![]() |
|
மணம் இருக்கா இல்லையா - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: மணம் இருக்கா இல்லையா (/showthread.php?tid=2035) |
மணம் இருக்கா இல்லையா - sathiri - 12-14-2005 பொழுது போகாமல் நான் உந்த வலை புூக்களிலை இயற்கையிலையே மணம் இருக்கா இல்லையா எண்டு மணந்து ஒரு ஆராச்சி செய்து கொண்டிருந்தான் அப்ப ஒரு யாழ் கள உறுப்பினர் ஒருதரின்ரை வலை புூவிலை இருந்து ஒரு மணம் வீசியது அதை இங்கை உங்களிற்காகவும் தாறன் மணந்து பாத்து சொல்லுங்கோ யாழ் உறவுகளே எழுதியவர் நம்மடை நித்தியா தான் <img src='http://img220.imageshack.us/img220/8420/romantic16yc.jpg' border='0' alt='user posted image'> <span style='color:blue'>நளினமேனி நவரசப் பந்தல் இனிய மெய்யான பொய் பொய்யோ மெய்யோ என அய்யோ என்னை மலைக்க வைக்கும் இரு குன்றுகள் நெய்யாய் எனை உருக்கி ஒரு கை போதாமல் என் இரு கைகளால் அள்ளி பருகப் பருகத் தாகம் பெருக முயல முயல முயற்சி நீள அகல அகல அனைத்தும் அகன்று ஒடுங்கி ஒன்றாய் நீயும் நானும்... நெருங்கி நெருங்கி நெருப்பு மூட்டி மூட்டிய தீயில் முழுவதும் தீய்த்து தீய்ந்து பயனாய் மூளும் தீயை தீயாய் மாறி யாண்டும் எரித்து எரிந்தது சுட்டு சூடு பறக்க... என் உடலில் உரசி உசிரை கரைத்து கரைந்து இரண்டற இன்றே கலந்து கலைந்த கூந்தலும் இல்லாத ஆடையும் நிமிர்ந்த நிர்வாண சுகத்திலே அகன்று விரிந்து ஆகாயம் போல... எழுந்து தாழ்ந்து ஆழியின் அலையாய் அடித்துப் புரண்டு நெய்யைக் கடைந்து உருக்கி உருக்கி மோட்சம் கொண்டு அருந்தி அருந்தி அமரம் கண்டு... நிறைந்து நிலையாய் என்றும் ஒன்றாய் ஓங்கி ஒன்றியிருப்போம். -நித்தியா</span> - Vasampu - 12-15-2005 சாத்திரி நானும் உம்மடை கதைய நம்பி முகர்ந்து முகர்ந்து பார்த்தேன். ஒரு மணத்தையும் காணேலை. அதோடை உந்தக் கவிதையும் விளங்கேலை. தயவு செய்து இதன் விளக்கத்தை எனக்கு தனிமடலிலே போட்டு விடுமன். உமக்கு புண்ணியம் கிடைக்கும். - pulukarponnaiah - 12-15-2005 வசம்பு என்ன குசும்போ, எரிந்த சுருட்டை இழுத்துப் பத்தி விறைத்த கையை நீட்டிப் பிடித்து உள் இழுத்து,இழுத்துச் சுவைத்த புகயை நினைந்து நினைந்து படிந்த நித்திய வரிக்குள் உறைந்து திளைத்து இன்புற்றேன் - sOliyAn - 12-15-2005 http://suduvanam.blogspot.com/ என்ற அவரது குடிலில் பல கவிதைகளை பார்த்தேன்.. ஒவ்வொன்றும் நன்றாக உள்ளன. சில சொல்லத் தயங்கும் சேதிகளாகவும் தெரிகின்றன. கவிதைகள் என்று நோக்கும் போது.. சாத்திரி இணைத்த கவிதையையும் கவிஞர் அருமையாக எழுதியுள்ளார். வாழ்த்துக்கள். - SUNDHAL - 12-15-2005 சாய் வம்பன்னா என்ன விட சின்ன பிள்ளையா இருக்கார்ப்பா... :oops: :oops: கவிதை நன்னா மணக்கிது இன்னும் அப்பிடி 4 ,5 எடுத்து விடுங்கப்பா... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - தூயவன் - 12-15-2005 Vasampu Wrote:சாத்திரி நானும் உம்மடை கதைய நம்பி முகர்ந்து முகர்ந்து பார்த்தேன். ஒரு மணத்தையும் காணேலை. அதோடை உந்தக் கவிதையும் விளங்கேலை. தயவு செய்து இதன் விளக்கத்தை எனக்கு தனிமடலிலே போட்டு விடுமன். உமக்கு புண்ணியம் கிடைக்கும். என்ர அறிவுக் கொழுந்து. எப்பிடியணை இப்படி எல்லாம் யோசிக்கின்றாய். பழமொழி ஒண்டு ஞாபகம் வருது. பாத்தா உமக்காகவே சொன்னது போல அச்சொட்டா பொருந்தப்பா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Rasikai - 12-17-2005 சில விடயங்கள் பப்பிளிக்ல சொல்ல முடியாது. அந்த வகையில் பார்க்ககும் போது இந்தக் கவிதை ரொம்ப செக்ஸியா இருக்கு. சொல்ல முடியாத விடயங்களை சொல்ல வருவது போல் ஆனால் கவிதை என்று பார்க்கும் போது மிக அழகாக அவருக்கே உரிய கவிதை நடையுடன் காணப்படுகிறது. |