Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 287 online users.
» 0 Member(s) | 285 Guest(s)
Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,311
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,231
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,606
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,296
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,638
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,063
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,465
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,487
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,037
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,239

 
  உலங்குவானூர்தி மீது துப்பாக்கிச் சூடு!
Posted by: Vaanampaadi - 12-14-2005, 04:55 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (2)

பொத்துவிலில் இத்தாலிய துணை வெளிவிவகார அமைச்சரின் உலங்குவானூர்தி மீது துப்பாக்கிச் சூடு!
[புதன்கிழமை, 14 டிசெம்பர் 2005, 17:48 ஈழம்] [அம்பாறை நிருபர்]
இலங்கை வந்துள்ள இத்தாலிய துணை வெளிவிவகார அமைச்சரான மகா றிகா பொனிவர் பயணத்திற்கான உலங்குவானூர்தி துப்பாக்கிச் சூட்டுக்குள்ளானது.


சிறிலங்கா விமானப் படையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த உலங்குவானூர்தி மீது இன்று புதன்கிழமை மாலை அம்பாறை மாவட்டம் பொத்துவில் பிரதேசம் அறுகம்பையில் இனந் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர்.

இலங்கையில் தற்போது தங்கியுள்ள இத்தாலிய துணை வெளிவிவகர அமைச்சர் மகா றிகா பொனிவர் இன்று பொத்துவில் பிரதேசம் அறுகம்பைக்கு உலங்குவானூர்தி மூலம் சென்றிருந்தார்.

அவரை காலையில் இறக்கி விட்டு திரும்பும் வரை காத்திராமல் பாதுகாப்பின் காரணமாக அந்த உலங்குவானூர்தி அம்பாறை விமானப் படைத்தளத்திற்கு திரும்பியது.

மாலையில் இத்தாலிய வெளிவிவகார துணை அமைச்சர் மகா றிகா பொனிவர் உட்பட 22 பேரை ஏற்றி வர உலங்குவானூர்தி சென்ற போது இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

இந்தத் துப்பாக்கிச் சூட்டிற்கு 13 வேட்டுகள் தீர்க்கப்பட்டதாகவும் 6 சூடுகள் உலங்குவானூர்தி மீது பட்டதாகவும் சூட்டுக்களோடு உலங்குவானூர்தி பறந்ததாகவும் கூறப்படுகிறது.

இருப்பினும் துணை வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்டோருடன் உலங்குவானூர்தி திரும்பியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.


Puthinam

Print this item

  தமிழ்ச்செல்வன் - ஆறுமுகன் இவ்வாரம் சந்திப்பு
Posted by: தூயவன் - 12-14-2005, 03:43 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (5)

<b>தமிழ்ச்செல்வன் - ஆறுமுகன் இவ்வாரம் சந்திப்பு</b>

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் இவ்வாரம் தமிழீழ அரசியல் துறைப்பொறுப்பாளர் திரு. சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களைச் சந்தித்துகலந்துரை யாடவுள்ளதாக தகலவ்கள் தெரிவிக்கின்றன
தமிழ்செல்வன் அவர்களைச் சந்தித்து பேசுவதற்கான விருப்பத்தினை ஆறுமுகன் தொண்டமான் விடுதலைப் புலிகளின் அரசியற்துறையினரிடம் தெரிவித்துள்ளதாகவும், இதற்கான நேரம் வழங்கப்பட்டதும் இச்சந்திப்பு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை மலையக தொழிற்சங்கங்களை பலமிழக்கச் செய்வதற்கு அரசாங்கம் முயன்று வருவதனால் இதனைத் தடுக்கும் வகையில் தமிழ்த் தரப்பினர் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவது தொடர்பிலும் தற்போது ஆராயப்பட்டு வருகின்றது.

இவ்விடயம் குறித்து இலங்கை தொழிலானர் காங்கிரஸின் பிரதிநிதிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

நன்றி: சங்கதி

அப்போது கூப்பிட்ட போது சந்திக்க மறுத்தவர், இப்போது எல்லோரும் கை கழுவி விட்டபோது புலிகளிடம் வருகின்றார். ஆனால் எப்போதும் புலிகள் மலையக மக்களை கைவிட மாட்டார்கள்.

Print this item

  முதுபெரும் ஆதரவாளர் திருச்சி ஓட்டோ ஆனந்தராஜ் ஐயா காலமானார்
Posted by: sri - 12-14-2005, 09:31 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (21)

தமிழ்நாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளராகச் செயற்பட்ட திருச்சி ஓட்டோ ஆனந்தராஜ் (வயது 84) ஐயா சென்னையில் இன்று புதன்கிழமை காலமானார்.


