![]() |
|
தமிழகத்தில ஜன நாயகம் - மதுரையில் ஐவர் கைது - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: தமிழகத்தில ஜன நாயகம் - மதுரையில் ஐவர் கைது (/showthread.php?tid=1986) |
தமிழகத்தில ஜன நாயகம் - மதுரையில் ஐவர் கைது - narathar - 12-17-2005 தமிழீழ விடுதலையை அங்கிகரிக்க வலியுறுத்தி சுவரொட்டி ஒட்டியமைக்காக தமிழகத்தின் மதுரையில் ஐவர் கைது 17 /12/ 2005 விடுதலைப் புலிகள் மீது இந்திய அரசு விதித்துள்ள தடையை நீக்குமாறும், தமிழீழ விடுதலையை அங்கிகரிக்குமாறும் வலியுறுத்தி சில நாட்களிற்கு முன்னர், தமிழகத்தின், மதுரையில் பல இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. இச் சுவரொட்டிகளை ஒட்டியதாக குற்றஞ்சாட்டப்பட்டு ஐவர் தமிழக காவல்துறையினரால் கைது செய்யப் பட்டுள்ளனர். 'ஈழத்தமிழர்களிற்காய் தீக்குளித்த இளந்தமிழன் அப்துல் ரவூப்பிற்கு வீரவணக்கம்", 'இந்திய அரசே, புலிகள் மீதான தடையை நீக்கு, தமிழீழ விடுதலையை அங்கீகரி" போன்ற வாசகங்களுடன் காணப்பட்ட இச்சுவரொட்டிகள் தமிழ் தமிழர் இயக்கம் என்ற பெயரில் ஒட்டப்பட்டிருந்தன. இது தொடர்பில் விசாரணைகளை நடாத்தி வந்த தமிழக காவல்துறையினர், செல்லூர் பகுதியைச் சேர்ந்த ராஜாமணி, குறிஞ்சி கபிலன், பரிதி, மைதீன் மற்றும் சங்கரன் ஆகியோரைக் கைது செய்து தடுத்து வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. http://www.sankathi.net/ - Mathuran - 12-18-2005 சனநாயகப் படுகொலை என்பது இதுதான். சனநாயக நாடு?????? சிரிப்பு சிரிப்பா வருதப்பா.. - iruvizhi - 12-18-2005 <b>அப்துல் ரவூப்பிற்கு வீரவணக்கம்</b>. <img src='http://img228.imageshack.us/img228/1854/india3zb.jpg' border='0' alt='user posted image'> <img src='http://img228.imageshack.us/img228/8043/india17cq.jpg' border='0' alt='user posted image'> நன்றி படங்கள்: சூரியன்.கோம் http://sooriyan.com/index.php?option=conte...id=2635&Itemid= |