Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 261 online users.
» 0 Member(s) | 258 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,312
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,232
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,606
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,296
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,638
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,063
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,465
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,487
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,037
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,239

 
  நான் ஒரு பறவை.....
Posted by: Luckylook - 12-13-2005, 06:31 AM - Forum: அறிமுகம் - Replies (47)

நான் ஒரு பறவை.

நானும் இங்கு பறக்க வந்துள்ளேன்

nan oru pudhiya paravai...

nanum inge parakka vandhullen....

தமிழில் மாற்றியுளேன்

Print this item

  முஸ்லீம்கள் கொலைக்கு கருணா குழுவும், அதாவுல்லாவுமே பொறுப்பு
Posted by: தூயவன் - 12-13-2005, 04:38 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

கிழக்கு மாகாணத்தில் தமிழ்-முஸ்லிம் இனங்களுக்கு இடையே அண்மைக் காலமாக தொடரும் இன வன்முறைச் சம்பவங்களின் பின்னணியில் கருணா குழுவினரும் ஆளும் கட்சி அமைச்சரான ஏ.எல்.எம்.அதாவுல்லாவின் தொடர்பாளர்களும் செயற்படுவதை விடுதலைப் புலிகளிடம் சரனடைந்துள்ள முன்னாள் கருணா குழு உறுப்பினர்களான துரைராஜசிங்கம் சந்திரகுமார் (புகழ்தேவன்)இ சாமித்தம்பி அருள்குமரன் (ஞானதீபன்) ஆகியோர் உறுதிப்படுத்தியுள்ளனர்.


கடந்த 6 ஆம் திகதி அம்பாறை மாவட்டம் மாதோட்டத்தில் கருணா குழுவினர் மீது தாக்குதல் நடத்தி இனியபாரதி உள்ளிட்ட நால்வரை சுட்டுக்கொன்று விட்டு விடுதலைப் புலிகளிடம் சரணடைந்த இருவரும் கலந்து கொண்ட செய்தியாளர் சந்திப்பொன்று இன்று திங்கட்கிழமை கரடியனாறு தேனகத்தில் நடைபெற்றது.

இந்த மாநாட்டில் இருவரும் தெரிவித்த தகவல்களின் தொகுப்பு வருமாறு:

கருணா குழுவினரின் முக்கிய நோக்கம் இப்படியான சூழ்நிலையில் மறைந்து வாழ்வதை விட பகிரங்கமாக நடமாடுவதே. ஆனால் அதற்குரிய வாய்ப்பு தற்போது இல்லாத காரணத்தினால் தான் யுத்தத்தினை மீண்டும் ஏற்படுத்திஇ தங்களை வெளிப்படுத்தி தமது வேலைத் திட்டத்தை முன்னெடுப்பதாகும்.


இதன் ஒரு கட்டமாகவ தமிழ்-முஸ்லிம் மக்களுக்கு இடையே இனக் கலவரத்தை ஏற்படுத்த திட்டமிட்டு செயற்பட்டு வருகின்றனர்.

அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லாவிற்கும் கருணா குழுவினருக்கும் நேரடியான தொடர்புகள் இருப்பது பற்றி எமக்கு தெரியாது. ஆனால் அதாவுல்லாவின் நெருங்கிய தொடர்பாளரான பௌசருக்கும் இந்த குழுவினருக்கும் நெருக்கமான தொடர்பு உள்ளது.

பௌசர் அடிக்கடி இனியபாரதியை வந்து சந்தித்து செல்வார். ஒரு தடவை அக்கரைப்பற்று பிரதேசத்திலுள்ள முஸ்லிம் பகுதிகளில் கூட நாங்கள் தங்கியுள்ளோம்.

அக்கரைப்பற்று பள்ளிவாசல் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தைப் பொறுத்த வரை முதல் நாள் இரவு இனியபாரதிஇ தேவன்இ சந்திரமோகன்இ பௌசர் ஆகியோர் கூட்டாக வெளியே சென்றிருந்தார்கள்.

மறுநாளே முகாம் திரும்பிய இவர்களது உரையாடல்கள் மூலம் இவர்கள் தொடர்புபட்டிருப்பது தெரியவந்தது.

<b>ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவுடன் கருணா குழுவைச் சேர்ந்த இனியபாரதி நெருக்கமான தொடர்புகளை வைத்திருக்கின்றார். தினமும் டக்ளசுடனும் தொடர்புகளை ஏற்படுத்திய பின்பே தனது வழமையான பணிகளை அவர் ஆரம்பிப்பார்.</b>

ஒரு தடவை அம்பாறையில் தான் துப்பாக்கியுடன் பிடிபட்ட போது டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் தான் விடுபட்டதாகக் கூறி இனியபாரதி பெருமைப்பட்டுக் கொள்வார். டக்ளஸ் தேவானந்தா இனியபாரதிக்கு ஒரு கொம்பியூட்டரை அன்பளிப்பு செய்துள்ளார்.