இந்தியத் தொடருந்து துறையில் பணியாற்றி 1974 ஆம் ஆண்டு ஓய்வுபெற்ற பின்னர் பெரியார் கொள்கைகளின் மீது தீவிரமான ஈடுபாட்டோடு இயங்கியவர்.

தமிழீழத் தமிழர்கள் இன்னல்களுக்கு ஆளாகி தமிழ்நாட்டுக்கு சென்ற காலத்தில் தமிழீழத் தமிழர்களுக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் ஆதரவாக உறுதுணையாக இயங்கியவர்.

ராஜீவ் காந்தி வழக்கு காலத்தில் தமிழ்நாடு முழுவதும் கடுமையான ஒடுக்குமுறைகள் தீவிரமாக இருந்த போது தமிழ்நாடு காவல்துறையால் பகிரங்கமாக அறிவிக்கப்பட்டுத் தேடப்பட்ட குண்டு சாந்தனுக்கு துணிச்சலோடு அடைக்கலம் கொடுத்தவர் ஆனந்தராஜ் ஐயா.

ஆனால் காவல்துறையினர் ஆனந்தராஜ் ஐயாவினது இல்லத்தை முற்றுகையிட்டனர். குண்டு சாந்தன் சயனைட் அருந்தி உயிர் நீத்தார். அதன் பின்னர் ஆனந்தராஜ் ஐயா கைது செய்யப்பட்டார்.

தமிழ்நாட்டுக் காவல்துறையினர் முதுமை வயதிலும் அவரை சித்திரவதை செய்த போதும் கூட "நான் ஒரு பெரியார் தொண்டன். ஏற்றுக்கொண்ட கொள்கைக்காக உயிரையும் இழப்பேனே தவிர இலட்சியத்தை இழக்கமாட்டேன்" என்று தெரிவித்துவிட்டு சித்திரவதைகளை ஏற்றுக்கொண்டார். குண்டு சாந்தனுக்கு அடைக்கலம் கொடுத்ததாக 10 மாதம் சிறைத் தண்டனை அனுபவித்தார். பின்னர் பிணையில் விடுதலையானார்.

சென்னை சிறப்பு நீதிமன்றம் நடைபெற்ற இந்த வழக்கில் தடா சட்டத்தின் கீழ் ஆனந்தராஜ் ஐயாவுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது. இதை ஏற்று இரண்டரை ஆண்டுகாலம் சிறைத் தண்டனையையும் அனுபவித்தார். பின்னர் இந்தியத் தலைமை நீதிமன்றில் மேல்முறையீடு செய்யப்பட்டதில் ஆனந்தராஜ் ஐயா விடுதலை செய்யப்பட்டார்.

ஆனந்தராஜ் ஐயாவை விடுதலை செய்த இந்தியத் தலைமை நீதிமன்றம், "பயங்கரவாதி என்று குற்றம்சாட்டப்பட்டுகிறவர் மீதான குற்றம் நிரூபிக்காத வரையில் அவருக்கு அடைக்கலம் கொடுப்பது தவறும் இல்லை. அது பயங்கரவாதச் செயலும் இல்லை" என்று சிறப்புமிக்கத் தீர்ப்பை அளித்தது.

திருச்சி கே.கே.நகர் பகுதியில் வசித்து வந்த ஆனந்தராஜ் ஐயா, குண்டு சாந்தன் மறைவுக்குப் பின்னர் "இந்த இல்லத்தில்தான் குண்டு சாந்தன் இறந்தார்" என்றும் தன் இல்லத்துக்கு "தமிழ் நல்உலகம் கூறும் தம்பி பிரபாகரன் இல்லம்" என்றும் கல்வெட்டில் செதுக்கி முதுமையான வயதிலும் உறுதியான தமிழீழப் பற்றாளராக விளங்கினார். தனது இல்லத்தில் தமிழீழத் தேசிய மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிற வகையிலான துப்பாக்கியும் தொப்பியுமான இலட்சிணையைப் பொறித்து தான் ஒரு விடுதலைப் புலி ஆதரவாளன் என்பதை பகிரங்கப்படுத்தி விடுதலைப் புலிகளுக்கான ஆதரவுக் களத்தில் தீவிரமாக இயங்கியனார் அவர்.

ஆனந்தராஜ் ஐயாவின் மறைவுக்கு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் கொளத்தூர் தா.செ. மணி, வீரவணக்கம் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கை:

பற்றுறுதிமிக்க ஒரு பெரியார் தொண்டராகத் திகழ்ந்தவர். குண்டு சாந்தனுக்கு அடைக்கலம் கொடுத்த வழக்கு நடைபெற்ற போது தன்னுடைய விடுதலைக்காக, நான் குண்டு சாந்தனுக்கு அடைக்கலம் கொடுக்கவில்லை என்று நீதிமன்றில் கூறமாட்டேன் என்று தெரிவித்ததோடு நான்தான் குண்டுசாந்தனுக்கு அடைக்கலம் கொடுத்தேன் என்று பகிரங்கமாக அறிவித்தவர் பெரியவர் ஆனந்தராஜ் ஐயா. ஏற்றுக் கொண்ட இலட்சியத்தில் உறுதியாக நின்றவர்.

