![]() |
|
இலங்கைக்கு தப்ப முயன்ற போது பிடிபட்டார் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: இலங்கைக்கு தப்ப முயன்ற போது பிடிபட்டார் (/showthread.php?tid=1992) |
இலங்கைக்கு தப்ப முயன்ற போது பிடிபட்டார் - Vaanampaadi - 12-17-2005 திருவனந்தபுரம் விமான நிலையத்துக்குள் துப்பாக்கியுடன் புகுந்த வாலிபர்: இலங்கைக்கு தப்ப முயன்ற போது பிடிபட்டார் திருவனந்தபுரம், டிச. 17- திருவனந்தபுரம் விமான நிலையத்தில் துப்பாக்கி குண்டுகளுடன் புகுந்த இஸ்ரேலிய வாலிபர் பிடிபட்டார். இதுபற்றிய விபரம் வருமாறு:- திருவனந்தபுரம் விமான நிலையத்தில் நேற்று இலங் கைக்கு செல்லும் விமானம் புறப்பட தயார் நிலையில் இருந்தது. இலங்கைக்கு செல் லும் பயணிகள் விமானத்தில் ஏற தயாராக இருந்தனர்.முன்னதாக பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அங்கு வந்த இஸ்ரேலிய வாலிபர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை போலீசார் எக்ஸ்ரே சோதனைக்கு உட்படுத்தினர். அப்போது அவரது சட்டையின் உள்பகுதியில் துப்பாக்கி மற்றும் குண்டு ஆகியவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து போலீசார் அவரை சுற்றி வளைத்து துப்பாக்கி மற்றும் குண்டுகளை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். இவர் ஏன் இலங்கைக்கு தப்ப முயன்றார். இஸ்ரேல் தற்கொலை படை பிரிவை சேர்ந்தவரா என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். Maalaimalar - Thala - 12-17-2005 தவறான செய்தியாய் இருக்க வேண்டும் வானம்பாடி... இஸ்றேலில் தற்கொலைக் குண்டுதாரிகள் இல்லை பலஸ்தீனத்திலதான் இருக்கிறார்கள்... |