Posts: 186
Threads: 20
Joined: Dec 2005
Reputation:
0
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் சிவாஜி பட ஷýட்டிங் ஹைதராபாத்தில் இன்று (புதன்கிழமை) தொடங்கியது.
ஏவி.எம். நிறுவனத்தின் தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் படம் சிவாஜி. மிகுந்த பொருட்செலவில், தனது 60வது ஆண்டில் சிவாஜி படத்தைத் தயாரிக்கிறது ஏவி.எம். நிறுவனம்.
இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஷ்ரேயா நடிக்கிறார். இவர்கள் தவிர வில்லன் வேடத்தில் பிரகாஷ்ராஜ், காமடிக்கு விவேக் ஆகியோரும் இப்படத்தில் உள்ளனர். ரஜினி படங்களில் வழக்கமாக தலை காட்டும் விஜயக்குமார் உள்ளிட்டோரும் இப்படத்தில் இருக்கிறார்கள்.
ஏ.ஆர்.ரஹ்மான் மீண்டும் ரஜினி படத்திற்கு திரும்பியுள்ளார். கே.வி. ஆனந்த் கேமராவைக் கையாளுகிறார். கலையை தோட்டா தரணி கவனிக்கிறார். வசனத்தை சுஜாதா எழுதுகிறார். முதல் முறையாக ரஜினி படத்திற்கு ஸ்டண்ட் அமைக்கிறார் பீட்டர் ஹெய்ன். (அந்நியனில் சும்மா வித்தை காட்டினாரே.. அவர் தான்)
சமீபத்தில் பூஜை போடப்பட்ட இப்படத்தின் ஷýட்டிங் இன்று காலை ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் திரைப்பட நகரில் தொடங்கியது.¬முதல் காட்சியாக ரஜினி, ஷ்ரேயா சம்பந்தப்பட்ட பாடல் காட்சியை சுட்டனர்.
தொடர்ந்து ஹைதராபாத்தில் 3 மாதங்கள் வரை ஷýட்டிங் நடைபெறும் எனத் தெரிகிறது. இதற்காக முக்கிய நடிகர்களிடம் 3 மாதத்திற்கான கால்ஷீட்டை ஒட்டு மொத்தமாக வாங்கி வைத்துள்ளார் ஷங்கர்.
சிவாஜி படத்தில் இடம் பெறும் முக்கிய கேரக்டர் ஒன்றில் அமிதாப்பச்சனை நடிக்க வைக்க ரஜினியும், ஷங்கரும் முடிவு செய்திருந்தனர். ஆனால் தற்போது அமிதாப் உடல் நலமின்றி இருப்பதால் அந்த கேரக்டரில் ஆந்திராவைச் முக்கிய நடிகர் ஒருவர் நடிக்கக் கூடும் எனத் தெரிகிறது.
அது சிரஞ்சீவியாகக் கூட இருக்கலாம்.
அப்புறம் இன்னொரு விஷேசம். இந்தப் படத்தின் இன்னொரு ஹீரோயினாக நடிக்க இந்தியில் ஆள் தேடி வருகிறார்கள். அது பெரும்பாலும் ராணி முகர்ஜியாக இருக்கக் கூடும் என சிவாஜி பட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Posts: 634
Threads: 23
Joined: Dec 2005
Reputation:
0
சந்திரமுகியில் ராஜாதிராஜா படத்தில் வருவதைப் போல இளமையான தோற்றத்துடன் வந்த ரஜினிகாந்த், சிவாஜி படத்தில், இன்னும் இளமையாக, பழைய ஹேர்ஸ்டைலுடன் கலக்கலாக வருகிறார்.
<img src='http://thatstamil.indiainfo.com/images31/optimized/shivaji-banner-500.jpg' border='0' alt='user posted image'>
சிவாஜி படப்பிடிப்பு படு வேகமாக நடந்து வருகிறது. மு¬தல் கட்ட படப்பிடிப்பை ஹைதராபாத்தில் நடத்திய இயக்குனர் ஷங்கர் தற்போது இரண்டாவது கட்டப் படப்பிடிப்பில் தீவிரமாக உள்ளார்.
