| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 282 online users. » 0 Member(s) | 280 Guest(s) Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,311
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,231
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,606
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,296
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,638
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,063
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,465
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,487
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,037
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,239
|
|
|
| கழுதைகள் மன்னிக்கவும்! |
|
Posted by: SUNDHAL - 12-13-2005, 02:26 PM - Forum: நகைச்சுவை
- Replies (16)
|
 |
கழுதைகள் மன்னிக்கவும்!
(கோர்ட்டில் கேஸ் போட வேண்டாம்)
கற்பனை: முகில்
ஆட்டையாம்பட்டி என்றொரு அழகிய குக்கிராமம். (இந்தக் கிராமம் தமிழ்நாட்டில் இல்லை. ஏன் இந்தியாவிலேயே இல்லை. இது ஒரு வெர்ச்சுவல் கிராமம் என்று வைத்துக் கொள்வோமே!) இது திரு மற்றும் திருமதி என்ற இரண்டு கதாபாத்திரங்களைச் சுற்றி வரும் கதை. அவர்களின் மழலைக் காலத்தில் ஆரம்பித்து இளமைக் காலத்தில் தொடர்வதாய் உருவாக்கப்பட்ட கதை.
திருவுக்கு அப்போது ஒரு வயது இருக்கும். திருமதிக்கு வயது ஆறு மாதமிருக்கும். இரண்டு பேருமே செம அழகாக இருப்பார்கள். ஊரே கொண்டாடும் அழகு எனச் சொல்லலாம்.
(திரு ஓர் ஆண் கழுதை, திருமதி ஒரு பெண் கழுதை என்பதை இங்கே சொல்லிவிடுகிறேன்.)
இப்படி எல்லாச் சுவர்களிலும் திரு தன் முதுகு ரேகையை பதித்து விட, அதற்கு மேல் தன் முதுகு ரேகையை அதில் பதிக்க அருவருப்படைந்து அவஸ்தைப்படும் திருமதி. இப்படி திருவின் மேல் திருமதிக்கு விறுவிறுவென வெறுப்பு வளர்ந்து கொண்டே போனது.
இரண்டு வருடங்கள் போனது.
அன்று தான் உண்டு கொண்டிருந்த ஒரு வாரப் பத்திரிகையில் ஒரு பேப்பரை திருமதிக்கு கொடுத்தான் திரு. ஆனால் திருமதி அதை வாங்கிக் கொள்ளவில்லை. "வேண்டாம்' என மறுத்தபோது திருமதியின் முகத்தில் வெளிப்பட்டது வெட்கம் கலந்த கோபமா, அல்லது வெறுப்பு கலந்த ஆத்திரமா எனத் திருவால் புரிந்துகொள்ள முடியவில்லை. காரணம் அந்தப் பேப்பரில் இருந்த வார்த்தைகள் "ஓடிப்போகலாமா?''
தினம் தினம் திருமதி செல்லும் பாதையில் ஒரு ஒற்றை ரோஜாவோடு காத்திருக்கும் திரு. ஒருநாளும் அந்த ரோஜாவை வாங்கிக்கொண்டதில்லை திருமதி. அதுக்காக கவலைப்பட்டுக்கொண்டு கண்ணீர் விட்டதில்லை திரு. என்ன செய்வான்? வேறென்ன.. ரோஜாவைத் தின்று விடுவான்.
ஆட்டையாம்பட்டியில் அந்த வருடம் கோடைக்காலத்தைத் தாண்டியும் மழை ஒரு எஸ்.எம்.எஸ். கூட அனுப்பவில்லை. விவசாயம் படுத்துவிட்டது. கண்மாய் நிர்வாணமாய் கிடந்தது. கள்ளிச் செடிகளும், கருவேலம் மரங்களும்தான் பாக்கியிருந்தன.
"எப்பா பதினைஞ்சு வருசங்கழிச்சு இப்படி பஞ்சம் பல்லைக் காட்டுது. நம்ம ஊரு எல்லைச்சாமிக்கு வர்ற வெள்ளிக்கிழமை பொங்க வைச்சு பூசாரி கிட்ட குறி கேட்டுருவோம்!' எனப் பஞ்சாயத்துப் பெரிசு தன் பஞ்ச் தீர்ப்பை வழங்கினார்.
