![]() |
|
சொர்க்கவாசல் கதவு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கதைகள்/நாடகங்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=53) +--- Thread: சொர்க்கவாசல் கதவு (/showthread.php?tid=2071) |
சொர்க்கவாசல் கதவு - mohandoss - 12-12-2005 "திருச்சியில குஷ்புக்கு கோயில் கட்டுனாங்கல்ல, அதை அறநிலையத்துறையில சேர்க்கணும்னு பெரிய போராட்டம் நடந்தது தெரியுமா?" வீட்டுக்கு வந்திருந்த நண்பரிடம் சின்நைனா கேட்டுக்கொண்டிருந்தார். எதையோ பிடிக்க வீசிய தூண்டிலாய் வார்த்தைகள் வந்து விழுந்தது. இதே வேறொரு சமயமாயிருந்திருந்தால் மறுத்துக் கூட பேசியிருப்பேன். ஆனால் அது சரியான நேரமும் கிடையாது, சரியான இடமும் கிடையாது. இருவருக்கும் போதை தலைக்கேறத் தொடங்கிய நேரம் அது. வாழ்க்கையிலே போதை என்னை போதை எப்போதுமே விடாமல் துரத்திக் கொண்டேயிருந்தது. பேச்சின் பாதையை மாற்ற விரும்பிய சித்தி. "இவன் ஒரு நாளைக்கு இரண்டு தடவைக்கு மேல யூரினே போறதில்லை." "வேறென்ன ஹீரோன்னு நினைப்பு, அடிக்கடி பாத்ரூம் போனால் அசிங்கம்னு நினைச்சிருப்பான்." சின்நைனா. "ஒரு நாளைக்கு கிளின்டன் எத்தனை தடவை பாத்ரூம் போனான், எந்த பாத்ரூமில போனான்னு கேட்டா தெரியும், ஆனா சொந்தமா பாத்ரூம் போகத் தெரியாதா." அவர் நண்பர். குடிச்சிட்டா எது வேணா பேசலாம், என்ன வேணா செய்யலாம் அதை காலையில் கூட இருந்தவங்க மறந்திறணும். இந்த ஒருமைப்பாடு இல்லாத குடிகாரனே கிடையாது நாட்டில். அப்பா, ஆறுமணிக்கெல்லாம் குடிச்சிட்டு போதையிறங்கும் வரைக்கும் அம்மாவை அடிப்பார். கண்ணுமண்ணு தெரியாம அடிச்சு உதடு, மூஞ்செல்லாம் கிழிஞ்சி வரும் எங்கம்மாவை என்னால பார்க்ககூட முடியாது. ஆனால் காலையில் முழுசா மாறியிருப்பார். அவரா இவர், நம்பவே முடியாது. எங்க குடும்பத்தின் பெரிய சோதனை இதுதான். இராத்திரியின் கொடுமைக்காக அற்புதமான பகலை இழக்க முடியாது. அதற்காக இரவின் இம்சைகளையும் பொறுத்துக்கொள்ள முடியாது. இதற்கெல்லாம் தற்கொலைங்கறது ஒரு முடிவு இல்லைன்னு தீர்மானிச்ச எங்க அம்மாவைத்தான் பாராட்டணும். தற்கொலை பண்ணிக்கொண்டவங்களோட சோகத்தை விட உயிரோடு வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் சோகம் குறைவான்னா கேட்டா நிச்சயமா கிடையாது. தற்கொலைங்கிறது கஷ்டத்தப்பொறுத்ததல்ல, மனதைப் பொறுத்தது. முப்பது வருஷமா தன்னை தவிர வேறொருவனை நினைத்துக்கூட பார்க்காத தன் மனைவியை நம்பாமல், இரவிலே தன் குழந்தைகளோடு அவளையும் அறைக்குள் பூட்டி