| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 260 online users. » 0 Member(s) | 257 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,312
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,232
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,606
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,296
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,638
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,063
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,465
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,487
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,037
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,239
|
|
|
| தமிழ்நாட்டுத் தமிழனின் கடிதம் |
|
Posted by: Vaanampaadi - 12-12-2005, 10:33 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
<b>'விழிபிதுங்கும் உலக விடுதலை இயக்கங்களுக்கு திசை காட்டும் கருவியாக விடுதலைப் புலிகள்' - தமிழ்நாட்டுத் தமிழனின் கடிதம் </b>
[திங்கட்கிழமை, 12 டிசெம்பர் 2005, 05:38 ஈழம்] [து.சங்கீத்]
உங்களது இணையத்தள வரையறைகளின் படி என் இந்தச் செய்தியை நீங்கள் 'புதினம்' இணையத்தளத்தில் வெளியிடுவதற்கான சாத்தியங்கள் குறைவாக இருக்கும் என்று கருதுகிறேன். இருப்பினும் ஒரு தேசிய இன விடுதலைப் போராட்டச் சிந்தனை உள்ளவன் என்கிற முறையில் எழுதுகிற இந்தச் செய்தியை நீங்கள் அவசியம் வெளியிட வேண்டும் என்பது என் விருப்பமாகும்.
முதலில் ஒன்றை நான் தெளிவாகச் சொல்லுகிறேன்.
விடுதலைப் புலிகள் மீது இரசிக மனோபாவத்தோடு-தமிழ்நாட்டிலே நிகழ்த்தப்படாத சாகசங்களை அல்லது தமிழ்நாட்டுத் தமிழன் கண்டிராத-பார்த்திராத-கேட்டிராத சாகசங்களைச் செய்தவர்கள் என்ற காதல் கொண்டு இந்தச் செய்தி எழுதப்படவில்லை.
விடுதலைக்குப் போராடுகிற ஒரு இனம்-அதுவும் எங்களது தொப்புள் கொடி உறவு கொண்ட மக்கள் விடுதலைக் களத்திலே நிற்கிறார்கள் என்ற அடிப்படையிலும்
ஒடுக்குகிற ஒரு தேசிய இனம் எதுவித ஆதரவின்றி அனாதையாக களத்திலே நின்று சதிகளையும் யுத்தங்களையும் சதிராடி வருகிற பிரமிப்பின் பின்புலத்திலுமே இது எழுத வேண்டியவனாக உள்ளேன்.
மிக அண்மைக்காலமாக குறிப்பாக சிறிலங்கா அதிபர் தேர்தல் காலத்துக்கு சிறிது முன்பாக புதினம் இணையத்தளத்தை நான் படிக்க நேர்ந்தது. தொடர்ச்சியாக விடுதலைப் புலிகளின் நிலைப்பாடுகளை இந்த இணைய தளம் ஊடாக என்னால் அறிந்து கொள்ள முடிந்தது.
குறிப்பாக விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினராக உள்ள பாலகுமாரன் அவர்களது அரசியல் அரங்க நிகழ்வுகள், விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனது நீண்ட நேர்காணல்கள், உலக நாடுகளின் பிரதிநிதிகள் தங்களைச் சந்திக்கின்ற போது தருகிற மனுக்கள் ஆகியவற்றை உற்றுநோக்கியபோது உண்மையிலே
பாலகுமாரன் ஒரு நிகழ்விலே சொல்லி இருந்தது போல்-
செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிறகு
ஈராக் மீதான அமெரிக்காவின் பயங்கரவாதத்துக்கு எதிரானப் போருக்குப் பிறகு
உலக விடுதலை இயக்கங்களின் இருப்பு சாத்தியமா என்ற கேள்வி எனக்கும் எழுந்தது உண்டு.
தமிழ்நாட்டில் தமிழ்த் தேசிய இன விடுதலைப் போராட்டம் இன்னும் தலைமறைவு இயக்கங்களாக இலைமறைகாயாகத்தான் இருக்கிறது. ஈழத்தைப் போல் ஒடுக்கிற தேசிய இனம் என்பது இங்கே வெளிப்படையாக இல்லாமல் இராணுவ ஒடுக்குமுறையாக இல்லாமல் 2 ஆயிரம் ஆண்டுகால கருத்து வன்முறை என்கிற ஆயுதத்தால் ஒரு குறைந்த விழுக்காட்டு இனம் எங்களை அடிமைப்படுத்தி இருக்கிறது.
அந்த மூளையைத் தமிழ்நாட்டுத் தமிழர்கள் கழற்றி வைக்க இன்னொரு தந்தை பெரியார்தான் வரவேண்டும்.
இப்படியான அவலச் சூழலோடு- அமெரிக்கா போன்ற நாடுகளின் பயங்கரவாதத்துக்கு எதிரான அணியைக் காட்டி இங்கே இனி தமிழ்த் தேசிய இன விடுதலைப் போராட்டம் சாத்தியமே இல்லை- உலகில் எங்குமே விடுதலைப் போராட்டம் சாத்தியமே இல்லை என்று தமிழ்நாட்டு மிதவாதத் தமிழ்த் தேசியத் தலைவர்கள், இன விடுதலையில் அக்கறை கொண்டு வரும் இளைஞர்களுக்குக் கற்பிதம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் ஒரு விடுதலை இயக்கம் முழுமையான அர்ப்பணிப்போடு இயங்கினால் எந்த ஒரு வல்லரசையும் வென்றெடுக்க முடியும் என்பதை விடுதலைப் புலிகள் தங்களது இராஜதந்திர செயற்பாடுகளின் மூலம் நிரூபித்து உள்ளனர்.
ரணில் விக்கிரமசிங்கவைத்தான் விடுதலைப் புலிகள் ஆதரிப்பார்கள்- ஆதரிக்க வேண்டும்; அவர் வந்தால் பிரச்சனைக்குத் தீர்வு ஏற்பட்டு விடும் என்று தமிழ்நாட்டுத் தமிழர்களும் நம்பிக் கொண்டிருந்த போது உங்கள் புதினம் மூலமாக பாலகுமாரன் அவர்களது கருத்தைப் படிக்கிற போது கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது.
விடுதலைப் புலிகள் என்ன நிலையினை மேற்கொள்கிறார்கள்? என்ற கேள்வி எழுந்தது.
ரணில் தோற்றபோதும் கூட தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு- தமிழ்நாட்டுத் தமிழ்த் தேசிய சக்திகளுக்கு ஏன் விடுதலைப் புலிகள் இப்படிச் செய்துவிட்டார்கள்? என்றுதான் கேள்வி எழுந்தது.
ஆனால் புதினத்தையும் சமீபகாலமாக தமிழ்நாட்டு இதழ்களிலும் வருகின்ற செய்திகளைப் பார்க்கிற போது
ரணிலின் சதித்திட்டத்தை பாலகுமாரன் அனுபவபூவர்மாக முதன் முதலில் அம்பலப்படுத்தினார். அது ஊகமாகவே இருந்திருக்கும்- ரணில் கட்சியினர் இருவர் வாய்திறக்காமல் இருந்திருந்தால்.
ஆனால் ரணிலையும் தமிழர்கள் பொருட்படுத்த வேண்டியதில்லை என்று அனுபவத்தின் வாயிலாக பாலகுமாரன் கூறியதன் உண்மையை ரணில் கட்சியினர் இருவர் ஒப்புக்கொண்டதாக வெளியானது.
அதேபோல் இந்திய-இலங்கை ஒப்பந்த காலத்தில் திருகோணமலையின் மீது ஆதிக்கம் செலுத்துவதற்காகத்தான் இந்தியா தலையிடுகிறது என்பதை பிரபாகரன் அப்போதே தெரிவித்திருந்த செய்தியையும் இதே நேரத்தில் புதினம் வாயிலாகப் படிக்க நேர்ந்தது.
