Yarl Forum
தமிழர்கள்- சிங்களர்கள் ஒற்றுமைக்காகதமிழ்படத்தில் நடிக்கும் ச - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39)
+--- Thread: தமிழர்கள்- சிங்களர்கள் ஒற்றுமைக்காகதமிழ்படத்தில் நடிக்கும் ச (/showthread.php?tid=2053)



தமிழர்கள்- சிங்களர்கள் ஒற்றுமைக்காகதமிழ்படத்தில் நடிக்கும் ச - aathipan - 12-13-2005

தமிழர்கள்- சிங்களர்கள் ஒற்றுமைக்காக
தமிழ்படத்தில் நடிக்கும் சிங்கள கதாநாயகன்


சென்னைஇ டிச.13-

தமிழர்களுக்கும்இ சிங்களர்களுக்கும் இடையே ஒற்றுமையை வலியுறுத்திஇ சிங்கள பட கதாநாயகன் ஒருவர்இ தமிழ்படத்தில் நடிக்கிறார்.

சிங்கள கதாநாயகன்

இலங்கையை சேர்ந்த நடிகர் ரஞ்சன் ராமநாயக்க. இதுவரை 70 சிங்கள படங்களில் கதாநாயகனாக நடித்து இருக்கிறார்.

இவர் ஹமெய்க்காவலன்' என்ற புதிய தமிழ்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.

இந்த படத்தின் தொடக்கவிழா சென்னை ஏவி.எம். ஸ்டூடியோவில் நேற்று நடந்தது.

பேட்டி

தொடக்கவிழா பூஜை முடிந்ததும் ரஞ்சன் ராமநாயக்க நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

விஜயகுமார் என்ற பழம்பெரும் சிங்கள நடிகரின் உறவினர் நான். 70 சிங்கள படங்களில் நடித்து இருக்கிறேன். அதில் 50 படங்கள் வெற்றி பெற்றுள்ளன.

ஆசை நிறைவேறியது

தமிழில் இருந்து சிங்களத்தில் ஹரீமேக்' செய்யப்படும் பல படங்களில் நடித்து இருக்கிறேன். அதில் ரஜினிகாந்த் நடித்த ஹபாட்ஷா'வும் ஒன்று. அது ஹஒன் ஷாட்' என்ற பெயரில் சிங்களத்தில் எடுக்கப்பட்டது.

தமிழ் படத்தில் நடிக்கவேண்டும் என்ற என் நீண்டகால ஆசை இப்போது நிறைவேறி இருக்கிறது.

ஒற்றுமை

தமிழர்களுக்கும்இ சிங்களர்களுக்கும் இடையே ஒற்றுமையை வலியுறுத்தி இந்த படத்தில் நடிக்கிறேன்.

சிங்கள படங்களில் அதிக கவர்ச்சி கிடையாது. பெரிய பட்ஜெட்டில் அங்கு படம் எடுக்க முடியாது. ஒரு படத்தின் அதிகபட்ச செலவே ரூ.1 கோடிதான்.

சிங்கள பட உலகில் 15 கதாநாயகர்கள்இ 15 கதாநாயகிகள் மட்டுமே உள்ளனர். கதாநாயகர்களுக்கு மட்டுமே அங்கே ரசிகர் மன்றங்கள் உள்ளன. கதாநாயகிகளுக்கு ரசிகர்கள் மன்றங்கள் கிடையாது.

இவ்வாறு ரஞ்சன் ராமநாயக்க கூறினார்.

இந்த படவிழாவில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் டி.ஜி. தியாகராஜன்இ செயலாளர் ஏ.எல். அழகப்பன்இ கே.ராஜன்இ வினியோகஸ்தர்கள் சங்க தலைவர் அருள்பதிஇ செயலாளர் ஜி.சேகரன்இ நடிகர்கள் ஜெய்ஆகாஷ்இ தியாகராஜன்இ மனோபாலாஇ ராஜேஷ்இ சிலோன் மனோகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.


- N.SENTHIL - 12-13-2005

±ýɡР15 ¸¾¡É¡Â¡¸÷ ¾¡ý ¯ûÇ¡÷ ¸Ç¡.? ¦À¡ö ¦º¡øÄ¡¾¢í¸½¡!¯í¸ ¿¡ðÊÄ ±í¸½¡ ¸¾¡É¡Â¡¸÷ þÕ측í¸?±í¸ «ñÉñ ¸×ñ¼÷ §¸ð¼¡ ¯¨¾ ¾¡ý


- N.SENTHIL - 12-13-2005

±ýɡР15 ¸¾¡É¡Â¡¸÷ ¾¡ý ¯ûÇ¡÷ ¸Ç¡.? ¦À¡ö ¦º¡øÄ¡¾¢í¸½¡!¯í¸ ¿¡ðÊÄ ±í¸½¡ ¸¾¡É¡Â¡¸÷ þÕ측í¸?±í¸ «ñÉñ ¸×ñ¼÷ §¸ð¼¡ ¯¨¾ ¾¡ý. ²ø§Ä¡Õõ ±í¸ Á¡¾¢Ã¢ ¸¡¦ÁʦÂý ¾¡§É. ¾Á¢ú ¿¡ðÊÄ ¸¡Ä Å§Ä ¦Á¡¾Ä ¦À¡ö §À¡ö §Àº ¸òÐÌíÈ¢í¸§Ç!