Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 315 online users.
» 0 Member(s) | 312 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,311
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,231
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,606
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,296
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,638
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,063
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,465
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,487
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,037
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,239

 
  சிவாஜி - ரஜனி & ஷங்கர்
Posted by: Luckylook - 12-15-2005, 11:47 AM - Forum: சினிமா - Replies (10)

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் சிவாஜி பட ஷýட்டிங் ஹைதராபாத்தில் இன்று (புதன்கிழமை) தொடங்கியது.

ஏவி.எம். நிறுவனத்தின் தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் படம் சிவாஜி. மிகுந்த பொருட்செலவில், தனது 60வது ஆண்டில் சிவாஜி படத்தைத் தயாரிக்கிறது ஏவி.எம். நிறுவனம்.


இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஷ்ரேயா நடிக்கிறார். இவர்கள் தவிர வில்லன் வேடத்தில் பிரகாஷ்ராஜ், காமடிக்கு விவேக் ஆகியோரும் இப்படத்தில் உள்ளனர். ரஜினி படங்களில் வழக்கமாக தலை காட்டும் விஜயக்குமார் உள்ளிட்டோரும் இப்படத்தில் இருக்கிறார்கள்.

ஏ.ஆர்.ரஹ்மான் மீண்டும் ரஜினி படத்திற்கு திரும்பியுள்ளார். கே.வி. ஆனந்த் கேமராவைக் கையாளுகிறார். கலையை தோட்டா தரணி கவனிக்கிறார். வசனத்தை சுஜாதா எழுதுகிறார். முதல் முறையாக ரஜினி படத்திற்கு ஸ்டண்ட் அமைக்கிறார் பீட்டர் ஹெய்ன். (அந்நியனில் சும்மா வித்தை காட்டினாரே.. அவர் தான்)


சமீபத்தில் பூஜை போடப்பட்ட இப்படத்தின் ஷýட்டிங் இன்று காலை ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் திரைப்பட நகரில் தொடங்கியது.¬முதல் காட்சியாக ரஜினி, ஷ்ரேயா சம்பந்தப்பட்ட பாடல் காட்சியை சுட்டனர்.

தொடர்ந்து ஹைதராபாத்தில் 3 மாதங்கள் வரை ஷýட்டிங் நடைபெறும் எனத் தெரிகிறது. இதற்காக முக்கிய நடிகர்களிடம் 3 மாதத்திற்கான கால்ஷீட்டை ஒட்டு மொத்தமாக வாங்கி வைத்துள்ளார் ஷங்கர்.


சிவாஜி படத்தில் இடம் பெறும் முக்கிய கேரக்டர் ஒன்றில் அமிதாப்பச்சனை நடிக்க வைக்க ரஜினியும், ஷங்கரும் முடிவு செய்திருந்தனர். ஆனால் தற்போது அமிதாப் உடல் நலமின்றி இருப்பதால் அந்த கேரக்டரில் ஆந்திராவைச் முக்கிய நடிகர் ஒருவர் நடிக்கக் கூடும் எனத் தெரிகிறது.

அது சிரஞ்சீவியாகக் கூட இருக்கலாம்.

அப்புறம் இன்னொரு விஷேசம். இந்தப் படத்தின் இன்னொரு ஹீரோயினாக நடிக்க இந்தியில் ஆள் தேடி வருகிறார்கள். அது பெரும்பாலும் ராணி முகர்ஜியாக இருக்கக் கூடும் என சிவாஜி பட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Print this item

  சங்கராச்சாரியார் மீது திருட்டு வழக்கு
Posted by: Luckylook - 12-15-2005, 11:42 AM - Forum: செய்திகள்: உலகம் - No Replies

ஜெயேந்திரர் மீது திருட்டு வழக்கு: பழி வாங்க முயற்சி?முன் ஜாமீன் கோருகிறார்
டிசம்பர் 15, 2005

திருவாரூர்:

கோவில் கும்பாபிஷேகத்திற்கு வந்தபோது, கோவிலில் வைக்கப்பட்டிருந்த நவரத்தின கற்களை ஜெயேந்திரர் திருடிச் சென்று விட்டதாக அவர் மீது திருவாரூர் மாவட்டம் கோட்டூர் போலீஸில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.



