![]() |
|
உலங்குவானூர்தி மீது துப்பாக்கிச் சூடு! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: உலங்குவானூர்தி மீது துப்பாக்கிச் சூடு! (/showthread.php?tid=2039) |
உலங்குவானூர்தி மீது துப்பாக்கிச் சூடு! - Vaanampaadi - 12-14-2005 பொத்துவிலில் இத்தாலிய துணை வெளிவிவகார அமைச்சரின் உலங்குவானூர்தி மீது துப்பாக்கிச் சூடு! [புதன்கிழமை, 14 டிசெம்பர் 2005, 17:48 ஈழம்] [அம்பாறை நிருபர்] இலங்கை வந்துள்ள இத்தாலிய துணை வெளிவிவகார அமைச்சரான மகா றிகா பொனிவர் பயணத்திற்கான உலங்குவானூர்தி துப்பாக்கிச் சூட்டுக்குள்ளானது. சிறிலங்கா விமானப் படையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த உலங்குவானூர்தி மீது இன்று புதன்கிழமை மாலை அம்பாறை மாவட்டம் பொத்துவில் பிரதேசம் அறுகம்பையில் இனந் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர். இலங்கையில் தற்போது தங்கியுள்ள இத்தாலிய துணை வெளிவிவகர அமைச்சர் மகா றிகா பொனிவர் இன்று பொத்துவில் பிரதேசம் அறுகம்பைக்கு உலங்குவானூர்தி மூலம் சென்றிருந்தார். அவரை காலையில் இறக்கி விட்டு திரும்பும் வரை காத்திராமல் பாதுகாப்பின் காரணமாக அந்த உலங்குவானூர்தி அம்பாறை விமானப் படைத்தளத்திற்கு திரும்பியது. மாலையில் இத்தாலிய வெளிவிவகார துணை அமைச்சர் மகா றிகா பொனிவர் உட்பட 22 பேரை ஏற்றி வர உலங்குவானூர்தி சென்ற போது இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்தத் துப்பாக்கிச் சூட்டிற்கு 13 வேட்டுகள் தீர்க்கப்பட்டதாகவும் 6 சூடுகள் உலங்குவானூர்தி மீது பட்டதாகவும் சூட்டுக்களோடு உலங்குவானூர்தி பறந்ததாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் துணை வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்டோருடன் உலங்குவானூர்தி திரும்பியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. Puthinam - AJeevan - 12-14-2005 <b>அம்பாறை மாவட்டத்தில் அரசு ஹெலிகாப்டர் மீது தாக்குதல்</b> <img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/12/20051214175317slafhelicopter203.jpg' border='0' alt='user posted image'> அரசு ஹெலிகாப்டர் மீது தாக்குதல் அம்பாறை மாவட்டம் அருகம்பையில் ஸ்ரீ லங்கா விமானப் படைக்கு சொந்தமான ஹெலிகொப்டர் ஒன்றின் மீது இன்று மாலை 3.30 மணியளவில் சிறு ஆயுதங்களை பயன் படுத்தி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது தற்போது இலங்கைக்கான விஜயமொன்றை மேற் கொண்டுள்ள இத்தாலிய பிரதி வெளி விவகார அமைச்சர் மாகரியா பொனிவா அம்மையார் சுனாமியினால் பாதிக்கப்பட்ட அறுகம்பை பிரதேசத்திற்கு இன்று காலை விஜயமொன்றை மேற் கொண்டிருந்தார் மாலையில் அவரை மீண்டும் கொழும்பிற்கு அழைத்து வருவதற்காக சென்று கொண்டிருந்த ரஷ்யா தயாரிப்பான எம்.ஐ. 17 ரக ஹெலிகொப்டர் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது இது தொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள ஸ்ரீ லங்கா விமானப் படை ஊடகப் பேச்சாளரான குறூப் கப்டன் அஜந்த சில்வா அறுகம்பையிலிருந்து 10 வான் மைல்கள் தொலைவில் அதாவது தரையிறங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்னதாக இந்த தாக்குதல் இடம் பெற்றுள்ளதாகவும் 4 துப்பாக்கிச் சூடுகள் ஹெலிகொப்டர் மீது விழுந்துள்ளதாகவும் தெரிவித்தார். இதனையடுத்து பாதுகாப்பாக ஹெலிகொப்டர் அம்பாறை விமானப் படைத்தளத்தில் உடனடியாக தரையிறக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார் போர் நிறுத்த உடன் படிக்கை அமுலுக்கு வந்த பின்பு ஸ்ரீ லங்கா விமானப் படைக்கு சொந்தமான ஹெலிகொப்டர் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை இதுவே முதல் தடவையாகும் பீபீசி தமிழ் - Netfriend - 12-14-2005 <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :roll: (உங்கள் பதில் கருத்து மிகச்சுருக்கமாக உள்ளது. ) |