Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 552 online users.
» 0 Member(s) | 550 Guest(s)
Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,311
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,231
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,606
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,296
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,638
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,063
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,465
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,486
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,037
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,239

 
  ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தை
Posted by: Vaanampaadi - 12-16-2005, 10:52 AM - Forum: செய்திகள்: உலகம் - No Replies

கேரள பெண்ணுக்கு ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தை

<img src='http://www.dinamani.com/Images/Dec05/16twins.jpg' border='0' alt='user posted image'>

கேரளத்தில் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள பரியரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் (வியாழக்கிழமை) ஒட்டிய நிலையில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

கண்ணூர், டிச. 16: கேரளத்தைச் சேர்ந்த சாலி வின்சென்ட் (27) என்ற பெண்ணுக்கு கண்ணூர் மாவட்டத்தில் உள்ள பரியரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வியாழக்கிழமை இரட்டைக் குழந்தைகள் பிறந்தன.

தொப்புள் கொடியிலிருந்து ஒட்டியபடி பிறந்துள்ள இந்தக் குழந்தைகளின் எடை 4.9 கிலோ.

ஸ்கேன் செய்த பிறகே குழந்தைகள் இருவரும் ஆணா, பெண் என்பதைக் கண்டறியமுடியும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

முழு சோதனைகளையும் முடித்த பிறகே குழந்தைகளைத் தனித்தனியாகப் பிரிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

http://www.dinamani.com/NewsItems.asp?ID=D...Nn%A7Ls&Topic=0

Print this item

  யாழில் புதிதாக 10 ஆயிரம் இராணுவ துருப்புக்கள் களமிறக்கம்
Posted by: Vaanampaadi - 12-16-2005, 10:41 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (3)

வெள்ளி 16-12-2005 07:17 மணி தமிழீழம் யாழ் நிருபர்

யாழ் குடாநாட்டில் புதிதாக 10 ஆயிரம் இராணுவ துருப்புக்கள் களமிறக்கம்

யாழ் குடாநாட்டில் புதிதாக 10 ஆயிரம் படைகள் களம் இறக்கப்பட்டுள்ளதாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன. திருகோணமலை கடற்படைத் தளத்திலிருந்து யாழ் காங்கேசந்துறை கடற்படைத் தளத்திற்கு நாளாந்தம் பல கப்பல்கள் சென்று கொண்டிருப்பதாக யாழ் கடற்தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

காங்கேசந்துறைக்கு வந்திறங்கும் இராணுவ துருப்புக்கள் மாலை வேளைகளில் குறிப்பாக 6 மணி 7 மணி போன்ற வேளைகளில் கனரக வாகனங்களில் இராணுவத்தினர் யாழ் குடாநாட்டின் ஏனைய இராணுவ முகாம்களுக்கும் கொண்டு செல்லப்படுகின்றனர்.

யாழ்ப்பாணத்தின் பிரதான வீதிகளில் குறிப்பாக யாழ் குடாநாட்டு கரையோரப் பகுதிகள், கண்டி வீதி ,பருத்தித்துறை வீதி போன்றவற்றில் 75 மீற்றருக்கு இரு இராணுவ வீரர்கள் தரித்து நின்று கண்காணிப்பு நடவடிக்கையில்

அதேவேளை யாழ் குடாநாட்டில் உள்ள சந்திகளில் 5 தொடக்கம் 7 வரையிலான இராணுவத்தினர் பாதுகாப்பு நடவடிக்கையில்

கடற்பாதுகாப்பும் அதிகரித்ததோடு டோரா பீரங்கிப் படகுகளும் நீருந்து விசைப் படகுகளும் பாதுகாப்பு கடமைகளில் அதிகளவு

பலாலி இராணுவ பெருந்தளத்திலிருந்து பல்குழல் ரொக்கட் செலுத்திகளும் டாங்கிகளும் தென்மராட்சி வரணி படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. இந்த கனரக ஆயுதங்கள் வரணி சந்தியில் மக்களின் பார்வைக்காக குறிப்பிட்ட மணி நேரம் படையினரால் வைக்கப்பட்டிருந்தது.