வைக்கும் அப்பா. அவ்வளவு நேரம் எங்கப்பாகிட்ட பேச்சும் அடியும் வாங்கிய அம்மா, அப்புறம் எங்கக்காகிட்ட திட்டுவாங்கும். அவசரத்துக்கு பாத்ரூம் போகமுடியாத ஆத்திரம் அக்காவுக்கு. என்னென்ன கேள்விகள் என்னென்ன பேச்சுகள். அப்பப்பா. இத்தனையும் பார்த்துவிட்டு மத்தியானத்திற்கு பிறகு தண்ணீர் குடிப்பதையே நிறுத்திய நான் கூட சிலசமயத்தில் தொந்தரவு பண்ணியிருக்கிறேன், எங்க குடிச்சேன்னே தெரியாத தண்ணீரால். கணவனை எழுப்ப பயந்து ஏதேதோ வழி ஏற்பாடு செய்யும் எங்கம்மா. சிலசமயம் ஜன்னலுக்கு மேலேர்ந்து சிலசமயம் பீரோவுக்கு பின்னால, இன்னும் சிலசமயம் பெட்ஷீட்டுல இப்படியெல்லாம் ஆத்திரத்தை அடக்கியிருக்கிறோம். எங்கப்பாவுக்கு ரத்தம் வேகமா ஓடுன நாட்கள் அவை. இரத்தம் சுண்டத் தொடங்கிய பிறகு கொஞ்ச நாளைக்கு முன்பு வரை பயம் விட்டப் போய் கதவைத் தட்டியிருக்கிறோம் அவசரத்திற்கு. இளங்கலை முடித்து வேலை பார்க்கும் நான், இன்றும் பூட்டப்பட்டிருக்கும் இரவின் கதவு. அம்மாவிற்காக அக்காவிற்காக எதையும் கேட்கமுடியாத கோழையாய் நான் இப்போது டெல்லயில். என்னுடைய கோபங்களை இப்படித்தான் வெளிப்படுத்த முடிகிறது. கோழையென்று சொல்லிவிட்டேன தவிர இன்றும் கேட்டுவிடமுடியும் என்னால். ஆனால் இத்தனை நாள் அம்மா பட்ட கஷ்டத்துக்கெல்லாம் அர்த்தமே இல்லாமல் போய்விடும். அம்மா வெளியில் வந்தால் பிழைத்துக் கொள்வாள். நானும் எங்கக்காவும் கூட வாழ்கையில் உயர்ந்த நிலைக்கு வந்துவிடுவோம். ஏனென்றால் நாங்கள் வளர்ந்த நிலை அப்படி. ஆனால் எங்கப்பாவை நினைத்தால் தான் பயமாயிருக்கிறது. எங்கம்மா இல்லாமல் ஒருநாள் கூட வாழமுடியாதவர். இது தெரியாதவரும் இல்லை எங்க அப்பா. ஆனால் அந்த போதை அதை மறக்க வைக்கும். மனிதனை கற்பனை செய்துக்கூட பார்க்க முடியாதவனாய் மாற்றிவிடும். இன்று, திறந்தே இருக்கும் கதவு, வந்து கொண்டேயிருக்கும் தண்ணீர், அழகான வேலைப்பாட்டுடன் பாத்ரூம் இத்தனை இருந்தாலும் வந்துதான் தொலைக்கமாட்டேங்குது இங்கே. ஸ்ரீரங்கத்தில், திருச்சியிலென மாறி, மாறி நான் இருந்த பொழுது சொர்க்கவாசல் திறக்கும்போது ஸ்ரீரங்கம் கோயிலுக்கு போவது உண்டு. கடவுள் நம்பிக்கையில்லாத நான் சொர்க்கவாசல் திறக்கும் நாளில் மட்டும் கோவிலுக்கு போவது ஏதோவொரு நம்பிக்கையில் எங்கள் வீட்டு கதவும் திறக்குமென்றுதான். "டேய் பைத்தியமாடா நீ?" சமையல்கட்டில் இதுவரை சத்தம் போட்டுக்கொண்டிருந்த சித்தி, நேராய் இப்பொழுது என்னிடமேகேட்டுவிட்டாள், நானும் யோசிக்கிறேன், பைத்தியமாகத்தான் ஆகிவிட்டேனோ. காலம் என் வாழ்வில் போட்டுச்சென்ற சில முடிச்சுக்களை அவிழ்க்க முயன்ற நான் சிலசமயம் முடிச்சுகளில் மூழ்கி போய்விடுகிறேன்.