![]() |
|
தெரிந்தால் நீங்கள் சொல்லக்கூடாதா? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=19) +--- Thread: தெரிந்தால் நீங்கள் சொல்லக்கூடாதா? (/showthread.php?tid=1994) |
தெரிந்தால் நீங்கள் சொல்லக்கூடாதா? - Snegethy - 12-17-2005 முதலாம் இரண்டாம் உலகப்போர்களுக்குப் பிறகு ஐக்கிய நாடுகள் சபை 1945ம் ஆண்டு மனித உரிமைபப்பிரகடனம் என்றொரு பிரகடனத்தைக் கொண்டு வந்திச்சிதாம். ஆ என்ன பிரகடனம? மனித உரிமைப்பிரகடனமோ?? அதில என்ன சொல்லியிருக்கு? ஆதில ஒரு தேசிய இனம் தன்னைத்தானே ஆட்சி செய்ய உரிமையுடையது எண்டு சொல்லினம். பொறுங்கோ பொறுங்கோ அதென்ன தேசிய இனம்? தேசிய இனம் என்றால் • தொடர்ச்சியான நிலப்பரப்பு • தனித்துவமான மொழி • பாரம்பரிய கலைப்பண்பாடு • நீண்ட வரலாறு • தனித்துவமான பொருளாதாரம்இவ்வளவு பண்புகளையும் தன்னகத்தே கொண்டதான ஒரு இனம். இலங்கையில சிங்களவர், தமிழர் ,முஸ்லிம்கள், பறங்கியர் மலைநாட்டுத்தமிழர் என்ற ஐந்து வகை இன மக்கள் வாழ்கின்றார்கள்.இவர்களில் தமிழர் தேசிய இனமா என்று பார்ப்பம். எங்களுக்கு என்றொரு தொடர்ச்சியான நிலப்பரப்பு இருக்கோ? பின்ன? சிலாபம், புத்தளம், மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மாங்குளம், வவுனியா, முல்லைத்தீவு, புல்மோட்டை, திருகோணமலை ,மட்டக்களப்பு, அம்பாறை அப்பிடியே தொடர்ச்சியா எங்கட நிலமெல்லோ. எங்களுக்கு என்றொரு தனித்துவமான மொழியிருக்கோ? அதான் எங்கட தமிழ் மொழி.அதென்னமோ செம்மொழி என்று சொல்லுவினமே…அப்பிடித்தானே? அடுத்து எங்களுக்கு என்றொரு பாரம்பரியக் கலைப்பண்பாடு இருக்கோ? அதான் இருக்கே எங்கட சாப்பாடு நாங்க ஆடை அணிகிற விதம் எங்கட விழாக்கள். இன்னும் நிறைய எனக்கு மிச்சம் தெரியாது யாராவது சொல்லுங்கோ…. எங்கட நீண்ட வரலாறு ?? அதான் பூநகரியில, காரைநகரில, வேலணையில எல்லாம் எங்கட மூதாதையரின் வரலாற்று எச்சங்கள் கண்டு பிடிச்சிருக்கிறம் என்று வரலாற்றாய்வாரள் ப.புஸ்பரட்ணம் குமுவினர் சொல்லியிருக்கினம். பொருளாதாரம்?? அதான் போதுமானளவு இருக்கே.எங்களட்ட என்ன இல்லை கேக்கிறன்?நீர் வளம் இல்லையா நில வளம் இல்லையா?சீமெந்து இருக்கு.கடல் பெரு வளம் இருக்கு.என்ன பயிரும் விளையக்கூடிய நிலம் இருக்கு.இப்ப பத்தாததுக்கு மன்னாரில பெற்றோலிய வளம் வேற இருக்குதாம். அப்ப தமிழர் ஒரு தேசிய இனம் தானே? போர்த்துக்கேயர் 1505 ல் வந்திச்சினம் பிறகு ஒல்லாந்தர் ஆங்கிலேயர் எண்டு மாறி மாறி வந்து 1833 ல் யாழ் கண்டி கோட்டை என்று இருந்த மூன்று இராச்சியங்களையும் ஒன்றாக்கி பிரச்சனையைத் துவக்கி வைச்சினம்.