41 ஈழம்] [ம.சேரமான்]
தன் மகளுக்கு விசா அனுமதிக்கக் கோரி ராஜீவ் வழக்கில் வேலுர் சிறையில் உள்ள முருகன் நேற்று முன்தினம் முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.


இவருக்கும், ராஜீவ் வழக்கில் கைதாகி ஆயுள் சிறை தண்டனை பெற்ற நளினிக்கும் சென்னை பூந்தமல்லி சிறையில் அரித்ரா என்ற பெண் குழந்தை பிறந்தது.

தற்போது இக்குழந்தை தமிழீழத்தில் வசித்து வருகிறது.

தற்போது 14 வயதை எட்டியுள்ள அரித்ரா தமது பெற்றோரை பார்க்க விரும்பினார்.

நீண்டநாள் முயற்சித்தும் இதற்கான விசா அக்குழந்தைக்கு இதுவரை அளிக்கப்படவில்லை.

இந்நிலையில் வேலுர் மத்திய சிறையில் திடீர் உண்ணாவிரதத்தை முருகன் வியாழக்கிழமை தொடங்கினார்.

தனது மகளுக்கு விசா அளிக்கப்படும் வரை உண்ணாவிரதத்தைத் தொடரப் போவதாக சிறை அதிகாரிகளிடம் அவர் கூறியுள்ளார்.


Puthinam

Print this item

  சும்மா பார்த்துக் கொண்டிருக்க முடியாது
Posted by: Vaanampaadi - 12-17-2005, 05:16 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (10)

குழந்தை தீயுடன் விளையாட ஆரம்பித்திருக்கும் வேளையில் நாடு சும்மா பார்த்துக் கொண்டிருக்க முடியாது

வீரசிங்கம் ஆனந்தசங்கரி

இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான ஓர் வானூர்தி நான்கு தடவை சிறுரக துப்பாக்கியால் சூடு வாங்கியும் பத்திரமாக தரையிறக்கப்பட்ட செய்தி உலக நாடுகள் அனைத்திலும் வாழும் நியாயமாக சிந்திக்கும் அத்தனை பேருக்கும் பேரதிர்ச்சியாகும். குழந்தை தீயுடன் விளையாட ஆரம்பித்துள்ள இவ்வேளை நாடு சும்மா பார்த்துக் கொண்டிருக்க முடியாது. இத்தாலிய நாட்டு உதவி வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திருமதி மார்க்கிரேட்டா போனிவேர் மயிரிழையில் உயிர் தப்பினார் என்பதற்காக மட்டுமல்ல இதன் பிரதிபலிப்பு கற்பனைக் கெட்டாததாக அமையும் என்பதற்காகவுமே, விடுதலைப்புலிகளின் தலைவரும் இச் சம்பவத்தை தனக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகவும் கொள்ள வேண்டும்.

யுத்தத்துக்கு மாத்திரமன்றி வானூர்திகளை வேறு பல தேவைகளுக்கும் நமது நாட்டில் பாவிக்கப்படுகிறது. இயற்கை அனர்த்தங்களாகிய புயல், வெள்ளம், பேரலை போன்றவற்றால் ஏற்படும் அழிவுகளை கணக்கீடு செய்ய வெளிவர இயலாது அகப்பட்டுக் கொண்டவர்களை, ஆபத்திலுள்ளவர்களை மீட்டெடுப்பதோடு, விடுதலைப்புலிகளின் தலைவர்கள் சர்வதேச விமான நிலையம் போக வர, வன்னியில் இருந்து கிழக்கே தம் போராளிகளின் ஈமக் கிரியைகளில் விடுதலைப் புலிகள் கலந்துகொள்ள, அதி முக்கியமாக காயமடைந்த அவர்களது போராளிகளை கொழும்புக்கு கொண்டு வரவும், வானூர்திகள் பயன்படுத்தப்படுகின்றன. அத்தனை தேவைகளை அவர்கள் நன்கு அறிந்திருந்தும் இப்படி செய்கிறார்கள் என்றால் விடுதலைப் புலிகளின் தலைமையின் கட்டுப்பாட்டிலிருந்து அவர்கள் இல்லை என்றே கொள்ள வேண்டும். இந்நிலை தொடருமானால் நிலமை மேலும் மோசமடையும் நாட்டின் நிலமை விரைவாக சீரழிந்து வருவதால் தாமதமின்றி விடுதலைப் புலிகளுக்கு எதிரான கூட்டு நடவடிக்கையை சர்வதேச சமூகம் எடுக்க வேண்டும்.

