![]() |
|
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக மதுரையில் போஸ்டர்கள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக மதுரையில் போஸ்டர்கள் (/showthread.php?tid=2010) |
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக மதுரையில் போஸ்டர்கள் - Vaanampaadi - 12-16-2005 விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக மதுரையில் போஸ்டர்கள் மதுரை : விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக மதுரையில் நேற்று போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. "தமிழ் தமிழர் இயக்கம்' என்ற பெயரில் அச்சடிக்கப்பட்ட போஸ்டரில் அச்சகத்தின் பெயர், விலாசம் இல்லை. <img src='http://www.dinamalar.com/2005Dec16/photos/tn03%20.jpg' border='0' alt='user posted image'> தமிழகத்தில் புலிகள் இயக்கத்துக்கு தடை உத்தரவு அமலில் உள்ளது. புலிகளுக்கு ஆதரவாக நேற்று மதுரையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அதில், "டிச., 15 ஈழத்தமிழர்களுக்காக தீக்குளித்த இளந்தமிழன் அப்துல் ரவூப்புக்கு வீர வணக்கம், புலிகள் மீதான தடையை நீக்கு, தமிழீழ விடுதலையை அங்கீகரி, தமிழ் தமிழர் இயக்கம்' என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த போஸ்டரால் உளவுத்துறையினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். போஸ்டரில் அச்சகத்தின் பெயர், விலாசம் குறிப்பிடப்படவில்லை. தமிழக அரசால் "தமிழ் தமிழர் இயக்கம்' தடை செய்யப்படவில்லை எனவும், அதன் தலைவர் தியாகு என்பவர் கோவையை சேர்ந்தவர் எனவும் போலீசார் தெரிவிக்கின்றனர். <img src='http://www.dinamalar.com/2005Dec16/photos/tn03%20a.jpg' border='0' alt='user posted image'> http://www.dinamalar.com/2005Dec16/tn3.asp - Nitharsan - 12-16-2005 உணர்வு கொண்ட இந்திய உறவுகளுக்கு எமது நெஞ்சார்ந்த நன்றிகள் - Luckylook - 12-16-2005 தமிழன் இன உணர்வு கொண்டவன் தான். இதில் சந்தேகப்பட காரணம் ஏதுமில்லை.... - Vaanampaadi - 12-17-2005 <b>புலி ஆதரவு போஸ்டர்: மதுரையில் 5 பேர் கைது</b> டிசம்பர் 17, 2005 மதுரை: மதுரையில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக சுவரொட்டிகள் ஒட்டியதாக 5 பேரை போலீஸார் கைது செய்தனர். விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக மதுரையில் தமிழ் தமிழர் இயக்கம் என்ற அமைப்பின் சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. இந்த சுவரொட்டிகள் குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி, செல்லூர் பகுதியைச் சேர்ந்த ராஜாமணி, குறிஞ்சி கபிலன், பரிதி, மைதீன், சங்கரன் ஆகியோரைக் கைது செய்தனர். - தூயவன் - 12-18-2005 ஜனநாயகம் பேசுவது என்பதே அடுத்தவனை குற்றம் சாட்டப் பாவிக்கின்றதற்கு தானே.இப்போது கைது என்ன விடயத்தை சுட்டிக் காட்டுகின்றது? |