| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 254 online users. » 0 Member(s) | 251 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,312
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,232
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,606
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,296
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,638
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,064
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,465
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,487
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,037
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,239
|
|
|
| நினைக்காத நினைவுகள் நீ....... |
|
Posted by: jcdinesh - 12-11-2005, 11:36 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (5)
|
 |
நினைக்காத நினைவுகள் நீ.......
ஆன்பே......
புூப்போன்ற உன்னை என் மனதில் வைத்துப் புூசிக்கின்றேன்....
பால் வடியும் உன் அழகு முகம் பார்த்தே என் தாகம் தீர்க்கின்றேன்.
தேன் சொட்டும் உன் உதடுகள் கண்டே நான் தேனையே சுவைக்கின்றேன்...
கதிர் வீசும் உன் விழிகளின் வார்த்தையினாலையே நான் வாழ்கின்றேன்...
மொத்தத்தில் உன் பிரகாசத்தினாலையே என் விழிகள் பார்வைபெற்றுள்ளது..
உன்னையே தினம் எண்ணி என் இதயம் தவிக்கின்றது..
நான் கூட சில சமயம் என்னை நான் மறந்ததுண்டு..
ஆனால் உன்னை நான் நினைத்ததே இல்லை...
ஏன் என்றால் உன்னை நான் மறந்தால் தானே நினைப்பதற்கு....
நீ என்னுள் நினைக்காத நினைவுகளாக வாழ்ந்துகொண்டிருக்கின்றாய்..
உன்னை மறந்த நாள் என்று என் வாழ்நாட்களிலேயே இல்லை..
அப்படி ஒரு நாள் வருமாக இருந்தால் ....
அது கடைசியாக நான் சுவாசிக்க மறந்த நாளாகத்தான் இருக்கும்...
|
|
|
| அலைகள்-03 ல் இராணுவம் மூன்று நாட்களிற்குள் ஓட்டம் |
|
Posted by: நர்மதா - 12-11-2005, 10:41 AM - Forum: தமிழீழம்
- Replies (1)
|
 |
விடுதலைப் புலிகளால் ஓயாத அலைகள் - 03 இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போது தமது பெறுமதியான ஆயுதத் தளபாடங்களையெல்லாம் கைவிட்டு இராணுவத்தினர் ஓட்டம் பிடித்தனர் என சிறிலங்கா இராணுவத்தில் முதல்தர அதிகாரியாக இருந்த மேஜர் ஜெனரல் சரத் முனசிங்கா தெரிவித்துள்ளார்.
இதுபற்றி மேலும் தெரிவித்த மேஜர் ஜெனரல் சரத் முனசிங்கா, நவம்பர் முதலாம் திகதி 1999 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இராணுவ நடவடிக்கையைத் தொடங்கிய போது நடைபெற்றவை தனக்கு ஞாபகமிருப்பதாகத் தெரிவித்திருப்பதோடு,
ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கையில் கைப்பற்றப்பட்ட பிரதேசகள் அனைத்தையும் கைவிட்டு இராணுவத்தினர் மூன்று நாட்களிற்குள் முழுமையாக ஓட்டம் பிடித்தனர் என்றும், இதன் போது தமது பெறுமதியான ஆயுதத்தளபாடங்களைக் கூட அப்படியே விட்டுவிட்டே ஓடினர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு போராட்ட காலத்தில் 45,000 படையினர் படைகளை விட்டுத் தப்பியோடியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மே 13, 1997-ல் ஆரம்பிக்கப்பட்ட ஜெயசிக்குறு நடவடிக்கை 18 மாதங்களிற்கு மேலாக தொடர்ந்து இடம்பெற்றது என்பதோடு, இதில் ஆக்கிரமிக்கப்பட்ட பல நூற்றுக்கணக்கான சதுரமைல் பிரதேசத்தில் பல பாரிய இராணுவத் தளங்கள் அமைக்கப்பட்டிருந்தன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அமைக்கப்பட்ட இராணுவத் தளங்கள், கட்டளை மையங்கள் உள்ளிட்ட அனைத்திலும் பாரிய ஆயுத தளபாடங்கள், நவீன தொலைதொடர்பு சாதனங்கள், ராடார்கள் மற்றும் யுத்த டாங்கிகள் உள்ளிட்ட வாகனங்களைக் கூட கைவிட்டு சண்டை தொடங்கியதும் இராணுவத்தினர் பின் வாங்கி ஓடினர் என்பதும்,
