![]() |
|
வவுனியாவில் காவல்துறை உறுப்பினரை சுட்டுக்கொன்றுவிட்டு விடுத - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: வவுனியாவில் காவல்துறை உறுப்பினரை சுட்டுக்கொன்றுவிட்டு விடுத (/showthread.php?tid=2078) |
வவுனியாவில் காவல்துறை உறுப்பினரை சுட்டுக்கொன்றுவிட்டு விடுத - adsharan - 12-11-2005 வவுனியா பொது மருத்துவமனைக்குள் உள்நுழைந்த இனந் தெரியாத நான்கு நபர்கள் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த விடுதலைப் புலி உறுப்பினரைக் கடத்திச் சென்றுள்ளதுடன் அவருக்கு காவலாக நின்ற சிறிலங்கா காவல்துறை உறுப்பினரை சுட்டுக் கொலை செய்துள்ளனர். கடந்த வாரம் மன்னார் பள்ளிமுனையில் வைத்து 5 விடுதலைப்புலி உறுப்பினர்கள் சிறிலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட விடுதலைப்புலி உறுப்பினர்களில் இரண்டு பெண் உறுப்பினர்களும் அடங்குவர். இவர்களில் ஒரு பெண் போராளி கைது செய்யப்பட்டவுடன் சயனைட் அருந்தி ஆபத்தான நிலையில் வவுனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். வவுனியா பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இன்று கடத்தப்பட்டவர் கரும்புலி உறுப்பினர் என்றும் அவரின் பெயர் குணரட்ணம் புவனேஸ்வரி என்றும் தெரிவிக்கப்படுகிறது. மாத்தளையைச் சேர்ந்த மகேஸ் ரணசிங்க என்ற சிறிலங்கா காவல்துறை கான்ஸ்டபிளே துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி பலியானவராவார். விடுதலைப்புலி உறுப்பினர்களைக் கடத்திச் சென்றவர்கள் வவுனியா தாண்டிக்குளம் பிரதேசத்திற்கு தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. தாண்டிக்குளம் பூந்தோட்டம் பகுதியில் சிறிலங்கா காவல்துறையினர் மேற்கொண்ட தேடுதலில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா பொது மருத்துவமனை சம்பவத்தையடுத்து வவுனியா பிரதேசத்தில் சிறிலங்கா காவல்துறையினர் தற்போது தேடுதல்களை மேற்கொண்டுள்ளனர். http://www.eelampage.com/index7.php?cn=22430 - Thala - 12-11-2005 தாண்டிக்குளத்தை தாண்டிக் கொண்டு போட்டாங்கள் எண்டு அழுகிறதுக்குத்தான் இந்தக் கதை போலகிடக்கு.... |