எமக்கு மாதாந்தம் 30 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டது. இந்த கொடுப்பனவுகள் வெளிநாட்டு உதவி என அவர்கள் கூறுவார்கள். அவர்களிடம் தற்போது 35 பேர் வரை இருக்கின்றார்கள். ஆட்பலம்இ ஆயுத பலம் இல்லை. எதிர்காலத்தில் ஆட்களைப் பிடித்து பயிற்சி கொடுப்பதற்கு திட்டமிட்டுள்ளார்கள்.

<b>கருணா இந்தியாவிலிருப்பதாகவே எங்களுக்கு கூறப்பட்டது. தினமும் தொலைபேசியில் தொடர்பு கொள்வார். நானும் ஒரு தடவை அவருடன் உரையாடியிருக்கின்றேன்.</b>

கடந்த அரச தலைவர் தேர்தலின் போது தற்போதைய அரச தலைவர் மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவு வழங்குமாறும்இ அவர் வெற்றி பெற்றால் தேவையான உதவிகள் செய்யப்படும் என அமைச்சர் மைத்திரிபால சிறீசேன கருணா குழுவைச் சேர்ந்த மங்களம் மாஸ்டருடன் தொடர்பு கொண்டு நேரடிப் பேச்சு நடத்தினார்.

கருணா குழுவில் முஸ்லிம்கள் இருக்கின்றார்கள். இராணுவ புலனாய்வுப் பிரிவு வேண்டிய உதவிகளை வழங்குகின்றது. வெலிக்கந்தைக்கும் - அம்பாறைககும் இடையிலான போக்குவரத்து வசதிகளை வழங்குகின்றது.

அண்மையில் அம்பாறை மாவட்டம் மாதோட்டத்தில் விசேட அதிரடிப்படை முகாமிற்கு அருகில் 22 பேர் கொண்ட முகாமொன்று அமைக்கப்பட்ட போது மக்கள் மத்தியில் எதிரப்பு கிளம்பியது. விசேட அதிரடிப்படை அதிகாரியொருவரும் இரண்டு பௌத்த பிக்குமார்களும் வந்து மக்களுடன் பேச்சுவார்ததை நடத்தி அந்த முகாமை அங்கு தொடர்ந்து இருக்க ஏற்பாடுகள் செய்தனர்.

அந்த முகாமிலிருந்த போது இவர்களின் போக்கு மீது ஏற்கனவே விரக்தியடைந்திருந்த நாங்கள் என்ன செய்வது என்று தெரியாமல் சிந்தித்து கொண்டிருக்கையில் விடுதலைப் புலிகளுடன் இணைந்து கொள்வது என முடிவெடுத்தோம்.

திருகோணமடுவிலும் தீவுச்சேனையிலும் இரண்டு முகாம்கள் கருணா குழுவினருக்கு உள்ளது என மேலும் அவர்கள் தெரிவித்தனர்

செய்தி: புதினம்

Print this item

  தமிழர் தாயகப் பகுதிகளில் அதிகரித்துவரும் இந்திய புலனாய்வுப்
Posted by: Mathuran - 12-13-2005, 02:17 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (2)

தமிழர் தாயகப்பகுதிகளில், வணிகர்கள் என்ற போர்வையில் இந்திய புலனாய்வுப் பிரிவினர் பெருமளவில் ஊடுருவியிருப்பதாக தெரியவருகின்றது. உடுபுடவைகள் வணிகம், மற்றும் பழவகைகள், இரத்தினக் கற்கள் வணிகம் போன்ற போர்வையுடன் இலங்கை வரும் இவர்கள் இங்கு தங்கியிருந்து தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக தெரியவருகின்றது.

அண்மைக்காலமாக வானு}ர்திகள் மூலம் வந்து யாழ்ப்பாணத்தின் பல பாகங்களிலும் இவர்கள் உள்நுழைந்து வியாபாரம் என்ற போர்வையில் தமது உளவு வேலைகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேநேரம் கொழும்பிலும் தமிழர் அல்லாத இந்திய உளவாளிகளின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுகின்றது. வடக்கு கிழக்கில் வணிகர்களாக வருபவர்கள் போன்று அல்லாது இவர்கள் ஆடம்பரமாக வந்து இரத்தினக்கல் வணிகம் செய்வது போல் தங்களை காட்டிக்கொண்டு, பெரும்பாலும் தமிழ் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் தங்கள் கண்காணிப்புகளை நடத்துகின்றனர். இரவில் விடுதிகளில் தங்கிவிட்டு பகல் நேரங்களில் இவர்கள் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதேநேரம் வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு புடவை வணிகம் என்ற போர்வையில் ஊடுருவி உளவு பார்க்கும் இந்திய உளவாளிகளில் பெரும்பாலானவர்கள் இந்தியத் தமிழர்களே. யாழ்ப்பாணத்தில் காலை நேரங்களில் வீடுவீடாகக்கூட சென்று வணிகம் செய்யும் இவர்கள் மாலையில் இனந்தெரியாத நபர்களுடன் மோட்டார் ஊர்திகளிலும்; செல்வதையும் அவதானிக்க முடிவாதாக யாழ்ப்பாணத் தகவல்கள் தெரிவிக்கின்றன