"ஏஏஏய்ய்ய்..நாஞ் சாமி வந்திருக்கேன்..ஊருல நல்ல காரியம் ஏதோ தடங்கலாயிடுச்சு. பெரும் தெய்வக் குத்தம் ஆயிடுச்சு! மழை தண்ணீ வேணுமுன்னா இளங் கழுதைகளுக்கு கண்ணாலம் செஞ்சு வைக்கிறதுதான் ஒரே பரிகாரம். வர்ற பவுர்ணமி அன்னிக்கு கண்ணாலம் நடக்காட்டி அடுத்த ஏழு வருசங்களுக்கு பஞ்சந்தேன்..பட்டினிதேன்!' எனப் பூசாரி கூறிய வாக்கு திருமதியை பூச்சாண்டி காட்டியது. காரணம் ஊரிலுள்ள ஒரே இளம் பெண் கழுதை அவள் மட்டும்தான். கல்யாணம் சரி. இதற்காக வெளியூரில் அல்லது வெளிநாட்டிலா அவளுக்கு மாப்பிள்ளை தேடப் போகிறார்கள். திரு மட்டும்தான் ஒரே சாய்ஸ்!
நினைக்க நினைக்க எரிச்சலாக வந்தது. போயும் போயும் அவனுக்கா வாழ்க்கைப் பட வேண்டுமென நினைத்த திருமதி அன்று இரவே ஊரை விட்டு ஓடிப்போக முடிவு செய்தாள். பதுங்கிப் பதுங்கி தெருத்தெருவாக ஒதுங்கி ஒதுங்கி அவள் நழுவிக் கொண்டிருக்கும்போதே பார்த்துவிட்டான் திரு. அவள் ஓட, அவன் துரத்த..அதற்கு மேல் துரத்த முடியாமல் சோர்ந்து போய் தன் சாதகத்தை ஆரம்பித்துவிட்டான் திரு. ஊரே ஒன்றுகூடி விரட்டிப் பிடித்தனர் இருவரையும்.
"ஏலேய்..இன்னொரு தெய்வக்குத்தம் நடக்கப் பாத்துச்சுலே! கழுதைய்ங்க தப்பிச்சுப் போயிருந்துச்சுன்னா வேற கழுதைய்களுக்கு நாம எங்கிட்டுப் போறது? இந்தக் கல்யாணச் சோடிகளை நம்மூரு எல்லைச் சாமி கோயில்லயே கட்டிப் போட்டு, காவலா ஒரு ஆளையும் போடுங்கவே!' என்று ஊர்ப்பெருசு ஒருவர் கூற திருமதிக்கு தலை சுற்றியது.
"ஒரு பொம்பளையோட மனசு இன்னொரு பொம்பளைக்குத்தான் புரியும். நம்ம மனசைப் புரிஞ்சுக்குற மாதிரி இங்க எவளுமே இல்லையே' தனக்குள் புலம்பிக் கொண்டிருந்தாள் திருமதி. அவளைச் சந்தோஷமாக உரசியபடி பல்லைக் காட்டிக் கொண்டிருந்தான் திரு.
கல்யாண நாள் வந்தது. தனக்கு பட்டுவேட்டி சட்டை கிடைக்கும், அவளுக்குச் சின்னாளபட்டிச் சேலை கிடைக்கும் என நினைத்துக் கொண்டிருந்த திருவின் நினைப்பில் அரை லாரி மண் விழுந்தது. சிக்கனமாக தண்ணீரைச் செலவழித்து குளிப்பாட்டி விட்டனர். ஏழெட்டு பூக்களால் கட்டப்பட்ட மாலைகள் இரண்டு. (மொத்தமே ஏழெட்டு பூக்கள்தாங்க!) திருமதியின் நெற்றியில் பெரிதாக வைக்கப்பட்ட பொட்டு. ஊரே கூடி நின்றது. ஒரு மஞ்சள் கயிறுடன் பூசாரி தயாராக இருந்தார்.
கொஞ்சமாவது வெட்கப்படுவாள் மணப்பெண் என எதிர்பார்த்து ஏமாந்தான் திரு. "கழுதைக்கு வாக்கப்பட்டா கனைச்சுத் தானே ஆகணும்' என்று தன்னைத் தானே நொந்து கொண்டாள் திருமதி.