<img src='http://thatstamil.indiainfo.com/images31/optimized/rajini-250.jpg' border='0' alt='user posted image'>
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரஜினி, விவேக் சம்பந்தப்பட்ட சில காட்சிகள் படமாக்கப்பட்டன. மிகவம் ரகசியமாக வைக்கப்பட்டிருந்த இந்தப் படப்பிடிப்பு மெல்ல மெல்ல ரசிகர்களுக்குப் பரவவே ஏராளமானோர் படப்பிடிப்பு நடந்த பகுதியில் குழுமி விட்டனர். இதையடுத்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
முடி கொட்டுவதற்கு முன்பு ரஜினி வைத்திருந்த ஹேர் ஸ்டைலில் புத்தம் புது தோற்றத்துடன், கோட், சூட்டுடன் படு இளமையாக காணப்பட்டார் ரஜினி. ரயில்வே அதிகாரி உடையில் அவர் நடித்தார்.
ரஜினி, விவேக், எம்.எஸ்.பாஸ்கர் சம்பந்தப்பட்ட சில காட்சிகளை வேக வேகமாக சுட்டுக் கொண்டிருந்தார் ஷங்கர். காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை படப்பிடிப்பு நடந்தது. அதன் பின்னர் ரஜினி பலத்த பாதுகாப்புடன் அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.
ரஜினியைப் பார்க்க கூடியிருந்த ரசிகர்கள், 'தலைவர்' ஒருமுறையாவது தங்களைப் பார்க்க மாட்டாரா என்ற ஆவலுடன் நின்று கொண்டிருந்தனர். ஆனால் அவரோ ஜெட் வேகத்தில் புறப்பட்டுச் சென்று விட்டார். இதனால் ரசிகர்கள் நீண்ட ÷நிரம் காத்திருந்தும் 'தலைவரைப்' பார்க்க ¬டியாத ஏமாற்றத்துடன் கலைந்து சென்றனர்.
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரஜினி படப்பிடிப்புக்கு ஸ்பெஷல் அனுமதி வழங்கியது யார் தெரியுமா? மத்திய அமைச்சர் லாலு பிரசாத் யாதவாம். அவரிடம் ரஜினி படத்திற்கான ஷýட்டிங்கை நடத்த அனுமதி கோரி ரெக்கமண்டேஷன் செய்தது யார் தெரியுமா? மத்திய ரயில்வே இணை அமைச்சர் ஆர்.வேலு.
பாமகவைச் சேர்ந்த வேலுவிடம், ஷங்கர் தரப்பு அனுமதிக்காக அணுக, சென்னை வந்திருந்த லாலுவிடம் நேரடியாகப் பேசி உடனடியாக அனுமதி வாங்கிக் கொடுத்தாராம் வேலு. அப்ப ரஜினியும், பாமகவும் ராசி ஆயிட்டாங்க...
இரட்டை வேடத்தில் ரஜினி: சிவாஜி படத்தில் ரஜினிக்கு இரட்டை வேடம் என்று கூறப்படுகிறது. அதாவது அப்பா ரஜினி பெரிய ஜமீன்தார். அவரை சிலர் ஏமாற்றி மோசம் செய்து விடுகின்றனர். அவர் மீது வீண் பழி சுமத்தி சிறைக்கு அனுப்பி விடுகின்றனர்.
இதை அறியும் மகன் ரஜினி, வளர்ந்து ஆளாகி தந்தையை மோசம் செய்து அவரது வாழ்வை நாசம் செய்தவர்களை பழிவாங்குகிறார். வித்தியாசமான பல வேடங்களில் வந்து வில்லன்களை அவர் பழி தீர்க்கிறாராம்.
இந்தப் படத்தின் கதையை விட ரஜினி போடப் போகும் வித்தியாசமான கெட்டப்கள் ரசிகர்களை ரொம்பவே கவருமாம். பழைய ரஜினி படங்களில வருவதைப் போல ஹேர் ஸ்டைலுடன் ரஜினி கலக்கப் போகிறாராம்.
