Yarl Forum
மாலதியின் நினைவுத் தூபி இராணுவத்தினரால் அடித்துடைப்பு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: மாலதியின் நினைவுத் தூபி இராணுவத்தினரால் அடித்துடைப்பு (/showthread.php?tid=1993)



மாலதியின் நினைவுத் தூபி இராணுவத்தினரால் அடித்துடைப்பு - Vaanampaadi - 12-17-2005

மாலதியின் நினைவுத் தூபி இராணுவத்தினரால் அடித்துடைப்பு
சனிக்கிழமை 17 டிசெம்பர் 2005 ஜோசெப்
கோப்பாய் கைதடி வீதியியல் அமைந்தள்ள மாலதியின் நினைவுத் தூபி நேற்று இரவு இராணுவத்தினரால் அடித் துடைக்கப்பட்டள்ளது. இராணுவ முகாமுக்கு முன்னாள் இருக்கும் இவ் நினைவுத் தூபியை திட்டமிட்டமுறையில் இராணுவத்தினர் சேதமாக்கியதை பொது அமைப்புக்களும் மற்றம் மாணவர் அமைப்புக்களும் கண்டித்துள்ளதுடன் இராணவத்தினரின் இத்தகைண அடாவடித்தனங்களை நிறத்த வேண்டும் எனவும் தெரிவித்து அறிக்கைகளை வெளியிட்டுள்ளார்கள்.


http://www.nitharsanam.com/?art=13824


- Thala - 12-17-2005

அராலிப் பாலத்துக்கு அண்மையில் இருக்கும் "டென்சில் கொப்பேக்கடுவ" இன் நினவுத் தூபிக்கு அண்மையில் இருந்த மினி முகாமைப் புலிகள் தாக்குவதுக்கு திட்டமிட்டபோது.... தலைவரால் அச்சமாதிக்கு எந்தப்பாதிப்பும் வரக்கூடாது எண்டு தலைவரால் அறிவுறுத்தப் பட்டது இப்போ ஞாபகத்தில் வருகிறது. அதனாலயே அத்தாக்குதல் திட்டம் மாற்றியமைக்கப் பட்டதாய் என் நண்பன் சொல்கிறான்....


- Vaanampaadi - 12-17-2005

<img src='http://www.pathivu.com/news/admin/data/upimages/malathithupi1.gif' border='0' alt='user posted image'>
<img src='http://www.pathivu.com/news/admin/data/upimages/malathithupi2.gif' border='0' alt='user posted image'>

Photos: Pathivu.com


- kurukaalapoovan - 12-17-2005

மணலாறுத்தாக்குதலில் பலியான இந்தியப் படையதிகாரி நினைவுத்தூபி ஒன்றும் அவர் இறந்த இடத்தில் கட்டியிருக்கிறார்கள்.

இலங்கை இராணுவம் யாழ்பாணத்தைப் பிடித்த பொழுது கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் முழுமையாக வேண்டும் என்றே அழிக்கப்பட்டது, தவறுதலாக யுத்தத்தில் சேதமக்கப்பட்டவில்லை. யுத்த நிறுத்தம் அமுலுக்கு வந்தபின்னர் தான் மீளமைக்கப்பட்டது.