Yarl Forum
முதுபெரும் ஆதரவாளர் திருச்சி ஓட்டோ ஆனந்தராஜ் ஐயா காலமானார் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: முதுபெரும் ஆதரவாளர் திருச்சி ஓட்டோ ஆனந்தராஜ் ஐயா காலமானார் (/showthread.php?tid=2041)

Pages: 1 2


முதுபெரும் ஆதரவாளர் திருச்சி ஓட்டோ ஆனந்தராஜ் ஐயா காலமானார் - sri - 12-14-2005

தமிழ்நாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளராகச் செயற்பட்ட திருச்சி ஓட்டோ ஆனந்தராஜ் (வயது 84) ஐயா சென்னையில் இன்று புதன்கிழமை காலமானார்.


இந்தியத் தொடருந்து துறையில் பணியாற்றி 1974 ஆம் ஆண்டு ஓய்வுபெற்ற பின்னர் பெரியார் கொள்கைகளின் மீது தீவிரமான ஈடுபாட்டோடு இயங்கியவர்.

தமிழீழத் தமிழர்கள் இன்னல்களுக்கு ஆளாகி தமிழ்நாட்டுக்கு சென்ற காலத்தில் தமிழீழத் தமிழர்களுக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் ஆதரவாக உறுதுணையாக இயங்கியவர்.

ராஜீவ் காந்தி வழக்கு காலத்தில் தமிழ்நாடு முழுவதும் கடுமையான ஒடுக்குமுறைகள் தீவிரமாக இருந்த போது தமிழ்நாடு காவல்துறையால் பகிரங்கமாக அறிவிக்கப்பட்டுத் தேடப்பட்ட குண்டு சாந்தனுக்கு துணிச்சலோடு அடைக்கலம் கொடுத்தவர் ஆனந்தராஜ் ஐயா.

ஆனால் காவல்துறையினர் ஆனந்தராஜ் ஐயாவினது இல்லத்தை முற்றுகையிட்டனர். குண்டு சாந்தன் சயனைட் அருந்தி உயிர் நீத்தார். அதன் பின்னர் ஆனந்தராஜ் ஐயா கைது செய்யப்பட்டார்.

தமிழ்நாட்டுக் காவல்துறையினர் முதுமை வயதிலும் அவரை சித்திரவதை செய்த போதும் கூட "நான் ஒரு பெரியார் தொண்டன். ஏற்றுக்கொண்ட கொள்கைக்காக உயிரையும் இழப்பேனே தவிர இலட்சியத்தை இழக்கமாட்டேன்" என்று தெரிவித்துவிட்டு சித்திரவதைகளை ஏற்றுக்கொண்டார். குண்டு சாந்தனுக்கு அடைக்கலம் கொடுத்ததாக 10 மாதம் சிறைத் தண்டனை அனுபவித்தார். பின்னர் பிணையில் விடுதலையானார்.

சென்னை சிறப்பு நீதிமன்றம் நடைபெற்ற இந்த வழக்கில் தடா சட்டத்தின் கீழ் ஆனந்தராஜ் ஐயாவுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது. இதை ஏற்று இரண்டரை ஆண்டுகாலம் சிறைத் தண்டனையையும் அனுபவித்தார். பின்னர் இந்தியத் தலைமை நீதிமன்றில் மேல்முறையீடு செய்யப்பட்டதில் ஆனந்தராஜ் ஐயா விடுதலை செய்யப்பட்டார்.

ஆனந்தராஜ் ஐயாவை விடுதலை செய்த இந்தியத் தலைமை நீதிமன்றம், "பயங்கரவாதி என்று குற்றம்சாட்டப்பட்டுகிறவர் மீதான குற்றம் நிரூபிக்காத வரையில் அவருக்கு அடைக்கலம் கொடுப்பது தவறும் இல்லை. அது பயங்கரவாதச் செயலும் இல்லை" என்று சிறப்புமிக்கத் தீர்ப்பை அளித்தது.

திருச்சி கே.கே.நகர் பகுதியில் வசித்து வந்த ஆனந்தராஜ் ஐயா, குண்டு சாந்தன் மறைவுக்குப் பின்னர் "இந்த இல்லத்தில்தான் குண்டு சாந்தன் இறந்தார்" என்றும் தன் இல்லத்துக்கு "தமிழ் நல்உலகம் கூறும் தம்பி பிரபாகரன் இல்லம்" என்றும் கல்வெட்டில் செதுக்கி முதுமையான வயதிலும் உறுதியான தமிழீழப் பற்றாளராக விளங்கினார். தனது இல்லத்தில் தமிழீழத் தேசிய மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிற வகையிலான துப்பாக்கியும் தொப்பியுமான இலட்சிணையைப் பொறித்து தான் ஒரு விடுதலைப் புலி ஆதரவாளன் என்பதை பகிரங்கப்படுத்தி விடுதலைப் புலிகளுக்கான ஆதரவுக் களத்தில் தீவிரமாக இயங்கியனார் அவர்.