எமது அயல் நாடான இந்தியா இந்த சம்பவத்தை லேசாக கருதிவிட முடியாது. தம் விடயத்தில் நான் தலையிடுகிறேன் என தமிழ்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் குற்றம் சுமத்தாது போனால் இந்தியாவின் பாதுகாப்புக்கு பங்கம் ஏற்படக் கூடிய வகையில் அவர்கள் எதையும் அரசிடம் வற்புறுத்திக் கேட்கக் கூடாது எனக் கூறுவேன். நாட்டின் நிலைமை பற்றி பிற தலைவர்களுடன் கலந்தாலோசியாது சர்வாதிகார ஆட்சி நடத்தும் விடுதலைப்புலிகள் கூறுவதை மட்டும் நம்பி,தம்மிடம் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை காட்டி அரசை அடிபணிய வைக்கக் கூடாது. 44 பயணிகளுடன் புலிகள் விமானத்தை முன்பு சுட்டு வீழ்த்தியதையும் அவர்கள் அறிவார்கள்.

அதேவேளை, சில கொள்கை வேறுபாடுகள் இருப்பின் அவற்றில் விட்டுக் கொடுத்து நம் அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒற்றுமையாக விரைவில் இந்திய விஜயமொன்றை மேற்கொள்ள இருக்கும் மாண்புமிகு ஜனாதிபதி அவர்களுக்கு, பச்சைக் கொடி காட்ட வேண்டும். அப்போது இந்திய முறையிலான அதிகாரப் பகிர்வை தாம் ஏற்பதாக இந்திய தலைவர்களுக்கு அவர் கூற முடியும். அப்படியான நிலை ஏற்பட்டால் தமிழ் நாட்டுத் தலைவர்கள் இந்திய அரசின் செயல்பாடுகளில் அவசியமின்றி தலையிட மாட்டார்கள்.

Thinakural

http://www.thinakural.com/New%20web%20site...7/Article-2.htm

Print this item

  இலங்கைக்கு தப்ப முயன்ற போது பிடிபட்டார்
Posted by: Vaanampaadi - 12-17-2005, 05:10 PM - Forum: செய்திகள்: உலகம் - Replies (1)

திருவனந்தபுரம் விமான நிலையத்துக்குள் துப்பாக்கியுடன் புகுந்த வாலிபர்: இலங்கைக்கு தப்ப முயன்ற போது பிடிபட்டார்

திருவனந்தபுரம், டிச. 17-

திருவனந்தபுரம் விமான நிலையத்தில் துப்பாக்கி குண்டுகளுடன் புகுந்த இஸ்ரேலிய வாலிபர் பிடிபட்டார். இதுபற்றிய விபரம் வருமாறு:-

திருவனந்தபுரம் விமான நிலையத்தில் நேற்று இலங் கைக்கு செல்லும் விமானம் புறப்பட தயார் நிலையில் இருந்தது. இலங்கைக்கு செல் லும் பயணிகள் விமானத்தில் ஏற தயாராக

இருந்தனர்.முன்னதாக பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அங்கு வந்த இஸ்ரேலிய வாலிபர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை போலீசார் எக்ஸ்ரே சோதனைக்கு உட்படுத்தினர்.

அப்போது அவரது சட்டையின் உள்பகுதியில் துப்பாக்கி மற்றும் குண்டு ஆகியவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து போலீசார் அவரை சுற்றி வளைத்து துப்பாக்கி மற்றும் குண்டுகளை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.