நன்றி சங்கதி

Print this item

  ¬§Ä¡º¨É ¦º¡øÖí¸§Çý
Posted by: ¦ÀâÂôÒ - 12-13-2005, 01:44 AM - Forum: புலம் - Replies (50)

[size=14]«ýÒìÌâ ¸Ç ¯È׸§Ç,

´Õ ÐÂÃÁ¡É ¦ºö¾¢¨Â ¯í¸ÙìÌ ¦º¡øÄ §ÅñÊ ¿¢¨Ä¢ø þÕ츢§Èý. Cry Cry

¦ÀâÂôÒ×ìÌ «Îò¾ ÅÕ¼õ ¸¡ø ¸ðÎô§À¡¼ ²üÀ¡Î¸û ¿¼óÐ ÅÕ¸¢ýÈÉ. :oops: :oops: :oops:

¦ÀâÂôÒ þÕôÀ§¾¡ Äñ¼É¢ø. ¦ÀâÂôÒÅ¢ý ¸¼×ðÎ (þÄí¨¸ «Ãº¡ø ÅÆí¸ôÀð¼Ð) ´Õ À¢Ã¨ÉÔõ «üÈÐ. Å¢º¡ì¸û «¨ÉòÐõ ºð¼Ã£¾¢Â¡ÉÐ. Ш½Â¡¸ô§À¡¸¢ÈÅ÷ ÍÅ¢…¢ø ÌÊÔâ¨Á ¦ÀüÈÅ÷.

Å£ð¼¡÷ ±ýÉ¢¼õ "±í§¸ ¾¢ÕÁ½ò¨¾ ¨ÅòÐ즸¡ûÇÄ¡õ?" ±ýÚ §¸ð¸¢È¡÷¸û.
þÄñ¼É¢ø, ÍÅ¢º¢ø «øÄÐ þó¾¢Â¡Å¢ø ±ýÚ ÌÆôÒ¸¢È¡÷¸û. ºð¼Ã£¾¢Â¡¸ ²¾¡ÅÐ À¢Ã¨É¸û ÅÕÁ¡ ±ýÚõ §Â¡º¢ì¸ §ÅñÊÔûÇÐ. :?
º¢Ä§À÷ ¦º¡ýÉ¡÷¸û þí§¸ ¾¢ÕÁ½õ ÓÊì¸ §ÅñÎÁ¡É¡ø ӾĢø ̨Èó¾Ð ´Õ ÅÕ¼Á¡ÅÐ "§º÷óÐ Å¡ú󧾡õ" ±ýÚ ¿¢åÀ¢ì¸ §ÅñÎõ ±ýÚ... :? :?

±É째¡ ¬§Ä¡º¨É ¦º¡øÄ ¡Õõ þø¨Ä. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
ÓýÉ÷ ¾¢ÕÁ½õ ¦ºöÐ «ÛÀÅÓõ þø¨Ä <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
þí§¸ «ÛÀź¡Ä¢¸û ¿¢¨ÈÂô§À÷ þÕ츢ȣ÷¸û.

¦¸¡ïºõ ¬§Ä¡º¨É ¦º¡øÖí¸§Çý.

Print this item

  சிவபுராணம்
Posted by: Mathuran - 12-12-2005, 10:59 PM - Forum: கவிதை/பாடல் - Replies (13)

சிவபுராணம்

http://www.tamilsongs.net/page/build/album...anam/index.html

இந்த சிவபுராணத்தையா இளையராசா அவர்கள் அண்மையில் பாதர் ஜெகஸ்கஸ்பாரின் உதவியோடு வெளியிட்டுவைத்தார்?