ஆனந்தராஜ் ஐயாவின் மறைவுக்கு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் கொளத்தூர் தா.செ. மணி, வீரவணக்கம் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கை:

பற்றுறுதிமிக்க ஒரு பெரியார் தொண்டராகத் திகழ்ந்தவர். குண்டு சாந்தனுக்கு அடைக்கலம் கொடுத்த வழக்கு நடைபெற்ற போது தன்னுடைய விடுதலைக்காக, நான் குண்டு சாந்தனுக்கு அடைக்கலம் கொடுக்கவில்லை என்று நீதிமன்றில் கூறமாட்டேன் என்று தெரிவித்ததோடு நான்தான் குண்டுசாந்தனுக்கு அடைக்கலம் கொடுத்தேன் என்று பகிரங்கமாக அறிவித்தவர் பெரியவர் ஆனந்தராஜ் ஐயா. ஏற்றுக் கொண்ட இலட்சியத்தில் உறுதியாக நின்றவர்.

தான் பிணையில் விடுதலையான பிறகு ஊடகவியலாளர்களிடம் பேசுகையிலும் கூட, என்னுடைய வீடு என்பது தமிழின இன உணர்வாளர்களுக்கான வீடு. எத்தனை அடக்குமுறைகள் ஏவிவிடப்பட்டாலும் தமிழீழ விடுதலைப் புலிகள் உள்ளிட்ட அனைத்து தமிழின உணர்வாளர்களுக்கும் அடைக்கலம் கொடுப்பேன் என்று பகிரங்கமாக அறிவித்தவர்.

இந்தியத் தலைமை நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்ட போதும் கூட தனது விடுதலைப் புலிகளின் ஆதரவுச் செயற்பாடுகளை அவர் நிறுத்திக் கொள்ளவில்லை. தொடர்ந்து தம்பி பிரபாகரன் பிறந்த நாளன்று தேனிசை செல்லப்பா மற்றும் எம்மைப் போன்றவர்களை அழைத்து நிகழ்ச்சிகளை செய்து கொண்டே இருந்தார்.

ஒரு உறுதியான இலட்சியவாதி மறைந்துவிட்டார். இன்றைய இளைஞர்களுக்கு கொள்கையில் எப்படி உறுதியாக இருக்க வேண்டும் என்று ஒரு முன்மாதிரியான வழிகாட்டியாக இருந்தவர் ஆனந்தராஜ் ஐயா. பெரியவர் ஆனந்தராஜ் ஐயாவினது மறைவுக்கு தந்தை பெரியார் திராவிடர் கழகம் தமது வீரவணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறது என்று அந்த அறிக்கையில் கொளத்தூர் மணி தெரிவித்துள்ளார்.

புதினம்


- N.SENTHIL - 12-14-2005

³Â¡ ¨Å §¿Ã¢ø À¡÷ìÌõ À¡ì¸¢Âõ ±ÉìÌ ¸¢¨¼ò¾Ð ¯ýÎ-
±ÉРţÃŽì¸õ ³Â¡ «Å÷¸û¸ÙìÌ ¯Ã¢ò¾¡¸ðÎõ


- அருவி - 12-14-2005

ஐயா அவர்களிற்கு எமது வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.


- MUGATHTHAR - 12-14-2005

மொழிப்பற்று இனப்பற்று எப்பிடி இருக்கவேணும் எண்டதுக்கு உதாரணமாக வாழ்த்து காட்டிய ஆனந்த ராஜ் ஜயாவுக்கு சிரந் தாழ்த்திய வணக்கங்கள்


- narathar - 12-14-2005

இறுதிவரை கொண்ட கொள்கையில் பற்றுறுதியுடன் செயற்பட்டு ,ஈழத் தமிழருக்காக பல தியாகங்களைச் செய்த எங்கள் உடன் பிறவா சகோதரர்,ஆனத்தராஜ் ஐயா அவர்களுக்கு எங்கள் அஞ்ஞலிகள்.இவர்கள் தியாகங்களும் தமிழ் ஈழ வெற்றிச் சரித்திரத்தில் ஆவணப்படுத்தப்பட்டு , அங்கீகரிக்கப் பட வேண்டும்.

இந்த திராவிட இயக்கத் தோழர்களின் தியாகங்கள் ,இந்திய மத்திய அரசினதும், சில பார்ப்பன தமிழர்களது ஈழ எதிர்ப் புணர்வுகளால் ,புலத்தில் இளய சந்ததியர் மத்தியில் ஏற்பட்டிருக்கும் ஒட்டு மொத்த இந்தியத் தமிழர் மீதான வெறுப்புணர்வை , ஒரளவேனும் குறைக்கும் என்று நம்புகிறேன்.

இதற்கு இவர்கள் பற்றிய தகவல்கள் ஈழவரது இணயத் தளங்களில் இடப்பட்டு, இவர்களின் முக்கியமான ஆரம்பகால உதவிகள் கொண்டாடப் பட வேண்டும்.இதன் மூலமே நாம் எமக்கும் ,இந்தியத் தமிழ்ச் சகோதரருக்கும் இடயேயான உறவுகளை மீளக் கட்டியெளுப்ப முடியும்.