இவர் ஏன் இலங்கைக்கு தப்ப முயன்றார். இஸ்ரேல் தற்கொலை படை பிரிவை சேர்ந்தவரா என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Maalaimalar

Print this item

  மாலதியின் நினைவுத் தூபி இராணுவத்தினரால் அடித்துடைப்பு
Posted by: Vaanampaadi - 12-17-2005, 04:33 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (3)

மாலதியின் நினைவுத் தூபி இராணுவத்தினரால் அடித்துடைப்பு
சனிக்கிழமை 17 டிசெம்பர் 2005 ஜோசெப்
கோப்பாய் கைதடி வீதியியல் அமைந்தள்ள மாலதியின் நினைவுத் தூபி நேற்று இரவு இராணுவத்தினரால் அடித் துடைக்கப்பட்டள்ளது. இராணுவ முகாமுக்கு முன்னாள் இருக்கும் இவ் நினைவுத் தூபியை திட்டமிட்டமுறையில் இராணுவத்தினர் சேதமாக்கியதை பொது அமைப்புக்களும் மற்றம் மாணவர் அமைப்புக்களும் கண்டித்துள்ளதுடன் இராணவத்தினரின் இத்தகைண அடாவடித்தனங்களை நிறத்த வேண்டும் எனவும் தெரிவித்து அறிக்கைகளை வெளியிட்டுள்ளார்கள்.


http://www.nitharsanam.com/?art=13824

Print this item

  தெரிந்தால் நீங்கள் சொல்லக்கூடாதா?
Posted by: Snegethy - 12-17-2005, 04:06 PM - Forum: தமிழீழம் - Replies (4)

முதலாம் இரண்டாம் உலகப்போர்களுக்குப் பிறகு ஐக்கிய நாடுகள் சபை 1945ம் ஆண்டு மனித உரிமைபப்பிரகடனம் என்றொரு பிரகடனத்தைக் கொண்டு வந்திச்சிதாம்.

ஆ என்ன பிரகடனம?
மனித உரிமைப்பிரகடனமோ?? அதில என்ன சொல்லியிருக்கு?

ஆதில ஒரு தேசிய இனம் தன்னைத்தானே ஆட்சி செய்ய உரிமையுடையது எண்டு சொல்லினம்.

பொறுங்கோ பொறுங்கோ அதென்ன தேசிய இனம்?

தேசிய இனம் என்றால்
• தொடர்ச்சியான நிலப்பரப்பு
• தனித்துவமான மொழி
• பாரம்பரிய கலைப்பண்பாடு
• நீண்ட வரலாறு
• தனித்துவமான பொருளாதாரம்இவ்வளவு பண்புகளையும் தன்னகத்தே கொண்டதான ஒரு இனம்.

இலங்கையில சிங்களவர், தமிழர் ,முஸ்லிம்கள், பறங்கியர் மலைநாட்டுத்தமிழர் என்ற ஐந்து வகை இன மக்கள் வாழ்கின்றார்கள்.இவர்களில் தமிழர் தேசிய இனமா என்று பார்ப்பம்.

எங்களுக்கு என்றொரு தொடர்ச்சியான நிலப்பரப்பு இருக்கோ?
பின்ன? சிலாபம், புத்தளம், மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மாங்குளம், வவுனியா, முல்லைத்தீவு, புல்மோட்டை, திருகோணமலை ,மட்டக்களப்பு, அம்பாறை அப்பிடியே தொடர்ச்சியா எங்கட நிலமெல்லோ.


எங்களுக்கு என்றொரு தனித்துவமான மொழியிருக்கோ?

அதான் எங்கட தமிழ் மொழி.அதென்னமோ செம்மொழி என்று சொல்லுவினமே…அப்பிடித்தானே?

அடுத்து எங்களுக்கு என்றொரு பாரம்பரியக் கலைப்பண்பாடு இருக்கோ?

அதான் இருக்கே எங்கட சாப்பாடு நாங்க ஆடை அணிகிற விதம் எங்கட விழாக்கள். இன்னும் நிறைய எனக்கு மிச்சம் தெரியாது யாராவது சொல்லுங்கோ….

எங்கட நீண்ட வரலாறு ??

அதான் பூநகரியில, காரைநகரில, வேலணையில எல்லாம் எங்கட மூதாதையரின் வரலாற்று எச்சங்கள் கண்டு பிடிச்சிருக்கிறம் என்று வரலாற்றாய்வாரள் ப.புஸ்பரட்ணம் குமுவினர் சொல்லியிருக்கினம்.

