![]() |
|
இலங்கையை சேர்ந்தவருக்கு 15 வருட சிறை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: இலங்கையை சேர்ந்தவருக்கு 15 வருட சிறை (/showthread.php?tid=1978) |
இலங்கையை சேர்ந்தவருக்கு 15 வருட சிறை - Vaanampaadi - 12-18-2005 போதைப் பொருள் கடத்தல்: இலங்கையை சேர்ந்தவருக்கு 15 வருட சிறை டிசம்பர் 17, 2005 மதுரை: ஹெராயின் போதைப் பொருள்கள் கடத்தல் தொடர்பாக இலங்கையை சேர்ந்த ஒருவருக்கு 15 வருட கடுங்காவல் தண்டனையும், அவரது கூட்டாளிகள் 3 பேருக்கு 10 வருட கடுங்காவல் தண்டனையும் வழங்கி மதுரை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சுமார் 7 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருள் வைத்திருந்ததாக கடந்த 2002ம் ஆண்டு டிசம்பர் மாதம் மதுரையில் காரில் வந்த 6 பேர் கொண்ட கும்பலை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். இவர்கள் இந்த போதைப் பொருளை இலங்கைக்கு கடத்த திட்டமிட்டதாக விசாரணையில் தெரியவந்ததை தொடர்ந்து 6 பேரையும் போலீசார் கைது செய்து அவர்கள் மீது போதைப் பொருள் ஒழிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணையின் முடிவில் தீர்ப்பளித்த நீதிபதி மாணிக்கம், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முக்கிய குற்றவாளியான இலங்கையை சேர்ந்த முகமது ஃபசிரின் என்பவருக்கு 15 வருட கடுங்காவல் தண்டனையும், ரூ. 4 லட்சம் அபாராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது கூட்டாளிகள் 3 பேருக்கு 10 வருட கடுங்காவல் தண்டனையும், தலா ரூ. 3 லட்சம் அபாராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 2 பேரை நீதிமன்றம் விடுதலை செய்தது. Thatstamil |