மேற்படி ஜெயசிக்குறு ஆயுத தளபாடக் கையிருப்பு மற்றும் ஆனையிறவுத் தளபாடக் கையிருப்பு என்பன சிறிலங்கா இராணுவத்தின் ஒட்டுமொத்த ஆயுத வலுவில் 40 விழுக்காடு தொகையைக் கொண்டிருந்தவை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இது குறித்து அன்றைய காலகட்டத்தில் ஒரு இராணுவ ஆய்வாளர் தெரிவிக்கையில்,
சிறிலங்கா அரசாங்கம் தான் இழந்ததைத் தெரிவிக்கவில்லை. விடுதலைப் புலிகள் தாங்கள் கைப்பற்றியதைத் தெரிவிக்கமாட்டார்கள். ஆனால் சிறிலங்கா அரசு இழந்த யுத்த டாங்கிகள், கவச வாகனங்கள் மற்றும் நீண்டதூர ஆட்டிலறிகள் உள்ளிட்ட கனரக ஆயுதங்கள் விடுதலைப் புலிகளின் மரபுப்படையணிப் பலத்தை இரட்டிப்பாக்கியிருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை என்றும் அவற்றை விடுதலைப் புலிகள் பாவிக்க ஆரம்பிப்பார்களானால், வடக்கு-கிழக்கில் இராணுவத்தின் இருப்பு கேள்விக் குறியாக்கிவிடும் எனத் தெரிவித்திருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது
|
|
|
| இந்திய நேரடி உதவி, பங்களிப்புடன் பலாலி விமானத் தளம் விஸ்தரிப |
|
Posted by: நர்மதா - 12-11-2005, 10:24 AM - Forum: தமிழீழம்
- Replies (1)
|
 |
இலங்கை இராணுவத்தின் முழுத் தேவைகளையும் நிறைவுசெய்யத்தக்க வகையில் பலாலியில் உள்ள விமானத்தளம் விஸ்தரிக்கப்படவிருக்கின்றது. அதற்கான உதவி யையும் பங்களிப்பையும் நேரடியாக இந்தியா வழங்கு கின்றது. தேவை ஏற்படும் சமயங்களில் யாழ்.குடாநாட்டில் உள்ள படையினருக்கு அவசர, அவசிய இராணுவ உதவிகளைப் பெற்றுக்கொள்ளத்தக்க வகையில் பலாலி விமானத் தளம் முழு அளவில் விஸ்தரிக்கப்படும்.
விரைந்து மேற்கொள்ளப்படவிருக்கும் இந்த நடவடிக்கை பூர்த்தியடையும் வரை இலங்கை அரசு விடுதலைப் புலி
களுடன் யுத்தம் ஒன்றை ஆரம்பிக்காது. அதுவரை சமா தான நாடகம் இழுத்தடிக்கப்படும் என விடயமறிந்த வட்
டாரங்கள் தகவல் வெளியிட்டன. உயர் பாதுகாப்பு வலயம் என்ற பெய ரில் பலாலியைச் சூழப் படைத் தரப்பினால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் தமிழர்களின் தாயகப் பிரதேசம் இந்த விமான நிலைய விஸ்தரிப்பின் கீழ் நிரந்தரமாக ஆக்கிரமிக் கப்பட்டுவிடும் என்று அஞ்சப்படுகின்றது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசு பதவியேற்றதைத் தொடர்ந்து கொழும்பு அதிகாரப் போக்கு இந்தியப்
பக்கத்துக்கு அதிகம் வளைந்து கொடுக்கும் நிலைமை ஏற் பட்டிருப்பதாக அவதானிகள் சுட்டுகின்றனர். அந்தப் பின்னணியிலேயே பலாலி விமா னத்தள விஸ்தரிப்பிலும் நேரடியாக இந்தி யப் பங்களிப்பு இடம்பெறும் சூழ்நிலை ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகின்றது. பழுதடைந்திருக்கும் பலாலி விமான நிலையத்தின் ஓடுபாதையைத் திருத்தி அமைக்கும் திட்டம் முன்னைய சந்திரிகா அரசினால் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால், அப் போது அந்தத் திட்டத்திற்கு உதவியளிப் பதற்குப் புதுடில்லி அரசு
நிபந்தனை விதித் ததாகச் செய்திகள் வெளியாகின.