நன்றி தமிழ் சொங்க்ஸ். நெற்

Print this item

  'விழிபிதுங்கும் உலக விடுதலை இயக்கங்களுக்கு திசை காட்டும் கரு
Posted by: Mathuran - 12-12-2005, 02:44 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

<b>'விழிபிதுங்கும் உலக விடுதலை இயக்கங்களுக்கு திசை காட்டும் கருவியாக விடுதலைப் புலிகள்' - தமிழ்நாட்டுத் தமிழனின் கடிதம்</b>

உங்களது இணையத்தள வரையறைகளின் படி என் இந்தச் செய்தியை நீங்கள் 'புதினம்' இணையத்தளத்தில் வெளியிடுவதற்கான சாத்தியங்கள் குறைவாக இருக்கும் என்று கருதுகிறேன். இருப்பினும் ஒரு தேசிய இன விடுதலைப் போராட்டச் சிந்தனை உள்ளவன் என்கிற முறையில் எழுதுகிற இந்தச் செய்தியை நீங்கள் அவசியம் வெளியிட வேண்டும் என்பது என் விருப்பமாகும்.


முதலில் ஒன்றை நான் தெளிவாகச் சொல்லுகிறேன்.

விடுதலைப் புலிகள் மீது இரசிக மனோபாவத்தோடு-தமிழ்நாட்டிலே நிகழ்த்தப்படாத சாகசங்களை அல்லது தமிழ்நாட்டுத் தமிழன் கண்டிராத-பார்த்திராத-கேட்டிராத சாகசங்களைச் செய்தவர்கள் என்ற காதல் கொண்டு இந்தச் செய்தி எழுதப்படவில்லை.

விடுதலைக்குப் போராடுகிற ஒரு இனம்-அதுவும் எங்களது தொப்புள் கொடி உறவு கொண்ட மக்கள் விடுதலைக் களத்திலே நிற்கிறார்கள் என்ற அடிப்படையிலும்

ஒடுக்குகிற ஒரு தேசிய இனம் எதுவித ஆதரவின்றி அனாதையாக களத்திலே நின்று சதிகளையும் யுத்தங்களையும் சதிராடி வருகிற பிரமிப்பின் பின்புலத்திலுமே இது எழுத வேண்டியவனாக உள்ளேன்.

மிக அண்மைக்காலமாக குறிப்பாக சிறிலங்கா அதிபர் தேர்தல் காலத்துக்கு சிறிது முன்பாக புதினம் இணையத்தளத்தை நான் படிக்க நேர்ந்தது. தொடர்ச்சியாக விடுதலைப் புலிகளின் நிலைப்பாடுகளை இந்த இணைய தளம் ஊடாக என்னால் அறிந்து கொள்ள முடிந்தது.

குறிப்பாக விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினராக உள்ள பாலகுமாரன் அவர்களது அரசியல் அரங்க நிகழ்வுகள், விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனது நீண்ட நேர்காணல்கள், உலக நாடுகளின் பிரதிநிதிகள் தங்களைச் சந்திக்கின்ற போது தருகிற மனுக்கள் ஆகியவற்றை உற்றுநோக்கியபோது உண்மையிலே

பாலகுமாரன் ஒரு நிகழ்விலே சொல்லி இருந்தது போல்-

செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிறகு

ஈராக் மீதான அமெரிக்காவின் பயங்கரவாதத்துக்கு எதிரானப் போருக்குப் பிறகு

உலக விடுதலை இயக்கங்களின் இருப்பு சாத்தியமா என்ற கேள்வி எனக்கும் எழுந்தது உண்டு.

தமிழ்நாட்டில் தமிழ்த் தேசிய இன விடுதலைப் போராட்டம் இன்னும் தலைமறைவு இயக்கங்களாக இலைமறைகாயாகத்தான் இருக்கிறது. ஈழத்தைப் போல் ஒடுக்கிற தேசிய இனம் என்பது இங்கே வெளிப்படையாக இல்லாமல் இராணுவ ஒடுக்குமுறையாக இல்லாமல் 2 ஆயிரம் ஆண்டுகால கருத்து வன்முறை என்கிற ஆயுதத்தால் ஒரு குறைந்த விழுக்காட்டு இனம் எங்களை அடிமைப்படுத்தி இருக்கிறது.

அந்த மூளையைத் தமிழ்நாட்டுத் தமிழர்கள் கழற்றி வைக்க இன்னொரு தந்தை பெரியார்தான் வரவேண்டும்.

இப்படியான அவலச் சூழலோடு- அமெரிக்கா போன்ற நாடுகளின் பயங்கரவாதத்துக்கு எதிரான அணியைக் காட்டி இங்கே இனி தமிழ்த் தேசிய இன விடுதலைப் போராட்டம் சாத்தியமே இல்லை- உலகில் எங்குமே விடுதலைப் போராட்டம் சாத்தியமே இல்லை என்று தமிழ்நாட்டு மிதவாதத் தமிழ்த் தேசியத் தலைவர்கள், இன விடுதலையில் அக்கறை கொண்டு வரும் இளைஞர்களுக்குக் கற்பிதம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் ஒரு விடுதலை இயக்கம் முழுமையான அர்ப்பணிப்போடு இயங்கினால் எந்த ஒரு வல்லரசையும் வென்றெடுக்க முடியும் என்பதை விடுதலைப் புலிகள் தங்களது இராஜதந்திர செயற்பாடுகளின் மூலம் நிரூபித்து உள்ளனர்.