தான் பிணையில் விடுதலையான பிறகு ஊடகவியலாளர்களிடம் பேசுகையிலும் கூட, என்னுடைய வீடு என்பது தமிழின இன உணர்வாளர்களுக்கான வீடு. எத்தனை அடக்குமுறைகள் ஏவிவிடப்பட்டாலும் தமிழீழ விடுதலைப் புலிகள் உள்ளிட்ட அனைத்து தமிழின உணர்வாளர்களுக்கும் அடைக்கலம் கொடுப்பேன் என்று பகிரங்கமாக அறிவித்தவர்.

இந்தியத் தலைமை நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்ட போதும் கூட தனது விடுதலைப் புலிகளின் ஆதரவுச் செயற்பாடுகளை அவர் நிறுத்திக் கொள்ளவில்லை. தொடர்ந்து தம்பி பிரபாகரன் பிறந்த நாளன்று தேனிசை செல்லப்பா மற்றும் எம்மைப் போன்றவர்களை அழைத்து நிகழ்ச்சிகளை செய்து கொண்டே இருந்தார்.

ஒரு உறுதியான இலட்சியவாதி மறைந்துவிட்டார். இன்றைய இளைஞர்களுக்கு கொள்கையில் எப்படி உறுதியாக இருக்க வேண்டும் என்று ஒரு முன்மாதிரியான வழிகாட்டியாக இருந்தவர் ஆனந்தராஜ் ஐயா. பெரியவர் ஆனந்தராஜ் ஐயாவினது மறைவுக்கு தந்தை பெரியார் திராவிடர் கழகம் தமது வீரவணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறது என்று அந்த அறிக்கையில் கொளத்தூர் மணி தெரிவித்துள்ளார்.

புதினம்

Print this item

  கூண்டு
Posted by: N.SENTHIL - 12-14-2005, 04:02 AM - Forum: கவிதை/பாடல் - Replies (11)

ÜñÎ

«Åû ÁÄ÷ Å¢ðÎ ÁÄ÷ ¾¡×õ Åñ¼øÄ-
¢È¨¸§Â ÅÃÁ¡ö §¸ðÌõ ÁÄ÷
¿¡ý ¸¢Ç¢«ö ¸¡¾Ä¢ìÌõ ÜñÎ
«Å§Ç¡ Å¡¨É Å¢ÕõÒ¸¢È¡û
ÜñÊý À¡Ð¸¡ôÒ Å¡É¢ø þø¨Ä
šɢý ;ó¾¢Ãõ ÜñÊÄ¢ø þø¨Ä
¸¡Ä¦ÁøÄ¡õ Üñθû ¸¡ò¾¢Õ츢ýÈý!
±ô¦À¡Ðõ ¸¢Ç¢¸¨Ç ź£¸Ã¢ôÀÐ ±ýɧš Å¡ý ¾¡ý
_________________

Print this item

  லண்டனில் தமிழ் வாலிபர் கொலை
Posted by: AJeevan - 12-13-2005, 09:13 PM - Forum: புலம் - Replies (116)

லண்டன் கில்ஸ்பரி பகுதியில் வாழ்ந்த டக்ளஸ் யோகராஜா (24) எனும் வாலிபர் கடந்த ஞாயிறு இரவு 9.00 மணியளவில் துப்பாக்கியால் சுடப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 6 வருடங்களாக லண்டனில் வசித்து வரும் இவர் வவுனியாவைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.

இவரது கொலை தொடர்பாக புலன் விசாரணை செய்து வரும் போலீசார் இவரை கொலையாளிகள் நான்கு முறை சுட்டதில் இவரது உடலில் 4 குண்டுகள் துளைத்திருப்பதாகவும்
மேலதிக விசாரணைகள் மேற் கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

இவர் இரவு தான் தங்கியிருந்த வீடு நோக்கி திரும்பிக் கொண்டிருந்த போதே
காத்திருந்த கொலையாளிகள் இவரை சுட்டு விட்டு தப்பிச் சென்றிருக்கிறார்கள்.