இந்த இரண்டு விடயங்களும் உண்மையில் விடுதலைப் புலிகளின் தொலைநோக்குச் சிந்தனையும் கணிப்பும் அவர்களது கடந்த கால வெற்றிகளின் பின்னணியை தெளிவாகச் சொல்லியது.
தேர்தல் முடிந்தது- மகிந்தா ராஜபக்சே வெற்றி பெற்றார்.
மகிந்தா ராஜபக்சே குறித்து தொடர்ந்து பாலகுமாரன் தெரிவித்திருக்கும் விமர்சனங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிலையில் நிரூபிக்கப்பட்டே வருகின்றன.
நார்வே நாடு தொடர்பாக ராஜபக்சே எடுக்கும் முடிவுகளுக்கு எதிராக இரு சிங்களப் பேரினவாத கட்சிகளும் தொடர்ந்து கருத்துகளைக் கூறி வருகின்றன. இந்த முரண்பாடு எங்கே போய் முடியும்? போகிற போக்கைப் பார்த்தால் இந்த முரண்பாடுகள், பாலகுமாரன் கூறியிருந்ததைப் போல் சிங்களவர்களுக்கு இடையே ஒரு உள்நாட்டு யுத்தத்தை ஏற்படுத்திவிடக் கூடும் என்று தெரிகிறது.
இவைகளை உள்நாட்டு அரசியல் தொடர்பான புலிகளின் அனுபவங்கள் என்று ஒருபக்கம் வைத்துக் கொள்ளலாம்.
'தம்பி பிரபாகரன்' அண்ணன் அவர்கள் பேசிய மாவீரர் நாள் பேச்சு உண்மையில் எங்களுக்கு ஈழ விடுதலைப் போராட்டத்தின் கடந்த கால அவல நிலைகளைச் சொன்னது.
மேலும் பயங்கரவாதம் குறித்து அண்ணன் எழுப்பியிருக்கும் கேள்வி மகிழ்ச்சியளித்தது.
எதிர்காலத்தில் போராடுகிற- இப்போது போராடிக் கொண்டிருக்கிற விடுதலைப் போராட்ட அமைப்புகள் மென்று முழுங்கும் புழுங்கிச் சாகும் ஒரு விடயத்தை ஊரறிய அவர் முழங்கியிருப்பது மட்டுமல்ல..சர்வதேச முகத்தில் அறைந்தார் போல் விடுதலைக்குப் போராடுபவனும் பயங்கரவாதியா என்று கேள்வி எழுப்பி இருக்கிற துணிச்சல் ஆறுதலையும் நம்பிக்கையையும் அளிக்கிறது.
அமெரிக்கப் பூச்சாண்டிகளைக் காட்டி இங்கே தமிழ்நாட்டில் தேசிய இன விடுதலை பேசிய மிதவாதிகள் மூச்சடைக்க முயற்சிக்கும் செயல்களுக்கு செவினி அடி என்று சொல்லலாம் அதை.
மிக ஆழமான கேள்வி அது.
பிரபாகரன் அண்ணனது உரைக்கு விளக்கம் அளித்து ஆண்டன் பாலசிங்கமும் பாலகுமாரனும் தெரிவித்திருந்த கருத்துகள் மேலும் வியப்பூட்டின.
உண்மையைச் சொன்னால், இந்தத் தேர்தல் ஒரு செய்தியை சர்வதேச சமூகத்துக்குச் சொல்லப் போகிறது என்று சொல்லி இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்ட கருத்துகள் புரிபடாமலேயே இருந்தது.
ஆனால் இந்தியத் தலையீடு, நார்வேயின் மீண்டும் வருகை, சீனா தலையிடுமா என்கிற கேள்விகள் அடுத்தடுத்து உங்களது இணையத்தளம் வாயிலாக எழும்பிய போது இந்துமா சமுத்திரத்தினது அரசியலை ஓரளவு அறிந்தவன் என்கிற வகையிலும் சர்வதேச நடப்புகளின் மீது அக்கறை கொண்டவன் என்கிற வகையில் மிரட்சியடைத்தான் முடிந்தது.
நாளைய நகர்வுகளை எப்படித் துல்லியமாக இவர்களால் சொல்ல முடிகிறது?
பாலகுமாரன் கூறியதுபோல் இன்னொன்று நடந்துள்ளதை நான் சுட்டிக்காட்ட எண்ணுகிறேன்.
உலக விடுதலைப் போராட்டங்களை மென்மைப்படுத்தி பேச்சுவார்த்தைக்கு இதுவரை அழைத்து வந்த சர்வதேச சமூகம் இப்போது புதிய அனுபவத்தைப் பெறப் போகிறது. பல்வேறு நாட்டுப் புரட்சிகளைப் போல் உலக அரசியலில் ஒரு அதிசயமாக இது இருக்கும் என்றார்.
ஆம். அப்படித்தான் நடக்கிறது.
இங்கே ஐக்கிய இந்தியக் குடியரசின் தலைமை அமைச்சரைச் சந்தித்த நார்வே தலைமை அமைச்சரின் பேட்டியானது சிங்களவர்களுக்கு நிபந்தனைகளை விதிக்கப் போவதாகச் சொன்னார்கள்.
பாலகுமாரன் முன்பு சொன்னது போல் நார்வே நாட்டுக்கு இது இடியாப்பச் சிக்கல்தான். அவர்கள் புதிய அனுபவம் பெறப் போகிறார்கள் என்பது அவர்களது இந்தியப் பயணத்தின் மூலம் உணர்ந்து கொள்ள முடியும்.
இதுவரை இந்தியாவை 'பஞ்சாயத்துக்கு' அழைக்காமல் இருந்த நார்வேக்காரர்கள் இப்போது ஒரு பிராந்திய பெரிய அண்ணனையும் அனுசரித்துப் போக வேண்டிய நிலையில் உள்ளது.
இந்தோனேசியாவின் ஆச்சே விடுதலைப் போராட்டத்திலும் முன்னாள் பாலத்தீன பேச்சுவார்த்தைகளிலும் சட்டையை தூக்கிவிட்டிக் கொண்டு ஏன் ஈழப் பிரச்சனையிலும் ஒரு நிலைவரை நெஞ்சு நிமிர்த்தி நடந்த நோர்வே,
இப்போது
உங்கள் மொழிகளிலேயே சொல்வதாக இருந்தால்
அனுசரணையாளராக உள்ள நோர்வேக்கும் சிறிலங்காவுக்கும் இந்தியா என்கிற ஒரு அனுசரணையாளர் தேவைப்படுகிற விசித்திரம் இப்போது நடந்து கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது.
தமிழ்நாட்டில் இதுநாள் வரையில் ஈழப் புலிகளை கடுமையாக விமர்சனம் செய்து வந்த ஏடுகள் அனைத்தும் ஈழத்திலே யுத்தம் என்கிற தலைப்புச் செய்தியைப் போட்டு பிரபாகரனின் காலஅவகாச தந்திரத்தை பாராட்டுகிறார்கள்.
விடுதலைப் புலிகளின் இராஜதந்திரத்தின் வெற்றியாகக் கூட இதை நான் நினைக்கிறேன்.
தமிழ்நாட்டு ஏடுகள் எழுதாத அவதூறுகளும் விமர்சனங்களும் இல்லை. இப்போதும் எழுதிக் கொண்டு இருக்கின்றன. ஈழத்திலே பிரபாகரன் உரை ஆற்றிவிட்டார். யுத்தம் வரப்போவதால் இங்கே இருந்து டீசல் போன்றவற்றை அவர்கள் வாங்கிச் சேமிக்கிறார்கள். அதனால் கடலோரப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு வருவதாக இப்போதும் எழுதுகிறார்கள்.
ஆனால் அந்த விமர்சனங்களுக்கும் கூட தங்களது செயலினால் பதிலடி கொடுத்து இங்கேயும் தங்களது இராஜதந்திரத்தை ஈழத்து பேச்சுகளின் மூலமே வென்றுகாட்டி இருப்பது குறித்து எப்படி மகிழ்ச்சியடையாமல் இருக்க முடியும்?