இந்திய உதவியுடன் இந்த ஓடுபாதையை விஸ்தரிப்பதாயின் இலங்கை இந்திய விமா னங்களைத் தவிர வேறு
விமானங்கள் பலா லியில் தரையிறங்குவதற்கு இடமளிக்கப் படமாட்டாது என்ற உறுதியை இலங்கை அரசு
வழங்கவேண்டும் என அப்போது இந் தியா கோரியது என்பதும் அதற்கு இணங்க மறுத்த சந்திரிகா அரசு, தனது அரசின் நிதியிலேயே பலாலி விமா னத் தள ஓடுபாதைப்
புனரமைப்பை மேற் கொள்ளத் தீர்மானித்து, அந்த வேலைகளை ஆரம்பித்து, அது தற்போது நடைபெற்று வருகின்றது என்பதும் தெரிந்தவையே. இந்தநிலையிலேயே புதிதாகப் பதவி யேற்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசு இந்தியப் பக்கம் கூடுதலாகச் சாய்ந்திருக் கின்றது.
நாட்டில் அரசுப் படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் திடீரென யுத்தம் ஒன்று வெடித்தால்
யாழ்.குடாநாட்டை அர சுப் படைகள் தொடர்ந்து தக்கவைத்திருப் பது கேள்விக்குரியது எனக் கருதப்படும் நிலையில் அத்தகைய இக்கட்டு ஏற்பட்டால் மேற்கொள்ளக்கூடிய அவசர நடவடிக்கை கள் குறித்து கொழும்பு அரசின் புதிய நிர்வாகி கள் புதுடில்லியுடன் ஆலோசனை கலந்தனர் என்றும் கூறப்படுகின்றது.
புதுடில்லியிலும் கொழும்பிலும் பல மட் டங்களில் நடைபெற்ற பல்வேறு சுற்றுப் பேச்சுகளின் அடிப்படையில் பலாலி விமா னத் தளத்தை உயர்தரத்தில் விஸ்தரிப்பதற்கு புதுடில்லி நேரடியாக இணங்கியது என்று கூறப்படுகின்றது.
தற்போதைய திட்டத்தின்படி பலாலி விமா னத் தளத்தை உயர்தரத்தில் விஸ்தரிப்பதற்கு இந்தியா 4 மில்லியன்
அமெரிக்க டொலர் களைச் (40 கோடி ரூபாவை) செலவு செய் யும். சிவில் பொறியியலாளர்கள் என்ற கோதா
வில் இந்திய விமானப்படையின் பொறியி யலாளர்களும் புனரமைப்பு வேலைகளில் நேரடியாக ஈடுபடுத்தப்படுவர்
எனத் தெரி கின்றது. இந்திய உதவியுடன் விஸ்தரிக்கப்படும் பலாலி விமானத்தளத்தை இந்திய, இலங்கை விமானங்களைத் தவிர வேற்று நாட்டு விமா னங்கள் பயன்படுத்தக் கூடாது என்று தனது முன்னைய நிபந்தனையை இந்தியா இப் போதும் விதித்தது
என்றும் அதனை இலங்கை யின் புதிய அரசு ஏற்றுக்கொண்டுவிட்டது என் றும் தெரியவருகிறது.
பலாலி விஸ்தரிப்பைத் துரிதமாக மேற் கொண்டு முடிக்கும் வரை யுத்தத்தை தொடங்க விடாமல் காலத்தை
இழுத்தடிக்கும் திட்டத் தில் இலங்கை அரசுத் தரப்பு இருப்பதை கொழும்பு அவதானிகள் உறுதிப்படுத்தினர்.