இதையடுத்து இந்த வழக்கில் தான் கைது செய்யப்படலாம் என அஞ்சும் ஜெயேந்திரர் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

தன்னை அதிமுக அரசு போலீஸ் உதவியுடன் பழிவாங்க முயல்வதாக ஜெயேந்திரர் குற்றம் சாட்டியுள்ளார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் வசித்து வருபவர் சுரேஷ் என்கிற கிருஷ்ணன். இவரது சொந்த ஊர் கோட்டூர் அருகே உள்ள பெரியகுடி. இவர் கோட்டூர் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார்.

அதில், பெரியகுடி கிராமத்தில் சௌந்தரநாயகி சமேத அகஸ்தீஸ்வரர் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் உள்ள மூலவர் சிவலிங்கத்திற்கும், இன்னொரு சிவலிங்கத்திற்கும் கீழே தங்கம், வைரம், கோமேதகம், மரகத கற்கள் வைக்கப்பட்டிருந்தன.

அதன் விலை அப்போதே ரூ.2 லட்சம் என்று கூறப்பட்டது. இந்தக் கோவிலில் கடந்த 1995ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. கோவில் திருப்பணியின் போது இந்தக் கற்கள் சிலைகளுக்குக் கீழே வைக்கப்பட்டன.

அப்போது நானும் அந்த இடத்தில் இருந்தேன். கும்பாபிஷேகத்திற்குப் பின்னர் 1999ம் ஆண்டு ஜூன் மாதம் 28ம் தேதியன்றும், 2000மாவது ஆண்டு ஜூன் 14ம் தேதியன்றும் ஜெயேந்திரர் இக்கோவிலுக்கு வந்தார்.

அந்த சமயத்தில் நடந்த திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் அவர் கலந்து கொண்டார். சமீபத்தில் கடந்த நவம்பர் 11ம் தேதி ஜெயேந்திரர் இக்கோவிலுக்கு மீண்டும் வந்தார்.

அப்போது சிவலிங்கத்தின் அடியில் இருந்த கற்களை ஜெயேந்திரர் வெளியே எடுத்தார். எதற்காக கற்களை எடுக்கிறீர்கள் என்று நான் கேட்ட போது, அதற்கு மருந்து சாத்த வேண்டும்.சாத்திய பின் திரும்பவும் உள்ளே வைத்துவிடலாம் என்று கூறி அதை தன்னுடன் எடுத்துச் சென்றார்.

ஆனால் எடுத்துச் சென்ற கற்களை இதுவரை கொண்டு வந்து வைக்கவில்லை. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் சுரேஷ். இந்தப் புகார் குறித்து கோட்டூர் போலீஸார், மாவட்ட காவல்துறை ஆணையர் பாஸ்கரனுக்குத் தகவல் கொடுத்தனர்.

உடனடியாக பாஸ்கரன், டிஎஸ்பி கல்யாண ராமன் உள்ளிட்ட போலீஸ் படையினர் சம்பந்தப்பட்ட கோவிலுக்கு சென்று சிவலிங்க சிலைகளைப் பார்வையிட்டனர். சுரேஷின் புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள உள்ளூரைச் சேர்ந்த 8 பேரிட¬ம் விசாரணை நடத்தியுள்ளனர். ஜெயேந்திரரிடம் விசாரணை நடத்துவது தொடர்பாக டிஜிபியின் அனுமதியை அவர்கள் கோரியுள்ளதாக தெரிகிறது.

இந்த வழக்கில் ஜெயேந்திரரை உள்ளே தள்ள அதிமுக அரசு முயல்வதாகக் தெரிகிறது.

பழி வாங்குகிறது அதிமுக அரசு:

இந் நிலையில் தனக்கு முன் ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெயேந்திரர் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், நான் பெரியகுடி கோவிலுக்கு சென்றது உண்மைதான். ஆனால் நவரத்தின கற்கள் எதையும் நான் எடுத்துச் செல்லவில்லை. அப்பட்டமான பொய் புகார் அது.

என்னைப் பழிவாங்க தமிழக அரசு துடிக்கிறது. இதன் காரணாகவே சங்கரராமன் கொலை வழக்கில் என்னை சேர்த்துள்ளனர். இந்த வழக்கு தற்போது உச்சநீதிமன்ற தலையீட்டின் பேரில் தமிழகத்திலிருந்து புதுவைக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதைப் பொறுக்க முடியாத தமிழக அரசு, பழிவாங்கும் நோக்கத்துடன் என் மீது தற்போது யாரையோ விட்டு பொய்யான புகாரைக் கொடுக்க வைத்துள்ளது. இந்த புகாரின் பேரில் நான் கைது செய்யப்படக் கூடும் என அஞ்சுகிறேன்.