பிறகு திருப்பிப் போகும்போது தமிழர்களையும் சிங்களவரிடம் ஒப்படைச்சிட்டுப் போட்டாங்கள். இப்ப நான் மகாவம்சம் என்ற நூலில் சொல்லப்பட்ட சில சுவாரிசயமான சில தகவல்களைச் சொல்லப் போறன். எல்லாளன் எண்டால் எல் ஐ ஆண்டவன் என்று அர்த்தமாம். எல் எண்டால் தமிழ் என்றொரு அர்த்தமிருக்காம்.இந்த எல்லாளனோடு சமர் புரிந்த துட்டகைமுணுவின் அம்மா விகாரமகாதேவிக்கு துட்டகைமுணுவைக் கருவில் சுமந்த போது மூன்று ஆசை வந்திச்சாம். ==>கொம்புத்தேன் தனக்கும் பிக்குமார்களுக்கும் அருந்தத்தரவேண்டும். ==> எல்லாளனுடைய அரண்மனையில் பூக்கும் ஒரு விசேச மலரைத்தான் தலையில் சூட வேண்டும். ==> எல்லாளனுடைய தளபதி ஒருவரின் தலை துண்டிக்கப்பட்டு வழிந்தோடும் இரத்தத்தை தான் குடிக்க வேண்டும். இப்படி தமிழர்கள் சிங்களவர்களின் எதிரிகள் என்ற பாடம் துட்டகைமுணு போன்றவர்களுக்கு கருவிலேயே புகட்டப்பட்டதாம். 1948 ம் ஆண்டு மலையகத்தமிழர்களின் குடியுரிமை டி.ஸ்.சேனனாயக்காவால் பறிக்கப்பட்டது. 1950 ல் மகாவலி குடியிருப்புத்திட்டத்தின் கீழ் கொலை கொள்ளை கற்பளிப்பு போன்ற குற்றங்களுக்காகத் தண்டனை பெற்ற சிங்களச் சிறைக்கைதிகளை விடுதலை செய்து அவர்களை தமிழர் வாழும் பகுதிகளான அம்பாறைப் பிரதேசங்களில்குடியமர்த்தி தமிழர்களை இடம்பெயரச் செய்வதன் மூலம் அவர்களுக்கான தேசிய இனப் பண்பான நிலப்பரப்பைத் தகர்த்தார்கள். 1956 ல் பண்டாரநாயக்க மொழியில் கை வைத்தார்.சிங்கள மொழியை ஆட்சி மொழியாக்குவதாக தேர்தல் வாக்குறுதி கொடுத்தார். 1971 ல் கல்வித்தரப்படுத்தலை அரசாங்கம் கொண்டுவந்தது.சிங்கள மாணவருக்கு குறைந்த வெட்டுப்புள்ளியுடனே பல்கழைக்கழகம் செல்ல வாய்புக் கொடுத்தது.அவர்களைவிட அதிகப் புள்ளிகள் பெற்ற தமிழ் மாணவர்கள் வீதியில் திரிவதா என்றெதிர்த்த சிவக்குமாரண்ணாவும் 1974ல் விடுதலைப் போராட்டத்தில் முதலாவதாக சயனைற் அருந்தி வீரமரணமடைந்தார். 1974 ல் தமிழாராய்ச்சி மாநாடு முற்றைவெளியில் நடந்தபோது 10ம் நாள் 9 தமிழர்கள் சிங்களக் காவலர்களால் காரணமின்றிப் படுகொலை செய்யப்பட்டார்கள். 1980 ல் எமது இதயபூமியான மணறாலிருந்து தமிழர்கள் 48 மணிநேரத்தில் வெளியேற்றப்பட்டு சிங்களவர்கள் குடியமர்த்தப்பட்டனர். 