நான் படித்த வரலாற்றில் குர்து இன விடுதலைத் தலைவர் ஒகாலன் சிறைக்கொட்டடியில் அடைக்கப்பட்டு அந்த விடுதலைப் போராட்டத்தின் கதி கேள்விக்குள்ளாகிவிட்டது. ஒகாலன் தெளிந்த மார்க்சிய-லெனிய சித்தாந்தவாதியாக உருவாகி, காலச் சூழலுக்கு ஏற்ப மத நம்பிக்கையுள்ளோரையும் பகுத்தறிவாளர்களையும் ஒருங்கிணைத்து ஒட்டுமொத்த குர்து இன மக்கள் விடுதலைப் போராட்டமாக அவர் தனது தேசிய விடுதலைப் போராட்டத்தை நடத்தினார். ஆனால் அவர் வெளிநாடு ஒன்றில் கைதான பிறகு அந்த விடுதலை இயக்கத்தின் நிலை முன்னைப்போல் வீச்சோடும் வீரியத்தோடும் இல்லை என்றும் அமெரிக்காவின் அணிசேர்க்கையிலே இணைந்துவிட்டது என்றும் தெரிகிறது.
அதேபோல் ஆச்சே தேசிய இன விடுதலைப் போராட்டம் ஒரு குறைந்தபட்ச தீர்வுத் திட்டத்துடன் அடங்கிப் போய்விட்டதாகத் தெரிகிறது.
இந்தியாவின் நாகாலாந்து தேசிய இனவிடுதலைப் போராட்டமும் பேச்சுவார்த்தை என்கிற அபாயச் சுழலில் சிக்கிக் கொண்டு தத்தளிக்கிறது. இந்தியாவின் சீக்கியர் விடுதலைப் போராட்டம் சிதைக்கப்பட்டுவிட்டது. காசுமீர விடுதலைப் போராட்டம் திசைமாறிப் போய்விட்டது.
இந்த விடுதலை இயக்கங்களுக்கு இணையான காலத்திலே உருவான விடுதலை இயக்கமான விடுதலைப் புலிகளின் இத்தகைய தொலைநோக்குச் சிந்தனை அந்த இயக்கங்களுக்கு இருந்திருந்தால் ஒடுக்கப்பட்டிருக்கிற தேசிய இனங்களது உரிமைக் குரல் குரல்வளையோடு நசுக்கப்பட்டிருக்காது.
உலக வரலாற்றில் ருசியப் புரட்சியானது தேசிய இனங்களுக்கு ஒரு முன்னோடி விடுதலை இயக்கமாகி நூற்றாண்டுகாலம் நெருங்குகிறது.
அடுத்த சகாப்தமாக இன்றைய தகவல் தொழில்நுட்ப உலகத்தில் உலகம் ஒரு கிராமமாக சுருங்கிப் போய் அமெரிக்கா என்கிற வல்லரசின் பின்னால் ஒட்டுமொத்த நாடுகளும் அணிதிரள வேண்டிய காலகட்டத்தில் இன்னமும் விடுதலை பெறாத அத்தனை தேசிய இனங்களும் புத்துயிர் பெறவும் குரல்வளையினை நெறித்தவர்களது நெஞ்சில் ஏறி விடுதலை வானில் பறப்பதற்குமான ஒரு மிகவும் சக்திவாய்ந்த வழிகாட்டியாக, தத்தளிக்கிற இனங்களினது விடுதலைக்கான திசைகாட்டியாக விடுதலைப் புலிகளின் அரசியல் நகர்வுகள் உத்வேகத்தை அளிக்கின்றன என்றால் அது மிகையல்ல- இரசிக மனோபாவம் அல்ல. கண்முன் நிகழ்கின்றவைகளின் எதேச்சையான உண்மை.
Puthinam
|
|
|
| போர் தொடங்குமா? அப்படியாயின் யாரால் |
|
Posted by: malaravan - 12-12-2005, 08:52 AM - Forum: தமிழீழம்
- Replies (3)
|
 |
வணக்கம் வாசகர்களே!
இப்பகுதியை அரசியல் பகுதியில் தான் எழுத முற்பட்டேன். ஆனால் அங்கே விசேட உறுப்பினர்கள் மட்டும்தான் எழுத முடியுமாம். ஆகவே இங்கே எழுதுகின்றேன். தொடர்ந்து இருக்குமோ தெரியாது. இருப்பினும் ஒரு கேள்வி கேட்பேன். ஆனால் மூன்று பகுதிகளான கேள்வி. விளக்கங்களை எழுதுங்கள் பார்ப்போம். அக்கேள்வியானது. இலங்கையில் 4ம் கட்ட போர் தொடங்குமா? என்பதே. அப்படி போர் தொடருமானால் அது அரசாலா?, அன்றி புலிகளாலா?, அல்லது போரே நடைபெறாதா? உங்கள் விரிவான பதிலை எதிர்பார்க்கின்றோம். பரிசில்கள் வழங்கப்படமாட்டாது. அரசியல் அறிவை மட்டும் பார்ப்போம்.
நன்றி
மலரவன்
www.tamilkural.com
|
|
|
| சொர்க்கவாசல் கதவு |
|
Posted by: mohandoss - 12-12-2005, 07:35 AM - Forum: கதைகள்/நாடகங்கள்
- Replies (19)
|
 |
"திருச்சியில குஷ்புக்கு கோயில் கட்டுனாங்கல்ல, அதை அறநிலையத்துறையில சேர்க்கணும்னு பெரிய போராட்டம் நடந்தது தெரியுமா?"
வீட்டுக்கு வந்திருந்த நண்பரிடம் சின்நைனா கேட்டுக்கொண்டிருந்தார். எதையோ பிடிக்க வீசிய தூண்டிலாய் வார்த்தைகள் வந்து விழுந்தது. இதே வேறொரு சமயமாயிருந்திருந்தால் மறுத்துக் கூட பேசியிருப்பேன். ஆனால் அது சரியான நேரமும் கிடையாது, சரியான இடமும் கிடையாது.
இருவருக்கும் போதை தலைக்கேறத் தொடங்கிய நேரம் அது. வாழ்க்கையிலே போதை என்னை போதை எப்போதுமே விடாமல் துரத்திக் கொண்டேயிருந்தது. பேச்சின் பாதையை மாற்ற விரும்பிய சித்தி.
"இவன் ஒரு நாளைக்கு இரண்டு தடவைக்கு மேல யூரினே போறதில்லை."
"வேறென்ன ஹீரோன்னு நினைப்பு, அடிக்கடி பாத்ரூம் போனால் அசிங்கம்னு நினைச்சிருப்பான்." சின்நைனா.
"ஒரு நாளைக்கு கிளின்டன் எத்தனை தடவை பாத்ரூம் போனான், எந்த பாத்ரூமில போனான்னு கேட்டா தெரியும், ஆனா சொந்தமா பாத்ரூம் போகத் தெரியாதா." அவர் நண்பர்.
குடிச்சிட்டா எது வேணா பேசலாம், என்ன வேணா செய்யலாம் அதை காலையில் கூட இருந்தவங்க மறந்திறணும். இந்த ஒருமைப்பாடு இல்லாத குடிகாரனே கிடையாது நாட்டில்.
அப்பா, ஆறுமணிக்கெல்லாம் குடிச்சிட்டு போதையிறங்கும் வரைக்கும் அம்மாவை அடிப்பார். கண்ணுமண்ணு தெரியாம அடிச்சு உதடு, மூஞ்செல்லாம் கிழிஞ்சி வரும் எங்கம்மாவை என்னால பார்க்ககூட முடியாது. ஆனால் காலையில் முழுசா மாறியிருப்பார். அவரா இவர், நம்பவே முடியாது.