எனவே எனக்கு இந்த வழக்கில் முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரியுள்ளார் ஜெயேந்திரர்.

Nandri : Thatstamil

Print this item

  சிறிலங்கா நாடாளுமன்றக் கட்டடத்தில் கஞ்சா
Posted by: நர்மதா - 12-15-2005, 10:34 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (7)

சிறிலங்கா நாடாளுமன்றக் கட்டடத்தில் கஞ்சா பயிரிடப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வரவு-செலவுத் திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்படுவதையொட்டி நாடாளுமன்ற பாதுகாப்புப் பணிகளில் இராணுவத்தினர் ஈடுபட்டிருந்த போது இந்த கஞ்சா பயிரிடப்பட்ட விவகாரம் கண்டு பிடிக்கப்பட்டது.

நாடாளுமன்ற கட்டடத்தின் 2 ஆம் மாடியில் உள்ள ஓதியன் அரங்கம் அருகில் இது பயிரிடப்பட்டிருந்தது. இது தொடர்பாக நாடாளுமன்ற ஊழியர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நாடாளுமன்ற பணியாளர்கள் சிலர்தான் இந்த கஞ்சாவுக்குக் காரணம் என்று சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நன்றி புதினம்

Print this item

  இலங்கை - புதிய நாணயம்
Posted by: Double - 12-15-2005, 10:31 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

<b>இலங்கை மத்திய வங்கி உடனடியாக பாவனைக்கு வரும் விதத்தில் புதிய நாணயக் குற்றிகளை வெளியிட்டுள்ளது.</b>

இலங்கை மத்திய வங்கி புதிய தொடர் சுற்றோட்ட நாணயக் குற்றிகளை வெளியிட்டுள்ளது.

ஐந்து ரூபா, இரண்டு ரூபா, ஒரு ரூபா நாணயக் குற்றிகளையும் ஐம்பது மற்றும் இருபத்தைந்து சதங்களையும் புதிய நாணயக் குற்றிகளாக வங்கி வெளியிட்டுள்ளது.

புதன்கிழமை மத்திய வங்கியின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இதனை அறிவித்த வங்கியின் துணை ஆணையாளர் திருமதி எம்.குரே வெள்ளிக்கிழமையிலிருந்து வங்கிகளில் இந்த நாணயக் குற்றிகள் பாவனைக்கு வரும் எனத் தெரிவித்தார். திருமதி எம்.குரே மேலும் தெரிவிக்கையில்;

புதிய நாணயக் குற்றிகளின் வடிவமைப்புக்கள் தற்போது சுற்றோட்டத்தில் உள்ள அதே இன நாணயக் குற்றிகளைப் போல ஒரே மாதிரியானதாயிருக்கும். நாணயக் குற்றிகளின் ஆண்டு 2005 எனக் காணப்படும்.

புதிய ஐந்து, இரண்டு ரூபாயின் அளவும் நிறமும் மாற்றமுறாது காணப்படுகின்ற அதேவேளை, நிறையும் உலோக கலப்பும் மாற்றமடைந்துள்ளது.

ரூபா ஒன்று மற்றும் 50, 25 சதங்கள் தற்போதுள்ள நாணயக் குற்றிகளிலும் பார்க்க சிறியனவாக இருப்பதுடன் அடையாளங் காணும் நோக்கங்களுக்காக வேறுபட்ட உலோகக் கலப்பிலும் நிறத்திலும் வார்க்கப்பட்டுள்ளன.

புதிய நாணயக் குற்றிகள் தற்போதுள்ள நாணயக் குற்றிகளுடன் சேர்ந்து நடைமுறையிலிருக்கும் இந்த நாணயக் குற்றிகள் இலங்கையில் சட்ட ரீதியானவையாகவும் சுற்றோட்டத்திலுள்ள போது இலங்கை மத்திய வங்கியின் பொறுப்பாகவும் இருக்கும்.

