![]() |
|
சிவபுராணம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: சிவபுராணம் (/showthread.php?tid=2063) |
சிவபுராணம் - Mathuran - 12-12-2005 சிவபுராணம் http://www.tamilsongs.net/page/build/album...anam/index.html இந்த சிவபுராணத்தையா இளையராசா அவர்கள் அண்மையில் பாதர் ஜெகஸ்கஸ்பாரின் உதவியோடு வெளியிட்டுவைத்தார்? நன்றி தமிழ் சொங்க்ஸ். நெற் - Selvamuthu - 12-12-2005 இல்லை, அவர் வெளியிட்டது திருவாசகம் - sOliyAn - 12-13-2005 சூலமங்களம் சகோதரிகளின் குரலில் அருமையாக இருக்கிறதே! அவர்கள் தற்போது பாடுகிறார்களோ இல்லையோஇ யாருக்கு தெரியும்! என்றாலும் மதுரனுக்கு குசும்பு கூடாது. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- tamilini - 12-13-2005 என்ன மதுரன் ஒன்டையும் காணவில்லையே..? :roll: :roll: - Mathuran - 12-13-2005 அக்கா மாறி போட்டுட்டன். அப்படியே விட்டா பிறகு வாறா ஆக்கள் பளிப்பினம். எனக்கு சிவபுராணத்திற்கும் திருவாசகத்துக்கும் வித்தியாசம் தெரியாதெண்டு. இப்ப யாரும் அப்படி சொல்ல மாட்டினம் தானே........ - Mathan - 12-13-2005 பரவாயில்லை போடுங்கள். சிவபுராணம் எப்படி பாடியிருக்கின்றார்கள் என்று கேட்கலாம் மதுரன். - அருவி - 12-14-2005 ம் இதனையும் அதில் இளையராஜா பாடியிருக்கார். ஆனால் பள்ளியில் படித்ததும் இளையராஜா பாடியதும் வித்தியாசமாய் இருக்கு. (வரிகள் முன்னும்் பின்னும் வந்திருந்தது) - தூயவன் - 12-14-2005 Mathuran Wrote:அக்கா மாறி போட்டுட்டன். அப்படியே விட்டா பிறகு வாறா ஆக்கள் பளிப்பினம். எனக்கு சிவபுராணத்திற்கும் திருவாசகத்துக்கும் வித்தியாசம் தெரியாதெண்டு. இப்ப யாரும் அப்படி சொல்ல மாட்டினம் தானே........ உம். எனி கட்டாயம் சொல்லவே மாட்டினம். :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Eelavan - 12-14-2005 மதுரன் உங்கள் பதில் மூலம் திருவாசகம் மற்றும் சிவபுராணம் பற்றிய உங்கள் தெளிவின்மையை உணர்த்திவிட்டீர்கள். சிவபுராணம் திருவாசகத்தில் ஒன்றுதான். மாணிக்க வாசகர் பாடிய அத்தனை பாடல்களும் திருவாசகம் என்றே அழைக்கப்படுகின்றன.இளையராஜா அவற்றுள் குறிப்பிட்ட சிலவற்றுக்கு மட்டும் இசையமைத்துப் பாடியுள்ளார். - Mathan - 12-14-2005 மாணிக்கவாசகர் பாடிய அனைத்து பாடல்களும் திருவாசகத்துக்குள் அடங்கவில்லை ஈழவன். அவர் திருக்கோவையார் உட்பட வேறு சில பாடல்களும் எழுதியுள்ளார் என்று ஒருவர் அறிய தந்தார். - Mathuran - 12-14-2005 Eelavan Wrote:மதுரன் உங்கள் பதில் மூலம் திருவாசகம் மற்றும் சிவபுராணம் பற்றிய உங்கள் தெளிவின்மையை உணர்த்திவிட்டீர்கள். உண்மையில் எனக்கு திருவாசகமத்திற்கும் சிவபுராணத்திற்கும் வித்தியாசம் தெரியாது. அனால் தமிழில் அருமையான படைப்பாக எண்ணித்தான் இதனை இணைத்தேன். இதில் சொல்லப்பட்ட விடயத்தை விட. அதை சொன்ன முறை மிகவும் நன்றாக இருந்தது. ஆகையால் ஆர்வம் கொண்டு இணைத்தேன். சிவபுராணம் திருவாசகம் பற்றி அறியத்தந்த கள உறவுகளிற்கு நன்றிகள். - Eelavan - 12-15-2005 நன்றி மதன் தவறைத் திருத்தியதற்கு மாணிக்கவாசகர் திருவாசகம் மட்டுமல்ல திருக்கோவையார்,திருக்கோத்தும்பி,திருக்களிற்றுப்படியார்,திருவெம்பாவை என்று பல பாடல்களைத் தந்துள்ளார் மதுரன் நீங்கள் சொன்னது சரிதான் தமிழிசையில் பாடுவதற்கு ஏற்ற பண்ணுடனும் மொழிச்செழுமையுடனும் அமைந்தவை மாணிக்கவாசகர் பாடல்கள் தமிழின் பக்தி இலக்கியங்கள் எனும்பொது திருவாகமென்னும் தேனுக்கு தனி இடம் உண்டு Re: சிவபுராணம் - கந்தப்பு - 12-15-2005 Mathuran Wrote:சிவபுராணம் இளையராஜா, ஜெகஸ்கஸ்பாரை திருவாசகம் வெளியீட்டில் பணவிசயத்தில் ஏமாற்றிவிட்டதாக அண்மையில் தமிழ் சினிமா இணையத்தளத்தில் வாசித்தேன் Re: சிவபுராணம் - தூயவன் - 12-15-2005 Kanthappu Wrote:இளையராஜா, ஜெகஸ்கஸ்பாரை திருவாசகம் வெளியீட்டில் பணவிசயத்தில் ஏமாற்றிவிட்டதாக அண்மையில் தமிழ் சினிமா இணையத்தளத்தில் வாசித்தேன் அது மட்டுமல்ல இசையால் கூட ஏமாற்றி விட்டார். கஸ்பார் என்ன எண்ணத்தில் இதை படைக்கவேண்டும் என்று நினைத்தாரோ அது வீணாகிப் போய்விட்டது. |