புலிகளின் தாக்குதலினால் யாழ். குடா நாடு புலிகள் வசம் வீழும் நிலைமை ஏற்பட் டால் இந்தியாவிடமிருந்து
அவசர உதவி களைப் பெற்றுக்கொள்வது குறித்தும் உடன் பாடு ஏதும் எட்டப்பட்டிருக்கக் கூடும் எனச்
சந்தேகிக்கப்பட்டது. அடுத்த வாரத்தில் இலங்கையின் புதிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமது முதலா வது வெளிநாட்டு விஜயத்தைப் புதுடில் லிக்கு மேள்கொள்ளவிருக்கின்றார். அப்போது இந்த விடயம் குறித்து இறுதி இணக்க நிலை எட்டப்படக்கூடும்
என எதிர்பார்க்கப்படு கின்றது. ஒருதலைப்பட்சமாக தமிழ் மக்களின் தாயகபூமியை உயர்பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் ஆக்கிரமித்து அதில் ஆயிரக்கணக் கான ஏக்கர் நிலத்தை விமானத்தள விஸ் தரிப்பு என்ற பெயரில் கபளீகரம் செய்யும் அரசின் உத்தேச திட்டம் தமிழர் தரப்பில் பெரும் எதிர்ப்புணர்வையும் சீற்றத்தையும் உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்தியா வசமுள்ள பெரிய இராணுவ விமானங்கள் தரையிறங்கக் கூடியதாக நீண்ட ஓடுபாதை, நவீன தொழில்நுட்ப வசதிகள், உயர் பாதுகாப்பு ஆகியவை கொண்டதாக பலாலி விமானத்தளம் விஸ்தரிக்கப்படும் போது அச்சுற்றாடலில் உள்ள தமிழர்களின் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் சுவீகரிக் கப்பட்டுவிடும் எனச் சுட்டிக்காட்டப்படுகின்றது. இந்திய உதவியுடன் பலாலி விமானத் தளத் தரைப்பகுதி புனரமைக்கப்படுகின்றது என்று மோலோட்டமாக ஒரு தகவலை நேற்று முன்தினம் கொழும்பில் பாதுகாப்புப் படைத் தளபதிகளின் செய்தியாளர் மாநாட்டில் கூட்டுப்படைகளின் தளபதி அட்மிரல் தயா சந்த கிரி வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னர் பலாலி விமானத்தள ஓடுபாதை யைப் புனரமைக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இப்போது முழு
விமானத் தள முமே இந்தியாவின் நேரடிப் பங்களிப்போடு விஸ்தரிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டிருக் கின்றது.
இதேவேளை பலாலி விமானத்தளம் இந்தியாவின் நேரடிப் பங்களிப்புடன் மீள விஸ்தரிப்புச் செய்யப்படுவது பற்றிய தகவல் நேற்றுமுன் தினம் படைத்தளபதிகள் கூட்டிய செய்தியா ளர் மாநாட்டில் சாடைமாடையாக வெளியி டப்பட்டதை அடுத்து கொழும்புக்கான இந்தி யத் தூதர் நிருபமா ராவ் நேற்று முற்பகல் ஜனாதிபதியைச் சந்தித்துப் பேசினார் என்று கொழும்புத் தகவல்கள் தெரிவித்தன.
பலாலி விமானத்தளம் இந்தியாவின் நேரடியான பங்களிப்புடன் புனரமைக்கப் படுவது பற்றிய செய்தியைப்
பகிரங்கப் படுத்தவேண்டாம் என்று இந்தச் சந்திப்பின் போது இந்தியத் தூதர் ஜனாதிபதியிடம் கேட் டுக்கொண்டார் என்றும் இதையடுத்து இது தொடர்பான செய்தி யைப் பகிரங்கப்படுத்தி பரபரப்பை ஏற் படுத்தவேண்டாம் என்று தென்னிலங்கை யின் பிரதான ஊடகங்களிடம் அரசின் தலை மையினால் உரிமையுடன் கோரப்பட்டது என்றும் அறியவந்தது.
நன்றி உதயன்
|
|
|
| கண்டேன் காதலியை.... |
|
Posted by: jcdinesh - 12-11-2005, 08:22 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (14)
|
 |
கண்டேன் காதலியை....