இத்தனைக்கும் என்னைத் தெரியாதவளல்ல சித்தி. ஆனால் பலசமயம் யாராவது வந்து கலைத்தாலேயொழிய, நினைவு திரும்பாதவனாகையால், சித்தி இந்தமுறை திசைதிருப்ப முயன்றாள். "நீ திருந்தவே மாட்டியா? இப்ப எதைப்பத்தி யோசனை?" நான் அவள் கேள்விக்கு பதில் தராமல் அங்கேயிருந்த ஜன்னலையே பார்த்துக்கொண்டிருந்தேன். நீண்ட வீதி, அகலமான, அழகான சாலைகளும் சாலையோரங்களில் மரங்களும் கொண்ட வீடு, இரவில் எட்டு மணிக்கெல்லாம் உறங்கத்தொடங்கிவிடும் மக்கள், இன்னும் பசுமையாக ஞாபகம் இருக்கிறது அந்த நாட்கள். அம்மா விளக்குகள் அனைத்தையும் அணைத்துவிட்டு, முன்பக்கம் உள்ள ஹாலின் ஜன்னலருகில் நின்று கொண்டிருக்கும். எனக்கும் அக்காவுக்கும் முன்பே தோசை கொடுத்து நாங்கள் தூங்கத்தொடங்கியிருப்போம். நான் தூங்காமல் அம்மாவையே பார்த்துக் கொண்டிருப்பேன். அன்று அம்மாவின் கண்களில் தெரிந்தது, கோபமா, ஏக்கமா, பரிதாபமா, விரக்தியா, பயமா இன்னும் புரியவில்லை எனக்கு. சில சமயங்களில் நான் கண்விழித்திருப்பதைப் பார்த்து, அம்மாவிடம் செருப்படி வாங்கியிருக்கிறேன். ஒருவேளை அம்மா நினைத்திருக்கலாம் அடித்தால் அழுகையுடனே தூங்கிவிடுவேனென்று, அதுதான் நடந்திருக்கும் பல நாட்களில். ஒன்பது பத்து மணிக்கு, அப்பா ஊரையே அளந்து கொண்டுவருவார். வந்ததில் இருந்தே, அம்மாவிற்கு அடியும் இடியும் உதையும், எதுகை மோனைக்காக எழுதியதல்ல இது. அம்மாவின் தலையை பிடித்து அப்பா சுவற்றில் இடிக்கும் அந்த சப்தம் இன்னும் என் காதுகளில் கேட்டுக்கொண்டிருக்கிறது. உள்புற கதவின் அருகில் நின்று நான் அழுதுகொண்டேயிருப்பேன், தூக்கத்திலிருந்து எப்பொழுது எழுந்தேன் என்று தெரியாமல். அதுபோலவே தூங்கியும் போவேன். காலையில் அம்மா காப்பி போட்டு கொண்டுவந்து தவளையை தரையில் வைக்கும் சப்தம் கேட்டு எழுந்து வருவேன். அம்மாவும் அப்பாவும் சுவாரசியமாக தினமலர் படித்துக்கொண்டு உரையாடிக்கொண்டிருப்பார்கள். மிகச்சில நாட்களிலேதான் இரவின் தொடர்ச்சியாக பகல் எனக்கு இருந்திருக்கிறது. பல சமயங்களில் இரவில் ஒரு வாழ்கை முடிந்து பகலில் ஒரு புது வாழ்க்கை. ஆனால் நினைத்துப்பார்க்கிறேன், அந்த சமயங்களில் என் பக்கத்தில் படுத்திருந்த அக்கா என்ன செய்து கொண்டிருந்தாள் என்று. ஞாபகம்வரமறுக்கிறது. சில நாட்கள் ஆட்டோ வரும் இரவில், எங்கேயோ விழுந்து கிடந்த அப்பாவை