2வது கட்டப் படப்பிடிப்பை சென்னையில் முடித்து விட்ட அடுத்த கட்டப் படப்பிடிப்பை மீண்டும் ஹைதராபாத்தில் தொடரவுள்ளார்களாம்.
source : thatstamil.com
URL :http://thatstamil.indiainfo.com/specials/cinema/shooting-spot/rajini4.html
Posts: 1,321
Threads: 76
Joined: Dec 2005
Reputation:
0
தகவலுக்கு நன்றி திரு ராஜாதிராஜா அவர்களே....
இன்னமும் ரஜினி தான் வசூல்ராஜா என்பதை நிரூபித்து வருகிறார்.... ஆனால் அவர் திரைப்படங்கள் தொழில் நுட்ப ரீதியில் சுமார்தான்.... ஷங்கர் இயக்குவதால் அந்த குறை இந்த திரைப்படத்தில் சரி செய்யப்படும் என நினைக்கிறேன்....
,
......
Posts: 634
Threads: 23
Joined: Dec 2005
Reputation:
0
ரஜினி இந்த படத்தில் மிகவும் இளமையாக இருக்கிறார்.
Posts: 1,321
Threads: 76
Joined: Dec 2005
Reputation:
0
ஆமாம்.... கொடிபறக்குதுக்கு முந்தைய கெட்-அப்பில் சூப்பர்ஸ்டார் காட்சி அளிக்கிறார்....
,
......
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
rajathiraja Wrote:<img src='http://thatstamil.indiainfo.com/images31/optimized/rajini-250.jpg' border='0' alt='user posted image'>
ம் இந்த படத்தில் இளமையா இருக்கார். கடைசியாக வந்த இரண்டு படங்களிலும் மேக்கப் அவ்வளவு நல்லாயில்ல. இந்த படத்தில் புதுசாக ஒரு மேக்கப் போடுபவரை உபயோகப்படுத்துவதாக படிச்சேன். பார்க்கலாம் எப்படி இருக்கும் என்று.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
Luckyluke Wrote:அவர் திரைப்படங்கள் தொழில் நுட்ப ரீதியில் சுமார்தான்.... ஷங்கர் இயக்குவதால் அந்த குறை இந்த திரைப்படத்தில் சரி செய்யப்படும் என நினைக்கிறேன்....
ரஜனி படம் எப்படி எடுத்தாலும் ஓடும் என்று நினைப்பதாலோ என்னவோ முன்பு தொழில் நுட்பத்தை அவ்வளவாக கவனிப்பதில்லை. சங்கர் புதிய தொழில் நுட்பங்களை உபயோகிப்பவர். இந்த படம் வித்தியாசமான ஒன்றாக இருக்கும் என நம்புகின்றேன்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
சிவாஜி படத்தில் ரஜனியுடன் ஜோடியாக நடிக்க 30 நாட்களை ஐஸ்வர்யாராயும் கொடுத்திருப்பதாக செய்தி வந்தது. ஆனால் இது எவ்வளவு உண்மையென்பது போகப் போகத்தான் தெரியும்.
Posts: 289
Threads: 20
Joined: Oct 2004
Reputation:
0
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
இதோ அதோ இதோ கோணல் மீண்டும்!!!!!!!!
வாவ்வ்வ்... ஆவ்வ்வ்வ்...
ரொம்ப சுவீட்டான நியூஸ்ஸுங்க! ரஜனி சாறின் "யுவாஜி" பிலிம் எண்டால் கேட்கணுங்களா?? இந்த சுவீட் நியூஸ் நம்ம டமிழ்நாட்டு பசங்க, யூரோப் பஸங்களுக்கு ரொம்ப ஜாலியாயிருக்கும்! சாறின் பிலிமில் நாலு சூப்பர் பைட்டு, நாலு சூப்பர் கிட் சாங்குகள், சாறின் லெக்ஸ்/கான்ட்ஸ் வலிப்பு விசுரல்களும் இருக்கனுங்க!!! அப்பதான் நம்ம யங்ஸ்டேஸ் பஸங்க கற்பூரம் கொழுத்தி பாலாபிஸேகங்கள் செய்வானுங்க...
சாறா, அவரு! "ஒண்ணைக் காட்டினா நூறைக் காட்டின மாதிறி"
onionkaruna@hotmail.com
இதோ அதோ இதோ .....