Pathivu

Print this item

  இந்திய பாராளுமன்றத்தில் குண்டு ?
Posted by: Mathan - 12-16-2005, 09:38 AM - Forum: செய்திகள்: உலகம் - Replies (25)

நாடாளுமன்றத்துக்கு வெடி குண்டு மிரட்டல்: அவைகள் ஒத்திவைப்பு பிரதமர், அமைச்சர்கள், எம்பிக்கள் வெளியேற்றம்

நாடாளுமன்றத்தில் தீவிரவாதிகள் வெடி குண்டு வைத்துள்ளதாக இந்திய உளவுப் பிரிவுக்கு அமெரிக்கத் தூதரகம் தகவல் தந்ததையடுத்து லோக் சபாவும் ராஜ்யசபாவும் ஒத்தி வைக்கப்பட்டு பிரதமர், அமைச்சர்கள், எம்பிக்கள் உள்பட அனைவரும் உடனடியாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.

இரு அவைகளிலும் மோப்ப நாய்ப் படைகளும், கமாண்டோக்களும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

இன்று காலை இரு அவைகளிலும் கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது 11.45 மணியளவில் திடீரென சைரன் ஒலி எழும்பியது. இதையடுத்து லோக்சபாவை ஒத்தி வைத்த சபாநாயகர் எம்பிக்கள், அமைச்சர்கள் ஆகியோரை உடனடியாக வெளியேறுமாறு உத்தரவிட்டார்.

அதே போல ராஜ்யசபாவை திடீரென ஒத்தி வைத்த துணை ஜனாதிபதி பைரோன் சிங் செகாவத், உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களை அங்கிருந்து வெளியேறுமாறு உத்தரவிட்டார்.

நாடாளுமன்றத்தில் உள்ள தனது அலுவலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவை பிரதமர் மன்மோகன் சிங் சந்தித்து முடித்த அடுத்த சில நிமிடங்களில் இந்த சைரன் ஒலித்தது. இதையடுத்து பிரதமர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்.

பலத்த பாதுகாப்புடன் அவர் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள சௌத் பிளாக்குக்குக் கொண்டு செல்லப்பட்டார். அதே போல பிற அமைச்சர்களும் அங்கு கொண்டு செல்லப்பட்டனர்.

எம்பிக்கள் அனைவரும் அவைகளை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டனர். பெரும்பாலானவர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள நூலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

மோப்ப நாய்கள், வெடிகுண்டு நிபுணர்களுடன் நாடாளுமன்றத்தை அங்குலம் அங்குலமாக கமாண்டோக்கள் சோதனையிட்டு வருகின்றனர்.

நாடாளுமன்றத்தைச் சுற்றி பாராமிலிட்டரிப் படைகளும் போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர். நாடாளுமன்றத்தில் இருந்து பத்திரிக்கையாளர்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுவிட்டனர்.

பிரதமர் அலுவலகம், பாதுகாப்பு அமைச்சகம், நிதியமைச்சகம் ஆகியவை அமைந்துள்ள சௌத் பிளாக், நார்த் பிளாக் ஆகிய கட்டடங்களைச் சுற்றி கமாண்டோக்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்றத்துக்குள் குண்டு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்ததாக உள்துறை இணையமைச்சர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார். இந்தத் தகவலை அமெரிக்கத் தூதரகம் உங்களுக்குத் தந்ததா என்ற கேள்விக்கு பதிலளிக்க அவர் மறுத்தார்.

ஆனால், அவையில் இருந்து அவசரமாக வெளியேறிய பாஜக மூத்த தலைவரான சுஷ்மா சுவராஜ் நிருபர்களிடம் பேசுகையில், நாடாளுமன்றத்துக்குள் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கத் தூதரகம் மத்திய உளவுப் பிரிவான ஐபிக்குத் தகவல் தந்துள்ளது என்று அமைச்சர்ள் தெரிவித்தனர் என்றார்.

இரு அவைகளும் மீண்டும் 3 மணிக்குக் கூடும் என விவசாயத்துறை அமைச்சர் சரத்பவார் அறிவித்துள்ளார்.

நிலைமை கட்டுக்குள் இருப்பாதகவும் பதற்றமடைய வேண்டிய அவசியம் ஏதும் இல்லை என்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ரேணுகா சௌத்ரி தெரிவித்தார்.