Print this item

  பட்டங்கள் படும் பாடு..!
Posted by: kuruvikal - 12-13-2005, 08:30 PM - Forum: புலம் - Replies (6)

<img src='http://tamilamutham.net/images/stories/kaddurai/img2.gif' border='0' alt='user posted image'>

[size=16]<b>உனக்கு நான் தாறன் எனக்கு.....?</b>

புலம்பெயர் நம்மவர் மத்தியில் பட்டங்கள் கொடுக்கவும் வாங்கவும் என ஒரு பட்டாளமே திரண்டிருக்கிறது. இந்தப் பட்டங்களின் பெறுமதியானது எனக்குத் தந்துவிடு உனக்குத் தருகிறேன் என்ற நிலையில் வஞ்சகமில்லாமல் வழங்கப்படுகிறது. சிலருக்குப பட்டம் கொடுக்கும் நோய் முற்றிப்போயிருப்பதையும் பட்டம் வாங்குதலே பெறுதற்கரிய பேறெனக் கருதும் பட்டம் கொடுப்போரையும் பட்டம் வாங்குவோருடனும் பழகிப் பார்த்ததிலிருந்து தெரிய வருகின்றது.

பத்திரிகையென்ற பெயரில் தன் சொந்த விலாசத்தை வர்ணம் தீட்டித்தருவதையெல்லாம் பத்திரிகையெனவும், கவிதையெழுதினால் ஞானக்கவி , மானக்கவி, மணிக்கவி, கவிமணி, கவிச்செம்மல், கவிச்சித்திரா, கவிவல்லி, கவிச்செல்லி எனவும் நாலு மேடையில் பேசினால் கோடையில் இடிக்கும் புயல், மாரியில் தெறிக்கும் மின்னல் எனவும் நடன ஆசிரியர்களென்றால் நாட்டியவாணி, நாட்டியச்செல்வி, நாட்டியவல்லி எனவான பட்டங்கள் நீள்கிறது.

நல்லகுரல் வளமிருந்தால் போதும் வெண்கலமும், பொன்கலமும் மட்டுமல்ல தேன், மா, பலாவென கனிகளின் பெயர்களும் ஒட்டப்பட்டுவிடும். ஒரு புத்தகம் வெளியிட்டால் போதும் கவிச்சித்திரமாகவும், கலைச்சத்திரமாகவும் ஏன் மானக்கவிஞனாகக் கூட ஆகிவிடலாம் என்ற நிலை எம்மவர் மத்தியில் ஏன் எழுதாத விதியாய் போய்விட்டது.

கதாசிரியர்கள், ஓவியர்கள், கவிஞர்கள், பாடகர்கள் உட்பட எல்லாத் துறைக்குள்ளும் இருக்கும் குறிப்பிட்ட நபர்களது பெயர்களின் பின்னால் இத்தகைய பட்டங்கள் வந்து ஒட்டிக் கொள்கின்றன! இல்லை ஒட்டப்படுகின்றன. இந்தப் பட்டங்களுக்கான புதிய வரலாறொன்றையே எழுத வேண்டிய கட்டாயத்தை இக்காலத்துப் புலத்துப் பட்டங்கள் தந்து விட்டிருக்கின்றன.

தற்போது புலம்பெயர் நாடுகளில் சேலைகட்டி மார்கழி மாதக் குளிரிலும் மேடை நிகழ்ச்சிகளுக்குப் போவோர் சிலருக்கு சேலைகட்டிய மின்னல், தாவணியணியும் தமிழச்சி என்றெல்லாம் பட்டங்கள் வழங்கும் முறைமையும் நடைமுறைக்கு வந்திருக்கிறது. ஜீன்ஸ் அணிவோருக்கும் இனிமேல் ஏதாவது பட்டங்கள் நிர்ணயமாகலாம்.

ஒரு நூல்வெளியீடு செய்யும் ஒரு இளம் கலைஞரின் நூல்பற்றிக் கதைப்பவர்களின் பட்டங்களைப் போட்டால்தான் அந்த நூல் பெருமையடைவதாகக்கூட சொல்லிக் கொள்ளும் இந்தப்பட்டங்கள் சுமப்பவரின் கைகளுக்குள் தலையைக் கொடுத்துவிட்டு வெளியில் வருவதில் இருக்கும் சிக்கலும், இந்தப் பட்டம் சுமப்போரின் வட்டத்தைத் தாண்டி வருவதென்பதும் அனுபவித்தால் மட்டுமே அறிந்து கொள்ள முடியும்.

இத்தகையதொரு சிக்கலில் இருந்து தலையை வெளியெடுக்க நானும் அவதிப்பட்டிருக்கிறேன். எனது அனுபவமும் இங்கு இத்தகையதொரு கட்டுரையை எழுத வைத்துள்ளது என்பதனையும் மறுதலிப்பதற்கில்லை.