பித்தளை, செப்பு, நிக்கல் போன்றவற்றின் அளவு சர்வதேச அளவில் அதிகரித்துள்ளது. எமது நடவடிக்கையின் காரணமாக செலவை குறைக்கவுள்ளோம். 600 மில்லியன் வரை நாம் இதன் மூலம் சேமிக்கலாம்.

புதிய நாணயக் குற்றிகள் குறித்து கடந்த வருடமே சிந்தித்திருந்தோம். எனினும், தொலைபேசி பாவனையாளர்களின் நன்மை கருதி நாணயக் குற்றிகளின் அளவு குறித்து ஆலோசனைகளை மேற்கொண்டோம். இதன் பின்னர் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் வடிவமைத்தோம்.

தற்போது நடைமுறையிலுள்ள பல நாணயக் குற்றிகள் பாவனைக்கு உட்படுத்தப்படுவதில்லை.

புதிய நாணயக் குற்றிகள் 25 முதல் 30 வருடங்களுக்கு நீடிக்கும் என நினைக்கின்றோம்.

முன்னைய நாணயக் குற்றிகள் 40 வருட காலமாக நடைமுறையிலிருந்தன. புதிய நாணயக் குற்றிகள் வெள்ளிக்கிழமையிலிருந்து வங்கிகளில் பாவனைக்கு வரும்.

Thanks: Thinakkural
http://www.thinakkural.com/New%20web%20sit...ws-4.htm[/size]

Print this item

  விசேட உறுப்பினர் ஆக என்ன செய்ய வேண்டும்?
Posted by: Luckylook - 12-15-2005, 05:33 AM - Forum: உங்கள் கருத்துக்கள் - Replies (77)

விசேட உறுப்பினர் ஆக என்ன செய்ய வேண்டும்?

Print this item

  தமிழ் தொpயாத பாடகர்கள் வேண்டாம்
Posted by: SUNDHAL - 12-15-2005, 04:22 AM - Forum: சினிமா - No Replies

தமிழ் தொpயாத பாடகர்கள் வேண்டாம் இமான் பேட்டி

தமிழ் உச்சாpக்கத் தொpயாத பாடகர், பாடகியை பயன்படுத்தமாட்டேன் என்று இசை அமைப்பாளர் இமான் கூறினார்.

தமிழன், கிhp, ஆணை உள்படபல படங்களுக்கு இசை அமைத்திருப்பவர் இமான். அவர் கூறியது„

ஆணை, சின்னா, தகதி மிதா, அன்பேவா, ஏ.பி.சி.டி., 6.2 என இந்த ஆண்டு 6 படங்கள் எனது இசையில் திரைக்கு வந்துள்ளன. விரைவில் குஸ்தி படம் வருகிறது.

பொங்கல் தினத்தில் மதராஸி, திருவிளையாடல் ஆரம்பம், கோவை பிரதர்ஸ் படங்கள் வருகின்றன. ரசிகர்கள் மெலோடி, குத்தாட்டம் என இரண்டு வகைப் பாடல் களையும் ரசிக்கிறhர்கள். தியேட்டாpல் வரவேற்பு பெறு வது குத்து பாடல்கள்தான். எனது படங்களில் மெலோடி பாடல்கள் இடம் பெறும்படி பார்த்துக்கொள்கிறேன்.

…கிஸ் கிஸ்கி கிஸ்மத்† என்ற இந்தி படத்துக்காக ஒரு பாடல் பாடினேன். அதில் ஒரு வார்த்தை உச்சாpப்பு சாpயாக இல்லாததால் பொpய எதிர்ப்பு வந்தது. பிரபல பாடகி ஆஷh போன்ஸ்லே போன் செய்து அந்த வார்த்தையை சாpயாக பாடும்படி கூறினார்.

தங்கள் மொழி மீது அவ்வளவு பற்றுள்ளவர்களாக இருக்கிறhர்கள். நமது தமிழ் மொழியில் வார்த்தைகளை நன்கு உச்சாpப்பவர்களை மட்டுமே இதுவரை பாட அழைத்திருக்கிறேன். உதித் நாராயன், சுகிந்தர் சிங் போன்றவர்களுக்கு

எப்போது தமிழ் உச்சாpப்பு சாpயாக வருகிறதோ அப்போது தான் பயன்படுத்துவேன். தமிழ் மீது தீராத மோகம் இருக்கிறது.