வெடிகுண்டு குறித்து நீங்கள் தான் தகவல் தந்தீர்களா என டெல்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகத்திடம் கேட்டபோது, பாதுகாப்பு விஷயங்கள் குறித்து நாங்கள் ஏதும் பேசுவதில்லை. அதை நீங்கள் இந்திய அரசிடம் தான் கேட்டுக் கொள்ள வேண்டும் என அதன் செய்தித் தொடர்பாளர் டேவிட் கென்னடி கூறினார்.

உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் நிருபர்களிடம் பேசுகையில், யாரும் பதற்றமடையத் தேவையில்லை. முழுமையான அளவில் வெடிகுண்டு சோதனை நடந்து வருகிறது என்றார்.

லோக்சபா சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி கூறுகையில், நாடாளுமன்ற வளாகத்தில் சோதனைகள் முடிந்து 3 மணிக்கு அவை கூடும் என்றார்.

அதே போல நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ்முன்ஷியும் உறுப்பினர்கள் அனைவரும் 3 மணிக்கு அவைக்குத் திரும்பலாம் என்றார்.

இந்த வெடிகுண்டு மிரட்டல் குறித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்றே அறிக்கை தாக்கல் செய்யப்படும் என லோக்சபா செயலாளர் ஆச்சாரி தெரிவித்தார்.

தட்ஸ் தமிழ்

Print this item

  விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக மதுரையில் போஸ்டர்கள்
Posted by: Vaanampaadi - 12-16-2005, 07:54 AM - Forum: செய்திகள்: உலகம் - Replies (4)

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக மதுரையில் போஸ்டர்கள்

மதுரை : விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக மதுரையில் நேற்று போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. "தமிழ் தமிழர் இயக்கம்' என்ற பெயரில் அச்சடிக்கப்பட்ட போஸ்டரில் அச்சகத்தின் பெயர், விலாசம் இல்லை.


<img src='http://www.dinamalar.com/2005Dec16/photos/tn03%20.jpg' border='0' alt='user posted image'>

தமிழகத்தில் புலிகள் இயக்கத்துக்கு தடை உத்தரவு அமலில் உள்ளது. புலிகளுக்கு ஆதரவாக நேற்று மதுரையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அதில், "டிச., 15 ஈழத்தமிழர்களுக்காக தீக்குளித்த இளந்தமிழன் அப்துல் ரவூப்புக்கு வீர வணக்கம், புலிகள் மீதான தடையை நீக்கு, தமிழீழ விடுதலையை அங்கீகரி, தமிழ் தமிழர் இயக்கம்' என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த போஸ்டரால் உளவுத்துறையினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

போஸ்டரில் அச்சகத்தின் பெயர், விலாசம் குறிப்பிடப்படவில்லை. தமிழக அரசால் "தமிழ் தமிழர் இயக்கம்' தடை செய்யப்படவில்லை எனவும், அதன் தலைவர் தியாகு என்பவர் கோவையை சேர்ந்தவர் எனவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.

<img src='http://www.dinamalar.com/2005Dec16/photos/tn03%20a.jpg' border='0' alt='user posted image'>

http://www.dinamalar.com/2005Dec16/tn3.asp

Print this item

  அன்புக்காய் ஏங்கியே!...
Posted by: Nitharsan - 12-16-2005, 07:39 AM - Forum: கவிதை/பாடல் - Replies (19)