ஒரு துறையில் படித்து பட்டம் பெறுவதென்பது இலகுவான விடயமன்று. அந்தப் பட்டங்களுக்காக பட்டங்கள் பெற்றவர்கள் எத்தனையோ தியாகங்களைச் செய்து தங்கள் துறைசார் பட்டங்களைப் பெற்றுக்கொள்கிறார்கள். ஒருவர் கலாநிதியென்றால் அவரது கலாநிதிக்கான வரலாறொன்று நிச்சயம் இருக்கும். அல்லது தமிழ்மணியென்றால் அதற்கான கற்றலில்கூட மூன்று வருடங்களைச் செலவழிக்க வேண்டும். இப்படித்தான் ஒவ்வொரு துறையிலும் பட்டம் பெறுவோர் தங்களை ஒறுத்துக் கற்று பட்டங்களைப் பெறுகிறார்கள். இந்தப்பட்டங்கள் இவர்களது தகுதிக்கேற்ற தொழில் வாய்ப்பினை அல்லது அத்துறை சார்ந்த அவர்களது திறனை அடையாளம் சொல்கிறது.

எனினும் தாங்கள் பெற்ற பட்டங்களை எந்தநாளும் தங்களுடன் ஒட்டி வைத்துக் கொண்டோ பட்டங்களை அச்சடித்து அடிக்கடி வெளியில் சொல்லிக் கொண்டோ இருப்பதில்லை. அதை நாம் நமது மண்ணில் பட்டம் பெற்ற பெரியவர்களைப் பார்த்தே அறிந்தும் கண்டும் இருக்கிறோம்.

பட்டங்களுக்கு அப்பால் தன்னடக்கமாகத் தங்கள் பணிகளைக் கவனிக்கும் கடமைகளை முடிக்கும் காரியவல்லோரையெல்லாம் பெற்ற எங்கள் மண்ணுக்குள்ளிருந்து புலம்பெயர்ந்த நாங்கள் இந்தப் பட்டங்கள் சூட்டுவதிலும் மகுடங்கள் ஏற்றுவதிலும் ஏன் முன்னிற்கிறோம்? ஒருவரின் திறனை எடையிடுவது அவரது தனித்துவமேயன்றி வேறில்லை.

ஒரு இலக்கியப் படைப்பின் வெளிப்பாடு வெற்றி என்பவை அதை எழுதிய கலைஞரையே சாரும். அந்தப்படைப்பிற்கு விமர்சனம் செய்யும் ஒருவரின் பட்டத்திலிருந்து அந்தக்கலை வெளிப்பாடு வெற்றி பெறுவதில்லை. இந்த யதார்த்தத்தைக் கூட புரிந்து கொள்ளாத பட்டங்களுக்கு உரியோரின் சிந்தனை ஆற்றலை என்னவென்று சொல்ல?

பட்டங்கள் நல்ல தரமான படைப்புக்களைத் தந்ததா என ஆராய்வோமாயின் தேடித்தான் பெறவேண்டும். அந்தளவுக்கு பட்டங்களின் பின்னிருக்கும் படைப்புக்களை தராசிட்டு நிறுக்க வேண்டியிருக்கிறது. பட்டங்கள் பெற்றவரின் ஆக்கத்தைப் பாராட்டியே ஆகவேண்டும். அந்த ஆக்கத்திலிருக்கும் குறைகள் சுட்டப்படக்கூடாது. அப்படிச் சுட்டும் படைப்பாளி இளையவராக இருந்தால் அவரது கதை முடிந்துவிடும்படி பட்டம் கொடுத்தவரும் பட்டம் வாங்கியவரும் பதறியடிப்பதால் உண்மை பொய்யாகவோ பொய் உண்மையாகவோ போய்விடாது.

எங்கள் மண்ணுக்குள்ளிருந்து எத்தனையோ கலைஞர்களும் கலைப்படைப்புக்களும் பிறப்பெடுத்திருக்கின்றது. அந்தக்கலைஞர்கள் ஒவ்வொருவருக்குப் பின்னாலும் அவர்கள் பெயர்களைத் தவிர எந்தப்பட்டமும் ஒட்டப்படவில்லை. கவிஞர்களாக, சிறுகதை எழுத்தாளர்களாக, பத்திரிகையாளர்களாக, நாடகக்கலைஞர்களாக, ஓவியர்களாக, ஒளிக்கலைஞர்களாக எத்தனையோ பேர் தங்கள் பெயர்களைக்கூட புனைபெயர்களுக்குள் அடக்கி தங்கள் படைப்புக்களால் மனங்களை வென்றிருக்கிறார்கள். அந்த வெற்றியானது அவர்களது படைப்புக்களாலேயே பெறப்பட்டது. பட்டங்களால் அல்ல.

http://www.tamilamutham.net/index.php?opti...ask=view&id=261

Print this item

  கடத்தப்பட்ட புளொட் உறுப்பினரை விடுவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்
Posted by: Vaanampaadi - 12-13-2005, 06:48 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

வவுனியாவில் கடத்தப்பட்ட புளொட் உறுப்பினரை விடுவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்


போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்
வவுனியாவில் கடத்திச் செல்லப்பட்ட புளொட் அமைப்பின் உறுப்பினரான பாருக் என்றழைக்கப்படும் சின்னத்தம்பி கணேசலிங்கத்தை விடுதலை செய்யக்கோரி, ஆர்ப்பாட்ட ஊர்வலமொன்று இன்று அங்கு நடைபெற்றது.

