![]() |
|
மகளுக்கு விசா அனுமதி கோரி உண்ணாவிரதம்!! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: மகளுக்கு விசா அனுமதி கோரி உண்ணாவிரதம்!! (/showthread.php?tid=1990) |
மகளுக்கு விசா அனுமதி கோரி உண்ணாவிரதம்!! - Vaanampaadi - 12-17-2005 மகளுக்கு விசா அனுமதி கோரி ராஜீவ் வழக்கு முருகன் உண்ணாவிரதம்!! [சனிக்கிழமை, 17 டிசெம்பர் 2005, 15:41 ஈழம்] [ம.சேரமான்] தன் மகளுக்கு விசா அனுமதிக்கக் கோரி ராஜீவ் வழக்கில் வேலுர் சிறையில் உள்ள முருகன் நேற்று முன்தினம் முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார். இவருக்கும், ராஜீவ் வழக்கில் கைதாகி ஆயுள் சிறை தண்டனை பெற்ற நளினிக்கும் சென்னை பூந்தமல்லி சிறையில் அரித்ரா என்ற பெண் குழந்தை பிறந்தது. தற்போது இக்குழந்தை தமிழீழத்தில் வசித்து வருகிறது. தற்போது 14 வயதை எட்டியுள்ள அரித்ரா தமது பெற்றோரை பார்க்க விரும்பினார். நீண்டநாள் முயற்சித்தும் இதற்கான விசா அக்குழந்தைக்கு இதுவரை அளிக்கப்படவில்லை. இந்நிலையில் வேலுர் மத்திய சிறையில் திடீர் உண்ணாவிரதத்தை முருகன் வியாழக்கிழமை தொடங்கினார். தனது மகளுக்கு விசா அளிக்கப்படும் வரை உண்ணாவிரதத்தைத் தொடரப் போவதாக சிறை அதிகாரிகளிடம் அவர் கூறியுள்ளார். Puthinam |