<b><span style='font-size:23pt;line-height:100%'>அன்புடனே அரவனைக்கும்
அன்னையிடம் விட -நான்
அதிகம் அதிகம் வைத்தேன்
அன்புதனை உன்னிடத்தில்
அழியாது நேசமென்று
அசைக்க முடியாத உறுதியினால்
அறிவிலியாய் நானிங்கே
அலைகின்றேன் காதலினால்
அகிலத்தில்
அன்பு வைத்தவன் நிலையிதா?
அறியாமல் நுழைந்தது
அன்பு கொண்ட என் தவறா?
அழகான வாழ்க்கை வாழ
அழைத்தேன் காதலை -இன்று
அது தவறெனில்
அதையேன் பூமியில் படைத்தான்
அயலவரும் உதவவில்லை
அன்பு கொண்டவரும் ஆதரவில்லை
அனுமதியும் இல்லையவள்
அகத்தினில் -தினமும்
அழுகின்றேன் அழுகின்றேன்-அவள்
அடிமையாய் போன -என்
அகத்தின் வேதனையை யார் அறிவார்
அறிந்தாலும் அக்கறைப்பட யாருளர்?
அனல் பட்ட புளுவாய்
அழிகின்றேன்...
அதிசயமாய் என் காதல்
அரங்கேறிவிட்டால்
அப்படியே நானும்
அடிங்கிடுவேன் அவள் அன்புக்கு
அல்லது அறுத்திடும் காதலெனில்
அடங்கிடுவேன் கல்லறைக்குள்
அன்புக்காய் ஏங்கியே!...</b></span>

Print this item

  வன்னி விழா - 2005
Posted by: Nitharsan - 12-16-2005, 07:15 AM - Forum: நிகழ்வுகள் - Replies (1)

வன்னி விழா 2005
மாவீரன் பண்டாரவன்னியன் நினைவாக
வன்னித் தமிழ்ச் சமூக கலாச்சார அமையம்; கனடா பெருமையுடன் வழங்கும் வன்னி விழா 2005

காலம்: 28-12-2005,புதன்கிழமை. அனுமதி நேரம்: மாலை 5.30 மணி.

இடம்: Barthurst Community Centre, 4588 Barthurst Street. (North of Sheppard)

பிரதம விருந்தினராக திரு எஸ்.சுந்தரன் (ஓய்வுபெற்ற முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர்) அவர்கள் கலந்து சிறப்பிக்கின்றார்கள்.

<img src='http://vannithendral.net/vannitamil/vannimain/vannivila3.png' border='0' alt='user posted image'>

Print this item

  &quot;ஏன் நீக்கினீர்கள்&quot; ஏன் நீக்கப்பட்டது?
Posted by: Luckylook - 12-16-2005, 06:25 AM - Forum: உங்கள் கருத்துக்கள் - Replies (26)

"ஏன் நீக்கினீர்கள்" ஏன் நீக்கப்பட்டது?

அது புது உறுப்பினர்களுக்கு ஒரு கலங்கரை விளக்காக இருந்திருக்கும் அல்லவா?

தேவை இல்லாத பல போஸ்டுகள் இங்கு உள்ளதே?

Print this item

  கள உறுப்பினர்களுக்கு வணக்கம்
Posted by: netboy - 12-16-2005, 04:49 AM - Forum: அறிமுகம் - Replies (19)

கள உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது வணக்கம்.
மன்றத்தில் இனைவதையிட்டு மிகுந்த மகிழ்வடைகின்றேன்.
நான் தொழிநுட்ப விடையங்களில் மிகுந்த ஆர்வம் உடையவன்.

Print this item

  புதிய ரோபாட்!
Posted by: Rasikai - 12-16-2005, 01:03 AM - Forum: கணினி - Replies (2)

<b>கம்ப்ïட்டர் கோளாறுகளை சரி செய்யும்: ஸ்டிக்கர் பொட்டு வடிவில் புதிய ரோபாட் </b>

விஞ்ஞான வளர்ச்சியின் ஒரு பகுதியாக விதவிதமான ரோபாட்டுகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

இயந்திரமனிதன் என்று அழைக்கப்படும் இந்த ரோபாட்டுகள் மனிதன் செய்ய முடியாத வேலைகளை மிக எளிதாக செய்கின்றன. மனித வடிவில் மட்டுமின்றி பாம்பு வடிவிலும், நாய்வடிவிலும், சிறு பூச்சி வடிவிலும் கூட ரோபாட்டுகள் உரு வாக்கப்படுகின்றன. இயந்தி ரங்களை பழுது பார்ப் பது, வீட்டு வேலைகளை கவனிப்பது, பாதுகாப்பு பணிகளிலும் இவை ஈடுபடுத் தப்படுகின்றன.

அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானிகள் சிறு ஸ்டிக்கர் பொட்டு வடிவில் புதிய ரோபாட்டுகளை உருவாக்கி உள்ளனர். விரல் நுனியில் 100-க்கும் மேற்பட்ட இது போன்ற ரோபாட்டுகளை கையாள முடியும்.

இந்த வகை ரோபாட்டுகள் கம்ப்ïட்டர்களில் ஏற்பட்டுள்ள கோளாறுகளை சரி செய்யும். கம்ப்ïட்டர் `சிப்'களில் சர்க்ïட்டுகளை சரி செய்யும்.

இந்த ரோபாட்டுகளில் சக்கரமோ, பேட்டரியோ கிடை யாது. மெல்லிய சில்வர், சிலிக்கான்களால் ஆன இந்த ரோபாட்டுகளில் 2 மெமரி பாயின்டுகள் உள்ளன. மின்சக்தியை உருவாக்க 2 ஆக்சுலேட்டர்கள் உள்ளன.

நன்றி
http://www.vaddakkachchi.com/tech/index.ph...t_from=&ucat=2&

Print this item

  ஒளிவட்டம்!
Posted by: Rasikai - 12-16-2005, 12:24 AM - Forum: கதைகள்/நாடகங்கள் - Replies (24)

<b>ஒளிவட்டம்!</b>

<b>கடைசி Exam ல் கடைசிக்கு முதல்க்கேள்விக்கு விடை தெரியாமல் கோவைசரளா கணக்கில் முழிந்து முழிந்து கொண்டிருக்கும் போது " என்ன இதுவோ என்னைச் சுற்றியே புதிதாய் ஒளிவட்டம்" என்று எங்கோ ஒரு பாட்டு ஒலிப்பது போல ஒரு பிரமை. அடச்சீ..... இப்ப பாட்டு ரொம்ப முக்கியம் என உள் மனசு திட்டித் தீர்க்க சரி கையை உயர்த்தி Profடம் ஒரு try போட்டு பார்ப்பம் என கையை உயர்த்தினேன். கிழவி ஒன்று என்னை நோக்கி ஆடி அசைந்து நடந்து வர 5 நிமிடம் ஆகிவிட்டது! சரி, அதுக்குள்ள என்னத்தை பெரிசா நான் பண்ணித் தொலைக்கப் போறன் என்று மனசை தேத்திவிட்டு, கடசிக்கு முதல் கேள்வியை விளங்க படுத்தச் சொல்லி அன்புக்கட்டளை இட்டேன். மேலும் ஒரு 10 நிமிடம் இன் வரவிற்கு காத்திருக்கச் சொல்லி கம்பி நீட்டியது கிழவி. முன்னால் இருக்கும் சபி மூசி மூசி எதையோ எழுதிக்கொண்டிருந்தாள். பக்கத்தில் இருந்த கறுவல் பென்சிலோடை விளையாடிக் கொண்டு என்னை பார்த்தொரு smile எனக்கும் ஒளிவட்டம் தான்டி "Don't worry " என உறுதிப்படித்தினாள். ஐயோ கடவுளே next semester இந்தக் course offer பண்ண வேணும் என்று நல்லூர்க்கந்தனுக்கு நேர்த்தி வைக்க நல்லூர்க்கந்தனே நேரில் வந்தது போல் Prof வந்து என்னுடைய பிரச்சினையைக் கேட்டார். அந்தாளும் நான் கேட்ட கேள்வியைப் படித்து பார்த்துவிட்டு, cookieக்கு எதிர்பார்த்திருந்த puppy போல இருந்த என்னிடம் "you should know this! " என்று குண்டைத்தூக்கி போட்டார். இவரைப்போய் கேட்டேனே என்னை செருப்பால் அடிக்க வேணும்! " No no always there is next semester! " என்று தேற்றிக்கொண்டு, Exam hallல் Toronto பயணத்துக்கு என்னென்ன தேவையென மனதுக்குள் List போடத் துடங்கினேன்.