சமளங்குளம் பாடசாலையில் இருந்து ஆரம்பமாகிய இந்த ஊர்வலம் வவுனியா நகரில் உள்ள போர்நிறுத்த சர்வதேச கண்காணிப்பு குழுவின் அலுவலகத்தை நோக்கிச் சென்றபோது கொரவப்பத்தானை வீதி, இறம்பைக்குளத்தில் வைத்து பொலிசார் தடுத்து நிறுத்தினர்.

அவசரகாலச் சட்டம் அமுலில் இருப்பதனால், ஊர்வலத்தைத் தொடர்ந்து செல்வதற்கு அனுமதிக்க முடியாதென பொலிசார் தெரிவித்தனர்.

ஊர்வலம் வருவதை அறிந்து அவிடத்திற்கு விரைந்த போர்நிறுத்த கண்காணிப்பு குழுவின் வவுனியா மாவட்டத் தலைவரிடம் புளொட் அமைப்பின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் திருப்பதி மாஸ்டர் ஊர்வலத்தில் வந்தவர்களின் சார்பிலான மகஜர் ஒன்றைக் கையளித்தார்.

அத்துடன் விடுதலைப் புலிகளுக்கு எழுதப்பட்ட மகஜர் ஒன்றும் போர்நிறுத்த கண்காணிப்பாளரிடம் கையளிக்கப்பட்டது.

கடத்திச் செல்லப்பட்டவரை இரண்டு தினங்களுக்குள் பாதுகாப்பாக மீட்டுத் தரவேண்டும் என்ற கோரிக்கையும் அங்கு முன்வைக்கப்பட்டது.


போர் நிறுத்தக் கண்காணிப்பாளர்களுடன் பேச்சு
இதன் பின்னணியில் யார் இருக்கின்றனர் என்பதைக் என்பதைக் கூறக்கூடிய நிலையில் நான் இல்லை; எல்லா தரப்பினருடனும்; எமக்குத் தெரிந்த அனைவருடனும் நாங்கள் தொடர்பு கொண்டிருக்கின்றோம்; உண்மையைக் கண்டறிவதற்காக முயற்சிக்கின்றோம்; இந்த விடயம் தொடர்பாக பொலிஸ் தரப்புடன் கலந்துரையாடியுள்ளோம்; வன்னியில் உள்ள விடுதலைப் புலிகளின் அரசியல்துறையினருடனும் நாங்கள் தொடர்பு கொண்டுள்ளோம் என போர்நிறுத்த சர்வதேச கண்காணிப்பு குழுவின் வவுனியா மாவட்டத் தலைவர் அங்கு தெரிவித்தார்.

நேற்றைய கடத்தல் சம்பவத்தையடுத்து நேற்றும் இன்றும் போர்நிறுத்த கண்காணிப்பு குழுவினர் புளியங்குளத்தில் தம்மைச் சந்தித்துப் பேசியதாகவும், இந்த சம்பவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லையென தாங்கள் தெரிவித்திருப்பதாக விடுதலைப் புலிகளின் வவுனியா மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளர் ஞானம் தொலைபேசி மூலம் தெரிவித்தார்.

கடத்தலில் சம்பந்தப்பட்டவர்களைக் கண்டுபிடிக்க வேண்டியது பொலிசாரின் கடமையென்றும் அதற்குத் தாங்கள் ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தாகவும் ஞானம் சுறினார்.

இதனிடையில் மன்னார் பேசாலையில் பொலிசார் மீது நேற்றிரவு நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் காயமடைந்த 20 பொலிசாரும் பாதுகாப்பு காரணங்களுக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மன்னார் பொலிசார் தெரிவித்தனர்.

நேற்றைய சம்பவத்தையடுத்து, பேசாலை நகரில் கடற்படையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டு தேடுதல் மற்றும் வீதிச் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக மன்னார் தகவல்கள் தெரிவிக்கின்றன.

BBC Tamiloosai

Print this item

  எது சிறந்தது......?
Posted by: jcdinesh - 12-13-2005, 06:38 PM - Forum: கவிதை/பாடல் - Replies (14)

எது சிறந்தது......?

உன்னை விடவா சிறந்தது... அருவி...
உன் எழிலான விழி வீச்சில்..... அந்த
அருவியின் அழகு எம்மாத்திரம்........

