![]() |
|
மட்டக்களப்பிலும் கிளைமோர் தாக்குதல் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: மட்டக்களப்பிலும் கிளைமோர் தாக்குதல் (/showthread.php?tid=2075) |
மட்டக்களப்பிலும் கிளைமோர் தாக்குதல் - Sriramanan - 12-12-2005 <b>மட்டக்களப்பில் கிளைமோர் தாக்குதல் - இரு படையினர் பலி? </b> Written by Ellalan Monday, 12 December 2005 மட்டக்களப்பு மாவட்டம், வந்தாறுமுலை பல்கலைக்கழகத்திற்கு அருகில் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த படையினர் மீது இன்று காலை 7.40 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் தாக்குதலில் இரு படையினர் காயமடைந் துள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது. ஆனால் இரு படையினர் இதன்போது கொல்லப்பட்டதாக சில உறுதிப்படுத்த முடியாத தகவல்கள் தெரிவிக்கின்றன. (செய்தித் திருத்தம்) கோமந்துறையிலிருந்து களுவாங்கேணி நோக்கி கால்நடையாக சுற்றுக்காவலில் ஈடுபட்ட படையினர் மீதே வந்தாறுமுலை பல்கலைக் கழகத்திற்கு அருகில் வைத்து கிளைமோர் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது குறித்த தாக்குதல் நடைபெற்றதைத் தொடர்ந்து அப்பகுதியில் படையினரால் கண்மூடித்தனமாக துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதுடன், அவ்வீதி வழியாகச் சென்ற மக்களும் இராணுவத்தினரால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர். இத்தாக்குதல் தொடர்பான செய்திகளை இருட்டிப்புச் செய்வதற்கு சிறீலங்கா படைத்தரப்பு முயன்று வருகிறது. இதன்போது ஒரு படையினனே காயமடைந்ததாக திரும்பத் திரும்ப கூறிவந்த படைத்தரப்பு, தற்போது இருவர் காயமடைந்ததாக தெரிவித்துள்ளது. எனினும், தாக்குதல் நடைபெற்ற பகுதியிலிருந்து எமக்கு கிடைத்த தகவல் ஒன்று படைத்தரப்பில் இருவர் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளது. எனினும் இது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. போர் நிறுத்த உடன்படிக்கை கையெழுத்தான பின்பு படையினர் மீது மேற்கொள்ளப்பட்ட நான்காவது கிளைமோர் தாக்குதல் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. <b> சங்கதி</b> |