Re: முதுபெரும் ஆதரவாளர் திருச்சி ஓட்டோ ஆனந்தராஜ் ஐயா காலமானார் - தூயவன் - 12-14-2005

அன்னாருக்கு ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலிகள்


- Mathuran - 12-14-2005

ஐயாவிற்கு எனது வீரம் செறிந்த வணக்கம் Cry Cry Cry Cry Cry


- Thala - 12-14-2005

எம்பால் பேரன்புகொண்டிருந்த ஐயாவுக்கு அஞ்சலிகள்....


- eelapirean - 12-14-2005

இது நாள் வரை ஆனந்தராசா ஐயா அவரகளைப் பற்றி கேள்விப்பட்டதில்லை.இப்போது ரொம்பப் பெருமையாக இருக்கிறது.தமிழ்நாட்டில் உள்ளவர்களும் அவரைப் பின்பற்றுவார்களா? ஐயாவின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்


- N.SENTHIL - 12-14-2005

´ýÈøÄ 6 §¸¡Ê ¦ÀÂ÷ þÕ츢§È¡õ,
¯ñ¨Á ¯ñ¨Á ¯ñ¨Á


- AJeevan - 12-14-2005

<img src='http://www.astrosurf.com/dearden/Web%20Pages/Historical%20Page/Candle%20spectrum.jpg' border='0' alt='user posted image'>
[size=15]<b>ஆனந்தராஜ் ஐயா</b> எம்மை விட்டு அகலவில்லை.
தமது மறைவினூடாக பலரது கண்கள் திறக்க வழி வகுத்துள்ளார்.

ஆனந்தராஜ் ஐயா பற்றிய ஆவணங்கள்
புகைப்படங்கள் இருந்தால் தமிழ் கூறும் நல்லுலகம் பார்க்க வழி செய்யுங்கள்.

அது பிளவுபட்டிருக்கும் எமக்குள்
ஒரு நட்பு பாலத்தை உருவாக்க வழி வகுக்கும்.

ஒரு உன்னத மாமனிதனை தமிழ் இழந்து நிற்கிறது.

அன்னாரது உற்றார் உறவினர்கள் நண்பர்கள் தோழர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்கள்..........


- Nitharsan - 12-14-2005

உண்மையில் நானும் அவர் பற்றி அறிவில்லை. பலர் இருக்கும் போது பெருமை படுத்தப்படுவார்கள் சிலர் இறந்த பின்னர் பெருமைப்படுத்தப்படுவார்கள் அந்த வகையில் இவர் இரண்டாவது வகை...இது அவரின் சுயநலமற்ற...பிரபல்யப்படுத்தாத பொது செவையை எடுத்து காட்டுகின்றது.
அன்னாருக்கு எனது/எமது கண்ணீர் அஞ்சலிகள்


- sabi - 12-14-2005

கை கூப்பிச் சிரம் தாழ்த்தி
வணங்குகிறோம் ஐயா
வணங்குகிறோம் Cry


- vasisutha - 12-14-2005

eelapirean Wrote:இது நாள் வரை ஆனந்தராசா ஐயா அவரகளைப் பற்றி கேள்விப்பட்டதில்லை.இப்போது ரொம்பப் பெருமையாக இருக்கிறது. ஐயாவின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்


<b>அய்யாவுக்கு எனது வணக்கங்கள்</b>


- adsharan - 12-14-2005

ஆனந்த ராஜ் ஜயாவுக்கு சிரந்தாழ்த்திய வணக்கங்கள்


- Eelathirumagan - 12-14-2005

வீரம் செறிந்த வாழ்க்கை. மீண்டும் நீங்கள் பிறந்தால் வேங்கை படை நடத்தும் ஈழத்தில் வந்து பிறந்திடல் வேண்டும். சிரம் தாழ்த்தி வணங்குகின்றோம்.


- Selvamuthu - 12-15-2005

ஆனந்தராஜ் ஐயா அவர்களுக்கு என் சிரம் தாழ்த்திய வணக்கங்கள்.
மண்மீதும், மொழிமீதும் உண்மையான பற்றுக்கொண்ட ஒவ்வொருவருக்கும் இவரின் மறைவு நிச்சயம் கண்களில் நீரை வரவழைக்கும். ஒரு மானமுள்ள தமிழ்மகன் இப்படித்தான் வாழவேண்டும் என்று வாழ்ந்து காட்டிய பெரியாருக்கு எனது இதய அஞ்சலிகள்.


- SUNDHAL - 12-15-2005

வீரவணக்கம் ஜயாவிற்க்கு...........


- RaMa - 12-15-2005

ஆனந்தராஐ ஐயாவிற்கு எனது இதய அஞ்சலிகள்.


- sinnappu - 12-15-2005

ஆனந்த ராஜ் ஜயாவுக்கு சிரந் தாழ்த்திய வணக்கங்கள்
Cry Cry Cry