உன்னை விடவா சிறந்தது காற்று
அலையென அடித்து ஓயும்.....என்
நெஞ்சின்...சுவாசமே நீயல்லவா....?

உன்னை விடவா சிறந்தது தண்ணீர்....
என் சுகங்களின் தாகம் தீர்த்து........நான்
பருகிடும் அமுதே நீயல்லவா.....?

உன்னை விடவும் சிறந்ததா காதல்....
காதலின் அழகும் காதலின் அர்த்தமும்...
காதலின் மொத்த உருவமும் நீ மட்டும் தானே....

Print this item

  மகிழ்ச்சியாக இருக்கும்போது நாய்களும் வாய்விட்டுச் சிரிக்கும்
Posted by: SUNDHAL - 12-13-2005, 02:42 PM - Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம் - Replies (11)

மகிழ்ச்சியாக இருக்கும்போது நாய்களும் வாய்விட்டுச் சிரிக்கும் என்று விலங்கின ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறியுள்ளார்.

அவ்வாறு மகிழ்ச்சியில் ஒரு நாய் சிரித்தால், அது சுற்றியுள்ள மற்ற நாய்களுக்கும் இதமாக இருக்கும் என்று ஸ்போகன் கவுண்டி பிராந்திய விலங்குகள் பாதுகாப்புச் சேவை அமைப்பின் வளர்ச்சி மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர் பாட்ரீஷியா சிமானெட் தெரிவித்துள்ளார்.

ஒரு நாய் மகிழ்ச்சியாக இருக்கும் போது சிரிக்கும் ஒலியை ஆடியோ டேப்பில் பதிவு செய்து, அதை ஸ்போகன் பள்ளத்தாக்கில் உள்ள ஒரு பகுதியில் ஒலிபரப்புச் செய்தார் பாட்ரீஷியா. உடனடியாக அங்கு குரைத்துக் கொண்டிருந்த நாய்கள் அமைதியாகி டேப்பில் வந்த நாயின் சிரிப்பொலியைக் கேட்கத் தொடங்கி விட்டன.

Print this item

  நெல்சன் மண்டேலா: கைதும், விடுதலையும்
Posted by: SUNDHAL - 12-13-2005, 02:41 PM - Forum: செய்திகள்: உலகம் - No Replies

தென்ஆப்பிரிக்க நிறவெறி அரசு கருப்பின மக்களுக்கு இழைத்த அநீதிகளுக்கு உலகறிந்த சான்று "நெல்சன் ரோலிலாலா மண்டேலா'. சட்டம் படித்திருந்தும் தன் வாழ்நாளில் 27 ஆண்டுகளை தனிமைச் சிறையில் கழித்த மண்டேலா வெள்ளை நிறவெறிக்கு ஒரு சோற்றுப் பதம்.

தென்ஆப்பிரிக்காவின் டிரான்ஸ்கை பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில், தெம்பு ஓசா இனத்தில் பிறந்தவர் (ஜூலை 18, 1918) ரோலிலாலா மண்டேலா. "நெல்சன்' என்பது அவர் சார்ந்த மதப்பிரிவின் ஆசிரியர் இட்ட பெயராகும். தென்ஆப்பிரிக்க பல்கலைக் கழகத்தில் இளங்கலை (பி.ஏ.) பட்டமும், விட்வாட்டர்ஸ்ட்ராண்ட் பல்கலைக் கழகத்தில் சட்டமும் படித்த மண்டேலா, மாணவப் பருவத்திலேயே வெள்ளை நிறவெறிக்கு எதிரான அரசியலில் ஈடுபட்டார். 1942-ல் ஆப்பிரிக்க தேசிய காங்கிரசில் சேர்ந்த மண்டேலா, ஆலிவர் தம்பு உள்ளிட்ட தன் கல்லூரி நண்பர்களுடன் இணைந்து இரண்டு ஆண்டுகளில் கட்சியின் இளைஞர் அணியை உருவாக்கினார்.






1948-ல் ஆட்சிக்கு வந்த தேசியக் கட்சி நிறவெறிக் கொள்கைகளுக்கு சட்ட வடிவம் கொடுத்தது. இதன் பின்னர் மண்டேலாவும், ஆலிவர் தம்புவும் இணைந்து பாதிக்கப்பட்ட கருப்பின மக்களுக்கு இலவசமாகவும், குறைந்த கட்டணத்திலும் சட்ட உதவிகளை செய்து வந்தனர்.