நையாண்டி மேளம் கொட்ட, வெற்றிலைக் கறை படிந்த வாயோடு புன்னகைத்து திருவின் சார்பில் திருமதிக்குத் தாலி கட்டினார் பூசாரி. அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பதற்குப் பதிலாக பூசாரியை மிதித்து அவர் வலியால் அலறுவதைப் பார்க்க வேண்டும் எனத் துடித்தாள் திருமதி. வாழ்நாள் சாதனையாளர் விருது வாங்கியது போல் பெருமிதத்துடன் நின்று கொண்டிருந்தான் திரு.
கல்யாணச் சாப்பாடு என அல்லோகலகல்லோகலப் பட்டுக் கொண்டிருந்தது. திருவுக்கும் திருமதிக்கும் கழுத்தில் போடப்பட்ட அந்த "மெகா' மாலைதான் கல்யாணச் சாப்பாடு. சாப்பிட்ட மக்களெல்லாம் ஏப்பம் விட்ட வாயோடு மழை வருகிறதா இல்லையா என வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருக்க, சூரியனால் வியர்வை மழை பொழிந்து கொண்டிருந்தது.
ஒரு வாரமாயிற்று. "கழுதைக்குக் தெரியுமா காதலோட வாசனை' எனத் திரு வெறுக்குமளவுக்கு சண்டித்தனம் செய்து கொண்டிருந்தாள் திருமதி. "தாலி கட்டின புருஷனை மதிக்க மாட்டீங்கியே! நீயெல்லாம் ஒரு பொம்பளையா?' கோபமாகக் கத்தினான் திரு. "இது தாலிக் கயிறில்ல...என் கழுத்துல ஏறுன தூக்குக்கயிறு!' பதிலுக்குக் கத்தினாள் திருமதி. இதுவே வாடிக்கையாயிற்று.
"மழை பெஞ்சிடுச்சுன்னா இந்தத் தாலியைக் கழட்டி வீசிரலாம். இல்லை சாஸ்திரத்துக்கு கல்யாணம் தான் பண்ணியாச்சே. இனிமே இவன் கூட வாழப் பிடிக்கலன்னு டைவர்ஸ் அப்ளை பண்ணலாமா' என்றெல்லாம் யோசித்தாள் திருமதி.
மழை வந்த பாடில்லை.
மூன்று மாதங்கள் கழிந்தது. இடைப்பட்ட நாட்களில் திரு-திருமதி ஆதர்ச தம்பதிகளாக மாறிப் போயினர். "சோடின்னா இதான்யா சோடி' எனச் சாலமன் பாப்பையா பட்டிமன்றம் வைத்தால் தீர்ப்பு சொல்லுமளவுக்கு மாறிப் போயினர்.
மேகம் கருத்தது. ரம்பா, மேனகா, ஊர்வசி என்ற பெயர் கொண்ட மூன்று புயல்கள் அடுத்தடுத்து கரையைக் கடந்தது. கண்மாய் மட்டுமல்ல ஆட்டையாம்பட்டியே நிறைந்து போனது. எங்கு பார்த்தாலும் வெள்ளம்.
"ஏஏய்ய்ய்... மழை நிக்கணும்னா அந்தக் கழுத கழுத்துல கெடக்குற தாலியைக் கழட்டணும். தானா நிக்கும் மழ' இடுப்பளவு நீரில் ஆவேசமாக வாக்குச் சொன்னார் பூசாரி.
"நானாடா உங்களைக் கண்ணாலம் பண்ணிவைக்கச் சொன்னேன். யேய் நீங்க நெனைச்சா கட்டுறத்துக்கும் தேவையில்லாட்டி எடுக்கறதுக்கும் என் தாலி என்ன சினிமா ஷூட்டிங்குக்கு போட்ட செட்டா! புருசன் உசிரோட இருக்கறப்ப தன் தாலியைக் கழட்டிக் கொடுக்க கலாச்சாரத்தைக் கட்டிக் காக்குற எந்தப் பொம்பளையும் சம்மதிக்க மாட்டா! முட்டாப் பசங்களா உங்களால முடிஞ்சதைப் பண்ணிக்கோங்கடா' உள்ளுக்குள்ளேயே குமுறினாள் திருமதி.