ரணில் விக்கிரமசிங்கவைத்தான் விடுதலைப் புலிகள் ஆதரிப்பார்கள்- ஆதரிக்க வேண்டும்; அவர் வந்தால் பிரச்சனைக்குத் தீர்வு ஏற்பட்டு விடும் என்று தமிழ்நாட்டுத் தமிழர்களும் நம்பிக் கொண்டிருந்த போது உங்கள் புதினம் மூலமாக பாலகுமாரன் அவர்களது கருத்தைப் படிக்கிற போது கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது.

விடுதலைப் புலிகள் என்ன நிலையினை மேற்கொள்கிறார்கள்? என்ற கேள்வி எழுந்தது.

ரணில் தோற்றபோதும் கூட தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு- தமிழ்நாட்டுத் தமிழ்த் தேசிய சக்திகளுக்கு ஏன் விடுதலைப் புலிகள் இப்படிச் செய்துவிட்டார்கள்? என்றுதான் கேள்வி எழுந்தது.

ஆனால் புதினத்தையும் சமீபகாலமாக தமிழ்நாட்டு இதழ்களிலும் வருகின்ற செய்திகளைப் பார்க்கிற போது

ரணிலின் சதித்திட்டத்தை பாலகுமாரன் அனுபவபூவர்மாக முதன் முதலில் அம்பலப்படுத்தினார். அது ஊகமாகவே இருந்திருக்கும்- ரணில் கட்சியினர் இருவர் வாய்திறக்காமல் இருந்திருந்தால்.

ஆனால் ரணிலையும் தமிழர்கள் பொருட்படுத்த வேண்டியதில்லை என்று அனுபவத்தின் வாயிலாக பாலகுமாரன் கூறியதன் உண்மையை ரணில் கட்சியினர் இருவர் ஒப்புக்கொண்டதாக வெளியானது.

அதேபோல் இந்திய-இலங்கை ஒப்பந்த காலத்தில் திருகோணமலையின் மீது ஆதிக்கம் செலுத்துவதற்காகத்தான் இந்தியா தலையிடுகிறது என்பதை பிரபாகரன் அப்போதே தெரிவித்திருந்த செய்தியையும் இதே நேரத்தில் புதினம் வாயிலாகப் படிக்க நேர்ந்தது.

இந்த இரண்டு விடயங்களும் உண்மையில் விடுதலைப் புலிகளின் தொலைநோக்குச் சிந்தனையும் கணிப்பும் அவர்களது கடந்த கால வெற்றிகளின் பின்னணியை தெளிவாகச் சொல்லியது.

தேர்தல் முடிந்தது- மகிந்தா ராஜபக்சே வெற்றி பெற்றார்.

மகிந்தா ராஜபக்சே குறித்து தொடர்ந்து பாலகுமாரன் தெரிவித்திருக்கும் விமர்சனங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிலையில் நிரூபிக்கப்பட்டே வருகின்றன.

நார்வே நாடு தொடர்பாக ராஜபக்சே எடுக்கும் முடிவுகளுக்கு எதிராக இரு சிங்களப் பேரினவாத கட்சிகளும் தொடர்ந்து கருத்துகளைக் கூறி வருகின்றன. இந்த முரண்பாடு எங்கே போய் முடியும்? போகிற போக்கைப் பார்த்தால் இந்த முரண்பாடுகள், பாலகுமாரன் கூறியிருந்ததைப் போல் சிங்களவர்களுக்கு இடையே ஒரு உள்நாட்டு யுத்தத்தை ஏற்படுத்திவிடக் கூடும் என்று தெரிகிறது.

இவைகளை உள்நாட்டு அரசியல் தொடர்பான புலிகளின் அனுபவங்கள் என்று ஒருபக்கம் வைத்துக் கொள்ளலாம்.

'தம்பி பிரபாகரன்' அண்ணன் அவர்கள் பேசிய மாவீரர் நாள் பேச்சு உண்மையில் எங்களுக்கு ஈழ விடுதலைப் போராட்டத்தின் கடந்த கால அவல நிலைகளைச் சொன்னது.

மேலும் பயங்கரவாதம் குறித்து அண்ணன் எழுப்பியிருக்கும் கேள்வி மகிழ்ச்சியளித்தது.