பொருளாதாரம்??

அதான் போதுமானளவு இருக்கே.எங்களட்ட என்ன இல்லை கேக்கிறன்?நீர் வளம் இல்லையா நில வளம் இல்லையா?சீமெந்து இருக்கு.கடல் பெரு வளம் இருக்கு.என்ன பயிரும் விளையக்கூடிய நிலம் இருக்கு.இப்ப பத்தாததுக்கு மன்னாரில பெற்றோலிய வளம் வேற இருக்குதாம்.

அப்ப தமிழர் ஒரு தேசிய இனம் தானே?

போர்த்துக்கேயர் 1505 ல் வந்திச்சினம் பிறகு ஒல்லாந்தர் ஆங்கிலேயர் எண்டு மாறி மாறி வந்து 1833 ல் யாழ் கண்டி கோட்டை என்று இருந்த மூன்று இராச்சியங்களையும் ஒன்றாக்கி பிரச்சனையைத் துவக்கி வைச்சினம்.பிறகு திருப்பிப் போகும்போது தமிழர்களையும் சிங்களவரிடம் ஒப்படைச்சிட்டுப் போட்டாங்கள்.

இப்ப நான் மகாவம்சம் என்ற நூலில் சொல்லப்பட்ட சில சுவாரிசயமான சில தகவல்களைச் சொல்லப் போறன்.

எல்லாளன் எண்டால் எல் ஐ ஆண்டவன் என்று அர்த்தமாம். எல் எண்டால் தமிழ் என்றொரு அர்த்தமிருக்காம்.இந்த எல்லாளனோடு சமர் புரிந்த துட்டகைமுணுவின் அம்மா விகாரமகாதேவிக்கு துட்டகைமுணுவைக் கருவில் சுமந்த போது மூன்று ஆசை வந்திச்சாம்.
==>கொம்புத்தேன் தனக்கும் பிக்குமார்களுக்கும் அருந்தத்தரவேண்டும்.
==> எல்லாளனுடைய அரண்மனையில் பூக்கும் ஒரு விசேச மலரைத்தான் தலையில் சூட வேண்டும்.
==> எல்லாளனுடைய தளபதி ஒருவரின் தலை துண்டிக்கப்பட்டு வழிந்தோடும் இரத்தத்தை தான் குடிக்க வேண்டும்.

இப்படி தமிழர்கள் சிங்களவர்களின் எதிரிகள் என்ற பாடம் துட்டகைமுணு போன்றவர்களுக்கு கருவிலேயே புகட்டப்பட்டதாம்.

1948 ம் ஆண்டு மலையகத்தமிழர்களின் குடியுரிமை டி.ஸ்.சேனனாயக்காவால் பறிக்கப்பட்டது. 1950 ல் மகாவலி குடியிருப்புத்திட்டத்தின் கீழ் கொலை கொள்ளை கற்பளிப்பு போன்ற குற்றங்களுக்காகத் தண்டனை பெற்ற சிங்களச் சிறைக்கைதிகளை விடுதலை செய்து அவர்களை தமிழர் வாழும் பகுதிகளான அம்பாறைப் பிரதேசங்களில்குடியமர்த்தி தமிழர்களை இடம்பெயரச் செய்வதன் மூலம் அவர்களுக்கான தேசிய இனப் பண்பான நிலப்பரப்பைத் தகர்த்தார்கள்.

1956 ல் பண்டாரநாயக்க மொழியில் கை வைத்தார்.சிங்கள மொழியை ஆட்சி மொழியாக்குவதாக தேர்தல் வாக்குறுதி கொடுத்தார்.

1971 ல் கல்வித்தரப்படுத்தலை அரசாங்கம் கொண்டுவந்தது.சிங்கள மாணவருக்கு குறைந்த வெட்டுப்புள்ளியுடனே பல்கழைக்கழகம் செல்ல வாய்புக் கொடுத்தது.அவர்களைவிட அதிகப் புள்ளிகள் பெற்ற தமிழ் மாணவர்கள் வீதியில் திரிவதா என்றெதிர்த்த சிவக்குமாரண்ணாவும் 1974ல் விடுதலைப் போராட்டத்தில் முதலாவதாக சயனைற் அருந்தி வீரமரணமடைந்தார்.