அமைதி வழியில் போராடிய மண்டேலா உள்ளிட்ட 150 பேர் தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் (1956). 5 ஆண்டுகள் வழக்கு நடைபெற்ற பின் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டனர். 1960-ல் நடைபெற்ற கருப்பினத்தவருக்கு எதிரான ஷார்ப்வில்லி படுகொலைகள், தென்ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் மற்றும் நிறவெறிக்கு எதிராக போராடிய குழுக்கள் தடைசெய்யப்பட்டது ஆகிய நிகழ்வுகளுக்குப் பின்னர் மண்டேலாவும், அவரது கூட்டாளிகளும் ஆயுதம் ஏந்திப் போராட முடிவு செய்தனர்.

1961-ல் எம்கே (உம்கோண்டோ வி சிஸ்வா) என சுருக்கமாக அழைக்கப்பட்ட தென்ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் ஆயுதப் பிரிவுக்கு தலைவரானார் மண்டேலா. இது மண்டேலா கூட்டாக நிறுவிய அமைப்பாகும். இந்த ஆயுதந்தாங்கிய எழுச்சி நிறவெறிக்கு முடிவுகட்டவில்லை எனில் கெரில்லா முறை போருக்கான திட்டங்கள் வகுக்கப்பட்டன. மண்டேலா பல்வேறு ஆப்பிரிக்க நாடுகளுக்கும் சென்று எம்கே-வுக்கு தேவையான நிதியை திரட்டியதுடன், ராணுவப் பயிற்சிக்கும் ஏற்பாடு செய்தார்.














நெல்சன் மண்டேலா: கைதும், விடுதலையும்

17 மாதங்கள் தலைமறைவு வாழ்க்கைக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட மண்டேலா ஜோகன்ஸ்பர்க் சிறையில் அடைக்கப்பட்டார் (1962). சட்டவிரோதமாக வெளிநாடு சென்றதாகவும், தொழிலாளர் வேலைநிறுத்தத்துக்கு தலைமை தாங்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டு 5 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

மண்டேலா சிறையில் இருந்தபோது கட்சியின் முக்கியமான தலைவர்கள் ரிவோனியாவில் கைது செய்யப்பட்டனர். மண்டேலாவும் ரிவோனியா கொண்டுவரப்பட்டு அனைவர் மீதும் வழக்கு தொடரப்பட்டது. அழித்தொழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டது மற்றும் தேசதுரோக குற்றம் சாட்டப்பட்டது. இவற்றோடு பிற நாடுகள் தென்ஆப்பிரிக்காவை ஆக்கிரமிக்க உதவியதாகவும் மண்டேலா மீது குற்றம் சாட்டப்பட்டடு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது (12 ஜூன், 1964).

அடுத்த 26 ஆண்டுகள், உலகம் முழுவதும் நிறவெறிக்கு எதிராக எழுந்த குரல்கள் மண்டேலாவை விடுதலை செய் என ஒலித்தன. தென்ஆப்பிரிக்க நிறவெறி அரசைப் பொருத்தவரை இந்த எதிர்ப்புகள் அனைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்கானது.

1980-களில் எம்கே நிறவெறி அரசுக்கு எதிராக கெரில்லா சண்டையில் ஈடுபட்டது. ஆயுதப் போராட்டத்தை கைவிடுவதாக அறிவிக்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில், சிறையிலிருந்து விடுவிப்பதாக மண்டேலாவுக்கு ஆசை காட்டியது தென்ஆப்பிரிக்க அரசு (1985). மண்டேலா இதற்கு மசிந்து கொடுக்கவில்லை.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொள்ள தென்ஆப்பிரிக்காவுக்கு தடை விதிக்கப்பட்டது. ஐ.நா. பொருளாதார தடை விதித்தது. சர்வதேச ஆதரவு மற்றும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் இடைவிடாத போராட்டங்களால் வேறுவழியின்றி மண்டேலாவை விடுதலை செய்தது எஃப்.டபிள்யூ. டி கிளார்க் தலைமையிலான தென்ஆப்பிரிக்க அரசு (பிப்ரவரி 11, 1990).

சிறையிலிருந்து விடுதலையான அன்று, "ஆயுதப் போராட்டத்திற்கான தேவை இன்னும் நிலவுகிறது. இதைத் தொடர்வதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை' என அறிவித்தார் மண்டேலா. சிறை வாசம் அவரது மனஉறுதியை குலைத்து விடவில்லை என்பதோடு நிறவெறியின் பிடி அதுவரை தளரவில்லை என்பதையும் இது காட்டியது.

இதன் பின்னர் 1994-ல் தென்ஆப்பிரிக்க வரலாற்றில் முதல் முறையாக ஜனநாயக அடிப்படையில் தேர்தல் நடைபெற்றது. ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் தலைவரான மண்டேலா அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 5 ஆண்டுகள் அதிபராக பதவி வகித்த மண்டேலா நோபல் பரிசு உள்ளிட்ட பல்வேறு பரிசுகளை பெற்றுள்ளார். இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருதும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது (1990).
ThanksBig Grininamani..

Print this item