எதிர்காலத்தில் போராடுகிற- இப்போது போராடிக் கொண்டிருக்கிற விடுதலைப் போராட்ட அமைப்புகள் மென்று முழுங்கும் புழுங்கிச் சாகும் ஒரு விடயத்தை ஊரறிய அவர் முழங்கியிருப்பது மட்டுமல்ல..சர்வதேச முகத்தில் அறைந்தார் போல் விடுதலைக்குப் போராடுபவனும் பயங்கரவாதியா என்று கேள்வி எழுப்பி இருக்கிற துணிச்சல் ஆறுதலையும் நம்பிக்கையையும் அளிக்கிறது.

அமெரிக்கப் பூச்சாண்டிகளைக் காட்டி இங்கே தமிழ்நாட்டில் தேசிய இன விடுதலை பேசிய மிதவாதிகள் மூச்சடைக்க முயற்சிக்கும் செயல்களுக்கு செவினி அடி என்று சொல்லலாம் அதை.

மிக ஆழமான கேள்வி அது.

பிரபாகரன் அண்ணனது உரைக்கு விளக்கம் அளித்து ஆண்டன் பாலசிங்கமும் பாலகுமாரனும் தெரிவித்திருந்த கருத்துகள் மேலும் வியப்பூட்டின.

உண்மையைச் சொன்னால், இந்தத் தேர்தல் ஒரு செய்தியை சர்வதேச சமூகத்துக்குச் சொல்லப் போகிறது என்று சொல்லி இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்ட கருத்துகள் புரிபடாமலேயே இருந்தது.

ஆனால் இந்தியத் தலையீடு, நார்வேயின் மீண்டும் வருகை, சீனா தலையிடுமா என்கிற கேள்விகள் அடுத்தடுத்து உங்களது இணையத்தளம் வாயிலாக எழும்பிய போது இந்துமா சமுத்திரத்தினது அரசியலை ஓரளவு அறிந்தவன் என்கிற வகையிலும் சர்வதேச நடப்புகளின் மீது அக்கறை கொண்டவன் என்கிற வகையில் மிரட்சியடைத்தான் முடிந்தது.

நாளைய நகர்வுகளை எப்படித் துல்லியமாக இவர்களால் சொல்ல முடிகிறது?

பாலகுமாரன் கூறியதுபோல் இன்னொன்று நடந்துள்ளதை நான் சுட்டிக்காட்ட எண்ணுகிறேன்.

உலக விடுதலைப் போராட்டங்களை மென்மைப்படுத்தி பேச்சுவார்த்தைக்கு இதுவரை அழைத்து வந்த சர்வதேச சமூகம் இப்போது புதிய அனுபவத்தைப் பெறப் போகிறது. பல்வேறு நாட்டுப் புரட்சிகளைப் போல் உலக அரசியலில் ஒரு அதிசயமாக இது இருக்கும் என்றார்.

ஆம். அப்படித்தான் நடக்கிறது.

இங்கே ஐக்கிய இந்தியக் குடியரசின் தலைமை அமைச்சரைச் சந்தித்த நார்வே தலைமை அமைச்சரின் பேட்டியானது சிங்களவர்களுக்கு நிபந்தனைகளை விதிக்கப் போவதாகச் சொன்னார்கள்.

பாலகுமாரன் முன்பு சொன்னது போல் நார்வே நாட்டுக்கு இது இடியாப்பச் சிக்கல்தான். அவர்கள் புதிய அனுபவம் பெறப் போகிறார்கள் என்பது அவர்களது இந்தியப் பயணத்தின் மூலம் உணர்ந்து கொள்ள முடியும்.

இதுவரை இந்தியாவை 'பஞ்சாயத்துக்கு' அழைக்காமல் இருந்த நார்வேக்காரர்கள் இப்போது ஒரு பிராந்திய பெரிய அண்ணனையும் அனுசரித்துப் போக வேண்டிய நிலையில் உள்ளது.

இந்தோனேசியாவின் ஆச்சே விடுதலைப் போராட்டத்திலும் முன்னாள் பாலத்தீன பேச்சுவார்த்தைகளிலும் சட்டையை தூக்கிவிட்டிக் கொண்டு ஏன் ஈழப் பிரச்சனையிலும் ஒரு நிலைவரை நெஞ்சு நிமிர்த்தி நடந்த நோர்வே,

இப்போது

உங்கள் மொழிகளிலேயே சொல்வதாக இருந்தால்

அனுசரணையாளராக உள்ள நோர்வேக்கும் சிறிலங்காவுக்கும் இந்தியா என்கிற ஒரு அனுசரணையாளர் தேவைப்படுகிற விசித்திரம் இப்போது நடந்து கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது.

தமிழ்நாட்டில் இதுநாள் வரையில் ஈழப் புலிகளை கடுமையாக விமர்சனம் செய்து வந்த ஏடுகள் அனைத்தும் ஈழத்திலே யுத்தம் என்கிற தலைப்புச் செய்தியைப் போட்டு பிரபாகரனின் காலஅவகாச தந்திரத்தை பாராட்டுகிறார்கள்.