எங்க குடும்பத்தின் பெரிய சோதனை இதுதான். இராத்திரியின் கொடுமைக்காக அற்புதமான பகலை இழக்க முடியாது. அதற்காக இரவின் இம்சைகளையும் பொறுத்துக்கொள்ள முடியாது. இதற்கெல்லாம் தற்கொலைங்கறது ஒரு முடிவு இல்லைன்னு தீர்மானிச்ச எங்க அம்மாவைத்தான் பாராட்டணும். தற்கொலை பண்ணிக்கொண்டவங்களோட சோகத்தை விட உயிரோடு வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் சோகம் குறைவான்னா கேட்டா நிச்சயமா கிடையாது.
தற்கொலைங்கிறது கஷ்டத்தப்பொறுத்ததல்ல, மனதைப் பொறுத்தது.
முப்பது வருஷமா தன்னை தவிர வேறொருவனை நினைத்துக்கூட பார்க்காத தன் மனைவியை நம்பாமல், இரவிலே தன் குழந்தைகளோடு அவளையும் அறைக்குள் பூட்டி வைக்கும் அப்பா. அவ்வளவு நேரம் எங்கப்பாகிட்ட பேச்சும் அடியும் வாங்கிய அம்மா, அப்புறம் எங்கக்காகிட்ட திட்டுவாங்கும். அவசரத்துக்கு பாத்ரூம் போகமுடியாத ஆத்திரம் அக்காவுக்கு. என்னென்ன கேள்விகள்
என்னென்ன பேச்சுகள். அப்பப்பா.
இத்தனையும் பார்த்துவிட்டு மத்தியானத்திற்கு பிறகு தண்ணீர் குடிப்பதையே நிறுத்திய நான் கூட சிலசமயத்தில் தொந்தரவு பண்ணியிருக்கிறேன், எங்க குடிச்சேன்னே தெரியாத தண்ணீரால். கணவனை எழுப்ப பயந்து ஏதேதோ வழி ஏற்பாடு செய்யும் எங்கம்மா. சிலசமயம் ஜன்னலுக்கு மேலேர்ந்து சிலசமயம் பீரோவுக்கு பின்னால, இன்னும் சிலசமயம் பெட்ஷீட்டுல இப்படியெல்லாம் ஆத்திரத்தை அடக்கியிருக்கிறோம்.
எங்கப்பாவுக்கு ரத்தம் வேகமா ஓடுன நாட்கள் அவை. இரத்தம் சுண்டத் தொடங்கிய பிறகு கொஞ்ச நாளைக்கு முன்பு வரை பயம் விட்டப் போய் கதவைத் தட்டியிருக்கிறோம் அவசரத்திற்கு.
இளங்கலை முடித்து வேலை பார்க்கும் நான், இன்றும் பூட்டப்பட்டிருக்கும் இரவின் கதவு. அம்மாவிற்காக அக்காவிற்காக எதையும் கேட்கமுடியாத கோழையாய் நான் இப்போது டெல்லயில். என்னுடைய கோபங்களை இப்படித்தான் வெளிப்படுத்த முடிகிறது.
கோழையென்று சொல்லிவிட்டேன தவிர இன்றும் கேட்டுவிடமுடியும் என்னால். ஆனால் இத்தனை நாள் அம்மா பட்ட கஷ்டத்துக்கெல்லாம் அர்த்தமே இல்லாமல் போய்விடும். அம்மா வெளியில் வந்தால் பிழைத்துக் கொள்வாள். நானும் எங்கக்காவும் கூட வாழ்கையில் உயர்ந்த நிலைக்கு வந்துவிடுவோம்.
ஏனென்றால் நாங்கள் வளர்ந்த நிலை அப்படி. ஆனால் எங்கப்பாவை நினைத்தால் தான் பயமாயிருக்கிறது. எங்கம்மா இல்லாமல் ஒருநாள் கூட வாழமுடியாதவர்.
இது தெரியாதவரும் இல்லை எங்க அப்பா. ஆனால் அந்த போதை அதை மறக்க வைக்கும். மனிதனை கற்பனை செய்துக்கூட பார்க்க முடியாதவனாய் மாற்றிவிடும். இன்று, திறந்தே இருக்கும் கதவு, வந்து கொண்டேயிருக்கும் தண்ணீர், அழகான வேலைப்பாட்டுடன் பாத்ரூம் இத்தனை இருந்தாலும் வந்துதான் தொலைக்கமாட்டேங்குது இங்கே.
ஸ்ரீரங்கத்தில், திருச்சியிலென மாறி, மாறி நான் இருந்த பொழுது சொர்க்கவாசல் திறக்கும்போது ஸ்ரீரங்கம் கோயிலுக்கு போவது உண்டு. கடவுள் நம்பிக்கையில்லாத நான் சொர்க்கவாசல் திறக்கும் நாளில் மட்டும் கோவிலுக்கு போவது ஏதோவொரு நம்பிக்கையில் எங்கள் வீட்டு கதவும் திறக்குமென்றுதான்.
"டேய் பைத்தியமாடா நீ?"
சமையல்கட்டில் இதுவரை சத்தம் போட்டுக்கொண்டிருந்த சித்தி, நேராய் இப்பொழுது என்னிடமேகேட்டுவிட்டாள், நானும் யோசிக்கிறேன், பைத்தியமாகத்தான் ஆகிவிட்டேனோ. காலம் என் வாழ்வில் போட்டுச்சென்ற
சில முடிச்சுக்களை அவிழ்க்க முயன்ற நான் சிலசமயம் முடிச்சுகளில் மூழ்கி போய்விடுகிறேன்.இத்தனைக்கும் என்னைத் தெரியாதவளல்ல சித்தி. ஆனால் பலசமயம் யாராவது வந்து கலைத்தாலேயொழிய, நினைவு திரும்பாதவனாகையால், சித்தி இந்தமுறை திசைதிருப்ப முயன்றாள்.
"நீ திருந்தவே மாட்டியா? இப்ப எதைப்பத்தி யோசனை?"
நான் அவள் கேள்விக்கு பதில் தராமல் அங்கேயிருந்த ஜன்னலையே பார்த்துக்கொண்டிருந்தேன்.
நீண்ட வீதி, அகலமான, அழகான சாலைகளும் சாலையோரங்களில் மரங்களும் கொண்ட வீடு, இரவில் எட்டு மணிக்கெல்லாம் உறங்கத்தொடங்கிவிடும் மக்கள், இன்னும் பசுமையாக ஞாபகம் இருக்கிறது அந்த நாட்கள்.
அம்மா விளக்குகள் அனைத்தையும் அணைத்துவிட்டு, முன்பக்கம் உள்ள ஹாலின் ஜன்னலருகில் நின்று கொண்டிருக்கும். எனக்கும் அக்காவுக்கும் முன்பே தோசை கொடுத்து நாங்கள் தூங்கத்தொடங்கியிருப்போம். நான் தூங்காமல் அம்மாவையே பார்த்துக் கொண்டிருப்பேன். அன்று அம்மாவின் கண்களில் தெரிந்தது, கோபமா, ஏக்கமா, பரிதாபமா, விரக்தியா, பயமா இன்னும் புரியவில்லை எனக்கு. சில சமயங்களில் நான் கண்விழித்திருப்பதைப் பார்த்து, அம்மாவிடம் செருப்படி வாங்கியிருக்கிறேன். ஒருவேளை அம்மா நினைத்திருக்கலாம் அடித்தால் அழுகையுடனே தூங்கிவிடுவேனென்று, அதுதான் நடந்திருக்கும் பல நாட்களில்.
ஒன்பது பத்து மணிக்கு, அப்பா ஊரையே அளந்து கொண்டுவருவார். வந்ததில் இருந்தே, அம்மாவிற்கு அடியும் இடியும் உதையும், எதுகை மோனைக்காக எழுதியதல்ல இது. அம்மாவின் தலையை பிடித்து அப்பா சுவற்றில் இடிக்கும் அந்த சப்தம் இன்னும் என் காதுகளில் கேட்டுக்கொண்டிருக்கிறது. உள்புற கதவின் அருகில் நின்று நான் அழுதுகொண்டேயிருப்பேன், தூக்கத்திலிருந்து எப்பொழுது எழுந்தேன் என்று தெரியாமல். அதுபோலவே தூங்கியும் போவேன்.
