![]() |
|
போராடும் சிறுமி - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: போராடும் சிறுமி (/showthread.php?tid=1975) |
போராடும் சிறுமி - Vaanampaadi - 12-18-2005 <b>முகத்தில் 8 கிலோ கட்டியுடன் போராடும் சிறுமி, அமெரிக்க மருத்துவமனையில் தீவிர சிகிச்சை </b> <img src='http://www.dinakaran.com/health/daily/2005/dec/17/girl.jpg' border='0' alt='user posted image'> படத்தில் பயங்கர தோற்றத்துடன் இருக்கும் இந்த சிறுமியின் பெயர் மார்லி காசஸ். ஹெய்தி நாட்டைச் சேர்ந்தவள். 14 வயதான இவள் கடந்த ஆகஸ்டு மாதம் வரை சாதாரணமாகத் தான் இருந்தாள். ஆனால் அதன்பிறகு திடீரென முகத்தில் பயங்கர வலி உண்டாகி, கட்டி போல வளரத் தொடங்கியது. வாய் - மூக்கு - கன்னம் மற்றும் கண்கள் எங்கு இருக்கிறது என்று தொpயாத அளவுக்கு கட்டி பரவியதால், சிறுமி மூச்சு விட சிரமப்பட்டாள். கொஞ்ச நாளில் 7.250 கிலோ அளவுக்கு கட்டி வளர்ந்தது. இதைத் தொடர்ந்து சிறுமியின் நிலையைக் கண்டு பரிதாபப்பட்ட தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று, அவளை மியாமியில் உள்ள கோல்ட்ஸ் குழந்தைகள் மருத்துவமனையில் கொண்டு சேர்த்தது. அங்கு டாக்டர் ஜீசஸ் கோமஸ் தலைமையிலான மருத்துவக் குழுவினர் நடத்திய சோதனையில் பாலியோஸ்டாடிக் பைபுரோஸ் டிஸ்பிளேசியா என்ற அபூர்வமான மரபியல் நோய் சிறுமியை தாக்கி இருப்பது தொpய வந்தது. (1 லட்சத்து 50 ஆயிரம் போpல் ஒருவருக்குத் தான் இந்நோய் வருமாம். அப்படியே வந்தாலும் இந்தளவுக்கு மோசமாக வளர்வது அபூர்வமாம். இந்நோய் தாக்கியவர்களின் எலும்புகளின் வளர்ச்சி விநோதமாக மாறும். ஒரு கிண்ணம் முழுக்க ஜெல்லி நிரம்பியிருக்க, அதனுள் ஒன்றிரண்டு எலும்புகள் இருந்தால் எப்படி இருக்குமோ, அதேப் போன்று எலும்பு பந்து போல வீங்கி மாறி விடும்). இதையடுத்து சிறுமிக்கு உடனடியாக முதல் கட்ட அறுவை சிகிச்சை செய்து, சீராக மூச்சு விடுவதற்கு வகை செய்தனர். தொடர்ந்து இன்னும் பல கட்டமாக அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டும் என்று அவர்கள் கூறினர். அனைத்து அறுவை சிகிச்சைகளும் வெற்றிகரமாக முடிந்த பிறகு, முகத்தின் வலது புறத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய வேண்டும். அதன்பிறகே மார்லி காசசுக்கு முழு முகம் கிடைக்கும் அவரது தாயாரிடம் தெரிவிக்கப்பட்டது. சிறுமியின் முழு மருத்துவ சிகிச்சைகளும் முடிய 95 ஆயிரம் டாலர் பணம் தேவைப்படுமாம். எனினும் அவளது குடும்ப நிலையை கருத்தில் கொண்டு, சிகிச்சைக்கு தேவையான நிதியை நன்கொடை மூலம் திரட்டுவதில் மருத்துவமனை நிர்வாகம் மும்முரமாக இறங்கி உள்ளது. இதுதவிர சிறுமியை குணப்படுத்த நிதி உதவி அளிக்குமாறு சர்வதேச குழந்தைகள் நிதியத்துக்கும் கோரிக்கை மனு அனுப்பி உள்ளது. தினகரன் - Snegethy - 12-18-2005 கடவுளே அந்தப் பிள்ளை விரைவில் குணமடைய செய். - தூயவன் - 12-18-2005 பார்க்கவே ரெம்பக் கஸ்டமாக இருக்கின்றது. குழந்தை எப்படி கஸ்டப்படுமோ?