விடுதலைப் புலிகளின் இராஜதந்திரத்தின் வெற்றியாகக் கூட இதை நான் நினைக்கிறேன்.

தமிழ்நாட்டு ஏடுகள் எழுதாத அவதூறுகளும் விமர்சனங்களும் இல்லை. இப்போதும் எழுதிக் கொண்டு இருக்கின்றன. ஈழத்திலே பிரபாகரன் உரை ஆற்றிவிட்டார். யுத்தம் வரப்போவதால் இங்கே இருந்து டீசல் போன்றவற்றை அவர்கள் வாங்கிச் சேமிக்கிறார்கள். அதனால் கடலோரப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு வருவதாக இப்போதும் எழுதுகிறார்கள்.

ஆனால் அந்த விமர்சனங்களுக்கும் கூட தங்களது செயலினால் பதிலடி கொடுத்து இங்கேயும் தங்களது இராஜதந்திரத்தை ஈழத்து பேச்சுகளின் மூலமே வென்றுகாட்டி இருப்பது குறித்து எப்படி மகிழ்ச்சியடையாமல் இருக்க முடியும்?

நான் படித்த வரலாற்றில் குர்து இன விடுதலைத் தலைவர் ஒகாலன் சிறைக்கொட்டடியில் அடைக்கப்பட்டு அந்த விடுதலைப் போராட்டத்தின் கதி கேள்விக்குள்ளாகிவிட்டது. ஒகாலன் தெளிந்த மார்க்சிய-லெனிய சித்தாந்தவாதியாக உருவாகி, காலச் சூழலுக்கு ஏற்ப மத நம்பிக்கையுள்ளோரையும் பகுத்தறிவாளர்களையும் ஒருங்கிணைத்து ஒட்டுமொத்த குர்து இன மக்கள் விடுதலைப் போராட்டமாக அவர் தனது தேசிய விடுதலைப் போராட்டத்தை நடத்தினார். ஆனால் அவர் வெளிநாடு ஒன்றில் கைதான பிறகு அந்த விடுதலை இயக்கத்தின் நிலை முன்னைப்போல் வீச்சோடும் வீரியத்தோடும் இல்லை என்றும் அமெரிக்காவின் அணிசேர்க்கையிலே இணைந்துவிட்டது என்றும் தெரிகிறது.

அதேபோல் ஆச்சே தேசிய இன விடுதலைப் போராட்டம் ஒரு குறைந்தபட்ச தீர்வுத் திட்டத்துடன் அடங்கிப் போய்விட்டதாகத் தெரிகிறது.

இந்தியாவின் நாகாலாந்து தேசிய இனவிடுதலைப் போராட்டமும் பேச்சுவார்த்தை என்கிற அபாயச் சுழலில் சிக்கிக் கொண்டு தத்தளிக்கிறது. இந்தியாவின் சீக்கியர் விடுதலைப் போராட்டம் சிதைக்கப்பட்டுவிட்டது. காசுமீர விடுதலைப் போராட்டம் திசைமாறிப் போய்விட்டது.

இந்த விடுதலை இயக்கங்களுக்கு இணையான காலத்திலே உருவான விடுதலை இயக்கமான விடுதலைப் புலிகளின் இத்தகைய தொலைநோக்குச் சிந்தனை அந்த இயக்கங்களுக்கு இருந்திருந்தால் ஒடுக்கப்பட்டிருக்கிற தேசிய இனங்களது உரிமைக் குரல் குரல்வளையோடு நசுக்கப்பட்டிருக்காது.

உலக வரலாற்றில் ருசியப் புரட்சியானது தேசிய இனங்களுக்கு ஒரு முன்னோடி விடுதலை இயக்கமாகி நூற்றாண்டுகாலம் நெருங்குகிறது.

அடுத்த சகாப்தமாக இன்றைய தகவல் தொழில்நுட்ப உலகத்தில் உலகம் ஒரு கிராமமாக சுருங்கிப் போய் அமெரிக்கா என்கிற வல்லரசின் பின்னால் ஒட்டுமொத்த நாடுகளும் அணிதிரள வேண்டிய காலகட்டத்தில் இன்னமும் விடுதலை பெறாத அத்தனை தேசிய இனங்களும் புத்துயிர் பெறவும் குரல்வளையினை நெறித்தவர்களது நெஞ்சில் ஏறி விடுதலை வானில் பறப்பதற்குமான ஒரு மிகவும் சக்திவாய்ந்த வழிகாட்டியாக, தத்தளிக்கிற இனங்களினது விடுதலைக்கான திசைகாட்டியாக விடுதலைப் புலிகளின் அரசியல் நகர்வுகள் உத்வேகத்தை அளிக்கின்றன என்றால் அது மிகையல்ல- இரசிக மனோபாவம் அல்ல. கண்முன் நிகழ்கின்றவைகளின் எதேச்சையான உண்மை.