1981 ம் ஆண்டு தென்கிழக்காசியாவின் தலைசிறந்த நூலகமாகிய யாழ் நூலகம் லலித் திசாநாயக்க போன்ற படித்த சிங்களவர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டது.இதில் தமிழர் வரலாற்றுச் சான்றுகள் பல்லாயிரக்கணக்கான புத்தகங்கள் எல்லாம் அழிந்து போயின. இப்படி தமிழர் ஒரு தேசிய இனமாக இருக்கக் கூடாது என்பதற்கான அனைத்து முயற்சிகளும் நடந்தன. இப்ப சொல்லுங்கோ தமிழர் ஒரு தேசிய இனம்தானே?அவர்களுக்கு தம்மைத்தாமே ஆட்சி செய்யும் உரிமை ஏன் மறுக்கப்பட வேண்டும்.? இன்னொரு கேள்வி.... இலங்கையின் முதல் மனிதன் என்று மகா வம்சத்தில் சொல்லப்படுகின்ற விஜயன் என்பவர் சிங்கத்துக்கும் இளவரசிக்கும் பிறந்தவராம்…அறிவியல் சார்ந்து இது எவ்வளவு சாத்தியம்.? -சினேகிதி- - Thala - 12-17-2005 ஐநா சொல்லாமல் விட்டதை நீங்களும் விட்டுட்டீங்கள் சினேகிதி... அதுதான் பக்கத்து நாட்டின் ஆதரவு.... அவர்களின் பயம் காரணமாய். எங்களைப் பயங்கரவாதிகள் ஆக்கிவிட்டார்களே..! தமிழரின் அடிப்படைப் பிரச்சினைகள்... தீர்க்கப்பட்டாலே எல்லாரும்..... ஐரோப்பா போல திறந்த எல்லையின் கீழ் வாழலாம்... ஆனால் அதுக்கு சிங்களவருக்கு தமிழர் பற்றிய புரிதல் வேண்டும்... புரிதல் வரருமா..?? இல்லை எண்டுதான் சொல்ல வேண்டும்... புத்தர் சொன்ன சித்தாந்ததையே சரியாகப் புரிந்து கொள்ளாமல் அந்த மதத்தை சார்ந்திருந்து துவேசிப்பவர்கள் எப்பிடி புரிதலுக்கு உடன் படுவார்கள்... தமிழருக்கு ஒண்றும் வளங்க விரும்பவில்லை என்பதுதான் சிங்களமக்கள் கடந்த தேர்தலில் சொல்லி இருப்பது... அது துரதிட்ட வசமானது... எங்கள் சந்ததிக்கு என்ன விட்டுச் செல்லப் போகிறோம் என்பதுதான் இப்ப இருக்கும் கேள்வி... - Snegethy - 12-18-2005 தல எங்கட சந்ததிக்கு மட்டும் என்னத்த விட்டு வச்சிருக்கினமாம்...என்னப் பாருடங்க அரைகுறையாகத் தெரிஞ்சு வைச்சுகொண்டு கேள்வி கேட்டுக்கொண்டு திரியுறன்.பெரிசுகள் ஒன்றையும் காணேல்ல விளக்கம் சொல்ல. புத்தம் சரணம் ஹச்சாமி...புரிதல் வரவேணும். - iruvizhi - 12-18-2005 சினேகிதியே... படிப்பதற்கு பாடம் போல உள்ளது. இலகுவான விளக்கங்களோடு விளக்குகின்றீர்கள். இதுபோன்ற திறன்கூடிய ஆக்கங்க்ளை கொண்டுவாருங்கள். எம்மோடு பகிர்ந்துகொள்ளுங்கள். - Snegethy - 12-18-2005 இருவிழி அப்பிடியா சொல்றீங்கள்.நகைச்சுவை ஒன்று கதை ஒன்று அடுத்து தமிழ்- தமிழர் பகுதில ஒரு பதிவு போட்டிருக்கிறன் போய் வாசியுங்கோ. |