தூக்கிக் கொண்டு, சிலசமயம் ஆள்வரும் உன்புருஷன் இங்கே விழுந்து கிடக்கிறார்னு தகவல் கொண்டு. அம்மா அந்த பத்துமணி க்கு மேல் போய் ஆட்களை தேடிப்பிடிச்சு அப்பாவை வீட்டுக்கு ஆட்டோவில் எடுத்துக்கிட்டு வரும். சாப்பிடாமல் படுத்தா குடல் எரிந்திடும்னு சாதத்தை கறைத்து மயங்கிக்கிடக்கிற அப்பாவுக்கு ஊட்டிவிடும். இந்தக் காலம் எல்லாம் மாறியது, அப்பா வீட்டிற்குள் தண்ணியடிக்கத் தொடங்கியிருந்தார். இதனால் அம்மாவிற்கு ஒரு இரண்டு மூன்று மணிநேரம் கூட அடி விழுந்தாலும் நான் அம்மாவை அந்த ஜன்னலருகில் பார்த்ததில்லை. அய்யோ அந்த முகம், அந்த அமைதியான சாலை, இரவு நேரம், மறக்கவே முடியவில்லை. இன்னமும் ஜன்னல்களைப் பார்த்தால் என் அடிவயிற்றை பிடிக்கும் ஒரு பயம் வருகிறது. பணம் நிறைய சம்பாதித்துவிட்டேன் ஆனாலும் என் வாழ்க்கையின் ஆரம்பக் காலத்தில் நடந்த பல நிகழ்ச்சிகளின் தாக்கம் இன்னும் என் மனதிலிருந்து நீங்கவேயில்லை. வீட்டின் கதவும் ஜன்னலும் உண்டாக்கும் நினைவுகள் இல்லை இவைகளெல்லாம் ஆனால் அந்த நினைவுகளை மீண்டும் உயிர்ப்பெற வைக்கும் சாமர்த்தியம் அவைகளுக்கு இருந்தது. - sOliyAn - 12-13-2005 அற்புதமான படைப்பு. யதார்த்தமான கதையோட்டம். சொந்த அனுபமோ என எண்ண வைக்கும் எழுத்துநடை. இதே போன்ற நிகழ்வுக்கு முன்பு ஈழமும் விதிவிலக்கல்ல. ஆனால் தற்போது எவ்வாறு எனத் தெரியவில்லை. வாழ்த்துக்கள் மோகனதாஸ் - Saanakyan - 12-13-2005 «ó¾ ¾¡¨Â ¿¢¨ÉòÐ ¸ñ¸Äí¸ ÅðÊí¸§Ç º¡÷! þ¨¾ Å¡º¢ò¾¡ÅÐ ¿õÁ ¡ú¸Ç ¦ÀÕíÌÊ Áì¸û º¢ýÉôÒ, ¦ÀâÂôÒ, º¡ò¾¢Ã¢Â¡÷, Ó¸ò¾¡÷ Òк¡ Åó¾ ÒÙ¸÷ ¦À¡ý¨É¡ ¾¢Õóи¢È¡÷¸Ç¡ À¡÷ô§À¡õ! - RaMa - 12-13-2005 கதை மிகவும் யாதர்தமாக இருக்கின்றது மோகனதாஸ். பாவம் அந்த அம்மா.. எவ்வளவு அடி உதைகளையும் வாங்கி கொண்டு அன்பாக குடும்பம் நடத்தினவே அதற்காக அந்த தாயை நினைக்கையில் பெருமையாக இருக்கின்றது - pulukarponnaiah - 12-13-2005 நல்லா எழுதுறீங்க ...... நான் இனிக் குட்டிகிறேல்ல எண்டு முடிவு பண்ணியிட்டன்.. இப்படி எத்தனை தடவை சொன்னனான் எண்டு மட்டும் கேக்காதையுங்கோ ஏனெண்டா என்ர பேர் அப்படி.... ஒரு கோப்பயிலே என் குடி இருக்கும் , அந்த நோக்கயே இது திருடி விடும்..... மோகன் தாஸ் என் நெஞ்சத் தொட்டுட்டீங்க....... இன்னொரு காதல் கதை எழுதுங்க வாசிக்க ஆவலா இருக்கு... - Vasampu - 12-13-2005 மோகன்தாஸ் கதை யதார்த்தமாக இருக்கின்றது. இது உங்கள் சொந்த <b>ஆக்கமா??</b> அல்லது <b>அனுபவமா??</b> - kuruvikal - 12-13-2005 தமிழகத்தில் தொடரும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளின் வடிவத்தில் ஒன்றைச் சொல்லும் உங்கள் கதை நன்று..! தமிழகம் திருந்துமா...இப்படியான எழுத்துக்களைப் படித்தாவது..???! :?:
- kuruvikal - 12-13-2005 sOliyAn Wrote:அற்புதமான படைப்பு. யதார்த்தமான கதையோட்டம். சொந்த அனுபமோ என எண்ண வைக்கும் எழுத்துநடை. ஈழத்தில் என்ன உலகம் பூராவும் இருக்கு..! இப்ப இங்கிலாந்திலும் இரவிரவா குடிச்சிட்டு றோட்டிலையே அடிபடுகுதுகள்..இருந்தாலும் தமிழகத்தில் நிலையூன்றி விட்ட பெண்கள் மீதான ஆண் மேலாதிக்க எண்ணம் பல தீயவிளைவுகளை இன்னும் தடையின்றி தந்து கொண்டுதான் இருக்கிறது..! அதன் ஒரு விளைவுதான் இதுவும்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- sOliyAn - 12-14-2005 இல்லை குருவிகள்.. நான் ஈழத்தில் முன்பு நடந்த நிகழ்வு என குறிப்பிட்டது.. இரவிராவா புருசனிடம் அடி உதை வாங்கும் பெண், மறுநாள் காலை எதுவுமே நடைபெறாததுபோல அவனுடன் சிரித்துப் பேசிக் கொண்டிருப்பாள்.. அதைத்தான் குறிப்பிட்டேன்.. இந்த நிகழ்வு மேற்கத்தைய நாடுகளிலும் இருக்கிறதா, என்ன? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- vasanthan - 12-14-2005 கதை மிகவும் யதார்த்மாகவிருந்தது. <b>வீட்டுக்கு வீடு வாசல்படி</b> :!: :?: :oops:
- அருவி - 12-14-2005 Quote:பணம் நிறைய சம்பாதித்துவிட்டேன் ஆனாலும் என் வாழ்க்கையின் ஆரம்பக் காலத்தில் நடந்த பல நிகழ்ச்சிகளின் தாக்கம் இன்னும் என் மனதிலிருந்து நீங்கவேயில்லை. அனேகமாகப் பலரிற்கும் பொருந்திவரும் வசனம் ஒன்று.. - Saanakyan - 12-15-2005 pulukarponnaiah Wrote:மோகன் தாஸ் என் நெஞ்சத் தொட்டுட்டீங்க.......«ôÒ þó¾ ź¢ÄÔõ ¯í¸ÙìÌ ¸¡¾ø ¸¨¾ §¸ì̧¾¡? þ¨¾ ¾¡ý ±ñÀ¾¢Öõ ¬¨ºÅÕõ ±ñÎ ¦º¡øÖÅ¢ÉÁ¡ìÌõ! - Saanakyan - 12-15-2005 sOliyAn Wrote:இல்லை குருவிகள்.. நான் ஈழத்தில் முன்பு நடந்த நிகழ்வு என குறிப்பிட்டது.. இரவிராவா புருசனிடம் அடி உதை வாங்கும் பெண், மறுநாள் காலை எதுவுமே நடைபெறாததுபோல அவனுடன் சிரித்துப் பேசிக் கொண்டிருப்பாள்.. அதைத்தான் குறிப்பிட்டேன்.. இந்த நிகழ்வு மேற்கத்தைய நாடுகளிலும் இருக்கிறதா, என்ன? <!--emo&§º¡Æ¢Âý, §Áü¸ò¨¾Â ¿¡Î¸Ç¢ø ºüÚ Å¢ò¾¢Â¡ºÁ¡ÉÐ..! þÃÅ¢ÃÅ¡¸ þÃñΧÀÕõ ÌÊòÐô§À¡ðÎ «Ê ¯¨¾ ÀÎÅ¡÷¸û. ÁÚ¿¡û ¸¡¨Ä ±Ð×§Á ¿¼ì¸¡¾¨¾ô §À¡Ä þÕÅÕõ º¢Ã¢òÐô §Àº¢ì¦¸¡ñÎ þÕôÀ¡÷¸û!! - Saanakyan - 12-15-2005 kuruvikal Wrote:இருந்தாலும் தமிழகத்தில் நிலையூன்றி விட்ட பெண்கள் மீதான ஆண் மேலாதிக்க எண்ணம் பல தீயவிளைவுகளை இன்னும் தடையின்றி தந்து கொண்டுதான் இருக்கிறது..! அதன் ஒரு விளைவுதான் இதுவும்...! <!