Yarl Forum
படத்தின் முதல் நாள் வசூல் ரூ.49 கோடி - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39)
+--- Thread: படத்தின் முதல் நாள் வசூல் ரூ.49 கோடி (/showthread.php?tid=1976)



படத்தின் முதல் நாள் வசூல் ரூ.49 கோடி - Vaanampaadi - 12-18-2005

அமெரிக்காவில் `கிங்காங்' படத்தின் முதல் நாள் வசூல் ரூ.49 கோடி

லாஸ் ஏஞ்சல்ஸ், டிச. 18-

ஆயிரம் கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட மிகவும் பிரமாண்ட ஆங்கில படம் கிங்காங். பீட்டர் ஜேக்சன். இந்த படத்தை டைரக்டு செய்து உள்ளார். ïனிவர்சல் இந்த படத்தை உலகம் முழுவதும் வினியோகித்து உள்ளது.

கடந்த 14-ந்தேதி இந்த படம் உலகம் முழுக்க வெளியிடப்பட்டது. இந்த படம் தற்போது வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது.

மற்ற ஆங்கில படங்களை போல இந்த படமும் வசூலை குவித்து வருகிறது. அமெரிக் காவில் `கிங்காங்' படத்தின் முதல் நாள் வசூல் ரூ.49 கோடி ஆகும். அமெரிக்கா தவிர்த்து 38 நாடுகளிலும் இந்த படத்தின் வசூல் ரூ.40 கோடியை தொட்டது.

அமெரிக்காவில் முதல் நாள் வசூலில் `கிங்காங்' படம் 21-வது இடத்தை பிடித்துள் ளது. ஸ்பைடர் மேன் படம் ரூ.200 கோடி வசூலை தொட்டு சாதனை படைத்தது. ரிட்டர்ன் ஆப்தி சிங் ரூ.170 கோடியும், தி டூ டவர்ஸ் ரூ.130 கோடி யும் வசூலை அள்ளி குவித்தது.

Maalaimalar