காலையில் அம்மா காப்பி போட்டு கொண்டுவந்து தவளையை தரையில் வைக்கும் சப்தம் கேட்டு எழுந்து வருவேன். அம்மாவும் அப்பாவும் சுவாரசியமாக தினமலர் படித்துக்கொண்டு உரையாடிக்கொண்டிருப்பார்கள். மிகச்சில நாட்களிலேதான் இரவின் தொடர்ச்சியாக பகல் எனக்கு இருந்திருக்கிறது. பல சமயங்களில் இரவில் ஒரு வாழ்கை முடிந்து பகலில் ஒரு புது வாழ்க்கை. ஆனால் நினைத்துப்பார்க்கிறேன், அந்த சமயங்களில் என் பக்கத்தில் படுத்திருந்த அக்கா என்ன செய்து கொண்டிருந்தாள் என்று. ஞாபகம்வரமறுக்கிறது.
சில நாட்கள் ஆட்டோ வரும் இரவில், எங்கேயோ விழுந்து கிடந்த அப்பாவை தூக்கிக் கொண்டு, சிலசமயம் ஆள்வரும் உன்புருஷன் இங்கே விழுந்து கிடக்கிறார்னு தகவல் கொண்டு. அம்மா அந்த பத்துமணி
க்கு மேல் போய் ஆட்களை தேடிப்பிடிச்சு அப்பாவை வீட்டுக்கு ஆட்டோவில் எடுத்துக்கிட்டு வரும். சாப்பிடாமல் படுத்தா குடல் எரிந்திடும்னு சாதத்தை கறைத்து மயங்கிக்கிடக்கிற அப்பாவுக்கு ஊட்டிவிடும்.
இந்தக் காலம் எல்லாம் மாறியது, அப்பா வீட்டிற்குள் தண்ணியடிக்கத் தொடங்கியிருந்தார். இதனால் அம்மாவிற்கு ஒரு இரண்டு மூன்று மணிநேரம் கூட அடி விழுந்தாலும் நான் அம்மாவை அந்த ஜன்னலருகில் பார்த்ததில்லை. அய்யோ அந்த முகம், அந்த அமைதியான சாலை, இரவு நேரம், மறக்கவே முடியவில்லை. இன்னமும் ஜன்னல்களைப் பார்த்தால் என் அடிவயிற்றை பிடிக்கும் ஒரு பயம்
வருகிறது. பணம் நிறைய சம்பாதித்துவிட்டேன் ஆனாலும் என் வாழ்க்கையின் ஆரம்பக் காலத்தில் நடந்த பல நிகழ்ச்சிகளின் தாக்கம் இன்னும் என் மனதிலிருந்து நீங்கவேயில்லை. வீட்டின் கதவும் ஜன்னலும் உண்டாக்கும் நினைவுகள் இல்லை இவைகளெல்லாம் ஆனால் அந்த நினைவுகளை மீண்டும் உயிர்ப்பெற வைக்கும் சாமர்த்தியம் அவைகளுக்கு இருந்தது.
|
|
|
| அன்பான வேண்டுகோள் |
|
Posted by: தூயவன் - 12-12-2005, 06:32 AM - Forum: அரசியல் / பொருளாதாரம்
- Replies (4)
|
 |
இப்போது யாழ்பாணத்தில் கெல்மெட் போட்டுக் கொண்டு மோட்டார் வண்டி ஓடுவதை தடுப்பதற்கான முயற்சியை மேற்கொண்டு வருவதாக அறியக்கிடக்கின்றது. கெல்மெட் போட்ட நபர்களே தாக்குதல் நடத்துவதால் அப்படி ஒரு ஏற்பாடு என்றும் சொல்லப்படுகின்றது.
இதில் ஒரு விடயம் என்னவென்றால் கெல்மெட் என்பதே விபத்தின் போது பாதுகாப்பு வேண்டித் தான் அணியப்படுகின்றது.
இராணுவத்திற்கான பாதுகாப்பு தேவை என்பதற்காக யாழ்பாணத்தில் மட்டும் தடை செய்யவேண்டி இருப்பது ஏன்? கொழும்பில் கூட இராணுவ புலனாய்வு அதிகாரி முத்தலிப் கொல்லப்பட காரணமானவர் கூட கெல்மெட் அணிந்த நபர் தான். அதற்காக கொழும்பில் தடையா செய்து விட்டனர்.?
கெல்மெட் அணிந்து ஓட வேண்டும் என்பது சட்டமாக இருக்கின்றது என நினைக்கின்றேன். எனவே அவ்வாறான தடையை யாழ்பாணத்தில் மட்டும் கொண்டு வந்தால், அங்குள்ள சட்டம் சார்பான ஆவலர்கள் அதற்கெதிராக வழக்கு தொடுக்குமாறு வேண்டுகின்றோம்.
|
|
|
| 'விழிபிதுங்கும் உலக விடுதலை இயக்கங்களுக்கு திசை காட்டும் கரு |
|
Posted by: மேகநாதன் - 12-12-2005, 05:25 AM - Forum: அரசியல் / பொருளாதாரம்
- No Replies
|
 |
<b>'விழிபிதுங்கும் உலக விடுதலை இயக்கங்களுக்கு திசை காட்டும் கருவியாக விடுதலைப் புலிகள்' </b>- <i><b>தமிழ்நாட்டுத் தமிழனின் கடிதம்</b> </i>[திங்கட்கிழமை, 12 டிசெம்பர் 2005, 05:38 ஈழம்] [து.சங்கீத்]
உங்களது இணையத்தள வரையறைகளின் படி என் இந்தச் செய்தியை நீங்கள் 'புதினம்' இணையத்தளத்தில் வெளியிடுவதற்கான சாத்தியங்கள் குறைவாக இருக்கும் என்று கருதுகிறேன். இருப்பினும் ஒரு தேசிய இன விடுதலைப் போராட்டச் சிந்தனை உள்ளவன் என்கிற முறையில் எழுதுகிற இந்தச் செய்தியை நீங்கள் அவசியம் வெளியிட வேண்டும் என்பது என் விருப்பமாகும்.
முதலில் ஒன்றை நான் தெளிவாகச் சொல்லுகிறேன்.
விடுதலைப் புலிகள் மீது இரசிக மனோபாவத்தோடு-தமிழ்நாட்டிலே நிகழ்த்தப்படாத சாகசங்களை அல்லது தமிழ்நாட்டுத் தமிழன் கண்டிராத-பார்த்திராத-கேட்டிராத சாகசங்களைச் செய்தவர்கள் என்ற காதல் கொண்டு இந்தச் செய்தி எழுதப்படவில்லை.
விடுதலைக்குப் போராடுகிற ஒரு இனம்-அதுவும் எங்களது தொப்புள் கொடி உறவு கொண்ட மக்கள் விடுதலைக் களத்திலே நிற்கிறார்கள் என்ற அடிப்படையிலும்
ஒடுக்குகிற ஒரு தேசிய இனம் எதுவித ஆதரவின்றி அனாதையாக களத்திலே நின்று சதிகளையும் யுத்தங்களையும் சதிராடி வருகிற பிரமிப்பின் பின்புலத்திலுமே இது எழுத வேண்டியவனாக உள்ளேன்.
மிக அண்மைக்காலமாக குறிப்பாக சிறிலங்கா அதிபர் தேர்தல் காலத்துக்கு சிறிது முன்பாக புதினம் இணையத்தளத்தை நான் படிக்க நேர்ந்தது. தொடர்ச்சியாக விடுதலைப் புலிகளின் நிலைப்பாடுகளை இந்த இணைய தளம் ஊடாக என்னால் அறிந்து கொள்ள முடிந்தது.