ஒரு சிலர் வெளிநாடுகளில் சென்று ரெக்கார்டிங் செய்தால்தான் நன்றhக இருக்கும் என்கின்றனர். அப்படி எதுவும் கிடையாது. இங்கேயே எல்லா கருவிகளும் உள்ளன. அதை முறையாக பயன்படுத்தினால் போதும் என்றhர் இமான்.

ThanksBig Grininakaran........

Print this item

  தமிழ் இஸ்லாமிய இணையதளம்
Posted by: Raguvaran - 12-15-2005, 02:24 AM - Forum: தளமுகவரிகள் - Replies (4)

ஒரு நல்ல தமிழ் இஸ்லாமிய இணையதளம். ஒருமுறை சென்று பாருங்களேன்.


அத்துடன் தலைப்பை தமிழில் எழுதமுடியாமல் உள்ளது.
மட்டுதினர்கள் தலைப்பை தமிழில் மாற்றி விடுவீர்களா??.

http://www.tamilislam.com/


<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

Print this item

  மணம் இருக்கா இல்லையா
Posted by: sathiri - 12-14-2005, 11:26 PM - Forum: கவிதை/பாடல் - Replies (6)

பொழுது போகாமல் நான் உந்த வலை புூக்களிலை இயற்கையிலையே மணம் இருக்கா இல்லையா எண்டு மணந்து ஒரு ஆராச்சி செய்து கொண்டிருந்தான் அப்ப ஒரு யாழ் கள உறுப்பினர் ஒருதரின்ரை வலை புூவிலை இருந்து ஒரு மணம் வீசியது அதை இங்கை உங்களிற்காகவும் தாறன் மணந்து பாத்து சொல்லுங்கோ யாழ் உறவுகளே எழுதியவர் நம்மடை நித்தியா தான்

<img src='http://img220.imageshack.us/img220/8420/romantic16yc.jpg' border='0' alt='user posted image'>

<span style='color:blue'>நளினமேனி நவரசப் பந்தல்
இனிய மெய்யான பொய்
பொய்யோ மெய்யோ என
அய்யோ என்னை
மலைக்க வைக்கும்
இரு குன்றுகள்

நெய்யாய் எனை உருக்கி
ஒரு கை போதாமல் என்
இரு கைகளால் அள்ளி
பருகப் பருகத் தாகம் பெருக
முயல முயல முயற்சி நீள
அகல அகல அனைத்தும் அகன்று
ஒடுங்கி ஒன்றாய் நீயும் நானும்...

நெருங்கி நெருங்கி நெருப்பு மூட்டி
மூட்டிய தீயில் முழுவதும் தீய்த்து
தீய்ந்து பயனாய் மூளும் தீயை
தீயாய் மாறி யாண்டும் எரித்து
எரிந்தது சுட்டு சூடு பறக்க...

என் உடலில் உரசி உசிரை கரைத்து
கரைந்து இரண்டற இன்றே கலந்து
கலைந்த கூந்தலும் இல்லாத ஆடையும்
நிமிர்ந்த நிர்வாண சுகத்திலே
அகன்று விரிந்து ஆகாயம் போல...

எழுந்து தாழ்ந்து ஆழியின் அலையாய்
அடித்துப் புரண்டு நெய்யைக் கடைந்து
உருக்கி உருக்கி மோட்சம் கொண்டு
அருந்தி அருந்தி அமரம் கண்டு...

நிறைந்து நிலையாய் என்றும்
ஒன்றாய் ஓங்கி ஒன்றியிருப்போம்.

-நித்தியா</span>

Print this item

  சூரியன் இணையம் புது வடிவிலா?
Posted by: Mathuran - 12-14-2005, 10:01 PM - Forum: இணையம் - Replies (2)

சூரியன் இணையம் புது வடிவிலா?

சூரியன்.கோம் என மட்டுமே வருகின்றது. தெரிந்தவர்கள் தகவல் பரிமாறுங்கள்

Print this item

  நான் யார்?
Posted by: Mathuran - 12-14-2005, 09:16 PM - Forum: கவிதை/பாடல் - No Replies

ஒருத்தி/ (ஒருத்தன்)
என்னுள்
மூட்டிய
தீயால்
நான்
ஒளிர்ந்து
உருகி
வடிக்கின்றேன்
கண்ணீரை

நான் யார்?

Print this item