![]() |
|
இலங்கை நிலைமையை ஆராய அமெரிக்க ராஜதந்திரி வருகிறார் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: இலங்கை நிலைமையை ஆராய அமெரிக்க ராஜதந்திரி வருகிறார் (/showthread.php?tid=2068) |
இலங்கை நிலைமையை ஆராய அமெரிக்க ராஜதந்திரி வருகிறார் - Vaanampaadi - 12-12-2005 <b>இலங்கை நிலைமையை ஆராய அமெரிக்க ராஜதந்திரி வருகிறார்</b> ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னரான இலங்கையின் களநிலைவரத்தை ஆராய்வ தற்காக மூத்த இராஜதந்திரியொருவரை இலங்கைக்கு அனுப்புவதற்கு அமெரிக்கா தீர்மானித்திருக்கிறது. இதன்படி அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மூத்த உறுப்பினரும், தெற்காசியா தொடர்பில் ஆழ்ந்த அறிவு கொண்டவருமான நிக் பேர்ன்ஸ் அடுத்த மாத முற்பகுதியில் இலங்கை வரவுள்ளார். கொழும்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அரசியற் பிரமுகர்கள் பலரைச் சந்திக்கவுள்ள அவர் இறுதியில் இலங்கை நிலைவரம் தொடர்பில் அமெ ரிக்க அரசுக்கு அறிக்கையொன்றையும் சமர்ப்பிக்கவுள்ளார். இலங்கை வரவுள்ள நிக் பேர்ன்ஸ் அமெ ரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்ஷின் தற் போதைய அரசாங்கத்தில் வெகுவிரைவில் இராஜாங்க அமைச்சராகப் பதவியேற்கக்கூடுமென்றும் தெரிகிறது. Uthayan |