--emo&ÌÕÅ¢¸û ... þó¾ì ¸ÕòÐ ¸¨¾Â¢ø À¢Ã¾¡ÉÁ¡¸ Å󾾡¸ ±ÉìÌô ¿¢¨ÉÅ¢ø¨Ä! ¸¨¾Â¢ø ÅÕõ ¾ó¨¾ þÂøÀ¢ø ¿øÄ ÁÉ¢¾÷, ÁЧÀ¡¨¾ ¾¡ý «Å¨Ã ¾¨Ä¸£Æ¡ì̸¢ÈÐ ±ýÚ¾¡ý ¸¨¾Â¢ø Å󾾡¸ ¿¢¨É×! - pulukarponnaiah - 12-15-2005 Saanakyan Wrote:[quote=pulukarponnaiah]மோகன் தாஸ் என் நெஞ்சத் தொட்டுட்டீங்க.......«ôÒ þó¾ ź¢ÄÔõ ¯í¸ÙìÌ ¸¡¾ø ¸¨¾ §¸ì̧¾¡? þ¨¾ ¾¡ý ±ñÀ¾¢Öõ ¬¨ºÅÕõ ±ñÎ ¦º¡øÖÅ¢ÉÁ¡ìÌõ! மோனை சாணாக்கியா காதலுக்கு வயசு இருக்கே, இல்லக் கேக்கிறன், நானும் சரசுவும் இப்பவும் லவ்விக் கொள்ளுறம். நரை விழுந்தாலும் மனசு இன்னும் யங் தான் கண்டியோ. அதோட மோகனதாஸ் தம்பியின்ட காதல் கதை பாகம் இரண்டைப் படிச்சனான்.அது எதோ பேருக்கு எழுதின கதை மாதிரிக் கிடக்கு, மனசில ஒட்டேல்ல. ஏன் தம்பி இங்க சில பேர் சொன்னதுகளை சீரியசா எடுகிறாய்.இங்க சிலதுகள் இப்படித் தான் தான் பிடிச்ச முயலுக்கு மூன்று கால் எண்டு வாதாடுங்கள்.சின்னச் சிறிசுகள், அதுகள் எதோ உளறிச்செண்டு நீயும் மினக் கட்டு ஒரு கதை சோடிச்சிருகிறாய் ,ஒண்டும் ஒட்டேல்ல. நீ பேசாம உன்ற்ற மனசில வாறதை எழுது.அதோட ஈழத்து எழுத்தாளர் எழுதினதுகளையும் தேடி வாசி.அது தான் நல்லது. வாசிக்க வாசிக்கத் தான் ,எழுதிற திறனும் கூடும்.சும்மா இங்க நிண்டு கொண்டு புடுங்குப் படாமா உன்ர வேலயப் பார்.அத்தோட அங்க வாற பேப்பர்களிலேயும் இப்படிக் கதயள எழுது.அப்ப தான் அங்க சனத்துக்கு ஈழத்தில என்ன நடக்குது எண்டு தெரியும். என்ன நான் சொல்லுறது சரியோ....... - sOliyAn - 12-15-2005 புளுகர் பொன்னையா (வரணியூரான்) சார்! நீங்க சுடப்பட்டா என்ன, அமரரானா என்ன, வயசுக்கு மூத்தவர் எண்டா என்ன.. கதைக்கும்போது நாகரீகமா கதைக்க இந்தக் காலத்திலயாவது பழகுங்க.. அதுதான் நல்லது.. இல்லாட்டி யாழ் மொடரேட்டர்மார் கவனிப்பாங்கன்னு நினைக்கிறேன். - pulukarponnaiah - 12-15-2005 என்ன சோழியன் தம்பி உமக்கு நான் என்ன கெடுதல் செய்தன்.இப்படி மொட்டயாச் சொன்னா எப்படி.என்ன அனாகரிகமாச் சொன்னன் எண்டு சொன்னா திருத்தி எழுதிறன்.அத விட்டுட்டு மாட்டுறுதினர் கவனிப்பினம் எண்டு, சிண்டு முடியிறியள். நான் ஊரில கதைகிற மாதிரித் தான் கதைகிறன்,அது உங்கள மாதிரி அறிவுசீவியளுக்குப் பிடிக்கேல்ல எண்டா நான் இங்க வரேல்லத் தம்பி.எல்லாரும் ஒரே மாதிரி இல்லைக் கண்டியளோ.