1974 ல் தமிழாராய்ச்சி மாநாடு முற்றைவெளியில் நடந்தபோது 10ம் நாள் 9 தமிழர்கள் சிங்களக் காவலர்களால் காரணமின்றிப் படுகொலை செய்யப்பட்டார்கள்.

1980 ல் எமது இதயபூமியான மணறாலிருந்து தமிழர்கள் 48 மணிநேரத்தில் வெளியேற்றப்பட்டு சிங்களவர்கள் குடியமர்த்தப்பட்டனர்.

1981 ம் ஆண்டு தென்கிழக்காசியாவின் தலைசிறந்த நூலகமாகிய யாழ் நூலகம் லலித் திசாநாயக்க போன்ற படித்த சிங்களவர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டது.இதில் தமிழர் வரலாற்றுச் சான்றுகள் பல்லாயிரக்கணக்கான புத்தகங்கள் எல்லாம் அழிந்து போயின.

இப்படி தமிழர் ஒரு தேசிய இனமாக இருக்கக் கூடாது என்பதற்கான அனைத்து முயற்சிகளும் நடந்தன.

இப்ப சொல்லுங்கோ தமிழர் ஒரு தேசிய இனம்தானே?அவர்களுக்கு தம்மைத்தாமே ஆட்சி செய்யும் உரிமை ஏன் மறுக்கப்பட வேண்டும்.?

இன்னொரு கேள்வி....
இலங்கையின் முதல் மனிதன் என்று மகா வம்சத்தில் சொல்லப்படுகின்ற விஜயன் என்பவர் சிங்கத்துக்கும் இளவரசிக்கும் பிறந்தவராம்…அறிவியல் சார்ந்து இது எவ்வளவு சாத்தியம்.?

-சினேகிதி-

Print this item

  &quot;Mr.Temple come to me&quot;
Posted by: Snegethy - 12-17-2005, 02:54 PM - Forum: தமிழ் /தமிழர் - Replies (26)


நக்கீரனின் புலம்பெயர் வாழ்வில் தமிழ் இனி தேவையா?இல்லை என்ற ஆக்கத்தை வாசித்தவுடன் இப்படி எழுதிவிட்டேன்.

தமிழின் தேவை சிறிதாக இருக்கலாம் ஆனால் தமிழ் ஒரு தொடர்பாடல் சாதனமாக மட்டுமன்றி எமது இனத்தின் அடையாளமாகவும் கணிக்கப்படுவது.

அரசியல் சமூக ஊடக சக்திகள் யாவும் தாய் மொழிக்கல்வியின் பயனைத்தான் கூறி நிற்கின்றனவே தவிர யாரும் எங்களைக் கட்டாயம் தமிழ் கற்க வேண்டும் என்று வற்புறுத்துவதில்லை.

எம்மைப்போன்ற மாணவர்களுக்கு அதுவும் கனடா போன்ற பல்கலாச்சார நாடுகளில் படிப்பவர்களுக்கு தாய்மொழி கதைக்கவும் எழுதவும் வாசிக்கவும் தெரிந்திருக்க வேண்டியது முக்கியமாகிறது ஏனென்றால் எங்கள் பாடசாலைகளில் பல்கலாச்சார நிகழ்வு ஒவ்வொரு வருடமும் நடைபெறும்போது ஒவ்வொரு நாட்டவரும் தங்கள் பண்பாட்டை கலாச்சாரத்தை மொழயைப் பிரதிபலிக்கும் ஆக்கங்களைச் செய்ய வேண்டும்.அவ்வகையில் நாங்கள் ஒரு பரதநாட்டிய நிகழ்ச்சிளை செய்யும்போது ஆங்கிலப் பாடலுக்கா ஆடுவது??அவர்கள் பாடலுக்கோ நடனத்துக்கோ அர்த்தம் அதன் கருவைப் பற்றிக் கேட்டால் எங்களுக்குச் சொல்லத் தெரிந்திருக்க வேண்டும்.அப்படித் தெரிந்திருக்க வேண்டுமானால் எங்களுக்கு அதை விளங்கிக் கொள்ளக்கூடிய போதியளவு தமிழறிவு இருந்தால்தான் அதை மற்ற நாட்டவருக்கு அவர்களுடைய மொழியில் எங்களால் விளக்கம் கொடுக்க முடியும்.இப்படி தங்கள் மொழியைத் தெரிந்து கொண்டிராத பல்லகழைக்கழக மாணவர்கள் மற்ற மாணவர்கள் தங்கள் தாய்மொழியிலும் ஆங்கிலத்திலும் பிரஞ்சு மொழியிலும் புலமை உடையவராக இருக்கும் பட்சத்தில் அவர்கள் முன் தலைகுனிய வேண்டிய நிலையில் இருக்கிறார்கள்.