கண்ணுக்குள் நிலவாக கண்டேனடி..
கவிதையில் தமிழாக கண்டேனடி....
இதயத்தில் புயலாக வந்தாயடி-என்
இரவு உறக்கத்தை பறித்தாயடி......
மழைத்துழியாய் என்மீது விழுந்தாயடி...
மதியிழந்த மனிதனாக ஆனேனடி...
அருவியாய் இதயத்தில் குதித்தாயடி.
இடி விழுந்த மரமாக ஆனேனடி...
கள்ளமில்லா மின்னல் சிரிப்பால் கவர்ந்தாயடி..
காதல் கவிஞ்ஞாக ஆனேனடி..
புவியீர்ப்பு விசையாக ஈர்த்தாயடி...
காதல் புூகம்பத்தில் என்னை புதைத்தாயடி.......
|
|
|
| யாழ்ப்பாணத்தில் பாரிய தேடுதலுக்குத் திட்டம் |
|
Posted by: Vaanampaadi - 12-11-2005, 07:11 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
<b>யாழ்ப்பாணத்தில் பாரிய தேடுதலுக்குத் திட்டம்</b>
(எம்.எஸ். குவால்தீன்)
யாழ்ப்பாணத்தில் தாக்குதல்கள் மேற்கொள்பவர்களைக் கண்டுபிடிக்க யாழ்ப்பாண அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் பாரிய சோதனை நடவடிக்கையை மேற்கொள்ள பாதுகாப்புப் பிரிவு உயரதிகாரிகள் தீர்மானித்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண அதி பாதுகாப்பு வலயங்களுக்குள்ளும் அதன் புறப் பகுதிகளிலும் எதிர்வரும் சில தினங்களுக்குள் இத்திடீர் சோதனைகளை நடத்த எதிர்பார்க்கப்படுவதாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
யாழ். அதி பாதுகாப்பு பிரதேசத்திற்குள் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் மிக சாதுரியமாக உட்புகுந்திருப்பதாகவும் இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்திற்குள் இரண்டு சாம் ஏவுகணைகள் உட்பட கனரக ஆயுதங்களை எடுத்து வந்திருப்பதாகவும் உளவுப் பிரிவு அறிக்கைகள் மூலம் சுட்டிக் காட்டப்பட்டுள்ளதால், இத்திடீர் சோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாண தாக்குதல்களுக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லையெனவும் தங்கள் உறுப்பினர்கள் கடந்த 08 ஆம் திகதி முதல் யாழ்ப்பாண அரசியல் அலுவலகம் மூடப்பட்டு அரசியல் நடவடிக்கைகளிலிருந்து வெளியேறியிருப்பதாகவும் புலிகள் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இதற்கமைய எதிர்வரும் வாரத்தில் அரச கட்டுப்பாட்டு பிரதேசங்களில் புலிகள் அமைப்பு உறுப்பினர்கள் இல்லையென்பதை யுத்த நிறுத்த கண்காணிப்பாளர் குழுவின் ஊடாக எழுத்து மூலம் பெற்றுக்கொண்டு தேடுதலை நடத்த அதிகாரிகள் தீர்மானித்துள்ளதாகவும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீரகேசரி
|
|
|
| கோட்டபாய வழியில் சென்று கோட்டைவிடப் போகும் மஹிந்த |
|
Posted by: Vaanampaadi - 12-11-2005, 07:02 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
கோட்டபாய வழியில் சென்று
கோட்டைவிடப் போகும் மஹிந்த
யுத்த நிறுத்த உடன்பாட்டை செம்மையாக நடைமுறைப் படுத்துவதில் எழுந்துள்ள சிக்கல்கள் குறித்து அரச படைகள்
மற்றும் புலிகளின் உயர் மட்டத் தலைவர்கள் ஒன்று கூடிப் பேச வேண்டியதன் அவசரமும் அவசியமும்
வலியுறுத்தப்பட்டிருக் கின்றது.
""யுத்த நிறுத்தச் சூழல் தகர்ந்து போகும் ஆபத்து மிக நெருங் கிக் கொண்டிருக்கின்றது. அண்மைக் காலத்தில்
இராணுவ நெருக்கு வாரங்கள், பொதுமக்கள் கொல்லப்படுதல், பொதுமக்கள் இராணுவ முறுகல் போன்றவை
தீவிரமடைந்து கொண்டிருக்கின்றன.