குறிப்பாக விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினராக உள்ள பாலகுமாரன் அவர்களது அரசியல் அரங்க நிகழ்வுகள், விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனது நீண்ட நேர்காணல்கள், உலக நாடுகளின் பிரதிநிதிகள் தங்களைச் சந்திக்கின்ற போது தருகிற மனுக்கள் ஆகியவற்றை உற்றுநோக்கியபோது உண்மையிலே
பாலகுமாரன் ஒரு நிகழ்விலே சொல்லி இருந்தது போல்-
செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிறகு
ஈராக் மீதான அமெரிக்காவின் பயங்கரவாதத்துக்கு எதிரானப் போருக்குப் பிறகு
உலக விடுதலை இயக்கங்களின் இருப்பு சாத்தியமா என்ற கேள்வி எனக்கும் எழுந்தது உண்டு.
தமிழ்நாட்டில் தமிழ்த் தேசிய இன விடுதலைப் போராட்டம் இன்னும் தலைமறைவு இயக்கங்களாக இலைமறைகாயாகத்தான் இருக்கிறது. ஈழத்தைப் போல் ஒடுக்கிற தேசிய இனம் என்பது இங்கே வெளிப்படையாக இல்லாமல் இராணுவ ஒடுக்குமுறையாக இல்லாமல் 2 ஆயிரம் ஆண்டுகால கருத்து வன்முறை என்கிற ஆயுதத்தால் ஒரு குறைந்த விழுக்காட்டு இனம் எங்களை அடிமைப்படுத்தி இருக்கிறது.
அந்த மூளையைத் தமிழ்நாட்டுத் தமிழர்கள் கழற்றி வைக்க இன்னொரு தந்தை பெரியார்தான் வரவேண்டும்.
இப்படியான அவலச் சூழலோடு- அமெரிக்கா போன்ற நாடுகளின் பயங்கரவாதத்துக்கு எதிரான அணியைக் காட்டி இங்கே இனி தமிழ்த் தேசிய இன விடுதலைப் போராட்டம் சாத்தியமே இல்லை- உலகில் எங்குமே விடுதலைப் போராட்டம் சாத்தியமே இல்லை என்று தமிழ்நாட்டு மிதவாதத் தமிழ்த் தேசியத் தலைவர்கள், இன விடுதலையில் அக்கறை கொண்டு வரும் இளைஞர்களுக்குக் கற்பிதம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் ஒரு விடுதலை இயக்கம் முழுமையான அர்ப்பணிப்போடு இயங்கினால் எந்த ஒரு வல்லரசையும் வென்றெடுக்க முடியும் என்பதை விடுதலைப் புலிகள் தங்களது இராஜதந்திர செயற்பாடுகளின் மூலம் நிரூபித்து உள்ளனர்.
ரணில் விக்கிரமசிங்கவைத்தான் விடுதலைப் புலிகள் ஆதரிப்பார்கள்- ஆதரிக்க வேண்டும்; அவர் வந்தால் பிரச்சனைக்குத் தீர்வு ஏற்பட்டு விடும் என்று தமிழ்நாட்டுத் தமிழர்களும் நம்பிக் கொண்டிருந்த போது உங்கள் புதினம் மூலமாக பாலகுமாரன் அவர்களது கருத்தைப் படிக்கிற போது கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது.
விடுதலைப் புலிகள் என்ன நிலையினை மேற்கொள்கிறார்கள்? என்ற கேள்வி எழுந்தது.
ரணில் தோற்றபோதும் கூட தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு- தமிழ்நாட்டுத் தமிழ்த் தேசிய சக்திகளுக்கு ஏன் விடுதலைப் புலிகள் இப்படிச் செய்துவிட்டார்கள்? என்றுதான் கேள்வி எழுந்தது.
ஆனால் புதினத்தையும் சமீபகாலமாக தமிழ்நாட்டு இதழ்களிலும் வருகின்ற செய்திகளைப் பார்க்கிற போது
ரணிலின் சதித்திட்டத்தை பாலகுமாரன் அனுபவபூவர்மாக முதன் முதலில் அம்பலப்படுத்தினார். அது ஊகமாகவே இருந்திருக்கும்- ரணில் கட்சியினர் இருவர் வாய்திறக்காமல் இருந்திருந்தால்.
ஆனால் ரணிலையும் தமிழர்கள் பொருட்படுத்த வேண்டியதில்லை என்று அனுபவத்தின் வாயிலாக பாலகுமாரன் கூறியதன் உண்மையை ரணில் கட்சியினர் இருவர் ஒப்புக்கொண்டதாக வெளியானது.
அதேபோல் இந்திய-இலங்கை ஒப்பந்த காலத்தில் திருகோணமலையின் மீது ஆதிக்கம் செலுத்துவதற்காகத்தான் இந்தியா தலையிடுகிறது என்பதை பிரபாகரன் அப்போதே தெரிவித்திருந்த செய்தியையும் இதே நேரத்தில் புதினம் வாயிலாகப் படிக்க நேர்ந்தது.
இந்த இரண்டு விடயங்களும் உண்மையில் விடுதலைப் புலிகளின் தொலைநோக்குச் சிந்தனையும் கணிப்பும் அவர்களது கடந்த கால வெற்றிகளின் பின்னணியை தெளிவாகச் சொல்லியது.
தேர்தல் முடிந்தது- மகிந்தா ராஜபக்சே வெற்றி பெற்றார்.
மகிந்தா ராஜபக்சே குறித்து தொடர்ந்து பாலகுமாரன் தெரிவித்திருக்கும் விமர்சனங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிலையில் நிரூபிக்கப்பட்டே வருகின்றன.
நார்வே நாடு தொடர்பாக ராஜபக்சே எடுக்கும் முடிவுகளுக்கு எதிராக இரு சிங்களப் பேரினவாத கட்சிகளும் தொடர்ந்து கருத்துகளைக் கூறி வருகின்றன. இந்த முரண்பாடு எங்கே போய் முடியும்? போகிற போக்கைப் பார்த்தால் இந்த முரண்பாடுகள், பாலகுமாரன் கூறியிருந்ததைப் போல் சிங்களவர்களுக்கு இடையே ஒரு உள்நாட்டு யுத்தத்தை ஏற்படுத்திவிடக் கூடும் என்று தெரிகிறது.
இவைகளை உள்நாட்டு அரசியல் தொடர்பான புலிகளின் அனுபவங்கள் என்று ஒருபக்கம் வைத்துக் கொள்ளலாம்.
'தம்பி பிரபாகரன்' அண்ணன் அவர்கள் பேசிய மாவீரர் நாள் பேச்சு உண்மையில் எங்களுக்கு ஈழ விடுதலைப் போராட்டத்தின் கடந்த கால அவல நிலைகளைச் சொன்னது.
மேலும் பயங்கரவாதம் குறித்து அண்ணன் எழுப்பியிருக்கும் கேள்வி மகிழ்ச்சியளித்தது.
எதிர்காலத்தில் போராடுகிற- இப்போது போராடிக் கொண்டிருக்கிற விடுதலைப் போராட்ட அமைப்புகள் மென்று முழுங்கும் புழுங்கிச் சாகும் ஒரு விடயத்தை ஊரறிய அவர் முழங்கியிருப்பது மட்டுமல்ல..சர்வதேச முகத்தில் அறைந்தார் போல் விடுதலைக்குப் போராடுபவனும் பயங்கரவாதியா என்று கேள்வி எழுப்பி இருக்கிற துணிச்சல் ஆறுதலையும் நம்பிக்கையையும் அளிக்கிறது.
அமெரிக்கப் பூச்சாண்டிகளைக் காட்டி இங்கே தமிழ்நாட்டில் தேசிய இன விடுதலை பேசிய மிதவாதிகள் மூச்சடைக்க முயற்சிக்கும் செயல்களுக்கு செவினி அடி என்று சொல்லலாம் அதை.
மிக ஆழமான கேள்வி அது.
பிரபாகரன் அண்ணனது உரைக்கு விளக்கம் அளித்து ஆண்டன் பாலசிங்கமும் பாலகுமாரனும் தெரிவித்திருந்த கருத்துகள் மேலும் வியப்பூட்டின.