தமிழ் தங்கள் பிள்ளைகள் கற்க வேண்டும் என்ற ஆர்வமுடைய பெற்றோர் எல்லோருமே தங்கள் பிள்ளைகளை கல்வி நிலையங்களுக்கு அனுப்புவதில்லை..ஆங்கிலம் மூலம் தமிழ் கற்கக்கூடிய நூல்களையோ அல்லது குறுந்தட்டுக்களையோ வாங்கிக் கொடுக்கலாம்.பணம் செலவழிக்க முடியாதவர்கNளூ அல்லது விரும்பாதவர்களோ மூன்று டொலர்களுக்கு குறுவட்டுப் பிரதி எடுத்துக்கொள்ளலாம்.

தமிழ் தெரிந்தவர்களுடன் கதைப்பதற்குக்கூட வாசிப்பு அவசியம் என்பது எனது கருத்து.ஒரு மொழியைப்பற்றிய அடிப்படை தெரியாமல் கேள்விஞானம் மட்டுமே கொண்ட இருவரால் எவ்வளவு நேரம் ஒரு மொழியில் உரையாடலாம் என்பது எனக்குப் புரியவில்லை.

சங்கீதம் பரதநாட்டியம் கற்பிக்கும் ஆசிரியர்கள் தமிழில்தான் சொல்லித்தருவார்கள் தமிழில் எழுதத் தெரியாத மாணவர்கள்தான் தமிழை ஆங்கில எழுத்துக்களைப் பாவித்து எழுதுவார்கள்.உதாரணமாக கனடாவில் நடக்கும் ஒரு பரதநாட்டிய ஆரம்ப வகுப்பில் ஒரு ஆசிரியர் ஒற்றைக்கை முத்திரை சொல்லிக் கொடுக்கிறார் என்று வைப்போம்.மயூரம் என்பது ஒரு ஒற்றைக்கை முத்திரை அதை ஆசிரியர் மயூரம் என்றால் மயிலைக் குறிப்பது என்று தமிழில்தான் சொல்லுவார் எனக்குத் தெரிந்து மயிலுக்குத்தான் ஆங்கில வார்த்தை உண்டு மயூரத்துக்கு இல்லை.

மற்றது திரைப்படங்களுக்கு ஆங்கில மொழிபெயர்ப்பு திரையில் வருகிறது சரி ஆனால் இந்த உதாரணத்தைப் பாருங்கள் "திருக்கோயிலே ஓடிவா" என்றொரு தமிழப் பாடல் வரி அதற்கு ஆங்கில மொழபெயர்ப்பு பின்வருமாறு போடப்பட்டுள்ளது " "Temple is coming". நல்ல காலம் "Mr.Temple come to me" என்று போடாமல் விட்டார்கள்.

நான் சொல்ல விரும்பியதைத் தெளிவாகச் சொன்னேனா என்று தெரியவில்லை.தமிழ் என்பது ஒரு சிறந்த மொழி என்பதைத் தவிர்த்துப் பார்த்தாலும் அது எங்கள் இன அடையாளமாக இருக்கின்றது எனவே தமிழை தமிழர்கள் தெரிந்திருக்க வேண்டும் என எண்ணுகிறேன்.

-சினேகிதி-

Print this item