நன்றி புதினம்

Print this item

  சீனாவிலிருந்து தமிழ்வானொலி
Posted by: தூயவன் - 12-12-2005, 02:33 PM - Forum: தளமுகவரிகள் - Replies (1)

இதை சிலர் அறிந்திருக்ககூடும். இருந்தாலும் சீன அரசாங்கம் தமிழ்மொழிக்கான சேவை ஒன்றை நடத்தும் விடயம் புதுமையளிக்கின்றது.
இத் தளத்தில் உள்ள செய்திகளை படிக்கும்போது ஒரு உண்மையான விடயத்தை காணுவீர்கள். இயலுமான வரை சுத்தமான தமிழ். ஆனால் இவ் வானொலி நிலையத்தை நடத்துபவர்கள், சீன இனத்தவரே. விருப்பின் காரணமாக தமிழ்மொழி படித்து தமிழில் பேசுகின்ற இவர்களை வாழ்த்தியாக வேண்டும்.

பேசும்போது சீனமொழி பாணியிலான தமிழைத் தான் பேசுகின்றனர். இருந்தாலும் நம் மக்கள் சிலரை விட இவர்கள் மேலானவர்கள்.

தளம்: http://ta.chinabroadcast.cn/

வானொலி ஒலிபரப்பு நேரம்: http://ta.chinabroadcast.cn/1/2004/01/14/1@968.htm

Print this item

  வவுனியாவில் புளொட் முக்கியஸ்தர் கடத்தல்
Posted by: Vaanampaadi - 12-12-2005, 12:06 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

வவுனியாவில் புளொட் முக்கியஸ்தர் கடத்தல்
[திங்கட்கிழமை, 12 டிசெம்பர் 2005, 16:12 ஈழம்] [வவுனியா நிருபர்]
புளொட் இயக்கத்தின் முக்கிய உறுப்பினரும் மத்திய குழு உறுப்பினருமான பாருக் என்றழைக்கப்படும் சின்னத்தம்பி கணேசலிங்கம் என்பவர் இன்று திங்கட்கிழமை வவுனியாவில் இனந் தெரியாத நபர்களினால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.


வவுனியா சிதம்பரபுரத்திற்கும் சமனங்குளத்திற்கும் இடையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது வானொன்றில் வந்தவர்களால் கடத்தப்பட்டுள்ளார்.

கடத்திச் சென்றதாக கூறப்படும் வான் மதியம் 1.30 மணியளவில் வவுனியா கிடாச்சூரி என்ற இடத்தில் சிறிலங்கா இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

வானில் சென்ற மூவரையும் கைது செய்திருப்பதாகவும் அவர்களிடம் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் வவுனியா காவல்நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எம்.சி.அபயசிங்க பண்டார தெரிவித்துள்ளார்.


Puthinam

Print this item

  Preying Tigers eye aid
Posted by: Vaanampaadi - 12-12-2005, 11:47 AM - Forum: பிறமொழி ஆக்கங்கள் - Replies (1)

<b>Preying Tigers eye aid</b>
http://www.theglobeandmail.com/servlet/sto.../International/

Print this item

  இலங்கை நிலைமையை ஆராய அமெரிக்க ராஜதந்திரி வருகிறார்
Posted by: Vaanampaadi - 12-12-2005, 11:42 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

<b>இலங்கை நிலைமையை ஆராய
அமெரிக்க ராஜதந்திரி வருகிறார்</b>

ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னரான இலங்கையின் களநிலைவரத்தை ஆராய்வ தற்காக மூத்த இராஜதந்திரியொருவரை இலங்கைக்கு அனுப்புவதற்கு அமெரிக்கா தீர்மானித்திருக்கிறது.
இதன்படி அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மூத்த உறுப்பினரும், தெற்காசியா தொடர்பில் ஆழ்ந்த அறிவு கொண்டவருமான நிக் பேர்ன்ஸ் அடுத்த மாத முற்பகுதியில் இலங்கை வரவுள்ளார்.
கொழும்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அரசியற் பிரமுகர்கள் பலரைச் சந்திக்கவுள்ள அவர் இறுதியில் இலங்கை நிலைவரம் தொடர்பில் அமெ ரிக்க அரசுக்கு அறிக்கையொன்றையும் சமர்ப்பிக்கவுள்ளார்.
இலங்கை வரவுள்ள நிக் பேர்ன்ஸ் அமெ ரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்ஷின் தற் போதைய அரசாங்கத்தில் வெகுவிரைவில் இராஜாங்க அமைச்சராகப் பதவியேற்கக்கூடுமென்றும் தெரிகிறது.


Uthayan

Print this item