"" இரு தரப்பினதும் (அரசு, புலிகள் ஆகிய தரப்புகளினதும்) உயர்மட்டக் குழுக்கள் நேரடியாகச் சந்தித்து
யுத்த நிறுத்த உடன் பாட்டைச் செம்மையாக நடைமுறைப்படுத்துவதற்கான பலப் படுத்துவதற்கான முயற்சிகளில்
விரைந்து உடனடியாக தீவி ரமாக இறங்க வேண்டியது அவசியமாகும். காலத்தின்
கட்டாயமாக அது இருக்கின்றது. யுத்த நிறுத்தச் சூழ்நிலையைத் தக்க வைப்பதாக இருந்தால் இது
அவசியமானதாகும்'' இவ்வாறு விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.
தமிழ்ச் செல்வன் சுட்டிக்காட்டியிருக்கின்றார். நோர்வேத் தரப்பு ஊடாக இலங்கை அரசுத்
தரப்புக்குத் தற்போதைய நிலைமை குறித்து அவர் தெரி வித்திருக்கும் இந்தத் தகவலின் அர்த்தப்
பரிமாணம் ஆழம் இலங்கையில் புதிய அரசியல் தலைமைக்குப் புரிந்திருக்குமா என் பது
சந்தேகமே. கொழும்புத் தலைமையிடம் இருந்து வெளியாகும் பிரதிபலிப்புகள் நிலைமையின்
ஆழத்தை மோசத்தை அது இன் னும் தெளிவாகப் புரிந்துகொள்ளவில்லை என்பதையே
காட்டுகின்றன.
நிலைமையைச் சீர்குலைத்து, இழுத்தடித்து சிக்கலுக்குள்ளாக்குவதா என்பது இலங்கை அரசுத்
தலைமையையும் படைத்தரப்பையும்தான் பொறுத்தது என்றும் தமிழ்ச்செல்வன்
சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
தீர்க்கமான முடிவு ஒன்றை அரசு விரைவாக எடுத்து, சந்தர்ப்பத்தைச் சரியாகப் பற்றிப் பிடித்து
பிரச்சினைகளைச் சுமூகமாகத் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் புலிகளினதும்
மக்கள் அனைவரினதும் எதிர்பார்ப்பாக இருக்கின்றது என்றும் தமிழ்ச்செல்வன் தமது பக்க
நிலையை தெளிவுபடுத்தியிருக்கின்றார். ஆனால், அப்படியான ஒரு முடிவை எடுக்க கொழும்புத்
தலைமை தயõரா என்பதுதான் கேள்வி.
இராணுவ ரீதியாகவும் களநிலைமை அடிப்படையிலும் உள்ள யதார்த்தப் புறச்சூழ்நிலைகளை
கருத்தில் எடுத்து அதனடிப் படையில் தீர்மானங்களை முன்னெடுக்க வேண்டிய கொழும்பு
அரசியல் தலைமை, அதனை ஒதுக்கிவிட்டு தென்னிலங்கை அரசியல் அரங்குக்கு ஏற்ற வகையில் வடக்கு
கிழக்கு கள நிலைவரத் தைக் கையாள முனைகின்றது.