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
Posts: 2,148
Threads: 288
Joined: Jun 2005
Reputation:
0
ஒரு காலம் அரசியல்க்கு வாரன் வாரன் எண்டு சுத்திகொண்டு திரிச்சவர் இப்ப அடங்கிட்டார்
வாந்த மட்டும் மூதல் அமைச்சர் ஆயிருபார என்ன
நாம்ம தமிழ் நாட்டு மக்கள் சும்மாவ என்ன?
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
ஷங்கருக்கும் சானியா 'பெப்பே'
<img src='http://thatstamil.indiainfo.com/images31/optimized/saniass-400.jpg' border='0' alt='user posted image'>
சானியாவிடம் நடிக்க ரெடியா என்று கேட்கப் போய் சிம்பு பட்ட பாடு எல்லோருக்கும் தெரிந்திருக்கும். இப்போது இயக்குநர் ஷங்கருக்கும் அதே ஏமாற்றம் கிடைத்துள்ளதாம்.
டென்னிஸ் இளம் புயல், சானியா மிஸ்ராவை சினிமாவில் நடிக்க வைக்க எத்தனையோ பேர் கடுமையாக ¬முயற்சித்து வருகிறார்கள். அவர்களில் சிம்புவும் ஒருவர். தனது வல்லவன் படத்தில் சானியாவை எப்படியாவது நடிக்க வைத்து விட வேண்டும் என்று படாதபாடு பட்டார் சிம்பு.
சானியாவை நடிக்க வைக்கிறேன் பாருங்கள் என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் சவாலே விட்டிருந்தார் சிம்பு. ஆனால் சிம்புன்னா யாரு என்று கேட்டு சிம்புவுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தாராம் சானியா.
<img src='http://thatstamil.indiainfo.com/images31/optimized/sania-450.jpg' border='0' alt='user posted image'>
அத்தோடு சானியாவை புக் செய்யும் ஆசையை விட்டு விட்டார் சிம்பு. இருந்தாலும் சானியாவை நடிக்க வைக்க பலரும் ¬முயற்சித்துக் கொண்டு தான் உள்ளார்கள். சமீபத்தில் ஒரு பிரபலம் சானியாவை அணுகியுள்ளார்.
அவர் சிவாஜி பட இயக்குநர் ஷங்கர். சிவாஜி படத்தில் ரஜினியின் ஜோடிகளில் ஒருவராக நடிக்க சானியாவை அணுகியுள்ளார் ஷங்கர். ஆனால் இப்போதைக்கு எனது ¬முழுக் கவன¬ம் டென்னிஸ் மட்டும்தான்.
ஸாரி ஸார் என்று சொல்லி ஷங்கருக்கு ஏமாற்றம் கொடுத்துள்ளாராம் சானியா. சிவாஜி படத்தில் ரஜினிக்கு மொத்தம் 3 ஜோடிகள் என்கிறார்கள். அதில் ஷ்ரேயா ஒருவர். மேலும் இரண்டு ஹீரோயின்களில் ஐஸ்வர்யாராய் முக்கியமானவராக கருதப்படுகிறார். அவரது கால்ஷீட் கிடைத்து விட்டதாகவே கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
மூன்றாவது நாயகியாகத் தான் சானியாவை அணுகியுள்ளார் ஷங்கர். ஆனால் அவரோ தனது ¬முடிவில் படு தெளிவாக இருப்பதை நிரூபித்து விட்டார். இதே போல, தெலுங்குப் படவுலகைச் சேர்ந்த இன்னொரு தயாரிப்பாளரும் சானியாவை அணுகியுள்ளார்.
பெரிய தொகை தருவதாக செக் புக்கை எடுத்து நீட்டியவாறு பேசியுள்ளார் அந்தத் தயாரிப்பாளர். அவருக்கும் பெரிய ஸாரியைக் கொடுத்து அனுப்பி விட்டாராம் சானியா. தயாரிப்பாளர்களே, இயக்குநர்களே, நடிகர்களே, பொறுமையாக இருங்கள். என்றைக்காவது ஒரு நாள் சானியா வந்தாலும் வருவார், அப்ப புடிச்சுக்கோங்க!
தட்ஸ் தமிழ்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>