இல்லை இங்க இப்படித்தான் கதை எழுத வேணும்,இப்படித் தான் கதைக்க வேணும் எண்டா அதுக்கு எதோ ஒரு பேர் சொல்லுவாங்கள் கண்டியளோ. என்ன நான் சொல்லுறது.... - kuruvikal - 12-15-2005 Saanakyan Wrote:[quote=kuruvikal]இருந்தாலும் தமிழகத்தில் நிலையூன்றி விட்ட பெண்கள் மீதான ஆண் மேலாதிக்க எண்ணம் பல தீயவிளைவுகளை இன்னும் தடையின்றி தந்து கொண்டுதான் இருக்கிறது..! அதன் ஒரு விளைவுதான் இதுவும்...! <!--emo&ÌÕÅ¢¸û ... þó¾ì ¸ÕòÐ ¸¨¾Â¢ø À¢Ã¾¡ÉÁ¡¸ Å󾾡¸ ±ÉìÌô ¿¢¨ÉÅ¢ø¨Ä! ¸¨¾Â¢ø ÅÕõ ¾ó¨¾ þÂøÀ¢ø ¿øÄ ÁÉ¢¾÷, ÁЧÀ¡¨¾ ¾¡ý «Å¨Ã ¾¨Ä¸£Æ¡ì̸¢ÈÐ ±ýÚ¾¡ý ¸¨¾Â¢ø Å󾾡¸ ¿¢¨É×! அப்படியோ...அப்ப தந்தைக்கு வெறியென்டா... மனிசியை அடிக்கனும் அப்படியா.. ஏன் ஒரு மரத்துக்கு அடிச்சு வெறியைத் தீர்க்கலாமே...அப்படின்னு..கதை எழுதலாமே..! வெறியோ வெறியில்லையோ...ஆண்களின் பலத்தை பெண்களில் பிரயோகிப்பதே நடக்கிறது..! வெறியில் கூட ஆணுக்கு பெண்ணின் மீது வன்முறையைப் பிரயோகிப்பதே ஆறுதலாக இருப்பதையே கதை சாரமாக எமக்கு காட்டுகிறது...!!! உங்களுக்கு அப்படித் தெரியவில்லை என்றால் எனி வெறிகாரர்களுக்கு இடையில் ஒரு மெழுகு பொம்மையை வைத்து அதுக்கு அடிக்கச் சொல்லுங்கள்..! தமிழத்தில் ஆண் மேலாதிக்க உணர்வே எங்கும் மலிந்து கிடக்கிறது..! அதன் ஒரு விளைவே இது என்பதே எங்களால் சொல்லப்பட்டது..! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Jenany - 12-15-2005 கதை ரொம்ப நல்லா இருக்குங்க,... தொடர்ந்து எழுதுங்க. இப்படி கதையை வாசித்தாவாது யாரும் ஆண்கள் திருந்தினமா என்று பார்ப்பம். - sOliyAn - 12-16-2005 pulukarponnaiah Wrote:என்ன சோழியன் தம்பி உமக்கு நான் என்ன கெடுதல் செய்தன்.இப்படி மொட்டயாச் சொன்னா எப்படி.என்ன அனாகரிகமாச் சொன்னன் எண்டு சொன்னா திருத்தி எழுதிறன்.அத விட்டுட்டு மாட்டுறுதினர் கவனிப்பினம் எண்டு, சிண்டு முடியிறியள்.நான் எனது கருத்தை முளையிலேயே கூறினேன்.. அதற்காக நீங்கள் எழுதாமல் இருப்பது நல்லதல்ல. நானும் உங்களைப்போல ஒரு சாதாரண கள உறுப்பினன்தான். சில கருத்துகளை சில சந்தர்ப்பங்களில் ஒருமையில் எழுதும்போது.. அது மற்றவரையும் ஏதாவது மரியாதையீனமாக எழுதத் தூண்டலாம் என்ற எண்ணத்திலேயே கூறினேன்.. இந்த சோழியிட்ட அம்மா ஏதாவது வேலை வாங்குவதானால்கூட.. 'அப்பு.. ராசா.. என்ரை கள்ளக்குட்டீ.. தண்ணியள்ளிக் கொண்டு வாடீ..' எண்டு சொன்னாதான் வேலை நடக்கும்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> மற்றும்படி நீங்க எப்படி எழுதினாலும் எனக்கு பிரச்சினை இல்லை. :wink:
|