செய்து கொண்டுள்ள யுத்த நிறுத்த உடன்பாட்டின்படி தான் நிறைவுசெய்ய வேண்டிய
கடப்பாடுகளை மேற்கொள்ளாமல், அவற்றைப் புறமொதுக்கிச் செயற்படுவதும்
யுத்த நிறுத்த உடன்பாட்டில் கூறப்பட்டுள்ள தனது பொறுப்புகளை நிறைவேற்றாமல் இருக்கும்
அதேசமயம் அந்த யுத்த நிறுத்த உடன்பாட்டையே மாற்றியமைக்கப் போவதாக
ஒருதலைப்பட்சமாக அறிவிப்பதும்
அனுசரணைப் பணிவகிக்கும் நோர்வேத் தரப்புடன் முரண்டு பிடிப்பதும்
யுத்த நிறுத்தக் கண்காணிப்புக்குழுவின் தலைமைப் பொறுப்பை நோர்வேயிடமிருந்து பிடுங்கி
"சார்க்' நாடு ஒன்றிடம் அதைக் கைய ளிக்க ஒரு தலைப்பட்சமாக முயற்சிப்பதும்
புலிகளைவிட படைபலத்திலும், ஆயுத பலத்திலும், மனோபலத்திலும் அரச படைகள் விஞ்சி
நிற்பதாகவும் யுத்தம் மீள மூண் டால் விடுதலைப் புலிகளை ஒரேயடியாக ஓரம் கட்டி
தோற்கடித்து விடுவோம் எனவும், படை உயர் அதிகாரிகளைக் கொண்டு அறிவிக்கவைப்பதும்
கள யதார்த்த நிலைமையைப் புரியாமல் புதிய அரசு மேற்கொள் ளும் பயணிக்கும்
"தப்பான பாதையை' எமக்கு உணர்த்துகின்றன.
இப்படித்தான் சுமார் பதினொரு ஆண்டுகளுக்கு முன்னர் அமைதித் தீர்வு காண்பதற்கான
அருமையான சந்தர்ப்பம் ஒன்று அப்போது புதிதாகப் பதவியேற்ற ஜனாதிபதி சந்திரிகா
குமாரதுங்கா விற்கு வழங்கப்பட்டது. ஆனால், அவர் புதிதாக அதிகாரத்தை ஏற்றதும் அவரைச்
சூழ்ந்துகொண்ட அதிகார வர்க்கம் அவரை பிழையாக வழிநடத்தி, குழப்பியதால் அமைதி முயற்சிகள்
மூலம் இனப்பிரச்சினைக்குச் சமாதான தீர்வுகாணும் பொன்னான வாய்ப்பை அவர் கோட்டை
விடவேண்டியதாயிற்று. நிலைமையப் புரிந்துகொண்டு தனது பாதையை அவர் நேர்சீர்செய்ய
முயன்றபோது விவகாரம் அவரது கையை மீறி, கைக்கு மேல் போய்விட்டது.
காலச் சக்கரம் உருண்டு மீண்டும் அதே நிலைமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும்
வந்திருக்கின்றது.
லெப்டினன்ட் கேணல் தரத்தில் இராணுவத்தை விட்டு வெளி யேறி, சுமார் ஒன்றை தசாப்தகாலம்
வெளிநாட்டில் வசித்த கோட்டபாய ராஜபக்ஷ ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின்
சகோதரர் இப்போது திடீரென நாட்டுக்குள் வந்து குதித்து, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்
பதவியைப் பிடித்திருக்கின்றார். வெளிநாட்டுத் தூதர்களை எல்லாம் பாதுகாப்பு அமைச்சுக்கு
அழைத்து தொடர் மந்திராலோசனைகளை நடத்துகின்றார். உள்நாட்டு யுத்தம் ஒன்றை ஒட்டி,
வெளிநாட்டின் இராணுவ உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்கான முன்னேற்பாடுகளில் அவர்
முழுமூச்சில் ஈடுபட்டிருக்கின்றார் என்று கேள்வி.
முன்னர் இராணுவத் தொண்டர் படையில் லெப்டினன்ட் கேணல் தரத்தில் இருந்த அனுருரத்த ரத்வத்தை
இராணுவ சேவையின் பணி யில் தொடராமலேயே ஜெனரல் தர நிலை உயர்வைப் பெற்றதோடு
பிரதிப் பாதுகாப்பு அமைச்சராகி, ஜனாதிபதி குமாரதுங்க தலைமையிலான அரசை
பிழையாக வழிநடத்தி, முழு நாட்டையுமே கொடூர யுத்தத்தில் மூழ்கடிக்க வைத்தார்.