உண்மையைச் சொன்னால், இந்தத் தேர்தல் ஒரு செய்தியை சர்வதேச சமூகத்துக்குச் சொல்லப் போகிறது என்று சொல்லி இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்ட கருத்துகள் புரிபடாமலேயே இருந்தது.
ஆனால் இந்தியத் தலையீடு, நார்வேயின் மீண்டும் வருகை, சீனா தலையிடுமா என்கிற கேள்விகள் அடுத்தடுத்து உங்களது இணையத்தளம் வாயிலாக எழும்பிய போது இந்துமா சமுத்திரத்தினது அரசியலை ஓரளவு அறிந்தவன் என்கிற வகையிலும் சர்வதேச நடப்புகளின் மீது அக்கறை கொண்டவன் என்கிற வகையில் மிரட்சியடைத்தான் முடிந்தது.
நாளைய நகர்வுகளை எப்படித் துல்லியமாக இவர்களால் சொல்ல முடிகிறது?
பாலகுமாரன் கூறியதுபோல் இன்னொன்று நடந்துள்ளதை நான் சுட்டிக்காட்ட எண்ணுகிறேன்.
உலக விடுதலைப் போராட்டங்களை மென்மைப்படுத்தி பேச்சுவார்த்தைக்கு இதுவரை அழைத்து வந்த சர்வதேச சமூகம் இப்போது புதிய அனுபவத்தைப் பெறப் போகிறது. பல்வேறு நாட்டுப் புரட்சிகளைப் போல் உலக அரசியலில் ஒரு அதிசயமாக இது இருக்கும் என்றார்.
ஆம். அப்படித்தான் நடக்கிறது.
இங்கே ஐக்கிய இந்தியக் குடியரசின் தலைமை அமைச்சரைச் சந்தித்த நார்வே தலைமை அமைச்சரின் பேட்டியானது சிங்களவர்களுக்கு நிபந்தனைகளை விதிக்கப் போவதாகச் சொன்னார்கள்.
பாலகுமாரன் முன்பு சொன்னது போல் நார்வே நாட்டுக்கு இது இடியாப்பச் சிக்கல்தான். அவர்கள் புதிய அனுபவம் பெறப் போகிறார்கள் என்பது அவர்களது இந்தியப் பயணத்தின் மூலம் உணர்ந்து கொள்ள முடியும்.
இதுவரை இந்தியாவை 'பஞ்சாயத்துக்கு' அழைக்காமல் இருந்த நார்வேக்காரர்கள் இப்போது ஒரு பிராந்திய பெரிய அண்ணனையும் அனுசரித்துப் போக வேண்டிய நிலையில் உள்ளது.
இந்தோனேசியாவின் ஆச்சே விடுதலைப் போராட்டத்திலும் முன்னாள் பாலத்தீன பேச்சுவார்த்தைகளிலும் சட்டையை தூக்கிவிட்டிக் கொண்டு ஏன் ஈழப் பிரச்சனையிலும் ஒரு நிலைவரை நெஞ்சு நிமிர்த்தி நடந்த நோர்வே,
இப்போது
உங்கள் மொழிகளிலேயே சொல்வதாக இருந்தால்
அனுசரணையாளராக உள்ள நோர்வேக்கும் சிறிலங்காவுக்கும் இந்தியா என்கிற ஒரு அனுசரணையாளர் தேவைப்படுகிற விசித்திரம் இப்போது நடந்து கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது.
தமிழ்நாட்டில் இதுநாள் வரையில் ஈழப் புலிகளை கடுமையாக விமர்சனம் செய்து வந்த ஏடுகள் அனைத்தும் ஈழத்திலே யுத்தம் என்கிற தலைப்புச் செய்தியைப் போட்டு பிரபாகரனின் காலஅவகாச தந்திரத்தை பாராட்டுகிறார்கள்.
விடுதலைப் புலிகளின் இராஜதந்திரத்தின் வெற்றியாகக் கூட இதை நான் நினைக்கிறேன்.
தமிழ்நாட்டு ஏடுகள் எழுதாத அவதூறுகளும் விமர்சனங்களும் இல்லை. இப்போதும் எழுதிக் கொண்டு இருக்கின்றன. ஈழத்திலே பிரபாகரன் உரை ஆற்றிவிட்டார். யுத்தம் வரப்போவதால் இங்கே இருந்து டீசல் போன்றவற்றை அவர்கள் வாங்கிச் சேமிக்கிறார்கள். அதனால் கடலோரப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு வருவதாக இப்போதும் எழுதுகிறார்கள்.
ஆனால் அந்த விமர்சனங்களுக்கும் கூட தங்களது செயலினால் பதிலடி கொடுத்து இங்கேயும் தங்களது இராஜதந்திரத்தை ஈழத்து பேச்சுகளின் மூலமே வென்றுகாட்டி இருப்பது குறித்து எப்படி மகிழ்ச்சியடையாமல் இருக்க முடியும்?
நான் படித்த வரலாற்றில் குர்து இன விடுதலைத் தலைவர் ஒகாலன் சிறைக்கொட்டடியில் அடைக்கப்பட்டு அந்த விடுதலைப் போராட்டத்தின் கதி கேள்விக்குள்ளாகிவிட்டது. ஒகாலன் தெளிந்த மார்க்சிய-லெனிய சித்தாந்தவாதியாக உருவாகி, காலச் சூழலுக்கு ஏற்ப மத நம்பிக்கையுள்ளோரையும் பகுத்தறிவாளர்களையும் ஒருங்கிணைத்து ஒட்டுமொத்த குர்து இன மக்கள் விடுதலைப் போராட்டமாக அவர் தனது தேசிய விடுதலைப் போராட்டத்தை நடத்தினார். ஆனால் அவர் வெளிநாடு ஒன்றில் கைதான பிறகு அந்த விடுதலை இயக்கத்தின் நிலை முன்னைப்போல் வீச்சோடும் வீரியத்தோடும் இல்லை என்றும் அமெரிக்காவின் அணிசேர்க்கையிலே இணைந்துவிட்டது என்றும் தெரிகிறது.
அதேபோல் ஆச்சே தேசிய இன விடுதலைப் போராட்டம் ஒரு குறைந்தபட்ச தீர்வுத் திட்டத்துடன் அடங்கிப் போய்விட்டதாகத் தெரிகிறது.
இந்தியாவின் நாகாலாந்து தேசிய இனவிடுதலைப் போராட்டமும் பேச்சுவார்த்தை என்கிற அபாயச் சுழலில் சிக்கிக் கொண்டு தத்தளிக்கிறது. இந்தியாவின் சீக்கியர் விடுதலைப் போராட்டம் சிதைக்கப்பட்டுவிட்டது. காசுமீர விடுதலைப் போராட்டம் திசைமாறிப் போய்விட்டது.
இந்த விடுதலை இயக்கங்களுக்கு இணையான காலத்திலே உருவான விடுதலை இயக்கமான விடுதலைப் புலிகளின் இத்தகைய தொலைநோக்குச் சிந்தனை அந்த இயக்கங்களுக்கு இருந்திருந்தால் ஒடுக்கப்பட்டிருக்கிற தேசிய இனங்களது உரிமைக் குரல் குரல்வளையோடு நசுக்கப்பட்டிருக்காது.
உலக வரலாற்றில் ருசியப் புரட்சியானது தேசிய இனங்களுக்கு ஒரு முன்னோடி விடுதலை இயக்கமாகி நூற்றாண்டுகாலம் நெருங்குகிறது.
அடுத்த சகாப்தமாக இன்றைய தகவல் தொழில்நுட்ப உலகத்தில் உலகம் ஒரு கிராமமாக சுருங்கிப் போய் அமெரிக்கா என்கிற வல்லரசின் பின்னால் ஒட்டுமொத்த நாடுகளும் அணிதிரள வேண்டிய காலகட்டத்தில் இன்னமும் விடுதலை பெறாத அத்தனை தேசிய இனங்களும் புத்துயிர் பெறவும் குரல்வளையினை நெறித்தவர்களது நெஞ்சில் ஏறி விடுதலை வானில் பறப்பதற்குமான ஒரு மிகவும் சக்திவாய்ந்த வழிகாட்டியாக, தத்தளிக்கிற இனங்களினது விடுதலைக்கான திசைகாட்டியாக விடுதலைப் புலிகளின் அரசியல் நகர்வுகள் உத்வேகத்தை அளிக்கின்றன என்றால் அது மிகையல்ல- இரசிக மனோபாவம் அல்ல. கண்முன் நிகழ்கின்றவைகளின் எதேச்சையான உண்மை.
