Yarl Forum
இலங்கை - புதிய நாணயம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: இலங்கை - புதிய நாணயம் (/showthread.php?tid=2031)



இலங்கை - புதிய நாணயம் - Double - 12-15-2005

<b>இலங்கை மத்திய வங்கி உடனடியாக பாவனைக்கு வரும் விதத்தில் புதிய நாணயக் குற்றிகளை வெளியிட்டுள்ளது.</b>

இலங்கை மத்திய வங்கி புதிய தொடர் சுற்றோட்ட நாணயக் குற்றிகளை வெளியிட்டுள்ளது.

ஐந்து ரூபா, இரண்டு ரூபா, ஒரு ரூபா நாணயக் குற்றிகளையும் ஐம்பது மற்றும் இருபத்தைந்து சதங்களையும் புதிய நாணயக் குற்றிகளாக வங்கி வெளியிட்டுள்ளது.

புதன்கிழமை மத்திய வங்கியின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இதனை அறிவித்த வங்கியின் துணை ஆணையாளர் திருமதி எம்.குரே வெள்ளிக்கிழமையிலிருந்து வங்கிகளில் இந்த நாணயக் குற்றிகள் பாவனைக்கு வரும் எனத் தெரிவித்தார். திருமதி எம்.குரே மேலும் தெரிவிக்கையில்;

புதிய நாணயக் குற்றிகளின் வடிவமைப்புக்கள் தற்போது சுற்றோட்டத்தில் உள்ள அதே இன நாணயக் குற்றிகளைப் போல ஒரே மாதிரியானதாயிருக்கும். நாணயக் குற்றிகளின் ஆண்டு 2005 எனக் காணப்படும்.

புதிய ஐந்து, இரண்டு ரூபாயின் அளவும் நிறமும் மாற்றமுறாது காணப்படுகின்ற அதேவேளை, நிறையும் உலோக கலப்பும் மாற்றமடைந்துள்ளது.

ரூபா ஒன்று மற்றும் 50, 25 சதங்கள் தற்போதுள்ள நாணயக் குற்றிகளிலும் பார்க்க சிறியனவாக இருப்பதுடன் அடையாளங் காணும் நோக்கங்களுக்காக வேறுபட்ட உலோகக் கலப்பிலும் நிறத்திலும் வார்க்கப்பட்டுள்ளன.

புதிய நாணயக் குற்றிகள் தற்போதுள்ள நாணயக் குற்றிகளுடன் சேர்ந்து நடைமுறையிலிருக்கும் இந்த நாணயக் குற்றிகள் இலங்கையில் சட்ட ரீதியானவையாகவும் சுற்றோட்டத்திலுள்ள போது இலங்கை மத்திய வங்கியின் பொறுப்பாகவும் இருக்கும்.

பித்தளை, செப்பு, நிக்கல் போன்றவற்றின் அளவு சர்வதேச அளவில் அதிகரித்துள்ளது. எமது நடவடிக்கையின் காரணமாக செலவை குறைக்கவுள்ளோம். 600 மில்லியன் வரை நாம் இதன் மூலம் சேமிக்கலாம்.

புதிய நாணயக் குற்றிகள் குறித்து கடந்த வருடமே சிந்தித்திருந்தோம். எனினும், தொலைபேசி பாவனையாளர்களின் நன்மை கருதி நாணயக் குற்றிகளின் அளவு குறித்து ஆலோசனைகளை மேற்கொண்டோம். இதன் பின்னர் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் வடிவமைத்தோம்.

தற்போது நடைமுறையிலுள்ள பல நாணயக் குற்றிகள் பாவனைக்கு உட்படுத்தப்படுவதில்லை.

புதிய நாணயக் குற்றிகள் 25 முதல் 30 வருடங்களுக்கு நீடிக்கும் என நினைக்கின்றோம்.

முன்னைய நாணயக் குற்றிகள் 40 வருட காலமாக நடைமுறையிலிருந்தன. புதிய நாணயக் குற்றிகள் வெள்ளிக்கிழமையிலிருந்து வங்கிகளில் பாவனைக்கு வரும்.

Thanks: Thinakkural
http://www.thinakkural.com/New%20web%20sit...ws-4.htm[/size]