அதுபோன்று, இப்போதும் மஹிந்த ராஜபக்ஷவின் அரசையும் இராணுவ விடயங்களில்
""கயிற்றைக் கொடுத்து'' நாட்டைப் பெரும் யுத்தத்தில் வீழ்த்தச் செய்வதற்கு, பதினைந்து வருடங்கள்
வெளிநாட்டில் இருந்துவிட்டு வந்து குதித்திருக்கின்றார் ஒரு லெப்டினன்ட் கேணல். படையில்
பணியைத் தொடராமலேயே அவருக்கும் ஜெனரல் தர நிலை உயர்வு விரைவில் என்கிறார்கள்.
இராணுவத் தீர்வில் நாட்டம் காட்டி தென்னிலங்கைக்கு மட்டுமல்லாமல் முழு இலங்கைத்
தீவுக்குமே கேடு விளைவிக்கும் முயற்சிகள் கொழும்பில் ஏற்கனவே முழு வீச்சில் ஆரம்பமாகிவிட்டன
என்றும் கூறப்படுகின்றது. மொத்தத்தில் இவை நல்லதற்கல்ல என்பது மட்டும் திண்ணம்.
Uthayan
|
|
|
| பழகிப்(காதலியைப்)பிரிந்து பார்.. |
|
Posted by: jcdinesh - 12-11-2005, 07:00 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (17)
|
 |
பழகிப்(காதலியைப்)பிரிந்து பார்..
நிலவு உன்னை சுட்டெரிக்கும்....
சூரியன் உன்னை அரவனைக்கும்..
உணவோ உன் எம துரோகி ஆவான்..
மதுவோ உணக்கு குளிர்பாணம் போல் தோண்றும்....
உன் நன்பர்கள் உனக்கு எதிரியாக தெரிவர்..
ஏன் என்றால் உன்னை கேலி செய்வார்கள்- ஆனால்.
சுpகரட்டோ உனக்கு நன்பனாவான்.
துனிமை உணக்கு சொர்க்கமாகும்.
இனிய கானங்கள் உனக்கு விரக்தியாக இருக்கும்.
தென்றல் கூட உனக்கு புயலாக தோண்றும்.
புூக்களை தொட்டால் கூட அவை முட்கள் போல் குத்தும்.
வேறுயாராவது உன்னுடன் போசினால்- அது
என்னவளாக இருக்கக் கூடாதோ எனத்தோன்றும்.
அவள் உன்னை காண்பதை தவிர்த்தபோதும்..
நீ அவளை காண பல முயற்சிகள் எடுப்பாய்..
ஆணால் காணமுடியாமல் தவிய்ப்பாய்..
து}ரத்தில் உள்ள பெண்ணைக்கூட
அவளாக இருக்குமோ என நோக்குவாய்.
அவள் வரும் பாதையை வினாடிக்கு வினாடி பார்ப்பாய்.
ஆனால் அவளோ வரமாட்டாள்.
கண்ணாடி முன் உன் முகத்தைப் பார்த்தால்.
அதுவே உன்னை ஏளனம் செய்யும்.
என்கே உனது காதலி என்று.
ஆனால் இவற்றையெல்லாம் அவள் அறியாள்..
குhதலித்துப் பிரிந்துப் பிரிந்துபார் இது உண்மைஎன புரியும்
[/u][/b]
|
|
|
| ஒரு வாழ்வாதார போராட்டம் |
|
Posted by: தூயவன் - 12-11-2005, 05:23 AM - Forum: அரசியல் / பொருளாதாரம்
- No Replies
|
 |
ஈழவிடுதலைப் போராட்டம் என்பது ஒரு இனம் வாழவேண்டும் என்ற நப்பாசையில் தான் போராடுகின்றது என்பதைப் புரிந்து கொள்ளதவர்களுக்கு நடந்த சம்பவங்களை புரட்டிக்காட்டுவது கடமை. 83ல் இருந்து தான் போராட்டம் ஆரம்பமானது என்று பலர் நினைக்கின்றார்கள். ஆனால் அது காலம் காலமாக தொடர்ந்து வந்தாதால் தான் ஒரு இனம் பீறிட்டு எழுந்தது என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.
தமிழர் படுகொலைகளை அடையாளப்படுத்தும் தளம் இது. இதை விட வேறு தளங்கள் இருப்பின் இணைத்து கொள்ளுக
http://www.tamilmaravan.com/SriLanka/Srilanka-main.htm
|
|
|
|