<i> <b>தகவல் மூலம் - புதினம்</b></i>
|
|
|
| மட்டக்களப்பிலும் கிளைமோர் தாக்குதல் |
|
Posted by: Sriramanan - 12-12-2005, 05:02 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
<b>மட்டக்களப்பில் கிளைமோர் தாக்குதல் - இரு படையினர் பலி? </b>
Written by Ellalan Monday, 12 December 2005
மட்டக்களப்பு மாவட்டம், வந்தாறுமுலை பல்கலைக்கழகத்திற்கு அருகில் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த படையினர் மீது இன்று காலை 7.40 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் தாக்குதலில் இரு படையினர் காயமடைந் துள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது. ஆனால் இரு படையினர் இதன்போது கொல்லப்பட்டதாக சில உறுதிப்படுத்த முடியாத தகவல்கள் தெரிவிக்கின்றன. (செய்தித் திருத்தம்)
கோமந்துறையிலிருந்து களுவாங்கேணி நோக்கி கால்நடையாக சுற்றுக்காவலில் ஈடுபட்ட படையினர் மீதே வந்தாறுமுலை பல்கலைக் கழகத்திற்கு அருகில் வைத்து கிளைமோர் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது
குறித்த தாக்குதல் நடைபெற்றதைத் தொடர்ந்து அப்பகுதியில் படையினரால் கண்மூடித்தனமாக துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதுடன், அவ்வீதி வழியாகச் சென்ற மக்களும் இராணுவத்தினரால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர்.
இத்தாக்குதல் தொடர்பான செய்திகளை இருட்டிப்புச் செய்வதற்கு சிறீலங்கா படைத்தரப்பு முயன்று வருகிறது. இதன்போது ஒரு படையினனே காயமடைந்ததாக திரும்பத் திரும்ப கூறிவந்த படைத்தரப்பு, தற்போது இருவர் காயமடைந்ததாக தெரிவித்துள்ளது.
எனினும், தாக்குதல் நடைபெற்ற பகுதியிலிருந்து எமக்கு கிடைத்த தகவல் ஒன்று படைத்தரப்பில் இருவர் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளது. எனினும் இது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
போர் நிறுத்த உடன்படிக்கை கையெழுத்தான பின்பு படையினர் மீது மேற்கொள்ளப்பட்ட நான்காவது கிளைமோர் தாக்குதல் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
<b>
சங்கதி</b>
|
|
|
| கௌரவமான பெயருடன் அங்கீகரிக்கப்பட்ட துரோகிகள் |
|
Posted by: vasanthan - 12-12-2005, 03:53 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (3)
|
 |
புலிகள் தாக்குதலை முறியடிக்க உளவுப் பணியில் தனியார்: லெப்.ஜெனரல் சரத் பொன்சேக
விடுதலைப் புலிகளின் தாக்குதல் திட்டத்தை முன்கூட்டியே அறிந்து தடுக்கும் வகையில் உளவுப் பணியில் தனியாரை ஈடுபடுத்த இலங்கை ராணுவம் முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக இலங்கை ராணுவத்தைச் சேர்ந்த உயர் அதிகாரியான லெப்.ஜெனரல் சரத் பொன்சேகாஇ சண்டே அப்சர்வர் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:
இலங்கையில் அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே 2002 முதல் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் இருந்து வருகிறது.
இருப்பினும் இதுவரை இலங்கை ராணுவத்தைச் சேர்ந்த 40-க்கும் மேலான புலனாய்வு அதிகாரிகள் விடுதலைப் புலிகளின் தாக்குதலில் பலியாகி உள்ளனர்.
தற்போதுள்ள கமாண்டர்களால் போராளிகளின் தாக்குதல் சதித் திட்டத்தை முன்கூட்டியே உளவு அறிந்து ராணுவத்துக்கு தகவல் அனுப்ப இயலவில்லை. மேலும் தாக்குதல் சம்பவம் நடந்த பிறகுதான் அவை பற்றிய தகவல்கள் கிடைக்கின்றன.
இந்நிலையில் ராணுவத்தின் உளவுப் பிரிவை பலப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. எனவே ராணுவ உளவுப் பணியில் தனியார் ஏஜெண்டுகளை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார் சரத் பொன்சேகா.
http://www.newstamilnet.com/index.php?suba...t_from=&ucat=1&
|
|
|
| உலக அழகி 2005 |
|
Posted by: vasisutha - 12-12-2005, 03:08 AM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (11)
|
 |
சீனாவில் நடைபெற்ற உலக அழகிப் போட்டியில்
ஐஸ்லாந்து நாட்டினைச் சேர்ந்த பிர்னா (Birna Vilhjalmsdottir) வெற்றி பெற்றார்.
<img src='http://english.people.com.cn/200512/11/images/pageant1.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://english.people.com.cn/200512/11/images/pageant2.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://english.people.com.cn/200512/11/images/pageant3.jpg' border='0' alt='user posted image'>
<b>Miss Iceland Unnur Birna Vilhjalmsdottir poses after
being crowned Miss World 2005 at the Beauty Crown
theater in Sanya, south China's Hainan Province,
Dec. 10, 2005. The 2005 Miss World Competition Final
was held here on Saturday.</b>
http://english.people.com.cn/200512/11/eng...211_227223.html
|
|
|
| வவுனியாவில் காவல்துறை உறுப்பினரை சுட்டுக்கொன்றுவிட்டு விடுத |
|
Posted by: adsharan - 12-11-2005, 10:16 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (1)
|
 |
வவுனியா பொது மருத்துவமனைக்குள் உள்நுழைந்த இனந் தெரியாத நான்கு நபர்கள் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த விடுதலைப் புலி உறுப்பினரைக் கடத்திச் சென்றுள்ளதுடன் அவருக்கு காவலாக நின்ற சிறிலங்கா காவல்துறை உறுப்பினரை சுட்டுக் கொலை செய்துள்ளனர்.
கடந்த வாரம் மன்னார் பள்ளிமுனையில் வைத்து 5 விடுதலைப்புலி உறுப்பினர்கள் சிறிலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட விடுதலைப்புலி உறுப்பினர்களில் இரண்டு பெண் உறுப்பினர்களும் அடங்குவர். இவர்களில் ஒரு பெண் போராளி கைது செய்யப்பட்டவுடன் சயனைட் அருந்தி ஆபத்தான நிலையில் வவுனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
வவுனியா பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இன்று கடத்தப்பட்டவர் கரும்புலி உறுப்பினர் என்றும் அவரின் பெயர் குணரட்ணம் புவனேஸ்வரி என்றும் தெரிவிக்கப்படுகிறது.
மாத்தளையைச் சேர்ந்த மகேஸ் ரணசிங்க என்ற சிறிலங்கா காவல்துறை கான்ஸ்டபிளே துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி பலியானவராவார்.
விடுதலைப்புலி உறுப்பினர்களைக் கடத்திச் சென்றவர்கள் வவுனியா தாண்டிக்குளம் பிரதேசத்திற்கு தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
தாண்டிக்குளம் பூந்தோட்டம் பகுதியில் சிறிலங்கா காவல்துறையினர் மேற்கொண்ட தேடுதலில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா பொது மருத்துவமனை சம்பவத்தையடுத்து வவுனியா பிரதேசத்தில் சிறிலங்கா காவல்துறையினர் தற்போது தேடுதல்களை மேற்கொண்டுள்ளனர்.
http://www.eelampage.com/index7.php?cn=22430
|
|
|
|