"இந்த Torontoவே இப்படித்தான் நேரம் போறது தெரியாது. இந்தா நேற்று வந்தது போல் கிடக்குது ஆனா.... வந்து பத்து நாளாச்சு!" என்று நண்பி சாருவிடம் கூறிக்கொண்டு Elevatorஆல வெளியில வர ஊருல பக்கத்துவீட்டுப் பரமுஅக்கா Lobbல கதிரைல இருந்து வெளியில் கொட்டுகிற Snowவை எண்ணிக்கொண்டிருந்தார். சாரு, இந்தக் கிழவிட்ட மாட்டுப்பட்டா கரைச்சலடி, Let's go by the back door, என்று மெதுவாகச் சொல்லி முடிக்க , பரமுக்கா திரும்பவும் சரியாக இருந்தது, " அட சின்ராசுடை மகளே இங்க வா இங்க வா என்று பரமுக்கா, அருகில் நான் செல்ல, சாரு என்னுடன் வந்தாள். " எப்பஅடி பிள்ளை ottawaவால வந்தனீ?" பரமுக்கா தொடங்க "Here we go... " என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டு "ரெண்டு மூண்டு நாளைக்கு முதல்தான் வந்தனான். நீங்கள் எப்படி இருக்கிறியள்? என்று பதிலுக்கு நான் கேட்டேன். "எனக்கு என்னாச்சி குறை, அது சரி உனக்கின்னும் எத்தனை வருசமடி பிள்ளை இருக்குது" என விக்கிரமாதித்தன் கதையில் வரும் வேதாளம் போல முருங்கை மரத்தில் ஏறினா பரமுக்கா! நானும் பதில் தெரியாவிட்டாலும் அதைச் சொல்லாவிட்டால் என் தலை சுக்கு நூறாக வெடித்துவிடும் என எண்ணி, வழமை போல அதே பொய்யை விட்டேன்."அடுத்த வருடம் co-op செய்யலாம் என இருக்கிறன், அதோட First year ல English படிச்சதால வேற ஒரு வருடம் backup " என்று சொல்லி கிழவியின் கேள்விக்கு years தேடிக்கொண்டிருந்தேன். கிழவியோ" நீ போய் 3.5 வருடம் ஆகுதே இன்னும் 2 வருடம் தேவையா பிள்ளை?" என RCMP கணக்கில் கேள்விக் கணைகளை தொடுத்தது. கடவுளே இந்தக் கிழவி தன்ட வயசை விட்டுட்டு என்ட university yearsசை எண்ணிக் கொண்டிருக்குது என நினைக்க வாழ்க்கை வெறுத்தது!


ஒன்றும் சொல்லமுடியாமல் " ஓமாச்சி நீங்களும் எங்களொட வந்து படிச்சுப் பார்த்தாத்தான் உங்களுக்கு கஷ்டம் தெரியும்!" என்று கொஞ்சம் தைரியத்தை வரவளைச்சுக் கொண்டு சொன்னேன்." அவன் கந்தையர்ட்டை மோள் உன்னோட universityக்குப் போனவள் இப்ப முடிச்சு வேலையும் எடுத்துட்டாள்" என பரமக்கா சொல்லச் சொல்ல எரிச்சல் எரிமலையாகிக் கொண்டிருந்தது!" அவ ஆச்சி 3 வருட Program செய்தவ. நான் 4 வருச Program செய்யுறன், அது வேற... இது வேற,.... " என தமிழ் வாத்தியார் போல பரமக்காக்கு விளங்கப்படுத்தி திரும்பி பார்த்தேன். சாரு Escape ஆகிக் கன நேரமாயிருந்தது. " பரமக்கா என்ட Friend எனக்கு car ல பார்த்துக்கொண்டிருக்கிறா, அப்ப நான் போயிட்டு வாறன்" என பரமக்காக்கு Snow எண்ணும் வேலையைத் தொடர வாய்ப்பளித்து விடைபெறும்போது "you have ten more minitues remaining! " என்ற குரலொலிக்க திடுக்கிட்டுச் சுயநினைவுக்கு வந்தேன் அப்போது தான் பரீட்சை எழுதுக்கொண்டிருப்பது ஞாபகத்துக்கு வந்தது. பரீட்சைதாள்களை ஒப்படைத்த கணம் Busterminalல் காத்திருக்கும் Toronto busக்கு விரைந்தேன்.


யாவும் கற்பனை.</b>

Print this item