சிறிசு முதல் பெருசு வரை ஊரே திரண்டு தேடியது திருமதியை. மழை கொட்டிக் கொண்டிருந்தது. ஊரைத் தாண்டி தண்டவாளத்தின் மேல் ஒரு நிம்மதியான பாதுகாப்பான இடத்தைத் தேடி ஓடிக் கொண்டிருந்தனர் அந்தக் காதல் ஜோடிகள்.
கழுத்தில் மஞ்சள் கயிறோடு திருமதி உங்கள் ஊருக்கும் தஞ்சம் புக வரலாம். பார்த்தால் பாவம் அவர்களை வாழ விடுங்கள்!
|
|
|
| அன்பென்னும் |
|
Posted by: Mathuran - 12-13-2005, 02:20 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (1)
|
 |
மனமுடைந்து போகவில்லை
மாலையில் உறன்கியவன்
உயிரோடு மீள்வானோ
என்னும் கவலையுமில்லை.
அல்லல் பட்டு உழைக்கும்
எமக்கு வேண்டியதெல்லாம்
உறுதியும் நேர்மையும்.
பூமி விட்டு செல்லும்போது
காதலையா கொண்டு செல்வோம்?????
அகன்ற கைகளை விரித்து
அடுத்தவர்க்கு உதவி,
வரைகின்ற அன்பென்னும் ஓவியம்
நீரிலும் கூட நிலைத்திருக்கும்.
|
|
|
| சின்னப்பு நீங்களா போண் பன்னது? |
|
Posted by: SUNDHAL - 12-13-2005, 02:09 PM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (11)
|
 |
குடிபோதையில் போலீசுக்கு டெலிபோன் செய்த கார்டிரைவர்
ஜெர்மனி நாட்டில் மோன்ஹெய்ம் நகரைச்சேர்ந்த 31வயது இளைஞர் அரசு அலுவலகத்தில் வேலைசெய்துவருகிறார்.அவர் 8ஆண்டுகளுக்கு முன்பு ஒருவிபத்தில் சிக்கியதால் அவரது லைசென்ஸ் பறிக்கப்பட்டது.அவர் நண்பர் ஒருவரிடம் காரை இரவல் வாங்கிக்கொண்டு அதை ஓட்டிச்சென்றார்.வழியில் கார் பழுதாகி நின்றுவிட்டது.
உடனே அவர் கார் மெக்கானிக்குக்கு டெலிபோன் செய்ய நினைத்து போனை எடுத்தார்.அவர் அப்போது குடிபோதையில் இருந்ததால் மெக்கானிக்குக்கு போன்பேசுவதாக நினைத்து போலீசுக்கு போன் செய்தார்,,
போனில் பேசும்போது நான் குடிபோதையில் இருக்கிறேன்.என்னிடம் லைசென்சும் இல்லை.அதனால் போலீசார் வருவதற்குள் சீக்கிரமாக வந்துவிடு என்று கூறினார்.போலீசார் விரைந்து சென்று அவரை கைது செய்தனர்.
Thanks:Thanthi.......
|
|
|
| ஹெலிகாப்டரை கடத்திய திருடர்கள் |
|
Posted by: SUNDHAL - 12-13-2005, 02:06 PM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (1)
|
 |
ஹெலிகாப்டரை கடத்திய திருடர்கள்
பிரான்சு நாட்டு சிறையில் இருந்து 3 கைதிகள் தப்பி ஓடினர். அருகில் உள்ள விமான நிலையத்துக்குள் நுழைந்த அவர்கள் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த ஹெலிகாப்டரை கடத்திச்சென்று விட்டனர்.
