Yarl Forum
வவுனியாவில் புளொட் முக்கியஸ்தர் கடத்தல் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: வவுனியாவில் புளொட் முக்கியஸ்தர் கடத்தல் (/showthread.php?tid=2066)



வவுனியாவில் புளொட் முக்கியஸ்தர் கடத்தல் - Vaanampaadi - 12-12-2005

வவுனியாவில் புளொட் முக்கியஸ்தர் கடத்தல்
[திங்கட்கிழமை, 12 டிசெம்பர் 2005, 16:12 ஈழம்] [வவுனியா நிருபர்]
புளொட் இயக்கத்தின் முக்கிய உறுப்பினரும் மத்திய குழு உறுப்பினருமான பாருக் என்றழைக்கப்படும் சின்னத்தம்பி கணேசலிங்கம் என்பவர் இன்று திங்கட்கிழமை வவுனியாவில் இனந் தெரியாத நபர்களினால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.


வவுனியா சிதம்பரபுரத்திற்கும் சமனங்குளத்திற்கும் இடையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது வானொன்றில் வந்தவர்களால் கடத்தப்பட்டுள்ளார்.

கடத்திச் சென்றதாக கூறப்படும் வான் மதியம் 1.30 மணியளவில் வவுனியா கிடாச்சூரி என்ற இடத்தில் சிறிலங்கா இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

வானில் சென்ற மூவரையும் கைது செய்திருப்பதாகவும் அவர்களிடம் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் வவுனியா காவல்நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எம்.சி.அபயசிங்க பண்டார தெரிவித்துள்ளார்.


Puthinam