- tamilini - 12-18-2005 அந்தச்சிறுமி விரைந்து குணமடைய பிரார்த்தனைகள். சிலமாதங்களிற்கு முன்னர் இப்படி இன்னொரு குழந்தை கஸ்டப்பட்டு தீவிரசிகிச்சையின் பின் குணமடைந்ததாய் பிபிசியில் காட்டினார்கள். அதே போல் இந்தக்குழந்தையும் வெற்றிகாணட்டும். - aathipan - 12-18-2005 ஆண்டவா நீ இருப்பது உண்மையானால் அந்தக்குழந்தையை குணப்படுபத்து - Selvamuthu - 12-18-2005 அந்தச் சிறுமி குணமாக எனது பிரார்த்தனைகளையும் செய்கிறேன். சில மாதங்களுக்குள்ளேயே சிறுமியின் வாழ்க்கையில் எத்தனை சோதனைகள்? யாருக்கும் இப்படி வரக்கூடாது. "நேயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" என்பது எவ்வளவு உண்மை. - RaMa - 12-18-2005 சிறுமி குணமடைய வேண்டும் என்று கடவுளை பிரார்திக்கின்றேன். - shanmuhi - 12-18-2005 அந்தச்சிறுமி விரைந்து குணமடைய பிரார்த்தனைகள்... - AJeevan - 12-18-2005 வேதனையான நிலை . குழந்தை குணமடைய வேண்டுவோம். - அனிதா - 12-18-2005 படத்தை பார்க்க மன்சுக்கு ரொம்ப கஸ்டமாயிருக்கு... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> வித்தியாசமான நோய்கள் எல்லாம் வருகுது .... அந்தச் சிறுமி விரைவில் குணமைடைய பிராத்தனைகள்.. - Rasikai - 12-18-2005 சிறுமி குணமடைய பிரார்த்தனைகள். - ஈழமகன் - 12-18-2005 சிறுமி குணமடைய பிரார்த்தனைகள்.... - ப்ரியசகி - 12-18-2005 <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> பார்க்கவே எவ்ளோ கவலையாக இருக்கு..எவ்ளோ கஷ்டம்..இந்தச் சின்னச்சிறுமிக்கு...சிக்கிரமாய் குணமடைய உங்களோடு என்னோட பிரார்த்தனைகளும்... - விது - 12-18-2005 என்னதான் சொல்வதென்றே தெரியவில்லை உலகத்தில் இப்படியுமா நடக்கும் இப்பிள்ளை உடனே குணமடைய வேண்டும். - Aalavanthan - 12-18-2005 இச்சிறுமிக்கு முதற்கட்ட அறுவைச்சிகிச்சை மிக வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. தொடர்ச்சியாக இன்னும் சில அறுவைச்சிகிச்சைகள் இவருக்கு இன்னமும் செய்ய வேண்டிய தேவையுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை இவரால் இனிமேல் மணத்தினை நுகரும் திறனற்றவராகவும், சுவையினை உணரும் திறனற்றவராகவும் இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரின் தாயார் அளித்த பேட்டியொன்றில் இந்த அறுவைச்சிகிச்சையைத் தொடர்ந்து தான் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பதாகவும், சுற்றத்தார் தனது மகளை ஒரு மிருகம்போல்தான் பார்த்ததாகவும், தாங்கள் வீதியில் சென்றால் மற்றவர்கள் தங்களைப்பார்த்ததும் விலகி பாதையின் மறுபக்கத்திற்கு சென்று விடுவதாகவும் மேலும் தெரிவித்திருக்கின்றார். இதுவரை இச்சிறுமியின் அறுவைச்சிகிச்சைக்காக சுமார் ஒரு லட்சம் டொலருக்கு மேல் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. படம்: AP - shobana - 12-18-2005 சிறுமி மிக விரைவாக குணமடைய பிரார்த்தனைகள் - Vasampu - 12-18-2005 எங்கள் எல்லோரது பிராத்தனையையும் ஏற்றுக் கொண்டு எல்லார்க்கும் பொதுவான எல்லாம் வல்ல இறைவா அக்குழந்தையை நலமடையச் செய்யுங்கள். - sinnappu - 12-18-2005 சிறுமி குணமடைய வேண்டும் என்று கடவுளை பிரார்திக்கின்றேன். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- sabi - 12-18-2005 ஆண்டவா இச் சிறுபெண் விரைவில் குணமடைய உதவிபுரியும். |