இந்த ஹெலிகாப்டர் ஆல்ப்ஸ் மலை மீது ஏறிய மலை ஏறும் குழுவினரை அழைத்து வருவதற்காக இந்த ஹெலிகாப்டர் அங்கு நிறுத்தப்பட்டு இருந்தது.
|
|
|
| தமிழர்கள்- சிங்களர்கள் ஒற்றுமைக்காகதமிழ்படத்தில் நடிக்கும் ச |
|
Posted by: aathipan - 12-13-2005, 12:39 PM - Forum: சினிமா
- Replies (2)
|
 |
தமிழர்கள்- சிங்களர்கள் ஒற்றுமைக்காக
தமிழ்படத்தில் நடிக்கும் சிங்கள கதாநாயகன்
சென்னைஇ டிச.13-
தமிழர்களுக்கும்இ சிங்களர்களுக்கும் இடையே ஒற்றுமையை வலியுறுத்திஇ சிங்கள பட கதாநாயகன் ஒருவர்இ தமிழ்படத்தில் நடிக்கிறார்.
சிங்கள கதாநாயகன்
இலங்கையை சேர்ந்த நடிகர் ரஞ்சன் ராமநாயக்க. இதுவரை 70 சிங்கள படங்களில் கதாநாயகனாக நடித்து இருக்கிறார்.
இவர் ஹமெய்க்காவலன்' என்ற புதிய தமிழ்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.
இந்த படத்தின் தொடக்கவிழா சென்னை ஏவி.எம். ஸ்டூடியோவில் நேற்று நடந்தது.
பேட்டி
தொடக்கவிழா பூஜை முடிந்ததும் ரஞ்சன் ராமநாயக்க நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
விஜயகுமார் என்ற பழம்பெரும் சிங்கள நடிகரின் உறவினர் நான். 70 சிங்கள படங்களில் நடித்து இருக்கிறேன். அதில் 50 படங்கள் வெற்றி பெற்றுள்ளன.
ஆசை நிறைவேறியது
தமிழில் இருந்து சிங்களத்தில் ஹரீமேக்' செய்யப்படும் பல படங்களில் நடித்து இருக்கிறேன். அதில் ரஜினிகாந்த் நடித்த ஹபாட்ஷா'வும் ஒன்று. அது ஹஒன் ஷாட்' என்ற பெயரில் சிங்களத்தில் எடுக்கப்பட்டது.
தமிழ் படத்தில் நடிக்கவேண்டும் என்ற என் நீண்டகால ஆசை இப்போது நிறைவேறி இருக்கிறது.
ஒற்றுமை
தமிழர்களுக்கும்இ சிங்களர்களுக்கும் இடையே ஒற்றுமையை வலியுறுத்தி இந்த படத்தில் நடிக்கிறேன்.
சிங்கள படங்களில் அதிக கவர்ச்சி கிடையாது. பெரிய பட்ஜெட்டில் அங்கு படம் எடுக்க முடியாது. ஒரு படத்தின் அதிகபட்ச செலவே ரூ.1 கோடிதான்.
சிங்கள பட உலகில் 15 கதாநாயகர்கள்இ 15 கதாநாயகிகள் மட்டுமே உள்ளனர். கதாநாயகர்களுக்கு மட்டுமே அங்கே ரசிகர் மன்றங்கள் உள்ளன. கதாநாயகிகளுக்கு ரசிகர்கள் மன்றங்கள் கிடையாது.
இவ்வாறு ரஞ்சன் ராமநாயக்க கூறினார்.
இந்த படவிழாவில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் டி.ஜி. தியாகராஜன்இ செயலாளர் ஏ.எல். அழகப்பன்இ கே.ராஜன்இ வினியோகஸ்தர்கள் சங்க தலைவர் அருள்பதிஇ செயலாளர் ஜி.சேகரன்இ நடிகர்கள் ஜெய்ஆகாஷ்இ தியாகராஜன்இ மனோபாலாஇ ராஜேஷ்இ சிலோன் மனோகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
|
|
|
| சுனாமி எச்சரிக்கை |
|
Posted by: Vaanampaadi - 12-13-2005, 10:18 AM - Forum: செய்திகள்: உலகம்
- No Replies
|
 |
பிஜி தீவு அருகே கடலுக்கடியில் அடுத்தடுத்து 2 பூகம்பங்கள்: சுனாமி எச்சரிக்கை
டிசம்பர் 13, 2005
சுவா:
ஆஸ்திரேலியாவுக்கு அருகே தென் பசிபிக் கடலில் உள்ள பிஜி தீவுகளுக்கு அருகே கடலுக்கடியில் இன்று அடுத்தடுத்து 2 மிகப் பெரிய பூகம்பங்கள் ஏற்பட்டன.
