Yarl Forum
கௌரவமான பெயருடன் அங்கீகரிக்கப்பட்ட துரோகிகள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: கௌரவமான பெயருடன் அங்கீகரிக்கப்பட்ட துரோகிகள் (/showthread.php?tid=2076)



கௌரவமான பெயருடன் அங்கீகரிக்கப்பட்ட துரோகிகள் - vasanthan - 12-12-2005

புலிகள் தாக்குதலை முறியடிக்க உளவுப் பணியில் தனியார்: லெப்.ஜெனரல் சரத் பொன்சேக
விடுதலைப் புலிகளின் தாக்குதல் திட்டத்தை முன்கூட்டியே அறிந்து தடுக்கும் வகையில் உளவுப் பணியில் தனியாரை ஈடுபடுத்த இலங்கை ராணுவம் முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக இலங்கை ராணுவத்தைச் சேர்ந்த உயர் அதிகாரியான லெப்.ஜெனரல் சரத் பொன்சேகாஇ சண்டே அப்சர்வர் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:
இலங்கையில் அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே 2002 முதல் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் இருந்து வருகிறது.
இருப்பினும் இதுவரை இலங்கை ராணுவத்தைச் சேர்ந்த 40-க்கும் மேலான புலனாய்வு அதிகாரிகள் விடுதலைப் புலிகளின் தாக்குதலில் பலியாகி உள்ளனர்.
தற்போதுள்ள கமாண்டர்களால் போராளிகளின் தாக்குதல் சதித் திட்டத்தை முன்கூட்டியே உளவு அறிந்து ராணுவத்துக்கு தகவல் அனுப்ப இயலவில்லை. மேலும் தாக்குதல் சம்பவம் நடந்த பிறகுதான் அவை பற்றிய தகவல்கள் கிடைக்கின்றன.
இந்நிலையில் ராணுவத்தின் உளவுப் பிரிவை பலப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. எனவே ராணுவ உளவுப் பணியில் தனியார் ஏஜெண்டுகளை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார் சரத் பொன்சேகா.
http://www.newstamilnet.com/index.php?suba...t_from=&ucat=1&


- sri - 12-13-2005

சிறிலங்கா இராணுவ புலனாய்வுத்துறை இயக்குநர் மாற்றம்

சிறிலங்கா இராணுவ புலனாய்வுத்துறை இயக்குநராக பிரிக்கேடியர் டி. லியனகே நியமிக்கப்பட்டுள்ளார்.


புதிய இராணுவ தளபதியாக லெப். ஜெனரல் சரத் பொன்சேகா பொறுப்பேற்ற பின்பு சிறிலங்கா இராணுவ தளபதிகள் பலர் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சரத் பொன்சேகாவின் புதிய நியமனங்கள் விவரம்: (அடைப்புக்குறிக்குள் முன்னர் வகித்த பதவிகள்)

இராணுவ தொண்டர் படைத்தளபதி - மேஜர் ஜெனரல் எஸ். குலதுங்க

யாழ். இராணுவ கட்டளை தலைமையக அதிகாரி - பிரிக்கேடியர் ஆர். சக்கி (சிறிலங்கா இராணுவ புலனாய்வுத்துறை இயக்குநர்)

சிறிலங்கா இராணுவ புலனாய்வுத்துறை இயக்குநர் - பிரிக்கேடியர் ரி. லியனகே (அரச தலைவர் பாதுகாப்பு பிரிவு ஒருங்கிணைப்பாளர்)

23 ஆம் படைப்பிரிவு கட்டளைத் தளபதி - பிரிக்கேடியர் தயா ரட்நாயக்க (சிறிலங்கா இராணுவப் பேச்சாளர்).

சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் - பிரிகேடியர் எஸ்.ஏ.பி.சமரசிங்க

யாழ். கட்டளைத் தலைமையகப் பணி - பிரிகேடியர் என். விதாரனகே

இராணுவ முன்னரங்க பகுதி கண்காணிப்புத் தளபதி - பிரிகேடியர் பி.சந்திரவன்ச

இராணுவ தலைமையகத்தின் தலைமை இயக்குநர் - மேஜர் ஜெனரல் டி.டபிள்யூ.ஜெயவர்த்தன

மேஜர் ஜெனரல்கள் என்.ஏ. ரணசிங்க மற்றும் பி. பன்னிபிட்டிய ஆகியோரும் சிறிலங்கா இராணுவ தலைமையகப் பணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.

புதினம்


- kurukaalapoovan - 12-13-2005

மிக மிக கௌரவமான துரோகிகளும் இருக்கிறார்கள்
http://www.sangam.org/taraki/articles/2005...uman_Rights.php


- நர்மதா - 12-15-2005

இங்கு குறிப்பிட பட வேண்டிய ஒன்று தனியார் நிறுவனம் என்பது வேறு ஒன்றும் இல்லை ஒட்டுப்படைகளும் தமிழ் தேசவிரதிகளும் தான் இங்கு குறிப்பிட முக்கியமான ஒன்று இலங்கையில் தமிழர்கள் அரச பதவிகளில் முக்கியமான பெறுப்புக்களில் இருக்கிறார்கள் என்றால் அது அரச புலனாய்வு துறையிலே ஏன் என்றால் சிங்களவருக்கு அவ்வளவு அறிவு இதனால் தான் தனியார் துறை என்ற ரீதியில் தமிழர்களை உள்வாங்க போகிறார்