![]() |
|
முஸ்லீம்கள் கொலைக்கு கருணா குழுவும், அதாவுல்லாவுமே பொறுப்பு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: முஸ்லீம்கள் கொலைக்கு கருணா குழுவும், அதாவுல்லாவுமே பொறுப்பு (/showthread.php?tid=2060) |
முஸ்லீம்கள் கொலைக்கு கருணா குழுவும், அதாவுல்லாவுமே பொறுப்பு - தூயவன் - 12-13-2005 கிழக்கு மாகாணத்தில் தமிழ்-முஸ்லிம் இனங்களுக்கு இடையே அண்மைக் காலமாக தொடரும் இன வன்முறைச் சம்பவங்களின் பின்னணியில் கருணா குழுவினரும் ஆளும் கட்சி அமைச்சரான ஏ.எல்.எம்.அதாவுல்லாவின் தொடர்பாளர்களும் செயற்படுவதை விடுதலைப் புலிகளிடம் சரனடைந்துள்ள முன்னாள் கருணா குழு உறுப்பினர்களான துரைராஜசிங்கம் சந்திரகுமார் (புகழ்தேவன்)இ சாமித்தம்பி அருள்குமரன் (ஞானதீபன்) ஆகியோர் உறுதிப்படுத்தியுள்ளனர். கடந்த 6 ஆம் திகதி அம்பாறை மாவட்டம் மாதோட்டத்தில் கருணா குழுவினர் மீது தாக்குதல் நடத்தி இனியபாரதி உள்ளிட்ட நால்வரை சுட்டுக்கொன்று விட்டு விடுதலைப் புலிகளிடம் சரணடைந்த இருவரும் கலந்து கொண்ட செய்தியாளர் சந்திப்பொன்று இன்று திங்கட்கிழமை கரடியனாறு தேனகத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் இருவரும் தெரிவித்த தகவல்களின் தொகுப்பு வருமாறு: கருணா குழுவினரின் முக்கிய நோக்கம் இப்படியான சூழ்நிலையில் மறைந்து வாழ்வதை விட பகிரங்கமாக நடமாடுவதே. ஆனால் அதற்குரிய வாய்ப்பு தற்போது இல்லாத காரணத்தினால் தான் யுத்தத்தினை மீண்டும் ஏற்படுத்திஇ தங்களை வெளிப்படுத்தி தமது வேலைத் திட்டத்தை முன்னெடுப்பதாகும். இதன் ஒரு கட்டமாகவ தமிழ்-முஸ்லிம் மக்களுக்கு இடையே இனக் கலவரத்தை ஏற்படுத்த திட்டமிட்டு செயற்பட்டு வருகின்றனர். அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லாவிற்கும் கருணா குழுவினருக்கும் நேரடியான தொடர்புகள் இருப்பது பற்றி எமக்கு தெரியாது. ஆனால் அதாவுல்லாவின் நெருங்கிய தொடர்பாளரான பௌசருக்கும் இந்த குழுவினருக்கும் நெருக்கமான தொடர்பு உள்ளது. பௌசர் அடிக்கடி இனியபாரதியை வந்து சந்தித்து செல்வார். ஒரு தடவை அக்கரைப்பற்று பிரதேசத்திலுள்ள முஸ்லிம் பகுதிகளில் கூட நாங்கள் தங்கியுள்ளோம். அக்கரைப்பற்று பள்ளிவாசல் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தைப் பொறுத்த வரை முதல் நாள் இரவு இனியபாரதிஇ தேவன்இ சந்திரமோகன்இ பௌசர் ஆகியோர் கூட்டாக வெளியே சென்றிருந்தார்கள். மறுநாளே முகாம் திரும்பிய இவர்களது உரையாடல்கள் மூலம் இவர்கள் தொடர்புபட்டிருப்பது தெரியவந்தது. <b>ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவுடன் கருணா குழுவைச் சேர்ந்த இனியபாரதி நெருக்கமான தொடர்புகளை வைத்திருக்கின்றார். தினமும் டக்ளசுடனும் தொடர்புகளை ஏற்படுத்திய பின்பே தனது வழமையான பணிகளை அவர் ஆரம்பிப்பார்.</b> ஒரு தடவை அம்பாறையில் தான் துப்பாக்கியுடன் பிடிபட்ட போது டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் தான் விடுபட்டதாகக் கூறி இனியபாரதி பெருமைப்பட்டுக் கொள்வார். டக்ளஸ் தேவானந்தா இனியபாரதிக்கு ஒரு கொம்பியூட்டரை அன்பளிப்பு செய்துள்ளார். எமக்கு மாதாந்தம் 30 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டது. இந்த கொடுப்பனவுகள் வெளிநாட்டு உதவி என அவர்கள் கூறுவார்கள். அவர்களிடம் தற்போது 35 பேர் வரை இருக்கின்றார்கள். ஆட்பலம்இ ஆயுத பலம் இல்லை. எதிர்காலத்தில் ஆட்களைப் பிடித்து பயிற்சி கொடுப்பதற்கு திட்டமிட்டுள்ளார்கள். <b>கருணா இந்தியாவிலிருப்பதாகவே எங்களுக்கு கூறப்பட்டது. தினமும் தொலைபேசியில் தொடர்பு கொள்வார். நானும் ஒரு தடவை அவருடன் உரையாடியிருக்கின்றேன்.</b> கடந்த அரச தலைவர் தேர்தலின் போது தற்போதைய அரச தலைவர் மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவு வழங்குமாறும்இ அவர் வெற்றி பெற்றால் தேவையான உதவிகள் செய்யப்படும் என அமைச்சர் மைத்திரிபால சிறீசேன கருணா குழுவைச் சேர்ந்த மங்களம் மாஸ்டருடன் தொடர்பு கொண்டு நேரடிப் பேச்சு நடத்தினார். கருணா குழுவில் முஸ்லிம்கள் இருக்கின்றார்கள். இராணுவ புலனாய்வுப் பிரிவு வேண்டிய உதவிகளை வழங்குகின்றது. வெலிக்கந்தைக்கும் - அம்பாறைககும் இடையிலான போக்குவரத்து வசதிகளை வழங்குகின்றது. அண்மையில் அம்பாறை மாவட்டம் மாதோட்டத்தில் விசேட அதிரடிப்படை முகாமிற்கு அருகில் 22 பேர் கொண்ட முகாமொன்று அமைக்கப்பட்ட போது மக்கள் மத்தியில் எதிரப்பு கிளம்பியது. விசேட அதிரடிப்படை அதிகாரியொருவரும் இரண்டு பௌத்த பிக்குமார்களும் வந்து மக்களுடன் பேச்சுவார்ததை நடத்தி அந்த முகாமை அங்கு தொடர்ந்து இருக்க ஏற்பாடுகள் செய்தனர். அந்த முகாமிலிருந்த போது இவர்களின் போக்கு மீது ஏற்கனவே விரக்தியடைந்திருந்த நாங்கள் என்ன செய்வது என்று தெரியாமல் சிந்தித்து கொண்டிருக்கையில் விடுதலைப் புலிகளுடன் இணைந்து கொள்வது என முடிவெடுத்தோம். திருகோணமடுவிலும் தீவுச்சேனையிலும் இரண்டு முகாம்கள் கருணா குழுவினருக்கு உள்ளது என மேலும் அவர்கள் தெரிவித்தனர் செய்தி: புதினம் |