அந் நாட்டின் நேரப்படி பிற்பகல் 3.16 மணிக்கு (இந்திய நேரப்படி இன்று காலை சுமார் 10.30 மணி) இந்த நில நடுக்கங்கள் ஏற்பட்டன. கடலுக்கு அடியில் சில நெடிகளில் இந்த இரு நிலநடுக்கங்களும் ஏற்பட்டதால் ஆஸ்திரேலியாவை ஒட்டிய தீவுகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுவரை உயிர்ச் சேதம் ஏதும் ஏற்பட்டதாக தகவல் இல்லை. கடலுக்கடியில் 29 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட முதல் நில நடுக்கத்தின் சக்தி ரிக்டர் அளவு கோளில் 6.3 ஆகப் பதிவானது. அதையடுத்து சில வினாடிகளில் 6.8 என்ற அளவுக்கு அடுத்த நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நடுக்கம் கடலுக்கடியில் 166 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டது.
இதையடுத்து பசிபிக் கடலில் உள்ள தீவுக் கூட்டங்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Thatstamil
|
|
|
| மரணம்.... |
|
Posted by: jcdinesh - 12-13-2005, 07:44 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (40)
|
 |
அன்பே....
இரண்டில் ஒன்று சொல்லி விடு
உன் பதிலைக் கேட்டுத்தான் -நான்
முடிவு சொல்ல வேண்டும்...
ஏனனில் என்னை மிகவும் நேசிக்கும்
இன்ஓருத்தி என் பதிலுக்காக
காத்திருக்கின்றாள் நெடுகாலமாய்....
அவள் பெயர்....மரணம்....
|
|
|
| உனக்காக கட்டிய தாஜ்மகால்..... |
|
Posted by: jcdinesh - 12-13-2005, 07:42 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (2)
|
 |
உனக்காக கட்டிய தாஜ்மகால்.....
என் கனவுகளை அத்திவாரமாகவும்....
அதன் நினைவுகளை சுவர்களாகவும்....
என் கண்ணீரை அதன் தடாகமாகவும்.....
உன் சிரிப்பை தடாகத்தின் ஓசையாகவும்....
உன் பார்வையை தடாகத்தின் ஒளியாகவும்....
உன் நடையை தாடாகத்தின் அன்னமாகவும்....
கொண்டு...
என் மனதில் கட்டியுள்ளேன் உனக்காக ஒரு
ஒரு தாஜ்மகாலை......-ஆனால்
அவற்றை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக
உன் மௌனத்தால் உடைக்கின்றாய்.....
பல நாள் உறக்கம் இல்லாமல் கட்டிய
இந்தக் காதல் கோட்டையை .... ஒரு
நாளில் உடைத்து விடாதே பெண்ணே.....
பதிலுக்கு ஒரு நாளில் மேலும் கட்டியெளுப்ப
எனக்கொரு பதிலிடு.....
|
|
|
| சொல்லு பெண்ணே..? |
|
Posted by: jcdinesh - 12-13-2005, 07:39 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (4)
|
 |
அன்பே....
உன்னுடன் கதைத்தேன் முதல் முதலாக....
என் மனதில் உள்ளதை உன்னிடம் கூறினேன்.....
நீயும் பதிலளித்தாய் எனக்கு சாதகமாக அல்ல...பாதகமாக..
பெண்ணே....
உன்னை நான் விரும்புவதால் தானா என்னை கண்டு கொள்ளாமல்
உன் பின்னாலே அலைய வைக்கின்றாய்.....
அடியே......ஏன் அத்தான் மச்சானை சொல்லி உன்னையே நினைத்து
உருகும் இந்த உயிர் உள்ள ஜீவனை வெறுக்கின்றாய்.....சொல்லு?
நீ என்னை வெறுத்தபோதும் உன் மேல் உள்ள காதல்
இன்னோர் படி உயர்ந்துள்ளது.....வாழ்ந்தால் உன்நோடு என்ற நம்பிக்கைதோன்றுகிறது...
என் நம்பிக்கை எவ்வளவத்துக்கு சாத்தியமாகும்
சொல்லு பெண்ணே..?
|
|
|
|